السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Thursday, 24 May 2018

இது தான் உலக நியதி..!

ஒரு கிராமத்தில் ராமசாமி என்பவர் வாழ்ந்து வந்தார்...
அவர் வீட்டுத் தோட்டத்தில் ஒரு முருங்கை மரம் இருந்தது.
வாரம் ஒரு முறை முருங்கை காய்களை பறித்து, பையில் நிரப்பி தோளில் வைத்துக்கொண்டு ....
ஒன்பது கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் டவுன் வரை
நடந்து சென்றே...
ரெகுலராக ஒரு மளிகை கடையில் விற்றுவிட்டு வருவது வழக்கம்
முருங்கை காயை கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக
அரிசி பருப்பு சர்க்கரை போன்ற வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருவார்!
ராமசாமி கொண்டுவரும் முருங்கைக்காயின் சுவை அந்த பகுதி மக்களிடையே மிகவும் பிரபலம்!
இதை பயன்படுத்தி மற்ற முருங்கைக்காயோடு கலந்து மளிகை கடைக்காரரும் நல்ல லாபம்
சம்பாதித்து விடுவார்!
பல வருடமாக ராமசாமி முருங்கைக்காய் கொண்டுவருவதால் மளிகை கடைக்காரர் அதை எடை போட்டு பார்த்ததில்லை;
ராமசாமி சொல்கின்ற எடையை அப்படியே நம்பி அதற்கு ஈடான மளிகை பொருட்களை கொடுத்து அனுப்புவார்!
காரணம்
ராமசாமியின் நேர்மையும் நாணயமும் எல்லோரும் அறிந்தது!
ஒரு நாள் ராமசாமி பத்து கிலோ முருங்கைக்காயை கொடுத்துவிட்டு அதற்கான பொருட்களை வாங்கிச்சென்றார்....
சிறிது நேரத்தில்
பத்து கிலோ முருங்கைக்காய் மொத்தமாய் வேண்டும் என்று ஒரு சமையல்காரர் வந்து கேட்க...அவருக்காக மளிகைக்காரர் ...
எடைபோட... அதில் ஒன்பது கிலோ
மட்டுமே இருந்தது!...
அன்று முழுவதும் மளிகைகாரருக்கு தூக்கமே வரவில்லை! ராமசாமி மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தோம்,
இவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகத்தை செய்துவிட்டாரே!
இத்தனை வருடங்களுக்காக இப்படி முட்டாள்தனமாக எடை குறைவான முருங்கைக்காயை வாங்கி ஏமாந்து விட்டோமே!!
அடுத்த முறை ராமசாமி வந்தால் சும்மா விடக்கூடாது என்று கடுங்கோபத்தில் இருந்தார்!
நான்கு நாட்கள் கழித்து ராமசாமி மிகவும் சந்தோஷமாக வந்தார்!
நல்ல விளைச்சல் என்பதால் நிறைய கொண்டு வந்திருந்தார்!
"கையும் களவுமாக பிடிக்கவேண்டும்என்று, எத்தனை கிலோ என்று மளிகைக்காரர் கேட்க பத்து கிலோ என்றார் ராமசாமி..
அவர் முன்னாலேயே எடைபோட்டு பார்க்க ஒன்பது கிலோ தான் இருந்தது.
வந்த கோபத்தில் மளிகைக்காரர் பளார்,பளார் என ராமசாமியின் கன்னத்தில் அறைந்தார்!
இத்தனை வருஷமா இப்படித்தான் ஏமாத்திட்டு இருக்கியா?கிராமத்துக்காரங்க ஏமாத்த மாட்டாங்கன்னு நம்பி தானே எடை போடாம அப்படியே வாங்கினேன்,
இப்படி துரோகம் பண்ணிட்டியே சீய் என துப்ப, நிலைகுலைந்து போனார் ராமசாமி.
அய்யா...என்ன மன்னிச்சிடுங்க நான் ரொம்ப ஏழை, எடைக்கல்லு வாங்குற அளவுக்கு என்கிட்ட காசு இல்லீங்க..
ஒவ்வொரு முறையும் நீங்க கொடுக்கிற ஒரு கிலோ பருப்பை ஒரு தட்டுலயும், இன்னொரு தட்டுல முருங்கைக்காயையும் வச்சி தான் எடைபோட்டு கொண்டுவருவேன்.
"இதை தவிர வேற எதுவும் தெரியாதுங்கய்யா, என்று காலை பிடித்து அழ,
மளிகைக்காரருக்கு செருப்பால் அடித்தது போல் இருந்தது....
"தான் செய்த துரோகம் தனக்கே வந்ததை உணர்ந்தார்!
இத்தனை வருடங்களாக ராமசாமியை ஏமாற்ற நினைத்த மளிகைக்காரரும்...
அவருக்கே தெரியாமல் ஏமாந்து கொண்டுதான் இருந்திருக்கிறார் என்பது தெளிவானது!
இது தான் உலக நியதி..!
நாம் எதை தருகிறோமோ
அதுதான் நமக்கு திரும்ப வரும் ....
நல்லதை தந்தால் நல்லது வரும்,...
தீமையை தந்தால் தீமை வரும்!
வருகின்ற காலங்கள் வேண்டுமானால் தாமதமாகலாம்,
ஆனா....
நிச்சயம் வரும்!
ஆகவே நல்லதை மட்டுமே தருவோம், நல்லதை மட்டுமே விதைப்போம்!!
மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்."

Monday, 21 May 2018

சூஃபி ஞானி கதைகள் – அரு மருந்து

சூஃபி ஞானி
ஒர் சூஃபி மரணப் படுக்கையில் இருக்கும் போது, தனது மாணவரொருவரைக் கூப்பிட்டு. அவரிடம் கத்தையாக சில காகிதங்களை கொடுத்து விட்டுச் சொன்னார்:

“இதை வைத்துக் கொள்ளுங்கள். சில காகிதங்கள் எழுதப் பட்டுள்ளன. சில காகிதங்களில் எதுவும் எழுதப்படவில்லை. எழுதப்படாத பக்கங்கள், எழுதப்பட்டவை போலவே மதிப்பு மிக்கவை தான்’

சீடரும் காகிதங்களை எடுத்துக் கொண்டார். எழுதப்பட்டவைகளைக் கவனமாக படித்துக் கொண்டார். மற்ற காகிதங்களின் மதிப்பு பின்னாளில் உறுதிப்படும் வரை அவற்றை கவனமாகப் பாதுகாத்துக் கொண்டார்.

ஒரு நாள் சத்திரத்தில் அந்த சீடர் நோய்வாய்ப்பட்டு படுத்திருந்தார். குளிர் காய்ச்சலால் நடுங்கிக் கொண்டிருந்தார். அவர் மரணப் புள்ளியை நெருங்கிக் கொண்டிருக்கிறார் எனப் பட்டதால் அவரைப் பரிசோதிக்க மருத்துவர் வரவழைக்கப்பட்டார்.

“காத்துக் கொண்டிருப்பதற்கு நமக்கு நேரமில்லை . தரமான தாள்களை எனக்கு கொண்டு வந்து தாருங்கள். அதில் அவர் சிகிச்சைக்கான மந்திரத்தை நான் எழுதவேண்டும் ” என்று மருத்துவர் சொன்னார்.

அங்கு கூடியிருந்தவர்கள் சுற்றுமுற்றும் தேடினார்கள். சீடரின் பையைத் துழாவிய போது, சூஃபி ஞானி, சீடருக்குக் கொடுத்த காகிதங்களில் சில எழுதப்படாதவைகளாக இருப்பதைக் கண்டு அக் காகிதங்களை மருத்துவரிடம் கொடுத்தனர்.

மருத்தவர் தன்னிடம் கொடுக்கப்பட்ட காகிதத்தைக் கிழித்தார். அதன் மீது வினோதமான ஒரு படத்தை வரைந்தார்,

” இக் காகிதத்தைத் தண்ணீரில் முக்குங்கள். காகித்தலிருக்கும் மை நீரில் கரைந்ததும், அந்நீரை நோயாளிக்குக் குடிக்கக் கொடுங்கள்” என்று மருத்துவர் சொன்னார்.

மருத்துவர் சொன்ன மாதிரியே கூடியிருந்தோர் செய்தனர்.

சீடரும் உடனே சரியானார்.

உண்மையில் சீடர் குணமடைந்ததற்கான கரணம், எழுதப் படாத காகிதங்களில் சூஃபி ஞானி நோய்க்கான மருந்தைத் தடவி பூசியிருந்தார். இது ஒருவருக்கும் தெரியாது .

சீடர் குணமாகி, மரியாதைக்குரிய சூஃபி ஞானி இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தார். தன்னுடைய அனுபவங்களை அவரிடம் சொன்னார். எழுதாத பக்கத்தின் அர்த்தம் என்ன என்பதை அறிந்து கொள்வதில் ஆர்வமாயிருந்தார் சீடர்.

” காகிதத்திலிருந்த “உண்மையால் தான்’ நீ குணமானாய் மருத்துவர் வரைந்த வினோத உருவத்தால அல்ல’ என்றார் சீடரிடம் சூஃபி .

“நீங்கள் ஓரு உயிரைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும் போது காப்பாற்றுவதுதான் முக்கியம். அது பற்றிய பேச்சு பின்னால் தான்’ என்று பேச்சை முடித்துக் கொண்டார் சூஃபி.

சீடர் அதைக் கேட்டு பின் வாங்கினார். தனக்கு சிகிச்சையளித்த மருத்துவரை தேடத் தொடங்கினார். எங்கெல்லாமோ சுற்றியலைந்து மருத்துவரைக் கண்டு பிடித்தார் சீடர்.

“எந்த நிலைமை , காகிதத்தில் வேறு மந்திரங்களை ஆய்ந்து எழுதித் தரச் செய்தது ? ‘ என்று மருந்துவரிடம் கேட்டார் சீடர்.

அதற்கு , ” தனது அற்புதங்களை இரகசியமாக மூடி மறைத்துக் கொள்ளும் அந்த சூஃபியிடம் நான் மாணவனாக இருந்த போது ,

“ஒரு நாள் சத்திரத்தில் நோய்வாய்பட்டிருக்கும் மனிதனைக் காண நீங்கள் அழைக்கப்படுவீர்கள். அவருக்கு இன்னின்ன வகையில் நோய்க் குறிகள் இருந்தால். வெற்றுக் காதிதத்தை எடுத்து வரச் செய்து அதில் ஒரு வரைபடம் வரை. பின் அந்த வரைபடத்தின் மை கலக்கப்பட்ட தண்ணீரை நோயாளியைக் குடிக்கச் செய்தால் , காய்ச்சல் மூன்று மணி நேரத்தில் போய்விடும் ‘ என்று தன்னிடம் சூஃபி சொன்னதாகச் சொன்னார் மருத்துவர்.

“அந்தக் காகிதங்கள் இல்லாவிட்டால், மாற்றாக என்ன செய்ய வேண்டும் என்ற விஷயங்கள் உங்களுக்கு சொல்லப்பட்டனவா? என்று மருத்துவரிடம் மேலும் கேட்டார் சீடர்.

காகிதங்கள் கண்டிப்பாக அங்கு இருக்க வேண்டும். காகிதங்கள் அங்கில்லா விட்டால், அது தனது கடமையினை அஜாக்கிரதையாக ஒதுக்கிய மனிதனின் செயலாகும். துறவிகளின் ஆணைகளை கண்டு கொள்ளாததற்கு அந்த செயல் ஓப்பாகும். அப்படிப்பட்ட மனிதன் தனக்குத்தானே மரணத்தை வருவித்துக் கொள்ளுவான். அந்தத் தருணத்தில் காகிதம் அங்கில்லாவிட்டால். நோயாளி இறந்து விடுவான்” என்று சூஃபி சொன்னதாகச் சொன்னார் மருத்துவர்.

Padithathil pidithavai

பாடும் பறவை… இறந்ததுபோல் ஏன் நடித்தது?

பாடும் பறவை… இறந்ததுபோல் ஏன் நடித்தது?

ஒரே ஒரு கருத்தையோ, தத்துவத்தையோ மட்டும் வெளிப்படுத்துவதில்லை. வெளிப்படையாகத் தெரிவதையும் தாண்டி, நுட்பமாக அவை உணர்த்தும் கருத்துகள் அபாரமானவை

அந்த வியாபாரி, சமூகத்தில் வெற்றிபெற்ற மனிதன். அழகான மனைவி, அன்பான குழந்தைகள், பிரமாண்டமான மாளிகை, செல்வம், ஊரில் செல்வாக்கு… எல்லாம் இருந்தால், சமூகத்தின் பார்வைக்கு வெற்றிபெற்ற மனிதன்தானே! இவை மட்டுமல்ல… அவன் தனக்குத்தானே கர்வப்பட்டுக்கொள்ள யாரிடமும் இல்லாத ஒன்று அவனிடம் இருந்தது; அது ஒரு விசித்திரமான பாடும் பறவை. வீட்டுத் தோட்டத்தில் ஒரு பெரிய கூண்டில், வேண்டிய அனைத்து வசதிகளுடன் அதைப் பாதுகாப்பாக வைத்திருந்தான். அந்தப் பறவைக்குப் பிடித்தமான உணவுகள் அனைத்தையும் கொடுத்து வளர்த்து வந்தான். வீட்டுக்கு விருந்தினர்கள் வந்தால், அவர்களை பறவையிடம் அழைத்துச் செல்வான். பறவை பாடும். அதைக் கேட்டு, வந்தவர்கள் மெய் மறந்து நிற்பார்கள். வியாபாரி, பெருமையுடன் எல்லோரையும் பார்ப்பான். பிறகு, பறவைக்கு சுவையான நொறுக்குத்தீனிகளை அள்ளி வீசுவான். வீடு திரும்புவான்.

ஒரு நாள் வியாபாரி ஓர் அயல்நாட்டுப் பயணத்துக்காகக் கிளம்பினான். மனைவி, மகள்கள், பிள்ளைகளிடம், வெளிநாட்டில் இருந்து திரும்பி வரும்போது என்ன வாங்கி வர வேண்டும் என விசாரித்தான். நகைகள், பட்டு, பொம்மைகள், ஆபரணங்கள்… என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விருப்பம். அத்தனையையும் கேட்டுக்கொண்டான். தோட்டத்துக்குப் போனான். அவனுடைய செல்லப் பறவையிடம், தான் வெளிநாட்டுப் பயணத்துக்குச் செல்வதைச் சொன்னான். “உனக்கு என்ன வேண்டுமோ கேள்! வாங்கி வருகிறேன்’’ என்றான்.

“எது கேட்டாலும் கிடைக்குமா?’’

“நிச்சயமாக… என்ன வேண்டும் கேள்!’’

“வெளிநாட்டில் அல்லது போகும் வழியில் என் இனத்தைச் சேர்ந்த பறவை எதையாவது பார்த்தால், ஒன்றை மட்டும் சொல்ல வேண்டும்… முடியுமா?’’

“என்ன அது/’’

“நான் இங்கே எப்படி இருக்கிறேன், என் நிலை என்ன என்பதை மட்டும் சொன்னால் போதும்.’’

“அதற்கென்ன… சொல்லிவிடுகிறேன். வேறு ஒன்றும் வேண்டாமா? நீ உன்னைப் பார்த்து ரசிக்க தங்கத்தால் அலங்கரித்த கண்ணாடி, விலையுயர்ந்த சுவையான பருப்பு, தானியங்கள்..?’’

“வேண்டாம்.’’ சொல்லிவிட்டு பறவை கூண்டின் உயரே இருந்த மர ஊஞ்சலில் போய் அமர்ந்துகொண்டது.

வியாபாரி வெளிநாட்டுக்குப் போனான். வியாபாரம் நல்லபடியாக முடிந்தது. வீட்டில் உள்ளவர்கள் கேட்ட பொருள்களைத் தேடித் தேடி வாங்கினான். எல்லா வேலைகளும் முடிந்தன. இறுதியாக அவன் வளர்த்த பறவையின் விருப்பம் நிறைவேற வேண்டுமே! அதன் இனத்தைச் சேர்ந்த பறவைகள் எங்கேயாவது இருக்கின்றனவா எனத் தேடினான். ஊர் முழுக்க அலைந்த பிறகு, ஒரு நந்தவனத்தில் அவற்றைப் பார்த்தான். ஒரு மரத்தின் மேல், இவன் வளர்க்கும் பறவை இனத்தைச் சேர்ந்த மூன்று பறவைகள் அமர்ந்திருந்தன. அவற்றின் அருகே போனான். தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான்.

“என் மாளிகையில் உங்கள் இனத்தைச் சேர்ந்த பறவை ஒன்று இருக்கிறது. அது தன் இனத்தைச் சேர்ந்த பறவைகளைப் பார்த்தால் அதன் நிலைமையைச் சொல்லச் சொன்னது. சுகமான மெத்தை, ஊஞ்சல், வேளைக்கு அறுசுவை உணவுகள் அனைத்தையும் கொடுத்து, ஒரு கூண்டில் அதை வளர்த்துவருகிறேன்…’’

அவன் முழுமையாகக்கூடச் சொல்லி முடிக்கவில்லை. கேட்டுக்கொண்டிருந்த பறவைகளில் ஒன்றின் உடல் நடுங்கியது. அது மரத்தின் உச்சியில் இருந்து `சொத்’தென்று தரையில் விழுந்தது. லேசாகத் துடித்து, பிறகு மூச்சுப் பேச்சில்லாமல் அடங்கிப்போனது. வியாபாரியால் இதைத் தாங்க முடியவில்லை. அந்தப் பறவை இறந்துபோனதை உணர்ந்தான். `அது ஏன் இறந்தது?’ என்கிற கேள்வி அவன் மனதைப் பிசைந்தது. பெரும் துயரத்தோடு தான் தங்கியிருந்த இடம் நோக்கி நடந்தான்.

திரும்பி வரும் வழியெல்லாம் `அந்தப் பறவை ஏன் இறந்தது?’ என்கிற கேள்வி அவனைத் துளைத்துக்கொண்டே இருந்தது. வியாபாரத்தில் சம்பாதித்த பணம், மனைவி, பிள்ளைகளுக்காக அவன் கொண்டு செல்லும் விலையுயர்ந்த பொருள்கள்… எதுவும் அவன் நினைவில் இல்லை. மரத்தில் இருந்து அந்தப் பறவை இறந்த காட்சி மட்டுமே திரும்பத் திரும்ப வந்து அவனை அலைக்கழித்தது. சாப்பாடு இறங்கவில்லை, கப்பலில் உடன் வந்தவர்களுடன் பேசக்கூடப் பிடிக்கவில்லை. ஒருவழியாக வீடு வந்து சேர்ந்தான்.

மனைவி, மகள்கள், பிள்ளைகள் அவன் கொண்டு வந்த பரிசுப் பொருள்களைப் பார்த்து பிரமித்துப் போனார்கள். அவனைப் பாராட்டித் தள்ளினார்கள். அவன் எல்லாவற்றுக்கும் லேசாகத் தலையசைத்து, புன்னகைத்தானே தவிர,  பதில் பேசவில்லை. தன் வளர்ப்புப் பறவையை எப்படிப் பார்க்கப் போகிறோம், அதற்கு எப்படி நடந்ததைச் சொல்வது என்கிற வேதனை அவனை வதைத்துக்கொண்டிருந்தது.

அடுத்த நாள் ஒருவழியாக, தன்னைத் தேற்றிக்கொண்டு அந்தப் பறவையிடம் போனான். அது, கூண்டின் மேலே இருந்த சிறிய மரக்கட்டை ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்தது. வியாபாரி, தயங்கித் தயங்கி, பறவைகளைப் பார்த்ததையும் நடந்ததையும் சொன்னான். அவ்வளவுதான்… கேட்டுக்கொண்டிருந்த பறவையின் உடல் நடுங்கியது; அது ஊஞ்சலில் இருந்து `சொத்’தென்று கீழே கூண்டுக்குள் விழுந்தது. அசைவற்று அப்படியே கிடந்தது. அவன் பதறிப்போனான். அவசர அவசரமாகக் கூண்டைத் திறந்தான். நடுங்கும் கரங்களால் அந்தப் பறவையைத் தூக்கினான். உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு தேம்பி அழ ஆரம்பித்தான். திடீரென்று அது நடந்தது… அந்தப் பறவை சட்டென்று தன் சிறகுகளை அசைத்து, அவன் கைகளில் இருந்து பறந்துபோய் அருகில் இருந்த ஒரு மரத்தின் மேல் அமர்ந்துகொண்டது.
பறவை தன்னை ஏமாற்றிவிட்டது என்பதை அவன் புரிந்துகொண்டான். பிறகு ஒருவாறாகத் தன்னைச் சமாதானப்படுத்திக்கொண்டு அதனிடம் கேட்டான்… “இது என்ன தந்திரம்? உனக்கு நான் என்ன குறை வைத்தேன்? இறந்ததுபோல் ஏன் நடித்தாய்? சொல்!’’

“நீ பார்த்தாயே… என் உறவுக்காரப் பறவை… அது என் அழகு, வாழ்க்கை மொத்தமும் இந்தக் கூண்டுக்குள் சிறைவைக்கப்பட்டிருப்பதை எனக்கு உணர்த்திவிட்டது. என் குரலுக்கு மயங்கினாய். பாட வைத்தாய். நீ பாடச் சொல்வதும், அதற்கு இணங்கி நான் பாடுவதும்கூட எனக்குப் பிடித்துத்தான் இருந்தது. ஆனால், எந்தப் பறவையும் கூண்டு வாழ்க்கையை விரும்புவதில்லை. அந்த வாழ்க்கை எனக்கு இனி வேண்டாம். பறத்தல்தான் என் இயல்பு, எனக்கு வேண்டியது சுதந்திரம்…’’

அந்தப் பறவை வானில் கிளம்பி, சிறகசைத்துப் பறந்து அவன் கண்ணில் இருந்து மறைந்தது.

மனிதனுக்கு உடம்பில் ஆரோக்கியம் இருக்கும் வரை

ஸ்டீவ் ஜாப்ஸ்



மனிதனுக்கு உடம்பில் ஆரோக்கியம் இருக்கும்
வரை அவனுக்கு
எந்த துணையும் தேவையில்லை..

அவனை சுற்றி எல்லோருமே இருப்பார்கள்..

படுத்து விட்டால் பார்த்து
கொள்ள யாரும் கிடையாது.இது
உலக வழக்கம்..

கணினி உலகில் மிகப்பெரிய ஜாம்பவான்களில்
ஒருவர் ஸ்டீவ் ஜாப்ஸ்.



ஒரு கணினியின் செயல் பாட்டினை முழுவதும் ஒரு கையடக்க மொபைல் போனில் புகுத்தி கணினி துறையில் மிகப்பெரிய புரட்சிகளை ஏற்ப்படுத்திய ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் CEO ஸ்டீவ் ஜாப்ஸ்

உலகமே வியந்து பொறாமைப்பட்ட, உச்சமான நிலையைத் தொட்ட இவர் உடல்நலம் குன்றி 56 வயதில் உலகை பிரிவதற்கு முன்பாக சொன்ன வார்த்தைகள் மறக்கக் கூடாதவை..

"வர்த்தக உலகில் வெற்றியின் உச்சம் தொட்டேன்.

மற்றவர் பார்வையில் என் வாழ்க்கை வெற்றிக்கு உதாரணமாகக் காட்டப்பட்டது.

நோயுற்று படுக்கையில் இருக்கும் இப்போது என் முழு வாழ்க்கையையும் நினைத்துப் பார்க்கிறேன்.

பெற்ற புகழும், செல்வமும் அதனால் அடைந்த பெருமையும் இப்போது எனக்கு அர்த்தமற்றதாகத் தோன்றுகிறது.

பணமும் வசதிகளும் மட்டுமே வாழ்க்கையில்லை என்பதை
என் வாழ்க்கையின்
இறுதிக்கட்டத்தில் தான்
அறிந்து கொண்டேன்.

இந்த மரணத்தருவாயில், நோய்ப்படுக்கையில் படுத்துக் கொண்டு
என் முழு வாழ்க்கையையும்
திரும்பிப் பார்க்கும் இந்தத் தருணத்தில் வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த அங்கீகாரங்கள், பணம் , புகழ், சொத்து, செல்வாக்கு எல்லாமே செல்லாக்காசாக, பொருளற்றதாக மரணத்தின் முன் தோற்றுப்போய் நிற்பதை உளமார உணர்கிறேன்.

இந்த இருளில்
என் உயிரைத் தக்கவைக்கப் போராடிக்கொண்டிருக்கும்
மருத்துவ இயந்திரங்களின்
மெல்லிய சத்தங்கள் மட்டுமே காதுகளில் ரீங்கரிக்கிறது.

கடவுளின்
மூச்சுக்காற்றையும் மரணத்தையும்
மிக மிக அருகில் உணர்கிறேன்.

வாழ்க்கையில் நாம் வாழ்வதற்குப் போதுமான பணத்தை ஈட்டிய பின், பணத்திற்குத் தொடர்பில்லாத மனத்திற்குத் தொடர்புடைய சிலவற்றையும் சம்பாதிக்கத் தொடங்க வேண்டும் என்பது இப்போது தான் எனக்குப் புரிகிறது.

அவை
உறவாகவோ,
நட்பாகவோ,
கலையாகவோ,
அறமாகவோ,
நம் இளமையின் கனவாகவோ இருக்கலாம்.

அவைதான்
வாழ்வில் மிகமிக இன்றியமையாதது என்பதை காலங் கடந்து
இப்போது நான் உணர்கிறேன்.

அதை விட்டுப் பணத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு
ஓடும் மனிதனின் வாழ்க்கை முற்றிலும் வேறு திசையில் திரும்பி விடுகிறது.என் வாழ்க்கையை போல.

கடவுள் நம் புலன்களின் மூலம் அனைவரின் மனத்திலும் இருக்கும் அன்பை உணரச்செய்யும்
ஆற்றலைக் கொடுத்திருக்கிறார்.

பணத்தால் நாம் உண்டாக்கியிருக்கும்
அனைத்து மகிழ்ச்சியும்
வெறும் மாயைகளே!

நான் சம்பாதித்த பணம் எதையும் என்னுடன் கொண்டுபோக முடியாது.
நான் மகிழ்ந்திருந்த
என் நினைவுகள் மட்டுமே
இப்போது என்னுடன் இருக்கின்றன.

அன்பும் காதலும் பல மைல்கள் உங்களுடன் பயணிக்கும்.

வாழ்க்கைக்கு
எந்த எல்லைகளுமில்லை.
எங்குச் செல்ல ஆசைப்படுகிறீர்களோ
அங்குச் செல்லுங்கள்.

தொட நினைக்கும் உயரத்தை, உச்சத்தைத் தொட முயலுங்கள்.

நீங்கள் வெற்றியடைவது
உங்கள் எண்ணத்திலும்
கைகளிலும் தான் உள்ளது.

உங்கள் பணத்தை வைத்து
நீங்கள் என்ன வேண்டுமானாலும் வாங்கலாம்.

ஆனால் அந்தப் பணத்தின் மூலம் உங்கள் வலியை, உங்கள் துயரை யாரையும் வாங்கிகொள்ளுமாறு செய்யமுடியாது.
முடியவே முடியாது.

பணத்தின் மூலம் வாங்கும் பொருட்கள் தொலைந்து விட்டால்
மீண்டும் வாங்கி விடலாம்.

ஆனால் நீங்கள் தொலைத்து,
அதைப் பணத்தால்
வாங்க முடியாது என்ற ஒன்று உண்டென்றால்
அது உங்கள் வாழ்க்கைதான்.

வாழ்க்கையில் எந்தக் கட்டத்தில்
நீங்கள் இருந்தாலும் பரவாயில்லை.

இப்போதாவது வாழ்க்கையை
வாழத்
தொடங்குங்கள்.

நாம் நடித்துக்
கொண்டிருக்கும்
வாழ்க்கை எனும் நாடகத்தின்
திரை எப்போது வேண்டுமானாலும் இறக்கப்படலாம்
என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

உங்களின்
குடும்பத்தினருக்கு,
பெற்றோர்க்கு,
மனைவிக்கு,
மக்களுக்கு,
உறவினர்க்கு,
நண்பர்களுக்கு,
இயலாதவர்களுக்கு
அன்பை வாரிவாரி வழங்குங்கள்.

உங்களை நீங்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள். அனைவரையும் மனமார நேசியுங்கள். நேசியுங்கள். நேசித்துக்கொண்டே இருங்கள்.



nidurseasons

சீன அதிபர் சொன்ன தத்துவ கதை

சீன அதிபர் சொன்ன தத்துவ கதை

சிறு வயதில் நான் மிகுந்த சுயநலக்காரனாக இருந்தேன். நல்ல பொருள் எதுவாக இருந்தாலும், எது கிடைத்தாலும், அதை நானே கைப்பற்றிக்கொள்வேன். இந்தக் குணத்தின் காரணமாகவே, மெதுவாக எல்லோரும் என்னைவிட்டு விலக ஆரம்பித்தார்கள். ஒருகட்டத்தில் எனக்கு நண்பர்களே இல்லாமல் போய்விட்டார்கள். நானோ என் மீது தவறு இருக்கிறது என்றே நினைக்கவில்லை; மற்றவர்களைக் குறை சொல்லிக்கொண்டிருந்தேன். அந்தச் சமயத்தில் என் அப்பா எனக்குக் கற்றுக் கொடுத்த மூன்று வாக்கியங்கள்தாம்  வாழ்க்கையில் எனக்கு உதவியாக இருந்தன. 


ஒருநாள் அப்பா, இரண்டு அகலமான பாத்திரங்களில் நூடுல்ஸ் சமைத்து எடுத்து வந்தார். அந்த இரண்டையும் சாப்பாட்டு மேஜை மேல் வைத்தார். ஒரு பாத்திரத்திலிருந்த நூடுல்ஸின் மேல் மட்டும் ஒரு முட்டை வைக்கப்பட்டிருந்தது; இன்னொன்றின் மேல் முட்டையில்லை. அப்பா என்னிடம் கேட்டார்... `கண்ணு... உனக்கு இந்த இரண்டில் எது வேண்டுமோ, நீயே எடுத்துக்கொள்!’ என்றார். அந்த நாள்களில் முட்டை கிடைப்பது அரிதாக இருந்தது. புத்தாண்டின்போதோ, பண்டிகைகளின்போதோதான் எங்களுக்குச் சாப்பிட முட்டை கிடைக்கும். எனவே, நான் முட்டை வைத்திருந்த நூடுல்ஸ் கிண்ணத்தை எடுத்துக்கொண்டேன். நாங்கள் சாப்பிட ஆரம்பித்தோம். என்னுடைய புத்திசாலித்தனமான முடிவுக்காக எனக்கு நானே என்னைப் பாராட்டிக்கொண்டேன். முட்டையை ஒரு வெட்டு வெட்டினேன். என் தந்தை அவருடைய கிண்ணத்தை எடுத்து சாப்பிட ஆரம்பித்தபோது எனக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. அவருடைய கிண்ணத்தில் நூடுல்ஸுக்கு அடியே இரண்டு முட்டைகள் இருந்தன. அதைப் பார்த்துவிட்டு நான் மிகவும் வருத்தப்பட்டேன். அவசரப்பட்டு நான் எடுத்த முடிவுக்காக என்னை நானே திட்டிக்கொண்டேன். அப்பா மென்மையாகச் சிரித்தபடி என்னிடம் சொன்னார்... `மகனே நினைவில்வைத்துக்கொள்... உன் கண்கள் பார்ப்பது உண்மையில்லாமல் போகலாம். மற்றவர்களுக்குக் கிடைப்பதை நீ அடைய வேண்டும் என நினைத்தால் இழப்பு உனக்குத்தான்.’’

அடுத்த நாளும் என் அப்பா இரண்டு பெரிய கிண்ணங்கள் நிறைய நூடுல்ஸ் சமைத்துக் கொண்டு வந்து சாப்பாட்டு மேஜையில் வைத்தார். முதல் நாளைப் போலவே ஒரு கிண்ணத்திலிருந்த நூடுல்ஸின் மேல் ஒரு முட்டை வைக்கப்பட்டிருந்தது; இன்னொன்றில் இல்லை. அப்பா என்னிடம் கேட்டார்... ``மகனே... உனக்கு இந்த இரண்டில் எது வேண்டுமோ, நீயே தேர்ந்தெடுத்துக்கொள்!’ இந்த முறை நான் கொஞ்சம் புத்திசாலித்தனமாக யோசித்தேன். முட்டை வைக்கப்படாத கிண்ணத்தை எடுத்துக்கொண்டேன். அன்றைக்கும் எனக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. நூடுல்ஸை அள்ளும் குச்சியால், கிண்ணத்துக்குள் அடிவரை எவ்வளவு துழாவிப் பார்த்தும் ஒரு முட்டைகூடக் கிடைக்கவில்லை. அன்றைக்கும் அப்பா சிரித்தபடி சொன்னார்... `மகனே... எப்போதும் அனுபவங்களின் அடிப்படையிலேயே ஒன்றை நம்பக் கூடாது. ஏனென்றால், சில நேரங்களில் வாழ்க்கை உன்னை ஏமாற்றக்கூடும், தந்திரத்தில் விழவைக்கும். இதை ஒரு பாடமாக எடுத்துக்கொள். இதை எந்தப் பாடப்புத்தகங்களிலிருந்தும் கற்றுக்கொள்ள முடியாது.’ 

மூன்றாவது நாள், அப்பா மறுபடியும் இரு பெரிய கிண்ணங்களில் நூடுல்ஸ் சமைத்து எடுத்து வந்தார். இரு கிண்ணங்களையும் மேஜையின் மேல் வைத்தார். வழக்கம்போல ஒரு கிண்ணத்திலிருந்த நூடுல்ஸில் முட்டை; மற்றொன்றில் இல்லை. அப்பா கேட்டார்... `மகனே நீயே தேர்ந்தெடுத்துக்கொள். உனக்கு இவற்றில் எது வேண்டும்?’ இந்த முறை அவசரப்பட்டு கிண்ணத்தை எடுத்துவிடாமல் நான் பொறுமையாக அப்பாவிடம் சொன்னேன்... `அப்பா நீங்கள்தான் இந்தக் குடும்பத்தின் தலைவர். நீங்கள்தான் நம் குடும்பத்துக்காக உழைக்கிறீர்கள். எனவே, முதலில் நீங்கள் உங்களுக்கான கிண்ணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். மற்றதை நான் எடுத்துக்கொள்கிறேன்’ என்றேன். அப்பா என் கோரிக்கையை நிராகரிக்கவில்லை. முட்டை இருந்த நூடுல்ஸ் கிண்ணத்தை எடுத்துக்கொண்டார். நான் எனக்கான நூடுல்ஸைச் சாப்பிட ஆரம்பித்தேன். நிச்சயமாக இந்தப் பாத்திரத்தில் முட்டை இருக்காது என்றுதான் நினைத்தேன். அன்றைக்கும் எனக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. கிண்ணத்தின் அடியில் இரண்டு முட்டைகளிருந்தன.
அப்பா கண்களில் அன்பு கனிய என்னைப் பார்த்தார். பிறகு புன்முறுவலோடு சொன்னார்... மகனே, நினைவில் வைத்துக்கொள். மற்றவர்களுக்கு நீ நல்லது நினைக்கும்போதெல்லாம், உனக்கும் நல்லதே நடக்கும்!’ 

அப்பா சொன்ன இந்த மூன்று வாசகங்களை, வாழ்க்கை பாடங்களை எப்போதும் நான் நினைவில் வைத்திருக்கிறேன். அதன்படிதான் நான் செயலாற்றுகிறேன். உண்மையைச் சொல்லப்போனால், நான் வெற்றி பெற்றுக்கொண்டிருக்கிறேன்...’’
நன்றி - விகடன்

Monday, 14 May 2018

அரபு நாடுகளை அமெரிக்கா அழிக்கிறது

இலங்கையில் உள்ள வஹாபி ஊடகங்கள் அதனை ஆதரிக்கின்றன !!

அரபு நாடுகளை அமெரிக்கா அழிக்கிறது

இலங்கையில் உள்ள கவாரிஜ் வஹாபிகள், இக்வானுல் முஸ்லிமீன்கள் (முஜ்ரிமீன்கள்) , (அவர்களின் தமிழ் வஹாபி பத்திரிகைகள் மூலமும், பயான்கள் மூலமும்),  அமெரிக்கா லிபியாவை அழித்ததையும் யெமனை அழிப்பதையும், ஸிரியாவை அழிப்பதையும் ஆதரிக்கிறார்கள்.
இஸ்லாத்தையும், இலட்சக்கணக்கான முஸ்லிம்களையும், முஸ்லிம் நாடுகளையும், முஸ்லிம்களின் சகல சொத்துக்களையும் அழிக்கும் யூத இஸ்ரேல். அமெரிக்க ஸியோனிஸ்டுகளை ஆதரிக்கும்
கூலிப்படைகளே இந்த வஹாபிகள் என்பதை அறிய வேண்டுமா?
மத்திய கிழக்கில் அமெரிக்காவும் இஸ்ரேலும் வஹாபிகளும் செய்யும் அட்டூழியங்களின் சுருக்கத்தை அறிய வேண்டுமா?

வஹாபிகளால் ஆதரிக்கப்படும், ஸிரிய அரசாங்கத்துக்கெதிரான அமெரிக்க, இஸ்ரேல் யுத்தம் பற்றி பலஸ்தீனைச் சேர்ந்த உலகின் பிரபல மத்தியகிழக்கு விவகார ஆய்வாளர் அப்துல் பாரி அத்வானி அவர்கள், அரபுலகை அமெரிக்கா அழிப்பது பற்றி மிகக் கவலையோடு பேசுகிறார். இஸ்லாத்தின் எதிரிகளான இஸ்ரேல், அமெரிக்க திட்டத்தைத் தான் இங்குள்ள வஹாபி தமிழ் ஊடகங்கள் ஆதரிக்கின்றன என்பதை இலகுவாக புரிந்து கொள்வீர்கள்.
இந்த வீடியோவை முழுதும் கவனமாக கேளுங்கள்.
அரபு தெரியாதவர்கள் தெரிந்தவர்கள் மூலம் கேளுங்கள்.
சகல முஸ்லிம்களுக்கும் எத்தி வையுங்கள்.