السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Monday 8 April 2024

காணவில்லை


ஒரு முறை முஹம்மது நபி (ஸல்) அவா்கள் ஸஹாபாக்களுடன் 

உரையாடிக் கொண்டிருக்கும் போது

ஒருவா் மிக வேகமாக ஒடி வந்து , சபையி்ல் கவலை கலந்த முகத்தோடு சொன்னாா்.


யா ரஸூலல்லாஹ் ! "என் மகனைக் 

காணவில்லை,

பல இடங்களில்

தேடியும் கிடைக்கவில்லை,

தாங்கள் என் மகனுக்காக அல்லாஹ்விடம் பிராா்த்தனை

செய்யுமாறு வேண்டி கேட்டுக்

கொண்டாா்". 


அப்பொழுது அந்த சபையிலிருந்த ஒரு

ஸஹாபி எழுந்து சொன்னாா் ..

யா ரஸூலல்லாஹ்! எனக்கு இவருடைய

மகனைத் தெரியும், 

அந்தக் குழந்தை 

நான் வருகின்ற பாதையில்தான்

விளையாடிக் கொண்டிருக்கிறது".


"அதைக் கேட்ட குழந்தையின் தந்தை 

அவசர, அவசரமாகப் புறப்பட ஆயத்தமானாா்.


"நபி (ஸல்) அவா்கள் அவரை அழைத்துக் கேட்டாா்கள்


"தாங்களுக்கு இவ்வளவு அவசரமா ? 


அவா் கூறினாா் 

" யா ரஸூல்லாஹ்!  

தாங்களுக்குத் தெரியாதா ஒரு 

தந்தையின் மனதேனை "


"என்னுடைய மகனை காணாமல் 

நானும் என்னுடைய மனைவியும்

மிகவும் சோகத்திலுள்ளோம்"


"என் மனனவி, மன வருத்தத்துடன் என் மகனை எதிர்நோக்கி வாசலில்

காத்துக் கொண்டிருக்கின்றாள். ஆகவே

நான் அவசரமாக அவனை பாா்க்கப் போகின்றேன்" 


நபி(ஸல்) அவா்கள் கூறினாா்கள், 

தாங்கள்

மகனைக் காணாத மனவேதனையில்

இருக்கின்றீர்கள் என்பது தெரியும்,

ஆனால் தாஙகள் உங்களுடைய 

மகனை நேரில் சந்திக்கும போது,

தாங்களுக்கும் அறியாது, பாசத்தின்

இனிமையில், அன்பால் அவனைக் கொஞ்ச 

நேரிடும்,


"ஆனால் விளையாடிக் கொண்டு

இருக்கும் குழந்தைகளின் கூட்டத்தில்

சில சமயங்களில் யத்தீமான (அனாதையான) குழந்தைகளும் இருக்கலாம்" ..


"அது உங்களுக்குத் தெரியாது,

அன்போடு,

 மகனே ! என்று அழைத்து உறவாடும் போது யத்தீம் மக்களின் 

மனது வேதனைப்படலாம்" ..


" என்னுடைய தந்தை இருந்திருந்தால்

இதுபோல் என்னையும் அன்போடு

அழைத்து கொஞ்சி இருப்பாரே என்று பிஞ்சு இதயம் வலிக்கக்கூடும்".


"எனவே தாங்களின் வீட்டிற்குச் சென்று

மகனின் மீதுள்ள அன்பை 

வெளிப்படுத்துங்கள்" என்றார்கள்.


" நினைவில் வைத்துக் கொள்வோம்"


இதேபோல விதவையின் முன்னில் வைத்து தன்

மனைவியோடு அன்பு பாராட்டாதீர்கள்.


ஏழைகளின் முன்னில் தன்னுடைய செல்வத்தைக் குறித்து பெருமையாக பேசாதீர்கள் " ..


" அல்லாஹ், ரப்புல் ஆலமீன் 

நம்முடைய குழந்தைகளை 

ஸாலிஹான மக்களாக ஆக்கி,

நாட்டிற்கும், சமுதாயத்திற்கும்,

வீட்டிற்கும் நன்மை சோ்க்கும் மக்களாக ஆக்கி அருள்புரிவானாக!

ஆமீன்! யாரப்பல் ஆலமீன்.♥️

Friday 5 April 2024

ஏறாவூரும் செய்ஹுனாவும்

#இன்று ஏறாவூர் #மீராகேணி கலந்தர் வீதியில் அமைந்துள்ள ஹமத் மஸ்ஜிதில் இன்றைய தினத்தில் மறைந்த  மரியாயாதைக்குரிய எங்கள் செய்ஹு நாயகம் ஞான பிதா அஷ் ஷெய்க் அப்துல் காதிர் ஸுபி காதிரி வர் ரிபாயீ மற்றும் மறைந்து வாழும் அவர்களின் கலீபாக்களின் மீதும் மற்றும் இப்பள்ளிவாயலை கட்டுவதற்கு மிகவும் கஷ்டப்பட்டு உழைத்த மர்ஹும் எனது நண்பர் மெளலவி ரிஸ்வி முஸ்தபி அவர்களுக்கும் இப்பள்ளிவாயலுக்கு உதவிகள் செய்த அனனவருக்கும் சங்கையான மாதத்தில் புனிதமான தினத்தில் புனித அல் குர்ஆன் ஓதப்பட்டு தமாம் செய்யப்பட்டது. 


#இந்நிகழ்சிக்கு சிறப்பாக நடைபெற உதவிகள் செய்தவர்களுக்கும் இப்பள்ளிவாயலைச் சுற்றியுள்ள ஏழைகளுக்கு நோன்பு திறக்க கன்ஜி கொடுத்து உதவிகள் செய்த எல்லா நல்ல உள்ளங்களுக்கும் அல்லாஹுவின் அருள் கிடைக்க வேண்டும் என பிராத்தனை செய்யப்பட்டது.


#இறுதியாக எங்கள் அப்துல்காதிர் ஸூபி நாயகத்தைப் பற்றியும் அவர்களின் கராமத் பற்றியும் மிகவும் சிறப்பாக உரை நிகழ்த்தினார்கள்.


#சங்கைக்குரிய மெளலவி முன்னால் ஏறாவூர் உலமா சபைத்தலைவர், முன்னால் காழி நீதிபதி,முன்னால் நகர சபை முதல்வர் மெளலவி அப்துல் மஜீத் மிஸ்பாஹி காதிரி 


இப்தார் ஸலவாத்துடன் இந்நிகழ்வு நிறைவு பெற்றது.













































அபூ பக்கர் ரலியல்லாஹு அன்ஹு

 

#மனது #நெகிழ்ந்தது .

தினமும் அதிகாலைத் தொழுகைக்குப் பின்னர் அபூபக்கர் (ரலி) அவர்கள், பள்ளிவாசலை விட்டு வேகமாக வெளியேறி மதீனாவின் எல்லையில் இருக்கும் ஒரு குடிசை வீட்டுக்குச் செல்வதையும் சற்று நேரத்திற்குப் பின்னர் அங்கிருந்து வெளியேறுவதையும் உமர் (ரலி) கவனித்தார்.


அபூபக்கர் (ரலி) எனென்ன நல்ல காரியங்கள் செய்கிறார் என்பது பெரும்பாலும் உமர் (ரலி) அவர்களுக்குத் தெரியும். ஆயினும் இந்த விஷயம் மட்டும் தெரியவில்லை.


நாட்கள் நகர்ந்தன. கலீஃபா அபூபக்கர் (ரலி) அவர்களோ தொடர்ந்து அந்த குடிசை வீட்டுக்குச் சென்று கொண்டே இருந்தார். அங்கு சென்று அவர் என்ன செய்வார் என்பதும் உமர் (ரலி) அவர்களுக்குத் தெரியாமலே இருந்தது.


ஒருநாள்….

அபூபக்கர் (ரலி) வெளியே சென்ற பின்னர், அந்த குடிசைக்குச் சென்று என்ன நடக்கிறது என்பதை பார்த்தே தீரவேண்டும் என்ற முடிவுக்கு வந்தார் உமர் (ரலி).


குடிசைக்குள் நுழைந்தார்… வயதான பார்வையற்ற நடக்க இயலாத ஒரு மூதாட்டி இருப்பதைக் கண்டார். 


பின்னர் குடிசையைக் கவனித்தார். கண்ட காட்சி ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.


கண் தெரியாத இந்த மூதாட்டி அபூபக்கர் (ரலி) அவர்களின் உறவினராக இருக்குமோ என்ற எண்ணத்தில் அவரிடம் உமர் (ரலி) கேட்டார்:


"தினமும் ஒருவர் இங்கே வருகிறாரே அவர் இங்கு வந்து என்ன செய்வார்?”


மூதாட்டி: "அருமை மகனே, அல்லாஹ்வின் மீது ஆணை! அவரைக் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. தினமும் காலையிலேயே இங்கு வருவார். வீட்டைத் துடைத்து சுத்தம் செய்வார். 

ஆட்டிலிருந்து பால் கறப்பார். எனக்கு உணவு சமைத்துத் தருவார். பின்னர் எதுவும் பேசாமல் திரும்பிவிடுவார்”.


அது கேட்ட உமர் (ரலி) குலுங்கிக் குலுங்கி அழுதவராக வீட்டைவிட்டு உடனே வெளியேறிவிட்டார்.


அபூபக்கர் (ரலி) மரணித்த பின்னர், அந்த மூதாட்டிக்கு பணிவிடை செய்யவேண்டும் என்றும் அபூபக்கர் (ரலி) மரணமடைந்த செய்தியை அந்த மூதாட்டிக்குத் தெரிவிக்க வேண்டாம் என்றும் உமர் (ரலி) தீர்மானித்தார்.


அந்த குடிசைக்குச் சென்றார். முதல் நாளே அந்த மூதாட்டி கேட்டார்:


"உமது நண்பர் மரணித்துவிட்டாரோ…?”


உமர் (ரலி) திடுக்கிட்டார். திகைப்புடன் கேட்டார்: "உங்களுக்கு எப்படி அது தெரிந்தது?”


மூதாட்டி: நீர் எனக்கு உண்ணத் தரும் பேரீத்தப் பழத்தை விதை நீக்காமல் தருகிறீர். உமது தோழர் விதை நீக்கித் தருவார்”.


நடுங்கத் துவங்கிவிட்டார் உமர் (ரலி).

நிற்க முடியாமல் தரையில் அமர்ந்தார். கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது.


அப்போதுதான் அந்தப் புகழ்பெற்ற வாசகத்தைக் கூறினார் உமர் (ரலி):


"உமக்குப் பின்னர் வரவிருக்கும் கலீஃபாக்களுக்குப் பெரும் சுமையை விட்டுவிட்டுச் சென்றுவிட்டீரே அபூபக்கரே…!”


இப்போது நாம்… 


அபூபக்கர் (ரலி) அவர்களுக்காக அழுவதா…?


உமர் (ரலி) அவர்களுக்காக அழுவதா..?


அல்லது கொஞ்சம் கொஞ்சமாக நம்மை விட்டு அகன்று கொண்டிருக்கும் நல்ல பண்பாடுகளுக்காக அழுவதா…? தெரியவில்லை.


மரணிக்கு முன் நல்ல சுவடுகளை விட்டுச் செல்வோம். ஏனெனில் நாம் விட்டுச் செல்லும் சுவடுகள் அனைத்தும் பதிவு செய்யப்படுகின்றன.


"அவர்கள் விட்டுச் சென்ற சுவடுகளையும் நாம் பதிவு செய்து கொண்டிருக்கிறோம்” 

(36:12)


Copied

Wednesday 3 April 2024

சூபி நாயகம் குப்பியாவத்தை

 



இலங்கை ஏட்டின் புகழாரம்:

****************************

 

    இலங்கையின் புகழ் பெற்ற தமிழ் நாளேடான தினகரன் 'ஆலமுல்இஸ்லாம்' பகுதியில் ஷெய்குனா ஸூபி ஹஜ்ரத் அவர்கள் மறைந்த நாற்பதாம் நாள் கத்முல் குர்ஆன் விழாவினையொட்டி சிறப்புக் கட்டுரை ஒன்று வெளியிட்டது.அக்கட்டுரையில் ஈழத்தில் ஷெய்குனா அவர்கள் ஆற்றிய அரும் பணி பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த கட்டுரையின் சுருக்கம்இதோ:

    

  பஸ்அலூ அஹ்லத் திக்ரி இன்குன்தும் லா தஃலமூன்'; என்ற இறை வசனம் நீங்கள் அறியாதவராக இருந்தால் இறைதியான சிந்தையுடைய அறிஞர்களிடம் கேட்டுத் தெரிந்துக் கொள்வீர்களாக! என்ற பொருள் தருவதை உணர்ந்த எண்ணற்ற முஸ்லிம்களால் 'ஷெய்க்'; என்றும் 'ஸூபிஹலரத்' என்றும் அழைக்கப்பட்ட பெரியார் மௌலானா மௌலவி அல் ஆலிமுல் பாஜில் அல்ஹாஜ் ஷெய்க் அப்துல் காதிர் ஸூபி ஸித்தீகி காதிரி காஹிரி நக்ஷபந்தி அவர்கள்!

   

  தமிழகத்திலிருந்து ஈழத்திற்கு முன்னைய காலங்களில் சன்மார்க்க விஜயம் செய்து இஸ்லாமிய சமயப் பணியாற்றி இந்த நாட்டில் இஸ்லாமிய உணர்வு தழைத்தோங்க வழிகோலிய மார்க்க உலமாக்களை நாம் மறக்க முடியாது. அத்தகைய சாலிஹான சமயப் பெரியார்களில் காயல்பட்டணத்தைச் சேர்ந்த இந்த ஸூபி ஹஸரத் குறிப்பிடத் தகுந்த ஒருவராவார்.


    தற்காலத்தில் நம்மவர் நடுவே இஸ்லாமிய சமயப் பணியாற்றி மெஞ்ஞான வழியின்பால் இஸ்லாமிய இதயங்களை ஈர்த்து சமய உணர்வு பேரின்பமாகப் பெருகியோட வழி சமைத்து நம்மவர் நடுவே வாழ்ந்து மறைந்தவர் இந்த ஸூபி ஹஸரத்தாகும்.

   

   நம் நாட்டு அரசியலில் பங்கேற்றுள்ள சகல கட்சிகளையும் சார்ந்த முஸ்லிம் தலைவர்கள் உட்பட நம் இலங்கை சமுதாயத்தின் சகல துறைகளையும் சேர்ந்த பல முக்கியஸ்தர்கள் சாதாரணமானவர்கள் என்று பலர் இப்பெரியாரின் மார்க்க உபன்னியாச பயானில் ஈர்க்கப்பட்டு இந்த ஷெய்கிடம் முரீது பெற்று ஞான சிஷ்யர்களாகத் திகழ்வதை மறுக்க முடியாது. மேமன்பாய் சமூகத்து சகோதரர்கள் இப்பெரியாரை 'பீர்பாபா' என்று பேருவகையுடன் அழைக்குமளவிற்கு அவர்களிடம் இப்பெரியாருக்கு பெரு மதிப்பு இருந்தது.

    

   தப்லீக் என்றால் என்ன? தப்லீகின் தாத்பரியம் யாது? அதன் ஸ்தாபகர் யார்? ஸ்தாபகரின் கொள்கை யாது? நபி நாயகம் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் செய்த தப்லீக் யாது? அதற்கும் இதற்குமுள்ள வேறுபாடுகள் யாவை? என்பன போன்ற வினாக்களுக்கு மிகத் துணிவாகவும் ஆதாரப்பூர்வமான நிறுவுதல்களுடனும் விளக்கம் தந்த ஒரே பெரியார் இந்த ஸூபி ஹஸ்ரத்தான் என்றால் அதை விருப்பு வெறுப்பற்ற விஷயம் தெரிந்தவர்கள் மறுக்க மாட்டார்கள்.

    

  இவர் தன் முரீதுகளுக்கு வழங்கி வந்த ஞானப் பயிற்சி சொல்லுந்தரமன்று. வாராவாரம் ஹிஸ்புல்லாஹ் ஸபையினர் நாடெங்குமுள்ள ஸூபி மன்ஸில்களில் நடத்தி வரும் ராத்திபு – திக்று மஜ்லிஸ்கள் பல நூறு இதயங்களை ஞான வழியின்பால் ஈர்த்து முரீதீன்களாக்கி வருவது குறிப்பிடத் தக்க அம்சமேயாகும்!

ஷெய்குனா அவர்களைக் குறித்து இலங்கை ஏடு சூட்டியுள்ள புகழாரம் இது!

 

   உண்மையாம் மார்க்கத்தின் தூய கொள்கையெனும் வித்துக்களை சமுதாய மக்கள் தம் உள்ளப் பரப்பில் விதைத்து செழித்து வளர வைத்து உயரிய வாழ்வு ஈருலகிலும் பெறத்தக்க வழி சமைத்துத் தந்த – மாறுபட்ட கொள்கைகளில் வேறுபட்டவர்களின் தவறான வழிகாட்டுதல்களை மக்களுக்கு சுட்டிக் காட்டி – அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தின் அழகிய பாதையினை சிறப்பாக விளக்கித் தந்த எங்கள் ஷெய்குனா 

  

   சத்தியத்தின் பேரொளியாய் நின்றுலவி 

 சகலோர்க்கும் நல்வழி புகட்டிய 

 சத்தான சன்மார்க்க சீலர்

 ஷரகின் வழி நின்ற தீரர்.

  

    இன்று புற வாழ்வில் நம்முடன் இல்லை! ஆயினும் மகோன்னதம் மிக்க அந்த மாமேதை அவர்களால் வகுத்துத் தரப்பட்ட நெறி முறைகள் நம் முன் இருக்கின்றன!

 

பூ ரத மனதில் புகழ் இறை

பொங்கிய அருட் சுனையை

நா ரதம் ஏந்தி

நயமுடன் தந்தவரே!

சாந்தமும் சத்திய வேத நன்னூலின்

சாறும் கலந்ததனை

எமக்கீந்தவரே!

  

 எம் இனிய ஷெய்குனா! நுங்கள் வழியில் அயராது நாங்கள் உழைத்துய்ய எல்லா அருளும் பெற்றிட வல்லான் இறையிடம் உங்களை வஸீலாவாக்கி வேண்டுகிறோம்!

  

  அருளாளன் அல்லாஹ் ஷெய்குனா அவர்களின் பொருட்டினால் நம் பிழைகள் பொறுத்து வகையான வாழ்வினை ஈருலகிலும் ஈந்தருள் புரிவானாக! ஆமீன்.


ஷெய்குனா அவர்களின் கலீபாக்கள்:-


1. மௌலானா மௌலவி அல் ஹாஃபிழ் H.N.ஷெய்கு அப்துல் காதிர் ஆலிம் மஹ்லரி மலேஷியா வாப்பா அவர்கள்


2. மௌலானா மௌலவி அல்ஹாஜ் S.M.H. முஹம்மதலி ஸைபுத்தீன் ஆலிம் ரஹ்மானி பாகவி அவர்கள்


3.மௌலானா மௌலவி அல்ஹாஜ் அஸ்ஸெய்யிது முஹம்மது ஜலாலுத்தீன் பூக்கோயா தங்கள் அவர்கள்


4. மௌலானா மௌலவி அல்ஹாஜ் ஊண்டி M.M. செய்யிது முஹம்மது ஆலிம் பாகவி அவர்கள்


5. மௌலானா மௌலவி ஹனீபா ஆலிம்(இலங்கை) அவர்கள்


ஆகியோரை தங்களது கலீபாக்களாக நியமித்துச் சென்றார்கள்.


நூல்: ஸூபி ஹழ்ரத் நினைவு மலர்

Sunday 31 March 2024

யா அலி ரலியல்லாஹு அன்ஹு

 

#அறிவின் தலைவாயில் அலி (ரலியல்லாஹூ அன்ஹூ) கர்ரமல்லாஹு வஜ்ஹஹு..!!!


#இஸ்லாத்தின் நான்காம் கலீபாவும், நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் பெரிய தந்தையின் மகனாரும், 


#கண்மணி ஹபீப் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் மகளார் சுவனத்து பெண்களின் தலைவியாம் அன்னை ஃபாத்திமா  ரலியல்லாஹூ அன்ஹா அவர்களின் கணவரும், 


சுவனத்து இளைஞர்களின் தலைவர்களான இமாம் ஹசன் ரலியல்லாஹூ அன்ஹூ..., இமாம் ஹுசைன் ரலியல்லாஹூ அன்ஹூ... ஆகியோரின் தகப்பனாரும்,


சூபியாக்கள் எனப்படும் ஆன்மீக குருமார்களின் முதன்மை ஆசிரியரும்,,,


உலகத்தில் உள்ள சாதாத்மார்கள் எனப்படும் நபிகளாரின் வாரிசுகளின் பாட்டனாரும்,


மிகுதியான வலிமார்களின் பாட்டனாருமான ஹழ்ரத் அலி கர்ரமல்லாஹு வஜ்ஹஹு அவர்கள் ஆகும்...!!


இவர்கள் புனித காஃபாவில் பிறந்தார்கள். முதலில் பார்த்தது நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை. 


பிறந்து கண் திறந்த போது முதலில் பார்த்தது நபிகளார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் இவர்களை பார்க்க சென்ற போதுதான் கண்திறந்தார்கள்.


சிறு வயதிலேயே (7 அல்லது 9 வயது, அதாவது வயதிற்கு வருவதற்கு முன்னமே) இஸ்லாத்தை ஏற்று கொண்டார்கள்.


ஆரம்ப கால முதல் நபிகளாரின் தோழமை இவர்களை மிகவும் பண்படுத்தியது.


ஏழ்மையான நிலையிலும் அல்லாஹ்வின் திருப்திக்காக வாழ்ந்தவர்கள். கண்மணி நபிகளார் இவர்களை புகழ்ந்து يحب الله ورسوله ويحبه الله ورسوله அதாவது இவர்களை அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதரும் பிரியப்படுகின்றனர், அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் இவர்களும் பிரியப்படுகின்றார் என்ற சோபன செய்தி புகாரியில் இடம் பெற்றுள்ளது.


தங்களுடைய கஷ்ட ஜீவனத்திலும் எந்த காரியமும் அல்லாஹ்விற்காக செய்வார்கள்.


ஒரு முறை தங்களுடைய பிள்ளைகளின் காய்ச்சல் சரியாகிவிட்டால் மூன்று நாட்கள் நோன்பு நோற்கின்றோம் என்று ஹழ்ரத் அலீ கர்ரமல்லாஹு வஜ்ஹஹு அவர்களும் அன்னை ஃபாத்திமா நாயகி ரலியல்லாஹூ அன்ஹா... அவர்களும் நேர்ந்து இருந்தார்கள்.


அப்படியே நோன்பும் இருந்தார்கள். முதல் நாள் நோன்பு முடிந்தது. சாப்பிட அமர்ந்தார்கள், மிஸ்கீன் வந்துள்ளேன் என்று கூற அப்படியே அல்லாஹ்வின் பாதையில் வழங்கி விட்டு பசித்த படியே இரண்டாம் நோன்பை நோற்றார்கள். இரண்டாம் நாள் நோன்பு முடிந்தது.


சாப்பிட அமர்ந்தார்கள், அநாதை வந்துள்ளேன் என்று கூற அப்படியே அல்லாஹ்வின் பாதையில் வழங்கி விட்டு பசித்த படியே மூன்றாம் நோன்பைநோற்றார்கள். 


மூன்றாம் நாள் நோன்பு முடிந்தது. சாப்பிட அமர்ந்தார்கள், கைதி வந்துள்ளேன் என்று கூற அப்படியே அல்லாஹ்வின் பாதையில் வழங்கி விட்டு பசித்த படியே அடுத்த நாளின் ஏனைய காரியங்களில் ஈடுபட ஆரம்பித்துவிட்டார்கள். 


அல்லாஹ் இவர்களை புகந்து சூரா தஹ்ர் இறக்கி வைத்துள்ளான். அதில் இந்த சம்பவத்தின் வசனத்தையும் இறக்கியுள்ளான்.


وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَىٰ حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا إِنَّمَا نُطْعِمُكُمْ لِوَجْهِ اللَّهِ لَا نُرِيدُ مِنكُمْ جَزَاءً وَلَا شُكُورًا 


அவனுடைய (அல்லாஹ்வுடைய) பிரியத்தில் ஏழைக்கும், அனாதைக்கும், கைதிக்கும் உணவளிப்பார்கள், அப்படி உணவளித்து விட்டு நாம் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்காக தான் வழங்கினோம் என்று கூறுவார்கள். (76: 8,9)


ஆரம்ப காலம் முதல் கடைசி காலம் வரை கண்மணி நபிகளார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்... அவர்களுடனே இருந்து தபூக் தவிர அனைத்து போர்களிலும் பங்கேற்றார்கள்.


இவர்களின் தலைமையில் அனைத்து போர்களிலும் வெற்றி கிடைத்தது. 


பத்ரு போரில் 20 வயது இருப்பினும் முஹாஜிரீன்களின் கொடி இவர்களிடம் தான் இருந்தது. 


வலீத் உட்பட பல காபிர்களை இஸ்லாத்திற்காக வீழ்த்தினார்கள். உஹதில் இவர்கள் காட்டிய வீரத்தால் எதிரிகள் சிதருண்டார்கள்.


அகழ் போரில் நடந்த ஒரே யுத்தத்தில் அமர் என்ற வீரமிகு எதிரியை, இஸ்லாத்திற்காக உயிரை பணயம் வைத்து அவனோடு போர் புரிந்தார்கள் அதில் வெற்றியும் கண்டார்கள்.


கைபர் யுத்தத்தில் மூன்று நாட்கள் போர் புரிந்தும் கிடைக்காத வெற்றி, நாளை ஒரு இளைஞன் யிடம் கொடியை தரப்போகின்றேன், அவரை அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதரும் பிரியப்படுகின்றனர், 


அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் இவர்களும் பிரியப்படுகின்றார் என்றும் கூறி அவர்களின் கையில் வெற்றி கிடைக்கப் போகிறது என்ற சோபனமும் கூறினார்கள். (புகாரி)


அப்படியே வெற்றி கிடைத்தது. அங்கு நடந்த ஒரு சம்பவம் மூலம் எப்படி இவர்கள் இஸ்லாத்திற்காக போர் புரிந்தார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்.


ஒரு எதிரியை தாக்க வாள் தூக்கி கொண்டு போக, அவன் இவர்கள் மீது துப்பி விடுகின்றான். இயல்பாக கோபம் அதிகரித்திருக்க வேண்டும். ஆனால் அலீ ரலியல்லாஹூ அன்ஹூ... அவர்களோ அவனை விட்டு முகத்தை திருப்பி கொண்டார்கள்.


அவருக்கு ஆச்சரியமாக போக என்ன என்று விசாரிக்கின்றார். நான் அல்லாஹ்விற்காக வாள் ஓங்கினேன். நீ துப்பி விட்டதால் பகைமை நமக்குள் வந்துவிட்டது.


அதனால் அல்லாஹ்விற்காக மற்றொரு முறை உன்னை பார்த்து கொள்வேன் என்று கூற அந்த யூதர் இஸ்லாம் ஆனார்.


அல்லாஹ்விற்காக செய்த அதன் ஒரு காரியத்தில் அவருடைய சந்ததிகளுக்கு இஸ்லாம் கிடைத்தது என்று பெருமக்கள் கூறுவார்கள். 


அதே கைபரில் கடைசி கோட்டையில் மிர்ஹப் உடைய கிரீடத்தை உடைத்தார்கள். அதில் இருந்த நவரத்தினங்களை போரில் கிடைத்த பொருள் (கனீமத்) ஆக சஹாபாக்கள் எடுக்க,


அலீ ரலியல்லாஹூ அன்ஹூ... அவர்களையும் எடுக்க சொன்ன பொது நான் உடைத்தது அல்லாஹ்விற்காக, நான் இதை எடுத்து விட்டால் அல்லாஹ் நீ சுயநலத்திற்கு உடைத்தாய் என்று கூறி விட்டால் என்ன செய்வேன் அதனால் எடுக்க மாட்டேன் என்று கூறி விட்டார்கள்.


இவர்களுடைய பெருமைகள் சொல்லி முடியாது. தபூக் யுத்ததிற்கு ஹழ்ரத் அலீ ரலியல்லாஹூ அன்ஹூ... அவர்களை நபிகளார் வர வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள். 


அழுது கொண்டு சென்றார்கள் நபிகளாரிடம், யா ரசூலுல்லாஹ் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்).. நான் என்ன தவறு செய்தேன் இல்லை போர் புரிய தகுதியை இழந்து விட்டேனா என்று கேட்க இல்லை,


உங்களை மூஸா அலைஹிஸ்ஸலாம்... அவர்கள் ஹாரூன் அலைஹிஸ்ஸலாம்... அவர்களை விட்டு சென்றதை போல் நான் விட்டு செல்கின்றேன், எனினும் எனக்கு பிறகு நபி இல்லை.(நபி இருந்து இருந்தால் நீங்கள் தான் நபி)


انت بمنزلة هارون من موسى الا انه لا نبي بعدي ياعلي 


கண்மணி நபிகளாரை குளிப்பாட்டி கப்ரில் அடக்கம் செய்ததும் இவர்கள் தான்.


இவர்கள் அல்லாஹ்வின் பயத்தால் இரவில் நின்று அழுதவர்களாக இருப்பார்கள். போரில் புன்முறுவல் பூத்தவர்களாக செல்வார்கள். 


இதை பற்றி ஒரு கவிஞர் சொல்லும் போது هو البكاء فى المحراب ليلا - هو الضحاك في يوم الضراب அதாவது, இவர்கள் இரவில் மிஹ்ராபில் (தொழுகையில்) அழுவார்கள், போரிலே சிரித்தவர்களாக செல்வார்கள்(கடினத்தை முகத்தில் காட்டமாட்டார்கள்)


இவர்களை பற்றி


انت مني وانا منك ياعلي 


அலீயே நீர் என்னிலிருந்தும் நான் உம்மிலிருந்தும் இருக்கின்றோம் என்றும்,


انت اخي فى الدنيا والاخرة ياعلي 


நீர் இந்த உலகிலும் மறு உலகிலும் என்னுடைய சகோதரராக இருக்கின்றீர் என்றும்,


انا مدينة العلم وعلي بابها 


நான் அறிவின் பட்டணம், அலீ அதன் நுழைவாயில்


என்றும் கண்மணி‌ ஹபீப் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்... அவர்கள் கூறியுள்ளார்கள்.


கணிதத்தில் மிகவும் உயரத்தில் இருந்தார்கள். தப்சீர் கலையில் மிகவும் தேர்ச்சி பெற்று இருந்தார்கள். 


தப்சீர் கலையில் தலைவராக கருதப்படும் ஹழ்ரத் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹூ அன்ஹூ... அவர்கள், 


ஹழ்ரத் அலீ ரலியல்லாஹூ அன்ஹூ... அவர்களிடம் பாடம் பயின்றார்கள்.


ஹழ்ரத் அலீ ரலியல்லாஹூ அன்ஹூ... அவர்கள் கூறுகின்றார்கள்,


அல்குர்'ஆன் எங்கு, எப்போது, எதற்கு, யாருக்கு, இறங்கியது என்ற ஞானம் எனக்கு உள்ளது போல் சஹாபா பெருமக்களில் வேறு ஒருவருக்கு இல்லை என்று கூறி உள்ளார்கள்.


ஏனைய கலீபாக்களின் ஆட்சிகளின் போது அவர்களுடனே இருந்து மார்க்கப் பிரச்சனைகளில் தீர்வு கண்டார்கள். 


அல்குர்ஆன் கூறும் சட்டங்கள், வாரிசு உரிமை சட்டங்களின் தலைமை ஆசிரியராக விளங்கினார்கள்.


இவர்களின் ஆட்சி 4 1/2 ஆண்டுகள் நடந்தது. ஒரு நாளும் நிம்மதியாக இருக்கவில்லை. கலீபாவாக இருப்பினும் ஏழ்மையை தேர்ந்தெடுத்தார்கள். 


தலை சிறந்த நிர்வாகியாக இருந்தாலும் நீதத்தில் (واقضاهم علي) நபிகளார் கூறியதை போல் நீதி வானாக இருந்தார்கள்.


உமையாக்களின் அட்டூழியத்தால் ஹிஜ்ரி 40 இல் பள்ளிவாசலில் வைத்து ஷஹீதாக்கப்பட்டார்கள்.


அல்லாஹ் நம்மவர்களின் பிழையை இப்புனிதர்களின் பொருட்டால் மன்னித்தருள்வானாக. 


நம்முடைய நாட்ட தேட்டங்களை நிறைவேற்றி அருள்வானாக. நம்முடைய அமல்களை ஏற்றுக் கொள்வானாக. ஆமீன்!

அல்லாஹூம்ம ஆமீன்..!!


(நூல்: அலி ரலியல்லாஹு அன்ஹு வரலாறு)


ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்


ஸித்றத்துல் முன்தஹா


நோன்பு 21

இன்று ஹஸ்ரத் அலீ நாயகத்தின் வபாத் நாள் என்று சொல்லப்படுகின்றது.


مدد ياعلي


نَادِ عَلِيّاً مَظْهَرَ الْعَجَائِبِ 


بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ 


نَادِ عَلِيّاً مَظْهَرَ الْعَجَائِبِ تَجِدْهُ عَوْناً لَكَ فِي النَّوَائِبِ لِي إِلَى اللَّهِ حَاجَتِي وَ عَلَيْهِ مُعَوَّلِي كُلَّمَا رَمْيَتُهُ وَ رَمَيْتَ مُقْتَضَي كُلِّ هَمٍّ وَ غَمٍّ سَيَنْجَلِي بِعَظَمَتِكَ يَا اللَّهُ وَ بِنُبُوَّتِكَ يَا مُحَمَّدُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَ آلِهِ وَ سَلَّمَ وَ بِوَلَايَتِكَ يَا عَلِيُّ يَا عَلِيُّ يَا عَلِيُّ أَدْرِكْنِي بِحَقِّ لُطْفِكَ الْخَفِيِّ، اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ أَنَا مِنْ شَرِّ أَعْدَائِكَ بَرِي‌ءٌ بَرِي‌ءٌ بَرِي‌ءٌ اللَّهُ صَمَدِي بِحَقِّ إِيَّاكَ نَعْبُدُ وَ إِيَّاكَ نَسْتَعِينُ يَا أَبَا الْغَيْثِ أَغِثْنِي يَا عَلِيُّ أَدْرِكْنِي يَا قَاهِرَ الْعَدُوِّ وَ يَا وَالِيَ الْوَلِيِّ يَا مَظْهَرَ الْعَجَائِبِ يَا مُرْتَضَى عَلِيُّ، يَا قَهَّارُ تَقَهَّرْتَ بِالْقَهْرِ وَ الْقَهْرُ فِي قَهْرِ قَهْرِكَ يَا قَهَّارُ يَا ذَا الْبَطْشِ الشَّدِيدِ أَنْتَ الْقَاهِرُ الْجَبَّارُ الْمُهْلِكُ الْمُنْتَقِمُ الْقَوِيُّ وَ الَّذِي لَا يُطَاقُ انْتِقَامُهُ وَ أُفَوِّضُ أَمْرِي إِلَى اللَّهِ إِنَّ اللَّهَ بَصِيرٌ

ரலியல்லாஹு அன்ஹு மரணித்த நாள்

 


ரமழான் மாதம் 21 ஆம் நாளன்று தான் இறைத்தூதரின் மருமகனும், முதல் தலைமுறை முஸ்லிம்களில் முதுகெலும்புகளில் ஒருவருமான அலி இப்னு அபூதாலிப் (ரழி) ஷஹாதத்தை எய்தினார். அரசியல் ரீதியான மாற்றுத் தரப்பாக உருவான கவாரிஜ்கள் பின்னர் மார்க்க ரீதியான பிளவாக அதனை மாற்றிக் கொண்டு அலி (ரழி) போன்ற சிரேஷ்ட நபித் தோழர்களையே காஃபிர்கள் என்று கூற ஆரம்பித்தார்கள். மட்டுமன்றி இஸ்லாமிய அரசுடன் முடிவற்ற போர்களிலும் இறங்கினர். அலி இப்னு அபூதாலிபிடம் கவாரிஜ்களைப் பற்றி பொது மக்கள் கேட்ட பொழுது 'நேற்று எம்முடன் இருந்த, இன்று எமக்கு எதிராக நிற்கும் எமது சகோதரர்கள்' என்றே குறிப்பிடப்பட்டார். இத்தனைக்கும் கவாரிஜ்கள் கொலை செய்யப்பட வேண்டிய காஃபிராக அலி (ரழி)யை பிரகடனப்படுத்தி இருந்தனர். ஆனால் போற்றத் தக்க ஆன்மீக பரிபக்குவம் கொண்டவரும், சிறந்த விவேகியுமான அலி (ரழி) அதனை உணர்ச்சிப் பெருக்கினால் அன்றி அறிவுபூர்வமாக கையாண்டார். அவருடைய ஆத்மீக மாட்சிமை உள்ள அளவில் நின்று ஞானத்தின் பரிபூரண மகுடத்தை அணியும் அளவுக்கு உயர்ந்து நின்றது. ஆனால் அலி (ரழி) ஆன்மீகத்தையும், அரசியல் போன்ற சமூக விவகாரங்களையும் பிரித்தே நோக்கினார். கவாரிஜ்களுடன் ஒரு உரையாடலையே நாடினார் அலி (ரழி). ஆனால் போர் வெறியர்களான கவாரிஜ்கள் அதற்கு இணங்கவில்லை. மூளையால் பின் தொடர வேண்டியவற்றை மூளையாலும், உணர்வால் அணுக வேண்டியவற்றை இதயத்தாலும் அணுகுவது தான் ஓரு பக்குவப்பட்ட ஆளுமைக்கு அழகு. அலி இப்னு அபூதாலிப் (ரழி) அனைத்து கோணங்களிலும் பரிபூரண ஆளுமையாக திகழ்ந்தார்.


பிறர் எம்மைப் பற்றி என்ன கருதுகிறார்கள் என்பதை வைத்து மட்டும் நாம் பிறரை எடை போட முடியாது / கூடாது. ஏனெனில் அது பிறர் எம்மில் இலகுவாக தாக்கம் செலுத்தும் பலவீனமான மனவமைப்பை ஏற்படுத்தி விடும். ஆனால் ஒரு வலிய ஆன்மா புறச் சூழல் தாக்கத்தை சமன் செய்து தன்னுடைய தனிப்பட்ட நிலைப்பாடுகளை வகுத்துக் கொள்ளும். அலி (ரழி) தன்னை காஃபிர் என்று கூறிய கவாரிஜ்களை திருப்பி காஃபிர் என்று அழைக்கவில்லை. சுயகட்டுப்பாடு என்பது அறிஞனுக்கும், வீரனுக்கும் அவசியம். நாம் அலி (ரழி) அவர்களிடத்திலே கற்றுக் கொள்ள வேண்டிய அம்சங்களில் இது பிரதானமானது.


அலி (ரழி) யை கொலை செய்த காரிஜியின் பெயர் அப்துர் ரஹ்மான் இப்னு முல்ஜிம் (எவ்வளவு அழகான பெயர்! ஆனால் செய்த வேலை தான் வரலாற்றில் நிரந்தரக் கறையாக நின்று துர்வாசம் வீசக் கூடிய படுபாதகச் செயல்). வாளால் வெட்டும் பொழுது அந்த வெட்டு நபிகளாரின் கண்ணியமிக்க மருமகனின் முகத்தில் விழுந்தது. இதனால் அலியின் பெயரை சொல்லும் பொழுது எல்லாம் பின்னெட்டாக 'கர்ரமல்லாஹு வஜஅஹு' என்று சொல்லும் பழக்கம் இஸ்லாமிய மரபில் உருவானது. இதன் அர்த்தம் 'அல்லாஹ் அவருடைய முகத்தை கண்ணியப்படுத்தி வைக்கட்டும்' என்பது. இதொரு பிரார்த்தனை வடிவம். அல்லாஹ் அலி இப்னு அபூதாலிப் (ரழி) யை கண்ணியப்படுத்தி வைத்து இருக்கிறான் என்பதற்கு வரலாறு சாட்சி.


அலி (ரழி) யை கொன்ற இப்னு முல்ஜிம் சிறையிடப்பட்ட பொழுது 'நாவை மட்டும் அறுக்க வேண்டாம். ஏனென்றால் நான் இறைவனை தஸ்பீஹ் (துதி செய்தல்) செய்ய வேண்டும்' என்றானாம். அந்தளவுக்கு வணக்க வழிபாடுகளில் கவனம் கொண்டவர்கள் கவாரிஜ்கள். ஆனால் அலி (ரழி) யின் அந்தஸ்து பற்றிய அறிவின்மை அவனை உத்தம நபித் தோழரையே கொலை செய்யும் அளவுக்கு செல்ல வைத்தது. இதற்கு மாறாக அறிவில் உயர்ந்து நின்ற இப்லீஸ் தன்னுடைய கர்வம் காரணமாக ஆதம் நபிக்கு வழிபட மறுத்து இறை சாபத்தை பெற்று விண்ணகத்தை விட்டு வெளியேற்றப்பட்டான்.


இப்லீஸின் அறிவு, இப்னு முல்ஜிமின் அமல் (பக்திபூர்வமான வணக்க வழிபாடு) இரண்டுமே அவர்களுக்கு மீட்சியை அளிக்கவில்லை. ஆக நேர்வழி என்பது இறைவனின் கையில், சித்தத்தில் உள்ள விடயம். பயமும் எதிர்பார்க்ககையுமாக இறைவனை கடைசி வரை பிரக்ஞையுடன் வணங்கி வர வேண்டியதன் அவசியத்தை அலியின் போற்றத் தக்க வீர மரணம் எமக்கு உணர்த்துகிறது.


முதல் நிலை முஸ்லிம் ; மாபெரும் அறிஞர் ; கூர்மதி கொண்ட அரசியல் நிபுணர் ; ஆத்மீக ஞானி ; வீரரான அலி முர்தழா (ரழி) அவர்களை நினைவு கூர்கிறோம்!


நன்றியுடன் பதிவு Lafees Shaheed

Saturday 30 March 2024

வரலாற்றில் #ஓர் #ஏடு #தொடர் 474

 


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

#ஷஹர் #சிந்தனை -17

---------------------------------------


தனித்துவம் வாய்ந்த(313) #பத்ர் ஸஹாபாக்கள்!!


இஸ்லாத்தின் முதல் போரான பத்ர் போரில் பங்கேற்ற ஒவ்வொரு நபித்தோழர்களையும் அல்லாஹ் பல்வேறு வகைகளில் அவர்கள் வாழும் போதும் அவர்களின் வாழ்க்கைக்குப் பிறகு அவர்களின் சந்ததிகளுக்கும் சங்கையும் சிறப்பும் படுத்தினான்.


பத்ர் போரில் பங்கேற்ற நபித்தோழர்களில் சொர்க்கத்தை கொண்டு பெருமானார் (ﷺ) அவர்களின் அமுத வாயால் நேரடியாக சோபனம் சொல்லப்பட்ட பத்து ஸஹாபாக்கள் அடங்குவர். ஹுதைபிய்யாவுக்குப் பின்னர் நடைபெற்ற பைஅத்துர் ரிள்வானில் பங்கேற்று அல்லாஹ்வின் சோபனத்தைப் பெறும் பாக்கியத்தை பெற்ற பலரும் பத்ர் ஸஹாபாக்கள். பின்னர் நடைபெற்ற போர்களில் கலந்து கொண்டு ஷஹீத் அந்தஸ்தை அடைந்தவர்களும் உண்டு. 


பெருமானார் (ﷺ) அவர்களின் காலத்திற்குப் பிறகு பரந்து விரிந்த இப்பாருலகில் இஸ்லாமிய மறுமலர்ச்சியை கண்டு மகிழும் பாக்கியம் பெற்றவர்களும் உண்டு.


இஸ்லாமிய ஆட்சியின் கலீஃபாக்களாக, கலீஃபாக்களின் ஆட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்களும் உண்டு.


இன்னும் சொல்லப்போனால் பின்னோர்களின் நெகிழ்வான நினைவுகளாக, இஸ்லாமிய எழுச்சியின் வடிவமைப்பை முதலில் கட்டமைத்தவர்கள் எனும் அடையாளத்தோடு காலம் முழுவதும் கௌரவப்படுத்தப்பட்டார்கள்.


வரலாற்றில் பல இடங்களில் "இந்த இடத்தில், இந்த நிகழ்வில், இந்த போரில், இன்ன நேரத்தில், இது நடைபெறும் போது " இன்ன பத்ர் ஸஹாபி, இன்னின்ன பத்ர் ஸஹாபிகள் இருந்தனர். பங்கேற்றனர், கலந்து கொண்டனர் என்று வாழ்க்கை முழுவதும் கொண்டாடப்பட்டனர்.


பத்ரில் கலந்து கொண்ட 313 நபித்தோழர்கள் மற்றும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவர்களுக்கு வழங்கிய மகத்தான சிறப்பை நாம் இன்றைய பத்ரின் நினைவு தினத்தில் நினைவு கூற கடமைப்பட்டிருக்கின்றோம்.


பத்ரில் கலந்து ஒவ்வொருவருக்கும் உத்வேகம் இருந்தது..


ولما ندب النبي - صلى الله عليه وسلم - المسلمين يوم بدر فأسرعوا ، قال خيثمة لابنه سعد : آثرني بالخروج ، وأقم مع نسائك . فأبى وقال : لو كان غير الجنة ، آثرتك به . فاقترعا ، فخرج سهم سعد فخرج ، واستشهد ببدر واستشهد أبوه خيثمة يوم أحد .


நபி (ﷺ،) அவர்கள் பத்ரு போருக்கு தயாரான போது கைஃஸமா (ரலி) அவர்கள் தன்னுடைய மகனான ஸஅது இப்னு கைஃஸமா (ரலி) அவர்களிடம் ‘மகனே! நீ உம் மனைவி மக்களுடன் தங்கிவிடு. நான் போரிடப் போகிறேன்’ என வேண்டினார்கள்.


அதற்கு ஸஅத் இப்னு கைஃஸமா (ரலி)அவர்கள் தந்தையைப் பார்த்து என் அருமை தந்தையே!இது சாதாரணமான ஒன்றல்ல. சொர்க்கத்தை நிர்ணயம் செய்யும் விஷயமாகும். சொர்க்கம் அல்லாத வேறு விஷயமாக இருப்பின் உங்களுக்காக நான் விட்டுக் கொடுத்திருப்பேன். இது சொர்க்கத்தையே கூலியாக பெறும் பேராகும். இதில் யாருக்கும் விட்டு கொடுக்க மாட்டேன் என்று கூறி குடும்பத்துடன் தங்குவதற்கு மறுத்து விட்டார்கள்.


அதன்பிறகு இருவரில் யார் போருக்கு செல்வது என்பதில் கடும் போட்டி ஏற்பட்ட போது சீட்டுக் குலுக்கி போட்டார்கள். அதில் ஸஅத் இப்னு கைஃஸமா (ரலி) அவர்கள் பெயரே வந்தது.


இவர்கள் பத்ருப் போரில் கலந்து கொண்டார்கள். இவர்கள் ஆசைப்பட்டது போல் உயிர்த்தியாகம் செய்து சொர்க்கத்தை அடையும் நற்பேற்றினை இறைவன் அவர்களுக்கு வழங்கினான்.


அவர்கள் அம்ரிப்னு அப்து உத்து என்ற எதிரியால் வெட்டப்பட்டு ஷஹீதானார்கள். ஸஅத் இப்னு கைஃஸமா (ரலி) அவர்களின் தந்தை உஹதிலே பங்கு கொண்டு ஷஹீத் ஆனார்கள்.


குறிப்பாக பத்ரில் கலந்து கொண்ட இரண்டு நபித்தோழர்கள் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவர்களுக்கு வழங்கிய மகத்தான சிறப்பை நாம் இன்றைய பத்ரின் நினைவு தினத்தில் நினைவு கூற கடமைப்பட்டிருக்கின்றோம்.


பத்ர் போரின் வெற்றியில் அல்லாஹ்வின் மகத்தான உதவி, வானவர்களின் வருகை, பத்ர் இடம் தேர்வு செய்யப்படுதல் என பல்வேறு அம்சங்கள் நிறைந்திருக்கின்றது.


அதில் யுத்தம் தொடங்குவதற்கு முன்பாக பெருமானார் (ﷺ،) அவர்கள் கூட்டிய ஆலோசனை கூட்டமும் அதில் நான்கு நபித்தோழர்களின் வீர தீரம் நிறைந்த உரையும் குறிப்பாக முஹாஜிர்களில் மிக்தாத் இப்னு அம்ர் (ரலி) அவர்களும், அன்ஸார்களில் ஸஅத் இப்னு முஆத் (ரலி) அவர்களும் ஆற்றிய உரை திருப்புமுனையாகும்.


மிக்தாத் இப்னு அம்ர் (ரழி)எழுந்து பேசினார்கள். ‘‘அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் உங்களுக்குக் காட்டியவழியில் செல்லுங்கள். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். அல்லாஹ்வின் மீதுசத்தியமாக! சங்கைமிகு குர்ஆனில்,


‘‘மூஸாவே! அவர்கள் அதில் இருக்கும் வரையில் ஒருக்காலும் நாங்கள் அதில் செல்லவே மாட்டோம். நீங்களும், உங்களுடைய இறைவனும் (அங்கு) சென்று (அவர்களுடன்) போர் புரியுங்கள். நிச்சயமாக நாங்கள் இங்கேயே உட்கார்ந்து (கவனித்துக்) கொண்டிருப்போம்.'' (அல்குர்ஆன் 5:24)


என்று இஸ்ரவேலர் நபி மூஸா (அலை) அவர்களிடம் கூறியதைப் போல் நாங்கள் உங்களிடம் கூறமாட்டோம். மாறாக, நீங்களும் உங்களது இறைவனும் போர் புரியுங்கள். நாங்களும் உங்கள் இருவருடன் சேர்ந்து போர் புரிவோம். சத்தியத்தைக் கொண்டு உங்களை அனுப்பியவன் மீதாணையாக! நீங்கள் எங்களை அழைத்துக் கொண்டு ”பர்குல் ஃகிமாது”*(*மக்காவிற்கு அருகில் உள்ள இடம்) என்ற இடம் வரை சென்றாலும் நாங்களும் உங்களுடன் மிகத் துணிவுடன் வருவோம்.'' இவ்வாறு மிக்தாத் (ரழி)கூறிமுடித்தார்.


அவரின் வீர உரையைக் கேட்டு நபி (ﷺ،) அவர்கள் அவரைப் பாராட்டி புகழ்ந்து அவருக்காகப் பிரார்த்தனை புரிந்தார்கள்.


நபி (ﷺ،) அன்சாரிகளின் கருத்துகளைக் கேட்க விரும்பினார்கள். மூன்று தளபதிகளின் பேச்சைக் கேட்டதற்குப் பின்பு அன்சாரிகளை மனதில் கொண்டு ‘‘மக்களே! எனக்கு ஆலோசனை கூறுங்கள்'' என்றுபொதுவாகக் கூறினார்கள். நபி (ﷺ،) அவர்களின் நோக்கத்தை விளங்கிக் கொண்ட அன்சாரிகளின் தளபதியாக இருந்த ஸஅது இப்னு முஆது (ரழி), நபி (ﷺ،)அவர்களிடம் ‘‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அல்லாஹ்வின் தூதரே! எங்களிடம் கேட்பது போல் தெரிகிறதே'' என்றார். அதற்கு நபி (ﷺ،) ‘‘ஆம்!'' என்றார்கள். ஸஅது இப்னு முஆது (ரழி) அவர்கள் எழுந்து பின்வருமாறு பதிலளித்தார்:


‘‘நாங்கள் உங்களை விசுவாசித்தோம் உங்களை உண்மையானவர்கள் என நம்பினோம் நீங்கள் கொண்டு வந்ததுதான் சத்தியமென்று சாட்சி கூறினோம் இதை ஏற்று உங்களின் கட்டளைகளைச் செவி மடுத்தோம், அதற்குக் கட்டுப்படுவோம் என்று உடன்படிக்கையும் ஒப்பந்தமும் செய்து கொடுத்தோம் எனவே, நீங்கள் விரும்பிய வழியில் செல்லுங்கள் உங்களை சத்தியத்தைக் கொண்டு அனுப்பிய இறைவன் மீதாணையாக! நீங்கள் எங்களை அழைத்துக் கொண்டு கடலுக்குள் மூழ்கினால் நாங்களும் மூழ்குவோம் எங்களிலிருந்து ஒருவரும் பின் தங்கிவிட மாட்டார் நாளை எங்களுடன் எதிரிகளை நீங்கள் சந்திப்பதை நாங்கள் வெறுக்கவில்லை நிச்சயமாக போரில் நாங்கள் உறுதியுடன் இருப்போம் எதிரிகளைச் சந்திப்பதில் உண்மையாளர்களாக இருப்போம் உங்களுக்குக் கண் குளிர்ச்சி தருபவற்றை அல்லாஹ் எங்களால் வழங்கலாம் அல்லாஹ்வுடைய அருளுடன் எங்களை அழைத்துச் செல்லுங்கள்.''


மற்றுமொரு அறிவிப்பில் வந்துள்ளது: ‘‘அல்லாஹ்வின் தூதரே! தங்களின் இல்லங்களில் இருந்து கொண்டு உங்களுக்கு உதவி செய்வது மட்டுமே கடமை என அன்சாரிகள் நினைப்பார்கள் என்று நீங்கள் அஞ்சுகிறீர்களா? அன்சாரிகளின் சார்பாக நான் பேசுகிறேன் அவர்களின் சார்பாக நான் பதிலளிக்கிறேன் நீங்கள் விரும்பிய இடத்திற்குப் பயணித்துச் செல்லுங்கள் நீங்கள் விரும்பியவருடன் உறவு வைத்துக் கொள்ளுங்கள் நீங்கள் விரும்பியவன் உறவை வெட்டி விடுங்கள் நீங்கள் விரும்பியதை எங்களிடமிருந்து எடுத்துக் கொள்ளுங்கள் நீங்கள் விரும்பியதை எங்களுக்குக் கொடுங்கள் நீங்கள் எங்களிடமிருந்து எடுத்துக் கொண்டது நீங்கள் எங்களுக்காக விட்டுவிட்டதை விட மேலானதாகும் நீங்கள் எங்களுக்கு எவ்விஷயத்திலும் எதைக் கட்டளையிடுகிறீர்களோ அது விஷயத்தில் எங்களின் செயல்கள் உங்களின் கட்டளைக் கிணங்கத்தான் இருக்கும்.


அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் எங்களை ‘கிம்தான்' பகுதியில் உள்ள ‘பர்க்' என்ற இடம் வரை அழைத்துச் சென்றாலும் நாங்கள் உங்களுடன் வருவோம் அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் எங்களைக் கடலுக்குள் அழைத்துச் சென்று மூழ்கினால் நாங்களும் மூழ்குவோம்'' என்று ஸஅது இப்னு முஆது, நபி (ﷺ،) அவர்களிடம் கூறினார்கள்.


ஸஅதின் பேச்சையும் அவரின் உற்சாகத்தையும் கண்ட நபி (ﷺ،) அவர்கள் மிகுந்த ஆனந்தமடைந்தார்கள். பின்பு ‘‘நற்செய்தி அடைந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் இரண்டு கூட்டங்களில் ஒன்றை எனக்கு வாக்களித்துள்ளான். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அக்கூட்டத்தினர் வெட்டுண்டு விழும் இடங்களை நான் இப்போதுபார்ப்பதைப் போன்று இருக்கின்றது'' என்று கூறினார்கள்.


1. மிக்தாத் இப்னு அம்ர் (ரலி) அவர்கள்...


உலகில் வாழும் நாம் தான் சுவனத்தை நேசிப்போம். சுவனத்தில் பிரவேசிக்க விரும்புவோம். சுவனத்தின் இன்பங்களை அனுபவிக்க ஆசைப்படுவோம். சுவனத்தை தந்து விடு யாஅல்லாஹ்! என்று பிரார்த்திப்போம்! சுவனத்தை பெற வேண்டும் என்ற நோக்கில் இந்த உலகில் நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்வோம்.


ஆனால், சுவர்க்கமே நேசித்த, தன்னில் பிரவேசிக்க வேண்டும் என்று விரும்பிய, தன்னில் உள்ள இன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட உலகின் நான்கு மனிதர்களில் இருவர் பத்ர் ஸஹாபிகள் அதில் ஒருவர் மிக்தாத் இப்னு அம்ர் (ரலி) அவர்கள்.


அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நபி (ﷺ،) அவர்களை நேசிப்பதை கடமையாக்க்கி இருக்கின்றான். ஆனால், அந்த நபி (ﷺ،) அவர்களை அழைத்து நீங்கள் நான்கு மனிதர்களை நேசிக்க வேண்டும் என்று தமது விருப்பத்தை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தெரிவித்தான்.


அப்படி அல்லாஹ்வால் தேர்வு செய்யப்பட்ட நான்கு மனிதர்களில் இருவர் பத்ர் ஸஹாபிகள் அதில் ஒருவர் மிக்தாத் இப்னு அம்ர் (ரலி) அவர்கள்


இதை விட வேறென்ன சிறந்த பாக்கியம் இருக்கப் போகிறது ஒரு இறைநம்பிக்கையாளருக்கு?!!


روى الترمذي (3718)، وابن ماجه (140)، وأحمد (22968)، والحاكم (4649) من طريق شَرِيك، عَنْ أَبِي رَبِيعَةَ، عَنْ ابْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ( إِنَّ اللَّهَ أَمَرَنِي بِحُبِّ أَرْبَعَةٍ، وَأَخْبَرَنِي أَنَّهُ يُحِبُّهُمْ ) . قِيلَ: يَا رَسُولَ اللَّهِ سَمِّهِمْ لَنَا، قَالَ: (عَلِيٌّ مِنْهُمْ -يَقُولُ ذَلِكَ ثَلَاثًا - وَأَبُو ذَرٍّ، وَالمِقْدَادُ، وَسَلْمَانُ، أَمَرَنِي بِحُبِّهِمْ، وَأَخْبَرَنِي أَنَّهُ يُحِبُّهُمْ) .


அல்லாஹ்வின் துதர்(ﷺ،)அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ் நான்கு நபர்களை நேசிக்குமாறு எனக்கு கட்டளை பிறப்பித்தான்.மேலும், அல்லாஹ்வும் அவ்ர்களை நேப்பதாக என்னிடம் தெரிவித்தான் அவர்கள் இவர்கள் தான்”: 1. அலீ (ரலி), 2. அபூதர் (ரலி), 3. மிக்தாத் (ரலி), ஸல்மான் ஃபார்ஸி (ரலி) ஆகியோர் ஆவார்கள். ( நூல்: அஹ்மத்: பாகம்: 5 பக்கம்: 351, திர்மிதீ )


قد جاء في معجم الطبراني الكبير مرفوعا أن الجنة تشتاق إلى أربعة علي بن أبي طالب، وعمار بن ياسر، وسلمان الفارسي، والمقداد بن الأسود رضي الله عنهم.


وفي مسند أبي يعلى: أن الجنة لتشتاق إلى ثلاثة وهم: علي, وأبوذر, والمقداد.


فأما حديث الطبراني فلم نجد من حكم عليه بضعف أو تصحيح, وأما حديث أبي يعلى فقد قال الشيخ حسين أسد: إسناده ضعيف


அல்லாஹ்வின் துதர்(ﷺ،)அவர்கள் கூறினார்கள்: “நான்கு நபர்களை சொர்க்கம் விரும்புகிறது. 1. அலீ (ரலி), 2. அம்மார் இப்னு யாஸிர் (ரலி), 3. மிக்தாத் (ரலி), ஸல்மான் ஃபார்ஸி (ரலி) ஆகியோர் ஆவார்கள்.


திர்மிதீ ஷரீஃபின் ஷரஹ் நூலான துஹ்ஃபதுல் அஹ்வதீயின் இன்னொரு அறிவிப்பில் மூவரை சுவனம் விரும்புகின்றது என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.


1. அலீ (ரலி), 2. அபூதர் (ரலி), 3. மிக்தாத் (ரலி), ஆகியோர் ஆவார்கள்.


2. ஸஅத் இப்னு முஆத் (ரலி) அவர்கள்.


حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ بَشَّارٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏غُنْدَرٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي إِسْحَاقَ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏الْبَرَاءَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏يَقُولُ ‏ ‏أُهْدِيَتْ لِلنَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حُلَّةُ حَرِيرٍ فَجَعَلَ أَصْحَابُهُ يَمَسُّونَهَا وَيَعْجَبُونَ مِنْ لِينِهَا فَقَالَ أَتَعْجَبُونَ مِنْ لِينِ هَذِهِ ‏ ‏لَمَنَادِيلُ ‏ ‏سَعْدِ بْنِ مُعَاذٍ ‏ ‏خَيْرٌ مِنْهَا ‏ ‏أَوْ أَلْيَنُ ‏ ‏رَوَاهُ ‏ ‏قَتَادَةُ ‏ ‏وَالزُّهْرِيُّ ‏ ‏سَمِعَا ‏ ‏أَنَسًا ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏


ஒரு முறை) நபி(ﷺ) அவர்களுக்கு பட்டு அங்கி ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. நபி(ﷺ) அவர்களின் தோழர்கள் அதைத் தொட்டுப் பார்த்து அதன் மென்மையைக் கண்டு வியப்படையலானார்கள். நபி(ﷺ) அவர்கள், ‘இதன் மென்மையைக் கண்டு நீங்கள் வியக்கிறீர்களா? (சொர்க்கத்தில்) ஸஅத் இப்னு முஆத் அவர்களின் கைக்குட்டைகள் இதை விடச் சிறந்தவை அல்லது இதை விட மென்மையானவை ஆகும்” என்று கூறினார்கள். அறி: அல்பர்ராஉ (ரலி).

( நூல்: புகாரி : 3802 )


عن جابر، سمعت النبي يقول: "اهتز العرش لموت سعد بن معاذ.


நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள்:- சஅத் பின் முஆத் (ரலி) அவர்களின் இறப்பிற்காக அர்ஷ் அசைந்தது. இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்.


ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்து இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் வந்துள்ளதாவது:


ஒரு மனிதர் ஜாபிர் (ரலி) அவர்களிடம், பராஉ (ரலி) அவர்கள், சஅத் பின் முஆத் (ரலி) அவர்களைச் சுமந்து சென்ற (ஜனாஸா) பெட்டிதான் அசைந்தது' என்று இதற்கு விளக்கம் தருகிறார்கள் என்று சொன்னதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள், “இந்த (அவ்ஸ் மற்றும் கஸ்ரஜ்) இரு குடும்பங்களுக்கிடையே குரோதங்கள் இருந்தன. நபி (ﷺ) அவர்கள், சஅத் பின் முஆத் (ரலி) அவர்களின் இறப்பிற்காக அளவில்லா கருணையாளனின் அரியணை அசைந்தது என்று சொல்ல நான் கேட்டிருக்கின்றேன்” என்று பதிலளித்தார்கள்.

 நூல்: ஸஹீஹுல் புகாரி 3803


விளக்கம்: இந்த நபி மொழி சஅத் (ரலி) அவர்களின் சிறப்பை கூறும் நபிமொழியாகும் மறுக்க முடியாத அளவிற்கு முதவாத்திரான தரத்துடன் இந்த ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது.


இச்செய்தியை ஸஹாபாக்களில் ஜாபிர் (ரலி) அனஸ் (ரலி) உஸைத் பின் ஹுளைர் (ரலி) இப்னு உமர் (ரலி) அபு ஸஈது (ரலி) ஆயிஷா (ரலி) இன்னும் பலரிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.


இமாம் தஹபி (ரஹ்) அவர்கள் கூறினார்கள் இது முதவாத்திரான ஹதீஸாகும் இதை அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்கள் தான் கூறினார்கள் என்று நான் சான்றளிக்கிறேன்.அல் உலுவ்வுலிஅலீயில் கஃப்ஃபார் 89


மேற்கூறிய ஹதீஸின் விளக்கமாக ஃபவாயிதுத் தமாம் என்ற நூலில் அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள்; மேன்மையும் மகத்துவமும் மிக்க றப்பின் மகிழ்ச்சியால் சஅத் (ரலி) அவர்களின் மரணத்திற்காக அல்லாஹ்வின் அர்ஷ் அசைந்தது.அறிவிப்பாளர் அபு ஸஈதுல் குத்ரி (ஸல்) (நூல்: :ஃபவாயிதுத் தமாம்16 )


حينما سمع النبي أحد المنافقين يقول: ما رأينا كاليوم، ما حملنا نعشًا أخف منه قط. فقال رسول الله: "لقد نزل سبعون ألف ملك شهدوا سعد بن معاذ، ما وطئوا الأرض قبل ذلك اليوم".


ஸஅத் இப்னு முஆத் (ரலி) அவர்களின் ஜனாஸாவை மலக்குமார்கள் சுமந்ததோடு, 70000 வானவர்கள் ஜனாஸா தொழுகையிலும் கலந்து கொண்டு துஆச் செய்யும் நற்பேற்றைப் பெற்றார்கள் எனும் செய்தி வரலாற்றில் இடம் பெற்றிருக்கிறது.


இன்னும் பல சிறப்பம்சங்கள் நாளை பதிவில் பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்

தொடரும்.........