السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Friday 22 May 2015

புனித பராஅத் இரவின் சிறப்புக்கள்

இதற்கு மூன்று விதமான சிறப்புகள் இருக்கிறது
1, இது ஷ/பான் மாதத்தின் நோன்பு. பொதுவாக, “நாயகம் (ஸல்) அவர்கள் ரமழானுக்கு அடுத்து ஷ/பானில் தான் அதிகம் நோன்பு பிடிப்பார்கள். சில சமயம் ஷ/பான் முழுதும் நோன்பு வைப்பார்கள்” புகாரி: 1969 முஸ்லிம்: 1156
“ரமழானையும் ஷ/பானையும் தவிர தொடர்ந்து இரண்டு மாதம் நபி (ஸல்) அவர்கள் நோன்பு வைக்க நான் பார்த்ததில்லை” என்று உம்மு ஸல்மா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் திர்மிதி: 1836
ஷ/பானில் நீங்கள் நோன்பு பிடிக்கும் அளவு மற்ற மாதங்களில் நீங்கள் நோன்பு வைக்க நான் பார்த்ததில்லையே? என, உசாமா (ரலி) அவர்கள் கேட்டபோது, “ரஜபுக்கும் ராமழனுக்கும் இடையில் இருக்கும் இந்த (ஷ/பான்) மாத(த்தின் மகத்துவ)த்தை மக்கள் உணராமல் உள்ளனர். இது அகில உலக இரட்சகனிடம் அமல்கள் உயர்த்தப்படும் ஒரு மாதம். நான் நோன்பளியாக இருக்கும்போது எனது அமல்கள் உயர்தப்படுவதை நான் விரும்புகிறேன்”. என உத்தம நபி (ஸல்) அவர்கள் பதில் அளித்தார்கள். நசயி: 201/4.

2, இது அய்யாமுல் பீழுடைய (13, 14, 15, ஆகிய வெளுப்பு) நாட்களில் ஒன்று. இந்த மூன்று தினங்கள் நோன்பு பிடிப்பது சுன்னத் ஆகும். “ஒவ்வொரு மாதமும் (இந்த) மூன்று தினங்கள் நோன்பு பிடிப்பது காலமெல்லாம் நோன்பு வைப்பதாகும்” நபிமொழி புகாரி: 1979. முஸ்லிம்: 1159. “நாயகம் (ஸல்) அவர்களின் இந்தக் கருத்தை மெய்ப்பிக்கும் வசனத்தை குர்ஆனில் அல்லாஹ் இறக்கினான்” என்று அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். “எவரேனும் ஒரு நன்மையைச் செய்தால் அவருக்கு அதைப்போல் பத்து பங்கு (நன்மை) உண்டு. (அல் குர்ஆன் 6:160).

(அதாவது 3 X10 = 30 X 12 = 360) (திர்மிதி: 762 நசயி: 219/4)

3, பராஅத் நோன்பு. நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்., “ஷ/பான் 15-வது இரவு வந்தால் நின்று வணங்குங்கள், அதன் பகலில் நோன்பு பிடியுங்கள்” (இப்னு மாஜா: 1388)

இப்படி, சாந்த நபி (ஸல்) அவர்கள் முழுமையாக அல்லது அதிகமாக நோன்பு வைக்கும் ஷ/பான் மாதத்தின் வெளுப்பு தினமான 15ல் வரும் பராஅத் நோன்பு பொதுவாகவும் குறிப்பாகவும் நோன்பு வைப்பது ஏற்றம் நிறைந்த நபி மொழியும் வழியும் ஆகும்.

பராஅத் இரவின் மகிமையைப் பற்றி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் ஷஃபான் மாதத்தினுடைய சரிபாதியின் இரவாகிய இந்த இரவில் என்னென்ன இருக்கின்றது என்று உங்களுக்குத் தெரியுமா? என்று என்னைப் பார்த்து கேட்டார்கள். அந்த இரவில் என்ன இருக்கின்றது நாயகமே! என்று நான் கேட்டேன். அப்போது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: 

இந்த இரவில்தான் இந்த வருடத்தில் பிறக்கவிருக்கின்ற குழந்தைகள், இந்த வருடத்தில் இறக்கவிருக்கின்ற மனிதர்கள் பற்றிய விபரங்களை எழுதப்படுகின்றது. 
மேலும் இந்த இரவில்தான் அவர்களின் அமல்கள் உயர்த்தப்படுகின்றது. இந்த இரவில்தான் அவர்களின் உணவுகளும் இறக்கி வைக்கப்படுகின்றது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்.

அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

மிஷ்காத் 1305 






Mailof Islam's photo.







  • பராஅத் இரவின் அமல்கள் கூடுமா கூடாதா?
  • 1/2 Tamil Bayan-Pavam Pokkum Barath Iravu
  • 2/2 Tamil Bayan-Pavam Pokkum Barath Iravu
  • பாவம் போக்கும் பராஅத் இரவு 1/3
  • பராஅத் பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு தக்கபதிலடி
  • பராஅத் இரவு பயான் நிகழ்ச்சி
  • ஷஃபான் மாதத்தின் பராஅத் நோன்பு 12/06/2014

  •