#நீங்கள் அறிந்தீர்களா?
மகத்தான ஸஹாபி
உஸ்மான் இப்னு அஃஃபான் (ரழியல்லாஹு அன்ஹு)
அவர்களுக்கு இன்றும் சவூதியில் ஒரு வங்கிக் கணக்கு உள்ளது என்று!
🔹 ஆனால் இது எப்படி சாத்தியமானது?
அதற்குப் பின்னால் இருக்கும் “பீர் ரூமா
(بئر رومة) என்ற கிணறு எப்படி 14 நூற்றாண்டுகளாக தொடரும் ஒரு வஃக் (தன்னார்வச் சொத்து) ஆனது?
🔹 மேலும் இன்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மஸ்ஜிதுக்கு அருகே அவர்களுடைய பெயரில் ஒரு பெரிய ஹோட்டல் எப்படி கட்டப்பட்டது?
இதோ அதன் அற்புதமான வரலாறு 👇
🌴 பீர் ரூமாவின் வரலாறு
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்த பின் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. தண்ணீர் மிகவும் தேவையான ஒன்றாக இருந்தது.
அந்த நேரத்தில் (பீர் ரூமா) என்பது மதீனாவின் மிகப் பெரிய கிணறு. ஆனால் அது ஒரு யூதரின் சொத்து, அவர் தண்ணீரை மக்களுக்குக் கூட ஒரு சொட்டு கூட விலைக்கு மட்டும் விற்பனை செய்தார்!
இதைக் கண்ட உஸ்மான் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள், அந்தக் கிணற்றை முழுமையாக வாங்க விரும்பினார்கள். ஆனால் யூதர் மறுத்துவிட்டார்.
அப்பொழுது உஸ்மான் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறினார்கள்:
“அப்படியானால், பாதியை எனக்குத் தாருங்கள் ஒரு நாள் எனக்கு, ஒரு நாள் உங்களுக்கு.”
யூதர் அதற்கு சம்மதித்தார்; ஏனெனில் அவர் நினைத்தார், இப்படி செய்தால் விலை மேலும் உயர்ந்து, அதிக லாபம் கிடைக்கும் என்று.
ஆனால் எதிர்பாராத ஒன்று நடந்தது!
உஸ்மான் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் தம் நாளை அல்லாஹ்வுக்காக அர்ப்பணித்தார்கள் அந்நாளில் மக்கள் இலவசமாக தண்ணீர் எடுக்கலாம் என அறிவித்தார்கள்.
மக்கள் “உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் நாள்” அன்று தங்கள் தேவைக்கேற்ப தண்ணீர் எடுத்து, “யூதரின் நாள்” அன்று யாரும் போகவில்லை.
இதனால் யூதரின் வியாபாரம் நின்று போனது, அவர் கிணற்றின் மீதிப் பாகத்தையும் விற்க வேண்டிய நிலைக்கு வந்தார்.
அதை உஸ்மான் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் 20,000 திர்ஹமுக்கு வாங்கி, அல்லாஹ்வுக்காக வக்ப் செய்து விட்டார்கள் முஸ்லிம்கள் இலவசமாக தண்ணீர் பெறுவதற்காக.
ஒரு ஸஹாபி பின்னர் வந்து கிணற்றை அதிக விலைக்கு வாங்க விரும்பினார்கள்.
அதற்கு உஸ்மான் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறினார்கள்:
எனக்கு அல்லாஹ் அதிகம் கொடுத்திருக்கிறார் — ஒவ்வொரு நன்மைக்கும் பத்து மடங்கு நன்மை.”
🌴 கிணற்றிலிருந்து பேரித்தம் மரங்கள்வரை
காலப்போக்கில் அந்தக் கிணற்றைச் சுற்றி பல பேரீத்தம் மரங்கள் வளர்ந்தன.
முதலில் ஒஸ்மானிய அரசு அதை பராமரித்தது, பின்னர் சவூதி அரசு அதன் கவனிப்பை எடுத்தது.
இப்போது அங்கு 1550 பேரீத்தமரங்கள் உள்ளன.
அந்த மரங்களின் பேரீச்சங்கள் விற்கப்படுகின்றன, அதன் வருமானம் இரண்டு பாகங்களாகப் பிரிக்கப்படுகிறது:
ஒரு பாகம் – ஏழைகளுக்காக
* மற்றொரு பாகம் உஸ்மான் இப்னு அஃஃபான் (ரழியல்லாஹு அன்ஹு) என்ற பெயரில் திறக்கப்பட்ட வங்கிக் கணக்கில் வஃக் கணக்காக வைப்பு செய்யப்படுகிறது.
🏨 பேரீத்தம் மரங்களிலிருந்து ஹோட்டல் வரை
காலப்போக்கில் அந்த வஃக் நிதி பெரிதாக வளர்ந்தது.
பின்னர் அந்த நிதியால் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மஸ்ஜிதுக்கு அருகிலுள்ள மையப் பகுதியிலே ஒரு நிலம் வாங்கப்பட்டது.
இன்று அந்த நிலத்தில் ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.
அது ஆண்டுக்கு சுமார் 50 மில்லியன் ரியால்கள் வருமானம் தரும் என மதிப்பிடப்பட்டுள்ளது
அதில் பாதி ஏழைகள், நலிவுற்றவர்களுக்காக செல்கிறது, மற்ற பாதி மீண்டும் உஸ்மான் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வஃக் கணக்கில் சேர்க்கப்படுகிறது.
அதிலும் ஆச்சரியமானது
அந்த நிலம் இன்று வரை அரசுப் பதிவில் “உஸ்மான் இப்னு அஃஃபான் (ரழியல்லாஹு அன்ஹு) என்ற பெயரிலேயே பதிவு செய்யப்பட்டிருக்கிறது!
سبحان الله
உஸ்மான் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் 14 நூற்றாண்டுகளுக்கு முன் செய்த ஒரு தானம், இன்னும் இன்றும் நன்மை வழங்கி வருகிறது!
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:
“ஒவ்வொரு நபிக்கும் ஒரு தோழன் இருக்கிறார்கள், என் தோழன் ஜன்னாவில் உஸ்மான் ரலியல்லாஹ் அன்ஹு.”
இது நம்மை கண்கலங்கச் செய்யும் ஒரு வரலாறு —
சதகா ஜாரியா (நிலையான நன்மை தரும் தானம்) என்பதின் உண்மையான அர்த்தத்தை இது கற்பிக்கிறது.
Muhammed Yoosuf Musthafi







