السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Monday, 2 July 2012

சிந்திக்கத் தூண்டும் மார்க்கம் இஸ்லாம்

உலகில் வாழும் மனிதர்கள் பல்வேறு மதங்களை மார்க்கங்களைப் பின்பற்றி வருகின்றனர். அவர்கள் பின்பற்றும் அம்மதங்களின் அடிப்படை வேதங்களாகவோ புராணங்களாகவோ மனிதர்கள் சிலரின் வழிகாட்டுதல்களின் தொகுப்பாகவோ எல்லாமே இயற்கையாகவே நிகழ்ந்து இயற்கையின் நியதிப் படி முடிவுறுகின்றன என்ற சித்தாந்தத்தைக் கொண்டதாகவோ இருக்கின்றன. நம்மைப் படைத்த இறைவன் ஒருவன்தான் என்பதில் பல்வேறு மதத்தார் ஒரே கருத்தில் இருந்தாலும் கூட அவர்கள் சார்ந்திருக்கும் வேதங்கள் புராணங்கள் இக்கருத்தை நன்றாக வலியுறுத்தியும் கூட வழிநடாத்திச் செல்லும் மதகுருமார்கள் பண்டிதர்கள் முன்னோடிகள் மார்க்க...

திருக்குர்ஆன் மற்றும் பைபிளில் காணப்படும் வரலாற்றுத் தகவல்கள் - ஓர் ஒப்பீடு (பகுதி 1)

இறைவெளிப்பாட்டின் அடிப்படையில் சமுதாயத்தை வழிநடத்திய இறைதூதர்கள் மற்றும் அவர்களுக்கு அருளப்பட்ட இறைவசனங்களின் தாக்கத்தை உட்கொண்ட ஒரு நூலே பைபிள் என்பதில் முஸ்லிம்களுக்கு மாற்று அபிப்பிராயம் இல்லை. இறைவசனங்களும் தீர்க்கதரிசிகளின் உபதேசங்களும் வரலாற்றாசிரியர்களின் அபிப்பிராயங்களும் புரோகிதக் கருத்துக்களும் சேர்ந்த ஒரு கலவையே பைபிள். தீர்க்கதரிசிகளின் வாழ்க்கைப் புராணங்கள் பைபிளின் முதுகெலும்பு எனலாம். இந்த வாழ்க்கைப் புராணங்களின் மேல் புரோகிதக் கருத்துக்களைப் பொதிந்து உருவாக்கப்பட்டதே இன்று நடைமுறையில் உள்ள பைபிள் என்று கூறினால் வியப்படையத் தேவையில்லை. பைபிளில்...

செல் பேசி - ஓர் கழுகுப்பார்வை

தொலைத்தொடர்பு சாதனங்கள் பல்கிப் பெருகிக் கொண்டிருப்பது நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகின்றது. எங்கிருந்தும், எப்போதும், யாரிடமும் தொடர்புகொள்ளலாம் என்கிற அளவிற்குச் செல் ஃபோன்கள் நமக்குக் காலத்தைச் சுருக்கித் தந்துவிட்டன. தொலைபேசி (Land Line) இணைப்புகளை முழுமையாகப் பயன்படுத்தாமலேயே ஒரு தலைமுறை சென்றுகொண்டிருக்கையில் இன்று பிறந்த குழந்தைகள் கூட செல் ஃபோன்களில் பேசத் தொடங்கிவிட்டன. உங்கள் பேர் என்ன? என்று கேட்பதற்குப் பதில் உங்கள் செல் நெம்பரைச் சொல்லுங்கள் என்று கேட்கும் அளவிற்கு இன்று காலம் மாறிவிட்டது. 2004-டிசம்பர் மாதம் எடுத்த கணக்கெடுக்கின்படி...