السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Saturday 3 March 2018

இலங்கையின் முதல் இறை இல்லம்.


இலங்கையின் முதல் இறை இல்லம். 
இலங்கையின் முதல் இறை இல்லம் பேருவளை தர்கா நகர் சீனா துறை ஜும்ஆப் பள்ளி வாசல் என்றதொரு தகவலினை சோலை மலர் சொல்லியிருப்பதைக் காண முடிகிறது. ஆனாலும் அருமை நாயகம் முஜ்தபா ஸல்லல்லாஹ{ அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் காலத்தில் அவர்களாகவே தமது தோழர்களில் இருவரை இலங்கைக்கு அனுப்பி வைத்திருந்தார்கள் என்ற வரலாற்றுத் தகவலின்படி அருமைத் தோழர்கள் தங்களது வணக்க வழிபாடுகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக நிச்சயம் வணக்கஸ்தலங்களை அமைத்திருக்கவேண்டும். ஸஹாபாக்கள் இலங்கைக்கு வந்தடைந்த பின்னர் அப்பகுதி அரசன் அவர்களுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறார். தமது மார்க்கப் பணியினை மேற்கொள்வதற்கு முழுமையான ஆதரவும் வழங்கியிருக்கின்றார். 
காலி தலாப்பிடியா சோலை முஹ்யித்தீன் ஜும்ஆப் பள்ளி வாயில் கி.பி.1604ல் புனர்நிர்மாணம் செய்யப்பட்டபோது ஹிஜ்ரி 8-9-139 என்று எழுதப்பட்ட மீசான் கல் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டது. இதனடிப்படையில் இப்பள்ளிவாயில் இற்றைக்கு 1299 வருடங்கள் பழமையானது. 

இப்பள்ளிவாயில் 27-06-1986 ஆம் வருடம் மீண்டும் புனரமைப்புப் பணிகள் ஆரம்பமாயின. 03-03-1987ஆம் திகதி இப்புனரமைப்பு பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுக் கொண்டி ருக்கும்போது அதிசயச் சம்பவம் ஒன்று நடைபெற்றது. அதனை நேரில் கண்டவர் அப்பிரதேசத்தில் அமைந்துள்ள இஸ்லாமிய இளைஞர் முன்னணிää ஜனாப் எம்.எச்.எம். வஹாப் (சமாதான நீதிபதி) முன்னிலையில் விசாரித்து பதிவு செய்து கொண்டது. அந்த நிகழ்வு வருமாறு.
பள்ளியின் மிகப் பழைய இடங்களில் ஒன்றான மிம்பரை உடைப்பதற்காக கையில் இருந்த ஆயுதத்தினால் அடித்தேன். அப்போது அதை உடைக்காதே என்றதொரு சப்தம் கேட்டது. அதேநேரம் எனது கையில் இருந்த ஆயுதத்தினை அவர் பறித்தும் எடுத்தார். பிரம்பால் என்னை அடிக்கத் தொடங்கினார். தாடியுடன் காணப்பட்ட அவர் நீண்ட வெள்ளை நிற ஆடை அணிந்திருந்தார். பின்னர் அவர் மறைந்துவிட்டார். (சோலை மலர்)

இதுää இலங்கையை வந்தடைந்த அருமைத் தோழர்களான ஸஹாபாக்களுடன் தொடர்புபட்ட இடம் என்று சொல்லப்படுகிறது. அதன் அடிப்படையில் இந்தப் பள்ளி வாயில் இலங்கையின் முதல் பள்ளியெனலாம். இதன் அடிப்படையில் இப்பள்ளி வாயில்  1436 ஆண்டுகள் பழமை வாய்ந்த பள்ளியென்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் முதல் இறை இல்லம்.
அதன் உண்மையான புகைப்படம் இல்லை