السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Tuesday, 23 April 2024

தலைநகரில் வரவேற்பு பதாதைகள்.






 ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் : தலைநகரில் வரவேற்பு பதாதைகள்.


செய்தி:-

**********

ஈரான் ஜனாதிபதி நாளை நாட்டுக்கு

===================================

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை மக்களுக்கு கையளிக்க ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பாகிஸ்தான் விஜயத்தின் பின்னர் நாளை (24) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.


உமா ஓயா திட்டமானது 120 மெகாவோட் மின்சாரத்தை தேசிய கட்டத்திற்கு சேர்க்கின்றதோடு, குறித்த திட்டத்திற்காக 529 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிடப்பட்டுள்ளது


அதன்படி ஒரு நாள் விஜயமாக அவர் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


பாதுகாப்பு விடயங்கள் உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி செய்ய வெளிவிவகார அமைச்சு தயாராக இருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Sunday, 21 April 2024

ஹஸன் பஸரீ. رحمة الله

 


ஓர் அடிமையின் மகனான அவர் மதினா நகரில் 642- ம் ஆண்டு பிறந்தார்.சிறுவயது முதலாக ஆன்மிகத்தில் மிகுந்த தேடல்கொண்டிருந்தார். அவரது தீவிரமான ஈடுபாடு,  மெய்ஞ்ஞானத்தின் ஆழ்நிலைகளுக்கு அவரை இட்டுச்சென்றது. நேர்மையின் உருவமாக இருந்த காரணத்தால், மனத்தில் பட்டதை யாரிடமும் வெளிப்படையாகப் பேசும் துணிவு அவரிடம் எப்போதும் இருந்தது.


“தான் காணும் யாவரும் தன்னைவிட மேலானவர் என்று கருதுவதே உண்மையான பணிவு” என்று தன்னுடைய சீடர்களிடம் எப்போதும் கூறுவார். ஒருநாள் தன்னுடைய சீடர்களுடன் வெளியே சென்றிருந்தபோது ஒருநாய் எதிரில் வந்தது. அப்போது ஒரு சீடர் அவரிடம், “தாங்கள் மேலானவரா? அந்த நாய் மேலானதா?” என்றுகேட்டார்.


“இறைவனின் தண்டனையிலிருந்து நான் விடுதலை அடையும்வரை, என்னைவிட அந்த நாயே மேலானது” என்று கூறினார். மேலும், தன்னுடைய சீடர்களைப் பார்த்து, “நாய் பசித்திருக்கும். பசித்திருத்தல் துறவிகளின் நற்பண்பாகும். துறவிகளைப் போன்று அதற்கென்று தங்குவதற்கு இடம் கிடையாது. துறவிகளைப் போன்று இரவில் சிறிது நேரமே அது தூங்கும்.


துறவிகளைப் போன்று அதற்கென்று உடைமையோ உறவோ கிடையாது. இறைவன் அளிக்கும் சோதனைகளைப் புன்னகையுடன் ஏற்றுக்கொள்ளும் துறவியைப் போன்று, தன்னை அடிக்கும் எசமானரையும் அது புன்னகையுடன் எதிர்கொள்ளும். எனவே, நாய் என்று அதை இழிவாகக் கருதாமல், அதனிடம் இருக்கும் நற்பண்புகளை உங்கள் இயல்பாக மாற்றிக்கொள்ளுங்கள்” என்று கூறினார்.


தனிமையிலேயே இருங்கள்


மறுமையைக் குறித்து அவருள் மிகுந்திருந்த அச்சத்தின் காரணமாக, சிரிப்பதையே அவர் மறந்திருந்தார். தவறுகளைச் செய்துவிட்டு பின்னர் அதற்காக வருந்தி இறைவனிடம் மன்னிப்பு கோருவதைவிடத் தவறுகளைச் செய்யாது கட்டுப்பாட்டுடனும் மாண்புடனும் வாழ்வதே நன்று என்பதே ஹஸனின் கொள்கை.


தனது வாழ்க்கையையும் இந்தக் கொள்கைப்படியே அமைத்துக்கொண்டார். பிறருக்காக அன்றி தனது உள அமைதிக்காக அவர் தவறுகளற்று வாழ்ந்தார். தெரியாமல் நிகழ்ந்த சிறு தவறுக்கும் மனம்வருந்திப் பல நாட்கள் வாய்விட்டுக் கதறி அழுவது அவரது  வாடிக்கையாக இருந்தது. தனிமையை விரும்பி ஏற்றுக்கொண்டார்.


“ஒருவரின் குறை மற்றொருவருக்குத் தெரிய வந்தால் அதன் காரணமாக நம்பிக்கையிழப்பும் பகைமையும் ஏற்படும். எனவே, இறைவனிடம் உங்கள் குறைகளைச் சொல்லும்போது தனிமையிலேயே இருங்கள்” என்று தன்னுடைய சீடர்களிடம் அது குறித்து விளக்கம் அளித்தார்.


ஒருமுறை இறந்த ஒருவரை அடக்கம் செய்துவிட்டு எல்லாரும் திரும்பிச் சென்று கொண்டிருந்தபோது, இவர் மட்டும் திரும்பிச் செல்லாமல், அங்கேயேஅமர்ந்திருந்து வாய்விட்டுக் கதறி அழுதுகொண்டு இருந்தார். அவரை யாராலும் சமாதானப்படுத்த முடியவில்லை.


அவர் அழுவதைப் பார்த்து,அவருடைய சீடர்களும் அழத் தொடங்கினர். அங்கிருந்த மக்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அங்கிருந்த முதிய மனிதர் ஒருவர் ஹஸனைப் பிடித்து உலுக்கி அழுவதற்கான காரணத்தைக் கேட்டார்.


  “இந்தப் பிறப்பின் முடிவும் மறுமையின் தொடக்கமும் இந்தப் புதைகுழிதான். உங்களது வாழ்வின் முடிவு இதுவாக இருக்கும்போது இதுகாறும் நீங்கள் எதைக் கண்டு பெருமையடைந்தீர்கள்? மறுமையின் தொடக்கமும் இந்தக் குழிதான் எனும்போது, நீங்கள் எதைக்கண்டு அச்சமற்றவராக வாழ்ந்தீர்கள்?” என்று அந்த முதியவரிடம் ஹஸன் திருப்பிக் கேட்டார். அதைக் கேட்டுஅங்கிருந்த மக்கள் அனைவரும் வாய்விட்டு அழத் தொடங்கினர்.


சிறிது நேரம் கழித்து அங்கிருந்த மக்களை நோக்கி, “செம்மறியாடுகூட, இடையனின் சத்தம் கேட்டதும், மேய்வதை விட்டுவிட்டு, அவனது திசை நோக்கிக் குதித்து ஓடும். ஆனால், மனிதனோ தனது மன இச்சைக்கு அடிபணிந்து, இறைவனையே மறக்கும் நிலைக்குச் செல்கிறான். மனத்தின் இச்சையை அகற்றாவிட்டால் இறைவனைக் காண முடியாது என்பதை ஒருபோதும் மறக்காதீர்கள்” என்று கூறினார்.


துறவியாக இருந்தபோதும் பல்வேறு மார்க்கப் போர்களில் ஹசன் பங்கேற்றுள்ளார். எப்போதும் தூய ஆடைகளையே அவர் அணிவார். அவருள் நிறைந்திருக்கும் ஞானத்தால், அவரது அழகிய முகம் எப்போதும் ஒளிர்ந்தவிதமாக இருக்கும்.


இனிய குரலுக்குச் சொந்தக்காரர். அவர் ஆற்றும் உரை, கேட்பவரை மெய்மறக்கச் செய்யும், ஞானக்கடலில் நீந்தச்செய்யும், கடவுளுள் கரையச்செய்யும். மக்களை ஆன்மிகப் பாதையில் மடைமாற்றிவிட அவரது பார்வை ஒன்றே போதுமானதாக இருந்தது.


சூபி உலகுக்கு ராபியா பஸரீ போன்ற எண்ணற்ற ஞானிகளை அவரது சொல்லும் வாழ்வும் அளித்துள்ளது. திருக்குர்ஆனுக்கு அவர் எழுதியுள்ள விளக்கவுரை, இன்றும் ஆகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது.  அவர்அளவுக்குப் பெயரும் புகழும் கொண்ட ஞானி எவரும், இந்த உலகில் இதுகாறும் பிறக்கவில்லை.


கி.பி. 728- ல் இவ்வுலகைவிட்டு அவர் மறைந்தார்


Monday, 8 April 2024

காணவில்லை


ஒரு முறை முஹம்மது நபி (ஸல்) அவா்கள் ஸஹாபாக்களுடன் 

உரையாடிக் கொண்டிருக்கும் போது

ஒருவா் மிக வேகமாக ஒடி வந்து , சபையி்ல் கவலை கலந்த முகத்தோடு சொன்னாா்.


யா ரஸூலல்லாஹ் ! "என் மகனைக் 

காணவில்லை,

பல இடங்களில்

தேடியும் கிடைக்கவில்லை,

தாங்கள் என் மகனுக்காக அல்லாஹ்விடம் பிராா்த்தனை

செய்யுமாறு வேண்டி கேட்டுக்

கொண்டாா்". 


அப்பொழுது அந்த சபையிலிருந்த ஒரு

ஸஹாபி எழுந்து சொன்னாா் ..

யா ரஸூலல்லாஹ்! எனக்கு இவருடைய

மகனைத் தெரியும், 

அந்தக் குழந்தை 

நான் வருகின்ற பாதையில்தான்

விளையாடிக் கொண்டிருக்கிறது".


"அதைக் கேட்ட குழந்தையின் தந்தை 

அவசர, அவசரமாகப் புறப்பட ஆயத்தமானாா்.


"நபி (ஸல்) அவா்கள் அவரை அழைத்துக் கேட்டாா்கள்


"தாங்களுக்கு இவ்வளவு அவசரமா ? 


அவா் கூறினாா் 

" யா ரஸூல்லாஹ்!  

தாங்களுக்குத் தெரியாதா ஒரு 

தந்தையின் மனதேனை "


"என்னுடைய மகனை காணாமல் 

நானும் என்னுடைய மனைவியும்

மிகவும் சோகத்திலுள்ளோம்"


"என் மனனவி, மன வருத்தத்துடன் என் மகனை எதிர்நோக்கி வாசலில்

காத்துக் கொண்டிருக்கின்றாள். ஆகவே

நான் அவசரமாக அவனை பாா்க்கப் போகின்றேன்" 


நபி(ஸல்) அவா்கள் கூறினாா்கள், 

தாங்கள்

மகனைக் காணாத மனவேதனையில்

இருக்கின்றீர்கள் என்பது தெரியும்,

ஆனால் தாஙகள் உங்களுடைய 

மகனை நேரில் சந்திக்கும போது,

தாங்களுக்கும் அறியாது, பாசத்தின்

இனிமையில், அன்பால் அவனைக் கொஞ்ச 

நேரிடும்,


"ஆனால் விளையாடிக் கொண்டு

இருக்கும் குழந்தைகளின் கூட்டத்தில்

சில சமயங்களில் யத்தீமான (அனாதையான) குழந்தைகளும் இருக்கலாம்" ..


"அது உங்களுக்குத் தெரியாது,

அன்போடு,

 மகனே ! என்று அழைத்து உறவாடும் போது யத்தீம் மக்களின் 

மனது வேதனைப்படலாம்" ..


" என்னுடைய தந்தை இருந்திருந்தால்

இதுபோல் என்னையும் அன்போடு

அழைத்து கொஞ்சி இருப்பாரே என்று பிஞ்சு இதயம் வலிக்கக்கூடும்".


"எனவே தாங்களின் வீட்டிற்குச் சென்று

மகனின் மீதுள்ள அன்பை 

வெளிப்படுத்துங்கள்" என்றார்கள்.


" நினைவில் வைத்துக் கொள்வோம்"


இதேபோல விதவையின் முன்னில் வைத்து தன்

மனைவியோடு அன்பு பாராட்டாதீர்கள்.


ஏழைகளின் முன்னில் தன்னுடைய செல்வத்தைக் குறித்து பெருமையாக பேசாதீர்கள் " ..


" அல்லாஹ், ரப்புல் ஆலமீன் 

நம்முடைய குழந்தைகளை 

ஸாலிஹான மக்களாக ஆக்கி,

நாட்டிற்கும், சமுதாயத்திற்கும்,

வீட்டிற்கும் நன்மை சோ்க்கும் மக்களாக ஆக்கி அருள்புரிவானாக!

ஆமீன்! யாரப்பல் ஆலமீன்.♥️

Friday, 5 April 2024

ஏறாவூரும் செய்ஹுனாவும்

#இன்று ஏறாவூர் #மீராகேணி கலந்தர் வீதியில் அமைந்துள்ள ஹமத் மஸ்ஜிதில் இன்றைய தினத்தில் மறைந்த  மரியாயாதைக்குரிய எங்கள் செய்ஹு நாயகம் ஞான பிதா அஷ் ஷெய்க் அப்துல் காதிர் ஸுபி காதிரி வர் ரிபாயீ மற்றும் மறைந்து வாழும் அவர்களின் கலீபாக்களின் மீதும் மற்றும் இப்பள்ளிவாயலை கட்டுவதற்கு மிகவும் கஷ்டப்பட்டு உழைத்த மர்ஹும் எனது நண்பர் மெளலவி ரிஸ்வி முஸ்தபி அவர்களுக்கும் இப்பள்ளிவாயலுக்கு உதவிகள் செய்த அனனவருக்கும் சங்கையான மாதத்தில் புனிதமான தினத்தில் புனித அல் குர்ஆன் ஓதப்பட்டு தமாம் செய்யப்பட்டது. 


#இந்நிகழ்சிக்கு சிறப்பாக நடைபெற உதவிகள் செய்தவர்களுக்கும் இப்பள்ளிவாயலைச் சுற்றியுள்ள ஏழைகளுக்கு நோன்பு திறக்க கன்ஜி கொடுத்து உதவிகள் செய்த எல்லா நல்ல உள்ளங்களுக்கும் அல்லாஹுவின் அருள் கிடைக்க வேண்டும் என பிராத்தனை செய்யப்பட்டது.


#இறுதியாக எங்கள் அப்துல்காதிர் ஸூபி நாயகத்தைப் பற்றியும் அவர்களின் கராமத் பற்றியும் மிகவும் சிறப்பாக உரை நிகழ்த்தினார்கள்.


#சங்கைக்குரிய மெளலவி முன்னால் ஏறாவூர் உலமா சபைத்தலைவர், முன்னால் காழி நீதிபதி,முன்னால் நகர சபை முதல்வர் மெளலவி அப்துல் மஜீத் மிஸ்பாஹி காதிரி 


இப்தார் ஸலவாத்துடன் இந்நிகழ்வு நிறைவு பெற்றது.













































அபூ பக்கர் ரலியல்லாஹு அன்ஹு

 

#மனது #நெகிழ்ந்தது .

தினமும் அதிகாலைத் தொழுகைக்குப் பின்னர் அபூபக்கர் (ரலி) அவர்கள், பள்ளிவாசலை விட்டு வேகமாக வெளியேறி மதீனாவின் எல்லையில் இருக்கும் ஒரு குடிசை வீட்டுக்குச் செல்வதையும் சற்று நேரத்திற்குப் பின்னர் அங்கிருந்து வெளியேறுவதையும் உமர் (ரலி) கவனித்தார்.


அபூபக்கர் (ரலி) எனென்ன நல்ல காரியங்கள் செய்கிறார் என்பது பெரும்பாலும் உமர் (ரலி) அவர்களுக்குத் தெரியும். ஆயினும் இந்த விஷயம் மட்டும் தெரியவில்லை.


நாட்கள் நகர்ந்தன. கலீஃபா அபூபக்கர் (ரலி) அவர்களோ தொடர்ந்து அந்த குடிசை வீட்டுக்குச் சென்று கொண்டே இருந்தார். அங்கு சென்று அவர் என்ன செய்வார் என்பதும் உமர் (ரலி) அவர்களுக்குத் தெரியாமலே இருந்தது.


ஒருநாள்….

அபூபக்கர் (ரலி) வெளியே சென்ற பின்னர், அந்த குடிசைக்குச் சென்று என்ன நடக்கிறது என்பதை பார்த்தே தீரவேண்டும் என்ற முடிவுக்கு வந்தார் உமர் (ரலி).


குடிசைக்குள் நுழைந்தார்… வயதான பார்வையற்ற நடக்க இயலாத ஒரு மூதாட்டி இருப்பதைக் கண்டார். 


பின்னர் குடிசையைக் கவனித்தார். கண்ட காட்சி ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.


கண் தெரியாத இந்த மூதாட்டி அபூபக்கர் (ரலி) அவர்களின் உறவினராக இருக்குமோ என்ற எண்ணத்தில் அவரிடம் உமர் (ரலி) கேட்டார்:


"தினமும் ஒருவர் இங்கே வருகிறாரே அவர் இங்கு வந்து என்ன செய்வார்?”


மூதாட்டி: "அருமை மகனே, அல்லாஹ்வின் மீது ஆணை! அவரைக் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. தினமும் காலையிலேயே இங்கு வருவார். வீட்டைத் துடைத்து சுத்தம் செய்வார். 

ஆட்டிலிருந்து பால் கறப்பார். எனக்கு உணவு சமைத்துத் தருவார். பின்னர் எதுவும் பேசாமல் திரும்பிவிடுவார்”.


அது கேட்ட உமர் (ரலி) குலுங்கிக் குலுங்கி அழுதவராக வீட்டைவிட்டு உடனே வெளியேறிவிட்டார்.


அபூபக்கர் (ரலி) மரணித்த பின்னர், அந்த மூதாட்டிக்கு பணிவிடை செய்யவேண்டும் என்றும் அபூபக்கர் (ரலி) மரணமடைந்த செய்தியை அந்த மூதாட்டிக்குத் தெரிவிக்க வேண்டாம் என்றும் உமர் (ரலி) தீர்மானித்தார்.


அந்த குடிசைக்குச் சென்றார். முதல் நாளே அந்த மூதாட்டி கேட்டார்:


"உமது நண்பர் மரணித்துவிட்டாரோ…?”


உமர் (ரலி) திடுக்கிட்டார். திகைப்புடன் கேட்டார்: "உங்களுக்கு எப்படி அது தெரிந்தது?”


மூதாட்டி: நீர் எனக்கு உண்ணத் தரும் பேரீத்தப் பழத்தை விதை நீக்காமல் தருகிறீர். உமது தோழர் விதை நீக்கித் தருவார்”.


நடுங்கத் துவங்கிவிட்டார் உமர் (ரலி).

நிற்க முடியாமல் தரையில் அமர்ந்தார். கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது.


அப்போதுதான் அந்தப் புகழ்பெற்ற வாசகத்தைக் கூறினார் உமர் (ரலி):


"உமக்குப் பின்னர் வரவிருக்கும் கலீஃபாக்களுக்குப் பெரும் சுமையை விட்டுவிட்டுச் சென்றுவிட்டீரே அபூபக்கரே…!”


இப்போது நாம்… 


அபூபக்கர் (ரலி) அவர்களுக்காக அழுவதா…?


உமர் (ரலி) அவர்களுக்காக அழுவதா..?


அல்லது கொஞ்சம் கொஞ்சமாக நம்மை விட்டு அகன்று கொண்டிருக்கும் நல்ல பண்பாடுகளுக்காக அழுவதா…? தெரியவில்லை.


மரணிக்கு முன் நல்ல சுவடுகளை விட்டுச் செல்வோம். ஏனெனில் நாம் விட்டுச் செல்லும் சுவடுகள் அனைத்தும் பதிவு செய்யப்படுகின்றன.


"அவர்கள் விட்டுச் சென்ற சுவடுகளையும் நாம் பதிவு செய்து கொண்டிருக்கிறோம்” 

(36:12)


Copied

Wednesday, 3 April 2024

சூபி நாயகம் குப்பியாவத்தை

 



இலங்கை ஏட்டின் புகழாரம்:

****************************

 

    இலங்கையின் புகழ் பெற்ற தமிழ் நாளேடான தினகரன் 'ஆலமுல்இஸ்லாம்' பகுதியில் ஷெய்குனா ஸூபி ஹஜ்ரத் அவர்கள் மறைந்த நாற்பதாம் நாள் கத்முல் குர்ஆன் விழாவினையொட்டி சிறப்புக் கட்டுரை ஒன்று வெளியிட்டது.அக்கட்டுரையில் ஈழத்தில் ஷெய்குனா அவர்கள் ஆற்றிய அரும் பணி பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த கட்டுரையின் சுருக்கம்இதோ:

    

  பஸ்அலூ அஹ்லத் திக்ரி இன்குன்தும் லா தஃலமூன்'; என்ற இறை வசனம் நீங்கள் அறியாதவராக இருந்தால் இறைதியான சிந்தையுடைய அறிஞர்களிடம் கேட்டுத் தெரிந்துக் கொள்வீர்களாக! என்ற பொருள் தருவதை உணர்ந்த எண்ணற்ற முஸ்லிம்களால் 'ஷெய்க்'; என்றும் 'ஸூபிஹலரத்' என்றும் அழைக்கப்பட்ட பெரியார் மௌலானா மௌலவி அல் ஆலிமுல் பாஜில் அல்ஹாஜ் ஷெய்க் அப்துல் காதிர் ஸூபி ஸித்தீகி காதிரி காஹிரி நக்ஷபந்தி அவர்கள்!

   

  தமிழகத்திலிருந்து ஈழத்திற்கு முன்னைய காலங்களில் சன்மார்க்க விஜயம் செய்து இஸ்லாமிய சமயப் பணியாற்றி இந்த நாட்டில் இஸ்லாமிய உணர்வு தழைத்தோங்க வழிகோலிய மார்க்க உலமாக்களை நாம் மறக்க முடியாது. அத்தகைய சாலிஹான சமயப் பெரியார்களில் காயல்பட்டணத்தைச் சேர்ந்த இந்த ஸூபி ஹஸரத் குறிப்பிடத் தகுந்த ஒருவராவார்.


    தற்காலத்தில் நம்மவர் நடுவே இஸ்லாமிய சமயப் பணியாற்றி மெஞ்ஞான வழியின்பால் இஸ்லாமிய இதயங்களை ஈர்த்து சமய உணர்வு பேரின்பமாகப் பெருகியோட வழி சமைத்து நம்மவர் நடுவே வாழ்ந்து மறைந்தவர் இந்த ஸூபி ஹஸரத்தாகும்.

   

   நம் நாட்டு அரசியலில் பங்கேற்றுள்ள சகல கட்சிகளையும் சார்ந்த முஸ்லிம் தலைவர்கள் உட்பட நம் இலங்கை சமுதாயத்தின் சகல துறைகளையும் சேர்ந்த பல முக்கியஸ்தர்கள் சாதாரணமானவர்கள் என்று பலர் இப்பெரியாரின் மார்க்க உபன்னியாச பயானில் ஈர்க்கப்பட்டு இந்த ஷெய்கிடம் முரீது பெற்று ஞான சிஷ்யர்களாகத் திகழ்வதை மறுக்க முடியாது. மேமன்பாய் சமூகத்து சகோதரர்கள் இப்பெரியாரை 'பீர்பாபா' என்று பேருவகையுடன் அழைக்குமளவிற்கு அவர்களிடம் இப்பெரியாருக்கு பெரு மதிப்பு இருந்தது.

    

   தப்லீக் என்றால் என்ன? தப்லீகின் தாத்பரியம் யாது? அதன் ஸ்தாபகர் யார்? ஸ்தாபகரின் கொள்கை யாது? நபி நாயகம் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் செய்த தப்லீக் யாது? அதற்கும் இதற்குமுள்ள வேறுபாடுகள் யாவை? என்பன போன்ற வினாக்களுக்கு மிகத் துணிவாகவும் ஆதாரப்பூர்வமான நிறுவுதல்களுடனும் விளக்கம் தந்த ஒரே பெரியார் இந்த ஸூபி ஹஸ்ரத்தான் என்றால் அதை விருப்பு வெறுப்பற்ற விஷயம் தெரிந்தவர்கள் மறுக்க மாட்டார்கள்.

    

  இவர் தன் முரீதுகளுக்கு வழங்கி வந்த ஞானப் பயிற்சி சொல்லுந்தரமன்று. வாராவாரம் ஹிஸ்புல்லாஹ் ஸபையினர் நாடெங்குமுள்ள ஸூபி மன்ஸில்களில் நடத்தி வரும் ராத்திபு – திக்று மஜ்லிஸ்கள் பல நூறு இதயங்களை ஞான வழியின்பால் ஈர்த்து முரீதீன்களாக்கி வருவது குறிப்பிடத் தக்க அம்சமேயாகும்!

ஷெய்குனா அவர்களைக் குறித்து இலங்கை ஏடு சூட்டியுள்ள புகழாரம் இது!

 

   உண்மையாம் மார்க்கத்தின் தூய கொள்கையெனும் வித்துக்களை சமுதாய மக்கள் தம் உள்ளப் பரப்பில் விதைத்து செழித்து வளர வைத்து உயரிய வாழ்வு ஈருலகிலும் பெறத்தக்க வழி சமைத்துத் தந்த – மாறுபட்ட கொள்கைகளில் வேறுபட்டவர்களின் தவறான வழிகாட்டுதல்களை மக்களுக்கு சுட்டிக் காட்டி – அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தின் அழகிய பாதையினை சிறப்பாக விளக்கித் தந்த எங்கள் ஷெய்குனா 

  

   சத்தியத்தின் பேரொளியாய் நின்றுலவி 

 சகலோர்க்கும் நல்வழி புகட்டிய 

 சத்தான சன்மார்க்க சீலர்

 ஷரகின் வழி நின்ற தீரர்.

  

    இன்று புற வாழ்வில் நம்முடன் இல்லை! ஆயினும் மகோன்னதம் மிக்க அந்த மாமேதை அவர்களால் வகுத்துத் தரப்பட்ட நெறி முறைகள் நம் முன் இருக்கின்றன!

 

பூ ரத மனதில் புகழ் இறை

பொங்கிய அருட் சுனையை

நா ரதம் ஏந்தி

நயமுடன் தந்தவரே!

சாந்தமும் சத்திய வேத நன்னூலின்

சாறும் கலந்ததனை

எமக்கீந்தவரே!

  

 எம் இனிய ஷெய்குனா! நுங்கள் வழியில் அயராது நாங்கள் உழைத்துய்ய எல்லா அருளும் பெற்றிட வல்லான் இறையிடம் உங்களை வஸீலாவாக்கி வேண்டுகிறோம்!

  

  அருளாளன் அல்லாஹ் ஷெய்குனா அவர்களின் பொருட்டினால் நம் பிழைகள் பொறுத்து வகையான வாழ்வினை ஈருலகிலும் ஈந்தருள் புரிவானாக! ஆமீன்.


ஷெய்குனா அவர்களின் கலீபாக்கள்:-


1. மௌலானா மௌலவி அல் ஹாஃபிழ் H.N.ஷெய்கு அப்துல் காதிர் ஆலிம் மஹ்லரி மலேஷியா வாப்பா அவர்கள்


2. மௌலானா மௌலவி அல்ஹாஜ் S.M.H. முஹம்மதலி ஸைபுத்தீன் ஆலிம் ரஹ்மானி பாகவி அவர்கள்


3.மௌலானா மௌலவி அல்ஹாஜ் அஸ்ஸெய்யிது முஹம்மது ஜலாலுத்தீன் பூக்கோயா தங்கள் அவர்கள்


4. மௌலானா மௌலவி அல்ஹாஜ் ஊண்டி M.M. செய்யிது முஹம்மது ஆலிம் பாகவி அவர்கள்


5. மௌலானா மௌலவி ஹனீபா ஆலிம்(இலங்கை) அவர்கள்


ஆகியோரை தங்களது கலீபாக்களாக நியமித்துச் சென்றார்கள்.


நூல்: ஸூபி ஹழ்ரத் நினைவு மலர்