#சூரா_யாஸீனும்_பராஅத்_துஆவும்
இன்றைய இந்த புனிதமிக்க நாளை தவறவிடாமல் நற்காரியங்களை செய்து பராஅத் இரவை வணக்கங்களால் உயிர்ப்பிப்போமாக!!
#மூன்று_யாஸீன்_ஓதுதல்...
காரணம் பராஅத்துடைய இரவு துஆக்கள் அங்கீகரிக்கப்படும் இரவு, தேவைகள் நிறைவேற்றிக்கொடுக்கப்படும் இரவு,பாவமன்னிப்பு வழங்கப்படும் இரவு....
இவைகளை மையக்கருவாக கொண்டு நடைமுறையில் இருப்பது தான் மூன்று யாஸீன் ஓதுதல்...
யாஸீன் சூராவை ஒரு முறை தான் ஓதினாலும் அவர் குற்றவாளி அல்ல...முப்பது முறை ஓதினாலும் குற்றவாளியல்ல...மாற்றமாக ஓதுபவருக்கு ஒவ்வொரு எழுத்து வீதம் நன்மை வழங்கப்படும்..அல் குர்ஆன் ஓதலை கேட்டுக்கொண்டு இருப்பவருக்கும் நன்மை வழங்கப்படும் அது தான் அல் குர்ஆன் என்பது மறுமை வரை அழியாத ஓர் அற்புதம்..
1-ஸாலிஹான நல் வணக்கவழிபாடுகளுடன் வாழ் நாள் அதிக்கரிக்க வேண்டி ஓர் நிய்யத் வைத்து ஒரு முறை சூரா யாஸீன் ஓதிய பின் பராஅத்துடைய துஆ ஓதப்படல் வேண்டும்..வாழ் நாள் அதிகரிப்பு என்ற எண்ணம் வைக்க காரணம் இந்த பராஅத்துடைய இரவில் தான் ஒரு மனிதனுடைய பட்டோலை புதுப்பிக்கப்படுகிறது.மாற்றப்படுகிறது.
2-வரக்கூடிய ஆபத்துக்களை விட்டும்,சோதனைகளை விட்டும் பாதுகாப்புத் தேடுவதை நிய்யத் வைத்து ஒரு யாஸீன் ஓதி பின் பராஅத் துஆவை ஓதப்படல் வேண்டும்..
3- மக்களிடம் தேவையற்றவனாக இருக்க வேண்டும்,அல்லாஹ் ரிஸ்க்கை விஸ்தீரணமாக்க வேண்டும் என்ற நிய்யத் வைத்து ஒரு யாஸீன் ஓதி பின் பராஅத்துடைய துஆ ஓதப்படல் வேண்டும்..
ஹதீஸ்களையும் ஹதீஸ் கலை அடிப்படை சட்டங்களையும் அல் குர்ஆனுடைய விளக்கங்களையும் தொகுத்து தந்த இமாம்களை மதிக்காமல் அவர்களுக்கு தேவையாகும் போது ஹதீஸ் ஸஹீஹ்,ழயீப் என்று ஊழையிடும் நரக நாய்களான வஹ்ஹாபிஷ கர்ணிகளுக்கு இவைகள் ஒரு போதும் பலனை கொடுக்காது...
மேற்குறித்த தகவல் #முஜர்ரபாதுத்_தைரபியில்_கபீர் என்ற நூலில் பக்கம் 20 ல் இமாம் அஹ்மத் அத் தைரபி ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்..
அதே போல் மக்காவைச் சேர்ந்த #முப்தில்_ஹரமைன் என்று போற்றப்பட்ட #ஸைனி_தஹ்லான் ரஹ்மஹுல்லாஹ் அவர்களின் மாணவர் இமாம் அப்துல் காதிர் குத்ஸ் அல் மக்கி ஷாபிஇ ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் தங்களுடைய
كنز النجاح والسرور
#கன்ஸுன்_நஜாஹி_வஸ்_ஸுருர் என்ற நூலில் பக்கம் 165 ல் பதிவு செய்திருக்கிறார்கள்..
ஹரம் ஷரீபில் 30 வருடங்களாக பாடம் நடத்தியவர்கள்..ஜன்னதுல் முஅல்லாவில் நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்...
அதே சமயம் சூரா யாஸீன் குறித்து ஏகப்பட்ட ஹதீஸ்கள் இடம் பெருகிறது.யாஸீன் சூராவின் அகமியங்கள் குறித்து தனியாக கிதாபுகளே எழுதப்பட்டுள்ளது..சூரா யாஸீன் எந்த தேவை குறித்து இஃலாஸான நிய்யத்தோடு ஓதப்படுகிறதோ அந்த தேவை நிறைவேற்றப்படும்...
#பராஅத்_துஆ
கீழே அந்த துஆவை இணைக்கிறேன்.சூரா யாஸீனையும் பராஅத் துஆ இன்னும் பல சூராக்கள், துஆக்கள்,ஸலவாத்துகள் என்பவைகளை பொதிந்த சிறிய தொகுப்பு நம்முடைய நாட்டில் மட்டும் அல்ல அது உலகெங்கும் பரவலாக உண்டு..அது இலகுக்காகவே தவிர வேறில்லை..ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்படி சிறு தொகுப்பாக வெளியிட்டார்களா.?என்று வஹ்ஹாபிஷ யூத ஏஜன்ட் பேசுகிறான் என்றால் அவனுக்கு எவ்வளவு அறிவு,ஆய்வுத்திரன் ஸுப்ஹானல்லாஹ்....
கீழே இணைக்கப்பட்ட பராஅத் துஆ எகிப்து கைரோவில் வெளியிடப்பட்ட சிறு தொகுப்பு....
இந்த பராஅத்துடைய துஆ என்பது ஸஹாபியே ரஸுல் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் ஓதிய துஆ..மட்டுமல்ல அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் சொன்னார்கள் ""யார் இதை ஓதுகிறார்களோ அவருக்கு அல்லாஹ் வாழ்க்கையில் விசாலத்தை கொடுப்பான்..அதாவது அவனுடைய வாழ்க்கையில் பரகத்தையும்,ரிஸ்கில் விஸ்தீரணத்தையும் கொடுப்பான்..
அதனால் தான் பராஅத்துடைய இரவில் பட்டோலை புதுப்பிக்கப்படுவதால் மேற்கூறிய நிய்யத்துக்களை வைத்து யாஸீன் ஓதீ குறிப்பிட்ட அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் ஓதிய இந்த துஆவை பராஅத்துடைய இரவில் ஓதப்படுகிறது..
இந்த செய்தி எந்த கிதாபில் இடம் பெருகிறது தெரியுமா..?வஹ்ஹாபிஷ விஷ ஜந்துக்களே இந்த கிதாப் பார்ப்பது இருக்கட்டும் கேள்விப்பட்டாது இருப்பீர்களா..??
அபீ அப்துர் ரஹ்மான் முஹம்மத் இப்னு புழைல் இப்னு ஙஸ்வான் அல் ழப்பயி ரஹ்மஹுல்லாஹ் அவர்களுடைய
#கிதாபுத்_துஆ என்ற நூலில் பக்கம் 217, 218 ல் பதிவு செய்கிறார்கள்..
இவர்கள் இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ்மஹுல்லாஹ் அவர்களால் உறுதிப்படுத்தப்பட்ட ஹதீஸ்களை அறிவிக்கக்கூடியவர்கள் தான் இவர்கள்...
ஹிஜ்ரி 195 ல் வபாத் ஆனார்கள்..
ஹிஜ்ரி 140, 149 ல் வபாத் ஆனார்கள் என்ற கருத்தும் உண்டு..
இப்னு ஹஜர் அஸ்கலானி ரஹ்மஹுல்லாஹ் ,யஹ்யா இப்னு மயீன் ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் எல்லாம் இவர்களை உறுதியானவர் என்று சொல்லப்பட்டவர் தான் இந்நூலுக்குரியவர்கள்..
ஒரு வழியை திறந்து தருகிறேன்...
இவர்கள் ஷீஆ என்ற ஓர் விமர்சனம் உண்டு.... வஹ்ஹாபிஷ விஷமிகளே! முடியுமானால் இதையாவது தூக்கிட்டு வாங்க பேசலாம்...
எனவே நரக நாய்களான வஹ்ஹாபிகளின் பேச்சைக் கேட்டு உங்கள் நேரங்களை வீணாக்காமல் உங்கள் ஈமானை இழக்காமல் இன்றைய சிறப்புமிக்க பராஅத்துடைய இரவை வணக்கங்களால் உயிர்பிப்போம்...
மௌலவி நிஸ்வர் பாதிபி காதிரி
+94 77 444 77 57














