السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Thursday 23 April 2015

உளத்தூய்மை


உள்ளத்தை தூய்மைப்படுத்துவது எப்படி?

 உளத்தூய்மை

அறிந்து கொள்ளுங்கள். மனிதனின் உடலில் ஒரு சதைத்துண்டு இருக்கிறது. அது நல்ல முறையில் சீரடைந்து விட்டால் முழு உடலும் சீரடைந்து விடுகிறது. அது (தவறான வழிகளில்) சீர் கெட்டு விட்டால் முழு உடலும் சீர் கெட்டு விடுகிறது. புரிந்து கொள்ளுங்கள் அதுதான் இதயம் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நுஃமான் பின் பஷீர்(ரழி) புஹாரி : 52, முஸ்லிம்.

மனிதன் உயர்வதற்கும் அவன் தாழ்வதற்கும் உள்ளம்தான் காரணம். நேர்மையான உள்ளம் கொண்டவன் நேரிய வழியில் செல்கின்றான். நற்பண்புகளையும் உயர்ந்த குணங்களையும் தன்னுல் உண்டாக்கி கொள்கின்றான்.நல்ல காரியங்களை விரும்பிச் செய்கின்றான்.
தீய உள்ளம் கொண்டவன் நேர் எதிரானவன்.அவனிடம் உயர் குணங்களையும் நற்பண்புளையும் எதிர்பார்க்க முடியாது.நேரிய வழியும் அதன் உயர்வும் அவனுக்கு தெரியாது.

அறிஞர்கள் நற்குணம் பெற்றிருந்தார்கள்.திருத்தூதர்கள் அனைவரும் உயர்ந்த பண்புடையவர்களே.அவர்களின் உள்ளங்கள் நீரேடையை விடத் தெளிவானவை.அவற்றில் அழுக்குக்கு இடமில்லை.கறைபடிய மார்க்கமில்லை.இத்தகைய குணங்களுக்கெள்ளலாம் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் நிலைக்களனாக விளங்கினார்கள்.அவர்கள் மட்டுமல்ல,அவர்களை பின்பற்றி நடந்த மேதைகள்,சட்ட நிபுணர்கள்,உத்தமர்கள் அனைவருமே குணத்தின் குன்றுகளாகத் திகழ்ந்தனர்.பன்பின் சிகரங்களாக விளங்கினார்கள்.

ஒரு மனிதனை உயர்த்துவதும் அவனுடைய பண்புதான்.இன்னும் சொல்வதானால் நற்பண்புகளைப் பெற்றிருப்பது மார்க்கத்தில் மிகவும் முக்கியமான ஒன்று என்று கூறலாம்.இந்த நற்பண்புகளை உண்டாக்கி கொள்வதற்குத்தான் இறையசச்ம் கொண்டவர்கள் அல்லும் பகலும் இறைவணக்கம் புறிந்தார்கள்.இறையன்பு  கொண்டவர்கள் மனப்பயிற்சியில் மூழ்கினார்கள்.ஆம் மனப்பயிற்சியின் உதவியால் நற்குயங்களையும் உயர் பண்புகளையும் உண்டாக்கிக் கொள்ள முடியும் என்று அவர்கள் தங்கள் குறிக்கோளை அடைந்தார்கள் வெற்றி பெற்றார்கள்.

தீய குணம் மனிதனின் விரோதி.உயிரைக் குடிக்கும் கொடிய விஷத்திற்கு அதை ஒப்பிடலாம்.தீய பண்புடையவன் அதன் கொடிய நச்சுப் பல்லுக்கு இரையாகியே தீர வேண்டும்.தீய குணம் இறைவனின் அருளுக்கு அப்பாற்பட்டது.நற்பண்பு சுவனப்பாதைக்கு வாயிலாக இருப்பது போல் தீய பண்பு நரகப்பாதைக்கு வாயிலாக இருக்கின்றது.

தீய குணங்களை மனோ வியாதிகள் என்று குறிப்பிடலாம்.ஆனால் சரீர வியாதியை விட கொடியது.ஏனெனில் இந்த வியாதி முற்றிப் போகும் போது நிரந்தரமான மறுமை வாழ்கையே பழாக்கி விடுகின்றது.இந்த கொடிய பிணி எங்கே?அந்தச் சாதாரண உடல் வியாதி எங்கேஇவ்விரண்டிக்கும் இடையிலுள்ள தூரம் மிகவும் அதிகம்.
உடல் வியாதியின் விஷம் இப்படி இல்லை.இது விஷயதத்தில் வைத்தியர்கள் அனைவரும் கையை விரித்து விட்டாலும் இந்த வியாதியால் எற்படும் மிகம் பெறிய நஷ்டம் மரணம்,சடலத்தின் அழிவு.இதனால் தற்காலிகமான உலக இன்பத்தை இழக்க நேரிடுகிறது.அவ்வளவுதான்.

மனோ வியாதியின் விசயத்தில் வைத்தியர்கள் கையை விரித்து விட்டால் அதனால் இம்மை மட்டமல்ல.மறுமையும் பாழாகி விடுகிறது.மனோ வியாதி கொண்டவனுக்கு மறுமையில் ஏது மதிப்பு?

தன் மனோ வியாதிக்குப் பரிகாரம் தேடிக் கொள்ளும் அளவிற்கு வைத்திய சாஸ்த்திரம் கற்றுக் கொள்ளுவது அறிவுடைய ஒவ்வொரு மனிதனுக்கும் கடமையாகும்.ஏனெனில் எந்த உள்ளமும் முழுக்க முழுக்க வியாதியற்ற நிலையில் இருக்க முடியாது.
ஒவ்வொர் உள்ளமும் ஏதாவதொரு வியாதியை தன்னுள் வைத்துக் கொண்டுதான் இருக்கும்.அதை அசட்டை செய்யக் கூடாது.நன்கு கவனிக்க வேண்டும்.இல்லையேல் மிகவும் சாதாரணமாயிருந்த மனோ வியாதி நாளடைவில் வலுவேறிப் போய் வெளிப்பட ஆரம்பித்து விடும். இப்படி அது பகிரங்கமாகும் போது அதற்குரிய காரணங்களையும் அதை அகற்றுவதற்குரிய மார்க்கத்தையும்,மார்க் அரிஞர்களையும் ஆராய வேண்டிய அவசியம் உண்டாகின்றது. இதற்குப் பிறகு மனோ வியாதிக்குச் சிகிச்சை செய்யப்படும்.
இந்த சிகிச்சை குறித்துத்தான் வல்ல நாயன் உள்ளத்தைப் பரிசுத்தப்படுத்தியவர்கள் வெற்றி கண்டு விட்டார்கள்என்று கூறுகிறான்.
அல்குர்ஆனில் உள்ளத்தூய்மை பற்றி 

1.
மேலும் உமது ஆடைகளை(உள்ளத்தை) தூய்மையாக வைத்துக் கொள்வீராக(74-4)
2.
எவர்கள் மறைவில் அர்ரஹ்மானுக்கு பயந்து நடந்து(அவன்பால்)மீளக்கூடிய(பரிசுத்த)மனதுடன் வருகிறார்களோ(அவர்களுக்குச் சுவனம் நெருக்கமாக்கப்பட்டு சாந்தியுடன் நீங்கள் இதில் நுழையுங்கள்.இது நிரந்தர நாளாகும்.(என்று அவர்களுக்கு கூறப்படும்) 50-33,34
3.
முற்றிலும் என் மார்க்கத்தை (வணக்கத்தை)அவனுக்கே கலப்பற்றதாக ஆக்கியவனாக நான் அல்லாஹூவையே வணங்குகிறேன் என்று(நீர்)கூறுவீராக .39-14

4.(
அப்போது) அவன் உன் மகத்துவத்தின் மீது சத்தியமாக,நிச்சயமாக அவர்கள் அனைவரையும் வழிகெடுத்து விடுவேன் என்றான்.அவர்களில் (உன்னால்)தேர்தெடுக்கப்பட்ட(இஹ்லாசுடைய)அடியார்களைத் தவிர.39-82,83

5,
செல்வமும்,குமாரர்களும்(யாதொரு)பயனிக்காத(அந்த)நாளில் பரிசுத்த இதயத்துடன் அல்லாஹ் விடம் யார் வருகின்றாரோ அவர் தவிர (மற்றவர்களுக்கு பயனளிக்காத நாள்) 26-88,89

இஸ்லாமிய உள்ளங்களே! மனோ வியாதிகளையும் அவற்றை அகற்வதற்குரிய வழிகளையும்,மனோ வியாதியின் போது வெளிப்படும் அடயாளங்கள் முதலியவற்றை மார்க்கம் படிதத் அனுபவமுள்ள மூத்த உலமாக்களிடம் தேடிப்படிப்பது கட்டாயக் கடமையாகும்.
மேலும் அல்லாஹ் ..
அல்லாஹ் எவருடைய இருதயத்தை இஸ்லாத்திற்காக விசாலமாக்குகிறானோ அவர் தமது இறைவனின் ஒளியில் இருக்கிறார். (ஆனால்) அல்லாஹ்வுடைய நினைவை விட்டும் விலகி எவர்களுடைய இருதயங்கள் கடினமாகி விட்டனவோ அவர்களுக்குக் கேடுதான். இத்தகையோர் பகிரங்கமான வழி கேட்டில் இருக்கின்றனர். (39-22) 

மாநபி(ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் அல்லாஹும்ம யாமுகல்லிபல் குலூப் ஃதப்பித் கல்பீ அலா தீனிக்க இறைவா உள்ளங்களை புரட்டுபவனே எனது உள்ளத்தை உனது மார்க்கத்தின் மீது நிலைப்படுத்துவாயாக என்று அதிகமாகப் பிரார்த்தனை புரிவார்கள். அப்போது நான் அல்லாஹ்வின் தூதரே உள்ளங்கள் புரளுமா?என்று கேட்டேன். அதற்கு ஆம் அல்லாஹ் படைத்த ஆதமுடைய மக்கள் அனைவரின் உள்ளங்களும்வல்லமையும்மாண்பும் மிக்க அல்லாஹ்வின் விரல்களில் இரு விரல்களுக்கிடையே தான் உள்ளன. அவன் நினைத்தால் அவற்றை நேர்த்தியாக்குவான். நினைத்தால் அவற்றை பிறழச் செய்து விடுவான் என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். உம்மு சல்மா (ரழி) முஸ்னது அஹமத்தப்ஸீர் இப்னு மர்தவைஹி தப்சீர் தபரீதப்சீர்இப்னு கசீர் 2:24,25 மற்றுமோர் அறிவிப்பில் எந்தவோர் உள்ளமும் அருளாளனின் விரல்களின் இரு விரல்களுக்கிடையே தான் உள்ளன. அவன் அதை நேர்த்தியாக்க நினைத்தால் நேரத்தியாக்குவான். அதைப் பிறழச் செய்ய நாடினால் பிறழச் செய்துவிடுவான். ஆயிஷா(ரழி) புஹாரி : 6617,6628, 7391, திர்மிதி 2226

உள்ளத்தை தூய்மைப்படுத்துவது எப்படி? ஷெக் அப்துல்லாஹ் ஜமாலி இந்தியா

 உளத்தூய்மை

 உளத்தூய்மை