السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Tuesday, 10 November 2026

கப்ரடியில் குர்ஆன் ஏன் ஓத வேண்டும்?

 

பகுதி 01 

#முதல்ல_இந்த ஹதீஸ் கப்ரடியில் அல் குர்ஆன் ஓதுவது கூடாது என்று கிருக்குத்தனமான கருத்தை சொல்வதற்கு சொல்லப்பட்ட ஹதீஸ் அல்ல.... 


குறிப்பிட்ட ஹதீஸ் ஸஹீஹ் முஸ்லிமில் இடம் பெருகிறது....


عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا تجعلوا بيوتكم مقابر إن الشيطان ينفر من البيت الذي تقرأ فيه سورة البقرة 


உங்களுடைய வீடுகளை மண்ணறைகளாக ஆக்கிவிடாதீர்கள். நிச்சயமாக ஸூரத்துல் பகரா ஓதப்படும் வீட்டை விட்டும் ஷைத்தான் வெருண்டு ஓடுகிறான்...


அறிவிப்பவர் அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு


ஸஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண் 780 

அத்தோட இன்னும் சில ஹதீஸ்களையும் தருகிறேன் ஸ்கிரீன் ஷாட் கீழே பார்த்துக்கொள்ளலாம்..


இமாம் நவவீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் மேற்குறித்த. ஹதீஸின் விளக்கமாக ஷரஹ் ஸஹீஹ் முஸ்லிமில் பாகம் 03 பக்கம் 273 ல் எழுதுகிறார்கள்


ولا تجعلوها كالقبور مهجورة من الصلاة 


உங்கள் வீடுகளை தொழுகையற்றுப் புறக்கணிக்கப்பட்ட கப்ருகளைப் போன்று ஆக்கிவிடாதீர்கள்..


அதாவது உங்கள் வீடுகளைத் தொழுகை மற்றும் வணக்க வழிபாடுகள் இல்லாத இடங்களாக ஆக்கிவிடாதீர்கள். கப்ருகள் தொழுகை நிறைவேற்றப்படும் இடங்கள் அல்ல...எனவே கப்ருகள் தொழுகை இல்லாத இடங்களாக இருப்பதைப் போன்று உங்கள் வீடுகளும் தொழுகையற்ற இடங்களாக மாறிவிடக் கூடாது...

 

#இப்ப ஏனைய ஹதீஸ்களை சுருக்கமாக பார்க்கலாம் வாங்க


ஹதீஸ் இலக்கம் 777 ஐ ப் பார்த்தால் 


إجعلوا من صلاتكم في بيوتكم ولا تتخذوها قبورا 


உங்களுடைய தொழுகைகளில் ஒரு பகுதியை உங்கள் வீடுகளிலும் நிறைவேற்றுங்கள். உங்கள் வீடுகளை கப்ர்களைப் போன்று தொழுகை இல்லாத இடங்களாக ஆக்கிவிடாதீர்கள்...


அதற்கு அடுத்த ஹதீஸைப் பார்த்தால் 


صلوا في بيوتكم ولا تتخذوها قبورا 


உங்கள் வீடுகளிலும் தொழுங்கள். உங்கள் வீடுகளைக் கப்ருகளாக ஆக்கிவிடாதீர்கள்...


இப்படி தொடராக வீடுகளில் தொழுது கொள்ளுங்கள்.உங்கள் வீடுகளை கப்ர்கள் போன்று ஆக்கி விடாதீர்கள் என்பதை பார்க்கலாம் ஸ்கிரீன் ஷாட் கொடுக்கிறேன் பார்த்துக்கொள்ளுங்கள்.....


#இப்போ இந்த ஹதீஸ்களை வெளிப்படையாக பார்க்கும் போது பள்ளியில் தொழக்கூடாது எனவே உங்கள் தொழுகைகளை வீட்டிலேயே தொழுது கொள்ளுங்கள் என்ற நோற்றப்பாட்டை கொடுக்கிறதா இல்லையா..??


அப்படி என்றால் பள்ளி எதற்கு..?


இப்படி விளங்கலாமா.????இப்படி விளங்கி மார்க்கத்தை சொன்னால் என்ன ஆகும்.....


எனவே இதன் விளக்கம் என்ன...??


வாங்க இமாம் முஸ்லிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இத்துனை ஹதீஸ்களையும் பதிவு செய்வதற்கு என்ன பாடம் தலைப்பு போட்டிருக்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.....


باب إستحباب صلاة النافلة في بيته وجوازها في المسجد 

وسواء في هذا الراتبة وغيرها الا الشعائر الظاهرة وهي العيد والكسوف والاستسقاء والتراويح وكذا ما لا يتأتى في غير المسجد كتحية المسجد ويندب كونه في المسجد وهي ركعتا الطواف


வீட்டில் உபரியான நஃபிலான தொழுகையைத் தொழுவது சிறப்பானது. பள்ளிவாசலில் தொழுவதும் அனுமதிக்கப்பட்டதாகும் என்ற பாடம்...


இதில் பர்ளுக்குப் பிந்திய ராத்திபான சுன்னத்துத் தொழுகைகளும் மற்ற நபிலான தொழுகைகளும் சமமானவையாகும்.

ஆனால் சில தொழுகைகள் இதற்கு விதிவிலக்காகும் அவை..


1- ஈதுப் பெருநாள் தொழுகை

 صلاة العيد

2- கிரகணத் தொழுகை

 صلاة الكسوف

3- மழை வேண்டித் தொழுகை 

صلاة الاستسقاء

4- தராவீஹ் தொழுகை 

صلاة التراويح

இவை வெளிப்படையான மார்க்க அடையாளங்களாக 

الشعائر الظاهرة

இருப்பதால் பள்ளி வாசலில் அல்லது பொது விடத்தில் கூட்டாகத் தொழுவது சிறப்புடையதாகும்..


இன்னும் பள்ளிவாசலுக்கு வெளியே தொழ முடியாத அல்லது பள்ளிவாசலிலேயே தொழுவது தொடர்புடைய சில தொழுகைகளும் இதற்கு விதிவிலக்காகும் உதாரணமாக ..


தஹிய்யத்துல் மஸ்ஜித் 

تحية المسجد

 பள்ளிவாசலுக்குள் நுழைந்தவுடன் தொழும் இரு ரக்அத்துகள்..


அதேபோன்று தவாபுடைய இரு ரக்அத்துகள்

 ركعتا الطواف 

இவை பள்ளிவாசலில் தொழப்படுவது விரும்பத்தக்கதாகும்...


இமாம் முஸ்லிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் எவ்வளவு அழகாக துல்லியமாக பாடம் அமைத்து அந்த ஹதீஸ்களை பதிவு செய்திருக்கிறார்கள் பாருங்கள்.....


அப்படியே வாங்க ஸஹீஹுல் புகாரி ஷரீப் ஹதீஸ் எண் 1187 


باب التطوع في البيت


வீட்டில் உபரியான நபிலான தொழுகைகளைத் தொழுவதன் பாடம்...


إجعلوا في بيوتكم من صلاتكم ولا تتخذوها قبورا 

உங்களுடைய தொழுகைகளில் சிலவற்றை உங்கள் வீடுகளிலும் நிறைவேற்றுங்கள். 

உங்கள் வீடுகளை மண்ணறைகளாக ஆக்கிவிடாதீர்கள்...


ஒரு ஹதீஸ் இருந்தால் அதோடு தொடர்புடைய வேறு ஹதீஸ்கள் எதை தெளிவு படுத்துகிறது என்பவைகளை தேடிப் படித்தால் இந்த குழப்பங்கள் வருவதற்கு வாய்ப்பில்லை...


எனவே மேற்கூறிய ஹதீஸ்களின் தெளிவான விளக்கம் நபிலான உபரியான தொழுகைகளை வீட்டில் தொழுவது பற்றியே தவிர அல் குர்ஆன் கப்ருகளிடத்தில் ஓதக்கூடாது என்பதல்ல....


இந்த ஹதீஸின் மூலம் இப்படியான மக்களை வழிகெடுக்கும் கருத்துக்களை வஹ்ஹாபிகளை தவிர வேறு யாரும் சொல்லவில்லை....


#அப்படியே இன்னொரு ஹதீஸுக்கு வாங்க பார்க்கலாம்...


இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களின் அறிவிப்பை பாருங்கள்.


ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்..


اذا مات أحدكم فلا تحبسوه وأسرعوا به إلى قبره وليقرأ عند رأسه 

بفاتحة الكتاب وعند رجليه بخاتمة سورة البقرة 


உங்களில் ஒருவர் மரணித்தால் அவரைத் தாமதப்படுத்தாதீர்கள். அவரை விரைவாக அவரது கப்ருக்கு எடுத்துச் செல்லுங்கள். அவரது தலைப்பகுதியில் ஸூரத்துல் பாத்திஹாவையும் கால் பகுதியில் ஸூரத்துல் பகராவின் இறுதிப் பகுதிகளையும் ஓதட்டும்...

 


இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களின் நடை முறை எதுவென்றால் 


أن ابن عمر استحب أن يقرأ على القبر بعد الدفن أول سورة البقرة وخاتمتها 


இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அடக்கம் செய்த பிறகு கப்ரில் ஸூரத்துல் பகராவின் ஆரம்பப் பகுதியையும் இறுதிப் பகுதியையும் ஓதுவதை விரும்பத்தக்கதாகக் கருதினார்கள்....


மேற்கூறியவைகளை இமாம் பைஹகீ ரஹிமஹுல்லாஹ் அஸ் ஸுனனுல் குப்ராவில் பதிவு செய்திருக்கிறார்கள்...


இமாம் நவவீ ரஹிமஹுல்லாஹ் அல் அத்கார் எனும் தங்களின் கிதாபிலும் பதிவு செய்திருக்கிறார்கள்...


இமாம் நவவீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இந்த அறிவிப்பை 


بإسناد حسن 


அழகான அறிவிப்பாளர் தொடரைக் கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்கள்... 


இமாம் ஷாபிஈ ரஹிமஹுல்லாஹ் அவர்களின் தெளிவான கூற்று


وأحب لو قرئ عند القبر ودعي للميت 


கப்ருக்கு அருகில் குர்ஆன் ஓதப்பட்டு மரணித்தவருக்காகப் பிரார்த்தனை செய்யப்படுவதை நான் விரும்புகிறேன்..


அல் உம்மு 


இமாம் நவவீ ரஹிமஹுல்லாஹ் அவர்களின் தெளிவான தீர்ப்பு அல் மஜ்மூஃவில் கூறுகிறார்கள்..


ويستحب أن يقرأ من القرآن ما تيسر ويدعو لهم عقبها نص عليه الشافعي 

واتفق عليه الاصحاب 


கப்ருகளை ஸியாரத் செய்பவர் தன்னால் இயன்ற குர்ஆன் வசனங்களை ஓதுவதும் அதற்குப் பிறகு கப்ரில் அடக்கம் செய்யப்பட்டவர்களுக்காக துஆச் செய்வதும் விரும்பத்தக்கதாகும்....இதை இமாம் ஷாபிஈ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்கள்... எங்களுடைய ஷாஃபிஈ மத்ஹபின் அறிஞர்களும் இதனை ஏற்றுக்கொண்டுள்ளனர்....


எனவே கப்ருக்கு அருகில் அல் குர்ஆன் ஓதுவது தடை என்று ஒரு ஆதாரமும் இந்த வஹ்ஹாபிகளால் காட்ட முடியாது....ஆனால் ஹதீஸ்களை தலைகீழாக விளங்கித்தான் சொல்வார்கள்...


இமாம் இப்னு அபீத் துன்யா ரஹிமஹுல்லாஹ் அவர்களின் 

كتاب القبور 


இன்னும் இமாம் கல்லால் ரஹிமஹுல்லாஹ் அவர்களின்


 القراءة عند القبور


கிதாபுகளையும் இன்னும் நிறைய உண்டு ...பார்த்தால் நிறைய தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்...மேலே பதிவு செய்தவைகள் ஒரு துளியே!!!


மேற்கூறிய தகவர்களை விமர்சனம் செய்ய இடம் ஒன்று இருக்குது....முடியும்னா தொடருங்கள்....


மௌலவி நிஸ்வர் பாதிபி காதிரி

+94 77 444 77 57