السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Sunday, 3 August 2025

அபூ ஸாலிஹ் தைக்கா.

புன்னக்குடா விதியிலுள்ள

அபூ ஸாலிஹ் தைக்கா.

உருவான வரலாறு.

1990 முந்திய காலங்களில் இந்திய உலமா பெருந்தகைகள் இலங்கை வருவதும். சில நாட்கள் தங்கியிருந்து பல பாகங்களுக்கும் செல்வது வழக்கமாக யிருந்தது.

அந்த வருகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூரக்க அதிகமாக சூபி ஷேஹ் மார்கள்

வருவது.

நமதூரக்கிடைத்த சிறப்பு.

அலஹம்துலில்லாஹ்.

விடயத்தக்க வருவோம்....

அபூஸாலிஹ் தைக்கா காணியானது.

பனமரத்தார் என்று செல்லமாக அழைக்கப்படும் அந்த நபருடைய பூர்வீகக்காணியாக இருந்தது.

அந்தக் காணி வெற்றுக்காணியாக யிருந்தால் ஒலைக்கொட்டில் கட்டப்பட்டு குர்ஆன் மத்ரஸா இடம் பெற்றது. யாவரும் அறிந்ததே.

பனமரத்தாரது பரம்பரை தற்போது முன்றாவது தலை முறையும் ஊரிலுள்ளது.

பனமரத்தாரக்க பணத்தேவை வந்த போது இந்தக் காணியை அடகு வைத்துள்ளார் சிறிய தொகைக்க இருவருடமாகியும் மீளா முடியாது போனதால் காணி ஏல விற்பனைக்க வந்தது.

கடந்த காலங்களில் ஏலத்தக்க விற்பனை செய்வதை அறிவிக்க பரை அடித்த விளம்பரப் படுத்துவர்.

இவ்வாறு விற்பனைக்க வந்த காணியை யாரும் வாங்கக் கூடாது.

என்று பனமரத்தார் ஆவேசமாக பேசித் திரிந்தார்.

ஏலத் திகதி அன்று கிராம நீதி மன்ற வீதியில் வசித்த வந்த நபரை அழைத்தார் சரிபிய்யா இக் காணியை வாங்கிப் போடு. என்ற அறிவுரைக்க அமைய இந்தக்காணியை 

அந்த தம்பி போடியார் வாங்கினார்.

இதனை அறிந்த பனமரத்தார் (வன்டில் மாடு வைத்திருந்தார்.)

பதுளை வீதியாக வந்த தம்பி ஹாஜியரது ஹவஸக்கி மோட்டார் சைக்கிளை நிறுத்தி அந்தக்காணியை வாங்கிய உன்னை வண்டில் மாட்டால் குத்திக் குரல்வலை எடுப்பேன் என்று வாக்கு வாதமாகி களைந்த கதையுமுண்டு.

பனமரத்தாரக்க காணி யை இழந்ததை விட கௌரவம் பார்ப்பது நமது மூததையர்களின் மரபாக இருந்தது.

ஏலத்தில் விற்பனை யானதை தரக்குறைவாக நினைத்து வந்த கோபமே அது.

இவ்வாறு வாங்கப்பட்ட காணியில் மத்ரஸா இடையூறாது நடை பெற்றது. இந்தக்காலப்பகுதியில் தற்போதைய

நகர சபை பட்டினசபையாக இருந்தது.

இதில் தம்பி ஹாஜியார் காணிப் பெயர் மாற்றம் செய்தார்.

அந்த ஒரிஜினல் பிரதியுமுண்டு அவரிடம்.

இந்தக்காணியில் காலப்போக்கில் மத்ரஸா பிள்ளைகள் அஸர் தொழுவது வழக்கமாகி அந்த சமயத்தில் அயலிலுள்ளவர்களும் கலந்து பள்ளியாக மாறுவதை கண்ட தம்பி ஹாஜியார்.

எனது அனுமதி பெறாமல் செய்வது தவறு என்று கோபமாக சண்டை ஒன்றும் நடந்தது.

இப்பள்ளிவாயல் அருகிலே LTTE காரியாலம் ஒன்று.

இதில் ஓட்டுப்பள்ளி காணின்ட உம்மா மகன் சரிபுத்தீன் பொறுப்பதிகாரியாக இருந்தார்..

இவரை சரிவு என்று அழைத்தனர். இவரது நண்பர்கள் பதுர் ஒரு கூறுப் இருந்தது.

தம்பி ஹாஜியாரிடம் விசாரித்த சரிவு தவறு என்று. கூறி கலைந்து விட்டனர்.

ஒரிறு நாட்கள் பிறகு சிறிய பள்ளியாக இயங்கிய இந்தப் பள்ளிக்க நடு இரவில் கிரினட் எரியப்பட்ட ஒரு பகுதி சேதமாக்கப்பட்டது.

இந்தக் காலப்பகுதியில் வந்து போன அபூஸாலிஹ் தங்கள் வாப்பா கொழும்பிலிருந்து அழைப்பு விடுத்தார்.

ஏறாவூர் தம்பி ஹாஜியாரை.

அவரைச் சந்திக்கப்போன தம்பி ஹாஜியாரக்க 

ஒரு விடயத்தை சொல்லி பிரச்சனை யை சுமூகமாக தீர்த்து வைத்தார்.

அவர் சொன்ன விடயம் நாளை மறுமையில் உனக்க அல்லாஹ் வின் ஒரு மாளிகை வேண்டுமா.

அந்த நிலம் வேண்டுமா.

இவ்வாறே நமது முன்னோர்களை ஷேஹனாக்கள்

தங்கள் மார்கள்

குடும்ப பிரச்சனை யாகட்டும்.

சகல பிரச்சனை களையும் பள்ளியிலயே சமரசமாக்கினர்.

யாரும் பொலிஸ் நிலையத்தக்கோ

கோட்வாசல்களில்

நமது முஸ்லீம் போவது மிகவும் அரிது.

அதனாலே முஸ்லீம்களக்க 

அதிக மதிப்பு இருந்தது.

இன்றைய நிலமை

தலைகீழ்.

பின்னர் அபூஸாலிஹ் தைக்காவாக இயங்கியது.

இவரது மகன் ஜேர்மனியிலுள்ளார்.

அனைவரும் கபுராலியாகப் போனார்கள்

அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொள்வானாக

தொடரும்

M Nadheem Fb

Thursday, 10 April 2025

புதிய வரவுகள், முஸ்லிம்களே! எச்சரிக்கை!

புதிய வரவுகள், முஸ்லிம்களே! எச்சரிக்கை!

 மக்களை வழிகெடுத்து ஈமானைபிடுங்கியெடுக்கும்  புதிய வரவுகள், முஸ்லிம்களே! எச்சரிக்கை!  

••••••••••••••••••••••••••••••••••••••••

மௌலவி, பாஸில் , ஏ.எல். பதுறுத்தீன். ஷர்க்கி, பரேலவி, ஸூபி ,காதிரி, நக் ஷபந்தி .

************************************

உலகத்தில் தோன்றிய அனைத்து  நபிமார்கள், மற்றும் அனைத்து படைப்புக்களிலும் பயகம்பர் நபிகள் கோமான் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள்தான் உயர்ந்தவர்கள், மேலானவர்கள் என்பது முஸ்லிம்களின்  அசைக்க முடியாத நம்பிக்கை, இதில் எந்த சிறு கருத்து வேறுபாடும்  முஃமின்கள் மத்தியில் கிடையாது,  இதுபற்றி திருக்குர்ஆன் , திரு நபிமொழி கள், இஸ்லாமிய அறிஞர்களின் கூற்றுக்கள் ஆதாரமாக உள்ளன, 

அண்மைக்காலமாகதமிழ்நாட்டில் சில முஸ்லிம் பெயர்தாங்கிகளான  யூத கைக்கூலிகள் இதில்   புதுக்ருத்தை தூவி மக்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்,  இவர்களின் வாதப்படி ,ஹளறத் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களை விடச்சிறந்தவர்கள், ஏனெனில் திருக்குர்ஆனில் ஹளறத் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாமவர்களை அல்லாஹுத்த ஆலா " கலீல்" நண்பர் என்று கூறியுள்ளான், நபிகள் நாயகம் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களை இவ்வாறு திருக்குர்ஆனில் எங்கும் குறிப்பிட வில்லை , ஆகவே , நபிகள் நாயகம் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்களை விட ஹளறத் கலீலுள்ளாஹ் செய்யிதுனா இப்றாஹீம் அலை ஹிஸ்ஸலாம் மேலானவர்கள். 

மக்களைக் குழப்பி வழிகெடுப்பதை தனது வாழ்நாள் பணியாகக்கொண்டு செயல்படும்  ஒரு விஷக்கிருமியின் வாதமிது !

 மேலொட்டமாகப் பார்ப்பவர்கள் இவர் பேச்சில் ஏதோ உண்மையிருப்பதாக சந்தேகிக்கலாம், ஆனால், திருக்குர்ஆன் , திருநபி உள்ளட்டவையை ஆழமாக நோக்குவோருக்கு இது திட்டமிட்டு புனையப்படும் அடிப்படையற்றது என்பது புரியும், 

மேலும் , குறித்த நபரோ, வழிகேடர்களான எவருமோ முன்வைக்கும் எதுவும் அவர்களின் சொந்தக்கருத்துக்கள் அல்ல! ஏற்கனவே பேசப்பட்டு பதில்கூறப்படு மூடுவிழா செய்யப்பட்டவை, அவற்றை  இப்போது இவருக்குப்பின்னாலிருப்பவர்கள் கிளறியெடுத்துத்  தொகுத்து வழங்குகின்றனர், உண்மையில் இவர்கள்ஓர் உதுகுழல் மட்டுமே!   

ஆகவே, முதலில் , நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் சிறப்புக்களைத் தக்க நியாயத்தோடு முன்வைப்போம், அடுத்து "குல்லத் " விளக்கத்தையும் ஆராய்வோம்.

அல்லாஹுத்த ஆலா கூறுகின்றான்.

تلك الرسل  فضلنا بعضهم علي  بعض 

இவர்கள் ரசூல்மார்கள் அவர்களில் ஒருவரை மற்றவர்களை காண சிறப்பாக்கி யிருக்கின்றோம். 2: 253

சங்கையான நபிமார்கள் ( அலைஹிமுஸ்ஸலாம்) கூட்டத்தில்  ஒருவரை விட, மற்றவருக்குச்  சிறப்புகள் வழங்கப்படுள்ளன,  இவர்களுள் நபிகள் கோமான் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் பல விதங்களில்  சிறப்பானவர்கள், உயர்ந்தவர்கள் என்பதற்கு  பல நியாயங்கள் உள்ளன, அவை வருமாறு,

ஆதாரம்: 1

1-  وما ارسلناك الا رحمة للعلمين.

அகிலத்தார்களுக்கு அருளாகவே அன்றி உம்மை நாம் அனுப்பவில்லை. 21: 107

அகிலமனைத்திற்கும் றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் றஹ்மத்தாக இருப்பதாயின்,  நிச்சயமாக அன்னார் அனைத்து படைப்பினங்களை விடவும் மேலானவராக இருந்தாக வேண்டும்.

 ஆதாரம் : 2- 

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான். 

ورفعنا لك ذكرك 

இன்னும், நாம் உமக்காக உமது கீர்த்தியை உயர்த்தினோம். 94: 4

அல்லாஹுத்த ஆலா றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் முபாறக்கான திருப்பெயரை  தனது திருநாமத்தோடு திருக்கலிமாவில், அதானில், அத்தஹியாத்தில், சேர்த்துள்ளான், இவ்வாறு ஏனைய நபிமார்களின் திருப்பெயரை இணைக்கவில்லை

 ஆதாரம் : 3-  

அல்லாஹ்வுக்கு வழிப்படுவதை   றஸூலுக்கு வழிப்படுவதோடு இணைத்துக் கூறியுள்ளான், 

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான். 

من يطع الرسول فقد اطاع الله

எவர் றஸூலின் சட்டத்திற்கு வழிப்பட்டாரோ,அவர் அல்லாஹ்வின் சட்டத்திற்கும் வழிப்பட்டார்  . 4:  80

நபிகளாரிடம் பைஅத் பெற்றதை தன்னிடம் பைஅத் பெற்றதாகக்கூறியுள்ளான்.

ان الذين يبايعونك انما يبايعون الله  يد الله فوق ايديهم.

எவர், உம்மிடம் பைஅத் பெற்றார்களோ  அவர் அல்லாஹ்விடமே பைஅத் பெற்றார்கள், அவர்களின் கரங்களுக்கு மேல் அல்லாஹ்வின் கரம் உள்ளது. 

48 : 10

தன்னுடைய கண்ணியத்தோடு றஸூலின் கண்ணியத்தையும் தொடர்படுத்தியுள்ளான்.

ولله العزة ولرسوله 

இன்னும், கண்ணியம் அல்லாஹ்வுக்கும், இன்னும் அவனுடைய றஸூலுக்குமாகும்.

63: 8 

இன்னும், தனது ஹபீபின் பொருத்தத்தோடு தன்னுடைய பொருத்தத்தையும் சேர்த்துள்ளான்.

والله ورسوله احق ان يرضوه 

அவர்கள் திருப்தி படுவதற்கு மிக்க தகுதியானவர்கள் அல்லாஹ்வும், அவனுடைய திருத்தூதருமாகும்.  9: 62

இன்னும்,தனது கட்டளை யைச்செயல்படுத்துவதை  தனது மஹ்பூபின் கட்டளையைச் செயல்படுவதோடு இணைத்துக்கூறியுள்ளான்.

يا ايها الذين امنوا استجيبوا لله وللرسول 

ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ் , இன்னும், அவனுடைய றஸூலின் அழைப்புக்குப் பதில் கூறுங்கள். 8: 24 

ஆதாரம்: 4

 திருக்குர் ஆனில் விரும்பிய  எந்த ஓர் அத்தியாயத்திற்கும் நிகரான ஓர் அத்தியாயத்தைக்கொண்டுவருமாறு காபிர்களுக்கு சவால் விடுமாறு றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களுக்குக் கட்டளையிட்டுள்ளான்.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான். 

فاتوا بسورة من مثله 

எனவே, அதுபோன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்.  2 :23 

திருக்குர்ஆனில் மிக ச்சிறிய அத்தியாயம், மூன்று திருவசனங்கள் உள்ள அத்தியாயம் சூறத்துல் கௌதர் ஆகும், இச்சவால் திருக்குர்ஆனில் மூன்று திருவசனங்களைப்போன்று கொண்டு வாருங்கள் என்று கூறுவது போன்றுள்ளது.

திருக்குர்ஆனில் ஆறாயிரத்திற்குமதிகமான  ஆயத்துக்கள் உள்ளன, இந்த வகையில் திருக்குர்ஆன் ஒரு முஃஜிஸா அல்ல , 2000க்குமதிகமான  முஃஜிஸாத்துக்களின் தொகுப்பாகும், இந்தளவு முஃஜிஸாத் எந்த ஒரு நபிக்கும் வழங்கப்படவில்லை , இதன்படி , றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஏனைய நபிமார்களை விட மேலானவர்களாகும்.

ஆதாரம் :5 

 நமது நபிகள் கோமான் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் இந்த ஒரு முஃஜிஸா,  ஏனைய ஒவ்வொரு நபியுடைய முஃஜிஸாவை விட சிறப்பானதாகும், எனவே, நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் ஏனைய நபிமார்களை விட மேலானவர்கள் என்பது நிரூபணமாகிவிட்டது.

ஆதாரம் : 6

நபிமார்களின் நிலைகளை விளக்கிக் கூறிய பின், அல்லாஹுத்த ஆலா கூறுகின்றான்.

اولئك الذين هدى الله فبهداهم اقتده 

இவர்கள்தான் அல்லாஹ் ஹிதாயத் செய்த கூட்டத்தினர், எனவே,  நீரும் அந்த வழியில் செல்வீராக!  7 : 90

இங்கு முந்திய நபிமார்களைப் பின் தொடருமாறு  நபிகள் நாதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களுக்கு  கட்டளையிடப்பட்டுள்ளது,  தீனின் உஸூலில் அவர்களைப்பின்பற்றுமாறு  கட்டளையிடப்பட்டுள்ளதாக பொருள்கொள்வது நபிகளாரின் விடயத்தில்   ஆகுமானதல்ல, காரணம், இது அவர்களைப் பின்பற்றுவதாகும்,  அவர்களின்  மார்க்கத்தின் கிளைச்சட்டங்களைப் பின்பற்றுமாறு  கட்டளையிடப்பட்டுள்ளதாகக்கூறுவதும் சரியல்ல, ஏனெனில் ஷரீஅத்தே முஹம்மதியா முந்திய அனைத்து ஷரீஅத்துக்களையும் மாற்றிவிட்டது,ஆகவே, இதன் பொருள் அவர்களின் அழகிய நற்குணங்களை எடுத்துக்கொள்வதுதான் இத்திருவசனத்தின் நோக்கமாகும்,

முந்திய நபிமார்களின் நிலைகளையும், இன்னும் நற்குணங்களையும்  அல்லாஹுத்த ஆலா எடுத்துக்கூறிய பின், அவற்றை  எடுத்துகொள்ளுமாறு கூறியுள்ளான், இதன் பொருள் யாதெனில், ஏனைய நபிமார்களிடம் தனித்தனியாக சிதறிக்கிடந்த பூரணமான நற்பண்புகள் அனைத்தையும் தனிநபராகிய நீங்கள் சேகரமாக்கிக் கொள்ளுங்கள் என்பதாகும், இதன்படி, அனைவரின் தனித்தனியான நற்பண்புகளைத் திரட்டி தன்னகத்தே கொண்ட காரணத்தால் நபிகள் திலகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஏனைய நபிமார்களைவிட மேலாகிவிட்டார்கள்.

ஆதாரம்: 7-:

இறுதி நபியாகிய நமது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  படைப்புக்கள் அனைத்திற்கும் நபியாக அனுப்பப்பட்டார்கள், இதனால் அன்னாரின் பொறுப்பு அதிகமாகும், ஏனைய நபிமார்களை விட கஷ்டங்களும் அதிகமாகும், இதன்படி நபிகள் நாயகம் மேலானவர்கள்.

அனைத்து மனிதர்களுக்கும் நபியாக அனுப்பப்பட்டதை அல்லாஹுத்த ஆலா கூறுகின்றான்.

وما ارسلناك الا كافة للناس بشيرا ونذيرا 

நேசரே! நற்செய்தி கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவும், சகல மனிதர்களுக்குமான தூதுவத்தைக் கொண்டவராகவே அன்றி உம்மை நாம் அனுப்பவில்லை.  34 : 28

ஆதாரம் : 8

 முஹம்மதுர்றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் மார்க்கம் ஏனைய மார்க்கங்களை விட மேல், இஸ்லாத்தின் மூலமாக ஏனைய அனைத்து மார்க்கங்களையும் மாற்றி விட்டான், மாற்றியது மாற்றப்பட்டதை விட மேல், இந்த வகையில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் ஏனைய நபிமார்களை விட மேலாகும்.

ஆதாரம் 9 

 கடைசி நபியாகிய நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் உம்மத் ஏனைய உம்மத்துக்களை விட மேலாகும், எனவே ,நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் ஏனைய நபிமார்களை விட மேலாக இருப்பது அவசியமாகும்.

முதல் விடயத்திற்கான ஆதாரம் ,

كنتم خير امة اخرجت للناس 

 மக்களுக்காக வெளியாக்கப்பட்ட சமுகங்களில் நீங்கள் மேலானவர்கள்.  3 : 110 

இரண்டாவது விடயத்திற்கான ஆதாரம்,

இந்த உம்மத் றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களைப் பின்பற்றியதனால்தான் மேலானார்கள் என்பதை அல்லாஹுத்த ஆலாவே கூறுகின்றான்.

قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله 

நேசரே ! கூறுங்கள்!  மனிதர்களே! நீங்கள்  அல்லாஹ்வை நண்பனாக ஆக்கிக் கொள்வதாயின், என்னைப்பின்பற்றுங்கள். 3 : 31

பின்பற்றப்படுபவரின் சிறப்பால்தான் பினுபற்றுபவருக்கு  சிறப்பு கடமையாகிறது. ஏனைய நபிமார்களைப் பின்பற்றியவர்களைவிட நபிகள் நாயகத்தைப் பின்பற்றுவோர் அதிகமாகும் , ஏனெனில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மனு , ஜின் இருகூட்டத்தாருக்கும் நபியாக அனுப்பப் பட்டுள்ளார்கள்.

ஆதாரம் :10

 றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.

நாளை கியாமத்தில்,  ஹளறத் ஆதம் அலைஹிஸ்ஸலாமவர்களும் அவர்களின் அனைத்து பிள்ளைகளும் எனது கொடியின் கீழால்தான் வருவார்கள், 

இந்த ஹதீதின் மூலம் றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஹளறத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் மற்றும் அவர்களின் அனைத்து பிள்ளைகளை விடவும் மேலானவர்கள் என்பது நிரூபணமாகின்றது, 

மேலும் கூறினார்கள்.

நான் ஆதத்தின் அனைத்து பிள்ளைகளுக்கும் தலைவராகும்.

மேலும் கூறினார்கள்.

 நான்  முதலில் சொர்க்கம் நுளையும் வரை  எந்த ஒரு நபியும் நுளைய மாட்டார்கள், இன்னும், எனது உம்மத் சொர்க்கம் நுளையும் வரை  ஏனைய உம்மத்துக்களில் எவரும் நுளைய மாட்டார்கள்.

மேலும் கூறினார்கள்.

கப்றிலிலிருந்து மக்கள் எழும்பும் போது  முதன் முதலில் நான்தான் 

எழும்புவேன். மஹ்ஷரில் அல்லாஹ்விடத்தில் மக்கள் சார்பாக நான்தான் பேச்சாளராக இருப்பேன், அவர்கள் நம்பிக்கையிழந்திருக்கும் நேரத்தில் நான்தான் நற் செய்தி கூறுவேன், லிவாஉல் ஹம்து என் கையில்தானிருக்கும், நான் அல்லாஹுத்த ஆலாவின் சன்னிதானத்தில்  அனைத்து மனிதர்களையும் விட சங்கையும், கண்ணியமும் பொருந்தியவராக இருப்பேன். இதை பெருமைக்காகக் கூறவில்லை. 

ஆதாரம் 11- 

அல்லாஹுத்த ஆலா திருக்குர் ஆனில் ஏனைய நபிமார்களை அவர்களின் பெயரைக் கூறி அழைத்தான் ,  ஆனால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களை அன்னாரின் பெயர் கூறி அழைக்காமல்  , நபியே!, றஸூலே!, இன்னும் இதுபோன்று கண்ணியமாகவே விளித்துள்ளான், இது அன்னாரின் சிறப்புக்கான ஆதாரமாகும். இதுபோன்று இன்னும் ஏராளமான ஆதாரங்கள்உள்ளன, விரிவஞ்சி இத்தோடு சுருக்கிக்கொள்கின்றோம்,

 அடுத்து "குல்லத்" பற்றிய விளக்கத்தைப் பார்ப்போம், 

இமாம் காழி இயாழ் றஹ்மத்துள்ளாஹிஅலைஹி தங்களுடைய புகழ் பூத்த " அஷ்ஷிபா " என்ற நூலில்  குல்லத், மஹப்பத் பற்றி எழுதியுள்ள விளக்கத்தை  அப்படியே அடியிற் தருகின்றேன். 

ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களுக்கு மஹப்பத்,குல்லத் இருப்பதாக ஸஹீஹான ஹதீதுகளில் வந்தும் கூட, ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களைக் குறிப்பாக "ஹபிபுல்லா" என்று தான் முஸ்லிம்கள் மொழிகின்றனர்.

அபு ஸயீதுல் குத்ரிய்யி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அறிவிக்கின்றார்கள்.

அல்லாஹ்வைத் தவிர்த்து மற்றுமொருவரை  கலீலாக நான் எடுத்துக் கொள்வதாயின், அபூபக்கரை எடுத்துக் கொள்வேன் என்று ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் கூறினார்கள்.

உங்கள் தோழர் (ஆகிய நான்) அல்லாஹ்வின்  கலீல் ஆவேன். என்று மற்றுமொரு ஹதீதில் பதிவாகியுள்ளது.

ஹளறத் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரலியல்லாஹு தஆலா அன்ஹுவின் அறிவிப்பில்,

உங்களின் தோழரை அல்லாஹ் கலீலாக ஆக்கியுள்ளான் என்றுள்ளது.

ஹளறத் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹு மா அவர்களின் அறிவிப்பில்,

சஹாபாக்களில் ஒரு கூட்டத்தினர்  ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களை எதிர்பார்த்து அமர்ந்து கொண்டு பேசிக் கொண்டிருந்தனர், ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பேச்சை செவியேற்குமளவு நெருங்கி வரும் போது சஹாபாக்களில் ஒருவர் அல்லாஹுத்தஆலா தனது படைப்பால் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாமவர்களைக் கலீலாக ஆக்கியது வியப்பானதுதான் என்றார்,

ஹளறத்  மூசா அலைஹிஸ்ஸலாமவர்களுடன் அல்லாஹ் வசனித்ததுஇதைவிட ஆச்சரியம் என்றார் மற்றுமொருவர், இன்னுமொருவர், ஹளறத் ஈஸா அலைஹிஸ்ஸலாமவர்கள் அல்லாஹுத்தஆலாவின் கலிமா வா(ர்த்தையா)கவும், அவ னுடைய றூஹாகவும் ஆக்கியிருப்பதும் ஆச்சரியம்தான் என்றார்; ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வால் தேர்வு செய்யப்பட்ட ஸபீஉள்ளாஹ்வாக இருக்கின்றார்கள் என்று பிறிதொருவர் கூறினார்; 

இந்தக் கட்டத்தில் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எதிராக வந்து நின்று அவர்களுக்கு ஸலாம் கூறினார்கள்.

நீங்கள் பேசியதையும், நீங்கள் வியந்ததையும் நான் செவிமடுத்தேன்,  இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாமவர்களை நிச்சயமாகவே அல்லாஹுத்தஆலா கலீலாக ஆக்கினான்,அதற்கு அவர்கள் தகுதியானவர்கள் தான்,  மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களோடு வசனித்தான் அதற்கு அவர்கள் தகுதியானவர்கள்தான், 

ஈஸா அலைஹிஸ்ஸலாமவர்களை அல்லாஹ்  கலீமத்துள்ளாஹ்வாகவும்,, றூஹுல்லாவாகவும் ஆக்கினான்,அதற்கு அவர்கள் தகுதியானவர்தான்,  ஆதம் அலைஹிஸ்ஸலாமவர்களை அல்லாஹுத்தஆலா ஷபீஃஉள்ளாவான நபியாக ஆக்கினான் ; அதற்கும் அவர்கள் தகுதியானவர்கள் தான்;

அறிந்து கொள்ளுங்கள்!  நான் அல்லாஹ்வின் ஹபீப் ஆவேன்!  இதைப் பெருமைக்காக கூறவில்லை, கியாமத்து நாளில் பெருமைக்குரிய கொடியை நானே தான் உயர்த்துவேன், இதைப் பெருமைக்காக நான் கூறவில்லை, முதன் முதலில் ஷபாஅத் செய்பவரும்,ஷபாஅத்  ஒப்புக்கொள்ளப்பட்டவரும் நான்தான், இதில் பெருமை இல்லை, சொர்க்கத்தின் வாசலை த் தட்டும் முதல் நபரும் நான் தான், அல்லாஹ் எனக்காக  சொர்க்கத்தைத் திறந்து என்னை நுழைவிப்பான், முஃமினான ஏழைகள் என்னோடு இருப்பார்கள், இது பெருமை இல்லை! முன்னோர், பின்னோரில் அதி சங்கைக்குரியவர் ஆவேன் இது பெருமையில்லை! ;

சுனன் தாறமி முகத்தமா,பாகம் 1, பக்கம் , 26, திர்மிதி பாகம் 5,  பக்கம் 261 .

அபூஹுறைறா ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் ஹதீதில் பின்வருமாறு உள்ளது.

நான் உம்மை கலிலாக ஆக்கியுள்ளேன், உமது திருநாமம் தௌராத்தில் ஹபிபுல்லா என்று எழுதப்பட்டுள்ளது என்று அல்லாஹுத்த ஆலா தனது நபிக்குக் கூறியுள்ளான்.

(நூலாசிரியர்) காழி அபுல் பழ்லு (இயாழ் ) றஹ்மதுள்ளாஹி அலைஹி  அல்லாஹுத்த ஆல் அவருக்குத் தௌபீக் செய்வானாக!  கூறுகின்றார்.

குல்லத்தின் விளக்கத்திலும், சொற்பிறப்பிலும். கருத்து வேறு பாடுள்ளது. 

"கலீல் " என்பவர் அனைத்தையும் துறந்து முற்றுமுழுதாக அல்லாஹ்வின் பக்கம் தன்னை ஒப்படைத்தவர்,அவர் (பிறவற்றில்) பயன் பெறுவதிலும்;நேசம் கொள்வதிலும் , எக்குறைவும் வந்து விடாது! என்று சிலரும், 

கலீல் என்பவர் (குல்லத் என்ற பண்பைக்கொண்டு ) தனித்துவமாக்கப்பட்டவர் என்று வேறு சிலரும் கூறுகின்றனர். இக்கருத்தை அதிகமான சான்றோர்கள் தேர்வு செய்துள்ளனர், சிலரின் கூற்றுப்படி, "குல்லத்" என்பதின் அடிப்படை  மஹப்பத்தின் பரிசுத்தத்தைத் தேர்வு செய்வதைக் குறிக்கும்.

ஹளறத் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாமவர்களின் நேசமும் , வெறுப்பும் அல்லாஹ்வுக்காகவே இருந்த காரணத்தினால்தான் அல்லாஹ்வின் குல்லத்து(அன்பு அவர்களுக்கு  கலீலுள்ளாஹ் என்று பெயர் வரக்காரணமாயிற்று, . அல்லாஹ்வின் குல்லத்து(அன்பு)ம், அவனின் உதவியும்  அவர்களுக்குக் கிட்டியதோடு பின்னால் வந்தவர்களுக்கு இமாமாகவும் ஆக்கப்பட்டார்கள்.

எதார்த்தத்தில், கலீல் என்பவர் தேவையுள்ள பகீர் ஆவார், அத்தோடு அல்லாஹ் தவிர்ந்த யாவற்றையும் துண்டித்துக் கொண்டவருமாவார்;   "கலீல்" என்ற சொல் " கல்லத்" என்ற வேர்ச்சொல்லிலிருந்து வந்தது 

இதன் பொருள், கடுமையான அவசியத் தேவை என்று சிலர் பொருள் பிரிக்கின்றனர்; 

இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் தங்களுடைய அனைத்து தேவைகளையும் அல்லாஹ்வின் மீது சாட்டி வைத்திருந்தார்கள், அவன் பக்கமாகவே அவர்களுடைய முழு நாட்டமும் குவிந்திருந்தது ;அவனல்லாத எவரிடமும் , எத்தொடர்பும் அவர்களுக்கு இருக்கவில்லை;  அன்னாரை அக்கினிக் குண்டத்தில் வீசுவதற்காக கவ்வானில்( ஏவுதளத்தில்) நிறுத்தப்பட்டபோது ,ஹளறத் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் முன் தோன்றி உங்களுக்கு ஏதும் தேவை உண்டா? என்று கேட்டதற்கு, அடியானுக்குத் தேவை உண்டு! ஆனால், அது உங்களிடமிருந்து கிடையாது! என்று விடை பகிர்ந்தார்கள்; ஆகவே தான் ஹளறத் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்குகலீல் என்ற இப்பெயர் குறிப்பாக்கப்பட்டுள்ளது. .

ஹில்யா அபூ நுஐம்

 பாகம் 1- பக்கம் 20 .

அபூபக்கர் இப்னு பூறக் றஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்கள்.

الخلة ،صفاء الموددة التي توجب الاختصاص بتخلل الاسرار 

"குல்லத்"என்பது , (இன்பத்திலும்,துன்பத்திலும் பரமஇரகசியமாகப்பேணக்கூடிய   ) அப்பழுக்கில்லாத தூய நேசத்திற்கான பெயராகும்.

அடிப்படையில் "குல்லத்" என்பது, மஹப்பத்தையே குறிக்கும்! இதன் பொருள், அவசர உதவி, கருணை; உயர்பதவி; மற்றும் சிபாரிசு செய்தல் உள்ளிட்டவையாகும் என்று சிலர் கூறுகின்றனர்.

 இக்கருத்தை அல்லாஹுத்தஆலா தனது திருமறையில் இவ்வாறு இயம்புகிறான்.

قالت اليهود  والنصاري  نحن ابناء الله  واحباؤه قل فلم يعذبكم  بذنوبكم  

 நாங்கள் அல்லாஹ்வின் பிள்ளைகள், இன்னும் அவனின் நேசர்கள் என்று யஹுதிகளும், நஸாராக்களும் கூறுகின்றனர்; அப்படியாயின், தங்களின் பாவங்களுக்காக உங்களை எதற்காக தண்டிக்கிறான் என்று நபியே கூறுவீராக!  5 : 14

. ஆகவே ,நேசர்களின் குற்றங்களுக்காக குற்றம் பிடிக்காதிருப்பது நேசர்களுக்கு கடமையும் அவசியமுமாகும்.என்று மேற்கண்ட திருவசனத்தில் சிலேடையாகக் கூறுகின்றான்:

குல்லத் ( நேசம் ) என்பது பிள்ளைகளை விடப் பலமானதாகும் ஏனெனில் சிலவேளை பிள்ளைகளிலும் பகைமை வருவதுண்டு என்பது நினைவில்  கொள்ளுமாறு அல்லாஹுத்தஆலா கூறுகிறான்.,

ان من ازواجكم  واولادكم عدو لكم  فاحذروهم ،

நிச்சயமாக உங்களுடைய சில மனைவிமார்களும், இன்னும் உங்களுடைய சில பிள்ளைகளும் உங்களின் பகைவர்கள் ஆவார்கள்; எனவே, அவர்களிடமிருந்து எச்சரிக்கையாக இருங்கள். 

                                             64. : 14

நட்பும் , பகைமையும் ஒன்றாக சேர்ந்திருப்பது ஒருபோதும் சாத்தியமாகாது! எனவே,

ஹஜரத் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் மற்றும் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உள்ளிட்டோருக்கு நட்பு, நேசம் உள்ளிட்ட பெயர்  வைத்திருப்பது, ஒன்றில், அல்லாஹ்வின் பக்கம் முழுமையாக தங்களை ஒப்படைத்ததற்காக  வேண்டியும், தங்களின் முழு தேவைகளையும் அவன் பக்கமாகவே ஆக்கிக் கொண்டதனாலும்; அவன் அல்லாதவரிடமிருந்து அனைத்து காரணிகளையும், தொடர்புகளையும் முழுமையாக அறுத்துக் கொண்டதனாலுமாகும்.

அல்லது, அவ்விருவருக்கும் அல்லாஹ்விடத்திலிருக்கும் விஷேடமான அதிக தனித்துவத்தினால்,அல்லது, அவ்விருவர் மீதிலுமிருக்கும் மறைமுகமான கருணை ; இன்னும், அவ்விருவருடைய இதயங்களிலும் வேறு எவருக்கும் இடம்கொடாத  தெய்வீக இரகசியங்கள்; இன்னும் இரகசியமான ரப்பானியத் தான மறைவுகள்; ஹக்கானியத்தான மஃரிபாக்கள் உள்ளிட்ட காரணிகளினாலுமாகும்.

அல்லது, அவ்விருவருடைய இதயங்களையும் தனக்காக அல்லாஹ் தேர்ந்தெடுத்துக் கொண்டான், அவர்களின் இதயங்களை தன்னையல்லாதவர்களிருந்து பரிசுத்தமாக்கியுள்ளான், இதில் வேறு எவவருக்குமான நேசத்திற்கும் எவ்விதமான வாய்ப்பும் கிடையாது.

இவ்வாறான காரணங்களுக்காகவே தான்  கலீலுல்லாஹ் என்பவர் அல்லாஹ் அல்லாதவருக்கு உள்ளத்தில் இடம் கொடுக்காதவர் என்று கூறினார்கள் ‌.

"நான் எவரையாவது கலீலாக ஏற்பதாயின், அபூபக்கரை  கலீலாக ஏற்பேன், எனினும்; அவர் எனது இஸ்லாமிய சகோதரர் ஆவார்" என்ற நபிமொழிக்கு இப் பொருளையே அவர்கள் வழங்குகின்றனர்.

ஸஹீஹுல் புகாரி ,கிதாபுஸ் ஸலாத் பக் 84 ஸஹி முஸ்லிம்  பாகம்: 4 பக்கம் 1854

இவ்விரண்டில் குல்லத்தா? அல்லது மஹப்பத்தா தகுதியில் கூடியது?  என்பதில்   சங்கையான அறிஞர்கள், ஆத்மீக ஞானிகளான ஸூபியாக்கள் மத்தியில் கருத்து வேறுபாடு காணப்படுகின்றது.

இவ்விரண்டும் சமத்துவமானவை, கலீல்தான் ஹபீப்! ஹபீப்தான் கலீல்!  என்று சிலர் கூறுகின்றனர்,  ஆயினும், ஹளறத் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் குல்லத்தோடும் , ஹளறத் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மஹப்பத்தோடும்  குறிப்பாக்கப்பட்டுள்ளார்கள்;  குல்லத்திற்கான தகுதி வேறானது என்று சிலர் கூறுகின்றனர்;

 " நான் அல்லாஹ் அல்லாத ஒருவரை கலீலாக ஏற்பதாயின்,....... என்ற நபி மொழியை ஆதாரமாகக் கொண்டு இக்கருத்தைக் கூறுகின்றனர்; 

ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லா அல்லாத எவரையும் கலீலாக ஏற்கவில்லை, அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தங்கள் திருமகள் பாத்திமா ரலியல்லாஹு தஆலா அன்ஹா அவர்களின் திருநிறைச் செல்வர்களான ஹளறத்களான  ஹசன், ஹுசைன் மற்றும்உஸாமா பின் ஸைத்  ரலியல்லாஹு அன்ஹும்  உள்ளட்டோரை மஹபத் வைத்துள்ளார்கள்.

சுனன் திர்மிதி, கிதாபுல் மனாகிப்.

பாகம் 5 பக்கம் ,362,

முஸ்லிம் , கிதாபுல் பழாயிலுஸ் ஸஹாபா  பாகம் 4 பக்கம் 1886.

மஹப்பத் என்பது , குல்லத்தை மிகைத்த பதவி என்று அதிகமான அறிஞர்கள் கூறுகின்றனர் ,  ஏனெனில், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் பதவியாகிய ஹபீப் ஹளறத் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாமவர்களின்பதவியாகிய கலீலை விட உயர்வானதாகும்.

واصل المحبة الميل الي ما يوافق المحب ، ولكن هذا في حق من يصح الميل منه  والانتفاع بالوفق  وهي درجة المخلوق  فاما الخالق فمنزه عن الاغراض  فمحبته لعبده تمكينه من سعادته،  وعصمته ، وتوفيقه ،  وتهيئة اسباب القرب ، افاضة رحمته عليه ، وقصواها كشف الحجب عن قلبه  حتي يراه  وينظر اليه  ببصيرته  فيكون كما قال في الحديث فاذا احببته كنت سمعه الذي يسمع به .....

மஹப்பத்தின் அடிப்படை நேசனின்  அனைத்து வி ருப்பங்களிலும் உடன் படுவது, இந்த  உடன்பாடு  சரியான விதத்தில் , உடன்படுவதால் மட்டுமே நிறைவேறும் ;  இது படைப்புக்கு மட்டுமே  சாத்தியமான படித்தரமாகும் ;  ஆயினும் , படைத்தவன் இப்படியான நோக்கங்களிலிருந்து பரிசுத்தமானவன்‌; 

அல்லாஹுத்தஆலா தன் அடியானை நேசித்தல் என்பது, (அவனை வணங்குவதற்கான ஆற்றலை வழங்குவது கொண்டு)    பாக்கியத்தையும், ( பாவங்களிலிருந்து) பாதுகாப்பையும்; ( நன்மை செய்வதற்கும், பாவங்களிலிருந்து தவிர்ப்பதற்கும்) நல்லுதவி செய்வதும்; (இறை) நெருக்கத்திற்கான காரணங்களை தயார் படுத்துவதும்;  இன்னும் , அவன் மீது  தனது றஹ்மத்தின் அருளினால்  கண்ணியம் வழங்குவதும்;

அவனுடைய கல்பின் திரைகளை அகற்றுவதால் தனது கல்பை அவன்பார்ப்பதும், தனது அகப்பார்வையால் அவனின் பக்கம் தனது பார்வையைச் செலுத்துவதும் மஹப்பத்தின் உச்சமாகும்;   நான் அவனை நேசித்து விட்டால், அவன் கேட்கும் கேள்வியாக அவன் பார்க்கும் பார்வையாக... என்று ஹதீதில் குறிப்பிட்டுள்ளவாறு அவன் ஆகிவிடுவான்.

இவ்வாறானவர் அவனைத்தவிரவுள்ளதைக் கேட்கமாட்டார்,அவர் முற்றுமுழுதாக அல்லாஹ்வுக்குரியவராகிவிடுவார், (இந்த நிலையில்)  அல்லாஹ் அல்லாத அனைத்தையும்  புறக்கணித்து விடுவார் ;  அல்லாஹ்வுக்காக மனம் தெளிந்திருக்கும் ;  அவரின் அனைத்து அசைவுகளும் அல்லாஹ்வுக்காக என்றாகி விடும்.

ஸஹீஹுல் புகாரி , கிதாபுர் றிகாக் , பாகம் 3 பக் 89 

உம்முல் முஃமினீன் ஆயிஷா சித்திக்கா ரலியல்லாஹு தஆலா அன்ஹா கூறியது போன்று ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் நற்குணம்  திருக்குர்ஆனாக இருந்தது, அவனுடைய பொருத்தத்தில் திருப்தி! அவனுடைய கோபத்தில் கோபம்! 

இவ்வாறு   குல்லத்திற்கு சிலர் விளக்கம்பகர்கின்றனர்.

ஸஹீஹுல் புகாரி  கிதாபுர் றிகாக்  பாகம் 3 பக்கம்  89

ஒரு புலவர் பாடுகிறார்.

 قد تخللت مسلك  الروح مني 

وبذا سمي الخيل خليلا 

நிச்சயமாக உயிர் (உடலில்) இரண்டரக் கலந்திருப்பது போன்று, நீர் என்னில் இரண்டறக் கலந்துள்ளாய் !ஆகவே தான் கலீலுக்கு கலீல் என்று பெயர் சூட்டப்பட்டது.

فاذا ما نطقت كنت حديثي 

واذا ما سكت كنت الغليلا 

எனவே, நான் பேசினால் நீ என் பேச்சாகி விடுவாய்!  இன்னும், நான் மௌனித்தால்  நீ  என்மனதிலாகி விடுவாய்!

 எனவே,நமது  நபிகள் கோமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு குல்லத்தில் அதிகரிப்பும், இன்னும், மஹப்பத்தின் தனித்துவமும் இருக்கவே செய்கின்றது; இதுபற்றி ஸஹிஹான, மஷ்ஹுரான ஹதீதுகளும்; உம்மத்தின் ஒட்டுமொத்த கருத்துக்களும் அறிவிப்புச் செய்கின்றன என்பதற்கு அடுத்து வரும் அல்லாஹ்வின் திருவசனம் போதுமான சான்றாகும்.

قل ان كنتم تحبون الله ....

நேசரே கூறுங்கள் !  மனிதர்களே! நீங்கள் அல்லாஹ்வை நண்பனாக ஆக்கிக் கொள்வதாயின், என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை நண்பனாக ஆக்கிக் கொள்வான்.  3: 30

நஸாராக்கள்  ஹளரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை வணங்கத்தக்க ஒருவராக ஆக்கிக் கொண்டது போன்று,  முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களும்  தன்னை ஒரு கடவுளாக ஆக்கிக் கொள்ள விரும்புகின்றார் என்று காபிர்கள் கூறிய போது, மேற்கண்ட திருவசனம்  இறங்கியது, 

அல்லாஹுத்தஆலா அவர்கள் மீது கோபத்தை வெளிப்படுத்தியும், அவர்களின் உளறல்களுக்கு மறுப்புக் கொடுத்தும் இத்திரு வசனத்தை இறக்கியருளினான் என்று  முபஸ்ஸிரீன்கள் கூறுகின்றனர்.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றா

قل اطيعوا  الله والرسول ,

நபியே கூறுவீராக! அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள் இன்னும் ரசூலுக்கும்..  3 :  320

 அல்லாஹுத்தஆலா ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களுக்கு வழிப்படுமாறு கூறி அன்னாரின் கண்ணியத்தை அதிகரிக்கச் செய்துள்ளான்,பின்னர்,

فان تولوا فان الله لا يحب الكفرين 

பின்னர், நீங்கள் புறக்கணித்தால், அல்லாஹ் காபிர்களில் மகிழ்ச்சி அடைவதில்லை.3 :31.

என்று கூறி வழிபட மறுப்பவர்களை எச்சரிக்கின்றான்.

இமாம் பூரக் ரஹ்மத்துல்லாஹி அலைஹி சில  முதகல்லிமீன் (இறையியலாளர்) களிடமிருந்து  திட்டமாக அறிவித்துள்ளார்கள்,

குல்லத்தை விட, மஹபத் சிறப்பானது ! என்ற அவர்களின் விளக்கம் நீண்டு செல்கிறது அவற்றிலிருந்து சிலவற்றை அடுத்து வரும் நோக்கத்திற்கு வழிகாட்டும் விதமாக சுருக்கமாக நாம் எடுத்துக் கூறுகின்றோம்;  

 கலீல்- خليل:

  ஒன்றின் ஆணையோடு சேருவார்..

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்.

وكذلك نري ابراهيم ملكو ت السموات والارض، 

இவ்வாறு வானங்களினதும் பூமியுடையதுமான ஆட்சிகளை இப்ராஹிமுக்கு நாம் காட்டினோம்.

ஹபீப்- حبيب  :

எது வித துணையுமின்றி போய்ச் சேருவார் .

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்.

فكان قاب قوسين او ادني 

இரு வில்லின் அளவு மட்டும் எனினும், அதைவிடக் குறைவான தூரத்தில் சென்றார்.

.

ஓர் அறிவிப்பில் ,

கலீல் خليل  என்பவரின் மன்னிப்பு மேலெண்ணத்திலிருக்கும் .

உ+மாக,

والذي اطمع ان يغفر لي خطيئتي يوم الدين

கியாமத்து நாளில் எனது தவறுகளை மன்னிப்பான் என்று நான் ஆதரவு வைக்கின்றேன்.

                                                  26: 82 .

  ஹபீப் حبيب என்பவர்:

 மன்னிப்பில் உறுதியான நம்பிக்கையில் இருப்பார்.

ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر 

உம்முடைய முந்தியதும், இன்னும், உம்முடைய பிந்தியதுமான பாவத்தை உம்முடைய காரணத்தால் உமக்கும் மன்னிப்பதற்காகவும்.

                                                     48: 2

கலீல் خليل கூறுகின்றார்..

ولا تخزني يوم يبعثون 

கப்ரிலிருந்து எழுப்பப்படும் நாளில் என்னை கேவலப்படுத்தி விடாதே!               26: 82

ஹபீப் حبيب விடயத்தில் கூறப்பட்டது,

 لا يخزي الله النبي 

அந்த ( கியாமத்) நாளில் அல்லாஹ் நபியை கேவலப்படுத்த மாட்டான்.

                                                   66: 8

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களுக்குக் கேட்பதற்கு முன்பே சுப செய்தி கூறப்பட்டுள்ளது.

கலீல் خليل சோதனையான நேரத்தில்,  حسبي الله

அல்லாஹ் எனக்குப் போதுமானவன் என்று கூறுவார்.

ஹபீப் حبيب  அவர்களுக்கு. حسبك الله 

 அல்லாஹ் உமக்குப் போதுமானவன்என்று கூறப்பட்டது.

கலீல் கூறுகிறார் .

واجعل لي لسان صدق 

உண்மையான நாவை எனக்காக ஆக்கியருள்வாயாக! 

ورفعنا لك ذكرك 

நாம் உம்முடைய புகழை உமக்காக உயர்த்தினோம்.

என்று ஹபீபுக்குக் கூறப்பட்டது.    94: 4

கலீல் கூறுகிறார்.

واجنبني وبني ان نعبد الاصنام 

என்னையும், எனது பிள்ளைகளையும் ;சிலைகளை வணங்குவதை விட்டும்  பாதுகா ப்பாயாக!             14: 35.

ஹபீபுக்குக் கூறப்பட்டது.

انما يريد الله ليذهب عنكم الرجس اهل البيت 

நபிகளின் இல்லத்தார்களே! உங்களிலிருந்து சகல அசிங்கங்களை அகற்றுவதையும், இன்னும், உங்களை சுத்தப்படுத்தி சிறப்பாக பரிசுத்தப்படுத்துவதையும் அவன் நாடுகின்றான்.         33: 33 

நாம் விளக்கிய இவை குல்லத்,  மஹப்பத் பற்றி கூறியவர்களின் கூற்றுக்களுக்கும், நிலைகளுக்குமான சிறப்பின் மீதுள்ள ஒரு பீடிகையாகும், ஒவ்வொருவரும் அவர்களின் வழியின் மீது காரிய மாற்றுகின்றனர்;  எனவே , யார் நேர் வழியில் இருக்கிறார்கள் என்பதுபற்றி உமது ரப்புதான் அதிகம் அறிந்தவன்.(ஷிபாஷரீபில் வந்தது முற்றும்)

அன்பான முஸ்லிம்களே! 

இப்போதுள்ள  பூகோள அரசியலில்  யூத , கிறிஸ்த்தவ உலகம் முஸ்லிம்களை அரசியல் ரீதியாகவும், மார்க்க ரீதியாகவும் பலவீனப்படுத்தி அடிமைப்படுத்துவதில்   தந்திரமாக செயல்படுகின்றது,  இவர்களின் இச்சதித் திட்டத்தை  சதிகள் மூலம் சாதிப்பதிலேயே  அவர்கள் வெற்றி பெற்று வருகின்றனர்.

முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கு பொருள்மோகம்,பதவி வெறி, காமக் கிளர்ச்சி உள்ளிட்டவைகளுக்குத் தீனி போட்டு அரசியலில் தங்கள் நோக்கத்தைச் சாதித்துவருகின்றனர், 

சில முஸ்லிம் பெயரிலுள்ள முனாபிக்கு ஆலிம்களுக்கும், அவர்களின் அடிவருடிகளான சில அரைகுறைகளுக்கும் பணம் கொடுத்து  றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களையும் , இறை நேசச்செல்வர்களையும் ,இமாம்களையும், உலமாக்களையும் தரம் தாழ்திப்பேசவைத்தும், மார்க்கத்தில் சந்தேகங்களை உருவாக்கி  மார்க்கத்திலும் தங்களின் உயிரிலும் மேலான நபியிலும், அல்லாஹ்வின் நேசர்களிலும்  உள்ள மரியாதையை இழக்கச்செய்தனர்.

இன்னும் சிலருக்கு பணம் கொடுத்து குப்றிலுள்ள வெறுப்பை மனதிலிருந்து அகற்ற இன ஐக்கியம், வேற்றுமையில் ஒற்றுமை, மதநல்லிணக்கம் உள்ளிட்ட கோஷங்களைக்கொடுத்து வழிகெடுக்கின்றனர், 

இப்படியான கோஷங்களைத்தாங்கி வருபவர்கள் வழிகெட்ட வஹாபிஸ சித்தாந்தத்தை ஏற்றவர்களால் மட்டும்   இருந்ததால் அவர்களை வெறுப்பவர்கள் இக்கருத்துக்களால் பெரிதளவில் ஈர்க்கப்படவில்லை, 

ஆகவே , இவர்களை இயக்கும் யூத, கிறித்தவ கூட்டம்  அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாஅத்தினர்களை ஒட்டுமொத்தமாக வழி கெடுக்க தரீக்காவைப் பின்பற்றும் சில எத்தன்களை கையிலெடுத்து அவர்கள் மூலமாக இப்போது தந்திரமாக காயை நகர்த்துகின்றனர், 

அல்லாஹ் மன்னிக்காத பெரும் குற்றம் குப்று, ஷிர்க் என்பது அனைவரும் அறிந்தது,  இக்குற்றம்  வெளிப்படையாகவோ, அல்லது மறைமுகமாகவோ எப்படி ஊடுருவினாலும் அது பெரும் குற்றம்தான், ஆகவேதான் , தீயில் வீசப்பட்டு அதில் வேகுவதை வெறுப்பது போன்று குப்றை வெறுப்பவர்தான் ஈமானின் இன்பத்தை சுவைப்பார் என்று றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். 

 ஸஹாபாக்கள் அல்லாஹ்வை நேசித்தவர்கள், அவனின் திருப்பொருத்தத்தைப் பெற்றவர்கள்,  இவர்களின் குணத்தைப்பற்றி அல்லாஹுத்த ஆலா கூறுகையில், 

اشداء علي الكفار رحماء بينهم

 காபிர்களில் கடினமாகவும், முஸ்லிம்களில் பரஸ்பரம் இரக்கமுள்ளவர்களாகவுமிருப்பார்கள்.

அல்லாஹ்வை உண்மையாக நேசிப்பவன் அவனின் விரோதிகளை நிச்சயம் வெறுப்பான்,  காபிர்களை வெறுப்பதன் பொருள் அவர்களின் மனதிலிருக்கும் குப்றையும் பாவத்தையுமாகும், தவிர தனிஆளையல்ல!, 

பூண்டின் வாசத்தை வெறுப்பதின் பொருள் பூண்டை வெறுப்பதல்ல!,  ஒருவரை இஸ்லாத்தின் பக்கமாக ஈர்க்கமுடியும் என்ற நம்பிக்கை இருக்குமாயின், அவருடன் உறவாடிப்பழகுவதை இஸ்லாம் வரவேற்கின்றது,  ஒருகாபிரால் மார்க்கத்திற்கோ, உறவுக்கோ தீங்கில்லையாயின், அவருடன் உறவாடுவதில் எத்தடையுமில்லை,

ஒருகாபிர், அல்லது ஒருபாவி தங்களின் குப்றிலும், பாவத்திலும் பிடிவாதமாகவும், நிலையாகவுமிருப்தோடு எமக்குத்தோல்லையாகவுமிருப்பார்களாயின், அவர்களின் உறவைத் துண்டித்து தூர விலகி இருக்கவேண்டியது கடமையாகும்,

அநியாயக்காறர்களை அண்டியிருக்க வேண்டாம், அவர்களைத்தொடும் நரகநெருப்பு உங்களையும் தாவும் என்று அல்லாஹுத்த ஆலா எச்சரிக்கின்றான். 

நல்லோரின் உறவுக்கு உதாரணம் கஸ்த்தூரி வியாபாரி போன்று , ஒன்றில் அவனிடமிருந்து கஸ்த்தூரியைப் பெறலாம், அல்லது அவனிலிருந்து வீசும் வாசத்தப்பெறலாம்.

தீயோரின் உறவுக்கான உதாரணம், கொல்லனின் உலைபோன்று, ஒன்றில் அதிலிருந்து  தெறிக்கும் தீப்பொறி உன் ஆடைக்கரிக்கும், அல்லது அதிலிருந்து வெளியாகும் புகை உன் ஆடையை அழுக்காக்கும். 

தீய உறவுகள் நேரடியாகவோ, அல்லது மறைமுகமாகவோ எப்படியும் தீங்கு செய்யும் என்பதை  இதன்மூலம் புரிகின்றோம், ஆகவேதான் "துஷ்டரைக்கண்டால் தூர நில் " என்று நம்முன்னோர்கள் கூறினார்கள்.

 இப்பொழுது புதிது புதிதான கவர்ச்சியான அடையாளங்களோடு  பலர் ஊடுருவுகின்றனர்,  இவர்களின் மனம் பணமோகத்தாலும் , உலகியல் கவர்ச்சியாலும்,அறியாமையாலும் நிரம்பியுள்ளன,   பணத்தையூம் , பிரபலத்தையும் அடைய பல வழிகளைக் கையாண்டும்  தோல்வியடைந்தவர்கள்   இப்போது ஸூபிஸம், வலிமார்களின் நேசம், ஸியாறங்களைப்பாதுகாத்தல்  மதநல்லிணக்கம் என்ற கவர்ச்சியான  அடையாளங்களோடு  மக்கள் மத்தியில் வலம்வருகின்றனர், 

இவர்களின் மனமும் , இவை தொடர்பான அறிவும்  இச்சுலோகத்திற்கு  அணிசேர்ப்பதாக இல்லை , ஆகவே , புதுபுதிதாக புற்றீசலாய் வரும்  அமைப்புக்களிலும், அவர்களின் பாசாங்குப் பேச்சிலும் கவரப்படாமல் எச்சிர்க்கையாயிருக்கவேண்டும்.

இவர்கள் இஸ்லாத்தில், ஸூபிஸத்தில்   நேசம்கொண்டவர்களல்ல, இவர்களின் அடி மனம் பணமோகத்தாலும், மன இச்சையாலும் , வன்மத்தாலும் நிரம்பியுள்ளது, இவர்களுக்குப்பின்னால் இஸ்லாத்தை வெறுக்கும் சதிகாறர்களின் கரங்கள் பலமாகப் பதிந்திருப்பதாக அஞ்சவேண்டியிருக்கின்றது,

  ஆகவே, வெளிப்பேச்சுக்களையோ, வெளிவேஷத்தையோ பார்க்காமல் அவர்களின் சுபாவம், அறிவு, மனப்பாங்கு, கடந்த கால செயல்பாடுகள் உள்ளிட்டவையை  ஆழ ஊடுருவி ஆராய்ந்து பார்க்க வேண்டும். 

இவற்றையெல்லாம் பார்க்காமல் வெளிப்பேச்சையும், வெளிவேஷத்தையும் பார்த்து ஏமாந்ததனால்தான் இலங்கையில் மட்டுமல்ல உலகளவிலும்  விஷக்கிருமிகளான வழிகெட்ட இயக்கங்கள் வியாபித்தன, அதனால்  முஸ்லிம்கள் சொல்லொணாத்துன்பத்தை இப்போதும் அனுபவிக்கின்றனர்,  

இப்போது இஸ்லாத்தின் மூக்கணாங்கயிறு தகுதியானவர்களிடமிருந்து கைநழுவி தகுதியற்றவர்களின் பிடிக்குள் சென்றுவிட்டது,  அதனால் முஸ்லிம்சமுகம் எடுப்பார் கைப்பாவையாகிவிட்டது,  இந்த கட்டத்தில் முஸ்லிம்கள் மிகுந்த எச்சரிக்கையோடிருந்து அனைத்து புதிய வரவுகளையும் நிராகரித்து நமது முன்னோர்களில் அறிவார்ந்தவர்கள் , அறவழிநடந்தவர்கள் வழியில் உறுதியாக இருந்துகொள்ளவேண்டும். 

எனவே,  சோதனைகள் சூழ்ந்துள்ள இக்காலத்தில் ஈமானைப்பாதுக்காக்க வேண்டுமாயின், இவ்வியக்கங்கள், புதுப்புது அமைப்புக்கள்  அனைத்தின் பிரச்சாரங்களிலிருந்தும் ஒதுங்கி நமது முன்னோர் நடந்த நல்வழியில் சென்று அவர்களின் போதனைப்படி செயல்பட்டு  இறை நெருக்கத்தையும் , அவன் பொருத்தத்தையும் பெறுவோமாக! ஆமீன் யாறப்பல் ஆலமீன்.மக்களை வழிகெடுத்து ஈமானைபிடுங்கியெடுக்கும்  புதிய வரவுகள், முஸ்லிம்களே! எச்சரிக்கை!  

••••••••••••••••••••••••••••••••••••••••

மௌலவி, பாஸில் , ஏ.எல். பதுறுத்தீன். ஷர்க்கி, பரேலவி, ஸூபி ,காதிரி, நக் ஷபந்தி .

************************************

உலகத்தில் தோன்றிய அனைத்து  நபிமார்கள், மற்றும் அனைத்து படைப்புக்களிலும் பயகம்பர் நபிகள் கோமான் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள்தான் உயர்ந்தவர்கள், மேலானவர்கள் என்பது முஸ்லிம்களின்  அசைக்க முடியாத நம்பிக்கை, இதில் எந்த சிறு கருத்து வேறுபாடும்  முஃமின்கள் மத்தியில் கிடையாது,  இதுபற்றி திருக்குர்ஆன் , திரு நபிமொழி கள், இஸ்லாமிய அறிஞர்களின் கூற்றுக்கள் ஆதாரமாக உள்ளன, 

அண்மைக்காலமாகதமிழ்நாட்டில் சில முஸ்லிம் பெயர்தாங்கிகளான  யூத கைக்கூலிகள் இதில்   புதுக்ருத்தை தூவி மக்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்,  இவர்களின் வாதப்படி ,ஹளறத் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களை விடச்சிறந்தவர்கள், ஏனெனில் திருக்குர்ஆனில் ஹளறத் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாமவர்களை அல்லாஹுத்த ஆலா " கலீல்" நண்பர் என்று கூறியுள்ளான், நபிகள் நாயகம் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களை இவ்வாறு திருக்குர்ஆனில் எங்கும் குறிப்பிட வில்லை , ஆகவே , நபிகள் நாயகம் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்களை விட ஹளறத் கலீலுள்ளாஹ் செய்யிதுனா இப்றாஹீம் அலை ஹிஸ்ஸலாம் மேலானவர்கள். 

மக்களைக் குழப்பி வழிகெடுப்பதை தனது வாழ்நாள் பணியாகக்கொண்டு செயல்படும்  ஒரு விஷக்கிருமியின் வாதமிது !

 மேலொட்டமாகப் பார்ப்பவர்கள் இவர் பேச்சில் ஏதோ உண்மையிருப்பதாக சந்தேகிக்கலாம், ஆனால், திருக்குர்ஆன் , திருநபி உள்ளட்டவையை ஆழமாக நோக்குவோருக்கு இது திட்டமிட்டு புனையப்படும் அடிப்படையற்றது என்பது புரியும், 

மேலும் , குறித்த நபரோ, வழிகேடர்களான எவருமோ முன்வைக்கும் எதுவும் அவர்களின் சொந்தக்கருத்துக்கள் அல்ல! ஏற்கனவே பேசப்பட்டு பதில்கூறப்படு மூடுவிழா செய்யப்பட்டவை, அவற்றை  இப்போது இவருக்குப்பின்னாலிருப்பவர்கள் கிளறியெடுத்துத்  தொகுத்து வழங்குகின்றனர், உண்மையில் இவர்கள்ஓர் உதுகுழல் மட்டுமே!   

ஆகவே, முதலில் , நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் சிறப்புக்களைத் தக்க நியாயத்தோடு முன்வைப்போம், அடுத்து "குல்லத் " விளக்கத்தையும் ஆராய்வோம்.

அல்லாஹுத்த ஆலா கூறுகின்றான்.

تلك الرسل  فضلنا بعضهم علي  بعض 

இவர்கள் ரசூல்மார்கள் அவர்களில் ஒருவரை மற்றவர்களை காண சிறப்பாக்கி யிருக்கின்றோம். 2: 253

சங்கையான நபிமார்கள் ( அலைஹிமுஸ்ஸலாம்) கூட்டத்தில்  ஒருவரை விட, மற்றவருக்குச்  சிறப்புகள் வழங்கப்படுள்ளன,  இவர்களுள் நபிகள் கோமான் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் பல விதங்களில்  சிறப்பானவர்கள், உயர்ந்தவர்கள் என்பதற்கு  பல நியாயங்கள் உள்ளன, அவை வருமாறு,

ஆதாரம்: 1

1-  وما ارسلناك الا رحمة للعلمين.

அகிலத்தார்களுக்கு அருளாகவே அன்றி உம்மை நாம் அனுப்பவில்லை. 21: 107

அகிலமனைத்திற்கும் றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் றஹ்மத்தாக இருப்பதாயின்,  நிச்சயமாக அன்னார் அனைத்து படைப்பினங்களை விடவும் மேலானவராக இருந்தாக வேண்டும்.

 ஆதாரம் : 2- 

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான். 

ورفعنا لك ذكرك 

இன்னும், நாம் உமக்காக உமது கீர்த்தியை உயர்த்தினோம். 94: 4

அல்லாஹுத்த ஆலா றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் முபாறக்கான திருப்பெயரை  தனது திருநாமத்தோடு திருக்கலிமாவில், அதானில், அத்தஹியாத்தில், சேர்த்துள்ளான், இவ்வாறு ஏனைய நபிமார்களின் திருப்பெயரை இணைக்கவில்லை

 ஆதாரம் : 3-  

அல்லாஹ்வுக்கு வழிப்படுவதை   றஸூலுக்கு வழிப்படுவதோடு இணைத்துக் கூறியுள்ளான், 

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான். 

من يطع الرسول فقد اطاع الله

எவர் றஸூலின் சட்டத்திற்கு வழிப்பட்டாரோ,அவர் அல்லாஹ்வின் சட்டத்திற்கும் வழிப்பட்டார்  . 4:  80

நபிகளாரிடம் பைஅத் பெற்றதை தன்னிடம் பைஅத் பெற்றதாகக்கூறியுள்ளான்.

ان الذين يبايعونك انما يبايعون الله  يد الله فوق ايديهم.

எவர், உம்மிடம் பைஅத் பெற்றார்களோ  அவர் அல்லாஹ்விடமே பைஅத் பெற்றார்கள், அவர்களின் கரங்களுக்கு மேல் அல்லாஹ்வின் கரம் உள்ளது. 

48 : 10

தன்னுடைய கண்ணியத்தோடு றஸூலின் கண்ணியத்தையும் தொடர்படுத்தியுள்ளான்.

ولله العزة ولرسوله 

இன்னும், கண்ணியம் அல்லாஹ்வுக்கும், இன்னும் அவனுடைய றஸூலுக்குமாகும்.

63: 8 

இன்னும், தனது ஹபீபின் பொருத்தத்தோடு தன்னுடைய பொருத்தத்தையும் சேர்த்துள்ளான்.

والله ورسوله احق ان يرضوه 

அவர்கள் திருப்தி படுவதற்கு மிக்க தகுதியானவர்கள் அல்லாஹ்வும், அவனுடைய திருத்தூதருமாகும்.  9: 62

இன்னும்,தனது கட்டளை யைச்செயல்படுத்துவதை  தனது மஹ்பூபின் கட்டளையைச் செயல்படுவதோடு இணைத்துக்கூறியுள்ளான்.

يا ايها الذين امنوا استجيبوا لله وللرسول 

ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ் , இன்னும், அவனுடைய றஸூலின் அழைப்புக்குப் பதில் கூறுங்கள். 8: 24 

ஆதாரம்: 4

 திருக்குர் ஆனில் விரும்பிய  எந்த ஓர் அத்தியாயத்திற்கும் நிகரான ஓர் அத்தியாயத்தைக்கொண்டுவருமாறு காபிர்களுக்கு சவால் விடுமாறு றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களுக்குக் கட்டளையிட்டுள்ளான்.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான். 

فاتوا بسورة من مثله 

எனவே, அதுபோன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்.  2 :23 

திருக்குர்ஆனில் மிக ச்சிறிய அத்தியாயம், மூன்று திருவசனங்கள் உள்ள அத்தியாயம் சூறத்துல் கௌதர் ஆகும், இச்சவால் திருக்குர்ஆனில் மூன்று திருவசனங்களைப்போன்று கொண்டு வாருங்கள் என்று கூறுவது போன்றுள்ளது.

திருக்குர்ஆனில் ஆறாயிரத்திற்குமதிகமான  ஆயத்துக்கள் உள்ளன, இந்த வகையில் திருக்குர்ஆன் ஒரு முஃஜிஸா அல்ல , 2000க்குமதிகமான  முஃஜிஸாத்துக்களின் தொகுப்பாகும், இந்தளவு முஃஜிஸாத் எந்த ஒரு நபிக்கும் வழங்கப்படவில்லை , இதன்படி , றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஏனைய நபிமார்களை விட மேலானவர்களாகும்.

ஆதாரம் :5 

 நமது நபிகள் கோமான் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் இந்த ஒரு முஃஜிஸா,  ஏனைய ஒவ்வொரு நபியுடைய முஃஜிஸாவை விட சிறப்பானதாகும், எனவே, நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் ஏனைய நபிமார்களை விட மேலானவர்கள் என்பது நிரூபணமாகிவிட்டது.

ஆதாரம் : 6

நபிமார்களின் நிலைகளை விளக்கிக் கூறிய பின், அல்லாஹுத்த ஆலா கூறுகின்றான்.

اولئك الذين هدى الله فبهداهم اقتده 

இவர்கள்தான் அல்லாஹ் ஹிதாயத் செய்த கூட்டத்தினர், எனவே,  நீரும் அந்த வழியில் செல்வீராக!  7 : 90

இங்கு முந்திய நபிமார்களைப் பின் தொடருமாறு  நபிகள் நாதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களுக்கு  கட்டளையிடப்பட்டுள்ளது,  தீனின் உஸூலில் அவர்களைப்பின்பற்றுமாறு  கட்டளையிடப்பட்டுள்ளதாக பொருள்கொள்வது நபிகளாரின் விடயத்தில்   ஆகுமானதல்ல, காரணம், இது அவர்களைப் பின்பற்றுவதாகும்,  அவர்களின்  மார்க்கத்தின் கிளைச்சட்டங்களைப் பின்பற்றுமாறு  கட்டளையிடப்பட்டுள்ளதாகக்கூறுவதும் சரியல்ல, ஏனெனில் ஷரீஅத்தே முஹம்மதியா முந்திய அனைத்து ஷரீஅத்துக்களையும் மாற்றிவிட்டது,ஆகவே, இதன் பொருள் அவர்களின் அழகிய நற்குணங்களை எடுத்துக்கொள்வதுதான் இத்திருவசனத்தின் நோக்கமாகும்,

முந்திய நபிமார்களின் நிலைகளையும், இன்னும் நற்குணங்களையும்  அல்லாஹுத்த ஆலா எடுத்துக்கூறிய பின், அவற்றை  எடுத்துகொள்ளுமாறு கூறியுள்ளான், இதன் பொருள் யாதெனில், ஏனைய நபிமார்களிடம் தனித்தனியாக சிதறிக்கிடந்த பூரணமான நற்பண்புகள் அனைத்தையும் தனிநபராகிய நீங்கள் சேகரமாக்கிக் கொள்ளுங்கள் என்பதாகும், இதன்படி, அனைவரின் தனித்தனியான நற்பண்புகளைத் திரட்டி தன்னகத்தே கொண்ட காரணத்தால் நபிகள் திலகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஏனைய நபிமார்களைவிட மேலாகிவிட்டார்கள்.

ஆதாரம்: 7-:

இறுதி நபியாகிய நமது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  படைப்புக்கள் அனைத்திற்கும் நபியாக அனுப்பப்பட்டார்கள், இதனால் அன்னாரின் பொறுப்பு அதிகமாகும், ஏனைய நபிமார்களை விட கஷ்டங்களும் அதிகமாகும், இதன்படி நபிகள் நாயகம் மேலானவர்கள்.

அனைத்து மனிதர்களுக்கும் நபியாக அனுப்பப்பட்டதை அல்லாஹுத்த ஆலா கூறுகின்றான்.

وما ارسلناك الا كافة للناس بشيرا ونذيرا 

நேசரே! நற்செய்தி கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவும், சகல மனிதர்களுக்குமான தூதுவத்தைக் கொண்டவராகவே அன்றி உம்மை நாம் அனுப்பவில்லை.  34 : 28

ஆதாரம் : 8

 முஹம்மதுர்றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் மார்க்கம் ஏனைய மார்க்கங்களை விட மேல், இஸ்லாத்தின் மூலமாக ஏனைய அனைத்து மார்க்கங்களையும் மாற்றி விட்டான், மாற்றியது மாற்றப்பட்டதை விட மேல், இந்த வகையில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் ஏனைய நபிமார்களை விட மேலாகும்.

ஆதாரம் 9 

 கடைசி நபியாகிய நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் உம்மத் ஏனைய உம்மத்துக்களை விட மேலாகும், எனவே ,நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் ஏனைய நபிமார்களை விட மேலாக இருப்பது அவசியமாகும்.

முதல் விடயத்திற்கான ஆதாரம் ,

كنتم خير امة اخرجت للناس 

 மக்களுக்காக வெளியாக்கப்பட்ட சமுகங்களில் நீங்கள் மேலானவர்கள்.  3 : 110 

இரண்டாவது விடயத்திற்கான ஆதாரம்,

இந்த உம்மத் றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களைப் பின்பற்றியதனால்தான் மேலானார்கள் என்பதை அல்லாஹுத்த ஆலாவே கூறுகின்றான்.

قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله 

நேசரே ! கூறுங்கள்!  மனிதர்களே! நீங்கள்  அல்லாஹ்வை நண்பனாக ஆக்கிக் கொள்வதாயின், என்னைப்பின்பற்றுங்கள். 3 : 31

பின்பற்றப்படுபவரின் சிறப்பால்தான் பினுபற்றுபவருக்கு  சிறப்பு கடமையாகிறது. ஏனைய நபிமார்களைப் பின்பற்றியவர்களைவிட நபிகள் நாயகத்தைப் பின்பற்றுவோர் அதிகமாகும் , ஏனெனில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மனு , ஜின் இருகூட்டத்தாருக்கும் நபியாக அனுப்பப் பட்டுள்ளார்கள்.

ஆதாரம் :10

 றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.

நாளை கியாமத்தில்,  ஹளறத் ஆதம் அலைஹிஸ்ஸலாமவர்களும் அவர்களின் அனைத்து பிள்ளைகளும் எனது கொடியின் கீழால்தான் வருவார்கள், 

இந்த ஹதீதின் மூலம் றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஹளறத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் மற்றும் அவர்களின் அனைத்து பிள்ளைகளை விடவும் மேலானவர்கள் என்பது நிரூபணமாகின்றது, 

மேலும் கூறினார்கள்.

நான் ஆதத்தின் அனைத்து பிள்ளைகளுக்கும் தலைவராகும்.

மேலும் கூறினார்கள்.

 நான்  முதலில் சொர்க்கம் நுளையும் வரை  எந்த ஒரு நபியும் நுளைய மாட்டார்கள், இன்னும், எனது உம்மத் சொர்க்கம் நுளையும் வரை  ஏனைய உம்மத்துக்களில் எவரும் நுளைய மாட்டார்கள்.

மேலும் கூறினார்கள்.

கப்றிலிலிருந்து மக்கள் எழும்பும் போது  முதன் முதலில் நான்தான் 

எழும்புவேன். மஹ்ஷரில் அல்லாஹ்விடத்தில் மக்கள் சார்பாக நான்தான் பேச்சாளராக இருப்பேன், அவர்கள் நம்பிக்கையிழந்திருக்கும் நேரத்தில் நான்தான் நற் செய்தி கூறுவேன், லிவாஉல் ஹம்து என் கையில்தானிருக்கும், நான் அல்லாஹுத்த ஆலாவின் சன்னிதானத்தில்  அனைத்து மனிதர்களையும் விட சங்கையும், கண்ணியமும் பொருந்தியவராக இருப்பேன். இதை பெருமைக்காகக் கூறவில்லை. 

ஆதாரம் 11- 

அல்லாஹுத்த ஆலா திருக்குர் ஆனில் ஏனைய நபிமார்களை அவர்களின் பெயரைக் கூறி அழைத்தான் ,  ஆனால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களை அன்னாரின் பெயர் கூறி அழைக்காமல்  , நபியே!, றஸூலே!, இன்னும் இதுபோன்று கண்ணியமாகவே விளித்துள்ளான், இது அன்னாரின் சிறப்புக்கான ஆதாரமாகும். இதுபோன்று இன்னும் ஏராளமான ஆதாரங்கள்உள்ளன, விரிவஞ்சி இத்தோடு சுருக்கிக்கொள்கின்றோம்,

 அடுத்து "குல்லத்" பற்றிய விளக்கத்தைப் பார்ப்போம், 

இமாம் காழி இயாழ் றஹ்மத்துள்ளாஹிஅலைஹி தங்களுடைய புகழ் பூத்த " அஷ்ஷிபா " என்ற நூலில்  குல்லத், மஹப்பத் பற்றி எழுதியுள்ள விளக்கத்தை  அப்படியே அடியிற் தருகின்றேன். 

ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களுக்கு மஹப்பத்,குல்லத் இருப்பதாக ஸஹீஹான ஹதீதுகளில் வந்தும் கூட, ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களைக் குறிப்பாக "ஹபிபுல்லா" என்று தான் முஸ்லிம்கள் மொழிகின்றனர்.

அபு ஸயீதுல் குத்ரிய்யி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அறிவிக்கின்றார்கள்.

அல்லாஹ்வைத் தவிர்த்து மற்றுமொருவரை  கலீலாக நான் எடுத்துக் கொள்வதாயின், அபூபக்கரை எடுத்துக் கொள்வேன் என்று ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் கூறினார்கள்.

உங்கள் தோழர் (ஆகிய நான்) அல்லாஹ்வின்  கலீல் ஆவேன். என்று மற்றுமொரு ஹதீதில் பதிவாகியுள்ளது.

ஹளறத் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரலியல்லாஹு தஆலா அன்ஹுவின் அறிவிப்பில்,

உங்களின் தோழரை அல்லாஹ் கலீலாக ஆக்கியுள்ளான் என்றுள்ளது.

ஹளறத் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹு மா அவர்களின் அறிவிப்பில்,

சஹாபாக்களில் ஒரு கூட்டத்தினர்  ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களை எதிர்பார்த்து அமர்ந்து கொண்டு பேசிக் கொண்டிருந்தனர், ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பேச்சை செவியேற்குமளவு நெருங்கி வரும் போது சஹாபாக்களில் ஒருவர் அல்லாஹுத்தஆலா தனது படைப்பால் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாமவர்களைக் கலீலாக ஆக்கியது வியப்பானதுதான் என்றார்,

ஹளறத்  மூசா அலைஹிஸ்ஸலாமவர்களுடன் அல்லாஹ் வசனித்ததுஇதைவிட ஆச்சரியம் என்றார் மற்றுமொருவர், இன்னுமொருவர், ஹளறத் ஈஸா அலைஹிஸ்ஸலாமவர்கள் அல்லாஹுத்தஆலாவின் கலிமா வா(ர்த்தையா)கவும், அவ னுடைய றூஹாகவும் ஆக்கியிருப்பதும் ஆச்சரியம்தான் என்றார்; ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வால் தேர்வு செய்யப்பட்ட ஸபீஉள்ளாஹ்வாக இருக்கின்றார்கள் என்று பிறிதொருவர் கூறினார்; 

இந்தக் கட்டத்தில் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எதிராக வந்து நின்று அவர்களுக்கு ஸலாம் கூறினார்கள்.

நீங்கள் பேசியதையும், நீங்கள் வியந்ததையும் நான் செவிமடுத்தேன்,  இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாமவர்களை நிச்சயமாகவே அல்லாஹுத்தஆலா கலீலாக ஆக்கினான்,அதற்கு அவர்கள் தகுதியானவர்கள் தான்,  மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களோடு வசனித்தான் அதற்கு அவர்கள் தகுதியானவர்கள்தான், 

ஈஸா அலைஹிஸ்ஸலாமவர்களை அல்லாஹ்  கலீமத்துள்ளாஹ்வாகவும்,, றூஹுல்லாவாகவும் ஆக்கினான்,அதற்கு அவர்கள் தகுதியானவர்தான்,  ஆதம் அலைஹிஸ்ஸலாமவர்களை அல்லாஹுத்தஆலா ஷபீஃஉள்ளாவான நபியாக ஆக்கினான் ; அதற்கும் அவர்கள் தகுதியானவர்கள் தான்;

அறிந்து கொள்ளுங்கள்!  நான் அல்லாஹ்வின் ஹபீப் ஆவேன்!  இதைப் பெருமைக்காக கூறவில்லை, கியாமத்து நாளில் பெருமைக்குரிய கொடியை நானே தான் உயர்த்துவேன், இதைப் பெருமைக்காக நான் கூறவில்லை, முதன் முதலில் ஷபாஅத் செய்பவரும்,ஷபாஅத்  ஒப்புக்கொள்ளப்பட்டவரும் நான்தான், இதில் பெருமை இல்லை, சொர்க்கத்தின் வாசலை த் தட்டும் முதல் நபரும் நான் தான், அல்லாஹ் எனக்காக  சொர்க்கத்தைத் திறந்து என்னை நுழைவிப்பான், முஃமினான ஏழைகள் என்னோடு இருப்பார்கள், இது பெருமை இல்லை! முன்னோர், பின்னோரில் அதி சங்கைக்குரியவர் ஆவேன் இது பெருமையில்லை! ;

சுனன் தாறமி முகத்தமா,பாகம் 1, பக்கம் , 26, திர்மிதி பாகம் 5,  பக்கம் 261 .

அபூஹுறைறா ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் ஹதீதில் பின்வருமாறு உள்ளது.

நான் உம்மை கலிலாக ஆக்கியுள்ளேன், உமது திருநாமம் தௌராத்தில் ஹபிபுல்லா என்று எழுதப்பட்டுள்ளது என்று அல்லாஹுத்த ஆலா தனது நபிக்குக் கூறியுள்ளான்.

(நூலாசிரியர்) காழி அபுல் பழ்லு (இயாழ் ) றஹ்மதுள்ளாஹி அலைஹி  அல்லாஹுத்த ஆல் அவருக்குத் தௌபீக் செய்வானாக!  கூறுகின்றார்.

குல்லத்தின் விளக்கத்திலும், சொற்பிறப்பிலும். கருத்து வேறு பாடுள்ளது. 

"கலீல் " என்பவர் அனைத்தையும் துறந்து முற்றுமுழுதாக அல்லாஹ்வின் பக்கம் தன்னை ஒப்படைத்தவர்,அவர் (பிறவற்றில்) பயன் பெறுவதிலும்;நேசம் கொள்வதிலும் , எக்குறைவும் வந்து விடாது! என்று சிலரும், 

கலீல் என்பவர் (குல்லத் என்ற பண்பைக்கொண்டு ) தனித்துவமாக்கப்பட்டவர் என்று வேறு சிலரும் கூறுகின்றனர். இக்கருத்தை அதிகமான சான்றோர்கள் தேர்வு செய்துள்ளனர், சிலரின் கூற்றுப்படி, "குல்லத்" என்பதின் அடிப்படை  மஹப்பத்தின் பரிசுத்தத்தைத் தேர்வு செய்வதைக் குறிக்கும்.

ஹளறத் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாமவர்களின் நேசமும் , வெறுப்பும் அல்லாஹ்வுக்காகவே இருந்த காரணத்தினால்தான் அல்லாஹ்வின் குல்லத்து(அன்பு அவர்களுக்கு  கலீலுள்ளாஹ் என்று பெயர் வரக்காரணமாயிற்று, . அல்லாஹ்வின் குல்லத்து(அன்பு)ம், அவனின் உதவியும்  அவர்களுக்குக் கிட்டியதோடு பின்னால் வந்தவர்களுக்கு இமாமாகவும் ஆக்கப்பட்டார்கள்.

எதார்த்தத்தில், கலீல் என்பவர் தேவையுள்ள பகீர் ஆவார், அத்தோடு அல்லாஹ் தவிர்ந்த யாவற்றையும் துண்டித்துக் கொண்டவருமாவார்;   "கலீல்" என்ற சொல் " கல்லத்" என்ற வேர்ச்சொல்லிலிருந்து வந்தது 

இதன் பொருள், கடுமையான அவசியத் தேவை என்று சிலர் பொருள் பிரிக்கின்றனர்; 

இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் தங்களுடைய அனைத்து தேவைகளையும் அல்லாஹ்வின் மீது சாட்டி வைத்திருந்தார்கள், அவன் பக்கமாகவே அவர்களுடைய முழு நாட்டமும் குவிந்திருந்தது ;அவனல்லாத எவரிடமும் , எத்தொடர்பும் அவர்களுக்கு இருக்கவில்லை;  அன்னாரை அக்கினிக் குண்டத்தில் வீசுவதற்காக கவ்வானில்( ஏவுதளத்தில்) நிறுத்தப்பட்டபோது ,ஹளறத் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் முன் தோன்றி உங்களுக்கு ஏதும் தேவை உண்டா? என்று கேட்டதற்கு, அடியானுக்குத் தேவை உண்டு! ஆனால், அது உங்களிடமிருந்து கிடையாது! என்று விடை பகிர்ந்தார்கள்; ஆகவே தான் ஹளறத் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்குகலீல் என்ற இப்பெயர் குறிப்பாக்கப்பட்டுள்ளது. .

ஹில்யா அபூ நுஐம்

 பாகம் 1- பக்கம் 20 .

அபூபக்கர் இப்னு பூறக் றஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்கள்.

الخلة ،صفاء الموددة التي توجب الاختصاص بتخلل الاسرار 

"குல்லத்"என்பது , (இன்பத்திலும்,துன்பத்திலும் பரமஇரகசியமாகப்பேணக்கூடிய   ) அப்பழுக்கில்லாத தூய நேசத்திற்கான பெயராகும்.

அடிப்படையில் "குல்லத்" என்பது, மஹப்பத்தையே குறிக்கும்! இதன் பொருள், அவசர உதவி, கருணை; உயர்பதவி; மற்றும் சிபாரிசு செய்தல் உள்ளிட்டவையாகும் என்று சிலர் கூறுகின்றனர்.

 இக்கருத்தை அல்லாஹுத்தஆலா தனது திருமறையில் இவ்வாறு இயம்புகிறான்.

قالت اليهود  والنصاري  نحن ابناء الله  واحباؤه قل فلم يعذبكم  بذنوبكم  

 நாங்கள் அல்லாஹ்வின் பிள்ளைகள், இன்னும் அவனின் நேசர்கள் என்று யஹுதிகளும், நஸாராக்களும் கூறுகின்றனர்; அப்படியாயின், தங்களின் பாவங்களுக்காக உங்களை எதற்காக தண்டிக்கிறான் என்று நபியே கூறுவீராக!  5 : 14

. ஆகவே ,நேசர்களின் குற்றங்களுக்காக குற்றம் பிடிக்காதிருப்பது நேசர்களுக்கு கடமையும் அவசியமுமாகும்.என்று மேற்கண்ட திருவசனத்தில் சிலேடையாகக் கூறுகின்றான்:

குல்லத் ( நேசம் ) என்பது பிள்ளைகளை விடப் பலமானதாகும் ஏனெனில் சிலவேளை பிள்ளைகளிலும் பகைமை வருவதுண்டு என்பது நினைவில்  கொள்ளுமாறு அல்லாஹுத்தஆலா கூறுகிறான்.,

ان من ازواجكم  واولادكم عدو لكم  فاحذروهم ،

நிச்சயமாக உங்களுடைய சில மனைவிமார்களும், இன்னும் உங்களுடைய சில பிள்ளைகளும் உங்களின் பகைவர்கள் ஆவார்கள்; எனவே, அவர்களிடமிருந்து எச்சரிக்கையாக இருங்கள். 

                                             64. : 14

நட்பும் , பகைமையும் ஒன்றாக சேர்ந்திருப்பது ஒருபோதும் சாத்தியமாகாது! எனவே,

ஹஜரத் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் மற்றும் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உள்ளிட்டோருக்கு நட்பு, நேசம் உள்ளிட்ட பெயர்  வைத்திருப்பது, ஒன்றில், அல்லாஹ்வின் பக்கம் முழுமையாக தங்களை ஒப்படைத்ததற்காக  வேண்டியும், தங்களின் முழு தேவைகளையும் அவன் பக்கமாகவே ஆக்கிக் கொண்டதனாலும்; அவன் அல்லாதவரிடமிருந்து அனைத்து காரணிகளையும், தொடர்புகளையும் முழுமையாக அறுத்துக் கொண்டதனாலுமாகும்.

அல்லது, அவ்விருவருக்கும் அல்லாஹ்விடத்திலிருக்கும் விஷேடமான அதிக தனித்துவத்தினால்,அல்லது, அவ்விருவர் மீதிலுமிருக்கும் மறைமுகமான கருணை ; இன்னும், அவ்விருவருடைய இதயங்களிலும் வேறு எவருக்கும் இடம்கொடாத  தெய்வீக இரகசியங்கள்; இன்னும் இரகசியமான ரப்பானியத் தான மறைவுகள்; ஹக்கானியத்தான மஃரிபாக்கள் உள்ளிட்ட காரணிகளினாலுமாகும்.

அல்லது, அவ்விருவருடைய இதயங்களையும் தனக்காக அல்லாஹ் தேர்ந்தெடுத்துக் கொண்டான், அவர்களின் இதயங்களை தன்னையல்லாதவர்களிருந்து பரிசுத்தமாக்கியுள்ளான், இதில் வேறு எவவருக்குமான நேசத்திற்கும் எவ்விதமான வாய்ப்பும் கிடையாது.

இவ்வாறான காரணங்களுக்காகவே தான்  கலீலுல்லாஹ் என்பவர் அல்லாஹ் அல்லாதவருக்கு உள்ளத்தில் இடம் கொடுக்காதவர் என்று கூறினார்கள் ‌.

"நான் எவரையாவது கலீலாக ஏற்பதாயின், அபூபக்கரை  கலீலாக ஏற்பேன், எனினும்; அவர் எனது இஸ்லாமிய சகோதரர் ஆவார்" என்ற நபிமொழிக்கு இப் பொருளையே அவர்கள் வழங்குகின்றனர்.

ஸஹீஹுல் புகாரி ,கிதாபுஸ் ஸலாத் பக் 84 ஸஹி முஸ்லிம்  பாகம்: 4 பக்கம் 1854

இவ்விரண்டில் குல்லத்தா? அல்லது மஹப்பத்தா தகுதியில் கூடியது?  என்பதில்   சங்கையான அறிஞர்கள், ஆத்மீக ஞானிகளான ஸூபியாக்கள் மத்தியில் கருத்து வேறுபாடு காணப்படுகின்றது.

இவ்விரண்டும் சமத்துவமானவை, கலீல்தான் ஹபீப்! ஹபீப்தான் கலீல்!  என்று சிலர் கூறுகின்றனர்,  ஆயினும், ஹளறத் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் குல்லத்தோடும் , ஹளறத் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மஹப்பத்தோடும்  குறிப்பாக்கப்பட்டுள்ளார்கள்;  குல்லத்திற்கான தகுதி வேறானது என்று சிலர் கூறுகின்றனர்;

 " நான் அல்லாஹ் அல்லாத ஒருவரை கலீலாக ஏற்பதாயின்,....... என்ற நபி மொழியை ஆதாரமாகக் கொண்டு இக்கருத்தைக் கூறுகின்றனர்; 

ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லா அல்லாத எவரையும் கலீலாக ஏற்கவில்லை, அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தங்கள் திருமகள் பாத்திமா ரலியல்லாஹு தஆலா அன்ஹா அவர்களின் திருநிறைச் செல்வர்களான ஹளறத்களான  ஹசன், ஹுசைன் மற்றும்உஸாமா பின் ஸைத்  ரலியல்லாஹு அன்ஹும்  உள்ளட்டோரை மஹபத் வைத்துள்ளார்கள்.

சுனன் திர்மிதி, கிதாபுல் மனாகிப்.

பாகம் 5 பக்கம் ,362,

முஸ்லிம் , கிதாபுல் பழாயிலுஸ் ஸஹாபா  பாகம் 4 பக்கம் 1886.

மஹப்பத் என்பது , குல்லத்தை மிகைத்த பதவி என்று அதிகமான அறிஞர்கள் கூறுகின்றனர் ,  ஏனெனில், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் பதவியாகிய ஹபீப் ஹளறத் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாமவர்களின்பதவியாகிய கலீலை விட உயர்வானதாகும்.

واصل المحبة الميل الي ما يوافق المحب ، ولكن هذا في حق من يصح الميل منه  والانتفاع بالوفق  وهي درجة المخلوق  فاما الخالق فمنزه عن الاغراض  فمحبته لعبده تمكينه من سعادته،  وعصمته ، وتوفيقه ،  وتهيئة اسباب القرب ، افاضة رحمته عليه ، وقصواها كشف الحجب عن قلبه  حتي يراه  وينظر اليه  ببصيرته  فيكون كما قال في الحديث فاذا احببته كنت سمعه الذي يسمع به .....

மஹப்பத்தின் அடிப்படை நேசனின்  அனைத்து வி ருப்பங்களிலும் உடன் படுவது, இந்த  உடன்பாடு  சரியான விதத்தில் , உடன்படுவதால் மட்டுமே நிறைவேறும் ;  இது படைப்புக்கு மட்டுமே  சாத்தியமான படித்தரமாகும் ;  ஆயினும் , படைத்தவன் இப்படியான நோக்கங்களிலிருந்து பரிசுத்தமானவன்‌; 

அல்லாஹுத்தஆலா தன் அடியானை நேசித்தல் என்பது, (அவனை வணங்குவதற்கான ஆற்றலை வழங்குவது கொண்டு)    பாக்கியத்தையும், ( பாவங்களிலிருந்து) பாதுகாப்பையும்; ( நன்மை செய்வதற்கும், பாவங்களிலிருந்து தவிர்ப்பதற்கும்) நல்லுதவி செய்வதும்; (இறை) நெருக்கத்திற்கான காரணங்களை தயார் படுத்துவதும்;  இன்னும் , அவன் மீது  தனது றஹ்மத்தின் அருளினால்  கண்ணியம் வழங்குவதும்;

அவனுடைய கல்பின் திரைகளை அகற்றுவதால் தனது கல்பை அவன்பார்ப்பதும், தனது அகப்பார்வையால் அவனின் பக்கம் தனது பார்வையைச் செலுத்துவதும் மஹப்பத்தின் உச்சமாகும்;   நான் அவனை நேசித்து விட்டால், அவன் கேட்கும் கேள்வியாக அவன் பார்க்கும் பார்வையாக... என்று ஹதீதில் குறிப்பிட்டுள்ளவாறு அவன் ஆகிவிடுவான்.

இவ்வாறானவர் அவனைத்தவிரவுள்ளதைக் கேட்கமாட்டார்,அவர் முற்றுமுழுதாக அல்லாஹ்வுக்குரியவராகிவிடுவார், (இந்த நிலையில்)  அல்லாஹ் அல்லாத அனைத்தையும்  புறக்கணித்து விடுவார் ;  அல்லாஹ்வுக்காக மனம் தெளிந்திருக்கும் ;  அவரின் அனைத்து அசைவுகளும் அல்லாஹ்வுக்காக என்றாகி விடும்.

ஸஹீஹுல் புகாரி , கிதாபுர் றிகாக் , பாகம் 3 பக் 89 

உம்முல் முஃமினீன் ஆயிஷா சித்திக்கா ரலியல்லாஹு தஆலா அன்ஹா கூறியது போன்று ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் நற்குணம்  திருக்குர்ஆனாக இருந்தது, அவனுடைய பொருத்தத்தில் திருப்தி! அவனுடைய கோபத்தில் கோபம்! 

இவ்வாறு   குல்லத்திற்கு சிலர் விளக்கம்பகர்கின்றனர்.

ஸஹீஹுல் புகாரி  கிதாபுர் றிகாக்  பாகம் 3 பக்கம்  89

ஒரு புலவர் பாடுகிறார்.

 قد تخللت مسلك  الروح مني 

وبذا سمي الخيل خليلا 

நிச்சயமாக உயிர் (உடலில்) இரண்டரக் கலந்திருப்பது போன்று, நீர் என்னில் இரண்டறக் கலந்துள்ளாய் !ஆகவே தான் கலீலுக்கு கலீல் என்று பெயர் சூட்டப்பட்டது.

فاذا ما نطقت كنت حديثي 

واذا ما سكت كنت الغليلا 

எனவே, நான் பேசினால் நீ என் பேச்சாகி வ

Monday, 6 January 2025

இப்னு அதாஉல்லாஹ் அஸ்ஸிக்கந்தரி

இப்னு அதாஉல்லாஹ் அஸ்ஸிக்கந்தரி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ்

ஆன்மீக பாரம்பரியத்தின் ஒளிவிளக்கு

ஆக்கம்:- 

மெளலவீ HMM.பஸ்மின் றப்பானீ

 இப்னு அதாஉல்லாஹ் அஸ்ஸிக்கந்தரி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் 

(1260 – 1309) என்றால் இஸ்லாமிய ஆன்மிக வரலாற்றில் ஒரு மிகப் பெரிய பேராண்மை. 

இவர்களின் முழுப் பெயர் 

تاج الدين أبو الفضل أحمد بن محمد بن عبد الكريم.

தாஜுத்தீன் அபுல் பழ்ல் அஹ்மத் இப்னு முஹம்மத் இப்னி அப்தில் கரீம்.

 ஷாதுலிய்யா ஆன்மிக மரபில் உயர்ந்த நிலையில் விளங்கிய இவர்கள், சிறந்த ஃபிக்ஹ் அறிஞராகவும் தத்துவஞானியாகவும் மக்களிடையே புகழடைந்திருந்தனர். 

அவர்கள் உலகிற்கு அளித்த ஆன்மிகப் போதனைகளும் எழுத்துக்களும் இன்றும் பேரொளியாக விளங்குகின்றன.

வளர்ச்சி மற்றும் வாழ்வு

இப்னு அதாஉல்லாஹ் அஸ்ஸிக்கந்தரி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ்,

(ஜுதாம்)குலத்தைச் சேர்ந்தவராக அலெக்ஸாண்ட்ரியாவில் பிறந்தார்கள்.

Alexandria (السكندرية) எகிப்தின் இரண்டாவது பெரிய நகரமாகும்.

இது ஒரு முக்கிய பொருளாதார மையமாகவும், சுற்றுலா ஈர்ப்புச் செயல்பாடுகளுக்கான இடமாகவும் விளங்குகிறது.

 இவர்களதது குடும்பம், இஸ்லாமிய படையெடுப்பின் போது எகிப்தில் குடியேறியது. 

சிறுவயதில், இப்னு அதாஉல்லாஹ் அஸ்ஸிக்கந்தரி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ்

 ஷரீஅத் சட்டங்களிலும் மதவியலிலும் அரபு மொழி இலக்கியத்திலும் தீவிரமாக பயின்று சிறந்த நுண்ணறிவை வளர்த்துக் கொண்டார்கள்.

அவர்களது பாட்டனார், ஷைக் அபூ முஹம்மத் அப்துல்கரீம் பின் அதா உல்லாஹ், ஒரு புகழ்பெற்ற ஃபிக்ஹ் அறிஞராக இருந்தார். 

"இப்னு அதாஉல்லாஹ் "அவர்களைப் பின்பற்றி, இளம் வயதிலேயே தன்னுடைய மார்க்க அறிவைப் பெருக்கினார்கள்.

ஆன்மிக பாதையில் திருப்பம்

இப்னு அதாஉல்லாஹ் அஸ்ஸிக்கந்தரி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் தனது வாழ்க்கையின் ஆரம்ப காலங்களில் ஆன்மிக சிந்தனைகளைக் (தஸவ்வுப்) கண்டித்தவராக இருந்தார்கள்.

 அவர்கள் ஒருகாலத்தில் கூறினார்கள்:

"من قال إن هناك علماً غير الذي بأيدينا فقد افترى على الله"

(அதாவது, "நம்மிடம் உள்ள மார்க்க அறிவைத் தவிர வேறு அறிவு இருக்கிறது என்று கூறுபவர், அல்லாஹ்வின் மீது பொய்சொல்லிவிட்டார்").

ஆனால், இப்னு அதாஉல்லாஹ் அஸ்ஸிக்கந்தரி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ்,அவர்கள்

 ஷைக் அபுல் அப்பாஸ் அல்-முர்ஸி

 (أبو العباس المرسي) 

அவர்களின் ஆழ்ந்த ஆன்மிக போதனைகளை கேட்டபின், தமது சிந்தனைகளில் மிகப்பெரிய மாற்றம் கண்டார்கள். 

தனது பழைய கருத்துக்களைப் பற்றி அவர்கள் கூறும்போது

"كنت أضحك على نفسي في هذا الكلام."

(அதாவது, "நான் அந்த வார்த்தைகளில் என்னையே சிரித்துக் கொள்ளக்கூடியவனாக ஆகியிருந்தேன்").

என்று பின்னர் கூறினார்கள்.

அபுல் அப்பாஸ் அல்முர்ஸீ ஆண்டகை அவர்கள்  

"இப்னு அதாஉல்லாஹ் அஸ்ஸிக்கந்தரி" கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்களை முன்னறி வித்து கூறினார்கள்

"والله لا يموت هذا الشاب حتى يكون داعياً إلى الله وموصلاً إلى الله."

(அதாவது, "இந்த இளைஞன் இறப்பதற்குள் மக்களை அல்லாஹ்வின் அருகில் அழைக்கும் உயர்ந்த வழிகாட்டியாக மாறுவார்").

அவர்களின் குருவின் வழிகாட்டுதலில், இப்னு அதாஉல்லாஹ் அஸ்ஸிக்கந்தரி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் ஆன்மிக துறையில் உயர்ந்த நிலையில் வளர்ந்தார்கள்.

ஆன்மிக மாணாக்கர்கள் மற்றும் பங்களிப்பு

 இப்னு அதாஉல்லாஹ் அஸ்ஸிக்கந்தரி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ்

அவர்களின் வாழ்வில், அவர்களிடம் பல மாணாக்கர்கள் வழிகாட்டல் பெற்றனர். 

அவர்களில்குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவர்கள்..

ابن المبلق السكندري

 இப்னு அல்-முபல்லிக்

تقي الدين السبكي

தகிய்யுத்தீன் அஸ்ஸுப்கி

(ஷாஃபிஈ மஸ்ஹபின் புகழ் பெற்ற

  அறிஞர்.)

புகழ்பெற்ற நூல்கள்

இப்னு அதாஉல்லாஹ் அஸ்ஸிக்கந்தரி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ், அவர்களின் ஆய்வு, தத்துவம் மற்றும் ஆன்மிகத்தில் உள்ள சிறந்த கருத்துகளை நூலாகப் பதிவு செய்தனர்.

 இவற்றில் முக்கியமானவை:

1. لطائف المنن

 லதாஃஇஃபுல் மினன்

ஷைக் அபுல் அப்பாஸ் முர்ஸீ மற்றும் அபுல் ஹசன் ஆண்டகை ஆகியோர் பற்றிய புகழ்பாடல்கள்.

2. القصد المجرد في معرفة الاسم المفرد 

அல்-கஸ்துல் முஜர்ரத் பீ மஃரிபதில் இஸ்மில் முப்றத்

அல்லாஹ்வின் திருப்பெயரை விளக்கும் நூல்.

3. التنوير في إسقاط التدبير 

அத்தன்வீர் பீ இஸ்காதித் தத்பீர்

தன்னிச்சையான செயல்களை விட்டுவிட்டு இறைநம்பிக்கையை வளர்ப்பது.

4. تاج العروس

 தாஜுல் அரூஸ்

மனதின் தூய்மையை மேம்படுத்துதல்.

5. الحكم العطائية

 அல்-ஹிகமுல் அத்தாயிய்யா

இஸ்லாமிய ஆன்மிகத்தில் உயர்ந்த இடம் பெற்ற தத்துவக் கூறுகள்.

அவற்றில் الحكم العطائية (அல்-ஹிகமுல் அதாயிய்யா) இன்றும் உலகெங்கும் பல இஸ்லாமிய கல்வி நிலையங்களில் கற்பிக்கப்படுகிறது.

இறப்பு மற்றும் நினைவகம்

இப்னு அதாஉல்லாஹ் அஸ்ஸிக்கந்தரி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ். அவர்கள்

 1309 ஆம் ஆண்டு கெய்ரோவில் உள்ள அல்-மன்சூரிய்யா மத்ரஸாவில் மறைந்தார்கள். 

அவர்களின் உடல் முகத்தம் மலையின் அடிவாரத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

 1973 ஆம் ஆண்டு, அந்த இடத்தில் ஒரு அழகிய பள்ளிவாயல் கட்டப்பட்டது.

இன்றும், இப்னு அதாஉல்லாஹ் அஸ்ஸிக்கந்தரி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ்

 அவர்களின் கப்ர் ஷரீப் ஆன்மிகப் பயணிகளுக்கும் இறைநேச உணர்வாளர்களுக்கும் ஒரு புனிதத் தளமாக விளங்குகிறது.

அவர்களின் ஆழ்ந்த வார்த்தைகள் இன்றும் ஒளிவிளக்காக இருக்கின்றன:

"إذا أردت أن تعرف مقامك عند الله فانظر في مقام الله في قلبك."

(அதாவது, "நீ அல்லாஹ்விடம் எந்த நிலையிலிருக்கிறாய் என்பதைப் புரிந்து கொள்வதற்கு

 உன் இதயத்தில் அல்லாஹ்வின் நிலையைப் பாரு").

இப்னு அதாஉல்லாஹ் அஸ்ஸிக்கந்தரி (رحمه الله) அவர்கள் அல்லாஹ்வின் இருப்பு மற்றும் தன் உண்மையின் உணர்வு குறித்து ஆழ்ந்த கருத்துக்களைக் கூறியுள்ளார்கள். 

குறிப்பாக "الحكم العطائية" (அல்-ஹிகமுல் அத்தாயிய்யா) என்ற நூலில் உள்ள ஒரு புகழ்பெற்ற கூற்றானது:

"وجودك ذنب لا يقاس به ذنب، وحسناتك من عطاياه، ووجودك من خطاياك."

அதாவது, "உனது இருப்பு எனப்படும் அகந்தை உணர்வு என்பது மற்ற எந்த பாவத்துடனும் ஒப்பிட முடியாத ஒரு பாவமாகும்; 

உனது நற்கருமங்கள், அவனது பரிபூரணமான பரிசுகளிலிருந்து முள்ளதாகும்; 

உனது (அனாவசிய - நான் ஒருவன் இருக்கிறேன் எனும்) இருப்பு, 

உன் பிழைகளிலிருந்து முள்ளதாலும்.")

இது மூலம், இப்னு அதா உல்லாஹ் அவர்கள் அல்லாஹ்வின் மாறா உண்மை நிலையையும், மனிதன் தன்னை அறிந்து அகந்தையை விலக்கிக் கொள்ள வேண்டும்  

என்பதையும் வலியுறுத்தியுள்ளார்கள்.

மேலும், அவர்கள் கூறிய இன்னொரு கூற்றும் பிரபலமாக இருக்கிறது:

"ما قادك شيء مثل الوهم، ولا أخرجك من شيء مثل الوهم"

"உன்னைக் கட்டியடக்கும் எந்த ஒரு விஷயமும் மாயைபோல் இல்லை;

 அதிலிருந்து உன்னை மீட்கும் எந்த ஒரு விஷயமும் மாயைபோல் இல்லை."

கருத்து:

மாயை அல்லது தவறான கற்பனை மனிதனை வழி தவறடிக்கும் மிகச் சிறந்த காரணமாகும். 

அதே நேரத்தில், மாயையின் உண்மையை புரிந்து கொண்டால், அதிலிருந்து வெளிவர முடியும். 

எனவே, மனிதன் மாயையை ஏற்கவும் மறக்கவும் இச்சக்தி கொண்டிருக்க வேண்டும்.

இது மூலம், அல்லாஹ்வின் இருப்பை உணர்வதற்கான அகங்காரத்திலிருந்து விடுதலை மற்றும் மனதின் தெளிவின் அவசியத்தை எடுத்துரைக்கின்றார்கள்.

இப்னு அத்தா அல்லாஹ் அஸ்ஸிக்கந்தரி (رحمه الله) அவர்கள்

 "நூரே முஹம்மதிய்யா" (نور محمدية) பற்றிய கருத்துகளை தம் எழுத்துகளிலும் ஆழ்ந்த சிந்தனைகளிலும் வெளிப்படுத்தியுள்ளார்கள். 

அவர்கள் நபி முஹம்மதுர் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை

 "உலகிற்கும் அனைத்திற்கும் சிருஷ்டிக்கப்பட்ட முதல் ஒளி" என்று குறிப்பிட்டுத் தங்கள் பாசத்தையும் மரியாதையையும் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, நூரே முஹம்மதிய்யா பற்றிய இப்னு அத்தாஉல்லாஹ் நாயகம் அவர்களின் சில கருத்துக்கள்:

1. "الله خلق النور المحمدي قبل كل شيء، وجعل منه أصل كل شيء."

(அதாவது: "அல்லாஹ் சர்வ படைப்புக்கள் அத்தனையையும் படைப்பதற்கு முன் முதலில் நபி முஹம்மதுர் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஒளியை சிருஷ்டித்தான்,

 மேலும் அதிலிருந்துதான் அனைத்தின் (அடிவேரை)அடிப்படையை ஆக்கினான்.")

இது அவர்கள், நபி முஹம்மதுர் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீதுள்ள ஆன்மிக நிலையை சுட்டிக்காட்டுகிறது.

2. "نور محمدي هو التجلي الأول الذي جعله الله رحمة للعالمين."

(அதாவது: "நபி முஹம்மதுர் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஒளி, அல்லாஹ்வின் முதல் வெளிப்பாடாகவும், உலகங்களுக்கு இரக்கமாகவும் விளங்குகிறது.") என்றும்,

3. "كل أنوار العالم مشتقة من النور المحمدي."

(அதாவது: "உலகின் அனைத்து ஒளிகளும், நபி முஹம்மதுர் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஒளியிலிருந்து பெறப்பட்டவையாகும்.")

என்றும் கூறியுள்ளார்கள்.

இப்னு அதாஉல்லாஹ் நாயகம் அவர்கள் "நூரே முஹம்மதிய்யா" என்ற ஒளியை ஒருவருடைய ஆன்மிக பயணத்தில் முக்கிய வழிகாட்டியாகக் கருதினார்கள்.

மேலும்,

 அவர்களின் தத்துவங்களில், நபி முஹம்மதுர் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மரியாதை மட்டுமல்ல, அவர்களின் ஒளி உலகத்தையும் உள்ளத்தையும் சுத்திகரிக்கும் சக்தி கொண்டது என வலியுறுத்தப்படுகிறது.

முடிவு

இப்னு அதா உல்லாஹ் அவர்கள், தங்களின் சிந்தனைகள், எழுத்துகள், மற்றும் செயல்பாடுகளால் இஸ்லாமிய ஆன்மிக உலகில் மறக்க முடியாத அடையாளத்தைப் பதித்துள்ளனர்.

 அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை, இறைநம்பிக்கை, தாராளம் மற்றும் மன அமைதியின் மாபெரும் உதாரணமாக விளங்குகிறது.

இப்னு அதாஉல்லாஹ் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்களின் சிந்தனைகள், ஸூபிசத்தின் மேல் அவர்கள் கொண்டிருந்த பற்றுதலையும்

 நபி முஹம்மதுர் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சிறப்பையும்,

 அவர்களுடைய இறைபணிகளின் பரப்பையும் மிகத் தெளிவாக உணர்த்துகின்றன. 

"நூரே முஹம்மதிய்யா" நபி முஹம்மதுர் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஆன்மிகப் பெருமை மற்றும் உலகிற்கு வழங்கிய ஈர்ப்பு சக்தி என்பதைக் குறிக்கிறது.

அல்லாஹ் மாத்திரமே உள்ளமையில் உள்ளான் என்பதையும், அவனைத் தவிரவுள்ள அனைத்தும் "வஹ்ம்" எனும் பேதமையை சார்ந்ததாகும் 

என்பதே அவர்களின் ஞானத்தின் சாராகவும் இருந்தது.

தகவல்,நன்றி -- விக்கிபீடியா

 https://ar.wikipedia.org/wiki

#நல்ல மரணம்

இஸ்லாத்தில் நல்ல மரணத்தின் (ஹுஸ்னுல் காத்திமா) அடையாளங்கள்.

1. இறுதியில் கலிமா சொல்லுதல்

ஆதாரம்:

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:

"யாருடைய இறுதிச் சொல் 'லா இலாஹ இல்லல்லாஹ்' முஹம்மதர்ரஸுலுலாஹ் என்பதாக இருக்கிறதோ, அவன் சுவர்க்கத்திற்குச் செல்கிறான்."

(அபூதாவூத் - 3116)

2. நல்ல நம்பிக்கையுடன்(ஈமானுடன்) மரணிப்பது.

ஆதாரம்:

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:

"ஒருவர் மரணிக்கும் நேரத்தில் அல்லாஹ்வைப் பற்றி நல்ல நம்பிக்கையுடன்(ஈமானுடன்) மரணிக்கட்டும்."

(முஸ்லிம் - 2877)

3. புனிதமான தினங்களில் மரணிப்பது.

ஆதாரம்:

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:

"ஜும்மா (வெள்ளிக்கிழமை) அல்லது ஜும்மா இரவில் மரணித்தால், அல்லாஹ் அவரை கப்ர் தண்டனையில் இருந்து பாதுகாக்குவான்."

(அஹ்மத் - 6546, திர்மிதி - 1074)

4. நன்மை செய்யும்போது மரணிப்பது

ஆதாரம்:

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:

"நீங்கள் எப்படி வாழுகிறீர்கள், அவ்வாறே மரணிப்பீர்கள்; நீங்கள் எப்படி மரணிக்கிறீர்கள், அவ்வாறே எழுப்பப்படுவீர்கள்."

(முஸ்னத் அஹ்மத் - 11841)

5. துஆ சொல்லும் நிலையில் மரணிப்பது

ஆதாரம்:

அல்லாஹ் கூறினான்:

"அவர்கள் சொல்வார்கள்: எங்கள் இறைவா! எங்களை மன்னியுங்கள். எங்களை ரஹ்மத் செய்யுங்கள்."

(அல்-ஹஃப் - 7:89)

6. நெற்றி அடையாளங்களுடன் (வியர்வை) மரணிப்பது.

ஆதாரம்:

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:

"நல்ல மனிதர் முகத்தில் வியர்வையுடன் மரணமடைவார்கள்."

(திர்மிதி - 980)

7. யாத்திரையில் மரணிப்பது

ஆதாரம்:

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:

"ஹஜ்ஜில் மரணித்த ஒருவர் கியாமத்திற்குப் புனிதமான நிலையில் எழுப்பப்படுவார்."

(இப்னு மாஜா - 1628)

8. நபிவழி போரில் இறப்பது (ஷஹீத்)

ஆதாரம்:

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:

"அல்லாஹ்வின் பாதையில் இறந்தவர் ஷஹீத் ஆவார்."

(புகாரி - 36)

9. நோய் மூலமாக மரணிப்பது.

ஆதாரம்:

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:

"மஹதம் நோயால் இறந்தவர் ஷஹீத் ஆவார்."

(முஸ்லிம் - 1914)

10. இறக்கும் நேரத்தில் சப்ருடன் இருப்பது

ஆதாரம்:

அல்லாஹ் கூறினான்:

"நிச்சயமாக பொறுமையுடையவர்களுக்கே அவர்களின் பழிவீடு கொடுக்கப்படும்."

(அல்-பகரா - 2:155)

11. குடல்நோயால் இறப்பது

ஆதாரம்:

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:

"வயிற்று நோயால் இறந்தவர் ஷஹீத் ஆவார்."

(முஸ்லிம் - 1914)

12. குழந்தை பிரசவத்தின் போது மரணிப்பது.

ஆதாரம்:

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:

"மரண வலி காரணமாக இறந்த பெண் ஷஹீத் ஆவாள்."

(அபூதாவூத் - 3111)

13. கடலில் மூழ்கி இறப்பது

ஆதாரம்:

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:

"மூழ்கி இறந்தவர் ஷஹீத் ஆவார்."

(முஸ்னத் அஹ்மத் - 23804)

14. தீ விபத்தில் மரணிப்பது.

ஆதாரம்:

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:

"தீயில் சிக்கி மரணித்தவர் ஷஹீத் ஆவார்."

(அபூதாவூத் - 3111)

15. குழந்தை பராமரிக்கையில் மரணிப்பது

ஆதாரம்:

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:

"குழந்தை பராமரிப்பில் இறந்த பெண் ஷஹீத் ஆவாள்."

(நஸாயி - 3163)

16. தூய்மையாக மரணிப்பது(வுழுவுடன்)

ஆதாரம்:

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:

"பரிசுத்தமான நிலையில் இறந்தவர்களை அல்லாஹ் உயர்த்துவான்."

(திர்மிதி - 1075)

17. பயமில்லாமல் மரணிப்பது.

ஆதாரம்:

அல்லாஹ் கூறினான்:

"அவர்களுக்கு அச்சமும் இல்லை; அவர்கள் கவலைப்படமாட்டார்கள்."

(யூனுஸ் - 10:62)

18. மற்றவர்களுக்கு உபகாரமாக மரணிப்பது.

ஆதாரம்:

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:

"நன்மை செய்பவர்களின் மரணம் சிறப்புடையது."

(திர்மிதி - 1921)

19. அருளை நாடி மரணிப்பது

ஆதாரம்:

அல்லாஹ் கூறினான்:

"அவர்கள் இறைவனின் அருளைப் பெற்றவர்கள்."

(அல்-ஹஃஃப - 7:89)

20. மனஅமைதியில் மரணிப்பது.

ஆதாரம்:

அல்லாஹ் கூறினான்:

"ஓ! ஆன்மாவே! திருப்தியுடன் திரும்பு."

(அல்-பளஹ் - 89:27-30)

இவை நல்ல மரணத்தின் அடையாளங்கள் ஆகும். அவற்றைக் கடைப்பிடிக்கவும், நல்ல மரணத்துக்காக துஆ செய்யவும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) பரிந்துரைத்துள்ளார்.

Moulavi HMM Muhammed @Yoosuf Musthafi

Sunday, 5 January 2025

அஹ்மத் பின் அஜீபா (கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ்)

அஹ்மத் பின் அஜீபா (கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ்)

 ஸூபி தத்துவ மேதை.

மொரோக்கோவின் மண்ணில் பிறந்து, இஸ்லாமிய அறிவின் ஊற்றாக உயர்ந்த அஹ்மத் பின் அஜீபா (கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ்) ஹிஜ்ரி 1162- 1224 (1758–1808), மார்க்க அறிவுக்கும் ஸூபி தத்துவத்திற்கும் ஒரு மென்மையான ஒளிக் குமிழாகத் திகழ்ந்தவர்கள். 

அறிவின் ஆழத்தையும் ஆன்மிகத்தின் உயரத்தையும் ஒருசேரத் தொட்ட அவர்கள், இன்றளவும் உலகமெங்கும் புகழுடன் போற்றப்படுகின்றனர்.

ஆரம்ப காலம்: 

அறிவின் வேர்கள் அமைந்த காலம்

அஹ்மத் பின் அஜீபா (கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ்) அவர்கள், தெட்டுவான் நகரின் அழகிய கிராம வாழ்வின் நடுவில், அறிவின் ஒளியை தன் 

சிறு வயதிலேயே எதிர்கொண்டார்கள்.

ஆடு மேய்த்துக்கொண்டிருந்தபோது கூட, "அல்-கர்துபிய்யா" எனும் மாலிகி மதநூலை மனப்பாடமாகக் கற்றார்கள்.

அரபு இலக்கண நூலான "அல்-ஆஜுர்ரூமியா", தர்மநூல் "இப்னு ஆஷர்" ஆகியவற்றை சிறு வயதிலேயே கற்றுக்கொண்டார்கள்.

தமது பாட்டனார் பெரியார் அல்-மஹ்தியிடம் குர்ஆனை முழுவதுமாக மனப்பாடமாக்கி, அதனின் ஆழமான விளக்கங்களைப் புரிந்துகொள்ளும் திறனை உருவாக்கினார்கள்.

ஒன்பது வயதிலேயே தங்களை அறிவின் வெளிச்சத்திற்கு அர்ப்பணித்த அவர்கள், மிகச் சில ஆண்டுகளில் மிகச் சிலருக்கே கிடைக்கும் விளங்கும் புகழைப் பெற்றார்கள். 

ஷெய்க் அப்துர் ரஹ்மான் அல்-கத்தாமி, ஷெய்க் அல்-அரபி அல்-சுவாதி, ஃபகீஹ் முஹம்மத் அஷ்ம், மற்றும் ஷெய்க் முஹம்மத் அல்-சூஸி அல்-ஸிம்லாலி போன்ற அறிவின் உச்சஸ்தரங்களில் இருந்து தங்களை வளப்படுத்திக்கொண்டார்கள்.

---

ஸூபி வாழ்வின் தொடக்கம்:

அஹ்மத் பின் அஜீபா (கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ்) அவர்கள் தங்கள் வாழ்வின் மறுபக்கம் ஸூபி தத்துவத்தில் விளங்கியதுடன் தொடங்கியது.

1208 ஹிஜ்ரி ஆண்டில் ஃபாஸ் நகரிலிருந்து திரும்பியபோது, பெனி ஸெருவால் பகுதியில் ஸூபி ஆசான் முஹம்மத் அல்-பூஸைதீ அவர்களைச் சந்தித்தார்கள்.

அந்த சந்திப்பு, ஸூபி மரபில் தங்களை முன்னேற்றுவதற்கான முக்கிய திருப்பமாக இருந்தது.

மரபுப்படி "மர்க்கஅஹ்" (ஸூபி உடை) அணிந்து, தஸ்பீஹ் மாலையை தாங்கி, மார்க்கத்தின் அழைப்பாளராகச் செயல்பட தொடங்கினார்கள்.

அவர்கள் தங்கள் செல்வங்களையும் சுகவாழ்வையும் புறக்கணித்தனர். தங்கள் சொத்துக்களையும் புத்தகங்களையும் விற்று, ஸூபி சாவியாக்களை உருவாக்கி, மார்க்கத்திற்கான ஒரு புதிய வெளிச்சமாக மாறினார்கள்.

---

படைப்புகளின் மரபு: 

நுட்பமான அறிவின் சிகரம்

அஹ்மத் பின் அஜீபா அவர்கள் எழுதப்பட்ட வார்த்தைகள் வழியே உயிரோடு வாழ்கிறார்கள். 

அறிவின் ஆழம் மற்றும் தத்துவத்தின் உயரத்தை வெளிப்படுத்தும் பல நூல்களை அவர்கள் எழுதியுள்ளார்கள்.

1. "ஈகாழுல் ஹிமம் ஃபீ ஷர்ஹில் ஹிகம்"

இப்னு அத்தாஉல்லாஹ் (கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ்) அல்-இஸ்ஸிக்கந்தரியின் "அல்-ஹிகம்" நூலின் ஆழமான விளக்கவுரை.

2. "அல்-ஃபுதூஹாதுல்-இலாஹிய்யா"

"அல்-மபாஹிதுல்-அஸ்லிய்யா" நூலின் விளக்கவுரை.

3. "அல்-பஹ்ருல்-மதீத் 

பீ தப்ஸீரில்-குர்ஆனில்-மஜீத்"

குர்ஆனின் ஆழமான விளக்கவுரை.

4. "அத்துரருன்னாசிரா 

ஃபீ தவ்ஜீஹில்-கிராஅதில்-முதவாதிரா"

குர்ஆனின் வாசிப்பு முறைகளை விளக்கும் முக்கிய நூல்.

---

இறுதிக்காலம்:

1224 ஹிஜ்ரி ஆண்டு (1808) ஷவ்வால் பிறை 7 அன்று, அஹ்மத் பின் அஜீபா (கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ்) அவர்கள் காழ்ச்சிப் பரவலால் (தாவுப்பூச்சி நோய் காரணமாக) காலமானார்கள்.

அவர்களுடைய இறுதி நாட்கள் ஆசான் முஹம்மத் அல்-பூஸைதி (கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ்)ன் வீடு அமைந்த மாரா கிராமத்தில் கழிந்தன.

முதலில் அங்கேயே அடக்கம் செய்யப்பட்ட அவர்கள், பின்னர் அல்-சமீஜ் என்ற இடத்திற்கு மாற்றப்பட்டு மீண்டும் அங்குதான் அடக்கம் செய்யப்பட்டார்கள்.

---

முடிவுரை:

 ஒளியை எங்கும் பரப்பிய ஒரு உன்னதம்

அஹ்மத் பின் அஜீபா(கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ்) அவர்கள் ஒரு அறிஞராக இல்லாமல், ஸூபி தத்துவத்தின் ஒளிவிளக்கனாகவும் மாறினார்கள். 

அவர்களின் வாழ்க்கை, கடின உழைப்பு மற்றும் தியாகம், இன்றும் பல கோடிக்கணக்கான மக்களுக்குத் தாரகை நாயகமாக விளங்குகின்றன.

அவர்களின் எழுத்துகள் அறிவுக்கான , ஆன்மிக தேடலுக்கான ஆழமான சமுத்திரமாகவும் இருக்கின்றன.

அஹ்மத் பின் அஜீபா அவர்களைப் போன்ற ஆளுமைகள் இஸ்லாமிய வரலாற்றின் ஒளிரும் நட்சத்திரங்கள்.

 அவர்கள் மண் மறைந்தாலும், அவர்களின் சிந்தனைகள் இன்றும் ஒளியை பரப்பி உலகை அமைதியின் பாதையில் வழி நடத்துகின்றன!

See more Fasmin Rabbani

Saturday, 4 January 2025

ஒரு_மனிதன்_முற்பகலில்_ஸூஃபியானால் 02

#ஒரு_மனிதன்_முற்பகலில்_ஸூஃபியானால்_ழுஹர்_வருவதற்குள்_அவனை_மிகப்_பெரிய_மடையனாக_காண்பீர்கள்.

( لو أن رجلا تصوف أول النهار لم يأت عليه الظهر إلا وجدته أحمق ) 

தொடர் 02

இந்த செய்தி அல் ஹாபிழ் இமாம் பைஹகி ரஹ்மஹுல்லாஹ் அவர்களுடைய #மனாகிபுஸ்_ஷாபிஃஈ ( مناقب الشافعي ) என்ற நூலின் பாகம் 2 பக்கம் 207 ல் இடம் பெருகிறது.

விடயத்திற்குள் நுழைய முன் இவர்கள் விமர்சனமாக கொண்டு வரும் செய்தியின் கருத்தை அப்படியே புரட்டும் விதமான ஒரு செய்தியை அதே இமாம் ஷாபிஃஈ ரஹ்மஹுல்லாஹ் அவர்களே சொன்னதை தருகிறேன் பாருங்கள்..

لو لا ان رجلا عاقلا تصوف لم يأت الظهر حتى يصير أحمق

ஒரு பகுத்தறிவுள்ள புத்தியுள்ள மனிதன் சூஃபித்துவத்தை கடைப்பிடிக்காமல் இருந்தால் ழுஹர் வருவதற்குள் அவன் மிகப் பெரிய மடையனாக மாறுவான்..

இந்த செய்தி அல் ஹாபிழ் இமாம் அபூ நுஐம் அல் அஸ்பஹானி ரஹ்மஹுல்லாஹ் அவர்களின் #ஹில்யதுல்_அவ்லியா_வதபகாதுல்_அஸ்பியா ( حلية الاولياء وطبقات الاصفياء ) 

என்ற நூலின் பாகம் 09 பக்கம் 142 ல் இடம் பெருகிறது.

01- சூஃபியானால் மிகப் பெரிய மடையனாவான்..

02- சூஃபியாகவில்லையானால் மிகப் பெரிய மடையனாவான்...

வெளிப்பார்வைக்கு ஒன்றோடு ஒன்று மோதுதா..?ஒன்றுக்கொன்று எதிராக இருக்கா.?

அது தான் இல்ல...ஏன்னா வெளிப்பார்வையில் முதல் செய்திக்கு எதிராக இரண்டாவது செய்தி காட்சி அளித்தாலும் இதன் எதார்த்தம் உள்ரங்கம் முதல் செய்திக்கு இரண்டாவது செய்தி விளக்கவுரையாகவே காணப்படுகிறது..

ஆக புத்தி உள்ள ஒருவர் சூஃபிசத்தில் இணைய வேண்டும்.அப்படி இணைந்தால் தான் #ஹமாகத் ( حماقة ) என்ற மடமைத்தனத்தை விட்டும் அவன் பரிசுத்தமாவான்..

வெறுமனே தான் சூஃபி என்பதை பெயரளவில் காட்டுவதாக இருந்தால் சூஃபிசம் அவனை மடயனாக்கும் என்பதே இமாம் அவர்களின் மையக்கருத்து..

ஆகவே இரண்டுமே இமாம் ஷாபிஃஈ ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் சொன்னது.முதல் செய்தி ஸஹீஹானது இரண்டாவது செய்தி பலஹீனமானது என்று சொல்ல வருகிரீர்களா..?

வாங்க பார்க்கலாம் முடியுமானால் அதை பலஹீனமாக்க..!!

விஷயத்திற்கு வருவோம்..

01-இவர்களின் குற்றச்சாட்டுப்படி ( அதை குற்றச்சாட்டாகவோ, இழிவாக பேசினார்கள் என்றோ நாம் சொல்லவே இல்லை)  

எனவே குறிப்பிட்ட ஒரு செய்தியை வைத்து இமாம் ஷாபிஃஈ ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் சூஃபித்துவத்தை இழிவாக பேசினார்கள் என்ற முடிவுக்கு வரமுடியாது..காரணம் #இவர்களின்_விமர்சனப்படி இந்த ஒரு செய்தியைத் தான் இவர்கள் காட்டலாம்..ஆனால் சூஃபித்துவத்தைப் புகழ்ந்த செய்திகள் உண்டு...

02- அல் ஹாபிழ் இமாம் பைஹகி ரஹ்மஹுல்லாஹ் அவர்களின் #மனாகிபுஸ்_ஷாபிஃஈ_என்ற கிதாபை இவர்கள் கண்கொண்டு பார்க்கவே இல்லை..இவர்கள் பார்த்ததெல்லாம் ஷைகுல் இஸ்லாம் #கூகுல்_ஆலிம்ஷாவை.. இவர்கள் கிதாப் பார்த்திருந்தால் மேற்கண்ட விமர்சனத்தை செய்திருக்கமாட்டார்கள்.. 

ஏன்னா அல் ஹாபிழ் இமாம் பைஹகி ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் மேற்கூறிய செய்திக்கு கீழ் இன்னொரு தகவலை பதிவு செய்துவிட்டு இமாம் ஷாபிஃஈ ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் இப்படி சொன்ன காரணம் என்ன..?அதன் கருத்து நாட்டம் என்ன.?என்பதை தெளிவாக அழகாக சொல்லிக்காட்டுகிறார்கள்...

ஏன் அதை மக்களுக்கு சொல்லாமல் மறைத்தீர்கள்....??

அல் ஹாபிழ் இமாம் பைஹகி ரஹ்மஹுல்லாஹ் அவர்களின் கிதாபை ஆதாரமாக காட்ட தெரிந்த உங்களுக்கு அதே பக்கத்தில் கீழே இமாம் அவர்கள் சொன்னதை ஏன் சொல்லாமல் விட்டீர்கள்.....??

இது தானா தஃவாவின் தர்மம்..?இது தானா உங்கள் இஃலாஸ் எனும் உளத் தூய்மை..??

அல் ஹாபிழ் இமாம் பைஹகி ரஹ்மஹுல்லாஹ் அவர்களின் மனாகிபுஸ் ஷாபிஃஈ கிதாபின் 207 ம் பக்கத்தை தருகிறேன்..முடியுமானால் தஃவாவில் இஃலாஸ் இருந்தால் அல்லாஹ்வை பயந்த சத்தியவான்களானால் இமாம் அவர்கள் சொல்லும் விடயத்தை மக்களுக்கு மொழிபெயர்த்துக் காட்டுங்கள் பார்க்கலாம்.....ஏன் அதை சொல்லாமல் மறைத்தீர்கள்.??

الحجة القوية في حقيقة قول الشافعي في السادة الصوفية 

சூஃபியாக்களின் விடயத்தில் இமாம் ஷாபிஃஈ ரஹ்மஹுல்லாஹ் அவர்களின் சொல்லின் உண்மைத்தன்மை பற்றிய வலுவான ஆதாரங்கள்.. 

என்ற ஓர் ஆய்வு 51 பக்கங்களைக் கொண்ட இவர்களின் மேற்கூறிய விமர்சனத்திற்கு என்றே தனியாக எழுதப்பட்ட கிதாபே உண்டு..

ஒவ்வொரு கலைகளுக்கும் என்றே தனித்துவமான சொற்களஞ்சியங்கள் ஒவ்வொரு சொற்களஞ்சியங்களுக்கும் என்றே தனித்துவமாக விபரிக்கும் வரைவிளக்கணங்கள் எல்லாம் உண்டு..அவைகளை நன்றாக படியுங்கள்..ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாகவே பல கிதாபுகள் உண்டு....

எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கு நேர்வழியை காட்டுவானாக!!

சிந்திப்போருக்கு படிப்பினை உண்டு.....

முற்றும்...ஆக்கபூர்வமாக யாராவது தொடர்ந்தால் தொடரும்...

@highlight 

மௌலவி நிஸ்வர் பாதிபி காதிரி

077 444 77 57