السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Wednesday, 18 March 2015

ஞானக் கடலோசை” நாஹூர் நாயகம் என்ற நூல் வெளியீடு

கல்முனை அஸ்டோ அமைப்பின் அனுசரனையுடன் எஜமான் நாகூர் சாஹுல் ஹமீது வலியு்ல்லாஹ் நாயகம் அவர்களின் 193 ஆவது கொடியேற்று விழாவை முன்னீட்டு எதிர்வரும்
20-03-2015 வெள்ளிக்கிழமை கலைமாமணி , சமூக தீபம் திருமதி பாத்திமா நஸீறா அலி எழுதிய ” ஞானக் கடலோசை” நாஹூர் நாயகம் என்ற நூல் வெளியீடப்படவுள்ளது...
நூல் தேவைப்படுவோர்-
0772480700, 0772240924

ஞானக் கடலோரம்” நாஹூர் நாயகம் என்ற நூல் வெளியீட

TNTJவை சேர்ந்த கேடு கெட்டவன் பேசுவதை கேளுங்கள்!!

நம் உயிரிலும் மேலான கண்மணி நாயகம் ரசூலே கரீம்(ஸல்)அவர்களை குழப்பவாதி என்று சொல்லும் TNTJவை சேர்ந்த கேடு கெட்டவன் பேசுவதை கேளுங்கள்!!!அதற்கு பதில் தரும் வகையில், பேராசிரியர்:S.சைபுத்தீன் ரஷாதி ஹழ்ரத்,அவகளின் அனல் பறக்கும் உரை ...
TNTJவை சேர்ந்த கேடு கெட்டவன் பேசுவதை கேளுங்கள்!!


TNTJவை சேர்ந்த கேடு கெட்டவன் பேசுவதை கேளுங்கள்!!

அல்லாஹ்வே நடத்திய அற்புதத் திருமணம்



திருமணம் என்பது ஆதி காலம் முதலே
நடைபெறுகின்ற ஒரு தொடர் நிகழ்ச்சி.

அதற்கு பெண் வீட்டார், மணமகன்
வீட்டார் ஆகிய இரு குடும்பத்தினரும்
கலந்த பேசி உடன்பாடு ஏற்படுவது
ஏற்படுவது வழக்கம்.

ஆனால், அல்லாஹ்வே வலீயாக
இருந்து நடத்திய திருமணம்
நபி பெருமானார் ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்க்கையில் நடைபெற்றது.

தம்முடைய தந்தையின் சகோதரி
‘உஸைமா’என்பாரின் மகள் ஸைனப்
(Zainab) ரளியல்லாஹு அன்ஹா
அவர்களை, அதாவது தமது சொந்த
மாமிமகளை, முதன் முதலாக பெருமானார்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் தமது வளர்ப்பு மகனான
ஸைதுப்னு ஹாரிஸா ரளியல்லாஹு
அன்ஹு அவர்களுக்கு நிகாஹ் செய்து
வைத்தார்கள்.

ஆம்! நபி ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அவர்கள் தமது வளர்ப்பு
மகனாகிய ஸைதை மண முடித்துக்
கொள்ளுமாறு ஸைனபிடம் கேட்டார்கள்

ஒரு முன்னாள் அடிமை என்பதாலும்,
தான் குரைஷி குலத்தைச் சேர்ந்தவர்
என்பதாலும் அவரைத் திருமணம்
செய்ய ஸைனப் ரளியல்லாஹு அன்ஹா
முதலில் மறுத்து விடுகிறார்கள்.

உடன் பின் வரும் இறை வசனம்
இறங்கியது;''அல்லாஹ்வும் அவனது
தூதரும் ஒரு காரியத்தைப் பற்றிக்
கட்டளையிட்டு விட்டால்,
அவர்களுடைய அக்காரியத்தில்
வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு
ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ,
பெண்ணுக்கோ உரிமையில்லை.
ஆகவே அல்லாஹ்வுக்கும் அவனுடைய
தூதருக்கும் எவரேனும் மாறு செய்தால்
நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான
வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்.''
(அல்குர்ஆன்33:36)

இந்த வசனம் அருளப்பட்ட பிறகே
ஸைனப் ரளியல்லாஹு அன்ஹா
அவர்கள் ஸைதைத் திருமணம்
செய்ய சம்மதித்தார்கள்.
(இப்னு ஜரீர், இப்னு கஸீர்)

மிகவும் உயர்ந்த குலம் என்று
பெருமை பாராட்டிய தமது குலத்துப்
பெண்ணை–தமது மாமி மகளை
ஒரு அடிமைக்குத் திருமணம்
செய்து வைப்பதென்பது அன்றைய
சமூக அமைப்பில் கற்பனை செய்தும்
பார்க்க முடியாததாகும்.

ஆனால், சிறிது காலம்தான் வாழ்ந்தார்கள்;
மணவேற்றுமையால் வாழ இயலவில்லை.
ஸைது (Zaid) ரளியல்லாஹு அன்ஹு
அவர்கள் அவ்வம்மையாருக்கு
‘தலாக்’என்னும் திருமண முறிவு
சொல்லியபின் ,அம்மையாரின்‘
இத்தா ’காலம் முடிந்தவுடன் ஹிஜ்ரி5ஆம்
ஆண்டு துல்கஃதா மாதம்,
ஸைனப் ரளியல்லாஹு அன்ஹா
அவர்களை தான் திருமணம் செய்து
கொள்வதாக பெருமானார்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் தூதுவரை அனுப்பினார்கள்.

தூதுவர் ஸைனப் ரளியல்லாஹு
அன்ஹா அவர்களிடம் செய்தியைக்
கூறியபோது அதற்கு அவர்கள்,
‘நான் என் ரப்பிடம் (என்னை
படைத்தவனிடம்) ஆலோசனை
செய்யாமல் பதில்கூறமாட்டேன்’
என்று சொல்லி விட்டார்கள்.

பின்னர் உளூ செய்து, தொழுகைக்காக
தக்பீர் கட்டிவிட்டார்கள்.
அவர்களின் உள்ள உறுதியினால்
அல்லாஹு தஆலாவே ஸைனப்
ரளியல்லாஹு அன்ஹா அவர்களை,
ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அவர்களுக்கு திருமணம்
செய்து வைத்ததாகக் கூறி
திருக்குர்ஆனில் ஒரு வசனத்தையும்
இறக்கி வைத்துவிட்டான்.


ஆம்! அந்த திருவசனம் இதுதான்:
‘எனவே, ஸைது, அப்பெண்ணிட
மிருந்து தலாக்கை நிறைவேற்றிக்
கொண்டபோது, நாம் அவரை உமக்கு
திருமணம் செய்து கொடுத்தோம்’
(அல்குர்ஆன்:33:37)

ஸைனப் ரளியல்லாஹு அன்ஹா
அவர்களை, பெருமானார்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்களுக்கு நிகாஹ் செய்து
வைத்தது பற்றிய ஆயத்து இறங்கிய
நற்செய்தியை ஒருவர் அவரிடம்
அறிவித்தபோது, செய்தியைக்
கொண்டுவந்த அம்மனிதருக்கு
தாங்கள் அணிந்திருந்த நகைகளைக்
கழட்டி, அன்பளிப்பு செய்துவிட்டு,
உடனே ஸஜ்தாவில் வீழ்ந்து
நன்றி தெரிவிக்கும் முகமாக
இரண்டு மாதம் நோன்பு இருப்பதாக
நேர்ச்சை செய்து கொண்டார்கள்.

நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்
அவர்களுக்கு மற்றுமுள்ள எல்லா
மனைவியருடைய திருமணங்களும்
அவர்களின் உறவினர்களால்
நடத்தி வைக்கப்பட்டது.

ஆனால் ஹளரத் ஸைனப் ரளியல்லாஹு
அன்ஹா அவர்களின் திருமணம்
மட்டும் வானத்தில் அல்லாஹ்வினால்
நடத்தி வைக்கப்பட்டது.
இது உலகத்தில் எவருக்கும் கிடைக்காத
தனிப்பெரும் சங்கையாகும்.

இந்த மகத்தான சிறப்பு ஸைனப்
ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு
எப்படி கிடைத்தது?
அசைக்க முடியாத இறை
நம்பிக்கையால்தான்.
அல்லாஹ் மகிழ்வுற்றான்.
ஹளரத் ஸைனப்
ரளியல்லாஹு அன்ஹா
அவர்களும் மகிழ்வுற்றார்கள்.
நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்
அவர்களும் மகிழ்ச்சியல் இருந்தார்கள்.

அதற்காக மற்ற எந்த
திருமணத்திற்கும் நடந்திராத
மிகப்பெரிய வலிமா
விருந்தை நடத்தினார்கள்.

நான் என் ரப்பிடத்தில் கேட்டுச்
சொல்கிறேன் என்று அல்லாஹ்வை
முன்னிலைப் படுத்தியதால் அல்லாஹ்
மிகவும் மகிழ்வுற்று தானே
திருமணத்தை நடத்தி வைத்தான்.

நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்
அவர்கள் பெண் கேட்டு தூதுவரை
அனுப்பியபோது, தானாகவே
பதில் கூறாமல், ஒரு நபியை திருமணம்
செய்கிற மனப்பக்குவம் தனக்கு
இருக்கிறதா என்று தன் ரப்பிடம்
ஆலோசனை பெற்று அதன் பின்
மறுமணத்திற்கு ஒப்புக் கொண்டார்கள்.

அல்லாஹ்விடமிருந்து நற்செய்தி
வந்ததை அறிந்தவுடன் இரண்டு
மாதங்கள் நோன்பு பிடிப்பதாக
அவர்கள் நேர்ச்சை செய்து கொண்டதன்
மூலம் அவர்கள் எந்த அளவுக்கு
இந்த திமணத்தை ஆவலோடு
எதிர்பார்த்து இருந்திருக்கிறார்கள்
என்பதும், அவ்வாறு ஆவலோடு
இருந்தபோதும் அல்லாஹ்விடமிருந்து
பதில் வரவேண்டும் என்று அவர்கள்
காத்திருந்ததும் ஸுப்ஹானல்லாஹ்,
அல்லாஹ்வின் மீது அவர்களுக்கிருந்த
அசைக்க முடியாத இறைநம்பிக்கை
வெளிப்படுத்துகிறது.

நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்
அவர்கள் ஸைனப் ரளியல்லாஹு
அன்ஹா அவர்களை திருமணம்
செய்த போது ஸைனப் ரளியல்லாஹு
அன்ஹா அவர்களுடைய வயது
முப்பத்தி ஐந்து (பார்க்க அல் இஸாபா)

Tuesday, 10 March 2015

வஹ்ஹாபிகளுக்கு எதிரான மட்டக்களப்பு விவாதம் மாபெரும் வெற்றி

இலங்கையில் மட்டக்களப்பில் முஸ்லிம்களுக்கும் வஹாபிகளுக்கும் இடையில் 05,07,08 - 03 - 2015 ஆகிய மூன்று தினங்கள் நடைபெற்ற இஸ்லாமிய கொள்கைக்கு வெற்றி கிடைத்த விவாதத்தின் முழு வீடியோக்களையும் Eravur Yoosuf Musthafi என்ற இணையத் தளத்தில்  இப்போது பார்க்கலாம். 

https://www.youtube.com/user/YOOSUF6/videos

  1. அல்லாஹ் எங்கே உள்ளான் 05 -03- 2015 விவாதம்
  2. வஸீலா தேடுவதைப் பற்றி இஸ்லாமிய ஷரீஆவின் தீர்வு என்ன 01
  3. வஸீலா தேடுவதைப் பற்றி இஸ்லாமிய ஷரீஆவின் தீர்வு என்ன 02
  4. வஸீலா தேடுவதைப் பற்றி இஸ்லாமிய ஷரீஆவின் தீர்வு என்ன 03
  5. கழா தொழுகை உண்டா, இல்லையா 08- 03 -2015- பகுதி- 01 
  6. கழா தொழுகை உண்டா, இல்லையா 08- 03 -2015- பகுதி- 02
  7. மட்டகளப்பு விவாதத்தில் ஸஹ்ரான் செய்த பித்தலாட்டங்கள்
  8. வஹ்ஹாபிகளின் தொடர் தோல்விகள்
  9. விவாத இறுதியில் சுன்னத் ஜமாத்தினரின் தக்பீர் முழக்கமும்  வஹாபிகளின் கூச்சலும்




காத்தான்குடி

Friday, 2 January 2015

இறுதி நபியின் நாட்களும் விருப்பங்களும்

இறுதி நபியின் நாட்களும் விருப்பங்களும்

மரணம் என்பது நிச்சயமானது. அதிலிருந்து எந்த உயிரினத்தாலும் தப்பித்துக்கொள்ள முடியாது. நாம் வாழும் காலம் குறுகியது. என்று தெரிந்து கொண்ட பிறகும் மரணம் பற்றிய சிந்தனையையும் அதன் பிறகுள்ள நிகழ்வுகள் பற்றியும் கவனக் குறைவாக அதனை மறந்தவர்களாக மனிதன் வாழ்ந்து கொண்டிருப்பது வருந்தத்தக்க விடயமாகும்.
ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது. நீங்கள் எங்கிருந்தாலும் உங்களை மரணம் வந்து சேரும் இந்த ஆத்மாவும் அதனுடைய மரண நேரம் வந்துவிட்டால் பிற்படுத்தப்படுத்தப்பட மாட்டாது. முற்படுத்தப்படவுமாட்டாது. நபியே நிச்சயமாக நீரும் மரணிக்கிவாதாம் இன்னும் நிச்சயமாக அவர்களும் மரணிக்கிறவர்கள்தாம் இவ்விறை வசனங்கள் மரணத்திலிருந்து எந்தவொரு ஆத்மாவும் தப்பித்துக்கொள்ள முடியாதென்று கூறிக்கொண்டிருக்கின்றது.
அல்குர் ஆனின் 31 ஆம் அத்தியாயத்தின் 34 ஆம் வசனத்தில் எந்தவொரு ஆத்மாவும் எந்த பூமியில் மரணிக்கும் என்றும் அறிய முடியாதென்ற அல்லாஹ்வின் கூற்றுக்கு பின்வரும் கருத்துக்கள் மாற்றமானதாக இருப்பதாக சந்தேகிக்கத் தேவையில்லை. இந்த அத்தியாயத்தில் கூறப்பட்ட விடயங்களை அல்லாஹ் தன்னுடைய அடியார்களில் தான் விரும்புபவர்களுக்கு தெரிவிப்பதுண்டு. அவன் தெரிவித்த அளவுக்கு அவர்கள் தெரிந்து கொள்வார்கள். அதற்கு மேல் அவர்களால் தெரிந்து கொள்ள முடியாது. மேலும் இறைவனால் அறிவிக்கப்பட்ட பிறகே அவர்கள் அறிவதால் இவற்றை அவர்கள் சுயமாகத் தெரிந்துகொண்டதாக கூறவும் முடியாது.
புகாரியில் 4435, 4436, 4437, 4463, 4586, 6348, 6509 ஆகிய இலக்கங்களில் பதிவாகியுள்ள நபிமொழி பின்வருமாறு நபிமார்களுடைய மரணம் பற்றி அறிவித்துக் கொண்டிருக்கிறது.
அதாவது உலக வாழ்வு மறுமை வாழ்வு ஆகிய இரண்டில் தாம் விரம்பியதை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வாய்பபு வழங்கப்படாமல் எந்த இறைத் தூதுவரும் இறப்பதில்லை என்று நான் நபியுல்லாஹி முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் சொல்ல செவியுற்றேன் என்ற அன்னை ஆயிஷா ரழியல்டலாஹு அன்ஹா அன்னவர்களின் அறிவிப்பு நபிமார்களிடம் அவர்கள் ஆத்மாவைக் கைப்பற்றுவதற்கான உத்தரவைப் பெற்றதையடுத்தே அவர்கள் யாவரும் மரணிக்கின்றார்கள் என்ற செய்தியை சொல்லிக் கொண்டிருக்கிறது.
இன்னும் வானவர் ஜிப்ரீல் என்னை ஒவ்வொரு ஆண்டும் ஒரு முறை குர்ஆனை ஓதச் செய்து வந்தார்கள். இந்த ஆண்டு மட்டும் அவர்கள் என்னை அதை இரண்டு முறை ஓதச் செய்தார்கள். என் வாழ் நாள் முடியும் நேரம் வந்துவிட்டதைக் குறிப்பதாகவே அதைக் கருதுகின்றேன் என தன் புதல்வி பாத்திமா அலைஹஸ்ஸலாம் அவர்களிடம் கூறியதாக புகாரியின் 3624 ஆம் இலக்கத்தில் பதிவாகியுள்ள நபிமொழி நபிமார்களுக்கு அவர்களின் வாழ் நாள் முடியும் நேரம் நெருங்கிவிட்டதை முன்கூட்டியே அறிவிக்கப்படுகின்றது என்ற தகவலைத் தந்து கொண்டிருக்கிறது.
ஸபர் மாத இறுதி வார நாட்களில் ஒருநாள் உம்முல் முஃமினீன் அன்னை மைமூனா ரழியல்லாஹு அன்ஹா அன்னவர்களின் இல்லத்தில் தங்கியிருக்கும் சந்தர்ப்பத்தில் அல்லாஹ்வின் உத்தரவின் பிரகாரம் இரவு வேளையில் தன் அடிமை ஒருவருடன் ஜன்னதல் பகீஃ அடக்கஸ்தளத்திற்குச் சென்று அங்கு நல்லடக்கம் செய்யப்பட்டவர்களுக்காக தூஆப் பிரார்த்தனை செய்துவிட்டு வீடு திரும்பும்போது நபியவர்களுக்கு காய்ச்சலும் தலை வலியும் ஏற்படத் துவங்குகிறது. இதுவே நபியவர்களுக்கு ஏற்பட்ட இறுதி நோயாகும் என்பதனை நபியவர்கள் அறிந்திருந்தார்கள். அத்துடன் தன் மகளார் பாத்திமா அலைஹஸ்ஸலாம் அவர்களுக்கு அதனை அறிவித்துக் கொடுத்திருந்ததாக பின் வரும் நபி மொழி கூறுகிறது. அதாவது
நபியுல்லாஹ் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் எந்த நோயில் இறையடி சேர்ந்தார்களோ அந்த நோயில் தம் மகள் பாத்திமா அலைஹஸ்ஸலாம் அவர்களை அழைத்து எதையோ இரகசியமாக அவர்களிடம் கூறினார்கள். இது பற்றி உம்முல் முஃமினீன் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா வினவியதற்கு தனக்கு ஏற்பட்டிருந்த நோயின் வலியிலேயே தாம் மரணிக்க இருப்பதாக நபியவர்களின் மரணத்தின் பின்னர் கூறியிருந்தார்கள். புகார் 3626.
அத்துடன் தன்னுடைய குடும்ப அங்கத்தவர்களில் நீங்கள்தான் என்னை முதலில் வந்தடைபவர் என்று தம் மகளாரிடம் கூறியதாகவும் புகாரியின் 3624 ஆம் இலக்க நபி மொழி அறிவித்துக்கொண்டிருப்பதைக் காண முடிகிறது.
இறைத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் கடுமையாக நோய்வாய்ப்பட்டு அவர்களின் வேதனை அதிகரித்த போது என் வீட்டில் தங்கி சிகிச்சையும் பராமரிப்பும் பெற்றிட தம் மற்ற துணைவியரிடம் அனுமதி கேட்டார்கள். அதற்கு அவர்களும் அனுமதி அளித்தார்கள். புகார் 4442. இவ்வாறு அன்னை ஆயிஷா நாயகியாரின் இல்லத்தில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதற்கு விரும்பிய காரணம் என்னவென்றால் அவர்கள் அவ்வீட்டில் இருக்கும் சமயத்தில் மரணிப்பதை விரும்பியிருந்தார்கள். அதாவது நபிமார்கள் தாம் விரும்பு இடத்தில் மரணிக்கவும் அடக்கம் செய்யப்படவும் சந்தர்ப்பம் வழங்கி கெளரவிக்கப்பட்டிருக்கின்றார்கள்.
நபிமார்கள் எந்த இடத்தில் அடக்கம் செய்யப்பட விருப்பம் கொண்டார்களோ அவ்விடத்தில் அன்றி வேறொரு இடத்தில் அவர்கள் உயிரை அல்லாஹ் கைப்பற்றுவதில்லை என்று நபியவர்கள் கூற நான் செவியேற்றிருக்கின்றேன். அறிவிப்பாளர் நபித் தோழர் ஹழ்ரத் அபூ பக்கர் ரழியல்லாஹு அன்ஹு நூல் திர்மிதி.
மறுவுலகப் பயணத்தை ஏற்றுக்கொள்வதற்கு நான்கு தினங்களுக்கு முன்னர் விழாயக் கழமை அன்றுதான் வருத்தம் அதிகரித்தது. அன்றைய தினம் தான் யாக வெளியில் சமூகமளித்து ழுஹர் தொழுகையினைத் தொழுவித்துச் சென்றார்கள். பின்னர் வெளியே வெளியேறியவதில்லை. இறுதியாக இறையடி சேர்ந்த திங்கள்கிழமை தோழர்களெல்லாம் ஸித்தீக்குல் அக்பர் நாயகத்தின் தலைமையின் கீழ் ஜமாஅத்தாகத் தொழுது கொண்டிருக்கையில் தன் வீட்டின் திரையினை நீக்கி தொழுது கொண்டிருப்பவர்களைப் பார்த்து புன்னகைத்து விட்டு வீட்டுக் கதவுக்கு திரையிட்டுக் கொண்டது போல் இவ்வுலக வாழ்க்கைக்கும் அன்றைய தினத்தின் அஸர் தொழுகையின் பின்னர் திரையிடடுக் கொண்டார்கள். இன்னாலிலல்லாஹி வஇன்னா ,லைஹி ராஜிஊன்.
திங்கள் கிழமை அன்றுதான் தொழுது கொண்டிருக்கையில் பெருமானாரின் அருள் நிறைந்த வதனத்தை இறுதியாக நான் காணும் பாக்கியம் பெற்றேன் என்ற கருத்தின் அடிப்படையிலான நபிமொழியினை நபித் தோழர் அனஸ் ரழியல்டலாஹு அன்ஹு அன்னவர்கள் அறிவிக்கின்றார்கள். புகாரி 681
வியாழக் கிழமை அன்றுதான் வருத்தம் அதிகரித்த தகவலினை நபித் தோழர் ஸெய்யிதுனா இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அன்னவர்கள் அறிவிக்கின்றார்கள். அத்துடன் அந்நாளின் பெயரைச் சொன்னால் கூட அழுதுவிடுபவர்களாகவும் தோழர் அவர்கள் காணப்பட்டிருக்கின்றார்கள். புகாரி 3053.
நாயகம் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் பிறந்தது திங்கள் கிழமை நபியவர்களுக்கு நுபுவ்வத் கிடைத்தது. திங்கள் கிழமை மக்கா முகர்ரமாவிலிருந்து மதீனா முனவ்வறாவிற்கு ஹிஜ்ரத் சென்றதும் திங்கள் கிழமை. மதினாவுக்குள் நுழைந்ததும் திங்கள் கிழமை. அவ்வாறே மரணித்ததும் திங்கள் கிழமைதான் என நபித் தோழல் ஸெய்யிதுனா அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் அறிவிப்பு முஸ்னத் அஹ்மத்தலாயிலுந் நிபுவ்வதி ஆகிய நூற்களில் பதிவாகியுள்ளது.
நாயகம் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் இறையடி சேர்ந்த பிறகு அவர்கள் அணந்திருந்த ஆடைகள் நீக்கப்படாது குளிப்பாட்டப்பட்டார்கள். நபித் தோழிர்களான அலி இப்னு அப்பாஸ்,உஸாமா பின் ஸைத் ரழியல்லாஹு அன்ஹு ஆகியோர் நபியவர்களின் திருவுடலை குளிப்பாட்டி வைத்தார்கள்.
யமன் மற்றும் நஜ்ரான் பிரதேச போர்வையினால் கபனிடப்பட்டார்கள். கூட்டமாக ஒரு இமாமின் பின்னால் நபிகளாரின் ஜனாஸாத் தொழுகை இடம் பெறவில்லை. பின்னர் புதன் இரவு அண்ணலாரின் மண்ணறையில் போர்வை விரிக்கப்பட்டு அவர்கள் பரிசுத்த திருவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. பெருமானாரின் கப்ரில் போர்வை விரிக்கப்பட்ட தகவல் ஸஹீஹ் முஸ்லிமில் பதிவாகியுள்ளது.
அல்லாஹ்வின் மீது நல்லெண்ணம் கொள்ளுங்கள். முஷ்ரிகீன்களை அரப் பிரதேசத்திலிருந்து அப்புறப்படுத்துங்க்ள. யூத நஸாராக்கள் நபிமார்களின் கப்ருகளை மஸ்ஜித்களாக வணங்கும் தளங்களாக அமைத்து கொண்டதற்காக அவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகடடுமாக! தொழுகையை நிலை நாட்டுங்கள். உங்கள் கட்டுப்பாட்டின் கீபுள்ளவர்களை மதியுங்கள் ஆகிய விடயங்களை அடிக்கடி கடின வேதனையிலும் ஞாபகமூட்டுபவர்களாக அருமை நாயகம் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் காணப்பட்டிருக்கின்றார்கள். எனவே அல்லாஹ்வையும் அவனது தூதரையும் ஏற்றுக்கொண்ட முஸ்லிம்கள் அல்லாஹ்வினதும் அவனது தூதரினதும் ஏவல் விளக்கல்களுக்கு முழுமையான அடிபணிந்த வாழ்வதுடன் அவ்விரண்டிற்கும் முரண்படாத மாற்றமில்லாத விடயங்களைச் செய்திடும் சிறந்த சமுதாயத்தினை உருவாக்க உழைப்போமாக.
ஏறாவூர் அபுத் தூபா
அல் ஜாமிஅத்துல் அkஸிய்யா
விருதோடை

Tuesday, 16 December 2014

எனது பெயர் ஜனாஸா!


நான் படுக்கையில் கிடக்கிறேன். என்னுடைய பிள்ளைகள், சகோதரர்கள், சகோதரிகள் அனைவரும் என்னருகில் கவலை தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருக்கின்றனர்.
என்னுடைய நெருங்கிய நண்பர்களும் என்னைச் சூழ்ந்து நின்றுகொண்டு என் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
திடீரென்று எனது மூச்சு பெரிதாக இழுத்தது. பெரும் மூச்சாக இழுத்து இழுத்து விட்டேன். எனது நிலைமை மோசமாவதைக் கண்ட சிலர் யாசீன் சூராவை ஓத ஆரம்பித்தனர்.
மூச்சு இப்பொழுது கொஞ்சம் இலேசானது. எனது கண்களைத் திறக்கிறேன். ஏதோ ஒன்றை எனது கண்கள் காண்கின்றன. ஆம்! வந்துவிட்டார். மரணத்தின் வானவரான மலக்குல் மவ்த் வந்துவிட்டார்.
நிரந்தரப் பயணத்தை நான் ஆரம்பிக்கப் போகிறேன். எனது வாய் திறந்தது. என் சகோதரன் சில துளிகள் தண்ணீரை எனது வாயில் ஊற்றுகிறான். அது அநேகமாக “ஜம் ஜம்” தண்ணீராக இருக்கும். மரணத் தறுவாயில் எனது வாயில் ஊற்ற வேண்டும் என்பதற்காக நான் அதனைப் பாதுகாத்து வைத்திருந்தேன்.
அனைவரும் “லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்” என்று மொழிய ஆரம்பித்தனர். எனது பார்வை பறி போய் விட்டது. எனது நாடி நரம்புகளெல்லாம் அடங்கிப் போய் விட்டன. எனது உணர்வுகளும் மங்கி மரத்துப் போய் விட்டன.
ஆனால் என்னால் இப்பொழுதும் கேட்க மட்டும் முடிகிறது. என் அன்புக்குரியவர்கள் அழும் சப்தம் கேட்கிறது. நான் இன்னும் இறக்கவில்லை. ஆனால் உயிரற்ற ஜடமாக ஆகி விட்டேன்.
எனக்குள்ள நேரம் வந்தது. ஒரு நிமிடம் முந்தவும் இல்லை. பிந்தவும் இல்லை. காத்திருந்த மலக்குல் மவ்த் அவரது கடமையைச் செய்ய ஆரம்பித்தார். விசுக் என்று என் உயிரைப் பிடுங்கினார். என் உடல் சட்டென்று குலுங்கி அடங்கியது.
அவ்வளவுதான். எல்லாம் முடிந்து விட்டது. நான் இவ்வுலகை விட்டுப் பிரிந்து விட்டேன். என்னை வழியனுப்பி வைப்பதற்குள்ள ஏற்பாடுகள் ஆரம்பமாயின.
நான் மாடாய் உழைத்து சேர்த்த சொத்துகள், வங்கித் தொகைகள், அனுபவித்த விலை உயர்ந்த கார்கள், வாழ்நாள் முழுவதும் நான் சேகரித்த எனது தொடர்புகள் அனைத்தும் இனி எனக்கு எந்தப் பயனையும் அளிக்கப் போவதில்லை.
இனி எனது அடையாளம் என் கப்று மட்டும்தான். ஓ.... எனது பெயரும் மாற்றப்பட்டு விட்டது. என் பெற்றோர் பல நாட்கள் ஆலோசனை செய்து தேர்ந்தெடுத்த எனது பெயர், அவர்கள் வாயால் கூவிக் கூவி அழைத்து மகிழ்ந்த அந்தப் பெயர் மாற்றப்பட்டு விட்டது. இப்பொழுது எனது பெயர் ஜனாஸா!
அதாவது, இறந்த உடல்!
எனக்கு நெருங்கியவர்கள் எனது கப்றை வெட்டுவதற்கான ஏற்பாடுகளில் இறங்கியுள்ளார்கள். ஜனாஸாவை நீண்ட நேரம் வீட்டுக்குள் வைக்கக்கூடாதாம். அவர்களுக்குள் பேசிக் கொள்கின்றனர்.
வீடு... என்னை இப்பொழுது நீண்ட நேரம் வைத்துக்கொள்ள அனுமதியில்லாத இந்த வீட்டை நான்தான் கட்டினேன். பல கனவுகளுடன் பார்த்துப் பார்த்து இலட்சக் கணக்கில் செலவு செய்து கட்டினேன்.
என்னைக் குளிப்பாட்ட ஏற்பாடு நடக்கிறது. நான் வீட்டுக்கு வெளியே குளிப்பாட்டுவதற்காக எடுத்துச் செல்லப்படுகிறேன். நான் பார்த்துப் பார்த்து கட்டிய வீட்டில், நான் அழகுற கட்டிய குளியலறையில் எனக்கு குளிக்க அனுமதியில்லை.
குளியலறையை சொகுசாகப் பயன்படுத்தவேண்டும் என்பதற்காக விலையுயர்ந்த பொருட்களை வாங்கி அங்கே பொருத்தினேன். அவையெல்லாம் இனி எனக்கு சொந்தமில்லை. இந்த நிலையில் எனக்குப் பயன்படாத இந்தப் பொருட்களை நான் ஏன் வாங்கினேன்?
குளிப்பாட்டி முடிந்தது. என்னை வெள்ளைத் துணியில் சுற்றினார்கள். விலையுயர்ந்த என் ஆடைகளெல்லாம் எங்கே போய் விட்டன?
என்னை சந்தூக்கில் வைத்தார்கள். எனது விலையுயர்ந்த ஏசி கார் ஒரு பக்கம் கம்பீரமாக நின்று கொண்டிருந்தது. அது இப்பொழுது எனக்கில்லை. எனக்குக் கிடைத்திருப்பதெல்லாம் இந்த மரப் பெட்டிதான்!
இதற்குத்தானா நான் இவ்வளவு நாள் கஷ்டப்பட்டு பணம் சம்பாதித்தேன்? இப்பொழுது எந்தப் பயனும் தராத இந்தப் பணத்தைச் சம்பாதிப்பதற்குத்தான் நான் எத்தனை பொய்கள் சொன்னேன்! எல்லாம் வீணாகப் போய் விட்டது. நான் என் வாழ்க்கையைத் தொலைத்து விட்டேன். எனது இறுதிப் பயணத்தை சுத்தமாக மறந்து வாழ்ந்தேன்.
ஆனால் அது உறுதியானது, மிக நெருங்கியது என்று எனக்குத் தெரியும். இருந்தாலும் அதனை மறந்து உலக மாயையில் மூழ்கிப் போனேன். பாவங்களில் பழகிப் போனேன்.
ஆனால் இன்றோ... எனது விளையாட்டு முடிந்து விட்டது.
இது எனக்கு மட்டுமல்ல. உங்கள் எல்லோருக்கும்தான். நீங்கள் எல்லோரும் இதே நிலையை ஒரு நாள் அடையத்தான் போகிறீர்கள்.ஒரு நாள் உங்களுக்கு இந்த உலகம் ஒரு சிறிய கனவு போல் கலைந்து விடும். எனக்கு நேர்ந்தது போல் உங்களுக்கும் நடக்கும். உங்கள் உயிர்களும் ஒரு நாள் பிடுங்கப்படும்.
ஆதலால் தயாராக இருந்துகொள்ளுங்கள். நன்மைகளைக் கட்டி வைத்துக்கொள்ளுங்கள். அது ஒன்றுதான் உங்களுக்கு உதவும். உங்கள் இறுதிப் பயணத்தை இன்பமயமாக மாற்றும். மறுமை வாழ்வை மகிழ்ச்சிகரமாக மாற்றும்.
மரணத்தை.
எனது பெயர் ஜனாஸா!