السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

ஜமாஅதே இஸ்லாம்

  1. தேசிய வாதமும் கிலாபாவும்
  2. تنبيه عن ضلالة يوسق قرضاوي
  3. الحذر الحذر من يوسف القرضاوي الذي يريد هدم الدين
  4. افتراء واجتراء يوسف القرضاوي على منصب ساداتنا الأنبياء
  5. التحذير من يوسف القرضاوي
  6. كتاب القرضاوي في العراء
  7. القرضاوي يوافق حزب التحرير ويبيح لمس الرجل للمرأة الأجنبية
  8. القرضاوى خرق الإجماع في تحريف مصارف الزكاة
  9. التحذير من كتب يوسف القرضاوي المسمومة
  10. احذروا وحذروا من فرقة ضالة تسمى الوهابية
  11. رسالة تحذير أهل السنة من يوسف القرضاوي
  12. الحديث: إن الله ورسوله حرم بيع الخمر

கர்ழாவி பல்டி

                                                                 ------------------------
கர்ழாவி : சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் !!!

தான் பிறந்து படித்து வளர்ந்த டடா கூறிவிட்டு கட்டாருக்கு வந்து ராஜபோக வாழ்க்கை வாழந்த இக்வானுல் முஸ்லிமீன்களின் இணையற்ற செய்கு கர்ழாவி, இவ்வளவு காலமும் கட்டாரில் இருந்த ஐரோப்பிய கலாச்சாரங்களை எதிர்க்க வில்லை! கட்டாரில் மிகக் கோலாகலமாக நடந்த கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை எதிர்க்கவில்லை. முழு மத்திய கிழக்குக்கும் இருந்த ஒரே அமெரிக்க யூத இராணுவ Base ­எதிக்கவில்லை! இப்போது எல்லா அரபு நாடுகளையும் பின்பற்றி கட்டாரும் அரபுலக அரசியல் தலைவர் எகிப்து ஜனாதிபதி ஸிஸிக்கு பூரண ஆதரவு தெரிவித்த பின்னர், இப்போது தான் கர்ழாவிக்கு தென்படுகிறது, கட்டாரில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் நடைபெறுவது! இப்போது தான் காராசாரமாக அதை எதிர்க்கிறார்! பாய்ந்து பாய்ந்து பார்த்து எட்டாததால் கடைசியாக, சீச்சி இந்தப் பழம் புளிக்கும் என்று தந்திர நரி கூறியதை நாம் சிறு வயதில் படித்தது நினைவு வருகிறது .



ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பின் கொள்கைகள்.
..........................................................................................
(றசூல்மார்கள் தங்களின் கடமையில் தப்புத் தவறு செய்துள்ளனர். நபிமார்கள் பாவம் செய்துள்ளனர். ஸஹாபாää தாபிஈன்கள்ää நான்கு மத்ஹப் இமாம்களைப் பின்பற்றத்தேவையில்லை. ஒற்றைக் கண்ணன் தஜ்ஜால் வெளி வருவதைப் பற்றி வந்த ஹதீத்கள் பொய்யாகும். சுபுஹ் தொழுகையில் குனூத் இல்லை. கூட்டு துஆ கூடாது. தராவீஹ் எட்டு ரக்அத்துக்கள். கூட்டு திக்ர்ää ஸலவாத் கூடாது. அதானுக்கு முன்னால் ஸலவாத் சொல்லக்கூடாது.) இவை ஜமாஅத்தே இஸ்லாமியின் கொள்கைகளாகும். பார்க்க: இறக்குமதியும் குழப்பமும். 
அன்ஸார் ஸ{ன்னத் முஹம்மதிய்யா வழிகெட்ட அமைப்பென்று சொல்லபட்டது. பத்வாக்கொடுப்பட்டது. திருந்தினார்களா? இல்லை. குறைந்தார்களா? அழிந்தார்களா? இல்லை. மாறாக வளர்ந்தார்கள். அத்துடன் அஹ்லுஸ் ஸ{ன்னத் வல்ஜமாஅத்தினர் தம்மீது பழி சுமத்துவதாக குற்றம் சாட்டினார்கள். அஹ்லுஸ் ஸ{ன்னத் வல்ஜமாஅத்தினர்தான் வழிகேடர்கள். பித்அத்வாதிகள் என்று தர்வேஷின் அமைப்பு பிரச்சாரம் செய்கின்றது. அவ்வாறே ஜமாஅத்தே இஸ்லாமி வழிகெட்ட இயக்கமென்று சொல்லப்பட்டது. அவர்களது மார்க்கவிரோதக் கருத்துக்கள் சுட்டிக் காண்பிக்கப்பட்டது. அவர்களுக்கு எதிராக நூற்கள் எழுதப்பட்டன. அவர்கள் திருந்தினார்களா? குறைந்தார்களா? அழிந்தார்களா? இல்லை. மாறாக தர்வேஷின் அமைப்பு எவ்வாறு நடந்துகொண்டதோ அவ்வாறே அஹ்லுஸ் ஸ{ன்னத் வல்ஜமாஅத்தினர் அவர்களின் கருத்துக்களை தவறாக விளங்கிக்கொண்டதாகவே சொன்னார்கள். அஹ்லுஸ் ஸ{ன்னத் வல்ஜமாஅத்தினர்தான் வழிகேடர்கள்ää பித்அத்வாதிகள் என்றார்கள்.


இலங்கையில் ஜமாஅத்தே இஸ்லாமி. 
........................................................................
ஜமாஅத்தே இஸ்லாமிய இயக்கத்தின் ஸ்தாபகர் அபுல் அஃலா மௌதூதி ஸாஹிப் 25-09-1903 ஆம் வருடம் அன்றைய இந்தியாவின் அவ்ரங்காபாத் என்ற ஊரில் பிறந்தவர் அமெரிக்காவிலுள்ள தம் மகளைப் பார்ப்பதற்காக அங்கே சென்றபோது 22-09-1979ல் அவர் மலசலக் கூடத்தில் மரணமானார். 1941ல் அன்றைய இந்தியாவில் ஜமாஅத்தே இஸ்லாமி - இஸ்லாமிய கூட்டம் என்ற அமைப்பினை தோற்றுவித்தார்.
இலங்கையில் 1945க்குப்பின் தடம்பதித்து காலூன்றி காட்டுத் தீ பரவுவதுபோலும்ää உடலில் விஷம் சென்றேறுவதுபோலும் மௌதூதி ஸாஹிப் உண்டாக்கிய ஜமாஅத் இஸ்லாமி பரவிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அதன் அடிநாதம் அறிந்து அதன் வலையில் சிக்கவிடாது (மௌதூதி ஸாஹிபும் ஜமாஅத்தே இஸ்லாமியும்) என்றதொரு நூலைத் தொகுத்து 1976ஆம் ஆண்டளவில் வெளியிட்ட அல் ஆலிமுல் ஃபாழில் அஷ்ஷெய்கு அப்துல் காதிர் ஷெய்கு ஸ{பி ஹழ்ரத் நாயகம் அவர்களையும் இந்த நூல் வெளியாகி சுமார் பத்து வருடங்களின் பின்னர் அதாவது 1987ää 88களில் (இறக்குமதியும் குழப்பமும்) என்ற நூலைத் தொகுத்தளித்த மௌலானா மௌலவி அல்ஹாஜ் அல்உஸ்தாத் எம்.ஐ. அப்துஸ் ஸமத் மக்தூமி ஹழ்ரத் பெருந்தகை அவர்களையும் நன்றியுடன் நினைவுகூர்கின்றோம். 
கி.பி.1915க்குப் பின் இலங்கையில் புதிதாக இயக்கங்கள் இறக்குமதியாக ஆரம்பித்திருக்கிறது. இதனால் 1936க்குப் பின் இலங்கையின் பல பகுதிகளிலே முஸ்லிம்களுக்கு மத்தியில் குழப்பங்களும் அடிதடிகளும் ஆரம்பித்திருக்கிறது. 1938ல் இருந்து இங்கு இறக்குமதியாகும் கொள்கைளிலுள்ள தவறுகள் வழிகேடுகளைக் குறித்து பெரும் பெரும் ஸாலிஹான உலமாக்கள் எச்சரிக்கை செய்து வந்துள்ளனர்.
தமிழ்பேசும் முஸ்லிம்கள் இந்த இறக்குமதிகளிலுள்ள தவறுகளைää வழிகேடுகளை அறிந்து அவற்றை ஏற்றுக்கொள்ளாமல் தள்ளிவிட்டு நேர் வழி பெறுவதற்காகää குழப்பவாதிகள் ஜாக்கிறதைää ஜமாஅத்தே இஸ்லாமியும் அஹ்லே சுன்னாஹ்வும்ää முஸ்லிம் குரல் ஆகியவற்றுடன் சில துண்டுப் பிரசுரங்கள்ää ஃபத்வாக்கள் தமிழில் பகிரங்கமாகவே வெளி வந்துள்ளன.
இஸ்லாமிய ஷரீஅத்தின்படி நடந்துகொண்டிருக்கின்ற தரீக்காக்களை மட்டம் தட்டியிருக்கிறார்கள். நான்கு இமாம்களில் எவரையும் பின்பற்றத் தேவையில்லை என்றிருக்கின்றார்கள். அல்குர்ஆன் அல்ஹதீதை நேரடியாகப் பின்பற்றவேண்டும் என்று பிரசாரம் செய்துள்ளார்கள். இவைதான் அந்த இயக்கங்கள் செய்த தவறாகும். இதற்காகத்தான் அவர்கள் வழிகேடர்கள். அவர்களுடன் சேரவேண்டாம் என்று ஸாலிஹான உலமாக்களால் 1938ல் இருந்து பிரசாரம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறதென்று அல்உஸ்தாத் மர்ஹ{ம் அப்துஸ் ஸமத் ஹழ்ரத் அவர்கள் இறக்குமதியும் குழப்பமும் என்ற நூலில் பதிவு செய்திருக்கின்றார்.

ஜமாஅதே இஸ்லாம்

ஜமாஅதே இஸ்லாம்