السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Tuesday 10 April 2018

ஒட்டமன் ஆட்சி வீழ்ந்து இன்றோடு 94 வருடங்கள்



ஒட்டமன் ஆட்சி வீழ்ந்து இன்றோடு 94 வருடங்கள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இன்றோடு இஸ்லாத்தின் வீரம் மிக்க ஒட்டமன் சக்ராதிய இராஜ்ஜியம் வீழ்ந்து 94 வருடங்கள் ஆகின்றன. காட்டிக்கொடுப்புகளாலும் துரோகங்களாலும் மேற்கத்திய நாடுகளின் வஞ்சனைகளாலும் எமது ஆட்சி கைமாறி யஹூதி கைகூலிகளுக்கு ஆகியது. 

ஒட்டமன் கடைசி கலீபா- இஸ்லாத்தின் 101வது கலீபா இரண்டாம் அப்துல் மஸீத் அவர்கள், தன் மாளிகையில் புனித திருக்குர்ஆனை ஓதிக்கொண்டிருக்கும்போது கைது செய்யப்பட்டார்கள். துருக்கியலிருந்து 1924 மார்ச் 3ந்திகதி பிரான்ஸ் நாட்டுக்கு மனைவி மக்களோடு நாடு கடத்தப்பட்டார்கள். அவர்கள் மாளிகையின் திறைச்சேரி, மக்களின் சேவைக்காக முத்து, மாணிக்க, மரகதம், தங்கத்தால் நிரம்பி இருந்தது. அத்தனையும் அபகரிக்கப்பட்டு வெறும் 2000 பவுண்கள் மாத்திரம் இவர்களின் வழி செலவுக்கு கொடுக்கப்பட்டது.

மறுநாள் பத்திரிகைகள் ஒட்டமன் இராச்சியம் - உஸ்மானிய பேரரசு அழித்தொழிக்கப்பட்டதாக செய்தி வெளியிட்டன. ஆங்காங்கே சில குழப்பங்கள் ஏற்பட்டு அடக்கப்பட்டன. ஒட்டமன் ஆட்சி வீழ்ந்தது.

இரண்டாம் அப்துல் மஸீத் மேற்குலக நாடுகளில் அமைதியாக வாழ்ந்து 1944ம் ஆண்டு பிராஸில் மரணித்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி’ஊன். ஒரு கலீபாவின் உடல் ஒரு கிறிஸ்தவ நாட்டில் அடக்கப்படக் கூடாது என்பதற்காக, மதீனா ஜென்னத்துல் பக்கிக்கு எடுத்துவரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

அவர்களின் கடைசி ஜும்ஆ தினத்தின்போது எடுத்த படத்தையே கீழே காண்கிறீர்கள்.