السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Monday, 20 October 2014

ஹத்தாது றாதிப் கிதாப் ஒடியோக்களுடன் உங்கள் கையடக்க தொலைபேசியில் பெற்றுக் கொள்ளலாம்

Play Store இல் Mowlid&dhikr என search செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்


Description
Haddad Ratheeb - حداد - Rathib Al Haddad of Abdullah Bin Ba-alawi (R)
In this application you can view Haddad Ratheeb & also can hear audio.
Please Include us in your dua.
* Ratib Al Haddad
* Haddad Ratheeb


pls share this 

Friday, 17 October 2014

ஜனாஸாவை குளிப்பாட்டும் முறை

உங்களில் எத்தனை பேருக்கு ஜனாஸாவை குளிப்பாட்டத் தெரியும்?
அனைவரும் பார்க்க வேண்டிய  குளிப்பாட்டும் விளக்க 
வீடியோ இணைப்பு








Wednesday, 15 October 2014

தயம்மும் செய்வது எப்படி?

தயம்மும்

இச்சொல் “சுத்தம் செய்வதற்கு மண்ணை நாடுதல்”என்ற பொருளைத் தரும்.தண்ணீரை உபயோகிக்க இயலாத பொழுது மண்ணைக் கொண்டு முகம் மற்றும் கைகளை மஸ்ஹூ செய்வதற்கு இச்சொல் வழங்கப்படுகிறது. அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பனூ முஸ்தலிக் போரிலிருந்து திரும்பி வந்த பொழுது  ”தாதுல் ஜைஷ்”என்ற இடத்தில் தங்கினார்கள்.

அருமை நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கனுடன் ஆயிஷா றழியல்லாஹூ அன்ஹா அவர்களும் சென்றிருந்தார்கள்.அவர்களின் கழுத்தணி அவ்விடத்தில் காணாமால் போனாதால் அங்கு இரவு முழுவதும் தங்க நேரந்தது.அப்பொழுது படை வீர்ர்களிடமிருந்த தண்ணீர் ழுழுவதும் தீர்ந்துவிட்டது.அதன் சுற்றுப் பகுதிகளிலும் நீர் கிடைக்க வில்லை.இதனைக்கண்ட படை வீரர்கள் அபுபக்ர் றழியல்லாஹூ அன்ஹூ அவர்களிடம் சென்று தங்களின் மகளால் இத்துயரம் ஏற்பட்டுள்ளது.என்று கூறினார்கள்.இதைக் கேட்டு கோபமுற்ற அபுபக்ர் றழியல்லாஹூ அன்ஹூ அவர்கள் தமது மகளாரிடம் சென்றனர்.அங்கு அண்ணலார் ஆயிஷா றழியல்லாஹூ அன்ஹா அவர்களின் மடியில் தலை வைத்த தூங்கிக் கொண்டிருந்ததை  கண்டு தமது மகளை சைகயினால் ஏசினார்கள்.அருமை நாயகத்தின் தூக்கம் கலைந்து விடக்கூடாதென அஞ்சி ஆயிஷா நாயகி அவர்கள் அசையாது வீற்றிருந்தார்கள்.
அண்ணலார் விழித்தெழுந்த பொழுது தயம்மமுடைய திருவசனம் இறங்கியது
(நூல் புகாரி 334: ஆயிஷா (ரலி),முத்தா)

வேறு சில நிகழ்ச்சிகளின் போது இது இறங்கிதாக வேறு சில கருத்துக்களும் காணப்படுகின்றன.நீங்கள் நோயாளியாக அல்லது பயணத்தில் இருந்து உங்களில் எவரும் மலம்,ஜலம் கழித்தால் அல்லது பெண்களைத் தீண்டியிருந்தால்(தொழுகை நேரத்தில் சுத்தம் செய்வதற்கு)தண்ணீர நீங்கள் பெறாவிட்டால் தூய்மையான மண்ணைக்(உங்களின் கைகளினால் தொட்டு அதனைக்)கொண்டு உங்களின் முகங்களையும்,கைகளையும் மஸ்ஹூ செய்து கொள்ளுங்கள்.என்று தயம்ம்முமின் செயல் முறைகளை அல்லாஹூத்தாஆலா தெளிவாக்கியுள்ளான்.(5.6)
புமி முழுவதும் வணங்கும் இடமாகவும் அதணுடைய மண் தூய்மைப்படுத்தக் கூடிய பொருளாகவும் ஆக்கப்பட்டுள்ளது..என திரு நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்(நூல் புகாரி,முஸ்லிம்)

தண்ணீர் இல்லாவிடில் அல்லது நீர் இருந்தும் அது குடிப்பதற்கு தேவைப்பட்டால்,அல்லது வியாதியினால் நீரை உபயோகிக்க முடியாவிட்டால் தயம்மம் செய்து கொள்ளலாம். 
தயம்மும் செய்வது எப்படி?

தொடரும்.....01

Tuesday, 14 October 2014

அண்ணல் நபி(ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்)அவர்களின் அழகிய உவமைகள் 02

நல்ல நண்பன்
ABu Izza Eravur



கஸ்துரி வியாபாரியை போன்றவன்...
நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்: நல்ல நண்பன் நறுமண பொருட்களை விற்கும் ஒரு வியாபாரியை போன்றவன். அவன் நமக்கு எதையும் தரவில்லையென்றாலும், குறைந்தபட்சம் அவன் கடையில் உள்ள சிறந்த வாசனையாவது நம்மை வந்தடையும். தீய நண்பன், கொல்லனின் (இரும்பு வியாபாரியின்) சூளையை போன்றவன். நாம் அதன் நெருப்பிலிருந்து தப்பித்து கொண்டாலும், குறைந்தபட்சம் அதன் புகை நம் உடலையும், உடமையையும் அலங்கோலப்படுத்தி விடும். - (அபு மூசா (ரலி), புஹாரி, முஸ்லிம். 
நபி தோழர்: நல்ல நண்பனையும் - தீய நண்பனையும் நாங்கள் எவ்வாறு அறிந்து கொள்வது?
நபி(ஸல்): நீங்கள் இறைவனை மறந்திருக்கும் போது உங்களுக்கு இறை நினைவூட்டுபவன் நல்ல நண்பன். அவ்வாறு உங்களுக்கு நினைவூட்டாதவன் தீய நண்பன். மேலும் யாரை கண்டவுடன் உங்களுக்கு இறைநினைவு வருகிறதோ அவர் மனிதர்களில் சிறந்தவர். 
மனிதன் தன் வாழ்வுக்கான முன்னேற்ற பாதையில் புதிய நட்புறவுகளை உருவாக்கி கொள்வதை இஸ்லாம் தடை ஏதும் செய்யவில்லை. அவ்வாறு உருவாக்கி கொள்ளும் மனோபாவம் இல்லாத தனிமை விரும்பியை உலகம் தனிமைபடுத்திவிடும்  என்பதை இஸ்லாம் நன்றாகவே புரிந்து வைத்துள்ளது. 
பறவைக்கு ஒரு கூடு, சிலந்திக்கு ஒரு வலை என்பது போல, மனிதனுக்கு நட்பு மிக அவசியமானது. அந்த நட்புக்கு இஸ்லாம் சில வரை முறைகளை வலியுறுத்துகிறது.
மனிதன் தன் வாழ்வுக்கான முன்னேற்ற பாதையில் புதிய நட்புறவுகளை உருவாக்கி கொள்வதை இஸ்லாம் தடை ஏதும் செய்யவில்லை. அவ்வாறு உருவாக்கி கொள்ளும் மனோபாவம் இல்லாத தனிமை விரும்பியை உலகம் தனிமைபடுத்திவிடும்  என்பதை இஸ்லாம் நன்றாகவே புரிந்து வைத்துள்ளது. 
பறவைக்கு ஒரு கூடு, சிலந்திக்கு ஒரு வலை என்பது போல, மனிதனுக்கு நட்பு மிக அவசியமானது. அந்த நட்புக்கு இஸ்லாம் சில வரை முறைகளை வலியுறுத்துகிறது.
உறவுகளை இறைவன் நமக்கு நேரடியாக வழங்குகிறான். ஆனால் நண்பர்களை தேர்வு செய்யும் உரிமையை நம்மிடம் தான் வழங்கியுள்ளான் என்பது சிந்திக்கத்தக்கது. 
நட்புக்கள் ஒரு மனிதனின் தனிப்பட்ட வாழ்விலும் கூட்டு வாழ்விலும் மிகபெரிய தாக்கங்களை உண்டு பண்ணக்கூடியது. "மனிதன் தன்னுடைய நண்பனின் மார்க்கத்தில் இருக்கிறான்" என்பது நபிமொழி (-அபு தாவூத்).
ஒன்றுபட்ட நற்பண்புகளை போலவே, பல வேளைகளில் ஒன்றுபட்ட தீய பண்புகளும் நட்புக்கு தூண்டுகோலாய் அமைகின்றன. நல்ல பழக்கவழக்கங்களை விட தீய பழக்கவழக்கங்களே விரைவில் ஒருவனிடமிருந்து இன்னொருவனிடம் தொற்றிக்கொள்ளும். இதை நாம் நடைமுறையில் காணமுடிகிறது. 
இது போன்ற கொடிய பாதிப்புக்களை மனதில் கொண்டே உம்மி நபி(ஸல்) அவர்கள் மேற்கண்ட உவமானத்தை நமக்கு கூறியுள்ளார்கள்.
(ABu Izza Eravur)

Monday, 13 October 2014

மனம் வீசும் புனித மவ்லீத் கிதாபுகளை உங்கள் கையடக்க தொலைபேசியில் பெற்றுக் கொள்ளலாம்

Play Store இல் Mowlid&dhikr என search செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்
kalmunai jamiaa Manbail Hidaya Arabic College



Description
This is our small effort for to give a best islamic mowlid and rathib to our islamic brother's and sister's
download it. may allah bless you all.
This app contains mowlid and ratheeb.They are,
subahana mowlid,
mohaideen mowlid,
kwaja mowlid,
hussainar mowlid,
baker alim mowlid, & dikir ,
burdha shariff,
magoos mowlid,
barjani mowlid,

jalaliya dhikr,
hammediya dhikr,
rasithiya dhikr,
tally counter with save & retrive option .
Feature's
best UI
page flip effect
title based
zooming faciity




Sunday, 12 October 2014

தமிழ் மொழியில் இஸ்லாம் Internet Radio 24 மணி நேர ஒலிபரப்புச் சேவை

மௌலவி M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி M.A
அவர்களின் சொற்பொழிவுகளை கொண்ட
தமிழ் மொழியில் இஸ்லாம் Internet Radio
Android apps வெளியிடப்பட்டுள்ளது. Play Store இல் tmislam என search செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். அல்ஹம்துலில்லாஹ்.
https://play.google.com/store/apps/details?id=com.yesstreaming.tmislam
kalmunai jamiaa Manbail Hidaya Arabic College