السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Wednesday, 16 October 2024

அப்துல் காதிர் ஜீலானி தொடர் 02


 "கெளதுல் அஃழம்" "முஹ்யித்தீன்" அப்துல் காதிர் #ஜீலானீ (றழி) ஆண்டகை #பிறப்பு பற்றி #வலீமார்களின் #முன்னறிவிப்புகள். 


தொடர் - 02

(தொகுப்பு: Maadhihur Rasool)


ஹழ்ரத் அபூ யஸீத் அல் பிஸ்தாமீ (Hijri 188-260) அவர்கள் ஆன்மீத்தில் தன்னிகரற்று தனிப்பெரும் செங்கோல் நடத்திக்கொண்டிருந்த காலம் அது. 

ஒரு நாள் அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்திக்கொண்டிருந்தபொழுது, திடீரென கூட்டத்தினரை நோக்கி, “இராக் நாட்டிலுள்ள ஜீலான் நகரில் ஆன்மீகச்சூரியன் உதயமாகும்காலம் அண்மித்துவிட்டது. அவரின் உதயம் உலகில் மாபெரும் ஆன்மீகப்புரட்சியை உண்டுபண்ணும். அவரின் திருப்பெயர் அப்துல் காதிர் முஹ்யித்தீன் (Hijri 470-561) என்பதாகும்” என்று கூறினர். 

இதன் பின்னும் ஆண்டுகள் உருண்டோடின. 

அஹ்லுல் பைத் வழி வந்த நபி பேரர் இமாம் ஹஸன் அஸ்கரி (றஹ்) அவர்கள் மரணப்படுக்கையில் கிடக்கிறார்கள். 

அவர்கள் திடீரென தம் நம்பிக்கைக்கு உரிய உறவினர் ஒருவரை அழைத்து தம் அருகில் மடித்து வைக்கப்பட்டிருந்த தொழுகை விரிப்பை அவரிடம் ஒப்படைத்து, “ஹிஜ்ரி 5ம் நூற்றாண்டின் இறுதியில் அப்துல் காதிர் முஹ்யித்தீன் என்னும் அருந்தவச்சீலர் தோன்றவிருக்கிறார். இதனை நீர் பத்திரப்படுத்தி வைத்திருந்து அவர் தோன்றியதும் இதனை அவருக்கு என் அன்புக்காணிக்கையாக வழங்கவேண்டும். அத்தகு வாய்ப்பினைப்பெறும் பேற்றினை நீர் பெறவில்லையாயின் உமது நம்பிக்கைக்குரிய ஒருவரிடம் இந்த அமானிதத்தை ஒப்படைத்து அந்த அப்துல் காதிர் முஹ்யித்தீன் தோன்றியதும் அவரிடம் இதனை ஒப்படைக்குமாறு கூறிச்செல்லவேண்டும்.” என்று கூறிவிட்டு தம் கண்களை இறுக மூடிக்கொண்டார்கள் 


Imam Hassan Askari (ra): Sheikh Abu Muhammad (ra) states that before his demise, Imam Hassan Askari (ra) handed over his Jubba (Cloak) to Sayyiduna Imam Ma’roof Karki (ra) and asked him to pass it over to Sheikh Abdul Qadir Jilani (ra). Sheikh Imam Ma’roof Karki (ra) passed over this cloak to Sayyiduna Junaid al-Baghdadi (ra), who in turn passed it over to Sheikh Danoori (ra) . From here it was then passed down until it reached Sheikh Abdul Qadir Jilani (ra) in the year 497 A.H. (Makhzanul Qaaderiah)


ஹெய்ஹ் அபு முஹம்மது (ரலி) அவர்கள் குறிப்பிடுகிறார்கள், (இமாம் ஹுஸைன் (றழி) அவர்களின் 8வது தலைமுறை திருப்பேரரான) இமாம் ஹஸன் அல் அஸ்கரி (ரலி) அவர்கள் (hijri 232-260) தமது ஜுப்பாவை (அங்கியை) செய்யிதுனா மஃரூப் கர்க்கி (ரலி) (Hijri 132-200) அவர்களிடம் ஒப்படைத்து, அதனை ஷெய்ஹ் அப்துல் காதிர் ஜீலானி (ரலி) அவர்களிடம் ஒப்படைக்குமாறு கூறினார்கள்.

மரூஃப் அல் கர்ஹி (ரஹ்) அவர்கள் இந்த ஆடையை ஷெய்ஹ் ஜுனைத் அல்-பாக்தாதி (ரஹ்) அவர்களிடம் ஒப்படைத்தார்கள், அவர்கள் அதனை ஷெய்ஹ் தனூரி (ரலி) அவர்களிடம் ஒப்படைத்தார்கள். ஹிஜ்ரி 497 ஆம் ஆண்டு ஹெய்ஹ் அப்துல் காதிர் ஜீலானி (ரலி) அவர்களை அடையும் வரை அது ஒருவர்பின் ஒருவராக கைமாறி வந்துகொண்டிருந்தது. (Makhzanul Qaaderiah).

…..

Sheikh-ul-Mashaa’ikh, Sayyiduna Junaid Al-Baghdadi (ra): He lived two hundred years before Sheikh Abdul Qadir Jilani (ra) and foretold his coming in the following manner. Once, while Sheikh Junaid al-Baghdadi (ra) was in a state of spiritual ecstasy, he stated: “His foot is on my shoulders; his foot is on my shoulders.” After he had come out of this spiritual condition, his disciples questioned him concerning these words. He said, “I have been informed that a great Saint will be born towards the end of the fifth century. His name shall be Abdul Qadir and his title will be Muhiyuddin. 

He will be born in Jilan and he will reside in Baghdad. One day, on the Command of Allah, he will say, ‘My foot is on the shoulders of all the Awliya Allah’. While in my spiritual condition, I saw his excellence and these words were uttered by me without my control.”


ஆண்டுகள் கடந்தன. அப்பாஸியக் கிலாபத்தின் ஆட்சிபீடமாகிய பக்தாத் மாநகரில், ஸுல்தானுல் அவ்லியா ஜுனைதுல் பக்தாதி (றஹ்) அவர்கள் (ஹிஜ்ரி215 - ஹிஜ்ரி 297) பக்தாத் மாநகரில் ஆன்மீகச்செங்கோல் செலுத்திக்கொண்டிருந்தார்கள். 

ஷெய்ஹுல் மஷாயிஹ் இமாம் ஜுனைத் அல் பக்தாதி (ஹிஜ்ரி 215-297) அவர்கள் செய்யிதினா அப்துல் காதிர் ஜீலானி (ரலி) (ஹிஜ்ரி 460-561) அவர்களுக்கு சுமார் 250 ஆண்டுகளுக்கு முந்தையவர்கள். 

ஒரு நாள் தம் மாணவர் குழாத்திடையே அமர்ந்து உரையாடிக்கொண்டிருந்த அவர்கள், திடீரென சற்றுநேரம் தலை தாழ்த்தி இருந்துவிட்டு, பின்னர் தலையை நிமிர்த்தி கூறினார்கள்: “அவரது பாதம் என் தோள்களில் உள்ளது; அவரது பாதம் என் தோள்களில் உள்ளது.” என்றனர்.

அதன்பின்னர் அவர்கள் ஆன்மிக நிலையிலிருந்து வெளியே வந்த பிறகு, அவர்களுடைய சீடர்கள் ஷெய்ஹ் கூறிய வார்த்தைகளைக் குறித்து விசாரித்தார்கள். அதற்கு அவர்கள் கூறினார்கள், 

"ஹிஜ்ரி 5ம் நூற்றாண்டின் இறுதியில் ஒரு சிறந்த ஞானி பிறப்பார் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் பெயர் அப்துல் காதர் அவருடைய பட்டப்பெயர் முஹ்யித்தீன். அவர் ஜிலானில் பிறந்து பாக்தாத்தில் வசிப்பார். ஒரு நாள், அவர் 'அனைத்து அவ்லியாக்களின் தோள்களில் மீதும் என் கால் பாதம் உள்ளது' என்று அவர் கூறுவார். எனது ஆன்மீக நிலையில் இருந்தபோது, அவருடைய சிறப்பை நான் கண்டேன், இந்த வார்த்தைகள் என் கட்டுப்பாடின்றி என்னால் உச்சரிக்கப்பட்டுவிட்டன” என்றார்கள்.

……


Sheikh Abu Bakr Bin Haw’waar (ra): He lived before the time of al-Ghawth al-A’zam (ra) and was amongst the distinguished Mashaa’ikh of Baghdad. Once, while he was sitting in his majlis, he said, “There are seven Aqtaab (High-Ranking Awliya) of Iraq:

1. Sheikh Ma’roof Karki (ra)

2. Sheikh Imam Ahmad bin Hanbal (ra)

3. Sheikh Bishr Haafi (ra)

4. Sheikh Mansoor bin Amaar (ra)

5. Sayyiduna Junaid al-Baghdadi (ra)

6. Sheikh Sahl bin Abdullah Tastari (ra)

7. Sheikh Abdul Qadir Jilani (ra)

When he heard this, Sayyidi Abu Muhammad (ra), who was a mureed of Sheikh Abu Bakr (ra) asked, “We have heard and know six of these names, but the seventh, we have not heard of. O Sheikh! Who is Abdul Qadir Jilani?” Sheikh Abu Bakr (ra) replied by saying: “Abdul Qadir (ra) will be a non-Arab (and a) pious man. He will be born towards the end of the fifth century Hijri and he will reside in Baghdad.” (Bahjatul Asraar)


அஷ்ஷெய்ஹ் அபூபக்ர் பின் ஹவ்வார் (றஹ்) அவர்கள் செய்யிதினா முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ அவர்களது காலத்திற்கு முன்பு வாழ்ந்தவர்கள். பாக்தாத்தின் புகழ்பெற்ற மஷாயிக்மார்களில் ஒருவர். ஒருமுறை, அவர்கள் தனது மஜ்லிஸில் அமர்ந்திருந்தபோது, "ஈராக்கைச் சேர்ந்தவர்கள் ஏழு பெரும் அக்தாப்கள் உள்ளனர்: அவர்கள்;

1) ஷெய்ஹ் மஃரூப் அல் கர்ஹீ

2) ஷெய்ஹ் இமாம் அஹ்மத் பின் ஹம்பல்

3) ஷெய்ஹ் பிஸ்ருல் ஹாஃபி

4) ஷெய்ஹ் மன்சூர் பின் அமார்

5) ஷெய்ஹ் ஜுனைத் அல் பக்தாதீ

6) ஷெய்ஹ் ஸஹ்ல் பின் அப்துல்லாஹ் அத் துஸ்தரீ

7) ஷெய்ஹ் அப்துல் காதிர் ஜீலானீ

ஆகியோர் என்றனர்.

இதனைக் கேட்டதும், ஷெய்ஹ் அபுபக்கர் (றஹ்) அவர்களின் முரீத் சையிதி அபு முஹம்மது (றஹ்) அவர்கள், “இதில் ஆறு பெயர்களை நாங்கள் கேள்விப்பட்டு அறிந்திருக்கிறோம், ஆனால் ஏழாவது, நாங்கள் கேள்விப்பட்டதே இல்லை. ஷெய்ஹ் அவர்களே! அப்துல் காதிர் யார்?” என்று வினவினர்.

அதற்கு ஷெய்ஹ் அபுபக்கர் (றஹ்) அவர்கள் பதிலளித்தார்கள்: “அப்துல் காதிர் அரேபியர் அல்லாதவர். பக்தியுள்ள மனிதராக இருப்பார். அவர் ஹிஜ்ரி ஐந்தாம் நூற்றாண்டின் இறுதியில் பிறப்பார், மேலும் அவர் பாக்தாத்தில் வசிப்பார்.” (பஹ்ஜதுல் அஸ்ரார்)

….

காலம் உருண்டோடியது. ஒரு நாள், அஹ்மத் அப்துல்லாஹ் இப்னு அஹ்மத் (றஹ்) அவர்கள், தம் சீடர்களை நோக்கி, “அவனி செய்த அருந்தவப்பயனாய் அண்மையில் ஒரு குழந்தை பிறக்கப்போகிறது. அது வயதுற்றதும் வலிமார்களின் மகுடமாகத்திகழும். அவர் ஆற்றவிருக்கும் அற்புதங்களோ அநந்தம். “என் பாதங்கள் வலீமார்களின் பிடரிமீது இருக்கின்றன” என நவில்வார். அப்பொழுது அவரின் ஆன்மீக அதிகாரம் விண்ணை உராய்ந்துகொண்டிருக்கும்” என்று முன்னறிவிப்புச்செய்தார்கள்.

…..

கலீல் பல்கீ (றஹ்) அவர்கள் தம் மாணவர் புடைசூழ தம் தவச்சாலையில் வீற்றிருக்கிறார்கள். அப்பொழுது அவர்கள் தம் மாணவர்களை நோக்கி, “முஹ்யித்தீன் என்னும் திருப்பெயருடன் இராக் நாட்டில் ஒரு மகான் தோன்றப்போகிறார். அவர் ஒரு ‘கெளத்’ ஆகத்திகழ்வார். அவரின் ஆன்மீக அதிகாரம் அவரின் காலத்தில் மட்டுமல்லாது உலகமுடிவுகாலம் வரை மங்காது சுடர் பரப்பிக்கொண்டிருக்கும்” என்று நன்மாராயம் நவின்றார்கள்.


Sheikh Khaleel Balkhi (ra): He was a great Wali-Allah and had passed away before the time of Sheikh Abdul Qadir Jilani (ra). Once while he was seated with his disciples, he said: “A pure servant of Allah will become apparent in Iraq towards the end of the fifth century. The world will gain brightness from his presence. He will be the Ghaus of his time. The creation of Allah will be obedient to him, and he will be the Leader of the Awliya Allah.” (Azkaarul Abraar)


ஷெய்ஹ் கலீல் அல் பல்கி (ரலி) அவர்கள் ஓர் வலீ- இறைநேசச்செல்வர் ஆவார்கள். ஹழ்ரத் அப்துல் காதிர் ஜிலானி (ரலி) அவர்களுடைய காலத்துக்கு முன்பே வாழ்ந்து மறைந்தவர்கள். ஒருமுறை அவர்கள் தமது சீடர்களுடன் அமர்ந்திருந்தபோது கூறினார்: "ஐந்தாம் நூற்றாண்டின் இறுதியில் ஈராக்கில் அல்லாஹ்வின் தூய அடியார் ஒருவர் வெளிப்படுவார். அவரினால் உலகம் பிரகாசம் பெறும். அவர் காலத்தின் கௌதாக இருப்பார். அல்லாஹ்வின் படைப்புக்கள் அவருக்குக் கீழ்ப்படியும். அவர் அவ்லியாக்களின் தலைவராக இருப்பார்.” (அஸ்காருல் அப்ரார்)

……


இறைநேசச்செல்வராக விளங்கிய அபூ அப்தில்லாஹ் அலீ (றஹ்) அவர்கள் தம் சீடர்களை நோக்கி, “முஹ்யித்தீன் என்ற ஏற்றமுடையவர் தோன்றக்கூடிய காலம் அண்மித்துவிட்டது. அல்லாஹ்வின் தனிப்பெரும் ஞானப்பரிதியான அவர் இராக் நாட்டின் அடிவானத்திலிருந்து உதிக்கப்போகிறார். அவர் எழுவானிலிந்து படுவான் வரை தன் பொற் கிரணங்களாஇ அள்ளித்தெளிப்பார்: என்று வாயினிக்க நவின்றார்கள்.

…..

ஒரு நாள் ஆன்மீகச்செல்வர் ஷெய்ஹ் மன்சூர் பதாயிஹி (றஹ்) அவர்கள் தம் பேச்சினிடையே, “ஆன்மீகப்பேரரசர் அப்துல் காதிரின் ஆட்சி தொடங்கும் காலம் அண்மித்துவிட்டது. மக்களே! உங்களில் எவரேனும் அவ்வாட்சியைக்காணும் பேற்றினைப்பெறின், அவரின் கால்மாட்டிலே போய் அமரும் வாய்ப்பை இழந்துவிடாதீர்கள்!” என்று அருள் எச்சரிக்கை செய்தார்கள்.

…..


பல ஆண்டுகள் கழிந்தன. ஒரு நாள் ஷெய்ஹ் உகைல் முன்ஞீ (றஹ்) அவர்கள், “ஆ! அந்தக்காலம் வந்துவிட்டது. பக்தாத் மாநகரில் முஹ்யித்தீனின் அருட்கொடி அதோ பறக்கின்றதை நான் பார்க்கின்றேன். தம் பாதக்கமலங்கள் “வலீ”மார்களின் பிடரிமீது இருக்கின்றன என அவர்கள் பிரகடனப்படுத்துவதையும் நான் இதோ செவியாரக்கேட்கிறேன்.” என்று கூறினர். சூழ வீற்றிருந்தவர்களின் ஊனக்கண்களுக்கு தெரியவில்லை. எனவே அவர்கள் “எங்கே! எங்கே! எங்களின் கண்களுக்கு தெரியவில்லையே” என்று ஏங்கினர். “அந்தக்காலம் விரைவில் வரும். அப்போது நான் உயிரோடிருப்பின் நான் அவர்களின் பாதக்கமலங்களை விட்டும் பெயரே” என்று கூறினர். 


….


Imam Muhammad Bin Sa’eed Zanjani (ra): He stated as follows in his distinguished work, “Nuzhatul Khawatir”: “From the era of Sheikh Abi Ali Hassan Yasaarajuwi (ra) up to the era of Sheikh Abdul Qadir Jilani (ra), every Wali that passed this earth, foretold the coming and the excellence of Sheikh Abdul Qadir Jilani (ra).” (Nuzhatul Khawatir)


இமாம் முஹம்மது பின் ஸயீத் ஸன்ஜானி (ரலி): அவர்கள் தனது பிரபல்மிக்க நூலான “நுஸ்ஹதுல் கவாத்திர்”இல் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்: “ஷெய்ஹ் அபூ அலி ஹசன் யஸாரஜுவி (ரலி) அவர்களின் காலத்தில் இருந்து ஷேக் அப்துல் காதிர் ஜீலானி (ரலி) அவர்களின் காலம் வரை இந்த பூமியைக் கடந்து சென்ற ஒவ்வொரு வலீயும் அப்துல் காதிர் ஜீலானி (ரலி) அவர்களின் வருகையையும் சிறப்பையும் முன்னறிவித்தே சென்றார்கள். (நுஸ்ஹதுல் கவாத்திர்)


தொடரும்…