தயம்மும்
இச்சொல் “சுத்தம் செய்வதற்கு மண்ணை நாடுதல்”என்ற பொருளைத் தரும்.தண்ணீரை உபயோகிக்க இயலாத பொழுது மண்ணைக் கொண்டு முகம் மற்றும் கைகளை மஸ்ஹூ செய்வதற்கு இச்சொல் வழங்கப்படுகிறது. அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பனூ முஸ்தலிக் போரிலிருந்து திரும்பி வந்த பொழுது ”தாதுல் ஜைஷ்”என்ற இடத்தில் தங்கினார்கள்.
அருமை நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கனுடன் ஆயிஷா றழியல்லாஹூ அன்ஹா அவர்களும் சென்றிருந்தார்கள்.அவர்களின் கழுத்தணி அவ்விடத்தில் காணாமால் போனாதால் அங்கு இரவு முழுவதும் தங்க நேரந்தது.அப்பொழுது படை வீர்ர்களிடமிருந்த தண்ணீர் ழுழுவதும் தீர்ந்துவிட்டது.அதன் சுற்றுப் பகுதிகளிலும் நீர் கிடைக்க வில்லை.இதனைக்கண்ட படை வீரர்கள் அபுபக்ர் றழியல்லாஹூ அன்ஹூ அவர்களிடம் சென்று தங்களின் மகளால் இத்துயரம் ஏற்பட்டுள்ளது.என்று கூறினார்கள்.இதைக் கேட்டு கோபமுற்ற அபுபக்ர் றழியல்லாஹூ அன்ஹூ அவர்கள் தமது மகளாரிடம் சென்றனர்.அங்கு அண்ணலார் ஆயிஷா றழியல்லாஹூ அன்ஹா அவர்களின் மடியில் தலை வைத்த தூங்கிக் கொண்டிருந்ததை கண்டு தமது மகளை சைகயினால் ஏசினார்கள்.அருமை நாயகத்தின் தூக்கம் கலைந்து விடக்கூடாதென அஞ்சி ஆயிஷா நாயகி அவர்கள் அசையாது வீற்றிருந்தார்கள்.
அண்ணலார் விழித்தெழுந்த பொழுது தயம்மமுடைய திருவசனம் இறங்கியது
(நூல் புகாரி 334: ஆயிஷா (ரலி),முத்தா)
வேறு சில நிகழ்ச்சிகளின் போது இது இறங்கிதாக வேறு சில கருத்துக்களும் காணப்படுகின்றன.நீங்கள் நோயாளியாக அல்லது பயணத்தில் இருந்து உங்களில் எவரும் மலம்,ஜலம் கழித்தால் அல்லது பெண்களைத் தீண்டியிருந்தால்(தொழுகை நேரத்தில் சுத்தம் செய்வதற்கு)தண்ணீர நீங்கள் பெறாவிட்டால் தூய்மையான மண்ணைக்(உங்களின் கைகளினால் தொட்டு அதனைக்)கொண்டு உங்களின் முகங்களையும்,கைகளையும் மஸ்ஹூ செய்து கொள்ளுங்கள்.என்று தயம்ம்முமின் செயல் முறைகளை அல்லாஹூத்தாஆலா தெளிவாக்கியுள்ளான்.(5.6)
புமி முழுவதும் வணங்கும் இடமாகவும் அதணுடைய மண் தூய்மைப்படுத்தக் கூடிய பொருளாகவும் ஆக்கப்பட்டுள்ளது..என திரு நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்(நூல் புகாரி,முஸ்லிம்)
தண்ணீர் இல்லாவிடில் அல்லது நீர் இருந்தும் அது குடிப்பதற்கு தேவைப்பட்டால்,அல்லது வியாதியினால் நீரை உபயோகிக்க முடியாவிட்டால் தயம்மம் செய்து கொள்ளலாம்.
தொடரும்.....01







