இமாம் மாபிள்ளை லெப்பை ஆலிம்
தொடர் 01
நூன்முகம்
இஸ்லாம் ஹிஜ்ரி முதலாம் நூற்றாண்டிலேயே தமிழகத் திற்கு அறிமுகமாகி இருந்தது; ஆங்காங்கே அரபிய முஸ்லிம் களின் குடியிருப்புகள் அமைந்திருந்தன: மஸ்ஜிதுகளும் கட்டப்பட்டிருந்தன என்ற உண்மைகளெல்லாம் வரலாற்று வல்லுநர்களால் இப்போது ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகின்றன.
அவர்கள் தமிழகத்தை ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகங் களின் மூலம் வளப்படுத்தினரே யன்றி சுரண்ட வில்லை; இங்கேயே குடியேறி வாழ்ந்து வந்தனர். பிற்காலத்தில் வர்த்தகர்களாக வந்த ஐரோப்பியர்கள் பேராசை கொண்டு, நம்நாட்டின் செல்வத்தைக் தத்தம் தேயங்களுக்குக் கொண்டு செல்வதற்கு இடையூறுகள் ஏற்படாமலிருக்கவும், அந்த நாடுகளுக்கு இடையிலேயே தோன்றிய கடுமையான பூசல், போட்டிகளின் விளைவாகவும், அவர்கள் அரசியல் ஆதிக்கம் பெறவும், நாடுபிடிக்கவும் முற்பட்டனர். அந்த ஐரோப்பியர் போலன்றி அரபிய வியாபாரத்திலேயே கருத்தூன்றியிருந்த்தோடு கமதியான பிரசாரத்திலும் வர்த்தகர்கள், அரபிய முஸ்லிம்களின் தூய வாழ்க்கை முறையினால் ஈர்க்கப் பட்ட தமிழர்களின் எண்ணிக்கையும் கூடிவந்தது. அவர் களிடையே மார்க்க போதனை புரிவதற்கு உறுதுணையாக அறபுத் தமிழ் எழுத்து முறையை அரபிய முஸ்லிம்கள் உருவாக்கினர்.
அதற்கு முன்பாக பாரசீக மொழிக்கு
முஸ்லிம்கள் அரபி லிபியைப் பயன் படுத்தி வெற்றி கண்டிருந்தது அவர்களுக்கு ஒரு நல்ல முன் மாதிரியாக அமைந்தது.
தமிழகத்தில் முஸ்லிம்கள் அரசியல் ஆதிக்கம் பெற முயலவில்லை என்றால், ஹலரத் ஸையிது இப்ராஹீம் ஷஹீது வலியுல்லாஹ் அவர்கள் பாண்டிய மன்னரோடு போரிட்டு வென்று ஆட்சி நடத்தியது எதனைக் குறிப்பிடுகின்றது என்ற கேள்வி எழலாம். அவர்களின் வாழ்க்கை வரலாற்றை நுணுகி ஆராய்வோருக்கு, அது மார்க்கப் பிரச்சாரத்திற்காக வந்த துறவு மனப்பான்மை கொண்ட தூயவர்களின் கூட்டம் ஒன்று, தனது தற்காப்பிற்காகச் சந்திக்க நேரிட்ட சண்டைகளின் விளைவே என்பது தெளிவாகும்.
அதனை அடுத்து முஸ்லிம்களுக்கு அரசியல் ஆதிக்கம் கிட்டியது. பதின்மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் தானே வலுவில் வந்து சேர்ந்ததாகும். அப்போது பாண்டிய நாட்டை ஆண்டுவந்த மாறவர்மன் குலசேகரன், தமிழகத் தோடு மிகப்பெரிய அளவில் வர்த்தகம் நடத்தி வந்த கைஸ் தீவின் அரசரான மலிக்குல் இஸ்லாம் ஜமாலுத்தீன் அவர்களின் இளவல் மலிக்குல் அஃலம் தகியுத்தீனின், மதியூகம்,வீரம், அறிவாற்றல் ஆகியவைகளினால் கவரப் பட்டு, அவரைத் தன் அமைச்சராகவும், கடற்படைத் தலைவராகவும், எல்லைக் காவலராகவும் அமர்த்திக் கொண்டார். அதோடு மட்டுமன்றி அவர் தமது அரச குமாரிகளில் ஒருத்தியை அவருக்கு மணமுடித்து வைத்து அவரைத் தன் மருமகனாக ஆக்கிக்கொண்டதோடு, பாண்டிய நாட்டின் கிழக்குக் கடற்கரையோரப் பகுதிகளை அவருக்குப் பிரித்துக் கொடுத்து அதற்கு வருதை மண்டலம் எனப் பெயரிட்டு, தகீயுத்தீனை அதற்கு அரசராக்கினார்.
பாண்டிய மன்னர்களின் வரலாற்றில், மதுரைப்பாண்டிய மன்னனின் தலைமையில் மற்றும் நான்கு பாண்டியர்கள், துணையரசர்களாக ஆங்காங்கே ஆட்சி பீடத்தில் அமர்ந்து
அரசோச்சுவது வழக்கமாக இருந்தது. தகியுத்தீன் மற்றொரு அரசரானபோது ஐந்து பாண்டியர்களுடன் சேர்ந்து "ஆறாம் பாண்டியன்" என்ற சிறப்புப் பெயராலும் அறியப் பட்டு வந்தார். பாரசீக மொழியில் மர்ஜபானே ஹிந்த் (Margrave of Hind) என்றும் தமிழில் "கறுப்பாறு காவலர்" என்றும் கூட தகியுத்தீன் அழைக்கப்பெற்றார். இந்த "கறுப்பாறு காவலர்" என்ற பட்டம் அவருடைய சந்ததியினரால் தொடர்ந்து வகிக்கப்பட்டு வந்தது. அந்த வம்சாவளியில் வந்த சீதக்காதிக்கும்கூட அப்பட்டம் வழங்கியது. அதன் பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் "வருதை மன்னர்" களின் பட்டம், பதவிகளையும் பாதித்தன. இந்த வரலாறுக ளெல்லாம் மறைக்கப் பட்டதும் மறுக்கப் பட்டதும் தமிழக வரலாற்றிற்கு ஏற்பட்ட "விபத்துகள்" என்றால் அது மிகை
யாகாது.
அப்படிப்பட்ட "அரசாட்சி"களோடு, "அருளாட்சி” யும் ஹிஜ்ரி ஆரம்ப நூற்றாண்டிலிருந்து தமிழகத்தில் தொடர்ந்து கொண்டே இருந்தது. கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த மாணிக்கவாசகர் தமிழகத்திற்கு புதிய கடவுட் தத்துவக் கருத்துக்களை வழங்கியது முஸ்லிம் ஞானியரின் தொடர்பினால் தான் என்பது அவர்களுடைய வரலாற்றினை நுணுகி ஆராய்வோருக்குத் தெளிவாகும்.
அடுத்து, பதினோராம் நூற்றாண்டில் திருச்சியில் வாழ்ந்த தப்லே ஆலம் பாதுஷா நத்ஹர் (வலீ) அவர்களின் இனிய போதனைகளினால் கவரப் பட்டு ஆயிரக் கணக்கானோர் இஸ்லாத்தை ஏற்று வந்ததைக் கண்ட பிறகே கவலை கொண்டு, அருகில் ஸ்ரீரங்கத்தில் வாழ்ந்த இராமானுஜர் மத சீர்த்திருத்தம் செய்து, சமத்துவத்தை போதிக்கத் தொடங்கினார். தீண்டப் படாதோருக்கும் பூணூல் அணிவித்து அவர்களை பிராமணர்களாக்கினார். அதன் விளைவாக அவர் வைதிகர்களின் கொடிய சீற்றத்துக்கும் கொடுமைகளுக்கும் ஆளாகி, நாடு துறந்து மைசூருக்கு ஓடி உயிர் தப்பினார்.
தொடரும்
கீழக்கரை மகான் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் வரலாறு
தொடர் 02
*************
சிறந்த இறைநேசச் செல்வரான மகான் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள், தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த காயல்பட்டினம் என்னும் ஊரில் ஹிஜ்ரி 1232 ஆம் ஆண்டு முஹர்ரம் மாதம் பிறை 16 செவ்வாய்க்கிழமை பிறந்தார்கள்.
மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களின் தந்தை வெள்ளை அஹ்மது லெப்பை ஆலிம், தாயார் ஆமினா உம்மா. இவர்கள் இருவரும் இறை பக்திக்கும், கல்விக்கும். ஆன்மீக சாதனைகளுக்கும் அரிய உதாரணமாகத் திகழ்ந்தார்கள். இருவரும் ஹஜ்ரத் செய்யிதினா அபூபக்கர் சித்தீக் (ரலி ) அவர்களின் பரம்பரையில் தோன்றிய மாதிஹுர் ரசூல் செய்கு சதக்கத்துல்லாஹ் அப்பா அவர் களின் தலைமுறையில் தோன்றியவர்கள்.
கீழக்கரைக்கு சென்றடைவதற்கு முன் மகான் சதக்கத் துல்லாஹ் அப்பா அவர்கள் காயல்பட்டினத்தில் எந்த வீட்டில் குடியிருந்தார்களோ, அந்த வீட்டிலேயே மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களும் பிறந்தார்கள்.
மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள் இரண்டு வயதுக் குழந்தையாக இருக்கும்பொழுதே அவர்களின் தந்தை வெள்ளை அஹ்மது ஆலிம் அவர்கள் ராமனாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கீழக்கரையில் குடியேறிவிட்டார் கள். எனவே இவர்களின் இளமைப் பிராயம் கீழக்கரையிலே துவங்கியது.
கல்வி - இளமைப் பருவம்
இளமையில் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களுக்குத் திக்குவாயாக இருந்தபொழுது, இவர்களின் தந்தை இவர் களை செய்கு முகம்மது அல் நுஸ்கி என்ற பெரியாரிடம் அழைத்துச் செல்ல, அவர்கள் ஆண்டவனிடம் “துஆ” (பிரார்த்தனை) இறைஞ்சி இவர்கள் வாயில் ஓதி ஊதியதுடன் தேனை நக்கி தண்ணீரை அருந்துமாறு செய்ய, இவர்களுக்குப் பேச்சு தடுமாற்றம் நீங்கி பூரண நலம் ஏற்பட்டது.
இவர்கள் ஏழு வயதிலிருந்தே திருக்குர்ஆனை மனனம் செய்யத் துவங்கி ஒன்பது வயதிற்குள், திருக்குர்ஆனை மனனம் செய்து முடித்து ஹாபீஸ் ஆக விளங்கினார்கள். தகப்பனாரின் சிறந்த கட்டுப்பாட்டின் கீழ் இவர்கள், திருக் குர்ஆன் விரிவுரைகள், ஹதீஸ், தஸவ்வுப் எனும் மெய்ஞ் ஞானக் கலை, தத்துவம், இஸ்லாமிய வரலாறு ஆகிய கலைகளை, தங்கள் தந்தை வெள்ளை அஹ்மது ஆலிம் அவர் களிடம் சில காலம் கற்றுப் புலமை பெற்றார்கள். நல்லொழுக் கமும் நற்செயலும் கொண்டஇவர்கள் அறிவைப் பெருக்கும் ஆக்கப்பணியில் தன்னை முழுவதும் ஈடுபடுத்தினார்கள்.
பின்னர், அக்காலத்தில் மக்களால் மிக மேன்மையாகப் போற்றப் பெற்றவரும், குணங்குடி மஸ்தான் சாகிப் (வலி) முதலான பெரியார்களின் குருநாதரும், பெரும் ஞான தேசிகருமான கீழக்கரை தைக்கா சாகிப் என்னும் ஷேக் அப்துல் காதிர் (வலி) அவர்களின் மாணவராக இருந்து மார்க்கக் கல்விகற்றார். இதன் பயனாக அவர்கள் அரபு, உர்து, பார்சி, தமிழ்ஆகிய மொழிகளிலும் நல்ல புலமை பெற்றார் கள்.
இளம் வயதிலேயே அரபியிலும், தமிழிலும் பாடல் களைப் புனையும் திறன் அவரிடம் மிளிர்ந்தது.
இவர்களின் பெற்றோர் தன் மகன் மாமேதையாகவும், பரிபூரணமான ஆலிமாகவும் விளங்க வேண்டும் என்ற
எண்ணத்துடன் நாற்பது புதன்கிழமை இவர்களின் முடியை இறக்கி வந்தனர்.
மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள் சிறு வயது முதல் நுண்ணறிவும் விவேகமும் உடையவர்களாகவே விளங்கினார் கள். தமது அறிவுச் சுடராலும், ஆராய்ச்சித் திறனாலும் மார்க்க ஞானங்களை நன்கு தெரிந்து நல்லொழுக்கங்களில் ஈடுபட்டுவரலானார்கள். இறை வணக்கத்தில் பூரணமாகத் தம்மை ஆழ்த்திக்கொண்ட அவர்கள் இஸ்லாமிய கோட்பாடு களின் சகல அம்சங்களும் நிரம்பப் பெற்ற முழுமையான முஃமினாவாகவும் தங்கள் வாழ்விலேயே சில கஷ்புல் கராமாத்துகளையும் உடையவர்களாகவும் விளங்கினார்கள்.
இவர்களின் நல்லொழுக்கங்களையும், புத்திக் கூர்மையை யும் கண்டு கீழக்கரை தைக்கா சாகிப் அவர்கள், இவர்களுக்கு மேலான அரபிக் கல்விகளையும் கற்றுக்கொடுத்து, காதிரியா தரீக்கில் முரீது என்னும் ஞான உபதேசமும் கிலாபத்தும் கொடுத்து அருளினார்கள். தைக்கா சாகிப் அவர்களின் மறைவுக்குப் பின் அவர்களுக்கு ஆண் சந்ததி இல்லாது இருந்ததனால், காதிரியா தரீக்காவையும் அதன் தலைமை ஸ்தாபனமாக விளங்கிய-கீழக்கரை தைக்கா மதரசாவையும் நிர்வாகித்துப் பரிபாலிக்கும் பொறுப்பையும் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள் ஏற்றார்கள். இவர்கள் அக் காலத்தில் காதிரியா தரீக்காவின் மாண்புமிகு சற்குருவாக வும் இருந்து வந்தர்கள்.
தங்கள் தைக்காவில் தாலியுல் உலூம்களுக்கு (மார்க்க
விற்பன்னர்களுக்கு) மார்க்கக் கல்வியை கற்பித்துக்
கொண்டும் அதேசமயத்தில் பிறமொழியிலுள்ள மார்க்க
நூல்களை தமிழுரை செய்து அச்சிட்டு வெளியிட்டும்,
மக்களுக்கு நேர்முகமாக நல்லுபதேசங்களைச் செய்து
கொண்டும், தங்கள் வாழ்நாட்களைக் கழித்து வந்தார்கள்.
இவர்களுக்குப் பல பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான
முரீதுகள் ஏற்பட்டனர்.
திருமணம், மக்கள்
மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களின் இறைபக்தியும், நுண்ணறிவும், இவரின் ஆசிரியரான தைக்காசாகிப் அவர் களை மிகவும் கவர்ந்தது. அவர் தமது நான்காவது மகள் சாரா உம்மாவை மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களுக்கு மணமுடித்து வைக்க விரும்பினார்கள். அவர்களின் மனைவி அதற்கு இணங்காதபொழுது, “வருங்காலத்தில் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் தம் மாமேதைத்தன்மையினால் சுல்தானின் அரியாசனத்தில் அமரும் பேறு பெறுவார். அவர் கல்விச் செல்வமும், அறிவுச் செல்வமும் படைத்தவர். அவர் நூல்கள் எழுதத் தொடங்குவாராயின் அதிலிருந்து பெரும் பணம் சம் பாதிப்பார். உபந்நியாசமும், உபதேசமும் புரியத் தொடங்கு வாராயின், உலகச்செல்வங்கள் அவரது காலடியில் வந்து குவியும்” என்று புகழ்ந்து பேசி தமது மனைவியைச் சம்மதிக்க செய்து தமது மகள் சாரா உம்மாவை மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களுக்கு ஹிஜ்ரி 1253 ஆம் ஆண்டு ரபீவுல் ஆகிர் மாதம் 27 ஆம் நாள் மணமுடித்து வைத்தார்கள். மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களின் மாமனார் தைக்கா சாகிப் வலியுல்லாஹ் அவர்கள் முன்னறிவிப்புச் செய்தபடி இவர்கள் பிற்காலத்தில் புலவர்கள் பேரவையில் திப்பு சுல்தான் அமர்ந்த சிம்மாசனத்தில் அமர்ந்ததோடும் மலிக்குஷ்ஷுஅரா (புலவர்களின் மன்னன்) என்ற பட்டமும் நல்கி கௌரவிக்கப் பட்டனர். ஆலிம் அவர்களுக்கு ஐந்து குழந்தைச் செல்வங்கள் பிறந்தன. செய்யிது பாத்திமா, செய்யிது அப்துல் காதிர் ஆலிம், (கல்வத்து நாயகம்) பாலாமினா உம்மா, உம்முசல்மா, ஷாகுல் ஹமீது ஆலிம் (ஜல்வத்து நாயகம்) ஆகியோரே அவர்கள்.
இவ் ஐவரின் தாயாரான சாரா உம்மா அவர்களின் மறைவுக்குப் பிறகு, அவர்களின் சகோதரியாகிய உம்முஹானி உம்மா அவர்களை மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள் மணந்து கொண்டார்கள்.
குண நலன்
நடை முறை வாழ்க்கையில் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள் நபிகள் நாயகத்தின் சுன்னத்தைக் கடைபிடித்து ஒழுகிவந்தார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழித் தோன்றல் களுக்குப் பெரிதும் மரியாதை செய்ததுடன் அவர்களின் கோத்திரத்தை சேர்ந்த சிறுவர்கள் வந்த போதிலும், மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள் எழுந்து நின்று
அவர்களை வரவேற்பார்கள்.
தைக்காவில் தங்கள் மாணவர்களுக்கு இஸ்லாமிய அறிவைப் புகட்டியும், தேடி வந்தோருக்கு சலிப்பின்றி ஆலோசனை நல்கியும் உதவிபுரிந்து வந்தார்கள். இன்னல் இழைத்தோருக்கும் இனிய உதவிகளைச் செய்து வந்தார்கள்.
வெளியூர்ப் பயணம்
திருமணத்திற்குப் பின்பு, மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள் கண்ணனூர், தலைச்சேரி, பொன்னானி முதலான நகரங்களுக்குச் சென்று அவ்விடத்திலேயுள்ள மகான்களைத் தரிசித்து நல்லாசி பெற்றார்கள். பின்னர் காயல் பட்டினம் வந்தார்கள். இங்கு மாதவமிக்க ஞானி செய்யிது முகம்மது புகாரித் தங்கள் அவர்களது சீடரும், கலீபாவுமாகிய. உமர் வலியுல்லாஹ் அவர்களின் புதல்வரும், ஞான சிகாமணியு மான, செய்கு அப்துல் காதிர் என்ற காயல்பட்டினம் தைக்கா சாகிப் வலி அவர்களின் சமூகத்துக்குபோய் அங்கு சிலநாள் தங்கி அவர்களுடன் பழகி, அவர்களின் நல்லாசி பெற்று கீழக்கரை திரும்பினார்கள்.
தொழில்
மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள், 1835 ஆம் ஆண்டு தென் இந்தியாவில், மதுரை மாநகரில் “தைக்கா
ஹார்டுவேர் ஸ்டோர்ஸ்" என்ற பெயரில் தங்களுடைய வியாபாரத்தை ஆரம்பித்தார்கள். இதனால் அவர்கள் பல நாடுகளுடன் தொடர்புகொள்ள செல்லும் இடங்களில் வேண்டி இருந்தது. எல்லாம் வர்த்தகத்தை மட்டு மல்லாது, மார்க்க வழிபாடுகளையும்' கண்காணித்து ஆலோசனை கூறிவந்தார்கள்.
ஹஜ் யாத்திரையும்—அரபுநாட்டு விஜயமும்
மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள், தங்கள் ஐம்பத்து ஐந்தாவது வயதில் ஹிஜ்ரி 1287 ஆம் ஆண்டு மருமகன் பல்லாக்குத் தம்பி (வலி) அவர்களுடன் புனித ஹஜ்ஜை நிறைவேற்ற மக்கா, மதீனா சென்றார்கள். அத்துடன் அவர்கள் சிரியா, ஈராக், ஏமன் போன்ற அரேபிய நாடுகளுக்கும் பார சீகத்துக்கும் விஜயம் செய்தார்கள். அந்த நாடுகளிலுள்ள அறிஞர்களைக் கண்டு அளவளாவினார்கள். மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களின் ஆழ்ந்த புலமையைக் கண்டு அவர்கள் பெரிதும் வியப்புற்றனர். சென்ற இடங்களில் எல்லாம் அவர்கள் சுல்தான், காஸி, நவாபு, உலமாக்கள், மற்றும் பிரபுக்கள் ஆகியவர்களால் மிகச் சிறப்பாக வரவேற்கப்பட்டார்கள். பலர் அவர்களின் சீடர்களானார் கள். மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களின் சிறந்த அரபு இலக்கியப் புலமையைப் பாராட்டி வியந்த மக்கள் பரிசுகளை யும் பட்டங்களையும் வழங்கினார்கள். ஆங்காங்கு மக்களுக்கு உபதேசம் புரிவதிலும், முரீது பைஅத்து கொடுத்து நேர்வழி காட்டுவதிலும், மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளி களை அல்லாஹ்வின் திருநாமம், மற்றும் உச்சாடனங்களால் குணப்படுத்தினார்கள்.
தொடரும்
ஹார்டுவேர் ஸ்டோர்ஸ்" என்ற பெயரில் தங்களுடைய வியாபாரத்தை ஆரம்பித்தார்கள். இதனால் அவர்கள் பல நாடுகளுடன் தொடர்புகொள்ள செல்லும் இடங்களில் வேண்டி இருந்தது. எல்லாம் வர்த்தகத்தை மட்டு மல்லாது, மார்க்க வழிபாடுகளையும்' கண்காணித்து ஆலோசனை கூறிவந்தார்கள்.
ஹஜ் யாத்திரையும்—அரபுநாட்டு விஜயமும்
மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள், தங்கள் ஐம்பத்து ஐந்தாவது வயதில் ஹிஜ்ரி 1287 ஆம் ஆண்டு மருமகன் பல்லாக்குத் தம்பி (வலி) அவர்களுடன் புனித ஹஜ்ஜை நிறைவேற்ற மக்கா, மதீனா சென்றார்கள். அத்துடன் அவர்கள் சிரியா, ஈராக், ஏமன் போன்ற அரேபிய நாடுகளுக்கும் பார சீகத்துக்கும் விஜயம் செய்தார்கள். அந்த நாடுகளிலுள்ள அறிஞர்களைக் கண்டு அளவளாவினார்கள். மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களின் ஆழ்ந்த புலமையைக் கண்டு அவர்கள் பெரிதும் வியப்புற்றனர். சென்ற இடங்களில் எல்லாம் அவர்கள் சுல்தான், காஸி, நவாபு, உலமாக்கள், மற்றும் பிரபுக்கள் ஆகியவர்களால் மிகச் சிறப்பாக வரவேற்கப்பட்டார்கள். பலர் அவர்களின் சீடர்களானார் கள். மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களின் சிறந்த அரபு இலக்கியப் புலமையைப் பாராட்டி வியந்த மக்கள் பரிசுகளை யும் பட்டங்களையும் வழங்கினார்கள். ஆங்காங்கு மக்களுக்கு உபதேசம் புரிவதிலும், முரீது பைஅத்து கொடுத்து நேர்வழி காட்டுவதிலும், மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளி களை அல்லாஹ்வின் திருநாமம், மற்றும் உச்சாடனங்களால் குணப்படுத்தினார்கள்.