
ஒரு கிராமத்தில் ஏழை விவசாயி ஒருவன் இருந்தான். அவனுக்கு பக்கத்து வீட்டில் ஒரு வேட்டைக்காரனும் வசித்து வந்தான்.வேட்டைக்காரனிடம் அவன் வேட்டைக்கு பயன்படுத்தும் வேட்டை நாய்கள் சில இருந்தன. வேட்டைக்காரனின் நாய்கள் அடிக்கடி வேலி தாண்டி சென்று அந்த விவசாயியின் ஆட்டுக்குட்டிகளை துரத்துவதும் கடித்து குதறுவதுமாக இருந்தன.இதனால் வருத்தமுற்ற விவசாயி, தன் அண்டை வீட்டுக்காரனான வேட்டைக் காரனிடம், "உன் நாய்களை கொஞ்சம் கட்டிப்போட்டு வைத்துக்கொள்; அவை அடிக்கடி...