السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Wednesday, 11 December 2024

நூரே முஹம்மதியா

 

*அந்நூறுல் முகம்மதியின் இரகசியம்* .

•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

உருது மூலம்: 

அல்லாமா, முப்தி,ஹகீமுல் உம்மத் 

 *அஹ்மத் யார்கான்* .

றஹ்மத்துள்ளாஹிஅலைஹி 


தமிழில்: 

மௌலவி , பாஸில் ,

 *ஏ.எல். பதுறுத்தீன்* .

 ஷர்க்கி பரேலவி, ஸூபி, காதிரி.நக் ஷபந்தி.

••••••••••••••••••••••••••••••••••••••••••••.    { 7 }


 _றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்_ _"நூர்"  என்பதற்கான இஸ்லாமிய அறிஞர்களின் சான்றுகள் !_ 

***************************************

 றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  றப்புத்த ஆலாவின் நூர்  என்பது,   முஸ்லிம் சமுகத்தில்  காலாகாலம் இருந்தே வரும் அகீதாவாகும், அதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்க வில்லை,  உம்மத்திலுள்ள பெரியவர்களின் சில  கூற்றுக்களை  நமூனாவினடிப்படையில் முன்வைக்கின்றேன். படியுங்கள்! 


1-  ஹளறத் அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹு அவர்களின்  நபி புகழ் கவிதைகளை ஹதீதின் சான்றுகள் என்ற தலைப்பில் முன் வைத்துள்ளோம், அதில் றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களை நூர் என்று குறிப்பிட்டுள்ளார்கள்,  அக்கவிதைகள் றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் அவையில் அன்னாருக்கு முன்னாலேயே பாடப்பட்டவை  என்பதும், அதற்கு நபியவர்கள் எந்த ஒரு மறுப்பையும் கூறவில்லை என்பதும்  குறிப்பிடத்தக்கது ,


2- றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் திருவதனம் சூரியனைப்போன்று பிரகாசிக்கும் என்ற ஹளறத் அபூஹுறைறா றழியல்லாஹு அன்ஹு அவர்களின் கூற்றை  முன்னுரையில் நாம் குறிப்பிட்டுள்ளோம்.


3- றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் முபாறக்கான பல்லின் இடைவெளியிலிருந்து  ஒளி வெளிப்படுவது தெரியவரும் என்ற ஹளறத் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹுமா அவர்களின் கூற்றை  முன்னுரையில் குறிப்பிட்டுள்ளோம்.


4-  றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் திருமுகம்  பதினான்காம் நாள்   முழுமதி போன்று இலங்கும் என்ற ஹளறத் ஹிந்து இப்னு அபீ ஹாலா றழியல்லாஹு அன்ஹு அவர்களின் கூற்றையும் முன்னுரையில் முன்வைத்துள்ளோம். 


5-  நீர்  அன்னாரைப் பார்த்தால் சூரியன்  உதிப்பது போன்று காண்பாய்!  என்ற ஹளறத் றபீஃ பின்து முஅவ்வித் றழியல்லாஹு அன்ஹா அவர்களின்  பொன்மொழியையும் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளோம்.


6-  ஹளறத் ஷைகுஅப்துல் ஹக் முஹத்திதுத் திஹ்லவி றஹ்மதுல்லாஹி அலைஹி மதாரிஜுன் நுபுவ்வத்  பாகம் 1. பக்கம் 118ல் கூறுகின்றார்கள்.


றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் திருமேனி முழுவதும் ஒளியாகவே இருந்தது,  ஒளிக்கு நிழல் விழுவதில்லை.


7-  அல்லாமா முல்லா அலி காரி றஹ்மத்துள்ளாஹிஅலைஹி தங்களுடைய "மௌழூஆத்துல் கபீர்" என்ற நூல்  பக்கம் 86ல் கூறுகின்றார்கள்.


واما. نوره عليه السلام وهو في غاية من الظهور شرقا وغربا  واول  ما خلق الله نوره وسماه في كتابه نورا


றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் நூர் எழுவானிலும், படுவானிலும் அதிஉச்சமாக இலங்கிக் கொண்டிருக்கின்றது, அல்லாஹுத்த ஆலா முதன்முதலில் அவர்களின் ஒளியைத்தான் படைத்தான், இன்னும் ,அல்லாஹுத்த ஆலா தன்னுடைய வேதத்தில் அன்னாரை நூர் என்று குறிப்பிட்டுள்ளான்.


8-  இதே அல்லாமா முல்லா அலி காரி றஹ்மத்துள்ளாஹிஅலைஹி தங்களுடைய மௌழுஆத்துல் கபீர்என்ற  இதே நூலில் இதே பக்கத்தில் குறிப்பிடுகின்றார்கள், 


قال الله تعالى الله نور السموات والارض على مثل نوره قلب محمد.


அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்,  அல்லாஹ் வானங்கள் மற்றும்  பூமியின் ஒளியாகும், அல்லாஹ்வின் ஒளிக்கு உதாரணம் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் கல்பாகும் 



9- இமாம் பூஸரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி  தங்களுடைய கஸீதா புர்தா ஷரீஃபில் கூறுகிறார்கள்.


فانك شمس فضل هم كواكبها 

يظهرن انوارها للناس في الظلم 


அல்லாஹ்வின் ஹபீபே!  தாங்கள் கருணையின்  கதிரவனாகும். ஏனைய நபிமார்கள் அன்னாரின் தாரகைகள் , அன்னாரின் ஒளி இருளிருக்கும் மக்களை வெளிபடுத்துகின்றது.


10-  இமாம் ஜலாலுதீன் ரூமி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் தங்களுடைய மஸ்னவி ஷரீபில் கூறுகின்றார்கள்.


اللہ کے نور کا سایہ بھی نور ہوتا ہے جو خدا سے دور ہو ان کا سایہ بھی دور ہے جو ہم کھاتے ہیں اس سے پلیدی نکلتی ہے جو حضور کاتے ہیں وہ سب خدا کا نور بنتا ہے 


அல்லாஹ்வுடைய நூறின் நிழலும் நூறாக ஆகிவிடுகிறது, அல்லாஹ்விடமிருந்து தூரமாக இருக்கின்றவையின் நிழலும் கூட தூரமாகவே இருக்கிறது ,நாம் சாப்பிடுபவைலிருந்து மலம் வெளிப்படுகிறது, ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உண்பவை யாவும் அல்லாஹ்வின் நூறாக மாறிவிடுகிறது.


11- இமாம் அஹ்மத் இப்னு முஹம்மத் அஸ்கலானி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் மவாஹிபுல்லதுன்னியா ஷரீபில் பாகம் 1 பக்கம் 9, கூறுகின்றார்கள். 


قال الله تعالى يا ادم ارفع راسك فرفع راسه فراى نور محمد صلى الله عليه وسلم في سرادق العرش فقال  يا ربي ما هذا النور قال هذا نور نبي من ذريتك اسمه في السماء احمد وفي الارض محمد لولاه ما خلقتك ولا خلقت سماء ولا ارضا


ஆதமே!  தனது சிரசை உயர்த்துவிராக! என்று அல்லாஹ் கூறினான், அவர்கள் தங்களுடைய சிரசை உயர்த்தியதும்,  அர்ஷின் திரைச்சீலைகளில் ஓர் ஒளியைப் பார்த்தார்கள், எனது ரப்பே! இது எவ்வகையான ஒளி என்று கேட்டார்கள், இது உம்முடைய சந்ததிகளில் வருகின்ற ஒரு நபியின் ஒளி! அவரின் திருநாமம் வானத்தில் அகமது, பூமியில் முஹம்மத், அவர் இல்லையாயின், உம்மை நாம் படைத்திருக்க மாட்டோம், வானம், பூமியையும் கூட படைத்திருக்க மாட்டோம் என்று அல்லாஹ் கூறினான்.


12- இதே இமாம் அஹ்மத் இப்னு முஹம்மது கஸ்தலானி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அதே மவாஹிபுல்லதுன்னியா பக்கம் 8ல் கூறுகின்றார்கள்.


ان الله تعالى لما خلق نور نبينا محمد صلى الله عليه وسلم امره ان ينظر الى انوار الانبياء فغشهم  من نوره فانطق هم الله به فقالوا  يا ربنا من  غشينا نوره  فقال الله تعالي هذا نور محمد بن عبد الله ان امنتم به جعلتكم اانبياء 


அல்லாஹுத்தஆலா நபி கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஒளியைப் படைத்த போது, அனைத்து நபிமார்களின்  ஒளிகளைப் பார்க்குமாறு அந்த ஒளிக்குக் கட்டளையிட்டான்,  ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் ஒளியால் சகல ஒளிகளையும்அல்லாஹுத்தஆலா  மங்கவைத்து விட்டான்,  றப்புத்த ஆலா அவர்களைப்பேச வைத்ததும் , எங்களின் றப்பே!  எங்களை மங்க வைத்த ஒளி எது ?என்று நபிமார்கள் அனைவரும் கேட்டனர், இவர் முஹம்மத் இப்னு அப்துல்லாஹ் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)ஆவார்,  இவரை நீங்கள் ஈமான் கொண்டால், உங்களை நபியாக ஆக்குவேன் என்று  றப்புத்த ஆலா கூறினான்.


13-  அல்லாமா ஸர்க்கானி றஹ்மத்துள்ளாஹிஅலைஹி  ஹளறத் ஜாபிர் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீதுக்குரிய விளக்கத்தில் பின்வருமாறு கூறுகின்றார்கள்.


من نور ه اي من نور هو ذاته 


அல்லாஹுத்த ஆலா றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்ல மவர்களை அவனுடைய தாத்தின் நூறிலிருந்து படைத்தான். 


14-  இமாம் அஹ்மது கஸ்தலானி மவாஹிபுல்லதுன்னியா ஷரீபில்  கூறுகின்றார்கள்.


لما تعلقت ارادة الحق تعالى بايجاد خلقه ابرز الحقيقة المحمدية من انوار  الصمدية في الحضرة الاحدية ثم  سلخ منها العوالمة كلها علوها وسفلها


அல்லாஹுத்தஆலா படைப்புகளைப்  படைக்க நாடிய பொழுது, சமதியத் என்ற  குறிப்பான தாத்து  ஹகீகத்துல் முஹம்மதிய்யாவை வெளிப்படுத்தியது, பின்னர், அதிலிருந்து அனைத்து மேலுலகம், கீழ் உலகம் வெளியானது .


15-  தலாயிலுல் கைறாத் என்ற சிறப்பான நூலின் விரிவுரையான மதாலிஉல் மஸர்ராத்  என்ற நூலில் பின்வருமாறு பதியப்பட்டுள்ளது


قد قال الاشعري انه تعالى نور ليس كالانوار وروح نبيه القدسية لمعة من نوره والملائكة اشرار تلك الانوار  قال صلى الله عليه وسلم اول ما خلق الله نور ي ومن  نور ي خلق كل شيء وغيره مما في معناه


இமாம் அபுல் ஹஸன் அஷ்அரி றஹ்மத்துள்ளாஹிஅலைஹி கூறுகின்றார்கள்.


அல்லாஹுத்தஆலா ஒளியாகும், ஆனால், ஏனைய ஒளிகளைப் போன்று அல்ல, இன்னும்,நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சங்கையான நூர்  அந்த ஒளியில் ஒரு  பிரகாசமாகும், இன்னும், மலக்குகள் அந்த ஒளிகளின் பொறிகளாகும், ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், முதன் முதலில் அல்லாஹ் என்னுடைய ஒளியைப் படைத்தான் ,இன்னும், என்னுடைய ஒளியிலிருந்து தான் அனைத்து வஸ்துக்களையும் படைத்தான்.


இவற்றுக்கு மேலதிகமாக இன்னும் பல ஹதீதுகள் இருக்கின்றன, அவை அனைத்தின் உள்ளடக்கமும் ஒன்றாகவே இருக்கின்றது.


16-  அல்லாமா ஷாஹ் அப்துல் ஙனி நாபுலிஸி றஹ்மத்துள்ளாஹிஅலைஹி தங்களுடைய  ஷறஹு தரீக்கத்துல் முஹம்மதியா என்ற நூலில் கூறுகிறார்கள். 


قد خلق كل شيء من نوره صلي الله عليه و سلم  كما ورد به الحديث الصحيح


அனைத்து வஸ்துக்களும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் ஒளியிலிருந்து தான் படைக்கப்பட்டன, இவ்வாறு ஸஹீஹான ஹதீதில் வந்துள்ளது.

                  மலரும்.....