السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Sunday, 11 January 2026

ரஜப்_பிறை_27_ல்_இஸ்ராவும்_மிஃறாஜும்_மிஃறாஜ்_நோன்பும்

 

#ரஜப்_பிறை_27_ல்_இஸ்ராவும்_மிஃறாஜும்_மிஃறாஜ்_நோன்பும்


மீள்பதிவு


உம்மத்தே முஹம்மதிய்யா என்று ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சமுதாயத்தினர் என்று பெருமையாக பேசுகிறார்கள் ஆனால் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த திகதி தெரியவில்லை.ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிஃறாஜ் எனும் விண்ணுலக யாத்திரை எப்போது போனார்கள் என்பது தெரியவில்லை..


என்றால் இந்த ஷரீஅத்திற்கு சொந்தமான ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி எப்படி போதிக்கிரீர்கள்..?

எப்படி பெருமையாக உம்மத்தே முஹம்மதிய்யா என்று சொல்லிக்கொள்கிரீர்கள்..?என்பதே வினோதம்!!


மார்க்க கல்வியை சரிவர ஆழ படித்தால் ஏன் இந்த குழப்பம்.?ஹதீஸில் வரக்கூடிய ஓர் அறிவிப்பாளரின் தரவுகளை எப்படி பெற்றீர்கள்..?உதாரணமாக ஒருவரைப் பற்றி சில ஹதீஸ் கலை வல்லுனர்கள் #குறை சொல்கிறார்கள்.பலர் #நிறைவாக பேசுகிறார்கள் எனும் போது இதில் என்ன தீர்ப்பை எடுப்பது.? இன்னும் தெளிவாக சொல்லப்போனால் அல் ஹாபிழ் இமாம் ஹாகிம் ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் ஒரு ஹதீஸை ஸஹீஹ் என்பார்கள்.அதே ஹதீஸை அல் ஹாபிழ் இமாம் தஹபி ரஹ்மஹுல்லாஹ் ழயீப் என்பார்கள்..இதை எப்படி முடிவுக்கு கொண்டுவருவது..?


இதே அடிப்படையில் நேர்கோட்டில் வாருங்கள்...


ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த தினம் ரபிஉல் அவ்வல் பிறை 12 என்று நாம் சொல்கிறோம்.ஆனால் வேறு திகதிகளையும் சொல்லிக்காட்டுகிறார்கள்...இது வரலாற்று ஆசிரியர்களிடத்தில் ஏற்படும் கருத்து வேறுபாடு.


அஸ்ஸீரதுன் நபவிய்யா இப்னு ஹிஷாம் ரஹ்மஹுல்லாஹ் அல் பிதாயா வன் நிஹாயா இமாம் அல் ஹாபிழ் இப்னு கதீர் ரஹ்மஹுல்லாஹ் அஸ்ஸீரதுல் ஹலபிய்யா நூருத்தீன் அல் ஹலபி ரஹ்மஹுல்லாஹ் அஸ்ஸீரதுன் நபவிய்யா இமாம் அல் ஹாபிழ் இப்னு கதீர் ரஹ்மஹுல்லாஹ் இப்படி பல வரலாற்று நூற்களைப் பாருங்கள் வரக்கூடிய கருத்துக்களை சொல்லிவிட்டு அதில் #பிரபலமான_சொல் #அதிகப்படியான_இமாம்களிடத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சொல் ரபிஉல் அவ்வல் பிறை 12 என்பதே!!

இருக்கா..?இல்லியா..?என்பதை பாருங்கள்..இது தவிர பிறை 12 ல் தான் பிறந்தார்கள் என்பதற்கு வேறு பல செய்திகளையும் நாம் சொல்வோம் அதுவல்ல இப்பதிவு....


அதே சமயம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வபாத் ஆனது தான் ரபிஉல் அவ்வல் பிறை 12 அதில் மாற்றுக்கருத்து இல்லை.தெளிவான ஆதாரம் அது என்று சொல்கிரீர்கள்..அப்ப நீங்க கிதாப் வாசிக்கல்ல...நுனிப்புல் மேய்ந்த எருமை மாடுகள் என சொல்லலாம்....


ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வபாத் ஆன திகதி விஷயத்தில் இமாம் அல் ஹாபிழ் இப்னு கதீர் ரஹ்மஹுல்லாஹ் அவர்களுடைய அல் பிதாயா வன் நிஹாயா வை பாருங்கள் என்ன சொல்கிறார்கள் என்பது தெரிய வரும்....


அதே போல் #இஸ்ரா எனும் பயணம் அதாவது கஃபா ஷரீபில் இருந்து பலஸ்தீன் மஸ்ஜிதுல் அக்ஸா வரை #மிஃறாஜ் எனும் பயணம் அதாவது பலஸ்தீன் மஸ்ஜிதுல் அக்ஸாவில் இருந்து விண்ணுலகம் வரை நடந்த இந்த நிகழ்வுக்கு வாருங்கள்..


விண்ணுலக யாத்திரை ரஜப் பிறை 27 ல் நிகழவில்லை என்றொரு வியாதி..அப்படி என்றால் மிஃறாஜ் எப்போது நிகழ்ந்தது.?சரியான திகதி நாள் இல்லையாம்..இதென்ன புதிர்...?


#மிஃறாஜ்_விண்ணுலக_யாத்திரை


மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த முடிவாக மிஃறாஜ் எனும் விண்ணுலக யாத்திரை ரஜப் பிறை 27 ல் நிகழ்ந்தது என்பதையும் அவ்விரவு #லைலதுல்_மிஃறாஜ் என்றும் சொல்கிறார்கள்.


இமாம் ஙஸ்ஸாலி ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் ( ஹிஜ்ரி 450 - 505) தங்களுடைய #இஹ்யாஉ_உலூமுத்தீன் 1/ 361 

அல் ஹாபிழ் இமாம் அபுல் பரஜ் இப்னுல் ஜவ்ஸி ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் ( 510 - 597 ) தங்களுடைய #அல்_வபா_பிதஃரீபி_பழாஇலில்_முஸ்தபா 1/ 162 


இமாம் இமாதுத்தீன் அல் அஸ்பஹானி ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் ( 519 - 597 ) தங்களுடைய #அல்_பத்ஹுல்_குஸ்ஸீ_பில்_பத்ஹில்_குத்ஸீ 

பக்கம் 73

பதிவு நீண்டு செல்கிறது என்பதால் சுருங்க சொல்கிறேன்..

عمدة القاري شرح صحيح البخاري 4/39

لمحات الانوار ونفحات الازهار 3/1329 

النوادر السلطانية 135

روضة الطالبين 10/ 206 

وفيات الأعيان 7 / 179

مرآة الجنان وعبرة اليقظان 3/ 344 

البداية والنهاية 14/ 228 

الأنس الجليل بتاريخ القدس والخليل 2 /33

الإقناع في حل ألفاظ ابي شجاع 2/ 556 

مغني المحتاج 6 /3 

تفسير روح البيان 5/ 103 

لوامع الانوار البهية 2/ 280 

تحفة الحبيب 2/ 10 

حاشية الطحطاوي على مراقي الفلاح 1/ 114

حاشية ابن عابدين 1/ 352 

نهاية الايجاز في سيرة ساكن الحجاز 1/ 138 

الآثار المرفوعة في أخبار الموضوعة 1/ 77

إظهار الحق 4/ 1017 

رحمة للعالمين 1/ 64 


இன்னும் நிறைய கிதாப்களில் மிஃறாஜ் எனும் விண்ணுலக யாத்திரை ரஜப் பிறை 27 ல் நிகழ்ந்தது என்பதை எழுதிக்காட்டுகிறார்கள்..


அதே சந்தர்ப்பம் இஸ்ராஃ மிஃறாஜ் என்பது ரஜப் மாதத்தில் தானா. ?நிகழ்ந்தது என்பது பற்றியும் கருத்து வேறுபாடுகள் உண்டு.

அதில் 15 விதமான கருத்துக்களை சொல்லி மிகப் பிரபலமானதும் ஏகோபித்ததும் ரஜப் மாதத்தில் தான் என்பதை அல்லாமா அல் ஹாபிழ் இமாம் ஜலாலுத்தீன் அஸ் ஸுயூதி ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் தங்களுடைய 

#அல்_ஆயதுல்_குப்றா_பீ_ஷரஹி_கிஸ்ஸதில்_இஸ்ரா என்ற நூலில் சொல்லிக்காட்டுகிறார்கள்..


ஹழ்ரத் ஆயிஷா ஸித்தீக்கா ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் கருத்தை "ஹிஜ்ரத்திற்கு ஒன்றரை வருடத்திற்கு முன் ரஜப் மாதத்தில் நிகழ்ந்தது,, என்ற கருத்தை அபூ ஹய்யான் அல் அந்துலுஸீ ரஹ்மஹுல்லாஹ் தங்கள் தப்ஸீர் #அல்_பஹ்ருல்_முஹீத் 9/ 7 அதே போல் அக்கருத்தை ஏற்று இமாம் இப்னு அதிய்யா அல் அந்துலுஸீ ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் தங்களுடைய #அல்_முஹர்ரருல்_வஜீஸ் 3/ 435-436 ல் பதிவு செய்கிறார்கள்..


அதே போல் இப்னு குதைபா ரஹ்மஹுல்லாஹ் ( இப்னு குதைபா என்று ஷீஆ இயக்கத்திலும் ஒருவர் இருக்கிறார் அதே பெயர் அதே பெயர் கொண்ட கிதாப் அதனால் அதில் விழிப்பாக இருக்க வேண்டும்..யார் என்றே கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு ஷீஆக்கள் இதோ உங்கள் இமாம் தானே சொல்கிறார் என்று சொல்வார்கள்.. எச்சரிக்கை!!) இமாம் இப்னு அப்துல் பர் அல் மாலிகி ரஹ்மஹுல்லாஹ் அவர்களும் இதே கருத்தை( ரஜப் ) என்று தான் சொல்கிறார்கள்..அதை இமாம் கஸ்தலானீ ரஹ்மஹுல்லாஹ் தங்களுடைய #அல்_மவாஹிபுல்_லதுன்னிய்யா 2/ 70 ம் அதே போல் #தாரீக்ஃ_கமீஸ் 1/ 307 ம் பதிவு செய்கிறார்கள்..


மேற் சொன்னது போல் இஸ்ராஃ மிஃறாஜ் ரஜப் 27 ல் தான் நிகழ்ந்தது என்பதில் அதிகப்படியான இமாம்களின் கருத்தும் ஏகோபித்த முடிவும் அது தான் என்பதையும் அதன் படி தான் முஸ்லீம்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்பதை இமாம் அல் ஹாபிழ் அபுல் பரஜ் இப்னுல் ஜவ்ஸீ ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் தங்களுடைய 

المنتظم في تاريخ الملوك والامم 3/26 

என்ற நூலில் சொல்லிக்காட்டுகிறார்கள்..


#மிஃறாஜ்_நோன்பு 


  من صام يوم سبع وعشرين من رجب كتب له صيام ستين شهرا

யார் ரஜப் மாதம் பிறை 27 வது நாள் நோன்பு நோற்கிறாரோ 60 மாதம் நோன்பு நோற்ற நன்மை அவருக்கு எழுதப்படுகிறது என்று ஒரு ஹதீஸ் உண்டு. 


இந்த ஹதீஸை இமாம் அல் ஹாபிழ் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் தங்களுடைய 

#தப்யீனுல்_அஜப்_பிமா_வரத_பீ_ஷஹ்ரி_ரஜப் 

تبيين العجب بما ورد في شهر رجب 

என்ற நூலில் கொண்டுவந்திருக்கிறார்கள்..


இந்த ஹதீஸிக்கு கீழ் அல் ஹாபிழ் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் 

وهذا موقوف ضعيف الاسناد 

இது #மவ்கூப் ஆன செய்தி..அதாவது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரை அறிவிப்பாளர் வரிசை செல்லாது.ஸஹாபாக்களின் சொல் செயல் அங்கீகாரத்தோடு தொடர்புடையது..ஸஹாபாக்கள் வரை அத்தொடர் செல்லக்கூடியது..

இதை நாம் #மவ்கூபான_ஹதீஸ் என்போம்..

குராஸானியீன்களின் ஹதீஸ் கலை வல்லுனர்களின் சொல் வழக்கத்தில் இதை #அதர் என்று சொல்வார்கள்..

மவ்கூபான ஹதீஸைப் பற்றி பேசுவதென்றால் நிறைய பேசலாம்...தனித்தனி கிதாபுகளே உண்டு..இன்னொரு சமயம் பார்க்கலாம்..


மவ்கூபான ஹதீஸ் சில சமயம் ஸஹீஹான ஹதீஸாகவும் ஹஸனான ஹதீஸாகவும் மாறுவதற்கு வழி உண்டு...அந்த சட்டமும் இப்போ தேவையேற்படாது இன்னொரு சமயம் பார்க்கலாம்...

இங்கே #இஸ்னாத் பலஹீனம் என்பதையும் அல் ஹாபிழ் இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் சொல்லிக்காட்டுகிறார்கள்..


எனவே பலஹீனமான ஹதீஸை வைத்து அமல் செய்யலாமா.?என்பது பற்றி ஏலவே ஓர் ஹதீஸ் பற்றி பேசுகையில் மூன்று தொடராக எழுதியதில் பார்வையிடலாம் அதன் லிங்க் இதோ!!


https://www.facebook.com/share/p/1GgR3UQ6Bv/


மட்டுமல்ல எகிப்தின் பத்வா குழு #தாருல்_இப்தாஉல்_மிஸ்ரிய்யாவினால் மேற்கூறிய ஹதீஸ் அடிப்படையில் பலஹீனமானாலும் அமல் செய்யலாம் என்ற உஸூலின் பிரகாரம் ரஜப் பிறை 27 ல் நோன்பு நோற்பது விரும்பத்தக்கது என்ற பத்வாவையும் சொல்லி இருக்கிறார்கள்..


அதே சமயம் மார்க்க சட்டமேதைகளான #புகஹாக்களின் பக்கம் கவனத்தை செலுத்தினால் அங்கே 


#ஹாஷியதுல்_பர்மாவி_அலா_ஷரஹி_இப்னு_காஸிம் 


#இஆனதுத்_தாலிபீன்

#ஹாஷியதுல்_பாஜூரி

#ஹாஷியதுல்_ஜமல்

#அல்_ஙுன்னிய்யா

#இஹ்யாஉ_உலூமுத்தீன்

#பத்ஹுல்_அல்லாம்

#பதாவா_அஷ்ஷாலியாதீ 


போன்ற நூற்களில் எல்லாம் #சவ்முல்_மிஃறாஜ் மிஃறாஜுடைய நோன்பு நோற்பது விரும்பத்தக்கது என்று சொல்லி இருக்கிறார்கள்..


அது மட்டுமல்ல இமாமுல் அஃழம் இமாம் அபூ ஹனீபா ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் மிஃறாஜுடைய நோன்பு நோற்பது முஸ்தஹப்பானது என்று சொல்லி இருக்கிறார்கள் என்று இமாம் ஷிஹாபுத்தீன் அல் கராபீ ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் தங்களுடைய #அத்தகீரா ( الذخيرة ) என்ற நூலில் 2/ 532 ல் சொல்லிக்காட்டுகிறார்கள்..

அல்லாமா கலீல் ரஹ்மஹுல்லாஹ் தங்களுடைய #அத்_தவ்ழீஹ் ( التوضيح ) என்ற நூலிலும் 2/ 461 ல் மிஃறாஜுடைய நோன்பு நோற்பதை முஸ்தஹப் என்று சொல்லிக்காட்டுகிறார்கள்..


அதே சமயம் இமாம் அல் ஹாபிழ் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் மேற்கூறிய ஹதீஸின் பின் இன்னொரு விஷயத்தை சொல்கிறார்கள் 

وهو أمثل ما ورد في هذا المعنى 

என்று சொல்கிறார்கள்...


ஹதீஸ் கலை அறிஞர்களிடம் இதே போல் வேறு வார்த்தைகளை உபயோகப்படுத்துவது கனிஷமாக உண்டு.அதை அதிகமாக ஸுனனுத் திர்மிதியில் இமாம் திர்மிதி ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் 

هذا أصح شيئ في الباب 

என்று பாவித்திருப்பார்கள்..

இதை உபயோகப்படுத்தியதால் அந்த ஹதீஸ் #ஸஹீஹ் என்று கருத்தல்ல..அல் ஹாபிழ் இமாம் நவவீ ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் கூட அதற்கு நல்ல விளக்கம் ஒன்று சொல்வார்கள்...

அவைகளை எல்லாம் இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்...

எனவே இமாம் அல் ஹாபிழ் இப்னு ஹஜர் அல் அஸ்கலானீ ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் உபயோகித்த வார்த்தையின் எதார்த்தம் என்ன...?என்பதை திறந்த மனதோடு தேடுங்கள் பதில் கிடைக்கும் குழப்பமும் வராது...


அதே சமயம் #மப்ஹும்_முகாலபா #மப்ஹும்_முவாபகா ( مفهوم مخالفة - مفهوم موافقة ) 

இப்படி இரண்டு விதமான விளக்கங்கள் உண்டு....

சான்றோடு தெளிவோடு தேடுங்கள் சரியான தெளிவு கிடைக்கும்....


#இறுதியாக_பொது_விதி ஒன்றுக்கு வாருங்கள் 


மேற்கூறிய வெவ்வேறு கருத்துக்களில் ""ஸலபுகளிடம் இவ்வாறு வெவ்வேறு கருத்துக்கள் காணப்பட்டால் இது தான் #தர்ஜீஹ் ஆனது என்பது நிருவப்படவில்லை என்றால் அவ்வமல் எதன் பக்கம் சேர்க்கப்படும்....??என்ற கேள்வியோடு......


மௌலவி நிஸ்வர் பாதிபி காதிரி 

+94 77 444 77 57

அகீதா (நம்பிக்கை கோட்பாடு)

 

அகீதா (நம்பிக்கை கோட்பாடு) சார்ந்த பித்அத்துகளை( புதுமைகளை ) எதிர்த்துப் போராடுவதில் இமாம் அல்-கௌதரியின் வழிமுறை”
منهج الإمام الكوثري ** في محاربة البدع* " *العقدية "

அகீதா (நம்பிக்கை கோட்பாடு) சார்ந்த பித்அத்துகளை( புதுமைகளை ) எதிர்த்துப் போராடுவதில் இமாம் அல்-கௌதரியின் வழிமுறை”


அரபு மூலம்: பேராசிரியர் கலாநிதி தீன் முஹம்மத் ஹபிழஹுல்லாஹ் 


தமிழில் T.M முஆத் வாஹிதி 


2007 நவம்பர் 22-23 தேதிகளில் துருக்கியின் தலைநகர் அங்காராவின் இறையியல் பீடத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இமாம் அல்-கௌதரி சர்வதேச மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட ஓர் ஆய்வுக் கட்டுரையாகும்.


இதனை உலகப் புகழ்பெற்ற அறிஞர், கத்தார் பல்கலைக்கழகத்தின் ஷறீஆ மற்றும் இஸ்லாமிய ஆய்வுகள் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி தீன் முஹம்மது மீரா சாஹிப் ( PHD ) அவர்கள் சமர்ப்பித்தார்கள்.


இவ்வாய்வுக் கட்டுரையானது 20 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்பெற்ற சுன்னி அறிஞர், ஹதீஸ் கலை வல்லுனர், சட்டத்துறை அறிஞர், மற்றும் வரலாற்றாசிரியருமான துருக்கியைச் சேர்ந்த "சுன்னி அகீதாவின் பாதுகாவலர்" என போற்றப்படும் அஷ்ஷெய்க் இமாம் முஹம்மத் ஸாஹித் அல் கௌதரீ (றஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் அஹ்லுஸ் சுன்னா வல்ஜமாஅத்தின் இறையியல் நம்பிக்கைக் கோட்பாட்டுக்கு எதிரான வாதங்களை முறியடிப்பதில் அல்குர்ஆன் ஹதீஸ் மற்றும் துறை சார் வல்லுனர்களின் ஆதாரபூர்வமான மேற்கோள்கள் என்பனவற்றை ஆதாரமாக முன்வைத்து பல நூல்களை எழுதியுள்ளார்கள். இமாம் அவர்களின் இவ் ஆய்வு முறைமையின் தனித்துவத்தை எடுத்தியம்பும் ஓர் அழகிய ஆக்கமே பேராசிரியர் கலாநிதி தீன் முஹம்மத் அவர்களால் முன்வைக்கப்பட்ட இவ் ஆய்வுக் கட்டுரையாகும்.


அத்துடன் கலாநிதி அவர்களால் முன்வைக்கப்பட்ட சர்வதேச தரம் வாய்ந்த இவ்வாக்கமானது சுன்னத் வல்ஜமாஅத்தின் பிரதான அகீதாவினை அறிந்து கொள்ளும் அரிய வாய்ப்பினையும் வாசகர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும் எனும் நன் நோக்கத்தோடு இதனை தமிழாக்கம் செய்வதோடு..


இதனை முடிந்த அளவு சுருக்கி ஒவ்வொரு தொடராக / அத்தியாயமாக தெளிவு படுத்த அடியேன் முயற்சித்துள்ளேன் ஆக்கத்தில் பிழைகள் கண்டறியப்படும் போது சுட்டிக் காட்டினால் மிகவும் நன்றியுள்ளவனாக இருப்பேன்....


அத்தியாயம் 1


முன்னுரை (المقدمة)

இந்த முன்னுரையில், ஆய்வாளர் பின்வரும் விடயங்களை தெளிவுபடுத்துகிறார்கள்:


ஒவ்வொரு காலகட்டத்திலும் இஸ்லாமிய சமுதாயம் அகீதா சார்ந்த சோதனைகள் மற்றும் பித்அத் புதுமை (بدع) களால் பாதிக்கப்பட்டுள்ளது.


குறிப்பாக 19–20ஆம் நூற்றாண்டுகளில்:


மேற்கத்திய சிந்தனை,


சலபிய பெயரில் உருவான கடுமையான literalism,


வரலாற்று-பாரம்பரிய அகீதா முறைகளின் மறுப்பு

ஆகியவை தீவிரமடைந்தன.


இத்தகைய சூழலில் இமாம் கௌதரீ றஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள்,

👉 அஹ்லுஸ் சுன்னா வல் ஜமாஅத்தின் அகீதாவை அறிவியல் ரீதியில் பாதுகாத்த முக்கிய அறிஞர் என அறியப்படுகிறார்கள்.


ஆய்வின் நோக்கம்:


இமாம் கௌதரீ அவர்களின் பித்அத் எதிர்ப்பு முறையை (منهج) முறையாக ஆராய்தல்.


அத்தியாயம் 2

இமாம் அல்-கௌதரீ றஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் வாழ்க்கை மற்றும் அறிவியல் பின்னணி

இந்த அத்தியாயத்தில்:


🔹 1. அவர்களின் கல்வி வளர்ச்சி

உஸ்மானிய கிலாபத்தின் இறுதிக்காலத்தில் வளர்ந்தவர்கள்.


ஹதீஸ், பிக்ஹ், உஸூல், அகீதா, வரலாறு ஆகிய துறைகளில் அபார புலமை பெற்றவர்கள்.


ஹனபி பிக்ஹ் + மாதுரிதி அகீதா — இரண்டையும் ஆழமாகக் கற்றவர்கள் ஆகியன உள்ளடக்கப்பட்டுள்ளன.


🔹 2. இமாம் அவர்களின் அறிவியல் தன்மை


உணர்ச்சி சார்ந்த எதிர்ப்புகளை விட,

👉 ஆதாரம் + வரலாறு + அறிஞகளின் மரபு

என்ற மூன்று அடிப்படைகளில் வாதம் செய்தவர்கள்.


தனிப்பட்ட கருத்துகளை முன்னிலைப்படுத்தாமல்,

👉 உம்மத்தின் இஜ்மா, முன்னோடிகளான உலமா க்களின் விளக்கங்கள் 

ஆகியவற்றை முன்வைத்தார்கள்.


அத்தியாயம் 3

இமாம் கௌதரீ றஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் காலத்தில் தோன்றிய அகீதா பித்அத்துகள்

இந்த அத்தியாயம் மிகவும் முக்கியமானது.


🔸 அவர்கள் சுட்டிக்காட்டிய முக்கிய பித்அத்துகள்:

அல்லாஹ்விற்கு இடம் (جهة), திசை, உடல் கூறுகள் என்பனவாகும் 


தஷ்பீஹ் & தஜ்ஸீம்

(அல்லாஹ்வை படைப்புகளுடன் ஒப்பிடுதல்)


ஸலப்களை தவறாக மேற்கோள் காட்டுதல்


ஹதீஸ்களை பிக்ஹ் & உஸூல் இன்றி வெளிப்படையாக அனுகுவது.


அஷ்அரி – மாதுரிதி அகீதாவை “பித்அத்” என குற்றம்சாட்டுதல்


 இவை அனைத்தையும்,


“பழைய பித்அத்துகள், புதிய முகமூடியில் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டவை”

என்று அவர்கள் விளக்குகிறார்கள்.


அத்தியாயம் 4

பித்அத்துகளை எதிர்கொண்ட இமாம் கௌதரீ رحمة الله عليه அவர்களின் “வழிமுறை” (منهج)

இது ஆய்வின் மைய அத்தியாயமாகும்.


 1. குர்ஆன் – சுன்னா – ஸலப் புரிதல்

குர்ஆன் வசனங்களை:


மொழி


ஸியாஹ் – சிபாக் (context)


அரபு உசூல்

இவற்றின் அடிப்படையில் விளக்குதல்.


 2. முத்தகத்திமீன் உலமாக்களின் விளக்கங்களை ஆதாரம் காட்டுதல்

இமாம் அபூ ஹனீஃபா


இமாம் மாதுரிதி


இமாம் அஷ்அரி


இமாம் நவவி


இமாம் பயஹகி رحمة الله عليهم


போன்றோரின் தெளிவான மேற்கோள்களை முன்வைத்தல்.


 3. வரலாற்று மோசடிகளை வெளிச்சமிடுதல்

சிலர் உலமாக்களின் நூல்களில் இருந்து

👉 சூழல் நீக்கி (context-less) மேற்கோள் காட்டியதை,


இமாம் கௌதரீ கடுமையாக விமர்சித்தார்கள்.


 அத்தியாயம் 5

ஹதீஸ் அறிவியலில் இமாம் கௌதரீ றஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் பங்கு

இந்த அத்தியாயத்தில்:


“நாங்கள் ஹதீஸை மட்டுமே பின்பற்றுகிறோம்” என்ற கோஷத்தை

👉 அறிவியல் ரீதியில் அவர்கள் மறுத்தார்கள்.


ஹதீஸ்:


ஸஹீஹ் ஆக இருந்தாலும்,


அதற்கான புரிதல் (فهم) அவசியம் என்றார்கள்.


சட்டத்துறை அறிஞர்களைப் புறக்கணித்து ஹதீஸ் பேசுவது:

👉 உம்மத்துக்கு ஆபத்தான வழி என எச்சரித்தார்கள்.


 அத்தியாயம் 6

அஹ்லுஸ் சுன்னா அகீதாவை பாதுகாப்பதில் இமாம் கௌதரீ றஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் பங்களிப்பு

அஷ்அரி – மாதுரிதி அகீதாவே:

👉 உம்மத்தின் பெரும்பான்மையின் அகீதா என்பதை நிரூபித்தார்கள்.


“இது கலாம், இது பித்அத்” என்ற குற்றச்சாட்டுகளை:


வரலாற்று ஆதாரங்களால்


அறிஞர்களின் இஜ்மா மூலம்

முறியடித்தார்கள்.


 அத்தியாயம் 7

முடிவுரை (الخاتمة)

ஆய்வாளர் முடிவில் கூறுவது:


இமாம் கௌதரீ றஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள்:


வெறும் மறுப்பாளர் அல்ல, மாறாக 


உம்மத்தின் அகீதா காவலர் என்பதனை ஆணித்தரமாக முன்வைப்பதோடு

இமாம் அவர்களது அனுகு முறையானது:

இன்று கூட அகீதா பித்அத்துகளை எதிர்கொள்ளும் மாதிரிப்படிவம் என்பதனையும் உறுதிப்படுத்துகிறார்கள்.


தொடரும்........

Saturday, 10 January 2026

கராமத்துகள்

 

*ஸஹாபாக்கள் மற்றும் அவ்லியாங்களின் சில கராமத்துகள் (ரலி/ரஹ்)》


அவ்லியாங்களின் கராமத்துகளை மறுக்கும் சில பொதுமக்கள்,

“ஸஹாபாக்களுக்கு ஏன் கராமத்துகள் இல்லை?” என்று கேட்டபோது,

அதற்கு நாம் இவ்வாறு பதிலளித்தோம்:


 🌿 ஸஹாபாக்களின் கராமத்துகள்:

ஸய்யிதுனா இம்ரான் இப்னு ஹுஸைன் (ரலி) அவர்களுக்கு மலக்குகள் (தேவதைகள்) ஸலாம் கூறியதாக நூல்கள் கூறுகின்றன.

*ஸய்யிதுனா ஸுலைமான் (ரலி)மற்றும் ஸய்யிதுனா அபூ தர்தா (ரலி) இருவரும் ஒரே பாத்திரத்தில் உணவு உண்டபோது, அந்த பாத்திரமும் அதில் இருந்த உணவும் தஸ்பீஹ் செய்தன.


* ஸய்யிதுனா அப்பாத் இப்னு பிஷ்ர் (ரலி)** மற்றும் **ஸய்யிதுனா உஸைத் இப்னு ஹுஹைர் (ரலி)** இருவரும் நபி நாயகம் **ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்** அவர்களிடமிருந்து இரவு நேரத்தில் புறப்பட்டபோது, கடும் இருளில் அவர்களின் சாட்டையின் முனை ஒளிர்ந்து வழிகாட்டியது. அவர்கள் பிரிந்தபோது அந்த ஒளியும் இரண்டாகப் பிரிந்தது.

  👉 (இது இமாம் புகாரி உள்ளிட்ட ஸஹீஹ் நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.)

ஸய்யிதா உம்மு ஐமன் (ரலி) அவர்கள் ஹிஜ்ரத் செய்து செல்லும்போது, உணவும் நீரும் இல்லாமல் நோன்புடன் பயணித்தனர். தாகத்தால் உயிர் போகும் நிலை வந்தபோது, இப்தார் நேரத்தில் மேலிருந்து ஒரு குரல் கேட்க, பார்த்தபோது வெண்மையான கிணறு-வாளி (டோல்) தொங்கியிருந்தது. அதில் குடித்து தாகம் தீர்ந்தனர். அதன் பின் வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு தாகம் ஏற்படவில்லை.

ஸய்யிதுனா ஸஃபீனா (ரலி) நபி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அடிமை – ஒரு சிங்கத்திடம் “நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தூதர்” என்று கூற, அந்த சிங்கம் அவருடன் நடந்து அவரை பாதுகாப்பாக இலக்கிடம் சேர்த்தது.


🌿 சய்யிதுனா அபூ முஸ்லிம் அல்-கௌலானி (ரலி) – “உம்மத்தின் ஹகீம்”:

 அவர் மற்றும் அவரது படையினர் திஜ்லா நதியின் நீர்மேல் நடந்தார்கள். பின்னர்,

  “உங்களில் யாருக்காவது பொருள் தொலைந்ததா? நான் அல்லாஹ்விடம் துஆ செய்வேன்” என்றார்.

  ஒருவர் “என் பை தொலைந்தது” என்றார்.

  அவர் பின்னால் வரச் சொல்லி அழைத்துச் சென்றபோது, அது எங்கோ சிக்கியிருந்ததை கண்டுபிடித்து எடுத்தனர்.

தன்னை நபி என பொய்யாகக் கூறிய அஸ்வது அல்-அன்ஸி அவரை தீயில் வீச உத்தரவிட்டபோது, அபூ முஸ்லிம் (ரலி) தீயின் நடுவே நின்று தொழுதுகொண்டிருந்தார்; தீ அவருக்கு குளிராகவும் பாதுகாப்பாகவும் மாறியது.

👉 இவை அனைத்தும் ஸஹீஹ் நூல்களிலும் சுன்னா நூல்களிலும் பதிவாகியுள்ளவை.

 🌿 அவ்லியாங்களின் சில கராமத்துகள்:

 ஸய்யிதுனா அலி அல்-கவ்வாஸ் (ரஹ்) “அஹ்லுல் குத்வா”:

ஷெய்க் அப்துல் வஹ்ஹாப் அஷ்-ஷஅரானி (ரஹ்) அவர்கள் *“லவாகிஹுல் அன்வார் ஃபீ தபகாதில் அக்யார்”* என்னும் நூலில் குறிப்பிடுகிறார்:

* அலி அல்-கவ்வாஸ் (ரஹ்) அவர்களை மக்கள் ஒருபோதும் ஜமாஅத்துடன் தொழுவதை பார்க்கவில்லை. அத்தான் நேரத்தில் கடையை மூடி, சிறிது நேரம் மறைந்து விடுவார்.

* ஆனால் பாலஸ்தீனின் “ஜாமிஅ் அல்-அப்யத்” பள்ளியில் துஹர் தொழுகையில் அவரைக் கண்டனர். அங்குள்ள பணியாளரும், “இவர் எப்போதும் இங்கே துஹர் தொழுவார்” என்று கூறினார்.

  👉 இதன் பொருள்: அவருக்கு பூமி மடங்கிக் கொடுக்கப்பட்டு (தய்யுல் அர்த்), அவர் விரும்பிய இடத்துக்கு உடனே செல்லக்கூடியவராக இருந்தார்.

*ஸய்யிதுனா அக்மத் அல்-பதவி (ரஹ்)**:

* சிலுவைப் போர்களின் காலத்தில், அவர் முஸ்லிம் கைதிகளைச் சிலுவையர்களிடமிருந்து மீட்டு வந்தார்.

* அவர் மறைந்த பிறகும் கூட, நீண்ட காலம் வரை கைதிகளை விடுவித்தார் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் நிலவியது.

* அதனால், “**அல்லாஹ் அல்லாஹ் யா பதவி – ஜாப் அல்-யஸ்ரா**” (இடப்புறத்தை கொண்டு வந்தார்) என்ற சொல்லாட்சி பொதுவானதாகியது.

  👉 அதாவது: “பதவி கைதிகளை மீட்பவர்”.

 **ஸய்யிதுனா அக்மத் அல்-ரிஃபாஈ (ரஹ்)**:

* ஒரு பெண் குழந்தை கூனிய முதுகுடனும், கால் ஊனமுடனும், முடி உதிர்ந்த நிலையிலும் வளர்ந்தாள்.

* மக்கள் அவளை கேலி செய்தனர்.

* ஒருநாள், ஷெய்க் அக்மத் அல்-ரிஃபாஈ (ரஹ்) அவர்களை நோக்கி,

  “என் நிலையை அல்லாஹ் உங்கள் விலாயத்தின் பரகத்தால் மாற்றுவானாக” என்று வேண்டினாள்.

* அவர் கருணையுடன் அழுது, அவளிடம் அருகே வரச் சொல்லி, தனது ஆடையின் ஒரு பகுதியை அவள்மீது வைத்து, தலையிலும் முதுகிலும் கால்களிலும் கை வைத்தார்.

* அல்லாஹ்வின் அனுமதியால், அவளது முடி மீண்டும் வளர்ந்தது, கூன் மறைந்தது, கால்கள் நேராகின.

*ஸய்யிதுனா இப்ராஹீம் அல்-தஸூகி (ரஹ்)**:


* நைல் நதியில் இருந்த ஒரு முதலை, தஸூகில் ஒரு சிறுவனை பிடித்து சென்றது.

* தாயார் அழுதபடி ஷெய்க் தஸூகி (ரஹ்) அவர்களிடம் வந்தார்.

* அவர் தனது பிரதிநிதியைக் கொண்டு நதிக்கரையில் அறிவித்தார்:

  “ஓ முதலைகளே! யார் ஒரு சிறுவனை விழுங்கினாரோ, அவனை வெளிக்கொண்டு வரட்டும்.”

* உடனே அந்த முதலை சிறுவனுடன் வெளிவந்து, ஷெய்க் முன்னிலையில் அவனை உயிருடன் வெளியே விட்டது.

* பின்னர் ஷெய்க் அதற்கு: “இற” என்று கூற, அது உடனே இறந்தது.

 இறுதியாக:


இந்த கராமத்துகளை நம்பாதவர்களுக்கும் நாம் மன்னிப்பை நாடுகிறோம்.

ஏனெனில் அல்லாஹ் தஆலா கூறுகிறான்:

{இவை மக்கள் அறியும்படி நாம் கூறும் உதாரணங்கள்;

அவற்றை உணரும் திறன் அறிவாளிகளுக்கே உண்டு}**

 (அல்-அன்கபூத் : 43)


**மதத் யா அஹ்லல் மதத்** 🤲

நபி நாயகம் **ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்** அவர்கள்மீதும், அவர்களின் ஆல் குடும்பத்தின்மீதும்

அல்லாஹ் அருளும் சாந்தியும், பாக்கியமும், பரகத்தும் உண்டாவதாக 💚

அரபிகளின் மருத்துவ வரலாற்றில் ஓரு செய்தி

 

அரபர்களின் மருத்துவ வரலாற்றில் 

ஓரு செய்தி 

*********************************


மிகவும் தேர்ச்சி பெற்ற, கைதேர்ந்த மருத்துவராக இருந்த யஹ்யா இப்னு இஸ்ஹாக் அவர்களைப் பற்றிய ஒரு நிகழ்வு சொல்லப்படுகிறது.


ஒரு நாள் அவர் தன் கடையில் அமர்ந்திருந்தபோது, ஒரு ஜனாசா (இறந்தவரின் ஊர்வலம்) அங்குச் சென்றது. அதை பார்த்தவுடன் அவர் உரக்கச் சொன்னார்:


“ஓ இறந்தவரின் உறவுகளே!

 உங்கள் மனிதர் இறக்கவில்லை.

 அவரை அடக்கம் செய்வது அனுமதிக்கப்படாதது.”


அதைக் கேட்டவர்கள் ஒருவருக்கொருவர் சொன்னார்கள்:


 “இவர் சொல்வது நமக்கு எந்த இழப்பையும் தராது.

 அவரைச் சோதித்து பார்க்கலாம்.

 உயிரோடு இருந்தால் அதுவே நமக்கு லாபம்;

இல்லையென்றால் எதுவும் மாறப்போவதில்லை.”


அதனால் அவரை அழைத்து வந்து,

“நீ சொன்னதற்கான காரணத்தை விளக்கு” என்று கேட்டார்கள்.


அவர் அவர்களை மீண்டும் வீட்டிற்குச் செல்லுமாறு சொல்லி,

மரணப் போர்வைகளை அகற்றி,

அவரை **ஹம்மாமிற்கு (குளியலறை) கொண்டு சென்று,

சூடான நீரை ஊற்றி,

உடலை வெப்பமூட்டி,

நத்தூல் (மூலிகைகள், மருந்துகள் காய்ச்சிய நீர் – இளஞ்சூடாக ஊற்றப்படும் நீர்) மூலம் சிகிச்சை செய்தார்.


அப்போது அந்த மனிதரின் உடலில் **சிறிய உணர்ச்சி வெளிப்பாடு தோன்றியது;

லேசான அசைவு ஏற்பட்டது.


அப்போது மருத்துவர் கூறினார்:


“அவரின் நலமடைதலுக்காக மகிழுங்கள்.”


பின்னர் சிகிச்சையை முழுமைப்படுத்தி,

அந்த மனிதர் **முழுமையாக உணர்வுடன் விழித்து நலமடைந்தார்**.


இந்த நிகழ்வே

யஹ்யா இப்னு இஸ்ஹாக் அவர்களின்

அறிவும், கூர்மையும், மருத்துவத் திறமையும்

பெரிதும் பிரபலமாகக் காரணமானது.


பின்னர் அவரிடம்,

“நீங்கள் எவ்வாறு அவரை உயிரோடு இருப்பதாக அறிந்தீர்கள்?” என்று கேட்கப்பட்டபோது,

அவர் கூறினார்:


“நான் அவரது கால்களை கவனித்தேன்.

அவை நேராக இருந்தன.

 இறந்தவர்களின் கால்கள் பொதுவாக தளர்ந்து, விரிந்திருக்கும்.

அதனால் அவர் உயிரோடு இருப்பார் என்று நான் ஊகித்தேன்.

அந்த ஊகம் சரியானதாக அமைந்தது.”

வஹ்ஹாபிஷ_விஷச்செடிகளும்_புனிதமிக்க_புகாரி_மஜ்லிஸும்

 


#வஹ்ஹாபிஷ விஷச்செடிகளும் புனிதமிக்க புகாரி_மஜ்லிஸும் 


1- ஜஹான் பலாஹி 

2- சாபித் ஷரயி ரியாதி 

3- அஸ்ஹர் மதனி 

4 - சாதிகீன் மதனி 

இவர்கள் போன்று இன்னும் பலர் பல்வேறு பட்டம் பதவிகளை பின்னால் போட்டுக்கொண்டு வலம் வரும் இவர்கள் மார்க்க விடயத்தில் என்ன படித்தார்கள் என்பது கேள்விக்குறியாகவே உண்டு...


புனிதமிக்க புகாரி மஜ்லிஸ் ஏன் நடக்கிறது..? என்பதே இன்னும் இவர்களுக்கு தெரியவில்லை..காரணம் தெரியாமலேயே #பித்அத் என்று தீர்ப்பு கூறி நரகவாதியாக தீர்ப்பும் கொடுக்கிறார்கள் என்பதை பார்க்கும் போது இவர்கள் நுனிப்புல் மேய்ந்த எருமை மாடுகளே தவிர வேறில்லை..


#புகாரி_மஜ்லிஸ்_ஏன்_நடைபெருகிறது.?

أن قرآءة صحيح الامام البخاري رحمه الله تعالى سبب من أسباب تفريج الكرب ودفع البلاء 

இமாம் புகாரி ரஹ்மஹுல்லாஹ் அவர்களின் ஸஹீஹுல் புகாரியை வாசிப்பதால் அது துன்பத்திற்கு நிவாரணியாகவும் துன்பம்,பலாய் முஸீபத்துக்களை விரட்டக்கூடியதாகவும் காரணமாக அமைகிறது என்பது அறிஞர் பெருமக்களின் முடிவு..மட்டுமல்ல நன்மையும் உண்டு,பரகத்தும் உண்டு..


அதனால் தான் வருடா வருடம் குறிப்பிட்ட ஓர் மாதத்தில் ஓதப்படுவதும்.தண்ணீர் வைத்து அதை பரகத்திற்காக,நோய் நிவாரணிக்காக குடிப்பதும் இந்த மார்க்கம் அனுதித்த காரியம்..


இப்னு தைமியாவின் சிரேஷ்ட மாணவர் இப்னுல் கைய்யிம் அல் ஜவ்ஸிய்யா தன்னுடைய 

زاد المعاد في هدي خير العباد 

#ஸாதுல்_மஆத்_பீஃ_ஹத்தியி_கைரில்_இபாத் என்ற கிதாபில் பாகம் 04 பக்கம் 244 ல் ஒரு தகவலை பதிவு செய்கிறார்..


ورأى جماعة من السلف أن تكتب له الآيات من القرآن ثم يشربها 

ஸலபுஸ் ஸாலிஹீன்களான நல்லோர்களில் சிலர் கண்ணூரு பிடித்த ஒருவருக்கு அல் குர்ஆன் வசனங்களில் சிலதை எழுதி அதை கரைத்து குடிக்க கொடுப்பதை சரி கண்டு இருக்கிறார்கள்...

وقال مجاهد لا بأس أن يكتب القرآن ويغسله ويسقيه المريض  

முஜாஹித் ரஹ்மஹுல்லாஹ் சொல்கிறார்கள்.

அல் குர்ஆனின் சில வசனங்களை எழுதி அதை கரைத்து நோயாளிக்கு குடிக்க கொடுப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை..


ஆக எழுதிக் கரைத்து குடிப்பதற்கும் தண்ணீரை வைத்து ஓதி குடிப்பதற்கும் பாரிய வேறுபாடு இல்லை.அல் குர்ஆன் ஆயத்துக்களை எழுதி கரைத்துக் குடிப்பதற்கும் ஹதீஸ்களை வாசித்து அத்தண்ணீரை குடிப்பதற்கும் பாரிய வேடுபாடு இல்லை.ஏன்னா ஹதீஸ்களில் அல் குர்ஆன் வசனங்களும் உண்டு.குறிப்பிடப்பட்ட துஆக்களும் உண்டு. ஏன்னா அல் குர்ஆன் #வஹ்யுன்_மத்லுவ்வுன் அல் ஹதீஸ் #வஹ்யுன்_ஙைரு_மத்லுவ்வுன்..

இது புத்தியுடையோருக்கு,சிந்திப்போருக்கு எளிதானது..இது பற்றி நிறைய எழுதிக்கொண்டே போகலாம்..ஏன் எங்களுடைய இமாம்களின் கருத்தை சொல்லாமல் இப்னுல் கைய்யிம் அல் ஜவ்ஸிய்யாவின் கருத்தை சொன்னேன் என்றால்... வஹ்ஹாபிஷ முல்லாக்களே முதலில் சூபியாக்கள் சூபியாக்கள் என்று குரைக்காமல் முதலில் நீங்கள் நாடு கடந்து போய் படித்து வந்தீர்களே!அங்கு உங்களுக்கு யாரின் கிதாபுகள் முக்கியப்படுத்தப்படுகிறது என்பதை பார்த்து முதலில் உங்கள் ஆசாமிகளின் கிதாபை படியுங்கள்...


நிற்க! புகாரி மஜ்லிஸ் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்டது சூபியாக்களால் தான் ஆரம்பிக்கப்பட்டது என்று சொல்லி #இப்னு_அபீ_ஜம்ரா ரஹ்மஹுல்லாஹ் அவர்களால் தான் துவக்கி வைக்கப்பட்டது என்று ஜஹான் பலாஹி பேசுகிறார்..அந்தாளுக்கு தாடி காடுபோல வளர்ந்திருக்கே தவிர முளை வளரல்ல..


#இப்னு_அபீ_ஜம்ரா_ரஹ்மஹுல்லாஹ்


புகாரி ஷரீபில் அல் ஹாபிழ் இமாம் நவவி ரஹ்மஹுல்லாஹ் அல் ஹாபிழ் இமாம் இப்னு ஸலாஹ் ரஹ்மஹுல்லாஹ் அவர்களின் கருத்துப்பிரகாரம் 7275 ஹதீஸ்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.அதில் 3275 ஹதீஸ்கள் #முகர்ரர்..அதாவது மீண்டும் மீண்டும் ஒரே ஹதீஸ் பல விடுத்தம் பதிவு செய்யப்பட்டது..


இப்னு அபீ ஜம்ரா ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் 

مختصر البخاري 

#முஃக்தஸருல்_புகாரி என்று ஒரு கிதாபை அதாவது 

مختصر ابن ابي جمرة 

முஃக்தஸர் இப்னு அபீ ஜம்ரா அல்லது 

جمع النهاية 

#ஜம்உன்_நிஹாயா என்று அறிமுகமான கிதாப்..மட்டுமல்ல 

بهجة النفوس 

#பஹ்ஜதுன்_நுபூஃஸ் என்று அழகிய விரிவுரை என்று இப்படி அறிமுகமான கிதாப் தான் #முஃக்தஸருல்_புகாரி_என்பது..


ஸஹீஹுல் புகாரிக்கு அற்புதமான ஒரு விரிவுரை தான் அது....எனவே இதை நீட்டுவதல்ல விஷயம்...

இவர்கள் மிக பிரபலமான புகாரி ஷரீபின் விரிவுரையாளர் என்று அறியப்பட்டவர்...

#முஃக்தஸர் ஆனது அதாவது சுருக்கமானது என்பதோடு முற்றுப்பெற்றதல்ல 

الاختصار 

அல் இஃக்திஸார் 

الاقتصار 

அல் இக்திஸார் 

என்று உண்டு.இரண்டுமே சுருக்கமானது என்ற கருத்தை தரக்கூடியது தான் ஆனால் 

الاختصار 

அல் இஃக்திஸார் என்பது வார்த்தைகள் சுருக்கமாக குறைவாக இருக்கும்.அதன் கருத்து ஆழமானதாக,அதிக பிரயோஜனத்தைக் கொடுக்கக்கூடியதாக இருக்கும் இதுவே அல் இஃக்திஸார்..

அதனால் தான் 

#முஃக்தஸருல்_புகாரி...297 ஹதீஸ்களை மட்டுமே எடுத்து எழுதி இருக்கிறார்கள்....


ஆக முதன் முதலில் புகாரி மஜ்லிஸ் மக்களை ஒன்று கூட்டி ஆரம்பித்தது இப்னு அபீ ஜம்ரா ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் அல்ல..இவர்கள் பின்தொடர்ந்து வந்தவர்கள்....


#யாரை...??


#இமாம்_புகாரி_ரஹ்மஹுல்லாஹ் 


முதன் முதலில் மக்களை ஒன்று கூட்டி ஸஹீஹுல் புகாரியை வாசித்து மக்களை பிரயோஜனமடைய வைத்தது அல் ஹாபிழ் இமாம் புகாரி ரஹ்மஹுல்லாஹ் அவர்களே!!

மக்கா ஹரம் ஷரீபிலே நடந்தது...

மட்டுமல்ல புகாரி ஷரீபை வாசிக்கக்கூடியவர்களுக்கு இமாம் புகாரி ரஹ்மஹுல்லாஹ் அவர்களின் விஷேட துஆ பிரார்த்தனையும் உண்டு..


اللهم من قرأ كتابي هذا فاجعل له نصيبا من كل خير أنزلته على عبادك الصالحين 


யா அல்லாஹ்! யார் என்னுடைய இந்த கிதாபை வாசிக்கிறார்களோ அவர்களுக்கு உன்னுடைய ஸாலிஹான நல்லடியார்களுக்கு என்ன நலவுகளை இறக்கினாயோ அத்துனை நலவுகளிலிருந்தும் இதை வாசிக்கக்கூடியவர்களுக்கும் ஓர் பங்கை கொடுத்தருள்வாயாக!!


اللهم من قرأ كتابي هذا فاجعل له دعوة مستجابة ومغفرة ورحمة 


யா அல்லாஹ்! என்னுடைய இந்த கிதாபை யார் வாசிக்கிரார்களோ அவர்களின் துஆக்களை ஏற்றுக்கொள்ளப்பட்டதாக ஆக்குவாயாக!அவர்களுக்கு உன்னுடைய மஃபிரத் எனும் பாவ மன்னிப்பையும் ரஹ்மத் எனும் அருளையும் கொடுப்பாயாக!!


இக்கருத்தைப் பொதிந்த பல துஆக்கள் பொதுவாக கிதாப் எழுதக்கூடிய இமாம்களிடம் அவர்கள் தங்களின் கிதாபை வாசித்து பிரயோஜனத்தை அடையும் பொறுட்டு துஆ செய்வது வளமை...இதை பெரிய ஆதாரம்,சனது,ஸஹீஹ்,ழயீப் ,பித்அத் என்று இப்படி மக்களை குழப்பத்தில் வீழ்த்தும் விடயம் அல்ல....


பதிவை நீட்ட விரும்பவிலல்லை.அதனால் ஸஹீஹுல் புகாரி ஆண்டாண்டு காலம் வாசிக்கப்பட்டு பரகத்தை பெருவதும்,நன்மையை அடைந்து கொள்வதும் இடம் பெற்று வரும் விடயம்..ஹதீஸ் வாசிக்கப்படுகிறது.அதில் அல் குர்ஆன் வசனம் உண்டு அது ஓதப்படுகிறது.ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டிய துஆக்கள் உண்டு ஓதப்படுகிறது.ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெயர் கூறப்படும் போதெல்லாம் ஸலவாத் சொல்லப்படுகிறது..

இப்படி பல அமைப்பில் நன்மையை வருத்தி வைக்கும் இச்சிறப்பான மஜ்லிஸை எப்படி பித்அத் என விமர்சிக்கலாம்...??


குறிப்பிடப்பட்ட மாதத்தில் ஸஹீஹுல் புகாரி வாசித்து பூரணமாக்கி பரகத்தைப் பெருவது ஆண்டாண்டு காலம் நடைபெற்று வருகிறது என்பதை கீழ் வரும் கிதாபுகளில் காணலாம்..


* سير أعلام النبلاء 

* وفيات الاعيان 

* التكملة لكتاب الصلة 

* معجم أصحاب القاضي أبي على الصدفي 

* تذكرة الحفاظ 

* الوافي بالوفيات 

* معجم الشيوخ 

* المعجم المختص بالمحدثين 

* ذيل طبقات الحنابلة 

* المقصد الارشد 

* البداية والنهاية 

* أعيان العصر وأعوان النصر 

* الدرر الكامنة 

* ذيل التقييد في رواة السنن والاسانيد 

* الضوء اللامع 

* شذرات الذهب 

* التنبيه والايقاظ 

* المنهل الصافي 

* إنباء الغمر 

* فهرس الفهارس 

* البدر الطالع 

* التحفة اللطيفة في تاريخ مدينة الشريفة 

* الكواكب السائرة بأعيان المئة العاشرة 

* خلاصة الاثر في أعيان القرن الحادي عشر 


இன்னும் பல கிதாபுகள் அடுகிக்கொண்டே போகலாம்...முதல்ல மார்க்கத்தை சரி வர படியுங்கள்..கிதாபுகளை வாசியுங்கள் புகாரி ஷரீப் எத்துனை ஆண்டுகளாக வாசிக்கப்படுகிறது என்பது புரியும்...


புகாரி ஷரீபை வாசிக்கக்கூடியவர்களுக்கு இமாம் புகாரி ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் பிரார்த்தனை துஆ செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள் என்பதை அல் ஹாபிழ் இமாம் தஹபி ரஹ்மஹுல்லாஹ் அவர்களின் 

سير أعلام النبلاء 


ஹதீஸ் கலையில் அமீருல் முஃமினீன் என சிறப்புப் பெயர் பெற்ற புகாரி ஷரீபின் விரிவுரை பத்ஹுல் பாரியின் ஆசிரியர் அல்லாமா அல் ஹாபிழ் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி ரஹ்மஹுல்லாஹ் அவர்களின் 

هدي الساري مقدمة فتح الباري 


தாஜுத்தீன் அஸ் சுபுக்கி ரஹ்மஹுல்லாஹ் அவர்களின் 

الطبقات الشافية الكبرى 


அல் ஹாபிழ் இமாம் தஹபி ரஹ்மஹுல்லாஹ் அவர்களின் 

تاريخ الاسلام 

போன்ற கிதாபுகளில் பார்வையிடலாம்...


அல் ஹாபிழ் இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி ரஹ்மஹுல்லாஹ் அவர்களின் சிரேஷ்ட மாணவர் அல்லாமா அல் ஹாபிழ் ஷம்ஷுத்தீன் அஸ் ஸகாவி ரஹ்மஹுல்லாஹ் அவர்களின் 

الإعلان بالتوبيخ لمن ذم أهل التوريخ 


என்ற கிதாபில் மக்கா மதீனா ஹரம்களில் புகாரி ஷரீப் வாசிக்கப்பட்ட விடயத்தை சொல்வதை பார்வையிடலாம்..மட்டுமல்ல 

عمدة القارئ والسامع في ختم الصحيح الجامع 


என்ற ஓர் அருமையான கிதாபை தொகுத்திருக்கிறார்கள்...


அல்லாமா அல் ஹாபிழ் இமாம் ஷம்ஷுத்தீன் அஸ் ஸகாவி ரஹ்மஹுல்லாஹ் அவர்களின் சிரேஷ்ட மாணவர் அல்லாமா இமாம் கஸ்தலானி ரஹ்மஹுல்லாஹ் புகாரி ஷரீபின் விரிவுரை #இர்ஷாதுஸ்_ஸாரி கிதாபின் ஆசிரியர் 

تحفة السامع والقاري بختم صحيح البخاري 

என்ற ஓர் நூலையும் தொகுத்து இருக்கிறார்கள்....


இன்னும் நிறைய விடயங்கள் இது பற்றி எழுதலாம்....எனவே பல பெரும் பட்டங்களை பெயருக்குப் பின்னால் போட்டுக்கொண்டு மடயர்களைப் போல் பேசாமல் திராணி இருந்தால் வாருங்கள் இது பற்றி பேசலாம்...நான் தயாராகவே இருக்கிறேன்...


ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்படி ஸஹாபாக்களை அழைத்து புகாரி வாசித்தார்களா.?என்று பேசினார் பாருங்க ஜஹான் பலாஹி அங்க தான் நிக்கார் ஹாஜி...என்னா ஓர் அறிவு கூர்மை திறமை...அட வஹ்ஹாபிஷ ஷைத்தானே இமாம் புகாரி ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முன் பிறந்து ஸஹீஹுல் புகாரியை தொகுத்தார்களா சாமி..??


ஸஹீஹுல் புகாரியில் #கிதாபுத்_தவ்ஹீத் என்று ஒரு பாடம் இருக்காம்..அதைப் பார்த்தால் எல்லாரும் ஷிர்க்ல இருந்து உண்மையான தவ்ஹீதுக்கு வந்துருவாங்களாம்...எங்க கிதாபுத் தவ்ஹீத்ல உள்ள ஒவ்வொரு ஹதீஸா பார்க்கலாம் வர்ரீங்களா..?


புகாரி ஷரீபை பார்த்திருந்தால் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை #விழிப்பில் பார்க்கலாம் என்று இப்னு அபீ ஜம்ரா ரஹ்மஹுல்லாஹ் வாதாடினார்கள் என்று தன்னுடைய அறியாமையை வெளிப்படுத்தி இருக்கமாட்டார் ஜஹான் பலாஹி..

இப்படிப்பட்ட கிருக்கனுகள் தோன்றுவார்கள் என்று அறிந்ததால் தான் இமாம் புகாரி ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கனவில் காண்பது பற்றிய ஹதீஸை புகாரி ஷரீபில் பதிவு செய்திருக்கிறார்கள்....


அதில் கனவில்,விழிப்பில் இரண்டு விடயங்கள் உண்டு.விழிப்பில் காணலாமா என்றால் ஆம் முடியும்..அது பற்றி பேசுவதென்றாலும் வாங்க பேசலாம்....அது பற்றி இங்கு எழுத இடம் கொடுக்காது.பதிவும் திசைமாறிப்போகும்,நீண்டு விடும் மட்டுமல் அது ஒரு நீண்ட ஆய்வுத் தொடர்....இன்ஷா அல்லாஹ் நேர காலத்தைப் பொறுத்து அதையும் எழுதுவோம்..


மௌலவி நிஸ்வர் பாதிபி காதிரி

+94 77 444 77 57

Thursday, 8 January 2026

அமெரிக்க டொலர் - அராஜகத்தின் ஆயுதம்!👇


 🟥அமெரிக்க டொலர் - அராஜகத்தின் ஆயுதம்!👇


அமெரிக்காவின் உலகளாவிய அதிகாரம் இரண்டு வலுவான தூண்களின் மீது நிலை நிறுத்தப்பட்டுள்ளது. ஒன்று, அதன் அசுரத்தனமான இராணுவ பலம்; மற்றொன்று, உலக சந்தையை ஆட்டிப்படைக்கும் அதன் நாணயமான டொலரின் ஆதிக்கம். 


இவ்விரண்டும் சங்கமிக்கும் புள்ளியில்தான், 'அமெரிக்க வல்லாதிக்கம்' எனும் மானுடப்பண்பற்ற இரத்த வாடை வீசும் எதேச்சதிகார இரும்புக்கோட்டை கட்டி எழுப்பப்படுகிறது.


தன்னுடைய அரசியல் மற்றும் பொருளாதார நலன்களுக்காக, டொலர் எனும் ஒற்றை நாணயத்தைக் கொண்டு உலக நாடுகளின் கழுத்தை அமெரிக்கா நெரித்துக்கொண்டிருக்கிறது. 


இந்த மாயவலையிலிருந்து விடுபட நினைக்கும் நாடுகள் சந்திக்கும் விளைவுகள், உலக வரலாற்றின் கொடுமை மிகுந்த ரத்தப்பக்கங்களாகப் பதிவாகியுள்ளன.


டொலர் என்ற பொருளாதார அடிமைத்தனத்திலிருந்து வெளியேறத் துணிந்த நாடுகளின் கதி என்ன என்பதை வரலாறு ஒருபோதும் மறக்காது. 


உலக நாடுகளைச் சுற்றி வளைத்திருக்கும் இந்தச் சுரண்டல் அமைப்பிலிருந்து விடுபட முயல்வது ஒரு தேசத்தின் இயல்பான வேட்கைதான். ஆனால், அதற்கான அந்த நாடுகள் கொடுக்க வேண்டிய விலையோ மிகக் கொடியது.


இதற்கு வரலாறு சாட்சி சொல்கிறது: டொலரின் பிடியிலிருந்து விலக நினைத்தவர்களின் தலைகள் உருட்டப்பட்டன. நாடுகளின் இறையாண்மை காலால் மிதித்துத் துவம்சம் செய்யப்பட்டது.


ஈராக் நாட்டின் ஜனாதிபதி சதாம் ஹுசைன் கறுப்புத் தங்கமான பெட்ரோலை, டொலருக்கு விற்காமல் யூரோ நாணயத்திற்கு மட்டுமே விற்பனை செய்வேன் என முழங்கியவர். 


விளைவு? 


அமெரிக்க ஊடகங்களால் அதிபயங்கர ஆயுதங்கள் இருப்பதாக பொய்கள் பரப்பப்பட்டு, அந்நாட்டின் மீது மிலேச்சத்தனமான போர் திணிக்கப்பட்டது. ஈராக் நாடு சிதைக்கப்பட்டது. இறுதியில் சதாம் ஹுஸைனுக்கு தூக்குக்கயிற்றை முத்தமிட நேர்ந்தது.


லிபிய நாட்டின் ஜனாதிபதி முஅம்மர் அல் கத்தாஃபி டொலருக்கு மாற்றாக ஒட்டுமொத்த ஆப்பிரிக்காவிற்கும் பொதுவான ஒரு நாணயத்தை உருவாக்கக் கனவு கண்டவர். அதன் பலனாக, அவர் மிகக் கொடூரமான முறையில் அதிகாரத்திலிருந்து அகற்றப்பட்டு, அமெரிக்க 'கைக்கூலி'களின் தூண்டுதலினால் படுகொலை செய்யப்பட்டார்.


இன்று ஈராக்கும் லிபியாவும் அரசியல் மற்றும் பொருளாதாரச் சிதைவுக்குள் தள்ளப்பட்டுள்ளன. இவர்களின் மரணத்திற்குப் பின் அந்த நாடுகள் சுடுகாடுகளாக்கப்பட்டன. அங்குள்ள எண்ணெய் கிணறுகளைச் சூறையாட அமெரிக்கக் கழுகுகள் இன்றும் வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன.


இந்த வரிசையில், அண்மைய உதாரணம் தான் வெனிசூலா. 


சீன நாணயமான ‘யுவான்’ (Yuan) மூலம் எண்ணெய் விற்பனை செய்யத் துணிந்த ஜனாதிபதி மதுரோவின் மீதும் பொய்க் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. டொலரை நிராகரித்தால், ஒரு தேசத்தின் தலைவருக்கு என்ன நேரும் என்பதற்கு இது மற்றுமொரு சான்று.


"டொலரை நீ நிராகரித்தால், அழிவைச் சந்திக்கத் நீ தயாராக இரு!" என்ற ஒரு கொடுமையான செய்தியை மீண்டும் மீண்டும் அமெரிக்கா உலகிற்குச் உரக்கச் சொல்லிக் கொண்டிருக்கிறது. 


அமெரிக்காவின் இந்த அடாவடித்தனமும், அராஜகமும் எத்தனைக் காலம் நீடிக்கப் போகிறது?


காலம் மாறிக் கொண்டிருக்கிறது. இன்றைய உலகம் ஒரு மாபெரும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தை நோக்கி நகர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 


டொலர் என்ற காகிதத்தை வைத்து உலகை ஆட்டிப்படைக்கும் இந்த அநீதிக்கு எதிராக ஒரு மாபெரும் உலகப் புரட்சி வெடிக்க வேண்டும். 


இந்தப் போராட்டம் வெறும் "டொலர்" எனும் நாணயத்தை ஆயுதமாகப் பயன்படுத்தி உலகெங்கும் நிகழ்த்தப்படும் அநியாயத்திற்கும், அநீதிக்கும், மேலாதிக்கத்திற்கும் எதிரான அறப்போராட்டமாக அமைய வேண்டும்.


🔹அஸீஸ் நிஸாருத்தீன்

     08.01.2026