السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Tuesday, 28 April 2026

எறும்பும்_இறைஞானியும்

 

எறும்பும்_இறைஞானியும்


ஒருமுறை அபூபக்கர் ஷிப்லி அவர்கள் கடைவீதியில் ஒரு பை நிறைய கோதுமையை வாங்கிக் கொண்டு தனது வீட்டிற்குத் திரும்பினார்கள்.


 வீட்டிற்கு வந்து பையைத் திறந்தபோது, கோதுமை மணிகளுக்கு இடையே ஒரு சிறிய எறும்பு அங்குமிங்கும் பதற்றமாக ஓடிக்கொண்டிருப்பதைப் பார்த்தார்கள்.

அந்தக் காட்சியைக் கண்டதும் இமாம் அவர்கள் மிகுந்த கவலையடைந்தார்கள்.

அவர்கள் சிந்தித்துப் பார்த்தார்கள்:


"இந்த எறும்பு கடைவீதியில் உள்ள ஒரு கடையிலிருந்து இங்கு வந்துவிட்டது. இப்போது இது தன் குடும்பத்திலிருந்தும், தன் கூட்டத்திலிருந்தும் பிரிந்து தவிக்கிறது. நான் அறியாமல் செய்த இந்தச் செயலால் ஒரு ஜீவன் அதன் இருப்பிடத்தை இழந்துவிட்டதே!"


#கருணை_மிகுந்த_செயல்


சற்றும் தாமதிக்காமல், அந்த ஒரு சிறிய எறும்புக்காக மீண்டும் கடைவீதிக்குச் செல்ல முடிவு செய்தார்கள். அவர்கள் வந்த தூரம் குறைவானது அல்ல, ஆனாலும் அந்த உயிரினத்தின் மீது கொண்ட கருணையால் மீண்டும் கோதுமைப் பையைத் தூக்கிக்கொண்டு கடைவீதிக்கு நடந்தார்கள்.


அங்கு சென்று, தான் எந்தக் கடையிலிருந்து கோதுமை வாங்கினார்களோ, அதே இடத்திலேயே அந்த எறும்பை மென்மையாக இறக்கி விட்டார்கள். தன் கூட்டத்தோடு இணைந்த அந்த எறும்பைப் பார்த்த பின்னரே இமாம் அவர்கள் நிம்மதியடைந்தார்கள்.


#மரணத்திற்குப்_பின்_கிடைத்த_கூலி


அபூபக்கர் ஷிப்லி அவர்கள் காலமான பிறகு, ஒருவர் அவர்களைக் கனவில் கண்டார். அப்போது அவரிடம், "இறைவன் உங்களை எப்படி நடத்தினான்?" என்று கேட்கப்பட்டது.


அதற்கு ஷிப்லி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் இவ்வாறு பதிலளித்தார்கள்:


"இறைவன் என்னிடம், 'ஷிப்லியே! உனது எந்தச் செயலுக்காக உனக்கு சொர்க்கத்தை வழங்கினேன் என்று தெரியுமா?' எனக் கேட்டான். நான் எனது வணக்க வழிபாடுகள், தர்மங்கள் மற்றும் புனிதப் பயணங்களைக் கூறினேன். ஆனால் இறைவன் 'இல்லை' என்று கூறிவிட்டான்."

இறுதியாக இறைவன் கூறினான்:

"ஒரு குளிரான நாளில், தன் கூட்டத்தைப் பிரிந்து தவித்த அந்தச் சிறிய எறும்பின் மீது நீ காட்டிய கருணைக்காகவும், அதை மீண்டும் அதன் இருப்பிடத்தில் சேர்த்த உனது அந்தப் பண்பிற்காகவும் உன்னை நான் மன்னித்து சொர்க்கத்தை வழங்கினேன்."


#நாம்_கற்கும்_பாடம்

சிறிய நன்மையும் பெரிது: நாம் செய்யும் ஒரு மிகச்சிறிய நல்ல காரியம், இறைவனின் பார்வையில் மிகப் பெரியதாக இருக்கலாம்.


#படைப்பினங்கள்_மீது_அன்பு: மனிதர்களுக்கு மட்டுமல்லாமல், அற்பமாகத் தெரியும் எறும்பு போன்ற உயிரினங்களுக்கும் நாம் தீங்கு விளைவிக்கக் கூடாது.


#பணிவு: 

ஒரு பெரிய ஞானியாக இருந்தும், ஒரு எறும்புக்காகத் தனது நேரத்தையும் உழைப்பையும் செலவழித்த அந்தப் பணிவே உயரிய பண்பு.


இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கு மிகப் பெரிய காரியங்கள் செய்ய வேண்டும் என்பதில்லை; உண்மையான மனதுடன் செய்யப்படும் சிறு நற்செயலே போதுமானது என்பதை இந்த வரலாறு நமக்கு உணர்த்துகிறது.


ஆதாரம் - تذكرة الأولياء , الرسالة القشيري)

 தத்கிரத்துல் அவ்லியா,

அர்-ரிஸாலத்துல் குஷைரிய்யா

நற்காலை உறக்கம்: மார்க்க மற்றும் மருத்துவப் பார்வை

நற்காலை உறக்கம்: மார்க்க மற்றும் மருத்துவப் பார்வை

 நற்காலை உறக்கம்: மார்க்க மற்றும் மருத்துவப் பார்வை


​نومة الصبحة: نظرة شرعية وطبية


தொகுப்பு : மௌலவீ HMM.பஸ்மின் றப்பானீ 


​அதிகாலை நேரம் என்பது பரக்கத் (அருள்) நிறைந்த நேரமாகும். அந்த நேரத்தில் உறங்குவது குறித்து இஸ்லாமிய அறிஞர்கள் வழங்கிய விளக்கங்களை இக்கட்டுரை தெளிவுபடுத்துகிறது.


​1. அடிப்படைச் சட்டம் (الحكم الشرعي الأساسي)

فالنوم بعد الصبح قد كرهه بعض أهل العلم نظرا لما يترتب عليه من آثار صحية وغيرها إلا إذا كان لعارض أو ضرورة، والأصل جواز النوم في هذا الوقت.


பஜர் தொழுகைக்குப் பின் உறங்குவதை அறிஞர்களில் சிலர் வெறுக்கத்தக்கதாக (மக்ரூஹ்) கருதுகின்றனர். 


இதற்கு உடல்நலப் பாதிப்புகள் மற்றும் இதர காரணங்கள் அடிப்படையாக அமைகின்றன.


 எனினும், ஒருவருக்குத் தேவை அல்லது கட்டாயம் ஏற்படும் போது அவ்வாறு உறங்குவது அனுமதிக்கப்பட்டதே (முபாஹ்).


 அடிப்படையில் இந்த நேரத்தில் உறங்குவது தடுக்கப்பட்ட ஒன்றல்ல.


​2. இப்னுல் கையிம் (ரஹ்) அவர்களின் விளக்கம் (كلام ابن القيم رحمه الله)

قال ابن القيم: ونوم الصبحة يمنع الرزق، لأن ذلك وقت تطلب فيه الخليقة أرزاقها، وهو وقت قسمة الأرزاق، فنومه حرمان إلا لعارض أو ضرورة.


இமாம் இப்னுல் கையிம் (ரஹ்) அவர்கள் கூறுகையில்: "அதிகாலை உறக்கம் வாழ்வாதாரத்தைத் தடுக்கிறது.


 ஏனெனில், அது படைப்பினங்கள் தங்களின் வாழ்வாதாரத்தைத் தேடும் மற்றும் அவை பங்கிடப்படும் நேரமாகும்.


 எனவே, ஒரு காரணமோ அல்லது தேவையோ இன்றி அந்த நேரத்தில் உறங்குவது அந்த அருள்களை இழப்பதாகும்" என்கிறார்.


​3. பகல் உறக்கத்தின் வகைகள் (أقسام نوم النهار)

قيل: نوم النهار ثلاثة: خُلق، وخُرق، وحُمق. فالخُلق: نومة الهاجرة (القيلولة). والخرق: نومة الضحى، تشغل عن أمر الدنيا والآخرة. والحمق: نومة العصر.

பகல் நேர உறக்கத்தை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்:


​நற்பண்பு (خُلق): 


இது 'கைலூலா' எனப்படும் நண்பகல் உறக்கம் (நபிவழி).


​அறியாமை (خُرق): 


இது முற்பகல் (ளுஹா) நேரத்து உறக்கம்; இது துனியா மற்றும் மறுமையின் வேலைகளில் கவனக்குறைவை ஏற்படுத்தும்.


​முட்டாள்தனம் (حُمق): 


இது அஸர் தொழுகைக்குப் பின் உறங்குவது. இது புத்தியைக் குறைக்கும் என அறிஞர்கள் எச்சரித்துள்ளனர்.


​4. முன்னோர்களின் அறிவுரை (نصائح السلف الصالح)

رأى عبد الله بن عباس ابنا له نائما نومة الصبحة، فقال له: قم، أتنام في الساعة التي تقسم فيها الأرزاق؟ وعن عمر رضي الله عنه: إياك ونومة الغداة فإنها مبخرة مجفرة.


அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தனது மகன் அதிகாலையில் உறங்குவதைக் கண்டபோது: "எழுந்திரு! வாழ்வாதாரங்கள் பங்கிடப்படும் நேரத்தில் நீ உறங்குகிறாயா?" என்று கேட்டார்கள்.


 உமர் (ரலி) அவர்களும் அதிகாலை உறக்கத்தை எச்சரித்துள்ளார்கள், அது உடல் ஆரோக்கியத்தைக் கெடுத்து, சோம்பலை உண்டாக்கும் என்பது அவர்களின் கருத்தாகும்.


​5. (الخاتمة)

சுருக்கமாகக் கூறுவதானால், அதிகாலையில் உறங்குவது ஹராம் அல்ல என்றாலும், அந்த நேரத்தை இபாதத்களிலும், வாழ்வாதாரத் தேடலிலும் செலவிடுவது சிறந்தது.


 "யா அல்லாஹ்! 

🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

என் உம்மத்தினருக்கு அவர்களின் அதிகாலை நேரத்தில் பரக்கத் செய்வாயாக" எனும் நபிமொழிக்கேற்ப நடப்பது நமது ஈருலக வெற்றிக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் உகந்தது.

Tuesday, 21 April 2026

எலும்புகளை குப்பையில் வீசலாமா ؟

 


எலும்புகளை குப்பையில் வீசலாமா ? 

********************************************


#எலும்புகளை குப்பையில் வீசும்போது “பிஸ்மில்லாஹ்” சொல்ல மறக்காதீர்கள்.

ஏனெனில் அது மீண்டும் இறைச்சி சேர்வதற்கான காரணமாகி, முஸ்லிம் ஜின்னுகளுக்கான உணவாக ஆகும்.


தொகுப்பு : 

மெளலவி HM யூசுப் முஸ்தபி, காதிரி

Muhammed Yoosuf Musthafi 


இதனை ஒரு சதகா (தர்மம்)என நினைத்து, நல்லதும் சுத்தமானதுமான உணவாக முஸ்லிம் ஜின்னுகளுக்கு கொடுக்கிறீர்கள் என்று நினையுங்கள்.


இந்த முஸ்லிம் ஜின்னுகள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் உணவை கேட்டபோது, அவர் கூறினார்கள்:

“அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்ட ஒவ்வொரு எலும்பும் உங்களுக்கு (உணவாக) கிடைக்கும்.”


அதனால், நீங்கள் சாப்பிடும்போது அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி, பின்னர் அந்த எலும்பை எறிந்தால், முஸ்லிம் ஜின்னுகள் அதனைப் பெறும்போது, அது மீண்டும் இறைச்சியுடன் இருப்பதாக மாறி, அவர்கள் அதனை உண்பார்கள்.


அதனால் தான், நீங்கள் உணவின் தொடக்கத்தில் “பிஸ்மில்லாஹ்” சொல்ல மறந்துவிட்டால்:

“பிஸ்மில்லாஹ் அவ்வலஹு வ ஆகிரஹு”(ஆரம்பத்திலும் முடிவிலும் அல்லாஹ்வின் பெயர்) என்று சொல்ல வேண்டும்.


ஏனெனில், நீங்கள் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லாமல் அந்த இறைச்சியை உண்டு, எலும்பை எறிந்தால், முஸ்லிம் ஜின்னுகள் அதிலிருந்து உணவுபெற முடியாது; அது காஃபிர் ஜின்னுகளுக்குச் சென்று விடும்.


இப்னு மஸ்ஊத் (ரழியல்லாஹு அன்ஹு) அறிவிக்கின்றார்: நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் ஜின்னுகள் வந்து உணவு கேட்டபோது, அவர் கூறினார்கள்:


 “அல்லாஹ்வின் பெயர் சொல்லப்பட்ட ஒவ்வொரு எலும்பும் உங்களுக்கு, அது மிகுந்த இறைச்சியுடன் கிடைக்கும். மேலும், ஒவ்வொரு மலமுமே உங்கள் மிருகங்களுக்கு தீவனமாகும்.”


அதன்பின் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்:

“அவற்றினால் (எலும்பும், மலமும்) நீங்கள் இஸ்திஞ்ஜா செய்யாதீர்கள்; ஏனெனில் அவை உங்கள் சகோதரர்களின் உணவாகும்.”

 (ஸஹீஹ் முஸ்லிம்)


இது எலும்புகளுடன் தொடர்பான மறைந்து போன ஒரு அழகான இஸ்லாமிய ஒழுக்கமாகும் ❤️ செய்ஹுமார்கள் உஸ்தாதுமார்கள் நாதாக்கள் அஹ்லுபைத்துக்கள் கற்றுக் கொடுத்த பண்பாடுகளாகும். 


“நினைவூட்டுங்கள்; நிச்சயமாக நினைவூட்டல் நம்பிக்கையாளர்களுக்கு பயன் தரும்.”


தொடரும் ...


#உலகில் #ஒழுக்கம் #மறுமையை #உரிமை #فضائل_قيام_الليل #உழை #நன்மை #உலக #உணவு #الشيخ #எலும்பு #ஜின் #ஷைத்தான்

Sunday, 19 April 2026

ஜப்பானின் முதல் முஸ்லிம் அப்துல் ஹலீம் நோடா


 👉ஜப்பானின் முதல் முஸ்லிம் அப்துல் ஹலீம் நோடா 


டோக்கியோ ஜப்பானிய வரலாற்றில் இஸ்லாத்தைத் தழுவிய முதல் நபராகப் பத்திரிகையாளர் அப்துல் ஹலீம் நோடா ஷோதாரோ நோடா அடையாளப்படுத்தப்ட்டுள்ளார். 


⭐1891-ல் எர்டுகுருல் கப்பல் விபத்து நிதியுதவிக்காக துருக்கி சென்ற அவர், அங்கு சுல்தான் இரண்டாம் அப்துல் ஹமீதைச் சந்தித்தார்.


⭐பிரிட்டிஷ் அறிஞர் அப்துல்லாஹ் குயிலியமின் வழிகாட்டலால் ஈர்க்கப்பட்டு, ஜூன் 1891-ல் அவர் இஸ்லாத்தை ஏற்றார். இவரைத் தொடர்ந்து டோராஜிரோ யமாடா மற்றும் ஹஜ் பயணம் செய்த முதல் ஜப்பானியரான உமர் யமாவோகா ஆகியோர் ஜப்பானிய இஸ்லாமிய வரலாற்றில் தடம் பதித்தனர். 


⭐1972-ல் உமர் மிட்டா குர்ஆனை ஜப்பானிய மொழியில் மொழிபெயர்த்தார். இந்த வரலாற்றுத் தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் விழிப்புணர்வுக்காகப் பகிரப்பட்டு வருகின்றன.



யூசுஃப் நபி, மூஸா நபி ஆகியோரின்

 


யூசுஃப் நபி, மூஸா நபி ஆகியோரின் வரலாறுகளை ஒப்பிட்டு எழுதப்பட்ட கட்டுரை ஒன்றை வாசித்தேன். அற்புதமாக இருந்தது.


1. யூசுஃப் நபியின் சரிதையில் அவரது தாயார் குறித்து எந்தக் குறிப்பும் இல்லை. மூஸா நபியின் சரிதையில் அவரது தந்தை குறித்து எந்தக் குறிப்பும் இல்லை.


2. யூசுஃப் நபியின் சரிதை தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான உரையாடலுடன் தொடங்குகிறது. மூஸா நபியின் சரிதை தாய்க்கும் மகனுக்கும் இடையிலான பிணைப்புடன் தொடங்குகிறது.


3. யூசுஃப் நபியை சொந்த சகோதரர்கள் குடும்பத்தை விட்டு பிரித்தனர். மூஸா நபியை சொந்த சகோதரி குடும்பத்துடன் சேர்த்து வைக்கிறார்.


4. யூசுஃப் நபியின் சரிதையில் அவரது தந்தை நபியாக இருந்த பின்பும் அவர் தன் மகனுடன் மீண்டும் இணைவாரா என்று கூறப்படவில்லை. மூஸா நபியின் சரிதையில் அவரது தாயார் நபியாக இல்லாத போதும் அவர் தன் மகனுடன் இணைவார் என்று கூறப்படுகிறது.


5. யூசுஃப் நபியின் சரிதையில் தந்தை துக்கக் கண்ணீர் வடிக்கிறார். மூஸா நபியின் சரிதையில் தாயார் மகிழ்ச்சிக் கண்ணீர் வடிக்கிறார்.


6. யூசுஃப் நபி தேங்கி நிற்கும் தண்ணீரில் (கிணறு) வீசப்படுகிறார். மூஸா நபி ஓடும் தண்ணீரில் (ஆறு) வீசப்படுகிறார்.


7. யூசுஃப் நபி ஓர் ஆண் மூலம் (எகிப்து அமைச்சர்) அரண்மனைக்கு அழைத்து வரப்படுகிறார். மூஸா நபி ஒரு பெண் மூலம் (அன்னை ஆசியா) அரண்மனைக்கு அழைத்து வரப்படுகிறார்.


8. யூசுஃப் நபியை மகனாக ஏற்றுக்கொள்ளும்படி ஓர் ஆண் (அமைச்சர்) தமது மனைவியிடம் கூறுகின்றார். மூஸா நபியை மகனாக ஏற்றுக்கொள்ளும்படி ஒரு பெண் (அன்னை ஆசியா) தன் கணவரிடம் கூறுகின்றார்.


9. யூசுஃப் நபியின் வாழ்வு அடிமையாகத் தொடங்கி அதிகாரத்தில் முடிகிறது. மூஸா நபியின் வாழ்வு அரண்மனையில் தொடங்கி அழைப்பாளராக முடிகிறது.


10. யூசுஃப் நபிக்கு ஒரு சிறப்புப் பண்பு (தோற்றம்) வழங்கப்பட்டது. மூஸா நபிக்கும் ஒரு சிறப்புப் பண்பு (வலிமை) வழங்கப்பட்டது.


11. அந்த சிறப்புப் பண்பின் காரணத்தால் அமைச்சர் மனைவியுடன் யூசுஃப் நபி சிக்கலில் மாட்டிக்கொண்டார். அந்த சிறப்புப் பண்பின் காரணத்தால் அதிகாரிகளிடம் மூஸா நபி சிக்கலில் மாட்டிக்கொண்டார்.


12. குற்றம் நடப்பதற்கு முன்பே யூசுஃப் நபி அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடினார். குற்றம் நடந்த பின்னரே மூஸா நபி அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடினார்.


13. நிரபராதியான யூசுஃப் நபி சட்டத்தால் கைது செய்யப்படுகிறார். குற்றம் செய்த மூஸா நபி சட்டத்திலிருந்து தப்பி ஓடினார்.


14. சிறையில் இருந்த யூசுஃப் நபிக்கு 2 ஆண்கள் உதவினர். தப்பியோடிய முஸா நபிக்கு 2 பெண்கள் உதவினர்.


15. ஓர் ஆணும் பெண்ணும் எப்படி ஒன்று சேரக்கூடாது என்பதை யூசுஃப் நபியின் வரலாற்றில் கூறும் அல்லாஹ், ஓர் ஆணும் பெண்ணும் எப்படி ஒன்று சேரவேண்டும் என்பதை மூஸா நபியின் வரலாற்றில் கூறுகிறான்.


16. யூசுஃப் நபி சிறைக் கைதிகளுக்கு அழைப்புப் பணி செய்து உதவி பெறுகிறார். (வார்த்தையின் வலிமை). மூஸா நபி இரு பெண்களுக்கு உதவி செய்து உதவி பெறுகிறார். (செயலின் வலிமை)


17. யூசுப் நபி அரசவைக்குத் திரும்பி அரசனை எதிர்கொள்கிறார். மூஸா நபியும் அரசவைக்குத் திரும்பி அரசனை எதிர்கொள்கிறார். 


18. யூசுஃப் நபி அரசனால் கண்ணியம் பெறுகிறார். மூஸா நபியோ அரசனால் அவமானம் அடைகிறார்.


19. யூசுஃப் நபி சகோதரர் பின்யாமீனுடன் மீண்டும் இணைகிறார். மூஸா நபி சகோதரர் ஹாரூனுடன் மீண்டும் இணைகிறார்.


20. ஒரு ஸஜ்தாவின் மூலம் யூசுஃப் நபியின் குடும்பத்தார் மீண்டும் இணைகிறார்கள். ஒரு ஸஜ்தாவின் மூலம் (சூனியக்காரர்கள்) மூஸா நபி வெற்றிபெறுகிறார்.


21. யூசுஃப் நபியின் சரிதையில் சட்டை முக்கிய இடம் பெறுகிறது. மூஸா நபியின் சரிதையில் கைத்தடி முக்கிய இடம் பெறுகிறது.


22. இஸ்ரவேலர்கள் (யூதர்கள்) எகிப்துக்கு எப்படி வந்தார்கள் என்பதை யூசுஃப் நபியின் வரலாறு விளக்குகிறது. இஸ்ரவேலர்கள் எகிப்தை விட்டு எவ்வாறு வெளியேறினார்கள் என்பதை மூஸா நபியின் வரலாறு விளக்குகிறது.


அல்லாஹு அக்பர்! அல்குர்ஆன் கூறும் அழகிய சரிதைகள் எத்தனை எத்தனை வாழ்க்கைப் பாடங்களைத்தான் கற்றுத் தருகிறது! அத்தனையும் அற்புதம்!


✍️ நூஹ் மஹ்ழரி


Friday, 13 March 2026

பெண்மையைப் போற்றுவதே உண்மையான வீரம்

 


♥️♥️♥️💫💫💫✍️✍️✍️

பெண்மையைப் போற்றுவதே உண்மையான வீரம்


வரலாறு என்பது வெறும் போர் வெற்றிகளால் ஆனது மட்டுமல்ல; அது மனிதப் பண்புகளின் உன்னதமான தருணங்களால் செதுக்கப்பட்டது.

இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில், மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்த வீரமிக்கப் பெண்மணி உம்மு ஸலமா (ரலி) அவர்களின் வாழ்வில் நடந்த ஓர் நிகழ்வு, இன்றும் மனிதகுலத்திற்குப் பெரும் பாடமாகத் திகழ்கிறது.


உம்மு ஸலமா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

"நான் எனது குழந்தையைச் சுமந்தவளாக, எவ்விதத் துணையுமின்றி மக்காவிலிருந்து மதீனாவை நோக்கிப் பாலைவனத்தில் தனியாகப் பயணம் செய்தேன். கடும் வெயிலும் நீண்ட தூரமும் எனக்குப் பெரும் சவாலாக இருந்தபோது, வழியில் ஒருவரைச் சந்தித்தேன். அவர்தான் உஸ்மான் பின் தல்ஹா."

அப்போது அவர் இஸ்லாத்தை ஏற்றிருக்கவில்லை; சொல்லப்போனால் இஸ்லாத்தின் தீவிர எதிரிகளில் ஒருவராகவே கருதப்பட்டார். ஆனால், அவரிடமிருந்த 'பண்பாடு' மற்றும் 'கண்ணியம்', ஒரு பெண்ணைத் துணையின்றிப் பாலைவனத்தில் விடுவதற்கு இடம் கொடுக்கவில்லை.


மக்காவிலிருந்து மதீனா வரையிலான சுமார் 450 கிலோமீட்டர் தூரம் அவர் எனக்கு உதவியாக நடந்து வந்தார். 


இந்தப் பயணத்தில் அவர் காட்டிய ஒழுக்கம் வியப்பிற்குரியது:

ஒட்டகத்தின் கடிவாளத்தைப் பிடித்து அவர் முன்னே நடக்க, நான் அதன் மேல் அமர்ந்து வந்தேன்.

பயணத்தின் ஒரு தருணத்தில் கூட அவர் என்னைத் திரும்பிப் பார்க்கவுமில்லை என்னுடன் பேசவுமில்லை.

ஓய்வெடுக்கும் இடங்களில், நான் ஒட்டகத்தை விட்டு இறங்கும் வரை தள்ளி நின்று, நான் பாதுகாப்பாக அமர்ந்த பின்பு தூரமான வேறொரு மரத்தடியில் ஒதுங்கிக் கொள்வார்.

புகழ்பெற்ற அரபுக் கவிஞர் அன்தரா கூறிய, "என் அண்டை வீட்டுப் பெண் மறையும் வரை என் பார்வையைத் தாழ்த்திக் கொள்கிறேன்" என்ற வரிகளுக்கு இலக்கணமாக உஸ்மான் பின் தல்ஹா திகழ்ந்தார்.


இன்றைய காலத்தில் ஒரு சிறிய நற்செயலைச் செய்தாலும் அதனை உலகறியச் செய்யத் துடிக்கும் மனநிலை பெருகியுள்ளது. ஆனால், உஸ்மான் பின் தல்ஹா அந்தப் பெண்ணைப் பாதுகாப்பாக மதீனாவின் எல்லை வரை கொண்டு சேர்த்தார். "இதோ உன் கணவர் இந்த ஊரில் இருக்கிறார், நீ பாதுகாப்பாகச் செல்" என்று கூறிவிட்டு, ஒரு நிமிடம் கூட ஓய்வெடுக்காமல் மீண்டும் மக்காவை நோக்கித் தனது பயணத்தைத் தொடர்ந்தார்.


தான் செய்த இந்த மாபெரும் உதவியைப் பற்றி அவர் யாரிடமும் தம்பட்டம் அடிக்கவில்லை; எந்தப் புகழையும் நன்றியையும் எதிர்பார்க்கவில்லை. ஒரு சிறந்த வீரராகவும் வணிகராகவும் இருந்தும், தனது நேரத்தையும் உழைப்பையும் ஒரு பெண்ணின் பாதுகாப்பிற்காகச் செலவிட்ட அந்த மனிதநேயம் மகத்தானது.


உஸ்மான் பின் தல்ஹாவின் இந்தக் கண்ணியமான செயலை அல்லாஹ் வீணாக்கவில்லை. மக்கா வெற்றியின் போது அவர் இஸ்லாத்தை ஏற்றார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கஃபாவின் சாவியை மீண்டும் உஸ்மான் பின் தல்ஹாவிடமே ஒப்படைத்தார்கள். இன்றும் கஃபாவின் சாவியைப் பாதுகாக்கும் பொறுப்பு அவரது வம்சத்தினர் (பனூ ஷைபா) வசமே இருப்பது, அன்று அவர் காட்டிய அந்தத் தூய பண்பிற்கு கிடைத்த அழியாத அங்கீகாரமாகும்.


முடிவுரை:

மனிதாபிமானமும் பெண்மையை போற்றுவதும் மதங்களைக் கடந்தது; அது ஓர் ஆணின் கண்ணியத்தால் ஆனது. பெண்களைப் பாதுகாப்பதும் கண்ணியப்படுத்துவதுமே உண்மையான வீரம்!

📚 البداية والنهاية

📚زاد المعاد في هدي خير العباد..


🖊️தமிழாக்கம் : இம்ரான் ( நூரி)

     LIKE & SHARE

Sunday, 8 March 2026

பத்ரு போர்க்களத்தில் ஷஹீதானவர்களின் பெயர்கள்.



 இந்த போர்டில் காணப்படுவது

பத்ரு போர்க்களத்தில் ஷஹீதானவர்களின் பெயர்கள்.  


போர் நடந்த களத்தில் ஷஹீதானவர்கள் 13 ஸஹாபிகள். 


14 பேர் என்பதற்கு  ஒரு காரணம் உண்டு.


உபைதா இப்னுல் ஹாரிஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்

போரில் படுகாயமடைந்து, போர் முடிந்து திரும்பும் வழியில் 'சஃப்ரா' எனும் இடத்தில் ஷஹீதானார்கள்.


*உபைதிப்னு ஹாரிஸ்* (ரழியல்லாஹு அன்ஹு)*


பத்ருப் போரின் ஆரம்பத்தில் எதிரணியில் உத்பா, ஷைபா, வலீத் ஆகிய மூவரும் தன்னோடு மோதுவதற்காக இஸ்லாமிய படை வீரர்களில் மூவரை சவால் விட்டு அழைத்தனர். 


அப்போது நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஹம்ஸா(ரழியல்லாஹு அன்ஹு), அலீ(ரழியல்லாஹு அன்ஹு), உபைதிப்னு ஹாரிஸ்(ரழியல்லாஹு அன்ஹு) ஆகிய மூவரையும் எதிரிகளோடு மோதுவதற்கு அனுப்பிவைத்தார்கள். 


இம்மூவரும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சகோதரர்கள். 


 இந்த இரு அணியினரின் மோதலைக் குறித்துதான் இறைவன் தன் திருமறையில்


هُذَانِ خَصْمَانِ اخْتَصَمُوا فِي رَبِّهِمْ


"இந்த இரு தரப்பினரும் தங்கள் இறைவன் பாதையில் மோதிக்கொண்டவர்களாகும்" என்று கூறுகிறான்.


அலீ(ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் வலீதையும்,


 ஹம்ஸா(ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஷைபாவையும்,


 உபைதிப்னு ஹாரிஸ்(ரழியல்லாஹு அன்ஹு) உத்பாவையும் எதிர்கொண்டனர்.


 அலி(ரழியல்லாஹு அன்ஹு), ஹம்ஸா(ரழியல்லாஹு அன்ஹு) ஆகியோர் தன்னோடு மோதிய எதிரிகளை வெட்டி வீழ்த்தினர். 


உபைதிப்னு ஹாரிஸ்(ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் தன்னோடு மோதிய ஷைபாவினால் கடுமையாக தாக்கப்பட்டு படுகாயம் அடைந்தார்கள். 


போர் முடிந்து திரும்பியபோது 'ஸஃப்ரா' என்ற இடத்தில் உபைதிப்னு ஹாரிஸ்(ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் மரணித்தார்கள்.


 ஒருமுறை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தன்னுடைய தோழர்களுடன் 'நாஜியீன்' என்ற இடத்தில் தங்கியிருந்தபோது ஸஹாபாக்கள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம்  "அல்லாஹ்வின் 

தாதரே! நாங்கள் கஸ்தூரி வாடையை சுவாசிக்கிறோம். இது எங்கிருந்து வருகிறது? என்று வினவினர்கள்.


 அதற்கு நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் "இந்த இடத்தில் உபைதிப்னு ஹாரீஸ்(ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் கப்ரு இருக்கும்போது எப்படி உங்களுக்கு அந்த நறுமணம் வராமல் இருக்கும்" என்று பதில் கூறினார்கள்.


நூல்: வஃபாவுல் வஃபா, 1025/3


பத்ரு ஸஹாபிகளின் திருநாமங்களை ஓதி வசீலாவாக முன்வைத்து துஆ செய்வோம். அல்லாஹ் நம் அனைவரின் நாட்ட தேட்டங்களை நிறைவேற்றி வைப்பானாக ஆமீன்.

Sunday, 8 February 2026

மக்காம்மடி சியாரத்தில் சிரமதானம்

 
















✍️மக்காமடி எனும் இடத்தின் பூர்வீக வரலாற்றை கொண்ட சடையர் அப்பா (வலியுல்லாஹ்) மக்காம் இன்று அழிவின் நுனியில் - நாளை சிரமதானம் 

“மக்காம்” அடி - என்ற தள அடையாளம் மருவி மக்காமடி ஆகி அதன் பெயரில் பாடசாலை,  வீதி, மக்காமடி வட்டாரம் என்றெல்லாம் அடையாள பெயரிட காரணமான “மக்காம் ‘எனும் ஒரு பூர்வீக  இடத்தின் இருப்பு பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் பராமரிப்பு இன்றி அழிவின் விழிம்பில் நிற்பது கவலை தான் - சில நாட்களாக என் மனதில் எழுந்த இந்த இடம் பற்றிய தேடல் - நேற்று நேரில் சென்று பார்த்த போது மிகவும் கவலை கொடுத்தது - 
இந்த விவகாரம் பற்றிய என் தனிப்பட்ட நிலைப்பாடு தொடர்பில் உங்கள் கொள்கை குழாயடி சண்டை கண்ணோட்டத்தில் இதை யாரும் நோக்க தேவை இல்லை - 

ஒரு இடத்தின் பூர்வீக வரலாற்று தளமாக 
மக்காமடி சடையரப்பா வலியுல்லாஹ் மக்காம் எனும் பகுதி பல வருடங்களாக யார் கண்ணிலும் படாத மூடு மந்திரமாக இருந்து வந்த நிலையில் அண்மையில் குறித்த அமைவிடத்தை அண்டிய பள்ளிவாசலில்  ஒழுங்கு செய்யபட்ட சுதந்திர தின நிகழ்வுகளின் போது இந்த இடம் பற்றி தெரிந்து கொண்டாலும் அதற்குள் நுழைய முடியவில்லை - சிறுவர்களாக இருந்த அந்தக்கால கட்டத்தில் அந்த இடத்தில் கொடியேற்றம்,  கந்தூரி,  பக்கீர் சாகச நிகழ்வுகள் என  களைகட்டிய பழைய நினைவுகள் மனதை குடைய பள்ளிவாசல் நிருவாக அனுமதியுடன் எனது இளைஞசர் குழுவுடன் நுழைந்து செல்லும் போது அப்பகுதி நீண்ட காலமாக கைவிடப்பட்டு பராமரிப்பு இன்மையால் மிகவும் மோசமாக காணப்பட்டது 

மனது குடைந்தது - இது ஒரு நகரப்புறம், என்னை அங்கீகரித்து வெற்றி பெற செய்த மக்காமடி என்ற பகுதியில் அவரவர் மனதின் சரி பிழைகளுக்கு அப்பால் குறைந்தது அழிவுற்று மோசமாக காணப்படும் இந்த வரலாற்று இடத்தை ஓர் சிரமதான ஏற்பாட்டு பணியின் ஊடாக சுத்தம் செய்து - இவ்விடத்தில் ஏற்பட்டுள்ள 
சிதைவை உடன் சீர் செய்யும் பொறுப்பை ஏற்று உடனடி நடவடிக்கைகளை ஆரம்பித்து உள்ளேன் 

இங்கு என் பதிவு சிந்தனை / கொள்கை என இரண்டு தரப்பிற்கு இடையே மாறுபடும் என்பதால் முரண்பட வாய்ப்பு உள்ளது - அது அவரவர் விருப்பு வெறுப்பு - எதிர்மறை விமர்சனங்களை நீங்கள் இந்த பதிவிலோ அல்லது எனக்குள் திணிக்கவோ தேவை இல்லை - இறைவன் உதவியால் எதற்காகவும் எடுத்த பணியை விட்டு பின் வாங்கி நிற்பவனும் நான் கிடையாது, 

விமர்சனம் செய்ய எண்ணுவோர் உங்களில் யாரையும் புதிதாக ஒரு இடத்தை அமைத்து இந்த இடத்திற்கு வந்து தரிசியுங்கள்,  தொட்டு முத்தமிடுங்கள்,  கந்தூரி, காணிக்கை இடுங்கள் என்று கரம் பற்றி தர தர என இழுத்து வரவும் இல்லை - 
இந்த அழிவுற்ற பூர்வீக இடம் எனது அரசியல் பதவிக்காலத்தில் அடையாளம் காணப்பட்டு உள்ளது,  இதை அழியட்டும் என கண்டும் காணாமல் கடந்து போகும் மோசமான மனோநிலையிலும் நான் இல்லை - எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகமாக சீர் செய்து இந்த தளத்திற்கு உரித்தான தரப்பின் பூரண அங்கீகாரம் ஊடாக இந்த இடத்தை பராமரிக்க முன்வரும் அணியிடம் பாரம் கொடுத்த மறு கணம் என் பணி முடியும் - இத்தனைக்கும் நான் திட்டமிட்டு இருப்பது வெறும் 3 நாட்களே!  

நான் ஒன்றும் கொள்கை ரீதியான அடிப்படைவாதியாகவோ,  இவவிடத்தின் நிருவாக தலைவராக ஆட்சி செய்யவோ நினைக்கவில்லை, எது எது எப்படி இருந்ததோ அதை அதை அப்படியே இருக்கச் செய்தவனாக இன்னொரு பணியுடன் கடந்து செல்வேன் , 
அவ்வளவே 
இன்ஷா அல்லாஹ் 

அன்பான மக்காமடி உறவுகளே! 
இந்த இடம் தொடர்பான தகவல்களை எதிர்பார்க்கும் அதே வேளை இதை சர்ச்ச்சை விவகாரம் ஆக்காமல் 
குறைந்தபட்சம் இவ்வாறான இடங்களை பூர்வீகத்தின் , இருப்பின் அத்தாட்சியாக சரி ஏற்று கொள்ளுங்கள் ! என்றோ ஒரு நாள் 
நம் சமூகத்தின் நிலையான  இருப்புக்கு அவைகள் அத்தியவசியமானவை என்பதை கொஞ்சமேனும் உணர்ந்து கொண்டவர்கள் மாத்திரம் 

நாளை திங்கட்கிழமை காலை 7 மணி முதல் இவ்விடத்தில் முன்னெடுக்க உள்ள சீரமைப்பு பணியில் இணைந்து கொள்ளுங்கள் -

நன்றி வஸ்ஸலாம் 
அஸ்மி - நகர சபை உறுப்பினர் 
மக்காமடி வட்டாரம்


Saturday, 7 February 2026

ஏர் ஊரின் சொல்ல மறந்த கதை.

 



ஏர்  ஊரின் சொல்ல மறந்த கதை.

 ஊரில் முதலாவது ஜனாஷா

௮றிவித்தல்  .

                       

ஓட்டுப்பள்ளி   யூசுப் மோதினார்

௮ன்று காலை தஹஜ்ஜத் தொழவந்தவர்களிடம்  கேக்கிறார்  சலாரை காணவில்லை  ௭ன்று.

சுபஹ்  தொழுதுவிட்டும்  பார்க்கிறார்  சலார்  ௭ன்று  செல்லமாக  ௮ழைக்கப்படும் ௮லிமுஹம்மது  வை  காணவில்லை  ஒட்டமாக  வீட்டை  நோக்கி  மனைவி ஆசியா ௨ம்மாவிடம்  கேக்கிறார்  சலார்  ௭ன்ன  பள்ளிக்க  வரவில்லை.

மனைவியின்  பதில் இஷா  தொழுதுட்ட

சாப்பிடையும் இல்ல  துங்கின  இன்னு  ௭ழும்பவில்லை.

௨டனே  கட்டிலில்  பார்க்கிறார் தக்பீர்  கட்டியவராக  தூங்கிறார் ௮சைத்துப்பார்த்த  நாடி பிடித்தவர்  வீட்டாரிடமும்  சொல்லாமல்   பதற்றத்துடன்  பள்ளியை  நோக்கி  ஓடி  மைக்கில்  இவ்வளவுதான்  சொன்னார்.

சலார்  மெளத்தாகிவிட்டார்  

innalillhi  wainna ilahi  rajiuoon..

இது தான்  முதல் ௮றிவிப்பு.

இவர்.

மரஹும்.  ராசா  ஹாஜி  ௮ரிசிஆலை

சின்னலெவ்வை ஹாஜி

நெல்  வியாபாரி

மர்ஹும்  கா௫ன்

காலித்தீன்  காக்கா.

இவர்களின்  தகப்பனார்.

௮லிமுஹம்மது.


யூசுப்  மோதினாரின் ஊர் பற்று

மோதினார் ௭ப்படி இ௫க்க வேண்டும்.

மோதினார்  ௭ப்படி வாழ வேண்டும்.

௭ன்பதற்கு  முன்  ௨தாரணம்.


மோதினார் ஓட்டுப்பள்ளியில் சம்பளம்  பெறும் போது 5 சதம் முத்திரையில் கையொப்பமிட்ட சம்பளம் பெற்ற ரிஸிப்ட் முதல் தலைவர் சக உறுப்பினர் களை கூட்டத்தக்க அழைப்பிதல்  வரை.


பாதுகாப்பாக இருக்கிறது என்னிடம்.


தேர்தல் காலத்தில் பரீத் மீராலெப்பை அவர்களின் உத்தியோகப்பற்றற்ற 'பொடி காட் "அவரது முன் வீட்டில் வசித்த மோதினார். பரீத் அவர்களுக்காக உயிரையே கொடுக்கத் தயாராக இருப்பார். தேர்தல் காலத்தில் பரீத் அவர்களின் வீட்டைத்தாக்க வந்த குழுவினர் மீது இவர் தனக்குச் சொந்தமான அனுமதி பெற்ற துப்பாக்கிமூலம், துப்பாக்கிப் பிரயோகம் செய்ததன் காரணமாக வீதியில் நின்ற காதர் ஆசிரியர் (வஹியா ஆசிரியையின் கணவர்)

காயமடைந்தார்.

மோதினார் எதிராளிகளிடம் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக கொ

ச்சிக்காய் தூள் வைத்திருப்பார். அதனால் இவரை "மசாலாத்தூள் மோதின்" என்ற பட்டப் பெயர் கூட சூட்டினார்கள். இவர் வீதியில் செல்லும்போது துப்பாக்கியை தனது கையோடு சங்கிலியால் இணைத்திருப்பார்.வெறும் எவரும் பறித்துச் செல்லாத வகையில் இப்படியொரு தந்திரோபா

யத்தை செய்திருந்தார்.

வீதியால் செல்லும்போது எதிராளிகள் மறைந்திருந்து, (சுட்டுவிடுவார் என்ற பயத்தில்) 'மோதீன் புச்சித் துவக்கு கொண்டுபோறான் "என்று சத்தமிடுவதை எனது காதுகளால் கேட்டுள்ளேன். இவர் ஒரு சிறந்த சமையல் கலை நிபுணர். பரீத் வயல் பகுதிகளுக்கு சமைத்துச் சாப்பிடச்சென்றால் மோதினார்தான் பிரதம சமையல்காரர்.


Muhamed Nadheem fb

Tuesday, 3 February 2026

புனிதமிக்க_பராஅத்_இரவும்_ஸலபுஸ்_ஸாலிஹீன்களான_தாபியீன்களும்



 #புனிதமிக்க_பராஅத்_இரவும்_ஸலபுஸ்_ஸாலிஹீன்களான_தாபியீன்களும்


#தற்காலத்து_வஹ்ஹாபிஷ_கர்ணிகளும்_வஹ்ஹாபிகளின்_மூலகுருநாதர்_இப்னு_தைமியா_அல்_ஹர்ரானியும்


புகஹாஉத் தாபியீன்

فقهاء التابعين 

ஸலபுஸ் ஸாலிஹீன்களான சிறந்த நூற்றாண்டு என்று வர்ணிக்கப்பட்ட காலத்திற்கு உட்பட்டவர்களான தாபியீன்களில் பலர் மார்க்க சட்ட மேதைகளாக திகழ்ந்தார்கள்..


மதீனாவை எடுத்துக்கொண்டால் அங்கு பிரபலமான 7 மார்க்க சட்ட மேதைகளான தாபியீன்கள் பேசப்படுவார்கள்..குறிப்பாக #செய்யிதுத்_தாபியீன் தாபியீன்களின் தலைவர் என்று போற்றப்பட்டவர் ஹழ்ரத் #சயீத்_இப்னுல்_முஸய்யப் ரழியல்லாஹு அன்ஹு....

இன்னும் பல....


மக்காவை எடுத்துக்கொண்டால் குறிப்பாக 

#அதாஉ_இப்னு_அபீ_ரபாஹ் ரழியல்லாஹு அன்ஹு 

இன்னும் பல.....


கூபாவை எடுத்துக்கொண்டால் #அல்கமத்_இப்னு_கைஸ்_அந்_நகஃயி ரழியல்லாஹு அன்ஹு ..

இன்னும் பல.....


பஸராவை எடுத்துக்கொண்டால் ஹஸனுல் பஸரி ரழியல்லாஹு அன்ஹு ..

இன்னும் பல......


இப்படி தாபியீன்கள் பல பாகங்களிலும் பரந்து காணப்பட்டார்கள்..அந்த அந்த பிரதேசங்களில் அவர்கள் பிரபலமாக மார்க்க சட்ட மேதைகளாக காணப்பட்டார்கள்..


அந்த வகையில் ஷஃபான் மாதத்தின் நடுப்பகுதியான 15 ம் இரவு ( அதாவது பராஅத் இரவு) 


அவ்விரவில் தாபியீன்கள் வணக்க வழிபாடுகளால் அவ்விரவை உயிர்ப்பித்தார்கள் என்ற செய்திகளை நாம் பல கிதாபுகளில் காணலாம்...


1- காலித் இப்னு மஃதான் ரழியல்லாஹு அன்ஹு 

இவர்கள் ஹதீஸ்களை அறிவிக்கக்கூடியவர்களிலும் ஒருவர்...இவர்கள் #ஷாம் தேசத்தில் சிரியாவில் பிரபலமாக அறியப்பட்டவர்கள்..ஏறத்தாள 70 ஸஹாபாக்களை சந்தித்து இருக்கிறார்கள்...

அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு,முஆவியா ரழியல்லாஹு அன்ஹு,அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா,அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரழியல்லாஹு அன்ஹுமா இப்படி பல ஸஹாபாக்கள் வழியாக ஹதீஸ்களை அறிவிப்பவர்..

ஹிஜ்ரி 103 ல் வபாத் ஆனார்கள்..

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்..


2- மக்ஹுல் அஸ் ஷாமி ரழியல்லாஹு அன்ஹு 

ஹிஜ்ரி 112 ல் வபாத் ஆனார்கள்..இவர்களும் ஷாம் தேசத்தில் பிரபலமாக அறியப்பட்ட மார்க்க சட்டமேதை..

இவர்களும் நிறைய ஸஹாபாக்கள் மூலமாக ஹதீஸ்களை அறிவித்தவர்கள்..இவர்கள் யமனைச் சேர்ந்தவர்கள்..


அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அபீ உமாமத்தல் பாஹிலி ரழியல்லாஹு அன்ஹு 

வாஸிலத் இப்னு அல் அஸ்கஃ ரழியல்லாஹு அன்ஹு போன்ற ஸஹாபாக்களிடம் படித்தவர்கள்..இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்...


3- லுக்மான் இப்னு ஆமிர் ரழியல்லாஹு அன்ஹு..

ஹிஜ்ரி 111 ல் வபாத் ஆனார்கள்..

இவர்களும் ஷாம் தேசத்தில் பிரபலமாக அறியப்பட்ட தாபியி..


இவர்களைப் பற்றியும் நிறையவே ஹதீஸ்கலை மேதைகள் பேசி இருக்கிறார்கள்...


இந்த தாபியீன்களான ஸலபுஸ் ஸாலிஹீன்களான இவர்கள் ஷஃபான் மாதத்தின் பராஅத்துடைய இரவை வணக்க வழிபாடுகளால் உயிர்பித்திருக்கிறார்கள் என்பதை நாம் அறிஞர் பெருமக்களான இமாம்கள் எழுதி இருப்பதை பார்க்கலாம்...


#வஹ்ஹாபிகளின்_மூலகுருநாதர்_இப்னு_தைமியா_அல்_ஹர்ரானியின் பக்கம் கவனத்தை திருப்புங்கள்..


இப்னு தைமியா தன்னுடைய #அல்_பதாவா_அல்_குப்ரா வில் பாகம் 05 பக்கம் 344 ல் #உலக_வஹ்ஹாபிகளுக்கு ஓர் செய்தியை சொல்கிறார்.


وأما ليلة النصف من شعبان ففيها فضل وكان في السلف من يصلى فيها 


நிச்சயமாக ஷஃபான் மாதத்தின் நடுப்பகுதி இரவிற்கு அதாவது 15 வது இரவு ( பராஅத் இரவு) அவ்விரவிற்கு என்று சிறப்பு உண்டு.

அவ்விரவில் ஸலபுஸ் ஸாலிஹீன்களில் சிலர் தொழக்கூடியவர்களாக இருந்தார்கள்..

கீழே நிழற் படம் பார்வையிடலாம்...


அதே இப்னு தைமியா தன்னுடைய #இக்திழாஉஸ்_சிராத்தில்_முஸ்தகீம் என்ற நூலில் பாகம் 02 பக்கம் 136, 137 ல் #உலக_வஹ்ஹாபிகளுக்கு_ஓர் சுபச்செய்தியை சொல்கிறார்..


ليلة النصف من شعبان فقد روى في فضلها من الاحاديث المرفوعة والآثار ما يقتضي انها ليلة مفضلة 

وان من السلف كان يخصها بالصلاة فيها 


#சாரம் ..ஷஃபான் மாத நடுப்பகுதியான இரவிற்கு ( பராஅத்துடைய இரவு) அதற்கு என்று சிறப்புகள் உண்டு..பல ஹதீஸ்களும் அறிவிக்கப்பட்டுள்ளது..

அவ்விரவில் ஸலபுஸ் ஸாலிஹீன்களில் சிலர் தொழுகையின் முலம் அவ்விரவை குறிப்பாக்கி இருக்கிறார்கள்..நிழற் படம் பார்வை இடவும்...


வஹ்ஹாபிகளே! பராஅத்துடைய இரவிற்கு எந்த சிறப்புமே இல்லை என்றீர்களே!உங்க மூலகுருநாதர் சிறப்பு இருக்கு என்றல்லவா சொல்கிறார்...


வாழைப்பழத்தையும் பேரீச்சம் பழத்தையும் ரொட்டியையும் விட்டுட்டு உங்க தலைவருக்கு பகிரங்கமாக உங்க பெயருக்கு பின்னால் உள்ள பட்டங்களோடு மறுப்பையும் தீர்ப்பையும் சொல்வீர்களா..???


மௌலவி நிஸ்வர் பாதிபி காதிரி

+94 77 444 77 57

பராஅத் ரொட்டியும் 3 யாசீனும்

 


#சூரா_யாஸீனும்_பராஅத்_துஆவும்


இன்றைய இந்த புனிதமிக்க நாளை தவறவிடாமல்  நற்காரியங்களை செய்து பராஅத் இரவை வணக்கங்களால் உயிர்ப்பிப்போமாக!!


#மூன்று_யாஸீன்_ஓதுதல்...


காரணம் பராஅத்துடைய இரவு துஆக்கள் அங்கீகரிக்கப்படும் இரவு, தேவைகள் நிறைவேற்றிக்கொடுக்கப்படும் இரவு,பாவமன்னிப்பு வழங்கப்படும் இரவு....


இவைகளை மையக்கருவாக கொண்டு நடைமுறையில் இருப்பது தான் மூன்று யாஸீன் ஓதுதல்...


யாஸீன் சூராவை ஒரு முறை தான் ஓதினாலும் அவர் குற்றவாளி அல்ல...முப்பது முறை ஓதினாலும் குற்றவாளியல்ல...மாற்றமாக ஓதுபவருக்கு ஒவ்வொரு எழுத்து வீதம் நன்மை வழங்கப்படும்..அல் குர்ஆன் ஓதலை கேட்டுக்கொண்டு இருப்பவருக்கும் நன்மை வழங்கப்படும் அது தான் அல் குர்ஆன் என்பது மறுமை வரை அழியாத ஓர் அற்புதம்..


1-ஸாலிஹான நல் வணக்கவழிபாடுகளுடன் வாழ் நாள் அதிக்கரிக்க வேண்டி ஓர் நிய்யத் வைத்து ஒரு முறை சூரா யாஸீன் ஓதிய பின் பராஅத்துடைய துஆ ஓதப்படல் வேண்டும்..வாழ் நாள் அதிகரிப்பு என்ற எண்ணம் வைக்க காரணம் இந்த பராஅத்துடைய இரவில் தான் ஒரு மனிதனுடைய பட்டோலை புதுப்பிக்கப்படுகிறது.மாற்றப்படுகிறது.


2-வரக்கூடிய ஆபத்துக்களை விட்டும்,சோதனைகளை விட்டும்  பாதுகாப்புத் தேடுவதை நிய்யத் வைத்து ஒரு யாஸீன் ஓதி பின் பராஅத் துஆவை ஓதப்படல் வேண்டும்..


3- மக்களிடம் தேவையற்றவனாக இருக்க வேண்டும்,அல்லாஹ் ரிஸ்க்கை விஸ்தீரணமாக்க வேண்டும் என்ற நிய்யத் வைத்து ஒரு யாஸீன் ஓதி பின் பராஅத்துடைய துஆ ஓதப்படல் வேண்டும்..


ஹதீஸ்களையும் ஹதீஸ் கலை அடிப்படை சட்டங்களையும் அல் குர்ஆனுடைய விளக்கங்களையும் தொகுத்து தந்த இமாம்களை மதிக்காமல் அவர்களுக்கு தேவையாகும் போது ஹதீஸ் ஸஹீஹ்,ழயீப் என்று ஊழையிடும் நரக நாய்களான வஹ்ஹாபிஷ கர்ணிகளுக்கு இவைகள் ஒரு போதும் பலனை கொடுக்காது...


மேற்குறித்த தகவல் #முஜர்ரபாதுத்_தைரபியில்_கபீர்  என்ற நூலில் பக்கம் 20 ல்   இமாம் அஹ்மத் அத் தைரபி ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்..


அதே போல் மக்காவைச் சேர்ந்த #முப்தில்_ஹரமைன் என்று போற்றப்பட்ட #ஸைனி_தஹ்லான் ரஹ்மஹுல்லாஹ் அவர்களின் மாணவர் இமாம் அப்துல் காதிர் குத்ஸ் அல் மக்கி ஷாபிஇ ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் தங்களுடைய 

كنز النجاح والسرور 

#கன்ஸுன்_நஜாஹி_வஸ்_ஸுருர் என்ற நூலில் பக்கம் 165 ல் பதிவு செய்திருக்கிறார்கள்..

ஹரம் ஷரீபில் 30 வருடங்களாக பாடம் நடத்தியவர்கள்..ஜன்னதுல் முஅல்லாவில் நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்...


அதே சமயம் சூரா யாஸீன் குறித்து ஏகப்பட்ட ஹதீஸ்கள் இடம் பெருகிறது.யாஸீன் சூராவின் அகமியங்கள் குறித்து தனியாக கிதாபுகளே எழுதப்பட்டுள்ளது..சூரா யாஸீன் எந்த தேவை குறித்து இஃலாஸான நிய்யத்தோடு  ஓதப்படுகிறதோ அந்த தேவை நிறைவேற்றப்படும்...


#பராஅத்_துஆ 

கீழே அந்த துஆவை இணைக்கிறேன்.சூரா யாஸீனையும் பராஅத் துஆ இன்னும் பல சூராக்கள், துஆக்கள்,ஸலவாத்துகள் என்பவைகளை பொதிந்த சிறிய தொகுப்பு  நம்முடைய நாட்டில் மட்டும் அல்ல அது உலகெங்கும்  பரவலாக உண்டு..அது இலகுக்காகவே தவிர வேறில்லை..ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்படி சிறு தொகுப்பாக வெளியிட்டார்களா.?என்று வஹ்ஹாபிஷ யூத ஏஜன்ட் பேசுகிறான் என்றால் அவனுக்கு எவ்வளவு அறிவு,ஆய்வுத்திரன் ஸுப்ஹானல்லாஹ்....


கீழே இணைக்கப்பட்ட  பராஅத் துஆ எகிப்து கைரோவில் வெளியிடப்பட்ட சிறு தொகுப்பு....


இந்த பராஅத்துடைய துஆ என்பது ஸஹாபியே ரஸுல் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹுமா  அவர்கள் ஓதிய துஆ..மட்டுமல்ல அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் சொன்னார்கள் ""யார் இதை ஓதுகிறார்களோ அவருக்கு அல்லாஹ் வாழ்க்கையில்  விசாலத்தை  கொடுப்பான்..அதாவது அவனுடைய வாழ்க்கையில் பரகத்தையும்,ரிஸ்கில் விஸ்தீரணத்தையும் கொடுப்பான்..

அதனால் தான் பராஅத்துடைய இரவில் பட்டோலை புதுப்பிக்கப்படுவதால் மேற்கூறிய நிய்யத்துக்களை வைத்து யாஸீன் ஓதீ குறிப்பிட்ட அப்துல்லாஹ் இப்னு  மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் ஓதிய இந்த துஆவை பராஅத்துடைய இரவில் ஓதப்படுகிறது..


இந்த செய்தி எந்த கிதாபில் இடம் பெருகிறது தெரியுமா..?வஹ்ஹாபிஷ விஷ ஜந்துக்களே இந்த கிதாப் பார்ப்பது இருக்கட்டும் கேள்விப்பட்டாது இருப்பீர்களா..??


அபீ அப்துர் ரஹ்மான் முஹம்மத் இப்னு புழைல் இப்னு ஙஸ்வான் அல் ழப்பயி ரஹ்மஹுல்லாஹ் அவர்களுடைய 

#கிதாபுத்_துஆ என்ற நூலில் பக்கம் 217, 218 ல்  பதிவு செய்கிறார்கள்..


இவர்கள் இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ்மஹுல்லாஹ் அவர்களால் உறுதிப்படுத்தப்பட்ட ஹதீஸ்களை அறிவிக்கக்கூடியவர்கள் தான் இவர்கள்...

ஹிஜ்ரி 195 ல் வபாத் ஆனார்கள்..


ஹிஜ்ரி 140, 149 ல் வபாத் ஆனார்கள் என்ற கருத்தும் உண்டு..

இப்னு ஹஜர் அஸ்கலானி ரஹ்மஹுல்லாஹ் ,யஹ்யா இப்னு மயீன் ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் எல்லாம் இவர்களை உறுதியானவர் என்று சொல்லப்பட்டவர் தான் இந்நூலுக்குரியவர்கள்..


ஒரு வழியை திறந்து தருகிறேன்...


இவர்கள் ஷீஆ என்ற ஓர் விமர்சனம் உண்டு.... வஹ்ஹாபிஷ விஷமிகளே! முடியுமானால் இதையாவது தூக்கிட்டு வாங்க பேசலாம்...


எனவே நரக நாய்களான வஹ்ஹாபிகளின் பேச்சைக் கேட்டு உங்கள் நேரங்களை வீணாக்காமல் உங்கள் ஈமானை இழக்காமல் இன்றைய சிறப்புமிக்க பராஅத்துடைய இரவை வணக்கங்களால் உயிர்பிப்போம்...


மௌலவி நிஸ்வர் பாதிபி காதிரி 

+94 77 444 77 57










மனிதனின் தவறும் இறைவனின் மன்னிப்பும்

மனிதனின் தவறும் இறைவனின் மன்னிப்பும்

 மனிதனின் தவறும் இறைவனின் மன்னிப்பும்


ஒரு மனிதன் தவறு செய்வது இழிவானது அல்ல; ஆனால் அந்தத் தவறிலேயே திளைத்திருப்பதும், பாவங்களைச் செய்வதற்குத் துணிவதும் தான் இழிவானதாகும்.


ஒருவன் தனது குறையை உணர்ந்து, அதற்காக அல்லாஹ்விடம் தவ்பா (பாவமன்னிப்பு) தேடினால், அவனது தவ்பாவை அல்லாஹ் ஏற்றுக்கொண்டு அவனது பாவத்தை அழித்துவிடுகிறான்.


இதனைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான்:


"நிச்சயமாக நான், எவர் (பாவத்திலிருந்து) மீண்டு, ஈமான் கொண்டு, நற்செயல்கள் புரிந்து, பின்னர் நேர்வழியில் நிலைத்திருக்கிறாரோ அவருக்கு மிக மன்னிப்பவன்." (அல்குர்ஆன் 20:82)


பாவமன்னிப்பின் இத்தகைய முக்கியத்துவத்தினால், தவ்பா செய்பவர்களை ஏற்றுக்கொள்வதில் இறைவனின் பரந்த அருளை உறுதிப்படுத்தும் வகையில், நபிகளார் ﷺ அவர்களின் சுன்னாவில் சில கதைகள் இடம்பெற்றுள்ளன.


அதில் ஒன்றுதான் 'அல்கிஃப்ல்' என்பவரின் வரலாறு


இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:


அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறக் கேட்டேன்:


"பனூ இஸ்ரவேலர்களில் 'அல்கிஃப்ல்' என்பவர் எத்தகைய பாவத்தையும் செய்யத் தயங்கமாட்டார். அவரிடம் ஒரு பெண் வந்தபோது, அவளுடன் தவறாக நடப்பதற்காக அறுபது தீனார்களை அவளுக்கு வழங்கினார். ஒரு கணவன் தன் மனைவியிடம் அமருவது போல அவர் அந்தப் பெண்ணிடம் அமர்ந்தபோது, அவள் நடுங்கி அழுதாள். அவர் அவளிடம்: 'ஏன் அழுகிறாய்? உன்னை நான் வற்புறுத்தினேனா?' என்று கேட்டார். அதற்கு அவள்: 'இல்லை, ஆனால் இது நான் இதுவரை செய்திராத செயல். வறுமை மட்டுமே என்னை இதற்குத் தூண்டியது' என்றாள்.


அதற்கு அவர்: 'நீயே இதைக் கண்டு அஞ்சும்போது, நான் அஞ்சமாட்டேனா? நீ போகலாம், அந்தப் பணம் உனக்கே சேரட்டும்' என்று கூறிவிட்டு, 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக, இதற்குப் பிறகு நான் ஒருபோதும் அல்லாஹ்வுக்கு மாறு செய்யமாட்டேன்' என்றார்.


அன்றிரவே அவர் மரணமடைந்தார்.


காலையில் அவரது வீட்டு வாசலில்: 'நிச்சயமாக அல்லாஹ் அல்கிஃப்லை மன்னித்துவிட்டான்' என்று எழுதப்பட்டிருந்தது." (ஆதாரம்: திர்மிதி, ஹாகிம்).


அவர் தன் மீது அநீதி இழைத்துக்கொண்டு பாவங்களில் மூழ்கியிருந்தவர். ஆனால் விபச்சாரம் போன்ற ஒரு பெரும் பாவத்தைச் செய்ய முனைந்தபோது, அல்லாஹ்வின் கருணை அவரைத் தடுத்தது. அவர் திருந்தியபோது, அல்லாஹ் அவரை மன்னித்து அவருக்குப் பெரும் கண்ணியத்தை வழங்கினான்.


இக்கதையிலிருந்து நாம் கற்கும் பாடங்கள்:


ஒரு முஸ்லிம் ஏதேனும் பாவத்தில் விழுந்துவிட்டால், உடனே தவ்பா செய்து வருந்த வேண்டும். செய்த பாவத்திற்குப் பகரமாக அதற்கு நேர்மாறான நன்மைகளில் ஈடுபட வேண்டும்.


தவ்பா என்பது: செய்த தவறுக்காக வருந்துவது, மீண்டும் அதைச் செய்யமாட்டேன் என்று உறுதி கொள்வது மற்றும் இறைவனின் கருணையை எதிர்பார்ப்பது ஆகும்.


உண்மையான வருத்தத்தின் அடையாளம்: இதயம் மென்மையாதல், படைப்பினங்கள் மீது இரக்கம் காட்டுதல் மற்றும் மக்களின் (குறிப்பாக ஏழைகள் மற்றும் தேவையுடையோரின்) குறைகளைப் பொறுத்துக்கொள்ளுதல்.


உயிரோட்டமான வருத்தம் இருக்கும்போது, பாவத்தை விடும் உறுதி பிறக்கும். ஒருவேளை இச்சையின் காரணமாக ஒருவனால் பாவத்தை விட முடியாவிட்டால், அவன் செய்ய வேண்டிய இரண்டாவது கடமை: தீமையைத் துடைத்தெறியும் நன்மைகளைச் செய்வது. அத்தகைய நன்மைகள் மூன்று வகைப்படும்:


1- உள்ளத்தால் செய்யும் நன்மை: மன்னிப்பு வழங்கும்படி அல்லாஹ்விடம் உருக்கமாக வேண்டுவது.


2- நாவால் செய்யும் நன்மை: நாவினால் பாவத்தை ஒப்புக்கொண்டு, "யா அல்லாஹ்! நான் எனக்கு அநீதி இழைத்துக்கொண்டேன், தீமை செய்துவிட்டேன், என் பாவங்களை மன்னிப்பாயாக" போன்ற பிரார்த்தனைகளை (இஸ்திஃபார்) அதிகம் ஓதுவது.


3- உறுப்புகளால் செய்யும் நன்மை: ஏழை எளியவர்களுக்கு தர்மம் செய்வது மற்றும் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவது."


-கலாநிதி அலி ஜும்ஆ-

Sunday, 25 January 2026

காலித் பின் வலீத் (ரழியல்லாஹு அன்ஹு)

 


காலித் பின் வலீத் (ரழி)


இஸ்லாமிய வரலாற்றில் காலித் பின் வலீத் (ரழி) ஒரு தனிச்சிறப்பிடம் உண்டு. உயரமான மலை போன்ற உறுதியான தோற்றம், மற்றும் பரந்த மார்புகள், குறிப்பிட்டுச் சொல்லும் தகுதிகளான கழுகு போன்ற கூர்ந்த பார்வை, தொலை நோக்குச் சிந்தனைத் திறன், சிறந்த அறிவாற்றல், நல்ல நினைவாற்றல் மற்றும் உயர்ந்த சிந்தனைகள், உறுதியான கொள்கைப் பிடிப்பு ஆகிய குணநலன்களை ஒருங்கே பெற்றவர் தான் காலித் பின் வலீத் (ரழி). இஸ்லாமிய போர் வரலாற்றில் இவருக்கென தனிஇடம் உண்டு. இவருக்கு நிகரான குதிரை ஏற்ற வீரரும், வாள் வீச்சு மற்றும் பல்வேறு ஆயுதங்களைப் பிரயோகிக்கும் திறமை படைத்தவர்கள் கிடையாது என்று சொல்லும் அளவுக்கு வீரத்தின் விளைநிலமாகத் திகழ்ந்தார்.


உஹதுப் போர்க்களத்தில் எதிரிகளின் தரப்பில் இருந்து கொண்டு, முஸ்லிம்களை கதிகலங்கச் செய்த காலித் பின் வலீத் அவர்கள், அல் முஃதா போரிலே முஸ்லிம்கள் தரப்பில் கலந்து கொண்டு, இஸ்லாமிய எதிரிகளைக் கதிகலங்க வைத்த பெருமைக்குரியவர். தன்னுடைய தனித் திறமை மற்றும் போர்த்திட்டத்தின் காரணமாக ரோமர்களைப் புறமுதுகிட்டோடச் செய்து, முஸ்லிம்களுக்கு மிகப் பெரிய வெற்றியை ஈட்டிக் கொடுத்த மாவீரர். ரோமும், பாரசீகமும் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் படை நடத்தி வருகின்றார் என்ற செய்தி கேட்டவுடன், அவர்களின் கைகளில் இருந்த வாள் ஆட்டம் காணும் அளவுக்கு எதிரிகளின் இதயத்தில் அச்சத்தை ஊட்டிய வீரத்தின் விளைநிலம் காலித் பின் வலீத் (ரழி) ஆவார்கள்.


இறைநிராகரிப்பாளர்களின் முன்பு காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் பெயர் உச்சரிக்கப்படுமானால், அவர்கள் கதிகலங்கினார்கள், அவரது வலிமை மிக்க தாக்குதல்கள் அவர்களை நிலைகுலையச் செய்தன. அதன் மூலம் மிகப் பெரிய வெற்றியை இஸ்லாமியப் போர் வரலாற்றில் ஈட்டிக் கொடுத்த பெருமை காலித் பின் வலீத் (ரழி) அவர்களைச் சாரும்.


இதன் காரணமாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் “ *அல்லாஹ்வின் வாள்” என்றழைக்கக் கூடிய சைபுல்லாஹ்* என்ற பட்டப் பெயரைச் சூட்டி காலித் பின் வலீத் (ரழி) அவர்களைப் பெருமைப்படுத்தினார்கள். இஸ்லாமிய வரலாற்றிலும் சரி.., இன்னும் வரக் கூடிய நாட்களின் போர் வரலாற்றிலும் சரி.., காலித் பின் வலீத் (ரழி), என்ற மாபெரும் வீரருக்கு தனிச் சிறப்பிடம் என்றென்றும் உண்டு.


வெற்றிகள் அவரது காலை வந்து முத்தமிட்டன, அவரது எதிரிகள் கூட அவரது வீரத்தை மெச்சும் அளவுக்கு அவர் தன்னிகரற்ற வீரராகத் திகழ்ந்தார்.


பிறப்பும் வளர்ப்பும்


மக்காவின் பனூ மக்சூம் என்ற குலத்தில் வலீத் பின் முகீரா என்பவருக்கு மகனாகப் பிறந்த காரணத்தால், அவரது பெருமைமிக்க குலப் பெருமையின் காரணமாக, இளமையிலேயே எல்லோராலும் அறியப்படக் கூடிய மனிதராகக் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் திகழ்ந்தார்கள். அவரது இளமைக் காலத்திலேயே தூர நோக்கு, திட்டமிட்டு செயலாற்றுதல், எடுத்த காரியத்தை கனகச்சிதமாக நிறைவேற்றுதல் ஆகியவற்றின் காரணமாக பனூ மக்சூம் கோத்திரத்து வாலிபர்களில் மிகச் சிறந்த இடத்தைப் பெற்றிருந்தார்கள்.


உஹதுப் போர் முதல் ஹ{தைபிய்யா வரைக்கும் இஸ்லாமிய எதிரிகளின் தரப்பில் இருந்த காலித் பின் வலீத் அவர்கள், இஸ்லாமிய எதிரிகளின் இராணுவத்தின் துணைப் பிரிவுக்குத் தலைவராகவும், குதிரைப் படைக்குத் தலைவராகவும் இருந்து பணியாற்றிய அனுபவமிக்க இவர், அதற்குப் பின் இஸ்லாத்தின் வெளிச்சப் புள்ளிகள் அவரது வாழ்வை வெளிச்சமேற்றியதன் காரணமாக, பின்னாளில் இஸ்லாமியப் போர்ப்படைத்தளபதியாகப் பரிணமித்தார். இஸ்லாத்தின் எதிரிகளை நிலைகுலையச் செய்து, இஸ்லாமிய சாம்ராஜ்யம் அரபுப் பிரதேசத்தை விட்டும் பரவத் துணை புரிந்தார்.


இஸ்லாத்தைத் தழுவு முன்


இஸ்லாத்தினை தன்னுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொள்வதற்கு முன்பாக கலந்து கொண்ட அத்தனை போர்களிலும் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு எதிராக மார்தட்டி நின்ற காலித் பின் வலீத் அவர்கள், ஒவ்வொரு முறையும் இறைத்தூதர் (ஸல்) அவர்களைச் சந்திக்கும் பொழுதெல்லாம் அவர்களது குணநலன்களால் கவரப்பட்டு, தன்னுடைய நோக்கத்தை சிறிது சிறிதாக மாற்றிக் கொண்டார். இறுதியாக இஸ்லாம் என்னும் வெளிச்சப் புள்ளி, அவரது இதயத்தைக் கவ்வி இருந்த இருளைத் துடைத்தெறிந்தது. அவரது தலைமை இஸ்லாமிய போர் வரலாற்றில் சூரியனாகப் பிரகாசித்தது.


ஒருமுறை போரின் பொழுது, நபித்தோழர்கள் பின்னிற்க இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மதிய லுஹர் தொழுகையை முன்னின்று நடத்திக் கொண்டிருந்தார்கள். இது தான் தக்க சமயம் என்று எண்ணிக் கொண்ட காலித் பின் வலீத் அவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களையும், அவர்களைப் பின்பற்றித் தொழுது கொண்டிருந்த தோழர்களையும் தாக்கி, அந்தப் போரைத் தங்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொள்வதற்குத் தாயரானார். ஆனால் *கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு படை ஒன்று, அவரைப் பின்னுக்கு இழுப்பதைப் போல உணர்ந்த காலித் பின் வலீத் அவர்கள், தன்னுடைய முயற்சியைக் கைவிட்டார்.* முஸ்லிம்களை எதிர்க்கும் துணிவையும் இழந்து விட்டார்.


மீண்டும் அஸர் தொழுகை நடந்து கொண்டிருந்தது. இந்தமுறை கண்டிப்பாக சந்தர்ப்பத்தை நழுவ விடக் கூடாது என்று சூளுரைத்து, இறைத்தூதர் (ஸல்) அவர்களையும் அவர்களைப் பின்பற்றித் தொழுது கொண்டிருந்த தோழர்களையும் நெருங்கிய பொழுது, *கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு சக்தி அவரைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டதோடு, அவரால் நகரக் கூட இயலாமல் போனது.* அப்பொழுது தான் ஒரு முடிவுக்கு வந்தார், இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் மோதுவது வெட்டி வேலை, அவரை ஏதோ ஒரு சக்தி பாதுகாத்துக் கொண்டிருக்கின்றது, இந்த நிலையில் அரேபியாவை மட்டுமல்ல, அரபுப் பிரதேசத்தையும் கடந்து இந்த முழு உலகத்தையும் அவர் ஒரு நாள் வென்று விடுவார் என்று தனக்குத் தானே கூறிக் கொண்டு, தனது முயற்சிகளைக் கை விட்டு விட்டார்.


கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு படை ஒன்று, அவரைப் பின்னுக்கு இழுப்பதைப் போல உணர்ந்த


மலக்குமார்கள் கூட்டம் முஸ்லிம்களை பாதுகாப்பு பணியில் இருந்தனர்


இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கும் இறைநிராகரிப்பாளர்களுக்கும் ஹ{தைபிய்யாவில் வைத்து உடன்படிக்கை நடந்து முடிந்ததுடன், இனி நமது நிலை என்ன? நாம் எந்தப் பாதையைத் தேர்ந்தெடுப்பது என்ற மனநிலைத் தடுமாற்றத்துக்கு உள்ளானார். அடுத்து எந்த முடிவை எடுப்பது என்ற குழப்பத்தில் தடுமாறிய காலித் பின் வலீத் அவர்கள், எத்தியோப்பியாவிற்குச் சென்று விடலாமா? என்று கூட நினைத்தார். பின் எத்தியோப்பியாவிற்கு நாம் எப்படிச் செல்வது? ஏற்கனவே, எத்தியோப்பியாவின் மன்னர் நஜ்ஜாஸி முஸ்லிம்களின் ஆதரவாளராக மாறி, முஸ்லிம்கள் அங்கு பாதுகாப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கின்ற நினைவு அவருக்கு வந்ததும் தன்னுடைய அந்த முடிவையும் மாற்றிக் கொண்டார். பின் நாம் ஹர்கல் தேசத்துக்குச் சென்று தன்னுடைய மதத்தை விட்டு விட்டு, ஒரு கிறிஸ்தவனாகவோ அல்லது யூதனாகவோ மதம் மாறி விடலாமா? என்று பல்வேறு சிந்தனைகள் அவரது மனதை அலைக்கழித்துக் கொண்டிருந்தன. ஆனால் எந்த முடிவுக்கும் அவரால் வர இயலவில்லை. இன்னும் எதுவாக இருப்பினும் இந்த அரேபியா மண்ணிற்குள் இருந்து தான் அந்த மாற்றம் நிகழ வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். போர், சண்டை என்று அனைத்தையும் விட்டு விட்டு அமைதியாக வாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாமா? என்று பலவித நினைவுகள் அவரது நினைவை அலைக்கழித்துக் கொண்டிருந்தன, ஆனால் எதிலும் ஒரு முடிவுக்கு வர இயலாதவராக இருந்தார். அப்பொழுது ஏற்கனவே இஸ்லாத்தைத் தன்னுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டிருந்த அவரது சகோதரர், காலித் பின் வலீத் அவர்களுக்கு ஒரு கடிதத்தை எழுதினார். அந்தக் கடிதத்தில் தன்னுடைய சகோதரரைப் பற்றி விசாரித்தும், இன்னும் அதற்கும் மேலாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தங்களைப் பற்றி விசாரித்தார்கள் என்ற செய்தியையும் அதில் குறிப்பிட்டிருந்ததைக் கண்ட காலித் பின் வலீத் (ரழி) அவர்களுக்கு இனம் புரியாததொரு உளக் கிளர்ச்சி ஏற்பட்டது. இன்னும் காலித் பின் வலீத் அவர்கள் ஒரு நாள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வார்கள் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்கள். அவரது அறிவு, ஆற்றல், சிந்தனைத் திறன், தொலை நோக்குப் பார்வை ஆகிய இறைவனின் அருட்கொடைகள் அனைத்தும், காலித் பின் வலீத் அவர்களை இதே நிலையில் விட்டு வைத்திருக்கப் போவதில்லை என்பதனையும் அதில், அந்த சகோதரர் குறிப்பிட்டுக் கூறியிருந்தார்.


இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுதல்


மேலே உள்ள செய்திகள் யாவும் காலித் பின் வலீத் அவர்களை பல்வேறு சிந்தனைகளைத் தோற்றுவித்ததோடு, என்னை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் விசாரித்தார்களா? நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வேன் என்று சொன்னார்களா? எனக்கென பிரகாசமான எதிர்காலம் ஒன்று இருக்கின்றது போல் தெரிகின்றது என்று தனக்குத் தானே கூறிக் கொண்ட காலித் பின் வலீத் அவர்கள், தான் கண்ட கனவை இப்பொழுது அசை போட்டுப் பார்க்க ஆரம்பித்தார். அடர்ந்த, காற்றோட்டம் இல்லாத குகை போன்ற இடத்தை விட்டு பச்சைப் பசேலென்ற மிகப் பரந்த பசுஞ்சோலைகளின் பக்கம் தான் மீண்டு வருவதாகக் கண்ட கனவையும், இப்பொழுது தனக்குள் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் உணர்வலைகளையும் ஒப்பிட்டுப் பார்க்க ஆரம்பித்தார். இனி நாம் இங்கு தங்கியிருப்பதில் பயனில்லை என்பதை உணர்ந்தவராக, இனி மதீனாவை நோக்கிச் செல்வது என்ற இறுதி முடிவை எடுத்த அவர், நாம் தனியாகப் போவதை விட, நம்முடன் யாரையாவது துணைக்கழைத்துச் செல்வது நல்லது என்று நினைத்து, யாருடன் செல்வது என்ற சிந்தனைக் குழப்பத்தில் ஆழ்ந்த பொழுது, உதுமான் பின் தல்ஹா (ரழி) அவர்களின் நினைவு வர, தனது நோக்கத்தை அவரிடம் தெரிவித்தார்.


உதுமான் பின் தல்ஹா (ரழி) அவர்களும் தனக்கும் அப்படியொரு நோக்கம் இருப்பதாகக் கூறிய அவர், சரி இருவரும் சேர்ந்து இணைந்தே மதீனாவிற்குச் சென்று இறைத்தூதர் (ஸல்) அவர்களைச் சந்திப்பதென்று முடிவாகியது. இருவரும் மதீனா நோக்கிப் புறப்பட்ட பொழுது, இடையில் அம்ர் பின் ஆஸ் (ரழி) அவர்களைச் சந்தித்தனர். அவர், நீங்கள் இருவரும் எங்கே புறப்பட்டு விட்டீர்கள் என்று கேட்ட பொழுது, அவர்கள் தங்களது நோக்கத்தைத் தெரிவித்தார்கள். தாங்கள் மதீனா சென்று இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களைச் சந்தித்து, அவர்களது கரங்களில் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளச் சென்று கொண்டிருப்பதாகக் கூறினார்கள். மதீனா செல்லும் குழுவின் எண்ணிக்கை, இரண்டு இப்பொழுது மூன்றாக மாறியது.


மூவரும் மதீனாவை ஹிஜ்ரி 8 ஆம் ஆண்டு, ஸஃபர் மாதம் முதல் தேதியன்று சென்றடைந்தார்கள். முதலில் இறைத்தூதர் (ஸல்) அவர்களைச் சந்தித்த காலித் பின் வலீத் அவர்களை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் புன்னகை தவழ வரவேற்றார்கள். பின் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் திருக்கரங்களைப் பற்றிக் கொண்டு, திருக்கலிமாவை முன்மொழிந்து இஸ்லாத்தைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார்கள். மிகவும் பாசத்துடன் காலித் பின் வலீத் (ரழி) அவர்களை நோக்கிய அண்ணலார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :


காலித் பின் வலீத் (ரழி) அவர்களே….!


உங்களது புத்திசாலித்தனம், கல்வி ஞானம், தொலை நோக்குப் பார்வை ஆகிய நற்பண்புகளை வைத்துக் கணித்து, என்றாவது ஒருநாள் நீங்கள் இஸ்லாத்திற்குள் நுழைவீர்கள் என்று நான் நினைத்தேன் என்றார்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள்.


இறைத்தூதர் (ஸல்) அவர்களே..! எனக்கு மன்னிப்பு உண்டா? என்ற கேட்ட காலித் பின் வலீத் (ரழி) அவர்கள்..!


நான் என்னுடைய வாள் பலத்தினால் பல்வேறு இன்னல்களையும், தீமைகளையும் புரிந்துள்ளேன். இதற்கு முன் இஸ்லாத்திற்கு நான் இழைத்த கொடுமைகளுக்காக மன்னிப்புக் கோரி இறைவனிடம் பிரார்த்தனை புரியுமாறு இறைத்தூதர் (ஸல்) அவர்களை வேண்டிக் கொண்ட காலித் பின் வலீத் (ரழி) அவர்களுக்கு, இறைநிராகரிப்பில் இருந்து கொண்டு நீங்கள் செய்த அத்தனை பாவங்களும் இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டதன் காரணமாக, தானாகவே அழிந்து போய் விடுகின்றன என்று பதில் கூறினார்கள்.


இல்லை..! யா ராசூலுல்லாஹ்..! இருப்பினும், நீங்கள் எனக்காக பிரார்த்தனை செய்தாக வேண்டும் என்று மீண்டும் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் வலியுறுத்தவே, இறைவா! காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் பாவங்களை மன்னித்தருள்வாயாக! அவர் மீது கருணை காட்டுவாயாக! என்று பிரார்த்தனை புரிந்தார்கள்.


அதன் பின்பு அம்ர் பின் ஆஸ் (ரழி) அவர்களும், பின்பு உதுமான் பின் தல்ஹா (ரழி) அவர்களும் இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டார்கள்.


கண்ட கனவு நனவாகுதல்..!


பின்பு தான் கண்ட கனவைப் பற்றி காலித் பின் வலீத் (ரழி) அவர்கள், அபுபக்கர் சித்தீக் (ரழி) அவர்களிடம் கூறினார்கள்.


காரிருள் கொண்ட அறை என்பது நீங்கள் அறியாமைக்காலத்தில் இருந்து கொண்டிருந்த இறைநிராகரிப்பு என்பதாகும். பின் அதனை விட்டு வெளியேறி பரந்த புல்வெளியை நோக்கி வருவது என்பது, இறைநிராகரிப்பில் இருந்து வெளியேறி, இஸ்லாத்தினுள் நுழைவதனைக் குறிக்கும். அந்தக் கனவு நீங்கள் இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டதன் காரணமாக இப்பொழுது நனவாகி இருக்கின்றது என்றும், அவர்களது கனவிற்கு அபுபக்கர் சித்தீக் (ரழி) அவர்கள் விளக்கமளித்தார்கள்


காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் பயம் காரணமாகவோ அல்லது பெருமைக்காகவோ இஸ்லாத்தினை ஏற்றுக் கொள்ளவில்லை, இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வாழ்வியல் முன்மாதிரிகள் தான் அவரை இஸ்லாத்தின் பால் ஈர்க்கக் காரணமாக அமைந்தன. மனித குல வரலாற்றில் சத்தியத்தை நிலைநிறுத்துவதற்காக பாடுபடுகின்ற மனிதர்கள் தொலை நோக்குச் சிந்தனையுடனும், வெளிப்படையான போக்குகளுடனும் தங்களது வாழ்வை அமைத்துக் கொள்வது என்பது, அவர்களது அடிப்படை மற்றும் சிறப்புத் தன்மைகளாக இருந்து வந்துள்ளன. எனவே தான் எதனை சத்தியம் என்று ஏற்றுக் கொண்டார்களோ அதனை வெளிப்படையாக மக்களுக்குத் துணிவுடன் அறிவிக்க அல்லது எடுத்து வைக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். இந்த இரண்டு அடிப்படை அம்சங்களாகிய துணிவு மற்றும் வெளிப்படையான தன்மை ஆகிய இரண்டும் காலித் பின் வலீத் (ரழி) அவர்களிடம் காணப்பட்டதே, அவர்களை இஸ்லாமிய வரலாறு போற்றும் மாவீரராக உயர்த்திக் காட்டிக் கொண்டிருக்கின்றது.


அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும் வரைக்கும், இஸ்லாத்தின் பரம விரோதியாகவே இருந்தார். உஹத் போரிலே முஸ்லிம்கள் எளிதாக வெற்றி பெற்றிருக்கக் கூடிய அந்த வாய்ப்பை தவிடு பொடியாக்கி, தான் எந்த நோக்கத்திற்காக வந்தாரோ அந்த நோக்கத்தை அடைவதில் அவர் காட்டிய உறுதி மற்றும் தீவிரப் போக்கு ஆகியவைகள் தான் முஸ்லிம்களின் வெற்றியை நிலைகுலையச் செய்தது எனலாம். இருப்பினும், அந்தப் போரில் இறைநிராகரிப்பாளர்கள் வெற்றி பெற இயலாமல் போனதுடன், இனி நாம் முஹம்மது (ஸல்) அவர்களை வெற்றி பெற இயலாது என்ற நிலைக்கு, மன ரீதியாகத் தள்ளப்பட்டனர். முஸ்லிம்கள் நம்மை விஞ்சி விட்டார்கள், இனி அவர்களை நாம் எதுவும் செய்துவிட இயலாது என்று அனைத்து குறைஷித் தலைவர்களும் முடிவுக்கு வந்த பின்னரும், காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை. மற்றவர்களது முடிவை மண்ணில் போட்டுப் புதைத்து விட்டு, ஒரு குதிரைப் படையை ஒருங்கிணைத்துக் கொண்டு மலைப் பகுதியில் புகுந்து முஸ்லிம்களை எதிர்த்துப் போரிட்டு, முஸ்லிம்களுக்கு கடுமையான சேதத்தோடு, உயிர் சேதத்தையும் அதிகம் ஏற்படுத்தி விட்டார் காலித் பின் வலீத் அவர்கள்.


இத்தகைய மனிதர் தான், இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பின்பும் அதே வீரத்தோடும், விவேகத்தோடும் தான் எந்த நோக்கத்தை அடைய போர் முகத்துக்கு வந்தோமோ அந்த நோக்கத்தை அடைந்து கொள்வதற்காக, வேகம் குன்றாது போரிட்டார் இந்த வீரமகன். அவர் தனது உயிரையும், பொருளையும், ஆவியையும் இறைமார்க்கத்திற்காக அற்பணித்து விட்டிருந்தார். அவர் என்றைக்கு இஸ்லாத்தை தன்னுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டாரோ அன்றிலிருந்து, சத்தியத்தை மேலோங்கச் செய்யவும், அசத்தியத்தை வேரோடு சாய்க்கவும் போரிட்டுக் கொண்டே இருந்தார். இன்னும் மிகவும் கடுமையாக கால கட்டங்களில் கூட அவர், கொஞ்சம் கூட தடுமாற்றத்தை தன்னுடைய உள்ளத்தில் உலா விட்டதில்லை, நம்பிக்கையை இழந்து விடவில்லை.


காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் காட்டிய வீர தீர சாகசங்களை இன்றளவும் உலகம் வியந்து போற்றிக் கொண்டிருக்கின்றது. அவரது வீரம் செறிந்த அந்த தருணங்களை இஸ்லாமியர்கள் மட்டுமல்ல, இஸ்லாத்தின் எதிரிகள் கூட போற்றும் அளவுக்கு, அவரது வீரத்தை ஒப்புக் கொண்டுள்ளனர். முந்தைய ஜெர்மன் படைத்தளபதியாக இருந்த ஜெனரல் அரோன் ரோம்மல் என்பவரிடம், அவருடைய வெற்றியைக் குறித்துக் கேட்ட பொழுது, நான் காலித் பின் வலீத் அவர்களது தந்திரத்தைக் கையாண்டு கொண்டிருப்பதன் மூலம் தான் இத்தகைய வெற்றிகளைப் பெற்றுக் கொண்டிருக்கின்றேன் என்று பதில் கூறியிருக்கின்றார்.


ரோமப் பேரரசன் சீஸரை மண்ணுக்கு இரையாக்கி வைத்தது, காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் திட்டமிட்ட தாக்குதல்களும், அவர் தன்னுடைய படைவீரர்களை ஒருங்கிணைத்து செயலாற்றச் செய்ததது தான், அதன் காரணமாகும்.


ரோமும், பாரசீகமும் அன்றைக்கு இருந்த செல்வச் செழிப்பில் மற்றும் இராணுவ அமைப்பில் முஸ்லிம் படை அவர்களை வெற்றி கொள்வது என்பது இயலாத காரியம் என்றே, உலகத்தின் கணிப்பு இருந்திருக்கும். ஆனால், அத்தகைய படையை மண்ணோடு மண்ணாக ஆக்கி, அவர்களது பேரரசை புழுதி படியச் செய்த வரலாற்று நிகழ்ச்சியை ஏற்படுத்திக் காட்டியவர் காலித் பின் வலீத் (ரழி). சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் இடையே நடந்த அந்த இடையறாத போரில், இறைவனது துணை கொண்டு காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் வெற்றியைத் தவிர வேறெதனையும் கண்டதில்லை. தோல்வி என்பதே அவரது வரலாற்றில் இல்லை, என்ற சரித்திரத்தைப் படைத்தவர் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள்


அல் முஃதா போர்


இன்றைய சிரியாவின் எல்லைக்கு உட்பட்ட பகுதி அல் முஃதா. இந்த இடத்தில் நடந்த போர் தான் இஸ்லாமிய வரலாற்றில் முஃதா போர் என்றழைக்கப்படுகின்றது. இஸ்லாத்தைத் தன்னுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்ட பின் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் முதன்முதலாக இந்த முஃதா போரில் சாதாரண படை வீரராகக் கலந்து கொண்டார்கள். இந்தப் போரில் கலந்து கொண்ட தளபதிகள் மூவர் ஒருவர் பின் ஒருவராக வீர மரணம் அடைந்து விட, நான்காவதாக தலைமைப் பொறுப்பை ஏற்கும் பாக்கியம், காலித் பின் வலீத் (ரழி) அவர்களிடம் வந்தடைந்தது. அப்பொழுது, முஸ்லிம்களின் படையில் வெறும் 3000 படைவீரர்கள் தான் இருந்தனர், இன்னும் அவர்கள் மிக நீண்ட காலம் போர் செய்து சற்று களைப்படைந்தும் இருந்தனர். ஆனால் எதிரிகளின் பக்கமோ 2 லட்சம் படைவீரர்களும், இன்னும் அவர்கள் முழு ஆயுத பலத்தோடும் போருக்கு வந்திருந்தனர். அவர்களின் கண்களில் போர் கனல் தெறித்துக் கொண்டிருந்தது. பின்வரும் சம்பவத்திற்குப் பின் போர் மும்மூரமாக ஆரம்பித்தது.


இறைத்தூதர் (ஸல்) அவர்களின் நம்பிக்கையைப் பெற்றதொரு தோழர், ஹாரிஸ் பின் அம்ர் அஸ்தி (ரழி). இந்தத் தோழர் மூலமாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒரு கடிதத்தை, பஸ்ராவின் மன்னர் ஹாரிஸ் பின் அமி ஷம்மார் கஸ்ஸானி என்பவருக்கு அனுப்பி வைத்தார்கள். அவர் செல்லும் வழியில் முஃதா என்ற இடத்தில் அமைந்துள்ள சிறு நகரமான பல்கா என்ற இடத்தை இந்தத் தோழர் அடைந்தவுடன், அந்தப் பகுதியின் கவர்னராக இருந்த சர்ஜீல் பின் அம்ர் கஸ்ஸானி என்பவர், இவரின் வருகையை அறிந்து, அந்த நபித்தோழரை கைது செய்து, கொலையும் செய்து விட்;டார். இந்தத் துயரச் செய்தி இறைத்தூதர் (ஸல்) அவர்களை அடைந்தவுடன், மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானார்கள். இதே காலகட்டத்தின் இன்னுமொரு நிகழ்ச்சியும் நடந்தது. அதாவது, ஒரு பதினைந்து நபர் கொண்ட முஸ்லிம்களின் குழு ஒன்று, சாத் அல் அத்லா என்ற பகுதியில் இஸ்லாமியப் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த பொழுது, இந்தப் பதினைந்து பேர் கொண்ட குழுவும் படுகொலை செய்யப்பட்டார்கள். இதே கால கட்டத்தில் ரோமப் பேரரசன் மதீனாவைத் தாக்கப் போவதாகவும் அறிவித்திருந்தான்.


எனவே, மேற்கூறிய சம்பவங்கள் தான் இந்த முஃதா போர் நடைபெறுவதற்கு முக்கியக் காரணங்களாக அமைந்தன. எனவே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மிகப் பெரிய படையைத் தயார் செய்து, அந்தப் படைக்கு முதல் தளபதியாக ஜைத் பின் ஹாரிதா (ரழி) அவர்களையும், அவர் இறந்து விட்டால் பின் ஜாஃபர் பின் அபீதாலிப் (ரழி) அவர்களையும், இன்னும் அவரும் வீரமரணம் எய்து விட்டால், அப்துல்லா பின் ரவாஹா (ரழி) அவர்களையும் தளபதிகளாக முறையே நியமித்துக் கொள்ளும்படி, முஸ்லிம்களுக்கு அறிவுரை வழங்கி முஃதா போருக்கு முஸ்லிம் வீரர்களை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள்.


இந்த மூன்று தளபதிகளும் மரணமடைந்து விட்டால், பின் படைவீரர்கள் தங்களுக்குள் கலந்தாலோசனை செய்து கொண்டு, தங்களுக்குள் ஒரு தளபதியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி அறிவுரையும் வழங்கி அனுப்பி வைத்தார்கள்.


ஜைத் பின் ஹாரிதா (ரழி) அவர்கள் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு, வெள்ளைக் கொடியைத் தனது கையில் ஏந்திய வண்ணம் போர் முகத்துக்கு தனது படையை அழைத்துச் சென்று, எந்த இடத்தில் ஹாரித் பின் அம்ர் அஸ்தி (ரழி) அவர்கள் படுகொலை செய்யப்பட்டார்களோ, அந்த இடத்திலேயே தனது படையை இறக்கி, கூடாரம் அடித்து நிலைப்படுத்தினார்கள். இன்னும் நிலைகுலையாத தன்மையையும், எதிரிகளை எதிர்க்கும் போது தங்களது பாதங்கள் உறுதியாக இருப்பதற்கும் அவர்கள் இறைவனிடம் பிரார்த்தித்துக் கொண்டார்கள்.


இன்னும் வயதானவர்களையும், இன்னும் குழந்தைகளையும் பெண்களையும் கொலை செய்வதைத் தடை செய்தார்கள். இன்னும் இந்த உலக வாழ்வை ஒதுக்கி விட்டு, இறைதியானத்தில் ஈடுபடக் கூடிய துறவிகள் மற்றும் சந்நியாசிகள் ஆகியோரையும் கொலை செய்வதைத் தடுத்தார்கள். இன்னும் நீங்கள் ஏற்றுக் கொண்ட உடன்படிக்கையை மீறாதீர்கள், நீங்கள் ஏற்றுக் கொண்ட அமானிதங்களையும் முறித்து விடாதீர்கள் என்று அறிவுரை வழங்கினார்கள். எந்தக் கட்டடம் தரை மட்டமாக்கப்படுவதையோ இன்னும் மரங்களை வெட்டி நிலத்தில் சாய்க்ப்படுவதையோ படைவீரர்கள் செய்யக் கூடாது என்றும் உத்தரவிட்டார்கள். தங்களது தளபதியான இறைத்தூதர் (ஸல்) அவர்களது மேற்கண்ட அறிவுரையைச் செவி மடுத்த பின், உண்மையில் மிகவும் சிரமமாக கடிமானதொரு பணியை நிறைவேற்றுமுகமாக முஸ்லிம் படைவீரர்கள் போர்க்களம் நோக்கித் தங்களது பயணத்தைத் துவங்கினார்கள். கடுமையாக நிலப்பரப்புகளின் ஊடாகப் பயணித்த பின் இறுதியாக பால்கா என்ற அந்த குறிப்பிட்ட இடத்தை முஸ்லிம்கள் அடைந்தார்கள். அந்த இடத்தை அடைந்த பின்பு, அங்கு ஏற்கனவே இவர்களை எதிர்பார்த்து, ஹிர்கல் நாட்டு மன்னன் ஒரு படையை அனுப்பி வைத்திருப்பதை அறிந்து கொண்டார்கள். தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பின் கனத்தை எடை போட்டுப் பார்த்த இறைத்தூதர் (ஸல்) அவர்களது தோழர்கள், தாங்கள் ஏற்றுக் கொண்ட சத்தியத்தை நிலைநாட்டுவதற்கு, தங்களது உயிர், பொருள், ஆவி அத்தனையையும் அற்பணிக்குமுகமாக களத்தில் இறங்கினாhகள்.


தளபதிப் பொறுப்பை ஏற்றிருந்த ஜைத் பின் ஹாரிதா (ரழி) அவர்கள், தனக்குக் கீழ் உள்ள தோழர்களின் வீரத்தை ஊக்குவிக்குமுகமாக தான் வெகு விரைவாக எதிரிப்படைகளுக்குள் ஊடுறுவிச் சென்று முன்னேறிக் காட்டினார். ஒருவர் நான்கு நபரைச் சமாளித்து, அவர்களை உற்சாகப்படுத்திக் காட்டினார். எங்கும் அழிவும், மரண ஒலமும் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தன. எதிரிகளை ஊடறுத்துச் சென்ற ஜைத் பின் ஹாரிதா (ரழி) அவர்கள் இப்பொழுது வீர மரணம் எய்தினார்கள். பின் ஜஃபர் பின் அபீதாலிப் (ரழி) அவர்கள் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்கள். எதிரிகளை ஊடறுத்துச் செல்ல விரும்பிய ஜஃபர் பின் அபீதாலிப் (ரழி) அவர்களுக்கு, எதிரிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்த காரணத்தால், அந்த வாய்ப்பு எளிதாக இருக்கவில்லை. எனவே, தான் ஏறி வந்த குதிரையில் இருந்து இறங்கி, எதிரிகளின் தலைகளைக் கொய்ய ஆரம்பித்தார். ஆனால், எதிhகளில் ஒருவன் அவரது வலது புஜத்தில் கடுமையானதொரு தாக்குதலைத் தொடுத்ததன் காரணமாக, அவரது வலது கரம் துண்டிக்கப்பட்டுக் கீழே விழுந்தது. வலது கரத்தில் ஏந்தியிருந்த கொடியை இடது கரத்திற்கு ஜஃபர் பின் அபீதாலிப் (ரழி) அவர்கள் மாற்றிக் கொண்டார்கள். பின் அந்த எதிரி இடது கரத்தையும் வெட்டிச் சாய்த்தான். இருப்பினும் தான் ஏந்திய அந்தக் கொடியை தரையில் விழ அனுமதிக்காத ஜஃபர் பின் அபீதாலிப் (ரழி) அவர்கள், தனது கால்களைக் கொண்டு அந்தக் கொடியை ஏந்திக் கொண்டார். இறுதியாக எதிரிப்படை வீரன் கொடுத்த அடியை தாங்கவியலாத ஜஃபர் பின் அபீதாலிப் (ரழி) அவர்கள் வீர மரணமடைந்தார்கள். இப்பொழுது, இறைத்தூதர்(ஸல்) அவர்களின் அறிவுரைப்படி, மூன்றாவது தளபதிப் பொறுப்பை அப்துல்லா பின் ரவாஹா (ரழி) அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். கீழே விழ இருந்த கொடியை கையில் ஏந்திப் பிடித்த அப்துல்லா பின் ரவாஹா (ரழி) அவர்கள், தளபதிப் பொறுப்பின் கீழ் மிகச் சிறந்த வீரத்தை காட்டி எதிரிகளைக் கலங்கடித்தபின் அவரும் வீரமரணம் எய்தினார்.


எண்ணிக்கையில் வந்த பலவீனம்


தங்களது படைத்தளபதிகளில் மூவரை ஒருவர் பின் ஒருவராக இழந்து விட்டிருந்த முஸ்லிம் படைவீரர்கள், இப்பொழுது மனதளவில் சற்று நிலைகுலைந்து போயிருந்தார்கள். இன்னும் எதிரிப் படைக்கும் முஸ்லிம் படைக்கும் இடையே இருந்த எண்ணிக்கை வித்தியாசமும் அவர்களது மனோ பலத்தை சற்று அசைத்துத் தான் பார்த்துக் கொண்டிருந்தது. வெற்றி கிடைக்குமா? என்ற அச்சமும் நிலவியது. ரோமப் படையின் எண்ணிக்கையே அவர்களை இந்த எண்ணத்திற்கு இட்டுச் சென்று கொண்டிருந்தது.


இன்னும் முஸ்லிம்களின் கொடி கீழே விழக் கூடிய நிலையில், எதிரிகளின் கரங்களுக்குள் சிக்கக் கூடிய நிலையில் இருந்து தப்பித்துமிருந்தது. கீழே விழ இருந்த கொடியை தாவிப் பிடித்து கைகளில் ஏந்திக் கொண்ட தாபித் பின் அர்க்கம் (ரழி) அவர்கள், தான் ஏந்திய அந்தக் கொடியை, சற்றும் எதிர்பாராத நிலையில் காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் கரங்களில் சேர்த்தார். அந்தக் கொடியை காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் கைகளில் சேர்க்கும் பொழுது, காலித் பின் வலீத் (ரழி) அவர்களே! தயவுசெய்து இந்தக் கொடியைப் பிடித்துக் கொள்ளுங்கள். இந்த மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் உங்களால் தான் தலைமைப் பொறுப்பை ஏற்று, அதனை செவ்வனே நிறைவேற்ற முடியும் என்று அவர் கோரிக்கை வைத்தார்.


கைகளில் கொடியைப் பிடித்துக் கொண்டு, என்னருமைத் தோழரே! இது இக்கட்டான சூழ்நிலை என்பதை நானறிவேன், ஆனால் என்னை விட நீங்கள் தான் இறைநம்பிக்கையில் முந்திக் கொண்டவரும், இன்னும் பத்ருப் போரில் கலந்து கொண்ட அனுபவமிக்கவரும் கூட. எனவே நீங்கள் தான் தலைமைப் பொறுப்பிற்கு தகுதி வாய்ந்த நபர் என்று கனிந்த குரலில் கூறினார். இறைவன் மீது சத்தியாக..! உங்களது மன வலிமையும், உங்களது தியாகமும் அற்பணமும் ஏற்கனவே நிரூபணமானதொன்று. கீழே விழுந்த அந்தக் கொடியை தங்களது கைகளில் சேர்ப்பித்து விட வேண்டும் என்ற நோக்கமல்லாது வேறு நோக்கத்திற்காக நான் அதனை எடுத்துக் கொள்ளவில்லை. தயவு செய்து இந்தக் கொடியைப் பெற்றுக் கொண்டு, தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்வதன் மூலம் இந்த இக்கட்டான சூழ்நிலையை, தங்களது அனுபவம் மற்றும் செயல்திறன், திட்டமிடும் ஆற்றல் மூலம் சமாளித்துக் காட்டுங்கள் என்று வேண்டிக் கொண்டார்.


இராணுவத் தந்திரங்கள் மூலமாக எதிரிகளை அச்சுறுத்தக் கூடிய தலைவர் ஒருவர் தான் இப்பொழுது நமது வீரர்களுக்கு தேவைப்படுகின்றார். எதிரிகளைத் துவம்சம் செய்யும் திட்டங்களுடன் நமது வீரர்களை வழிநடத்திச் சென்று, எதிரிகளை நிலைகுலையச் செய்வதன் மூலம் நமது வீரர்கள் சற்று மனவலிமை பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்துங்கள் என்று கேட்டுக் கொண்டார். பின் படையினரின் பக்கம் திரும்பிய அவர், என்னருமைத் தோழர்களே! காலித் பின் வலீத் (ரழி) அவர்களை நமது தலைவராக நீங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்களா? என்று கேட்டார். அவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில், காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் எங்களுக்கு தளபதியாகப் பொறுப்பேற்பதில் சந்தோஷமே என்று கூறினார்கள். இப்பொழுது, கொடியைக் கைகளில் ஏந்திக் கொண்ட காலித் பின் வலீத் (ரழி) அவர்கள், முஸ்லிம் படைக்குத் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். மிகவும் உக்கிரமாக நடந்த அந்தப் போரில் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் ஒரு வாள் உடைந்து போக இன்னொரு வாளை மாற்றி மாற்றி.., இவ்வாறாக அந்தப் போரில் ஒன்பது வாள்களைப் பயன்படுத்;தி எதிரிகளைத் துவம்சம் செய்தார்.


எதிரிகளுடன் ஒப்பிடும் பொழுது, முஸ்லிம் படைவீரர்கள் மிகக் குறைந்த அளவே இருந்தனர். காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் தந்திரமும், போர் திட்டங்களும் எதிரிகளின் திட்டங்களை தவிடுபொடியாக்கின. ஒரு சில முஸ்லிம் வீரர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களை மறைந்திருக்கச் செய்து, திடீரென போர்க்களத்திற்குள் நுழையுமாறு பணித்தார்கள். திடீரென ஏற்பட்ட இந்த போர்க்களச் சூழலில், ஏற்பட்ட புழுதிப் படலம் மற்றும் ஆரவாரம் எதிரிகளை நிலைகுலையச் செய்தது. திடீர் திடீர் என வந்து போர்க்களத்திற்குள் குதித்த முஸ்லிம்களைப் பார்த்த ரோமப் படைகள், புதிய படைப் பிரிவு வந்து கலந்து கொண்டிருக்கின்றது என்று நினைத்து, அச்சத்திற்குள்ளாயினர்.


ரோமப் படைவீரர்களின் இந்த மனநிலைத் தடுமாற்றத்தைத் தங்களுக்கு சாதமாகப் பயன்படுத்திக் கொண்ட காலித் பின் வலீத் (ரழி) அவர்கள், எதிரிகளின் வளையத்திலிருந்து தனது படைவீரர்களை பாதுகாப்பான பகுதிக்கு அனைவரையும் அப்படியே, ஒதுக்கி அழைத்துச் சென்று விட்டார்கள். இதற்கு முன்பு ரோமர்கள் வெற்றி பெற்று விடுவோம் என்ற மமதையில் இருந்தார்கள். ஆனால், முஸ்லிம்களோ அவர்களின் ஒருவரையும் உயிருடன் போர்க்களத்திலிருந்து திருப்பி அனுப்பவில்லை. அவர்களது நம்பிக்கைக்கும் காரணமிருந்தது. அதுவென்னவெனில், சற்று சில காலங்களுக்கு முன்பு தான் பாரசீகத்தை அவர்கள் வெற்றி கொண்டிருந்தார்கள். அந்த வெற்றிப் போதையானது, எண்ணி விடக் கூடிய அளவிற்கு இருந்த முஸ்லிம்களையும், வெகு எளிதாக வெற்றி பெற்று விடலாம் என்ற போதையை ஏற்றி இருந்தது.


இறைவன் காலித் பின் வலீத் (ரழி) அவர்களுக்கு வழங்கியிருந்த அந்த ஆற்றல்களும், திட்டமிடல்கள், வீரம், நிலைகுலையாத தன்மை ஆகியவற்றின் காரணமாக, எதிரிகளை வென்றெடுக்கக் கூடிய ஆற்றலைத் தந்திருந்தான்.


முதல் நாள் போரிலேயே காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் ஒரு வாள் உடைந்து போக மறுவாள் என்று, ஒன்பது வாள்களை அவர் மாற்றி மாற்றி போர் செய்தததைப் பார்த்து விட்ட, ரோமர்கள் இனி நாம் ஒருக்காலும் வெற்றி பெற முடியாது என்ற நிலைக்கு வந்து விட்;டனர். இரண்டாவது நாள் போரில், எதிரிகளுக்கு அச்சத்தை ஊட்டி, அந்த அச்சத்தைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டதோடல்லாது, தனது படைவீரர்களை மீண்டும் ஒருங்கிணைத்து, எதிரிகளின் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு நகர்த்திச் சென்றதையும் அவர்கள் கண்டு விட்டு, இனி வெற்றி என்பது இல்லை என்ற முடிவுக்கே வந்து விட்டனர். மோசமான, மிகவும் ஆபத்தான இந்தச் சூழ்நிலையில் தனது படைவீரர்களை ஒருங்கிணைத்து அவர்களைப் பாதுகாப்பான இடத்திற்கு நகர்த்திச் சென்றதோடல்லாமல், எதிரிகளையும் நிலைகுலையச் செய்த காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் திட்டம், இன்றைக்கும் உலகப் போர் வரலாற்றில் மறக்க முடியாத சம்பவங்களாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.


மக்கா வெற்றி


காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பின்பு நடந்த முக்கியமான நிகழ்;ச்சி மக்கா வெற்றியாகும். இந்தப் போரில் காலித் பின் வலீத் (ரழி) அவர்களை பனூ சலீம், பனூ கஸீமா, பனூ ஃகஃப்பார் மற்றும் பனூ ஜஹீனா ஆகிய குலங்களை ஒருங்கிணைத்த படைப்பிரிவுக்கு தளபதியாக நியமித்து, மக்காவின் கதா என்ற பகுதியின் வழியாக நுழையும்படிப் பணித்தார்கள். இன்னும், மக்காவிற்குள் நுழையும் சமயத்தில் மக்கா வாசிகளில் எந்தக் குலமாவது உங்களை எதிர்த்தால் என்னுடைய அனுமதியைப் பெற்றுக் கொண்ட பின்பு, அவர்களுடன் போர் புரியுங்கள், எந்த எதிர்ப்பும் இல்லை என்று சொன்னால், எந்த நிலையிலும் போரை நீங்களாகத் துவங்க வேண்டாம் என்றும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் காலித் பின் வலீத் (ரழி) அவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்கள். இன்னும் உங்களது ஒவ்வொரு முயற்சியிலும், இந்தப்புனித நகரத்தில் எந்தவித இரத்தமும் சிந்தப்படக் கூடாது, இந்த நகரத்தின் புனிதத் தன்மை கெட்டு விடாது பாதுகாப்பதில் குறியாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்கள். மக்கா வெற்றியின் பொழுது, 10 ஆயிரம் முஸ்லிம் வீரர்கள் கலந்து கொண்டார்கள், இந்த எண்ணிக்கையானது மக்காவில் வாழ்ந்து கொண்டிருந்த மக்களின் எண்ணிக்கையை விட அதிகமானதாகும். எனவே மக்காவின் சூழ்நிலை இப்பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு எதிராக ஆயுதம் தூக்கும் நிலையில் இல்லை. மக்காவை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மிக எளிதாகவே எந்தவித இரத்த சிந்தப்படாது வெற்றி கொண்டார்கள்.


இருப்பினும், இக்ரிமா பின் அபீ ஜஹ்ல், சஃப்வான் பின் உமைய்யா, சஹ்ல் பின் அம்ர் ஆகியோரின் தலைமையில் திரண்ட மக்கத்து குறைஷி வாலிபர்கள், காலித் பின் தலைமையில் மக்காவிற்கு நுழைந்து கொண்டிருந்த படைப்பிரிவை தடுத்து நிறுத்தும் நோக்குடன், கந்தமா என்ற இடத்தில் திரண்டார்கள். முஸ்லிம்களின் படைப்பிரிவுக்கு காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் தலைமை தாங்கி வருவதைக் கண்ட அவர்கள் தாங்கள் வெற்றி பெறுவோம் நம்பிக்கையை இழந்த அவர்களது, வாள்களும், ஆயுதங்களும் ஏன் பாதங்களும் கூட ஆட்டம் கண்டன. இந்தப் போரில் பனூ பக்ர் மற்றும் பனூ கதீலைச் சேர்ந்த 12 ஆண்கள் கொல்லப்பட்டார்கள். இரண்டு முஸ்லிம்கள் தங்களது பாதையைத் தவற விட்டதன் காரணமாக வேறு இடங்களுக்குப் போய் விட்டார்கள். இந்த இருவர் தான் முஸ்லிம்களின் தரப்பில் உயிரிழந்தவர்கள். இது தவிர 10 ஆயிரம் படைவீரர்களைக் கொண்ட முஸ்லிம் படை மக்காவிற்குள் எந்த எதிர்ப்பும் இன்றி, இரத்தம் சிந்தாமல் உள்ளே வெற்றியுடன் நுழைந்தது. இந்த வெற்றி ஹிஜ்ரி 8 ல் ரமளான் மாதம் 12 ம் நாள் வெள்ளிக் கிழமை நிகழ்ந்தது.


மக்காவை வெற்றி கொண்டபின், முழு மக்காவையும் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்ட இறைத்தூதர்(ஸல்) அவர்கள், பின்னர் கஃபாவிற்குள் நுழைந்தார்கள். கஃபாவிற்கு உள்ளும் புறமும் இருந்த இணைவைப்பின் அழுக்குகளை அகற்றினார்கள். அங்கிருந்த சிலைகளை அப்புறப்படுத்தினார்கள். அதன் பின் பொது மன்னிப்பை அறிவித்தார்கள்.


•⚫ யார் ஹரம் என்று சொல்லக் கூடிய கஃபா பகுதியில் நுழைந்தாரோ அவர் பாதுகாக்கப்பட்டவராவார்.


• ⚫யார் தங்களது ஆயுதங்களை ஒப்படைத்து விடுகின்றாரோ, அவரும் பாதுகாப்புப் பெற்றவராவார்.


• ⚫தங்களது வீட்டுக் கதவுகளைத் தாழிட்டுக் கொண்டு, வீட்டுக்குள் இருப்பவரும் பாதுகாப்புப் பெற்றவராவார்.


• ⚫இன்னும் அபூசுஃப்யானின் வீட்டிற்குள் நுழைந்து கொண்டவர்களும் பாதுகாப்புப் பெற்றவர்களாவார்கள்.


இறைத்தூதர் (ஸல்) அவர்களது இந்த பரந்த மனம் படைத்த அறிவிப்பின் காரணமாக, அப்பாஸ் (ரழி) அவர்களின் உதவியுடன், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் கவனத்தைக் கவர்ந்த அபூசுஃப்யான் அவர்கள், இறைத்தூதர்(ஸல்) அவர்களின் திருக்கரங்களைப் பற்றிக் கொண்டு, முழு மனதுடன் இறைமார்க்கத்தை ஏற்றுக் கொண்டார்கள்.


முஸ்லிம்கள் புடை சூழ இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ஸீ தவா என்ற பெருவெளியில் நின்று கொண்டிருந்த பொழுது, அவர்களது கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் ஆறாய் ஓடியது. அப்பொழுது, இதே மக்காவில் தன்னை மிக அநியாயமாக ஊரை விட்டே விரட்டி விட்ட அந்த சோக நாட்களையும் நினைத்துப் பார்த்தார்கள். ஆனால் அதே நகரம் இன்றைக்கு தனது இறக்கையைத் தாழ விரித்துக் கொண்டு, தன்னை வரவேற்கத் திரண்டு நிற்பதை இட்டு, ஆனந்தக் கண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருந்தது. இதே நகரத்தில் தானே லாத்தையும், உஸ்ஸா வையும் தங்களது இணைத் தெய்வங்களாகப் பிரகடனப்படுத்திக் கொண்டும், இதனை ஏற்க மறுத்து ஓரிறைக் கொள்கையை ஏற்றுக் கொண்ட முஸ்லிம்களை சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாக்கியதோடு, அதில் சிலரது இரத்தத்தையும் இந்தப் புனித பூமியில் ஓட்டிய இவர்கள் தான் இன்றைக்கு, தங்களுக்கு முஹம்மது அவர்கள் மன்னிப்பு வழங்க மாட்டாரா? என்று ஏங்கி நிற்கின்றார்கள். இப்பொழுது உயிர்ப் பிச்சை கேட்டு நிற்கின்றார்கள்.


இன்னும் ஷாப் அபீதாலிப் என்ற கணவாயில் வைத்து, பசிக் கொடுமையில் முஸ்லிம்களை வறுத்தெடுத்தவர்களும் இவர்கள் தானே. இன்றைக்கு அதே மக்கள் தங்கள் மீது கருணை காட்டும்படி வேண்டி நிற்கின்றார்கள்.


இந்த மாற்றத்தை ஏற்படுத்தித் தந்த இறைவனுக்கு நன்றி செலுத்துமுகமாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள், சிரம் பணிந்து வெற்றியை அளித்த இறைவனுக்கு நன்றி கூறினார்கள்.


இணைவைப்பின் கோட்டை தகர்க்கப்படல்


மக்காவிற்குப் பின் ஐந்து நாட்கள் கழித்து, காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் தலைமையில் 30 முஸ்லிம் படைவீரர்களை நக்லா என்ற இடத்திற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். இந்த இடத்தில் தான் மக்கத்துக் குறைஷிகளும், இணைவைப்பாளர்களும் அபயம் தேடி இருந்து கொண்டு, அங்கு உஸ்ஸா என்ற தெய்வத்திற்கு சிலை எடுத்து கோயில் ஒன்றையும் நிர்மாணித்து வைத்திருந்தனர். இணைவைப்பாளர்களின் இந்த கோயிலையும், அவர்கள் அபயம் புகுந்திருந்த அந்த கோட்டையையும் தகர்த்தெறியுமாறு காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் தலைமையின் கீழ் சென்ற படைக்கு உத்தரவு பிறக்கப்பட்டது. மேற்கண்ட இந்த நடவடிக்கை இறைநிராகரிப்பாளர்களுக்கு மத்தியில் கடுமையான எதிர்விளைவை ஏற்படுத்தியிருந்தது. அதிலும் போர்க்குணம் படைத்த, பயமறியாது போரிடக் கூடிய கன்னானா மற்றும் மஸார் குலத்தவர்களிடையே இந்த போர் நடவடிக்கை மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் இந்த உஸ்ஸா தெய்வத்திற்காக கட்டப்பட்ட கோயில், பனூ ஹிஸாம் குலத்தின் துணைக் கோத்திரமான பனூ ஷைபான் குலத்தின் பாதுகாப்பின் கீழ் இருந்து வந்தது. இந்தப் படையெடுப்பு ஒன்றும் மிகவும் எளிதானதொரு செயலல்ல. மாறாக அது இணைவைப்பின் கோட்டையாகத் திகழ்ந்து கொண்டிருந்ததால், இறைநிராகரிப்பாளர்கள் வெகு எளிதாக அதனைக் கைப்பற்ற முஸ்லிம்களை விட்டு விட மாட்டார்கள். ஆனால் காலித் பின் வலீத் (ரழி) அவர்களும், அவர்களது படையினரும் கொண்ட இறைநம்பிக்கையின் தாக்கத்தால், அந்தக் கடுமையான பணியை மிக இலகுவாக முடித்துக் காட்டினார்கள். உஸ்ஸா துண்டு துண்டாக நொருக்கித் தள்ளப்பட்டது.


ஓ உஸ்ஸாவே, நீ ஒரு பொய்க் கடவுள், உனக்கு எந்தப் புகழும் கிடையாது, எந்த இறைத்தன்மையும் கிடையாது. புகழுக்குரிய நாயனான அல்லாஹ் உனது தரத்தைத் தாழ்த்தி விட்டான், எனது கைகளினால் உன்னைச் சிறுமைப்படுத்தி விட்டான் என்று முழங்கிக் கொண்டே அதனைத் துண்டு துண்டாக ஆக்கிய காலித் பின் வலீத் (ரழி) அவர்கள், பின் அந்தத் துண்டுகளை ஒன்றிணைத்து தீ வைத்துக் கொளுத்தி விட்டார்.


மக்கா வெற்றிக்குப் பின், மக்காவைச் சுற்றிலும் உள்ள பகுதிகளுக்கு இஸ்லாத்தின் தூதைப் பற்றி எடுத்துச் சொல்வதற்காக பல்வேறு குழுக்கள் அனுப்பப்பட்டன. அப்படி அனுப்பப்பட்ட குழு ஒன்றுக்கு காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் அனுப்பப்பட்டார்கள். அவ்வாறு இவரின் தலைமையின் கீழ் அனுப்பப்பட்ட குழுவில், பைஅத்துர் ரிழ்வான் என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தத்தின் பொழுது கலந்து கொண்ட, மதிப்புமிக்க நபித்தோழர்களான அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி), அப்துல்லா பின் உமர் (ரழி) போன்றவர்கள் இருந்தார்கள்.


பனூ கஸீமா என்றொரு நகரம் மக்காவில் இருந்து ஒரு நாள் பயண தூரத்தில் இருந்தது. காலித் பின் வலீத் (ரழி) தலைமையில் ஒரு குழு அவர்களது நகரத்தை நெருங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்த அந்த நகரத்து மக்கள், நகரை விட்டு வெளியே ஆயுதங்களுடன் வந்து நின்றனர். அவ்வாறு நின்ற அந்த மக்களைப் பார்த்து காலித் பின் வலீத் (ரழி) அவர்கள், நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள விரும்புகின்றீர்களா? என்று கேடடார். அதற்கு அந்த மக்கள் நாங்கள் சாபியீன்கள் – அதாவது எந்த மதத்தையும் ஏற்றுக் கொள்ளாத நாத்திகர்கள் என்று கூறினார்கள். இதனைக் கேட்ட காலித் பின் வலீத் (ரழி) உடனே அந்த மக்கள் மீது போர் தொடுத்தார்கள். சிலர் கொல்லப்பட்டனர். பலர் பயந்து தங்கள் வீடுகளுக்குள் ஒளிந்து கொண்டார்கள். வெகு சீக்கிரமே அவர்களது இல்லங்களிலிருந்து வெளிக் கொணரப்பட்டு, கைது செய்யப்பட்டனர். இன்னும் மறுநாள் அவர்கள் கொலை செய்யப்பட இருக்கின்றார்கள் என்றும் கூறப்பட்டது. ஆனால் இந்த உத்தரவுக்கு அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) மற்றும் அப்துல்லா பின் உமர் (ரழி) போன்ற நபித்தோழர்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை. அவர்களைக் கொலை செய்வதற்கு மறுப்பு தெரிவித்தார்கள். இன்னும் அந்த மக்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு முஸ்லிம்களாகி விட்டவர்கள் என்று நாங்கள் கேள்விப்படுகின்றோம் என்றும் இருவரும் காலித் பின் வலீத் (ரழி) அவர்களிடம் கூறினார்கள்.


அவர்கள் முஸ்லிம்கள் என்று சொன்னால் ஏன் என்னிடம் சாபியீன்கள் என்று கூற வேண்டும். தயக்கமில்லாது நாங்கள் முஸ்லிம்கள் என்று அவர்கள் கூறியிருக்கலாமே என்று காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் தனது தோழர்களிடம் கருத்துத் தெரிவித்தார்கள். அவர்கள் பயன்படுத்தி சாபியீன்கள் என்ற வார்த்தை மூலம் அவர்கள் இஸ்லாத்தை விரும்பவில்லை என்றல்லவா தெரிகின்றது என்றும் கேட்டார்கள். இன்னும் இதனால் இவர்கள் கொலை செய்யப்பட வேண்டியவர்கள் என்று காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் தனது கருத்தைக் கூறினார்கள்.


இமாம் இப்னு தமீமா, அல்லாமா ஐனி மற்றும் ஹாபிஸ் இப்னு ஹஜர் போன்ற அறிஞர் பெருமக்கள் கூறுவதாவது, அந்த பனூ குஸமா கோத்திரத்து மக்கள், நாங்கள் முஸ்லிம்கள் தான் என்ற பதிலைத் தெளிவாகத் தெரிவித்திருக்க வேண்டும் என்று கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.


இது தான் ஒரு படைத்தளபதியின் அடிப்படைக் குணாதிசயங்களும், பண்புகளுமாகும், அவர்கள் தங்களது நேரங்கள் விரையமாகுவதை விரும்ப மாட்டார்கள். இக்கட்டான சூழ்நிலையில் மிக விரைந்து முடிவெடுத்து, பிரச்னையை கட்டுக்குள் கொண்டு வருவதையே விரும்புவார்கள். எனவே தான் அவர்கள் தங்களது உதடுகளில் சாபியீன்கள் என்ற வார்த்தையை மொழிந்ததுடன், இவர்கள் இஸ்லாத்தை விரும்பவில்லை என்பதை முடிவெடுத்து விட்டார், இன்னும் எந்த முஸ்லிமும் நான் இறைநம்பிக்கை கொண்டவனல்லன் என்ற பொருள் கொண்ட வார்த்தையை என்றைக்கும் மொழிய மாட்டான். எனவே தான் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள், உடனே தனது நடவடிக்கையைத் தொடுத்து விட்டார்கள். பனூ குஸாமா குலத்தவர்களின் இந்த தவறான நடவடிக்கையின் காரணமாக அவர்கள் கடுமையான உயிர்ச் சேதங்களையும், பொருட் சேதங்களையும் அடைந்து விட்டார்கள்.


இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இந்த சம்பவத்தைக் கேள்விப்பட்டு மிகவும் வருத்தமடைந்த போதிலும், காலித் பின் வலீத் (ரழி) அவர்களை எந்த விதத்திலும் குற்றப்படுத்திப் பார்க்கவில்லை. ஏனெனில் இது முற்றிலும் தவறான புரிந்துணர்வின் காரணமாக எழுந்த நடவடிக்கை தான் என்பதை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் புரிந்து கொண்டது தான் காரணமாகும். பனூ குஸாமா குலத்தவர்களுக்கு ஏற்பட்ட உயிர்ச்சேதங்களுக்கும், இன்னும் பொருட்சேதங்களையும் ஈடு செய்யும் பொருட்டு, பொருட்களையும், செல்வங்களையும் கொடுத்து அதற்கு ஈடுசெய்து விட்டு வருமாறு, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அலி (ரழி) அவர்களை அனுப்பி வைத்தார்கள். இந்த சம்பவத்திற்குப் பின்பும், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பல போர்களுக்கு தளபதியாக நியமித்து, காலித் பின் வலீத் (ரழி) அவர்களை அனுப்பி வைத்திருக்கின்றார்கள் என்பதன் மூலம், காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் சிறப்புக்களை நாம் அறிந்து கொள்ள முடிகின்றது


ஹுனைன் யுத்தம்


ஹுனைன் என்பது ஒரு பெருவெளி, இது தாயிஃப் நகரத்திற்கு வடமேற்காக 40 மைல் தூரத்தில் உதாஸ் மலைக்கருகில் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் ஹவாஸான் என்ற போர்க்குணம் படைத்த குலத்தவர்கள் வாழ்ந்து வந்தார்கள். இந்தப் பகுதியில் இவர்களின் கிளைக் குலத்தவர்கள் பரவி வாழ்ந்து வந்தார்கள். இவர்கள் மிகச் சிறந்த வில் வித்தையில் கெட்டிக்காரர்களும் கூட. இவர்கள் ஆரம்பம் முதலே, முஸ்லிம்களை நோக்கி எதிர்த் தாக்குதல் தொடுப்பதற்கு முயற்சி செய்து வந்தவர்கள். மக்கா வெற்றிக்குப் பின்னர் இறைத்தூதர் (ஸல்) அவர்கள், இந்தக் குலத்தவர்களது நடவடிக்கைகளுக்குப் பதில் நடவடிக்கை எடுக்க விரும்பினார்கள்.


எனவே, இந்தக் குலத்தவர்களுக்கு எதிரான இந்தப் போரில் கலந்து கொள்வதற்காக பத்தாயிரம் பேர் கொண்ட படை ஒன்று மதீனாவில் இருந்து வந்திறங்கியது. இன்னும் மக்காவில் இருந்து இரண்டாயிரம் படைவீரர்கள் சேர்ந்து கொள்ள, ஆக மொத்தம் 12 ஆயிரம் படைவீரர்களுடன் ஹ{னைனை நோக்கி இஸ்லாமியப் படை இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தலைமையில் நகர்ந்தது.


இந்தப் படையின் பல பிரிவுகளுக்கு பல தலைவர்கள் நியமிக்கப்பட்டார்கள். இதில் முஹாஜிர்களுக்குத் தலைவராக உமர் (ரழி) அவர்களும், அவ்ஸ் குலத்தைச் சேர்ந்த அஸீத் பின் ஹீஸைர் (ரழி) அவர்கள் கொடியை ஏந்திக் கொள்பவராகவும், சஅத் பின் இபாதா (ரழி) அவர்கள் கஸ்ரஜ் குலத்தவர்களுக்கும், இன்னும் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் பனூ சலீம் குலத்தவர்களுக்கும் தலைவர்களாக நியமிக்கப்பட்டார்கள். இவர்கள் அனைவரும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தலைமையில், ஹ{னைன் பெருவெளியை, ஹிஜ்ரி 8 ஆம் ஆண்டு, ஷவ்வால் மாதம் 10 ஆம் நாள் அன்று அடைந்தார்கள்.


காலித் பின் வலீத் (ரழி) அவர்களது தலைமையில் அனுப்பப்பட்ட படை முன்னணிப் படையாக அனுப்பப்பட்டது. எதிரிகளின் படையோ வெறும் நான்காயிரம் மட்டுமே இருந்தது. இதனைப் பார்த்த இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள், *நிச்சயம் நாம் வெற்றி பெற்று விடுவோம் என்ற உறுதியான நம்பிக்கைக்கு வந்து விட்டார்கள். ஆனால், இதற்கு முன் நடைபெற்ற பல போர்களில் கலந்து கொண்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை குறைவாக இருந்த போதிலும், இறைவனின் உதவியினால் தான் நாம் அந்த வெற்றியைப் பெற்றுக் கொள்ள முடிந்தது என்ற நம்பிக்கைக்கு அவர்கள் வராமல்*, நாம் எண்ணிக்கையில் அதிமாக உள்ளதால் கண்டிப்பாக வெற்றி பெற்றே தீருவோம் என்ற தவறான முடிவுக்கு வந்ததன் காரணமாக, *இறைவன் அங்கு சோதனையை அவர்களுக்கு ஏற்படுத்தினான். எளிதாகப் பெற்றுக் கொள்ளக் கூடிய வெற்றியை மிகவும் கடினமாக மாற்றிக் காட்டினான்.* இதனைத் தான் இறைமறைக்குர்ஆன் இவ்வாறு விளக்குகின்றது.


*நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குப் பல போர்க்களங்களில் உதவி செய்திருக்கின்றான். (நினைவு கூறுங்கள்). ஆனால் ஹ{னைன் (போர் நடந்த) அன்று. உங்களைப் பெருமகிழ்ச்சி கொள்ளச் செய்த உங்களுடைய அதிகமான (மக்கள்) தொகை உங்களுக்கு எவ்விதப் பலனும் அளிக்கவில்லை, (மிகவும்) பரந்த பூமி உங்களுக்கு (அப்போது) சுருக்கமாகி விட்டது. அன்றியும் நீங்கள் புறங்காட்டிப் பின்வாங்கலானீர்கள். பின்னர் அல்லாஹ் தன்னுடைய தூதர் மீதும், முஃமின்கள் மீதும் தன்னுடைய சாந்தியை இறக்கியருளினான். நீங்கள் பார்க்க முடியாப் படைகளையும் இறக்கி வைத்தான். (அதன் மூலம்) நிராகரிப்போரை வேதனைக்குள்ளாக்கினான் – இன்னும் இதுவே நிராகரிப்போரின் கூலியாகும். (9:25-26)*


பனூ தக்கீஃப் மற்றும் ஹவாஸான் ஆகிய குலத்தவர்கள் பதுங்கி இருந்து கொண்டு தாக்குதலுக்குத் தயாராக இருந்த அவர்கள், காலித் பின் வலீத் (ரழி) அவர்களது தலைமையில் வரும் படைவீரர்கள் இவர்களது எல்லைக்குள் நுழைந்ததும், அம்பு மழையைப் பொழிய ஆரம்பித்தார்கள். நாம் வேரறுக்கப்பட்டு விட்டோம் என்று எண்ணுமளவுக்கு இறைநிராகரிப்பாளர்களின் தாக்குதல்கள் இருந்தன, இன்னும், இந்தத் தாக்குதல்களைச் சமாளிக்க இயலாத முஸ்லிம்கள், எதிர்த்தாக்குதலைத் தொடுப்பதை விட்டு விட்டு விரண்டோட ஆரம்பித்தார்கள். குதிரைகளும், ஒட்டகங்களும் எந்தப் பக்கம் திரும்பினவோ, அந்தப் பக்கமாக கிடைத்த வழிகளை பயன்படுத்தி ஓட்டமெடுக்க ஆரம்பித்தன. எங்கும் மரணக் கூச்சல் ஆர்ப்பரித்தது. இன்னும் ஒரு சில முஸ்லிம் வீரர்கள் தான் தங்களது தலைமைக்குக் கட்டுப்பட்டு, நிலைகுலையாமல் தங்களுடைய தலைமைகளுடன் களத்தில் நின்று கொண்டிருந்தார்கள். ஒட்டு மொத்த தளபதியாகச் சென்றிந்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இப்பொழுது முஸ்லிம்களைப் பார்த்த அறைகூவல் விடுக்கலானார்கள் :


*நிச்சயமாக சந்தேகமின்றி, நான் இறைத்தூதராவேன். நான் அப்துல் முத்தலிப் அவர்களின் மகனுமாவேன்* என்று கூறி விட்டு,


*உங்களது கண்களால் என்னைப் பாருங்கள், உங்களுக்கு முன்பாக நான் நின்று கொண்டிருக்கின்றேன், இன்னும் உறுதியாகவும், நிலைகுலையாமலும், இன்னும் (எதிரிகளைக் கண்டு) பயந்து ஓடாமலும்..!*


அப்பாஸ் (ரழி) அவர்கள் பின்பு கூவி அழைக்கலானார்கள்..!


*இறைநம்பிக்கையாளர்களே! எங்கே ஓடுகின்றீர்கள்? உங்களது தூதரின் பக்கம் திரும்பி வாருங்கள். வல்லமை மிக்க அல்லாஹ்வின் தூதர் உங்களை அழைக்கின்றார்! திரும்பி வாருங்கள்..! இன்னும் உங்களது தூதர் (ஸல்) பக்கம் வாருங்கள்* என்று உரக்கக் கூவி அழைக்கலானார்கள்.


அப்பாஸ் (ரழி) அவர்களின் ஓங்கிய குரலோசையைச் செவிமடுத்த நபித்தோழர்கள் அனைவரும், ஆகா..! நாம் தவறு செய்து விட்டோமே..! என்று வருந்தியவர்களாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மீது கொண்ட அன்பின் காரணமாக மீண்டும் திரும்பி வந்தார்கள். இன்னும் அவர்கள் குரல் கொடுத்தவர்களாக..!


*ஓ! அல்லாஹ்வின் தூதரவர்களே! உங்களது அழைப்பைக் கேட்டு நாங்கள் திரும்பி வந்து விட்டோம்* என்று மறுமொழி கூறினார்கள்.


சிதறி ஓடிய நபித்தோழர்கள் இப்பொழுது, தங்களை ஒருங்கிணைத்துக் கொண்டு, இழந்த சக்தியை மீண்டும் பெற்றவர்களாக எதிரிகளை நோக்கிப் பாய ஆரம்பித்தார்கள். இப்பொழுது எதிரிகள் நபித்தோழர்களின் தாக்குதல்களைச் சமாளிக்க இயலாமல், பின் வாங்கினார்கள். சிறிது நேரத்திற்குள்ளாக..! போர்க்களக் காட்சிகள் முற்றிலும் மாறி விட்டன.


காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் கூர்மையான வாள், எதிரிகளின் படைகளை குத்திக் கீறிக் கொண்டு சென்றதோடல்லாமல், எதிர் கொண்ட அத்தனை எதிரிகளையும் துவம்சம் செய்ய ஆரம்பித்தது. இறைத்தூதர் (ஸல்) அவர்களது உரை மற்றும் இறைநம்பிக்கையின் மீது கொண்ட ஆவலில் பிறந்த உயிர்த் துடிப்பான சக்தியானது, இப்பொழுது இறைஉவப்புப் பெற்றுத் தரக் கூடிய, மரணத்தைச் சுவைத்துப் பார்ப்பதற்காக கொழுந்து விட்டெறிந்த ஆவலாக மாறியது, சிங்கத்தைப் போல எதிரிகளை எதிர்த்துப் போராடத் தூண்டியது. இந்தப் போரில் காலித் பின் வலீத் (ரழி) அவர்களுக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டன. இறுதியாக முஸ்லிம்களுக்கு வெற்றி கிடைத்தது. காலித் பின் வலீத் (ரழி) அவர்களுக்கு ஏற்பட்ட கடுமையான காயங்கள், ரணத்தைத் தராமல் வெற்றியின் களிப்பை அனுபவித்துக் கொண்டிருந்தன. இன்னும், தனது அபிமானமிக்க படைத்தளபதி காயத்தால் துவண்டு கிடப்பதை காண விரைந்தார்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் காலித் பின் வலீத் (ரழி) அவர்களது காயங்களைப் பார்க்க வந்ததும், அதுவே தனக்குக் கிடைத்த மிகப் பெரும் பாக்கியமாகக் கருதிய காலித் பின் வலீத் (ரழி) அவர்களுக்கு, சந்தோஷம் கரையுடைத்துச் சென்றது. இன்னும் *இறைத்தூதர் (ஸல்) அவர்களது மலரிதழ்களிலிருந்து, எச்சிலை உமிழ்ந்து, காலித் பின் வலீத் (ரழி) அவர்களது காயங்களில் தடவி விட்டு, விரைந்து ஆறுவதற்கு பிரார்த்தித்தார்கள்.*


ஹுனைன் போரில் வெற்றி பெற்ற பின்பு, இறைத்தூதர் (ஸல்) அவர்களும், அவர்களது தோழர்களும் சிறிது காலம் அங்கே தங்கியிருந்து, காயம்பட்டவர்களுக்கு சிகிச்சையையும், ஓய்வும் எடுத்துக் கொண்டார்கள். இன்னும் தோற்று ஓடிய சில எதிரிகள் தாயிஃப் நகரத்தில் திரண்டு கொண்டிருப்பதாகச் செய்தியைக் கேள்விப்பட்டார்கள். தாயிஃப் நகரம் இரண்டு மலைகளுக்கிடையில் அமைந்த, விவசாய வளமிக்க மற்றும் குளிர்ச்சியான நகரமும் கூட. இங்குள்ள தண்ணீர் ஊற்றுக்களும், கனிவர்க்கமும், காய்கறி வர்க்கமும் பிரசித்தி பெற்றவை.


இந்த நகரம் தான் முந்தைய மக்கா வாழ்க்கையில் ஒருமுறை இறைத்தூதர் (ஸல்) அவர்கள், இஸ்லாத்தின் தூதை எடுத்து வைக்கச் சென்ற பொழுது, இஸ்லாத்தை இதமாக வரவேற்பதற்குப் பதிலாக, இறைத்தூதர் (ஸல்) அவர்களை சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாக்கியதோடு, இரத்தம் சொட்டச் சொட்ட வெளியேற்றியது. இஸ்லாத்தைப் புறக்கணித்தது. படுகாயமடைந்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒரு தோட்டத்திற்குள் சென்று தஞ்சமடைந்தார்கள்.


இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு நேர்ந்த இந்தக் கொடுமைகளையும், இரத்தம் சொட்டச் சொட்ட மரநிழலில் அமர்ந்திருப்பதைக் கண்ட வானவர்கள், உங்களைத் துன்புறுத்திய இந்த மக்களை இந்த இரு மலைகளுக்கு இடையே வைத்து நாங்கள் நசுக்கி, அழித்து விடுகின்றோம் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்ட பொழுது, அதற்கு அனுமதி மறுத்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள், நான் மக்களைத் துன்புறுத்துவதற்காகவோ அல்லது அழித்தொழிப்பதற்காகவோ அனுப்பப்பட்ட தூதனல்ல, இன்றில்லா விட்டாலும் நாளை இவர்களது சந்ததியினராவது இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளக் கூடுமல்லவா? என்று விளக்கமளித்தார்கள். அன்றைக்கு இரத்தம் சொட்டச் சொட்ட வெளியேற்றப்பட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள், இன்றைக்கு அதே நகரத்தில் ஒரு மிகப் பெரிய படையின் தலைமைத் தளபதியாக உள்ளே நுழைகின்றார்கள். நுழைந்ததோடு மட்டுமல்லாது அன்றைய மிகப் பெரிய குலங்களாக விளங்கிய பனூ கவஸான் மற்றும் அவர்களது நட்புக் குலங்களுக்கு எதிராகவே படை நடத்தி வந்திருந்தார்கள். பனூ கவஸான்கள் முஸ்லிம்களின் மிகப் பெரிய படையைப் பார்த்துக் கொண்டிருந்த பொழுது, பனூ தக்கீப் குலத்தவர்கள் தங்களது கோட்டைக்குள் சென்று ஒளிந்து கொண்டார்கள்.


கோட்டையை முற்றுகையிட்ட முஸ்லிம்கள், இப்பொழுது காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் வழியாக.., எதிரிகளே…! எங்களை நேரில் வந்து சந்தியுங்கள்…!! என்று அறைகூவல் விட்டுக் கொண்டிருந்தார்கள். காலித் பின் வலீத் (ரழி) அவர்களோ சளைக்காது எதிரிகளை நோக்கி அறைகூவல் விட்டுக் கொண்டிருந்தார்கள். முஸ்லிம்களின் அறைகூவலை நேரில் வந்து சந்திக்கத் திராணியற்ற எதிரிகள் கோட்டைக்குள் பாதுகாப்பாக இருந்து கொண்டார்கள். இன்னும் கோட்டைக்குள் ஒரு வருடத்திற்குத் தேவையான உணவுப் பொருட்கள், தண்ணீர் போன்றவற்றையும் அவர்கள் முன்பே சேகரித்தும் வைத்திருந்தார்கள். இதே நிலை தொடர்ந்து கொண்டிருந்த பொழுது, முற்றுகையைக் கைவிடுமாறு அபுபக்கர் (ரழி) அவர்கள் ஆலோசனை கூற, இறைத்தூதர் (ஸல்) அவர்களும் சம்மதித்த பின் முற்றுகையானது 18 நாட்களுக்குப் பின் கைவிடப்பட்டது. முற்றுகை கைவிடப்பட்ட சிறிது நாட்களுக்குள் பனூ கவாஸான் மற்றும் பனூ தக்கீப் குலத்தவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். முற்றுகையின் பொழுது, காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் காட்டிய வீரம், மற்றும் கொண்ட கொள்கையில் உறுதி, அற்பணிப்பு ஆகிய அனைத்தும் இணைந்து இஸ்லாத்தினை மேலோங்கச் செய்ய வேண்டும் என்ற அவரது உறுதியை வெளிப்படுத்திக் காட்டியது. சந்தேகமில்லாமல் ஒவ்வொரு தளபதிக்கும் இந்த பேரார்வம் இருக்க வேண்டியது அவசியமும், இன்னும் இது தான் தலைமைக்கே உரிய பண்புமாகும்.


பனூ கவஸா என்பது பனூ முஸ்தலக் என்ற குலத்தின் ஒரு கிளையினராவர். இந்தக் குலத்தவர்கள் ஹிஜ்ரி 6 ஆம் ஆண்டு வாக்கில் இஸ்லாத்தினை தங்களது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார்கள். ஒருமுறை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது பிரதிநிதி ஒருவரை அனுப்பி, அந்த மக்களிடம் ஜகாத் என்ற ஏழை வரியை வசூலித்து வரும்படி அனுப்பி வைத்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து பிரதிநிதிகளின் குழு ஒன்று வருவதை அறிந்து, அந்தக் குலத்தலைவர்கள் தங்களது இருப்பிடத்தை விட்டு வெளிக்கிளம்பி, புறநகர்ப் பகுதிக்கு வந்து வரக் கூடிய தலைவர்களை வரவேற்கக் காத்திருந்தார்கள். பிரதிநிதிகள் நகரை நெருங்க, அவர்களை எதிர்கொண்டழைப்பதற்க்காக தலைவர்கள் வருவதைத் தவறாகப் புரிந்து கொண்ட பிரதிநிதிகள், அவர்கள் தங்களைத் தாக்கத் தான் வருகின்றார்கள் என நினைத்து, பயந்தவர்களாக மதீனாவிற்கே மீண்டும் திரும்பி வந்து விடுகின்றார்கள். இன்னும் பனூ முஸ்தலக் குலத்தவர்கள் ஜகாத் தர மறுத்து விட்டார்கள் என்ற செய்தியை இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் இந்தப் பிரதிநிதிகள் கூறியவுடன், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பேரதிர்ச்சி அடைந்தார்கள். மேலும், இது விஷயமாக அவர்கள் மீது போர் தொடுப்பதற்கு முன்பு, காலித் பின் வலீத் (ரழி) தலைமையில் ஒரு குழுவை அனுப்பி உண்மை நிலவரத்தை முதலில் அறிந்து கொள்ள வேண்டும் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் விரும்பியதோடல்லாமல், காலித் பில் வலீத் (ரழி) தலைமையில் ஒரு குழுவையும் அனுப்பி வைத்தார்கள். இக்குழுவுக்கு காலித் பின் வலீத் (ரழி) அவர்களைத் தேர்ந்தெடுத்ததன் காரணமென்னவெனில், அவர்களின் தொலைநோக்குப் பார்வை, அறிவு மற்றும் நிரம்பிய பல தகுதிகள் தான் காரணமாகும் என்பதில் சந்தேகமில்லை.


இன்னும் அந்த மக்களைச் சந்திக்குமிடத்து எந்தவித உணர்ச்சிகளுக்கும் இடங்கொடாமல், நிலைமையை நன்கு அவதானித்து நடந்து கொள்ளும்படி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அறிவுறுத்தி அனுப்பி வைத்தார்கள். இன்னும் பொறுமையும், சகிப்புத் தன்மையும் தான் இந்த நேரத்தில் அதிகம் தேவைப்படக் கூடிய நற்பண்புகளாகும் என்றும் அவர்கள் கூறினார்கள்.


காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் பனூ முஸ்தலக் குலத்தவர்களின் இருப்பிடத்தை இரவின் நடுப்பகுதியில் அடைந்தார்கள். நகரின் நிலவரத்தை சரியாகக் கணிப்பிட வேண்டும் என்று நினைத்த காலித் பின் வலீத் (ரழி) அவர்கள், தனது தோழர் ஒருவரை மாறுவேடம் அணியச் செய்து நகருக்குள் அனுப்பி வைத்தார்கள். மாறுவேடம் அணிந்து நகருக்குள் சென்ற அந்த மனிதர் திரும்பி வந்து, நிச்சயமாக அந்த மக்கள் முஸ்லிம்கள் தான். அவர்கள் அதிகாலைத் தொழுகையை பள்ளிவாசலில் நிறைவேற்றுவதைக் கண்டேன், இன்னும் அவர்கள் குறைவான மக்கள் தொகையினராகத் தான் இருக்கின்றார்கள் என்றும் கூறினார். இதனைக் கேட்ட காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் சந்தோஷமடைந்தவர்களாக, அவர்களது நல வாழ்வுக்காகவும், மறுமைக்காகவும் பிரார்த்தித்தார்கள்.


அதிகாலை நேரம் சற்று வெளிச்சம் பரவியதும் தானே நகருக்குள் சென்று, நகரின் முக்கியத் தலைவர்களைச் சந்தித்த காலித் பின் வலீத் (ரழி) அவர்கள், ஜகாத் கொடுக்க மறுத்ததன் காரணத்தை அவர்களிடம் வினவினார்கள். அப்பொழுது, நடந்த உண்மை விபரத்தை அந்தத் தலைவர்கள் விளக்கினார்கள். தாங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து வந்த பிரதிநிதிகளை எதிர்கொண்டு வரவழைக்க நகரின் வெளிப்பகுதிக்கு வந்ததாகவும், நாங்கள் வருவதைப் பார்த்த அவர்கள் தாக்குதல் நடத்தத் தான் வருகின்றோம் என்று தவறாகப் புரிந்து கொண்டு, திரும்பி வந்து விட்டதாகவும் விளக்கமளித்தார்கள்.


பனூ முஸ்தலக் தலைவர்கள் தந்த விளக்கத்தைக் கேட்ட காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். இன்னும் அந்த மக்களின் மார்க்க அடிப்படை அறிவு மற்றும் இஸ்லாமிய ஒழுக்க விழுமியங்களைப் பேணுவதில் அவர்கள் காட்டிய ஆர்வம் ஆகிய அனைத்தைப் பற்றியும் அறிந்து கொண்ட காலித் பின் வலீத் (ரழி) அவர்கள், திருப்தியும், சந்தோஷமும் அடைந்தார்கள்.


மதீனா திரும்பியதும் நடந்த விபரங்களை இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் விளக்கிய காலித் பின் வலீத் (ரழி) அவர்கள், அவர்கள் எந்த குற்றச்சாட்டுக்கும் உரித்தானவர்கள் அல்ல என்பதையும், ஜகாத் கொடுப்பதில் அவர்கள் ஆர்வமுள்ளவர்கள் தான் என்பதையும் விளக்கினார்கள். நாம் அனுப்பிய முந்தைய பிரதிநிதிகள் தான், நடந்த சம்பவங்களைப் பற்றி நமக்கு தெளிவான தகவல்களைத் தராமல் மாறுபட்ட தகவல்களைத் தந்திருக்கின்றார்கள் என்றும் கூறினார்கள். அப்பொழுது, இந்த நிகழ்ச்சியின் பொருட்டு அல்லாஹ் கீழ்க்கண்ட வசனத்தை இறக்கி அருளினான் :


முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப்படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள். (49:6)


இங்கே நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், பனூ முஸ்தலக் குலத்தவர்கள் ஜகாத் தர மறுக்கின்றார்கள் என்ற தவறான செய்தியைக் கேள்விப்பட்டு அவர்கள் மீது போர் முஸ்தீபுகள் செய்யப்பட்;டன, பின் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் தலைமையில் சென்ற படை இதற்கான சரியான தீர்வைக் கொண்டு வந்தது, பிரச்னையை மிகவும் இலகுவாகத் தீர்த்து விட்டும் வந்தது. இன்னும் காலித் பின் வலீத் (ரழி) அவர்களை அனுப்பி வைக்கும் பொழுது, தனது தளபதிக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கொடுத்தனுப்பிய அறிவுரையும் கவனிக்கத்தக்கது. இந்த அறிவுரையானது காலித் பின் வலீத் (ரழி) அவர்களை பொறுமையாகவும், நிதானமாகவும் நடவடிக்கையை எடுக்கத் துணை புரிந்ததோடல்லாமல், அவரது தூர நோக்கு மற்றும் பிரச்னையைத் தீர்த்து வைக்கக் கூடிய பேராற்றல் ஆகியவற்றையும் வெளிப்படுத்திக் காட்டியது, இறைவனுக்கு மாறு செய்து விட்டார்களே என்று எண்ணி அவர்கள் மீது கடும் போரைத் திணக்காது நிலைமைச் சீர்தூக்கிப் பார்க்க வைத்தது. மிகப் பெரியதொரு போர் தவிர்க்கப்பட்டதோடல்லாமல