السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Monday 30 September 2019

மௌலானா ரூமி ரஹ்மத்துல்லாஹ்

வாழும் கவிஞன் மௌலானா ரூமி
வாழும் கவிஞன் மௌலானா ரூமி - 812ஆவது பிறந்த தினம்

மௌலானா ஜலாலுத்தீன் ரூமி அவர்களின் பிறந்த 812வது ஆண்டு  இன்று  கொண்டாடப்படுகிறது.  படைத்தவனுக்கும் படைப்பினங்களுக்கும், ஆத்மாவுக்கும் இறைவனுக்கும் இடையிலான உறவுகள் பற்றி கவி வரிகள் மூலம் எடுத்துரைத்தவர்; அன்பே மனிதம் என்றார் ரூமி.

அமெரிக்காவில் அதிகளவில் விற்பனையாகும் கவிதை நூல்களில் மௌலானா ரூமியின் கவிதைத் தொகுப்புக்களே முதல் இடத்தில் உள்ளதாக BBC உலகசேவை மேற்கொண்ட ஆய்வு கூறுகிறது.

ஆப்கானிஸ்தானில் பிறந்த மௌலானா ரூமி அவர்கள்; மௌலானா ரூமி அவர்களின் வாழ்வில் பரீதுத்தீன் அத்தார் அவர்களின் செல்வாக்கு அதிகம் அதனால் தான் ஓர் இடத்தில் " அத்தார் காதல் எனும் ஏழு நகரங்களில் ஊடாக பயணித்துக்கொண்டிருந்த போது நானோ ஒரு வீதியில் மாத்திரம் அலைந்துகொண்டிருந்தேன்" என்று மௌலானா ஜலாலுத்தீன் ரூமி அவர்கள் கூறுகிறார்கள்.

மௌலானா ரூமி செய்யிதினா அபூபக்ர் ஸித்தீக் றழியல்லாஹூ அன்ஹூ அவர்களின் குடும்பவாரிசாவார்கள்.
ஷம்சே தப்ரீஸ் அவர்கள் மீது மௌலானா ரூமி அவர்கள் வைத்திருந்த நேசம் அலாதியானது.
அதனாலேய பிற்காலத்தில்  அவர்களுக்கு மறைந்து வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது
(கொல்லப்பட்டார்கள் என்ற கருத்து வரலாற்று ரீதியாக உறுதியாக நிரூபிக்கப்படவில்லை என்றும் தப்ரீஸி திடீரென்று மறைந்துவிட்டார்கள் என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்)

மன்னிப்பும் அன்பும் ரூமியின் இரு கண்களாக கருதப்படுகினறன. "மன்னிப்பு என்றால் என்ன என்று கேட்டார்கள். அழகிய மலர் கசக்கப்படும் போது வெளியாகும் நறுமணத்தைப் போன்றது என்றேன்" என்கிறார்கள். மௌலவியா சூபி வழியமைப்பு தர்வீஷ் நடனம் போன்றவை ரூமி சிந்திய முத்துக்கள்.

சூபி என்றால் யார் என கேட்டான் " முஹம்மது நபி ஸல்லாஹூஅலைஹிவஸல்லம் மீது தொங்கிக்கொண்டிருக்கும் அபூபக்ரை போல" என்றேன் என ரூமி பதிலளித்தார்.

 பேராசிரியர் எட்வட் ப்றவுன் கலாநிதி ஆன் மேரி சீம்மெல் சேர் அல்லாமா இக்பால், கலாநிதி ஓமைத் ஷாபி, பேராசிரியர் செய்யித் ஹூஸைன் நஸ்ர் போன்றவர்கள்கள் ரூமி கற்கையில் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள்.

மௌலானா ரூமி அவர்களின் எழுத்துக்களை மொழிபெயர்ப்பது மிகவும் கடினமானது. ஏனெனில் மஸ்னவியின் எழுத்துக்கள் ஆழமான சுவை கொண்டவை. அறிஞர் ஆர்.பி. எம் கனி, முஹம்மத் மஹ்ரூப் (Mohamed Mahroof) , நாகூர் ரூமி (Nagore Rumi), பேராசிரியர் ரமீஸ் பிலாலி (Rameez Bilali) ,நாரியம்பட்டு ஸலாம், மௌலவி அபூதாஹிர் மஹ்ழரி, ஆகியோரின் எழுத்துக்கள் அற்புதமானவை.

மௌலானா ரூமி அவர்கள் அடங்கியிருக்கும் துருக்கியின் கொன்யா நகரம் World Heritage City ஆக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது
சிக்காகோ யேல் தெஹ்ரான் உட்பட பல பல்கலைக்கழகங்கள் ரூமி கற்கைக்கான இருக்கைகளை அமைத்திருக்கின்றன.
புகழ்பெற்ற ஹாலிவூட் நடிகர் லியர்னாடோ டி காப்ரியோ விரைவில் மௌலானா ரூமியின் பாத்திரம் ஏற்று திரைப்படத்தில் நடக்கவுள்ளார். ரூமி காதலித்தார் அதனால் இன்று காதலிக்கப்படுறர்கள்
"நான் மரணித்துவிட்டால் என்னை என் அடக்கஸ்தலத்தில் தேட வேண்டாம் நான் மனிதர்களின் உள்ளங்களில் வாழ்ந்துகொண்டிருப்பேன்" என்றார்கள் அதனால் தான் நான் ஆரம்பித்திலேயே ரூமியை வாழும் கவிஞன் என்றேன்.