السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Wednesday, 4 November 2015

ஹதீஸ் நிராகரிப்பாளர் பீஜே மறுக்கும் 78 ஹதீஸ்கள்

ஹதீஸ் நிராகரிப்பாளர் பீஜே மறுக்கும் 78 ஹதீஸ்கள்

பீஜே குர்ஆனுக்கு முரண்படுகிறது அல்லது பகுத்தறிவுக்கு ஒத்துவரவில்லை அல்லது நிதர்சன உண்மைக்கு மாற்றம் என்று கூறி இதுவரை (Update Nov 2014) மறுத்துள்ள ஹதீஸ்கள்.
1- நபி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு சூனியம் பாதித்ததை சொல்லும் ஹதீஸ் (புகாரி,முஸ்லிம்)
2- அஜ்வா ஈத்தம் பழம் நஞ்சுக்கெதிரான மருந்து (புகாரி,முஸ்லிம்)
3- கண்ணேறு உண்மையானது (புகாரி,முஸ்லிம்)
4- ஜஃபரின் குடும்பத்திற்கு ஏற்பட்ட கண்ணேறு பாதிப்பு (முஸ்லிம்)
5- உம்மு ஸலமா வீட்டுப் பெண்ணுக்கு கண்ணேறு பாதிப்பு (முஸ்லிம்)
6- நபித்தோழர் ஸஹ்ல் கண்ணேரால் பாதிப்புறல் (இப்னு மாஜாஹ்)
7- கண்ணேறுக்கு மருத்துவம் (முஸ்லிம்)
8- கத்ருக்கும் கண்ணேறுக்கும் இடையிலான தொடர்பு (முஸ்லிம்)
9- கண்ணேறுக்காக கழுவிக்கேட்டல் (முஸ்லிம்)
10-கண்ணேறுக்கு எதிரான ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாமின் துஆ (முஸ்லிம்)
11-கண்ணேறிலிருந்து பாதுகாப்புத்தேட ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹாவிற்கு நபிகளாரின் கட்டளை (முஸ்லிம்)
12- கண்ணேறுக்கு மந்திரிக்க நபிகளாரின் சலுகை அனஸ் ரலியால்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு (முஸ்லிம்)
13- நபியவர்கள் தன் பேரர்களுக்கு கண்ணேறிலிருந்து பாதுகாக்க கேட்ட துஆ (முஸ்லிம்)
14- கண்ணேறுக்கு மந்திரிக்க நபிகளாரின் சலுகை அபு ஹுரைரா ரலியால்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு (திர்மிதி)
15- கண்ணேறு உண்மை என்ற ஹாபிஸ் தமீமி ரலியால்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு (திர்மிதி)
16- கண்ணேறு உண்மை என்ற இப்னு அப்பாஸ் ரலியால்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு (திர்மிதி)
17- கண்ணேறுக்காக வுழூ எடுத்தல் (அபூ தாவூத்)
18- கண்ணேறு உண்மை என்ற ஆமிர் ரலியால்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு(இப்னு மாஜாஹ்)
19- கண்ணேறிலிருந்து நபிகளார் பாதுகாப்புத் தேடுதல்(திர்மிதி)
20- கண்ணேறுக்கு மந்திரிக்க நபிகளாரின் சலுகை புரைதா ரலியால்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு (திர்மிதி)
21- நபிகளாரிக்கு ஆயிஷா ரலியால்லாஹு அன்ஹா அவர்கள் கண்ணேறிலிருந்து பாதுகாப்புத் தேடல்
22- தந்தை உறவை மறுத்தல் பற்றிய ஹதீஸ் (புகாரி)
23- 5 தடவை தாய்ப் பாலருந்தினால் உறவு முறை உண்டாதல்(முஸ்லிம்)
24- மணம் முடித்தவர் விபச்சாரத்தில் ஈடுபட்டால் கல்லெறிந்து கொள்ளல் பற்றிய வசன ஓதல் மாற்றம் உமர் ரலியல்லாஹு அன்ஹுவின் அறிவிப்பு (புகாரி முஸ்லிம்)
25- மணம் முடித்தவர் விபச்சாரத்தில் ஈடுபட்டால் கல்லெறிந்து கொள்ளல் பற்றிய வசன ஓதல் மாற்றம் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹாவின் அறிவிப்பு(இப்னு மாஜா)
26- பிஃரு முஊனாவில் கொல்லப்பட்டவர்கள் பற்றி வசன ஓதல் மாற்றம் (புகாரி,முஸ்லிம்)
27- ஆதமுடைய மகனிற்கு இரண்டு தங்க பள்ளத்தாக்குகள் இருந்தால் என்ற வசன ஓதல் மாற்றம் பற்றிய அபூ மூஸா ரலியல்லாஹு அன்ஹுவின் அறிவிப்பு(முஸ்லிம்)
28- ஆதமுடைய மகனிற்கு இரண்டு தங்க பள்ளத்தாக்குகள் இருந்தால் என்ற வசன ஓதல் மாற்றம் பற்றிய உபை ரலியல்லாஹு அன்ஹுவின் அறிவிப்பு(முஸ்லிம்)
29- அஸர் தொழுகை பற்றிய வசன ஓதல் மாற்றம் (முஸ்லிம்)
30- ஸூரதுல்லைலின் வசன ஓதல் மாற்றம் (புகாரி)
31- கருஞ்சீரகத்தின் சிறப்பு ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹாவின் அறிவிப்பு (புகாரி முஸ்லிம்)
32-கருஞ்சீரகத்தின் சிறப்பு அபு ஹுரைரா ரலியால்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு (புகாரி முஸ்லிம்)
33-மாலையில் ஓதும் அஊது பிகலிமாதில்லாஹித் தாம்மாத் என்ற பிரார்த்தனை (முஸ்லிம்)
34- பல்லியைக் கொல்லுமாறு நபியவர்களின் கட்டளை அபு ஹுரைரா ரலியால்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு
35- பல்லியைக் கொல்லுமாறு நபியவர்களின் கட்டளை உம்மு ஷரீக் ரலியால்லாஹு அன்ஹாவின் அவர்களின் அறிவிப்பு (புகாரி)
36- பல்லியைக் கொல்லுமாறு நபியவர்களின் கட்டளை ஆமிரின் ரலியால்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு (முஸ்லிம்)
37- பல்லியைக் கொல்லுவதன் நன்மை பற்றிய அபு ஹுரைரா ரலியால்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு (முஸ்லிம்)
38- பல்லியைக் கொல்லுமாறு நபியவர்களின் கட்டளை ஆயிஷா ரலியால்லாஹு அன்ஹாவின் அவர்களின் அறிவிப்பு (புகாரி)
39- பல்லியைக் கொல்லுமாறு நபியவர்களின் கட்டளை ஆயிஷா ரலியால்லாஹு அன்ஹா நடைமுறைப்படுத்திவிட்டு நபிகளாரின் கூற்றை விளக்கும் அறிவிப்பு (நஸாஈ)
40- ஸாலிம் ரலியல்லாஹு அவர்களின் ஹதீஸ்(முஸ்லிம்)
41- 100 கொலை செய்தவனின் பாவமன்னிப்பு (புகாரி)
42- உம்மு ஹராம் ரலியால்லாஹு அன்ஹா வீட்டில் நபிகளார் உறங்குதல்(புகாரி,முஸ்லிம்)
43- பிலால் ரலியால்லாஹு அன்ஹு அவர்களின் கடன் (அபூ தாவூத்)
44- குஸைமா ரலியால்லாஹு அன்ஹு இரு சாட்சிகளுக்கு சமம் (புகாரி)
45- குஸைமா ரலியால்லாஹு அன்ஹு இரு சாட்சிகளுக்கு சமம் என்று நபிகளார் சான்று பகரக் காரணமான ஹதீஸ்
46- ஹுதைபியாவில் நபிகளார் மீது நபித்தோழர்கள் காட்டிய அளவற்ற அன்பு (புகாரி)
47- ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் 100 திருமணங்கள் (புகாரி)
48- மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களும்
மலகுல் மௌத்தும் (புகாரி)
49- பாதிமா பின்து கைஸ் ரலியால்லாஹு அன்ஹா அவர்களின் விவாகரத்து (புகாரி)
50- உறவினரின் அழுகையால் இறந்தவர் வேதனை செய்யப்படல் உமர் ரலியால்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு (புகாரி)
51- உறவினரின் அழுகையால் இறந்தவர் வேதனை செய்யப்படல் இப்னு உமர் ரலியால்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு (புகாரி)
52- 7 நாட்களில் அல்லாஹ் படைத்த படைப்புக்களின் விபரங்கள் (முஸ்லிம்)
53- இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தந்தையின் மறுமைத் தீர்ப்பு (புகாரி)
54- மாடும் ஓநாயும் பேசியதாக வரும் ஹதீஸ் (புகாரி,முஸ்லிம்)
55- எலியை பனூ இஸ்ரேலின் உருமாற்றத்துடன் சம்பந்தப்படுத்தி நபிகளார் சந்தேகித்த செய்தி (முஸ்லிம்)
56- ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் பற்றிய ஹதீஸ் (புகாரி)
57- சூரியனின் ஸுஜூத் (புகாரி)
58- அஸர் தொழுகையை வேண்டுமென்று விட்டவனக்கு தரித்திரியம் இப்னு உமர் ரலியால்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு (புகாரி)
59- அஸர் தொழுகையை வேண்டுமென்று விட்டவனக்கு தரித்திரியம் அபு ஹுரைரா ரலியால்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு (புகாரி)
60- தரித்திரியம் இருந்தால் 3 இல் இருக்கும். இப்னு உமர் ரலியால்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு (புகாரி)
61- தரித்திரியம் இருந்தால் 3 இல் இருக்கும் ஸஹ்ல் ரலியால்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு (புகாரி)
62- இப்னு உமரின் மனைவியை தலாக் செய்யுமாறு உமரிட்ட கட்டளைக்கு வழிப்பபடுமாறு நபியவர்களின் உத்தரவு. (திர்மிதி)
63- தொழுகை ஆரம்பமாக 2 ரக்அத்துக்களாக கடமையாக்கப்படல் (புகாரி)
64-ஆதம் அலைஹிஸ்ஸலாம் தன் வயதில் ஒரு பகுதியை கொடுத்துவிட்டு மறந்துவிடல் (திர்மிதி)
65- சிறு வயதில் நபிகளாரின் இதயம் பிளக்கப்பட்டு சீர் செய்யப்படல் (முஸ்லிம்)
66- குனூத் ஓதுதலை தடுத்து இறங்கிய அல் குர்ஆன் வசனம் பற்றிய ஹதீஸ் (முஸ்லிம்)
67- ஸூரதுல் புர்கானை 2விதமாக ஓதல் (புகாரி)
68- வரஹ்துக மின்ஹுமுல் முக்லஸீன் என்ற வசன ஓதல் மாற்றம் (முஸ்லிம்)
69- ஸூரா தரியாதின் வசன ஓதல் மாற்றம் (அஹ்மத்)
70- ஸூரா பய்யினாவின் வச ஓதல் மாற்றம் (அஹ்மத்)
71- மணமுடித்தவரின் விபச்சாரத் தண்டனைகல கல்லெறிந்து கொல்லல் வசன ஓதல் மாற்றம் (இப்னு மாஜாஹ்)
72- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் திருமணத்திற்கான இறைவனின் முன்னறிவிப்பு (முஸ்லிம்)
73- விவாசய உபகரணங்கள் மூலம் இறைவன் இழிவைக் கொடுத்தல். (புகாரி)
74- ஈத்தம்பழம் உள்ள வீட்டவர்க்கு பசியேற்படாது (முஸ்லிம்)
75- காபிர் ஏழு குடல்களால் சாப்பிடுகிறான் அபு ஹுரைரா ரலியால்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு (முஸ்லிம்)
76- காபிர் ஏழு குடல்களால் சாப்பிடுகிறான் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹுவின் அறிவிப்பு (முஸ்லிம்)
77- காபிர் ஏழு குடல்களால் சாப்பிடுகிறான் அபூ மூஸா அல் அஷ்அரீ ரலியல்லாஹு அன்ஹுவின் அறிவிப்பு (முஸ்லிம்)
78- காபிர் ஏழு குடல்களால் சாப்பிடுகிறான் ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹுவின் அறிவிப்பு (முஸ்லிம்)
ஹதீஸ் நிராகரிப்பாளர் பீஜே மறுக்கும் 78 ஹதீஸ்கள்


காதியானிகளை வளர்ந்த பெருமை பிஜேவுக்கே போய்ச் சேரும்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் வபரகாதுஹ_
காதியானிகளை வளர்ந்த பெருமை பிஜேவுக்கே போய்ச் சேரும்

நவமணி பத்திரிகையில் இந்தியாவைச் சேர்ந்த அண்ணன் பிஜே அவர்கள் வருகையைப்பற்றி அன்மையில்  பிரசுரிக்கப்பட்டிருந்தது.
அதில் பொய்யான தகவள்களை சேர்த்து மோசடி செய்யப்பட்டுள்ளது.
1990ல் இந்தியாவில் காதியானிகளோடு விவாதம் நடை பெற்று வெற்றியீட்டியது போலவும் காதியானிகளை விரட்டி அடித்தது போலவும் பொய்யான தகவள்களை பதிவு செய்யப்பட்டுள்ளது.

காதியானிகளை வளர்ந்த பெருமை பிஜேவுக்கே போய்ச் சேரும்

உண்மையான தகவள்:
காதியானிகளோடு கோவையில் விவதம் நடத்தும் போது அங்கு காதியானிகளுடைய பள்ளிவாயல் கிடையாது. ஆனால் விவாதத்துக்கு பின் 900 காதியானிகள் தனியான பள்ளிவாயல்கள் உள்ளன.
அண்ணன் பிஜே அவர்கள் விவாதம் நடத்தும் போது ஜாக் சார்பாகத்தான் கலந்து கொண்டார். அந்த விவாதத்தில் ஜாக் சார்பாக நடுவாராக கலந்து கொண்ட பிஜே தரப்பு சகோதரர் ஷேக் முக்தார் என்ன சகோதரர் தற்போது என்ன கொள்கையில் உள்ளார்?

இஸ்லாத்தை விட்டு வெளியேரி காதியானிகளையும் தாண்டி இந்து மதத்தின் இஷாயோகாவாக மாறியுள்ளார் என்ற செய்தியே உண்மை.
அடுத்தது இன்று வரைக்கும் காதியானிகளோடு சேர்ந்து அவர்களை வளர்த்தவர்கள் தவ்ஹீவாதிகள்தான் என்ற உண்மை எத்தனை பேருக்கு தெரியும்?

இஸ்லாத்தை விட்டு வெளியேருபவர்கள் போலித்போலித் தவ்ஹீத்வாதிகள்தான் என்பது உலகரிந்த உண்மை.

 அந்த விவாத்தில் கலந்து கொண்ட பிஜே தரப்பைச் சேர்ந்த அப்பாஸ் என்ன சகோதரர் தற்போது காதியானிகளோடு சேர்ந்து இருக்கின்றார். இந்தியாவைச் சேர்ந்த எனது நன்பர் கோவை பைஷல் அவர்கள் காதியானிகளோடு விவாதம் செய்வதற்கு அழைப்பு கொடுக்க சென்ற போது அந்த அப்பாஸ் என்ற சகோதரர் சொன்னார் நானும் முன்னாடி ஜாக்குத்தான். விவாதத்துக்கு பின்புதான் நான் காதியானிகளோடு சேர்ந்தேன் என்று வாக்கு மூலம் கொடுத்திருக்கின்றார்.அது மட்டுமல்லாமல் அந்த காதியானி பள்ளிவாயலில் தற்போதும் அந்த விவாத சிடியை அங்கு செல்பவர்களுக்கு இன்றுவரைக்கு இலவசமாக வினியோகித்து அவர்கள் கொள்கைக்கு மாற்றிக் கொண்டு இருக்கின்றார்கள் என்ற உண்மை எத்தனை சகோதரர்களுக்கு தெரியும்?

இஸ்லாத்தை விட்டும் வெளியேரிய காதியானி கூட்டத்தை வளர்த்த பெருமை அண்ணன் பிஜே என்பவரையே போய்ச் சேரும் என்பதுவே உண்மை.

பீ. ஜெ இலங்கை வந்தால் நாட்டில் கலவரம் வெடிக்கும்



இந்திய மார்க்க அறிஞர் பி ஜெய்னுலாப்தீன் இலங்கை வரவுள்ள நிலையில் அவரை இலங்கைக்குள் அனுமதிக்க கூடாது என ஆசாத் சாலி வலியுருத்தியுள்ளார். இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர் கடந்த 2005ல் ஜனாதிபதி சந்திரிக்கா அவர்களும் அப்போதைய பாதுகாப்பு செயலாலரும் அவரை நாட்டை விட்டு வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர். இன்று ரனிலின் அரசு அவர் நாட்டுக்குள் வந்து மார்க்க சொற்பொழிவு நடத்த அனுமதி அளித்துள்ளது.இலங்கைக்குள் இஸ்ரேல் நட்பு உயிர்பெற்றுள்ள நிலையில் பி ஜெய்னுலாப்தீன் இஸ்ரேல் சூழ்ச்சி உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது என குறிப்பிட்ட அவர் ... SLTJ அமைப்பு பி ஜெய்னுலாப்தீனை இங்கு அழைத்துவருவதாவும் அவர்கள் தான் புத்தர் மனித மாமிசம் உண்டதாக சர்ச்சையை கிளப்பினார்கள் என சுட்டிக்காட்டிய அவர்... அன்று பொது பல அளுத்கம பிரதேசத்தில் ஞானசார தேரர் கூட்டம் நடத்தினால் கலவரம் வெடிக்கும் என நான் கூறினேன் அது அவ்வாறு நடந்தது. அதேபோல் பி ஜெ இலங்கை வந்தால் நாட்டில் கலவரம் வெடிக்கும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்



http://www.madawalanews.com/2015/11/lka_45.html

யார் இந்த பிஜே ? 01

யார் இந்த பிஜே ?

குர்ஆனையும் ஹதீஸையும் விளங்குவதற்கு இமாம்களின் விளக்கங்கள் தேவையில்லை. அப்படி தேவையென்று வந்தால் அல்லாஹ்விற்கும் ரஸூல் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களுக்கு விளக்கத்தெறியவில்லை
என்பதை ஏற்றுக்கொண்டால்தான் மற்றவர்களின் விளக்கத்தை கேட்டவேண்டும் என்ற நிலைப்பாட்டில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இருப்பதாக பீஜே அவர்கள் 2010ஆம் ஆண்டு நடைப்பெற்ற விவாதம் ஒன்றில் பேசுகிறார் இது அவருடைய சொந்த கருத்து கிடையாது ததஜ உடைய கொள்கையென்று புரிகிறது..

குர்ஆனுக்கு இமாம்களின் விளக்கம் கேட்பது என்பதை அல்லாஹ் மறுக்கும் செயலென்றும் அது டேன்ஜரான குஃப்ர் இறைமறுப்பு கொள்ளையென்று பேசிய பீஜே அவர்கள் எதை செய்தால் குஃப்ர் ஆகிவிடும் என்று கூறினாறோ அதை அவர் செய்துள்ளார்
குர்ஆனுக்கு விளக்கவுரை எழுதியுள்ளார்..
எதை செய்தால் அது இறைமறுப்பு கொள்ளையென்று கூறினாறோ அதை இப்போது பீஜே அவர்கள் செய்துள்ளார்.
அப்போ நீங்கள் இறைவனுக்கும் அவனுடைய தூதருக்கும் குர்ஆனை விளக்க தெறியவில்லை என்பதை ஏற்றுக்கொண்டீர்களா??
அல்லது பீஜேவை நபியாக ஏற்றுக்கொண்டீர்களா??
இதில் ஒன்றை ஏற்றுக்கொண்டாலும் அவன் காஃபீர் ஆகிவிடுவான்..
அப்போ ஒரு காஃபீரை தலைவராக ஏற்றுக்கொள்ளலாம??
அவரிடம் மார்கம் சம்பந்தமான கேள்விகளை கேட்கலாமா??
அவர் காட்டும் ஹதீஸை ஏற்றுக்கொள்ளலாமா??
அவருடைய கொள்கையை பின்பற்றலாமா??
கீழே உள்ள வீடியோவை பார்த்துவிட்டு பதில் கூறுங்கள்..
அவர் விளக்கவுரை எழுதினார் என்பதற்கு ஆதாரம் எங்களிடம் உள்ளது தேவைபடுபவர்கள் தொடர்பு கொள்ளவும்..
இன்ஷா அல்லாஹ் அடுத்து பதிவு வரதட்சனை சம்பந்தமாக ததஜ வின் நிலைபாடும் அதில் இருக்கும் முரண்பாடும், Click PJ Tharjuma


“உஸ்மானை விட சாப்ட்வேரில் கொண்டு வந்து விட்டோம். உஸ்மான் செய்த ஏற்பாட்டை விட இலட்ச மடங்கு சிறந்த ஒரு ஏற்பாட்டை நாம் செய்து இருக்கிறோம்” என மிக சிறந்த ஸஹாபியை, சொர்க்கத்திற்கு சொந்தமான ஒருவரை ஏதோ ஒரு சாதாரண ஒரு ஆளைப் போல் பேசுகிறார். இது கண்டிக்கதக்கது இல்லையா? கை கொட்டி சிரிக்கும் விடயமா?
இவரை மட்டும் அண்ணன், அண்ணன் என அழைக்க வேண்டுமாம். அவரை பிஜெ என்று சொல்லி விட்டு விட்டால், அவரின் சீடர்களுக்கு கோபம் வருகிறது. இவருக்கு எதிராக கருத்து சொல்பவர்களை ஒருமையில் மிக கேவலமாக வசைப்பாடுகிறார்கள். ஒரு ஸஹாபியை மிக துச்சமாக மதிக்கும் இவரை நாம் ஒருமையில் அழைத்தால் கொய்யோ மொய்யோ என குதிக்கிறார்கள்.
அல்லாஹ்வின் தூதருடன் தோளுக்கு தோள் நின்ற இந்தஅருமைக்குரிய மக்களை போல் பில்கேட்ஸ் ஆகுவாரா? அவருடைய கண்டுபிடிப்பு சுவனத்தில் இடம் கிடைக்குமா?
உஸ்மான் (ரழி) அவர்கள் அந்த நேரத்தில் அக்குர்ஆனை அவ்வாறு கோர்வை செய்யாமல் விட்டு இருந்தால், இவரை போன்ற பித்னாக்காரர்கள் மார்க்கத்தில் எல்லை மீறி விளையாடி இருப்பார்களே!
அன்று அவர்கள் செய்த அரும் பெரும் காரியம் இஸ்லாத்தின் தாத்பாரியத்தை தெரியாத இவருக்கு மிக அற்பமாக தெரிகிறது?

நபித்தோழர்களின் கண்ணியத்தை ஒவ்வொரு கட்டத்திலும் இழிவு படுத்தி பிரச்சாரம் செய்து வருகிறார் பி.ஜே. அதைப் பின்பற்றி அவர் உருவாக்கிய ததஜ என்ற இயக்கமும் அவரைப் பின்பற்றுபவர்களும் தப்பும் தவறுமாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
நபித்தோழர்கள் சொர்க்க வாசிகள். பில்கேட்ஸ் சொர்க்கவாசி என்ற உத்தரவாதம் வழங்கப்பட்டவரா? அவர் ஒரு முஸ்லிமல்லாதவர். பில்கேட்சைப் பின்பற்றுங்கள் என்று யார் சொன்னது?
நபித்தோழர்கள் இந்த மார்க்கத்தின் அரண்களாக விளங்கியவர்கள். இந்த மார்க்கத்துக்காக தங்கள் உயிரை துச்சமாகக் கருதியவர்கள். இத்தகைய நல்லோர்களை கேவலம் பில்கேட்சுடன் ஒப்பிட்டுப் பேசும் அக்கிரமம், அதுமட்டுமல்லாமல் அல்-குர்ஆனை தொகுப்பதில் அரும்பாடுபட்ட ஸஹாபாக்களை ஒன்றும் அறியாத வேலைக்காரனுக்கு ஒப்பிடும் அக்கிரமம் இந்த வீடியோவில் வெளிப்படுகிறது.
இந்த வீடியோவைப் பகிருங்கள். பி.ஜேயின் தப்புப் பிரச்சாரங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.https://www.youtube.com/watch?v=kJzVJRYg99I&feature=youtu.be


  1. P.J ஒரு முர்தத் என்று தமிழ் நாடு ஜமாஅத்துல் உலமாசபை பத்வா
  2. தன்னைத் தான் முஸ்ரிக் என்று ஒப்புக் கொண்ட PJ
  3. நபிமார்களை இழிவுபடுத்தும் பி ஜே தர்ஜுமா
  4. PJ யூதர்களின் கைக்கூலியே
  5. சமுதாயத்தை கட்டி கொடுத்த (PJ)
  6. நபியவர்கள் ஷிர்க்கை அனுமதித்தார்கள் என்று கூறும் PJ
  7. முஸ்ரிக் PJ முன்னும் - பின்னும்
  8. Poiyan Pj
  9. மதுரை சொத்து -பி.ஜே.வின் பித்தலாட்டம்!
  10. PJ ஜரினா விவகாரம்









Tuesday, 3 November 2015

ஆதம் நபியின் கால் பாதம்தான் இலங்கையில் இஸ்லாம் தோன்றக் காரணமாகும்.


இலங்கையை நோக்கி அரேபிய மக்கள் வருகை தந்தைமைக்கு காரணமாக இருந்த மனித இனத்தின் முதல் தந்தையான ஆதம் (அலை) அவர்களின் பாதம் பதிந்த மலையை இன்றைய முஸ்லீம்கள் ஏன் தரிசிப்பதில்ல்லை? இதற்கு யார் காரணம்?
இலங்கையை நோக்கி அரேபிய மக்கள் வருகை தந்தைமைக்கு மற்றொரு வரலாற்றுக் காரணமும் உண்டு. முஸ்லிம்களின் முதல் தந்தையான அல்லது மனித இனத்தின் முதல் தந்தையான ஆதம் (அலை) அவர்களின் பாதம் பதிந்த மலை இலங்கையின் மலைநாட்டுப் பிரதேசத்தில் அமைந்துள்ளது என்ற நம்பிக்கை பல்வேறு அரபு யாத்திரிகர்களையும் வணிகர்களையும் இலங்கையை நோக்கி ஈர்த்தது.

இலங்கை முஸ்லிம்கள் தெற்காசியாவின் சிறு பான்மை முஸ்லிம் சமூகங்களில் மிக நீண்ட வரலாற் றுத் தொன்மை கொண்டவர்கள். சுமாராக ஆயிரம் வருட கால பூர்வீகம் அவர்களுக்குள்ளது. அரேபியர் களின் வழித் தோன்றல்கள் எனக் கருதப்படும் இலங்கை முஸ்லிம்கள் 13ம் நூற்றாண்டிற்குப் பின் னர் இந்திய முஸ்லிம்களுடன் தமது சமூக, கலாசார, சமய உறவுகளைப் பேணத் தொடங்கினர். இதே வேளை 18ம் நூற்றாண்டுக்குப் பின்னர் மலாக்கா, ஜாவா தீவுகளைச் சேர்ந்த மலா முஸ்லிம்களும் இலங்கை முஸ்லிம்களுடன் இணைந்து கொள்கின் றனர். இந்திய குஜராத்தின் போராக்கள், மற்றும் மேமன்கள் என்போரும் மிகச் சிறு அளவில் இலங்கை முஸ்லிம் சமூகத்தில் இணைந்திருக்கின்றனர். கலாசார ரீதியில் சிற்சில வேறுபாடுகள் தமக்கு மத்தியில் நிலவுகின்றபோதும், முஸ்லிம்கள்/இஸ்லாமியர்கள் என்ற பொது அடையாளத்தை இலங்கை முஸ்லிம்கள் பகிர்ந்து கொள்கின்றனர்.

இலங்கை முஸ்லிம்களின் வரலாறு, பண்பாடு, அடையாளம், அரசியல் தேசம் பற்றிய நீண்ட விவாதங்கள் வரலாற்று நெடுகிலும் நடைபெற்று வந்துள்ளன. 1800களில் இலங்கை முஸ்லிம்கள் தமக்கான அடையாளத்தை இன ரீதியாக நிறுவ வேண்டிய அரசியல் தேவை நிலவியதால், அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய அரசியல் தலைமைகள் முஸ்லிம்களை சோனகராக (Moor) அடையாளப்படுத்தினர். இது வரலாற்றின் ஒரு தவிர்க்க முடியாத அரசியல் தேவையாயிற்று. ஆயினும் 1980களுக்குப் பின்னர் இலங்கை முஸ்லிம்கள் இந்த இனத்துவ அடையாளப் படுத்தலிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டனர்.

இலங்கை முஸ்லிம்கள் இஸ்லாமியர்கள் என்ற சமய அடையாளத்தையே வலியுறுத்துகின்றனர். தமிழை தாமொழியாகக் கொண்டிருப்பினும் கலாசாரத்தி லும் பண்பாட்டிலும் தமக்கேயுரிய தனித்துவ அடையாளங்களை பேணுகின்றனர். எனவே, இன, மொழி அடையாளங்களைக் கடந்த சமய அடையாளம் இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்தவரை ஒரு பிரிக்க முடியாத கூறாகும். இலங்கை முஸ் லிம்களின் அரசியல் அடையாளம் குறித்து ஆவுக் கட்டுரை எழுதுகின்றவர்கள்.

இந்த அடிப்படை யதார்த்தத்தைக் கவனத்தில் எடுத்தாக வேண்டும். யாருக்கும் அவரது தனிப்பட்ட மொழி சார்ந்த, இனத்துவம் சார்ந்த, இடதுசாரியம் சார்ந்த பார்வைகள் இருக்கக் கூடும். ஆனால், அதை முழு மொத்த முஸ்லிம் உம்மாவின் பார்வையாக உருமாற்றம் சேவது மிகப் பெரும் வரலாற்றுத் துரோகமாகும். எப்படி மொழியும் இனமும் அடையாளத்தின் குறியீடுகளாக வலியுறுத்தப்படுகின்றதோ அது போன்றே சமயமும் அதன் நியாயமான எல்லையில் அடையாளத்தின் குறியீடாக முடியும். ஏனெனில் அடையாளப் பிரக்ஞை என்பது ஒரு சமூகக் குழுமத்தின் உணர்வு நிலைப்பட்ட (Conciousness) ஓர் அம்சமாகும்.

இந்த அடையாளம் பற்றிய விவாதத்தில் ஏகப்பட்ட விஷயங்கள் உள்ளன. அதை நான் விவாதத்திற்கு எடுக்கவில்லை. அது இந்தப் பத்தியின் நோக்கமுமல்ல. இலங்கை முஸ்லிம்களின் சமூக, வரலாறு பற்றிய சில முக்கிய, சுவாரஷ்யமான குறிப்புக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு இந்தப் பத்தி தொடங்கப்படுகின்றது. இதனூடே முஸ்லிம்கள் தமது வரலாற்றை மேலோட்டமாகவேனும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே இப்பத்தியின் குறிக்கோள் எனலாம்.

இலங்கை முஸ்லிம்களின் சனத்தொகை 2001ம் ஆண்டின் கணிப்பீட்டின்படி சராசரியாக 10% எனலாம். இதுவரை 1981ம் ஆண்டைய கணிப்பீடே மேற்கோள் காட்டப்பட்டு வருவது தவிர்க்கப்பட வேண்டும். 9% என்று அரசாங்க புள்ளிவிபரத் திணைக்களம் கூறுகின்றது. ஆனால், இந்தக் கணிப்பீட்டில் (2001) திருகோணமலை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் அகிய ஆறு மாவட்டங்களின் சனத்தொகை கணிப்பீடு உள்ளடங்கவில்லை. காரணம் அம்மாவட்டங்களில் தொகை மதிப்பீடு மேற் கொள்ளப்படவில்லை. 

இவற்றுள் திருகோண மலை, மட்டக்களப்பு ஆகிய இரு மாவட்டங்க ளிலும் வாழும் முஸ்லிம் களின் எண்ணிக்கை குறிப் பிடத்தக்கது. அரசாங்க புள்ளிவிபரத் திணைக்கள தொகை மதிப்பீட்டின்படி முஸ் லிம்களின் எண்ணிக்கை 16,85,880. இத்துடன் திரு மலை, மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களும் உள்ளடக்கப்பட்டால் தற் போதைய இலங்கை முஸ் லிம்களின் எண்ணிக்கை சுமார் இரு மில்லியனாக இருக்கும். அல்லது அத ற்கு சற்றுக் குறைவாக இருக்கும் என்பதில் சந்தே கமில்லை. இன்று முஸ் லிம்கள் எண்ணிக்கையில் அதிகம் வாழும் மாவட் டங்களாக அம்பாறை, கொழும்பு, கண்டி, புத்த ளம், களுத்துறை கம்பஹா என்பன விளங்குகின்றன.

அரபு வணிகர்களின் வருகை

ஹிரோயின் போதை வஸ்துக்கு பொப்பி தாவரங்கள் மூலப் பொருளாக இருப்பது போன்று தேசிய அல்லது இனத்துவ அல்லது அடிப்படை வாத கருத்து நிலைகளுக்கு வரலாறே மூலப் பொருளாக அமைகிறது. இக்கருத்து நிலைகளுக்கு ஓரு அத்தியாவசியக் கூறாக சிலவேளை ஒரே அத்தியாவசியக் கூறாக கடந்த காலமே அமைகிறது. ஒரு தகுந்த கடந்த காலம் இல்லாவிட்டால் அது எப்பொழுதும் புதிதாகக் கண்டுபிடிக்கக் கூடியதாகவே உள்ளது. (Eric J. Hobsbown-1994)

இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றுத் தொன்மை குறித்த ஆவுகள் தமிழ் சூழலில் இடம்பெற்றமை மிகக் குறைவாகும். முஸ்லிம்களின் வரலாற்றை ஆராய முனைந்தவர்கள் இஸ்லாத்தின் தோற்றத்துடன் இணைத்தே இலங்கை முஸ்லிம்களின் வரலாறு குறித்து எழுதத் தலைப் பட்டனர். இதன்படி கி.பி. 7ம் நூற்றாண்டிலிருந்தே முஸ்லிம்களின் வரலாற்று எழுத்தியல் தொடங்கப்பட்டது.

முஸ்லிம்களை இஸ்லாமியத் தமிழர்களாகக் காட்ட முனைந்த, முஸ் லிம்களின் அரசியல் அடையாளத்தை ஏற்க மறுத்த தமிழ் அரசியல் தலை மைகள் முஸ்லிம் வரலாற்றை வெறும் 15ம் நூற்றாண்டிலிருந்து தொடங்கு வதாக எழுதினர். இது இனத்துவ அரசியலில் நிலவும் தமிழ்த் தேசியத்தின் இராமநாத முகம். இத்தகைய சைவ வேளாளர் மேலாதிக்கத்திற்குள் முஸ்லிம்களையும் அடக்கி வைப்பதற்கு 1800 களில் மேற்கொள்ளப்பட்ட இருட்டடிப்பு முயற்சி.

இவை எல்லாவற்றுக்கும் அப்பால் முஸ்லிம்களின் வரலாற்றை நேர்மை யாகப் பார்க்க வேண்டிய அரசியல் தேவை இன்று எழுந்துள்ளது. இலங்கை ஆபிரிக்கா, சீனா, இந்தியா ஆகிய மூன்று முக்கிய பிராந்தியங்களுக்கிடையே இருக்கும் கேந்திர நிலையமாக விளங்குகின்றது. மிகப் பழங்காலம் தொட்டே இலங்கை ஒரு வணிக மத்திய நிலையமாக மாறுவதற்கு இப் புவியியல் அமைப்பு ஏதுவாகியது.

இலங்கையின் வாசனைத் திரவியங்களும் இரத்தினக் கற்களும் பூர்வீகம் தொட்டே உலகத்தின் கவனத்தை ஈர்த்து வந்தது. கீழைத்தேச உலகத்திற்கும் மேலைய உலகத்திற்கும் இடையிலான கடற் பாதையானது இலங்கைத் தீவின் பல இடங்களையும் அவாவிச் சேல்கின்றன. இதனால் மேற்கிற்கும் கிழக்கிற்கும் இடையிலான வணிகப் பாதைகளின் மத்திய தளமாக இலங்கை விளங்கியது.

இவ்வணிகம் இஸ்லாத்தின் தோற்றத்திற்கு முன்பிருந்தே அரபிகளின் தனியுரிமையாக இருந்ததை வரலாறு எடுத்துரைக்கின்றது. அரபுத் தீபகற் பத்தின் கரையோரப் பகுதிகளான ஹிஜாஸ், யெமன், ஹளரமவ்த், ஓமான், பஹ்ரைன் ஆகிய பிரதேசங்களிலிருந்து புறப்பட்ட அரேபியர்களின் வணிகக் கப்பல்கள் மேற்குக் கரையோரம், இலங்கைத் தீவு, கிழக்கிந்தியக் கரை யோரம், மாலைதீவு ஆகிய பிரதேசங்களுக்கூடாக சீனா சேன்றடைந்தன. சீனாவிலிருந்து புறப்படும் கப்பல்கள் இப்பிரதேசங்களின் வாசனைத் திரவியங்கள், இரத்தினக் கற்கள், யானைத் தந்தங்கள் போன்ற வணிகச் சரக்குகளை ஏற்றிக் கொண்டு யெமன் கரையை சேன்றடைந்தன. அங்கி ருந்து இவ்வணிகச் சரக்குகள் ஹிஜாஸுக்கூடாக எகிப்துக்குக் கொண்டு சேல்லப்பட்டு எகிப்திலிருந்து ஐரோப்பாவுக்குச் சேன்றன.

இவ்வணிக முயற்சிகள் காரணமாக ஏற்பட்ட குடியேற்றங்களே மேற் கிந்திய, இலங்கை ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட ஆரம்ப அரபுக் குடியேற் றங்கள் ஆகும்.
இலங்கையை நோக்கி அரேபிய மக்கள் வருகை தந்தைமைக்கு மற்றொரு வரலாற்றுக் காரணமும் உண்டு. முஸ்லிம்களின் முதல் தந்தையான அல்லது மனித இனத்தின் முதல் தந்தையான ஆதம் (அலை) அவர்களின் பாதம் பதிந்த மலை இலங்கையின் மலைநாட்டுப் பிரதேசத்தில் அமைந்துள்ளது என்ற நம்பிக்கை பல்வேறு அரபு யாத்திரிகர்களையும் வணிகர்களையும் இலங்கையை நோக்கி ஈர்த்தது.
இனிவரும் பத்திகளில் இஸ்லாத்திற்கு முந்திய இலங்கையில் அரேபியர் கொண்டிருந்த சேல்வாக்கினை இப்னு ஸஹ்ரயார், சுலைமான் அத்தாஜிரி அல் மஸ்ஊதி, பலதூரி, இப்னு குர்துபா போன்ற அரபு வரலாற்று ஆசிரி யர்களின் கருத்துக்களோடு நோக்குவோம்.

கிளோடியஸ் தொலமி கி.பி. 150ல் இலங்கையை உள்ளடக்கிய பூகோளப் படத்தை வரைந்தார். இவருக்கு முன்னர் இலங்கை பற்றிய ஆவில் ஈடுபட்டிருந்த ஓனஸ் கிரிட்டஸ் என்பவரிடமிருந்து தொலமி பெற்ற தக வல்களும் புவியியல் ஆவுக் குறிப்புக்களுமே தொலமி இலங்கையையும் உள்ளடக்கிய பூகோளப் படத்தை வரைவதற்கு உதவியாக அமைந்தது. இலங்கையின் வரலாறு பற்றிய ஐரோப்பியர்களின் தேசப் படங்களில் தொலமியின் வரைபடமே காலத்தால் முந்தியதும் மிகவும் தொன்மை யானதுமாகும்.

இலங்கையை தப்ரபேன் என்றழைக்கும் தொலமி இலங்கை யின் மிகப் பெரும் ஆறுகளுள் ஒன்றான மகாவலி கங்கையை பாசில் பலூசியஸ் (பாரசீக நதி) என்றும் தெதுரு ஓயாவை சோனா பலூசியஸ் (அரேபிய நதி) என்றும் ஜின் கங்கையை அஸனாக் பலூலியஸ் (எதியோபிய நதி) என்றும் குறிப் பிடுகின்றார். குறிப்பிட்ட இந்த நதிக்கரையோரங்களில் பாரசீக, அறாபிய, மற்றும் எதியோப்பியர்களின் குடியிருப்புகள் சிதறலாகவும் வேறு சில சில இடங்களில் சேறிவாகவும் இருந்ததென தொலமி தனது இலங்கை பற்றி குறிப்புக்களில் தெரிவித்துள்ளார்.

இஸ்லாத்திற்கு முந்திய ஜாஹிலியக் கால அரபுக் கவிஞர் இம்ராஉல் கைஸ் இப்னு ஹஜர் என்பவரின் கவிதைகளிலும் இலங்கைக்கும் அரபுல கிற்கும் இடையில் நிலவிய உறவுகளை சூட்சுமமாக வெளிப்படுத்துகிறார். (இவரது கவிதைகள் 1837ல் முதன் முதலாக மிஸ்யம் என்பவரால் பாரிஸ் நகரில் பதிப்பிக்கப்பட்டது.) இவரது தீவானின் மூன்றாவது கவிதையில் ்பில்பில்சு என்ற வார்த்தையும் இன்னொரு கவிதையில் ்கரன்புல்சு என்றும் வருகிறது. பில்பில் என்பது மிளகாயைக் குறிக்கிறது.

இது அரபு நாட்டில் உற்பத்தியாகாத ஒரு பொருள். அதேவேளை கரன்புல் என்பது கராம்பைக் குறிக்கும் சோல். ஆனால் இது அடிப்படையில் ஓர் அரபு மொழிச் சோல் அல்ல. கீழைத்தேய நாடுகளுடன் குறிப்பாக இலங்கையுடன் அரேபியர் கொண்டிருந்த வணிகத் தொடர்புகளை இச்சோற்கள் காட்டுவதாக இம்ராஉல் கைஸின் கவிதைகளை ஆராந்தவர்கள் அபிப்பிராயப்படு கின்றனர்.

இலங்கையின் வரலாற்றைக் கூறும் தொன்மை நூலான மகாவம்சம் கி.மு. 4ம் நூற்றாண்டளவில் அனுராதபுரத்திற்கு மேற்குப் புறமாக யோன கர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடம் பற்றிக் குறிப்பிட்டுள்ளது. பாரதி யாரின் சில கவிதையடிகளிலும் இந்த யோனகர் என்ற சோல் பயன்படுத்தப் பட்டுள்ளதோடு இலங்கையின் புராதன சிங்களக் காவியங்களிலும் யோனக என்ற பதம் கையாளப்பட்டுள்ளது. இது கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலம் முதலே இலங்கையில் அரேபியர் கொண்டிருந்த வணிகச் சேல்வாக்கினை காட்டுகின்றது.

கி.மு. 4ம் நூற்றாண்டளவில் தென்மேற்கு ஆசியாவின் பெரும் நிலப் பரப்பை ஆண்டு வந்த மாமன்னர் சுலைமான் (அலை) அவர்களது ஆட்சிக் காலத்தில் அவரது மனைவி பல்கீஸ் அவர்களுக்கு இலங்கையின் பெறுமதி யான இரத்தினக் கற்களும் முத்துக்களும் அன்பளிப்பாகக் கிடைத்ததென்ற வரலாற்றுச் சம்பவங்கள் மரபு வழிக் கதைகளாக சில அரபு நூல்களில் காணக் கிடைக்கின்றன. இவரது ஆட்சிக் காலத்திலேயே இலங்கை, அரேபியர் களிடையே பிரபல்யம் பெற்றிருந்தமையை இதன் மூலம் ஊகிக்கலாம்.
கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்தில் இலங்கை அரேபியருக்குப் பரீட் சயமாக இருந்துள்ளதையே இவ்வரலாற்றுக் குறிப்புகள் காட்டுகின்றன. எனவேதான், இஸ்லாம் தோன்றுவதற்கு முன்னரே இலங்கையில் அரேபியக் குடியேற்றங்கள் காணப்பட்டன என்பதை தென்கிழக்கு ஆசிய வரலாற்றை ஆராந்த அனைவரும் ஏற்றுக் கொள்கின்றனர். The History of Commerce in Indian Ocean என்ற நூலில் பேராசிரியர் சிறி கந்தையா “நபியவர்கள் வேதத்தை அறிமுகம் செய்ய முன்னர் மிக நீண்ட காலத்திற்கு முன்பே இந்தியாவின் மேற்குப் பகுதிக்கும் அரபு நாடுகளுக்கும் இடையிலான வியாபாரத் தொடர்புகள் விரிந்தளவில் இடம்பெற்றன” என்கிறார்.

கி.பி. முதலாம் நூற்றாண்டளவில் இந்த வணிகத் தொடர்புகள் இலங்கையில் அரேபியர்கள் தங்கியிருக்கவும் குடியிருப்புகளை அமைத்துக் கொள்ளவும் காரணமாகியது. கிறிஸ்துவுக்கு பிந்திய முதல் நூற்றாண்டில் இலங்கை முஸ்லிம்களின் மூதாதையர்களான அரேபியர்களின் இலங்கைச் செல்வாக்கு படிப்படியாக அதிகரித்து, அக்காலை இலங்கையில் காணப் பட்ட பெரும்பாலான வணிகத் துறைமுகங்கள் அவர்களது ஆதிக்கத்தின் கீழ் வந்தன. சேர். தோமஸ் ஆர்னோல்ட் என்பவர் தனது Preaching of Islam என்ற நூலில் இது குறித்துத் தரும் தகவலை அடுத்த இதழில் நோக்குவோம்.

“கி.பி. 2ம் நூற்றாண்டில் இலங்கையுடனான வர்த்தகம் முற்றாக அவர்களின் (அரபிகளின்) கைகளிலேயே இருந்தது. கிறிஸ்தவ யுகத்தின் 7ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இலங்கையுடனான சீன வர்த்தகம் முக்கியத்துவம் பெற்றிருந்தது. ஆயினும், 8ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இலங்கையின் துறைமுகப் பகுதி களில் கணிசமான அரபிகள் குடியிருந்தனர்.” (Thomas Arnold – Preaching of Islam)
இந்து சமுத்திரத்தில் அரேபியர் கொண்டிருந்த வணிக ஆதிக்கத்தினை ஆர்னோல் டின் கூற்று எடுத்துக் காட்டுகின்றது. இக்கருத்தை உறுதிப்படுத்தும் வகையில் S.D. Goitien தொகுத்துள்ள அரேபியர்களின் வணிக நடவடிக்கைகள் பற்றிய கடிதங்களின் தொகுப்பு அமைந்துள்ளது. அவர் Letters and Documents of India on Medival Times என்னும் தனது தொகுப்பில் பின்வரும் தகவலை இணைத்துள்ளார்.

“அரபு வணிகர்கள் இந்து சமுத்திரப் பிரதேசங்களில் (மலபார், இலங்கை, மாலைதீவு) வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தவேளை அவர்கள் தமது மனைவிமார்களையும் அங்கு அழைத்துச் சேல்லவில்லை. பருவ காலங்களில் தமது மனைவியரைப் பிரிந்திருக்கும் நிலையில் அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள், இடர்பாடுகள், பிரிவுத் துயரங்களை அவர்களது கடிதங்கள் மூலம் அறியலாம்.” இத்தகைய கடிதங்களின் தொகுப்பு இன்றுவரை இந்தியாவின் தேசிய சுவடிக் கூடத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரோமர்களினதும் கிரேக்கர்களினதும் கடல் பயணங்களின் வெற்றி அரேபியர் களின் பயண அனுபவங்களிலேயே தங்கியிருந்தது. ஆயினும், கடல் பயணங் களில் அரேபியர்கள் கொண்டிருந்த அனுபவமும் ஆழமான அறிவும் கிரேக்கர் களுக்கும் ரோமர்களுக்கும் பயன்பட்ட முறைகள் இஸ்லாத்திற்குப் பின்னரே நூல்களாக எழுதப்பட்டன. இவ்வாறான அனுபவங்களை வெளிப்படுத்தும் நூல்களில் சுலைமான் அத்தாஜிர் எழுதிய நூல் மிகவும் பிரபல்யமானது. இந் நூலின் மேற்கோள்கள் பல சில்சிலதுத் தவாரீஹ் என்ற நூலில் பயன்படுத்தப் பட்டுள்ளன. இதற்கு ஒரு நூற்றாண்டுக்குப் பின்பு பிரபலமான அபூ ஸைத் என்பவரின் குறிப்புகளிலும் இலங்கைக்கும் அரேபியாவுக்கும் இடையில் நிலவிய வணிகத் தொடர்புகள் பற்றி காணக் கிடைக்கின்றது.

அரேபியர்களின் கடல் கடந்த வணிகம் இந்தியத் துணைக் கண்டத்தில் கிரேக்கர்களுக்கு முன்னரேயே தொடங்கியிருந்தது. கிரேக்கர்கள் இந்தியாவை அறிய முன்னர் அரேபியர் அதனை அறிந்திருந்ததுடன் வரலாற்றுப் புகழ்மிக்க எகிப்திய மாலுமியான ரிப்லஸ் பருவப் பெயர்ச்சிக் காற்றுகளை பயன்படுத்தும் முறையையும் அறிந்திருந்தார். பருவக் காற்றைப் பயன்படுத்தும் அறிவை மட்டுமன்றி துணிவையும் அவர்கள் கொண்டிருந்தனர் என்று Tennant Emarson (1859) குறிப்பிடுகிறார்.

பழங்கால கிரேக்க, ரோமானிய எழுத்தாளர்களும் இந்த வரலாற்று உண்மையை ஏற்றுக் கொள்கின்றனர். The Periplus of the Erythrian Sea என்னும் கிரேக்க வர்த்தகக் கைநூல் முதன் நூற்றாண்டிலேயே இலங்கைத் துறைமுகங்க ளுக்கு அரேபிய வணிகர்கள் அடிக்கடி வந்து போயினர் எனக் குறிப்பிடுகின்றது. பிலைனிங் (கி.பி.1) ஓனர்ஸ் கிரிட்டஸ் (கி.பி.3), இன்டிகோ பிரிஸ்டர்ஸ் (கி.பி. 6) ஆகியோர் தமது கிறிஸ்தவ விவரண நூல்களிலும் அக்கால இலங்கைத் துறைமுகங்களில் அரேபியர் பெற்றிருந்த வணிகச் சேல்வாக்கினை உறுதி சேகின்றனர். கி.பி. 3ம் நூற்றாண்டின் முடிவிலிருந்து ரோமர்களின் சேல்வாக்கு படிப்படியாக வீழ்ச்சியடையத் தொடங்கியது.

ஏற்கனவே சிற்சில மரபு வழிக் கட்டுப்பாடுகளுடன் இந்தியத் துணைக் கண்டத்தில் வணிகத்தில் ஈடுபட்டிருந்த அரேபியர்கள் ரோமானியப் பேரரசின் சரிவைத் தொடர்ந்து துறைமுக வணிகத்தில் முழு ஆதிக்கம் பெற்றனர். தென் கிழக்காசியாவின் வர்த்தகம் அரேபியர்களின் தனியுரிமை என்று கூறுமளவுக்கு அவர்களின் ஆதிக்கம் மேலோங்கியிருந்தது. கி.பி. 4ம் நூற்றாண்டில் ரோமப் பேரரசு முற்றாக வீழ்ந்ததனாலும் அக்கால இந்தியாவின் கடல் மார்க்க வர்த்த கத்தில் பங்கு கொள்ளாததாலும் தென் அரேபியரும் பாரசீகருமே துணைக் கண்டத் துடனான வர்த்தகத்தில் சேல்வாக்குச் சேலுத்தினர் என்று R.E. Mille என்ற வரலாற்று ஆசிரியர் கூறுகிறார்.

இக்கருத்தை Tennant Emarson தனது இலங்கை என்ற நூலில் “அரேபியர்கள் நான்காம், ஐந்தாம் நூற்றாண்டுகளில் மங்களூர், கள்ளிக்கோடு, கொல்லம், காயல்பட்டணம் போன்ற நகரங்களிலும் மலபாரின் ஏனைய துறைமுகங்களி லும் தமது வர்த்தகத்தை நிலைப்படுத்திக் கொண்டனர். ஏற்கனவே இலங்கையில் குடியேறியிருந்த தமது சந்ததிகளுடனும் அவர்கள் தொடர்பாடல்களைப் பேணினர்ச” என்று குறிப்பிடுகின்றார்.
இந்த வரலாற்றுச் சான்றுகள் அனைத்தும் இஸ்லாத்திற்கு முன்னரே இலங்கை யில் அரேபியர் குடியேற்றங்கள் இருந்ததையும் அரேபியர் வியாபாரத் துறையில் சேல்வாக்குப் பெற்றிருந்ததையும் காட்டுகின்றன. அடுத்துவரும் பத்தியில் பெரு மானார் (ஸல்) அவர்களின் காலத்தில் இலங்கைக்கும் இஸ்லாமிய அரேபியா வுக்கும் இடையில் நிலவிய வரலாற்று உறவுகள் குறித்து நோக்குவோம்.

mujthaba ahmaed

வஹ்ஹாபிப் பணம் வருவதால் இலங்கையில் இஸ்லாம் வளரவில்லை!

வஹ்ஹாபிப் பணம் வருவதால் இலங்கையில் இஸ்லாம் வளரவில்லை!


“அஜ்மான் ஸஹ்ரானி”. பலரிற்கும் தெரியாத பெயர். பெயரை தெரிந்த சிலரிற்கு அவர் புரியாத புதிர். இலங்கை, இந்தியா போன்ற தேசங்களில் தவ்ஹீத் பள்ளிவாசல்களை அமைக்க பணம் கொடுக்கும் மனிதர். எமது இஸ்லாமிய இயக்கங்களிற்கு அவர் ஒரு “தஃவாவின் கோட் பாதர்”. இன்று அரபு ஸ்டிக்கர் ஒட்டிய வேன்களில் டிப்டொப் தஃவா செய்யும் இஸ்லாமிய இயக்கங்கள் அவர் மடியில் விளையாடும் பூனைக்குட்டிகள்.

அமெரிக்காவின் (இரண்டாம் ஸியோனிஸ தேசம்) முகங்கள் பல. அதில் நோர்வேயும் ஒன்று. நாம் அறியாத முகங்களும் இப்போது வெளிவருகின்றன. அதில் ஒன்று குவைத். இலங்கையில் “இகாமத்தே தீன்” என்று முழங்கிய இஸ்லாமிய இயக்கத்திற்கு லாடம் கட்டிய தேசம். இதன் பூரண கட்டுப்பாடு ஸஹ்ரானி வசமே. சவுதி அரேபியாவின் அரம்கோ வளாகத்தினுள் பாதுகாப்பாக குடியிருக்கும் சீ.ஐ.ஏ. யின் முக்கிய பங்காளி. கட்டாரிலும் கூடாரமிட்டு இஹ்வான்களை விலை பேசும் வியாபாரி இவர்.  

இந்த பின்புல களத்தில் இலங்கையில் இன்றைய நிலை பற்றி சகேதரர் அசீஸ் நிசார்தீன் எழுதிய கட்டுரையின் பகுதி இது. நாம் சொல்ல வரும் விடயத்தை உணர்வுகளால் விளங்க முற்படாதீர்கள். மூளையினால் வடிகட்டிப் பாருங்கள். பல உண்மைகள் புரியும். 

அரபு பணம் இலங்கையில் வந்து குவிந்துக் கொண்டிருக்கிறது. பாதை நெடுகிலும் பள்ளிவாசல்கள் நாளுக்கு நாள் முளைத்துக் கொண்டிருக்கின்றன. விரல் ஆட்ட ஒரு பள்ளிவாசல், விரல் நீட்ட ஒரு பள்ளிவாசல், அது அவர்களின் பள்ளிவாசல், இது இவர்களின் பள்ளிவாசல் முஸ்லிம் சமூகம் முரண்பட்டு , பிரச்சினைப் பட்டு, பிரிந்து கிடக்கிறது. பாவம் பாமர மக்கள் ! இந்த றியால், தீனார் தஃவா காரர்களின் பின்னணி புரியாமல் நடு வீதியில் தட்டுத் தடுமாறி திணறி நின்றுக்கொண்டிருக்கின்றார்கள்.

ஒற்றுமையை உரத்துப் பேசி பேசி ஒருவரின் உதிரத்தை மற்றவர் உறிஞ்சி உறிஞ்சி குடித்துக் கொண்டிருக்கிறார்கள். வஹாபிஸம் என்ற சஊதி, குவைத் மன்னராட்சியை மறைமுகமாய் பாதுகாக்கின்ற சித்தாந்தம் பொது ம்ககளை மட்டுமல்ல அவர்களிடம் பணம் வாங்கும் கூலிப்பட்டாளத்தைக் கூட குறி வைத்து பிரித்துத் தான் வைத்திருக்கிறது.   அத்தனை இயக்கங்களும் இந்த வஹ்ஹாபி பணத்தில் வாழ்ந்துக் கொண்டிருப்பவையே.

 வஹ்ஹாபி பணத்தில் போஷிக்கப்படும் அத்தனை இயக்கங்களும் நாளுக்கு நாள் முரண்பாட்டை தமக்கிடையே வளர்த்து முரண்பட்டு பிரிந்து செல்வதை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். வஹ்ஹாபிப் பணம் வருவதால் இங்கு இஸ்லாம் வளரவில்லை. வன்முறை வளர்ந்திருக்கிறது. ஒற்றுமை குறைந்திருக்கிறது. இவையெல்லாம் உருவானது தனக்கென தனித்தனி பள்ளிவாசல் உருவாவதன் பின்னால் தான் என்ற உண்மையை நாம் பலாத்கதரமாகவே மறந்தும் இரு்க்கிறோம். தனித்தனி பள்ளிவாசலின் உருவாக்கம் ஒற்றுமையை தவிடுபொடியாக்கி இருக்கிறது.

ஒற்றுமையை சீர்குலைக்கும் தனித் தனி பள்ளிவாசல் கலாசாரத்தை இஸ்லாம் அங்கீகரிக்கின்றதா?குறைஷிக் காபிர்களால் றசூலுல்லாஹ்விற்கு கஃபாவில் வணங்க தடை வந்த போது மக்காவில் வாழத் தடை வந்த போது நபி (ஸல்) அவர்கள் என்ன செய்தார்கள்? தனது கொள்கையை மாற்றிக்கொண்டு, கஃபாவை அபூஜஹ்லுக்கும், அபூலஹபுக்கும் கொடுத்துவிட்டு மதீனாவில் கஃபாவைப்போல் பள்ளிவாசல் ஒன்றைக் கட்டிக்கொண்டு மறைந்து வாழ்ந்திருக்கலாமே? அப்படி வாழ்ந்திருந்தால் மக்கா வெற்றி என்று ஒன்று வரலாற்றுக்கு வந்திருக்குமா?

றஸுலுல்லாஹ்வின் தஃவா இஸ்லாத்தின் கொடியின் கீழ், ஒரே தலைமைத்துவத்தின் அனைவரையும் ஒன்று திரட்டுவதாகவே இருந்தது. அனைத்து கோத்திரங்களையும், குழுக்களைகயும் , கொள்கைகளையும் ஓரணியில் திரட்டி பிரிவினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள். பிரிவினையையும் பிரச்சினைகளையும் இல்லாதொழிக்கும் மத்திய நிலையங்களாக மஸஜித்கள் செயலாற்றின.

இன்று நிலைமை தலைகீழாக மாறியிருக்கிது. பிரிவினைக்காகவே பள்ளிவாசல்கள் உருவாகின்றன. உருவாக்கப்படுகின்றன. “அல்லாஹ்வின் கயிற்றைப் பலமாக பற்றிப்பிடியுங்கள். பிரிந்து விடாதீர்கள்” என்று அல்குர்ஆன் அறைகூவல் விடுகிகிறது. அல்லாஹ்வின் இல்லங்களாலேயே நாங்கள் பிளவு பட்டு நிற்கின்றோம். ஒற்றுமையாய் வாழுங்கள் என்ற அல்லாஹ்வின் அறைகூவலையே நாம் அலட்சியப்படுத்தியிருக்கிறோம். பிரிவினைக்காகவே உருவாகின்ற இந்த பள்ளிவாசல்களின் பின்னணி என்னவாக இருக்கும் என இதுவரை யாரும் சிந்திக்காமலேயே இருந்து வருகிறோம்.
தஃவா என்ற போர்வையில் நற்செயல்கள் என்ற போலி முலாம் பூசி வந்து சேர்கின்ற இந்த அரபு பணத்தின் பின்னணி என்ன? என்பதை யாரும் சிந்திக்காமல் விட்டதன் விளைவை இலங்கை முஸ்லிம் சமூகம் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறது.

தனத நாட்டில் இஸ்லாத்தைப் பாதுகாக்க முடியாத அரபிகள்,
தனது நாட்டில் மனித நேயத்தைப் பாதுகாக்காத அரபிகள்
எப்படி மற்றைய நாடுகளில் இஸ்லாத்தைப் பாதுகாக்க முடியும்?

இந்த அரபு நாடுகளில் மஸ்ஜித்கள் ஏராளம் இருக்கின்றன. ஆனால் அவர்களிடம் இஸ்லாம் இருக்கின்றதா? அந்த நாட்டுக்கு பயணம் செய்யும் மாற்று மதத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இஸ்லாத்தின் மீது ஆர்வம் வரும் அளவிற்கு அவர்களின் வாழ்க்கை இருக்கிறதா? இல்லவே இல்லை. இஸ்லாத்தின் தாயக பூமியை, அரபு பூமியை, மனித நேயத்தாலும், நீதியாலும், நேர்மையாலும் நிரப்பி அல்லாஹ்வின் தீனை பாதுகாக்க முடியாத இவர்களின் பணத்தால் இலங்கையில் இஸ்லாத்தை வளர்க்க முயல்வது மடமையிலும் மடமையன்றோ.

முஸ்லிம்களையே முட்டி மோத வைப்பதால் இஸ்லாம் எப்படி வளரும்? மாற்று மதத்தவருக்கு இஸ்லாத்தின் மீது அச்சம் அல்லவா ஏற்படும்?ஆப்கானிஸ்தானில் தாலிபான்களை உருவாக்கி அமெரிக்காவும் சஊதியும் அதைத்தானே சாதித்தன? அரபுகள் மடையர்களாக இருக்கலாம், அரபுகளிடமிருந்து பணம் பெறுகின்ற இஸ்லாமிய இயக்க யாசகர்களும் மடையர்களாக மட்டுமல்ல இஸ்லாத்தின் அடிப்படைக்கே மாறு செய்பவர்களாகவே இருக்கின்றார்கள்.

காரணம், இந்த இயக்கங்கள் அரபு அமெரிக்க செயற்திட்டத்தை தஃவாவின் போர்வையில் மனமுரண்டாக நிறைவேற்றியும் வருகின்றார்கள்.மற்றும்-அரபுகள் இஸ்லாத்தின் மீது பற்று வைத்துள்ளதாய் தோற்றப்பாட்டை உருவாக்கும்.

பள்ளிவாசல்கள் கட்டுதல்,
உழ்ஹய்யா கொடுத்தல்,
கிணறு வெட்டுதல்

போன்ற குறுகிய வேலைத்திட்டத்தை தஃவா என்ற அடைமொழிக்குள் சிக்கவைத்து பிரசாரம் செய்யும் அரபுகளின் இந்த செயற்பாட்டுக்கு பின்னணியில் ஓர் அரசியல் மறைந்து இருக்கிறது. அது அமெரிக்க ஏகாதிபத்திய அரசியலுக்குள் சிறைபட்டு நிற்கும் சஊதி மன்னராட்சியை பாதுகாக்கும் மகத்தான பணியை செய்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவிற்கு இஸ்லாத்தை உலகிலிருந்து ஒழிக்க வேண்டுமாக இருந்தால் அரபுகளின் மன்னராட்சியை அது பாதுகாத்தே ஆக வேண்டும்.

அரபுகளின் மன்னராட்சி உலகில் நிலைத்து நிற்க வேண்டும் என்றால், இஸ்லாத்தின் ஏக போக உரிமை அரபுகளிடம் இருக்கவேண்டும். அப்போது தான் இஸ்லாம் என்ற போர்வையில் தனக்கு தேவையானவற்றை கூட்டியு்ம், தனக்குதேவையில்லாதவற்றை குறைத்தும், மறைத்தும் கூற முடியும். அரபுகளின் நிதி பலத்தில் இஸ்லாமிய தஃவாவை சிறைப்பிடித்து வைப்பதன் மூலம்...

1- அமெரிக்காவினதும், சஊதியினதும் நன்மைக்காக
 உலகளாவிய ரீதியில் எழும் இஸ்லாமிய அரசியல் எழுச்சியை அடக்கமுடியும்.

2- முஸ்லிம்களின் சிந்தனையை அடிப்படை பிரச்சினைகளிலிருந்து வேறு பக்கம் திசை திருப்பி சில்லரை பிரச்சினைகளில் சிக்க வைக்கமுடியும்.

3-அரபுகளின் அரசியலுக்கேற்ப இஸ்லாத்தை கூட்டியும், குறைத்தும் வடிவமைக்க  முடியும்.

இன்று, மத்திய கிழக்கில் தனது ஆதிபத்தியத்தை உறுதிப்படுத்தி, அரபு மண்ணின் எண்ணெய் வளங்களை சூறையாடிக்கொண்டிருக்கும், முஸ்லிம் நாடுகளுக்குள் அத்துமீறி புகுந்து அநியாயம் புரிந்துக்கொண்டிருக்கும் ஏகாதிபத்திய வாதிகளின் அட்டகாங்களை தஃவாவின் போர்வையில் மூடி மறைப்பதற்கு இந்த அரபு பணத்தைப் பெறும் இஸ்லாமிய இயக்கங்கள் நன்றாகவே பயன்படுத்தப் படுகின்றன.

அரபுகளை திருப்தி படுத்தும் இவர்களது தஃவா, பணத்தை மையப்படுத்தி சுழன்று, வியாபார மயப்படுத்தப்பட்ட ஜாஹிலிய்ய சிந்தனையை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கிறது. உயிரோட்டமான இஸ்லாத்தின் கட்டளைகளை பணத்திற்கு தாரை வார்த்து அநியாயங்களையும், அக்கிரமங்களையும் அடக்கி வாசிக்கும் அளவிற்கு காசின் கைதிகளாக இவர்கள் மாற்றப்பட்டிருக்கின்றார்கள்.

கடைசியாக உங்கள் சிந்தனைக்காக சில வார்த்தைகளை தர முடியும்

ஈராக்கில் புகுந்து பத்து லட்சம் முஸ்லிம்களை கொல்வதற்கு தனது நாட்டில் அமெரிக்கா கொலைகாரர்களுக்கு தளம் அமைத்துக்கொடுத்து, அமெரிக்கா யுத்த விமானங்களுக்கு இலவசமாக எண்ணெய் வழங்கிய சஊதி அரேபியா

ஆப்கானிஸ்தானை அழிக்க அமெரிக்காவுக்கு துணைபோன சஊதி அரேபியா

பலஸ்தீன் முஸ்லிம்களைக் கொன்று குவி்த்து, முதல் கிப்லாவான பைத்துல் முகத்தஸை கபளீகரம் செய்த இஸ்ரேலின் தந்தையான, நண்பனான அமெரிக்காவை மிக மிக நேசிக்கும் சஊதி அரேபியா

இஸ்லாத்தை மறந்து புனித மண்ணில் ஆடம்பர மௌட்டீக மன்னர் ஆட்சி நடாத்தும் சஊதி அரேபியா

இஸ்லாத்தை வளர்க்க உதவி புரியுமா? அதன் பணத்தால் இஸ்லாம் வளருமா? அப்படி வளரும் இஸ்லாத்தை அதன் நேச நாடுகளான அமெரிக்காவும், இஸ்ரேலும் பார்த்துக்கொண்டு சும்மா இருக்குமா? அங்கீகரிக்குமா?
ஆயிரம் கேள்விகளை இப்படி அடிக்கிக்கொண்டே போகலாம்... ஏகத்துவ பிரசாரம் என்ற போர்வையில் எமக்கு சஊதி ஏற்றுமதி செய்திருப்பது முரண்பாடுகளை, மோதல்களை, சண்டைகளை, சச்சரவுகளை....

தமக்குள்ளேயே சண்டையிட்டுக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்திற்கு தனது எதிரியின் சதியை சரியாக புரிந்துக்கொள்ள அவகாசம் கிடைப்பதில்லை. அதுதான் சஊதிக்கும் அமெரிக்காவிற்கும் தேவை!

இதனால் ஏற்படும்

இழப்பு...
இஸ்லாத்திற்கும்
முஸ்லிம் உம்மத்திற்கும்,

இலாபம்..
அரபு மன்னர்களுக்கும்
அவர்களின் யெஹுதி நஸாரா தோழர்களுக்கும்..!!

நன்றி; யாழ் முஸ்லிம்