السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Wednesday 22 June 2016

ஆண்ட்ராய்டு போனும் அண்ணலாரின் உம்மத்தும்!

ஆண்ட்ராய்டு போனும் அண்ணலாரின் உம்மத்தும்!

செல்பியும் செல்போனும் பேஸ்புக்கும் வந்ததில இருந்து இந்த வருசம் வரை நம்ம சமுதாயம் உம்ரா வித் செல்பி, ஹஜ் வித் செல்பின்னு ஹரம் ஷரீபில் நின்னு கஃபா பின்னணில செல்பி நன்மைகளை (?) வாரி குவிச்சிட்டு இருந்தது.
இஹ்ராம் கட்டுனதில இருந்து, கால் டாக்சில ஏறுனது முதல் ஏரோப்ளேன்ல ஏறி உட்கார்றதுன்னு ஒரே அப்டேட் அலப்பறைதான் போங்க.
இப்ப முத்திப் போச்சோ இல்ல முன்னேறிப் போச்சோ தெரியல,
இந்த வருசம் செல்பி இப்தார் ஆரம்பிச்சுட்டாங்க.
பள்ளிவாசலோ, பக்கத்துவீடோ, தனது வீடோ எங்க நோம்பு திறந்தாலும் போட்டோ தான்.
அவங்க நோம்பு திறக்க யாராவது ஸ்பான்சர் பண்ணியிருந்தாலோ, அல்லது பள்ளி வாசல்ல பக்கத்துல யாராவது இருந்தாலோ, ஆறு அம்பதுக்கு போட்டோ அப்லோடு ஆகியிருக்கும்.
கூடவே, கூட இருந்த இன்னாருக்கு இன்னத செய் அல்லாஹ்னு துஆவும்.
அருமை சமுதாயமே! ஆண்டவன் பேஸ்புக்ல அக்கவுண்ட் வச்சி, அப்பப்ப ஓபன் பண்ணி பாத்து, அதுல வர்ர துஆக்களை அக்செப்ட் பண்றான்னு நெனச்சீங்களா?
அப்டீல்லாம் இல்லைங்க; நோம்பு துறக்குற நேரத்துல கைல மொபைலை நோண்டாம, கையேந்தி வேண்டுங்க அவன்கிட்ட.
அந்த நேரத்து துஆவை அவன் கபூலாக்குவான்.
அவனுக்காக நோம்பு வச்சு, நாடி நரம்பெல்லாம் தளர்ந்திருக்கையில் கேட்கும் துஆவை அவன் மறுப்பானா?
அதை விட்டுட்டு, அஞ்சு பைசாக்கு உபயேகமில்லாத லைக்குக்கு ஆசப்பட்டு, மறுமை லைபை இழந்திடாதீங்க.
ஆமாங்க. லைக்கு என்ன செய்யும்? மீசானில் நன்மையின் தட்டை கனக்கச் செய்யுமா?
அர்ஷில் நிழல் தருமா?
ஹவ்ளுல் கவ்சரில் ஒருவாய் தண்ணி தருமா?
ஆனால் இப்தார் நேரத்தினதும் இத்யாதி நேரத்தினதும் பிரார்தனைகள் இதையெல்லாம் பெற்றுத்தரும் இன்ஷா அல்லாஹ்.
அல்லாம இப்டியே போனா அடுத்தவாரம் போத்தீஸுக்கு விளம்பரமா அங்க இருக்குற இப்தார் பண்ற போட்டோவா போட்டுத் தள்ளுவாங்க.
ஏன்னா ரமளான் கடைசிப்பத்து ஷாப்பிங் பத்து ஆச்சே!
ஆனா ஒன்னு!
நன்மையான காரியங்களை செய்றதில் மட்டும் ஆதாரம் இல்ல, அவசியம் இல்லனைு அடிச்சுக்குற சமுதாயம்
தப்பான விசயத்துல மட்டும் எந்த கருத்து வேறுபாடும் இல்லாம ஒற்றுமையா நாசமா போகுது.
ஏற்கனவே துஆவின் சிறந்த நேரமான ஸஹரில் சமுதாயத்தை டிவி முன்னாடி அடிமையாக்கியாச்சு.
இந்த வருசம் இப்தார்ல இப்டி ஒரு பிரச்னை.
இப்டி துஆவின் நேரங்களை எல்லாம் தொலைச்சுகிட்டு, இம்மை, மறுமையை நஷ்டமாக்கிட்டு இருந்தா எப்புடி?
நமக்காக அல்லாஹ் இந்த மாதத்தில் ஷைத்தானை விலங்கிடுறான்.
அட, நம்மால இந்த பேஸ்புக்குக்கு ஒரு கடிவாளம் போட்டு கண்ட்ரோலா யூஸ் பண்ண முடியாதா?
பேஸ்புக்க நம்ம நன்மைக்கும் பயன்படுத்த முடியும்; நரகத்துக்கும் பயன்படுத்த முடியும்.
அமிர்தமானாலும் அளவா பயன்படுத்தனுமாம். இதெல்லாம் யூதன் தந்த நஞ்சு. அப்ப இன்னும் கவனமா இருக்க வேணாமா?
நா சொன்னது புடிக்கலைனா திட்டாதீங்க.
புடிச்சிருந்தா நல்ல நேரங்களில் எனக்காகவும் துஆ செய்ங்க.
அன்புடன் ஜாபிர் பாக்கவி.