السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Monday, 30 September 2024

பொலன்னறுவையில் மீலாதுன் நபி விழா 2024

 29/09/2024 இன்று பொலன்னறுவையின் எல்லைக்கிராமமான பள்ளித்திடல் முர்த்தலிய்யா அஹதிய்யா பாடசாலை மாணவர்களின் மீலாதுன் நபி விழா நிகழ்வு மிகவும் விமரிசையாக நடைபெற்றது... அல் ஹம்துலில்லாஹ்!

29/09/2024 இன்று பொலன்னறுவையின் எல்லைக்கிராமமான பள்ளித்திடல் முர்த்தலிய்யா அஹதிய்யா பாடசாலை மாணவர்களின் மீலாதுன் நபி விழா நிகழ்வு மிகவும் விமரிசையாக நடைபெற்றது... அல் ஹம்துலில்லாஹ்!


இந் நிகழ்விற்கு மத்திய சம்மேளனத்தின் உப தலைவர் அல் ஹாஜ் அஸ்வர் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்கள். மேலும் பொலன்னறுவை மாவட்ட ஜம்இய்யாவின் தலைவர் அஷ் ஷெய்க்-M M அலாவுதீன் பலாஹி அவர்கள் மற்றும் பொலன்னறுவை மாவட்ட அஹதிய்யா பாடசாலைகளின் சம்மேளனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற அதிபர் NMA மஜீத் சேர், உப தலைவர் ஓய்வுபெற்ற மௌலவி ஆசிரியர் அஷ் ஷெய்க்- ACM ஜௌபர் ஷர்க்கி, பொலன்னறுவை மாவட்ட அனைத்து பள்ளிவாயல்கள் மற்றும் பொது நிறுவனங்களின் சம்மேளனத்தின் சிரேஷ்ட உறுப்பினர் ஓய்வு பெற்ற அதிபர் NM முகைதீன் பாவா சேர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.


மிகவும் அழகான முறையில் மாணவர்கள் பயிற்றுவிக்கப்பட்டிருந்தனர், அழகான பேச்சு,கவிதை , பாடல்கள் , உரையாடல்கள் என அனைத்து நிறைவாக இருந்தது... மூன்று அஹதிய்யா ஆசிரியர்களே இருந்தாலும் வெளி நாடுகளில் வாழும் உறவுகளின் உதவியோடு அனைத்தும் சிறப்புற அமைந்திருந்தது.


கிராம முன்னேற்ற கழகம் மற்றும் பள்ளிவாயல் நிருவாகங்கள் நலன் விரும்பிகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.


இன்ஷா அல்லாஹ் உங்களின் இந்த முயற்சிகள் மூலம் ஒரு பிள்ளை நண்மை அடைந்தாலும் அந்த நண்மை உங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் பக்கபலமாக பறகத்தாக அமையும்.


அனைவருக்கும் ஜஸாக்கமுல்லாஹு ஹைரன்!!!


Saturday, 28 September 2024

மாபெரும் மீலாதுன் விழாவும் 1 கோடி ஸலவாத் ஸமர்ப்பணமும்

 ஏறாவூர் சமூக சேவைக்கான அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் பேரவையின் ஏற்பாட்டில் 28/09/2024 ஏறாவூர் அல் அஷ்ஹர் பெண்கள் பாடசாலையில் சங்கைக்குரிய மெளலவி AC அப்துல் மஜீத் மிஸ்பாஹி உஸ்தாத் அவர்களின் முன்னிலையில்

சங்கைக்குரிய மெளலவி முபாறக் முஸ்தபி பேராசிரியர்:  ரிஸ்விய்யாஹ் அரபுக்கல்லூரி தம்புள்ளை அவர்களின் அழகிய குரலில்


ஏறாவூர் சமூக சேவைக்கான அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் பேரவையின் ஏற்பாட்டில் 28/09/2024




சங்கைக்குரி மெளலவி அல் ஹாபிழ் நெளபி BA  உஸ்தாத்: பைஸானுல் மதீனா அரபுக்கல்லூரி . அவர்களின் கிராஅத்துடன் இந்நிகழ்வு ஆரம்பமானது.


 சங்கைக்குரிய மெளலவி HMA  ஹில்மி கெளஸிM.Sc (HNOS) சிரேஸ்ட விரிவுரையாளர் தென்கிழக்கு பல்கலைக்கழகம்  இலங்கை. அவர்களின் தலைமையில் தலைமையுரை மிகவும் சிறப்பாக நிகழ்த்தப்பட்டது.


இந்நிகழ்வில் விசேட பேச்சாளராக சங்கைக்குரிய மெளலவி கலீபத்துல் காதிரி அஸ்செய்ஹ் பதுறுத்தீன் ஷர்கி பர்லேவி காதிரி வநக்ஸபன்தி உஸ்தாத் அவர்கள் கலந்து சிறப்பித்து விசேட மார்க்க உபன்னியாசம் நிகழ்த்தினார்கள்.




மற்றும் சிறப்புறை நிகழ்த்த சங்கைக்குரிய மெளலவி இப்றாஹீம் அஹ்மத் அதிபர்: நிழாமிய்யாஹ் மஃபிய்யாஹ் அரபுக்கல்லூரி , சங்கைக்குரிய மெளலவி u அப்துர் ரஹீம் பாரி MA,LLB (HONS) விரிவுரையாளர் பைஸானுல் மதீனா அரபுக்கல்லூரி  அவர்களும் கலந்து சிறப்பித்து உரை நிகழ்த்தினார்கள்.


மற்றும் இவ்விழாவில் உலகில் உள்ள தமிழ் பேசும் அனைத்து நபிநேசர்களும்  முஹீப்பீயின்களும்  1 மாத காலமாக சொல்லப்பட்டு வந்த இந்த ஸலவாத் சமர்ப்ணம் செய்யும் விடயத்தில் ஸலவாத் சொல்லி அனுப்பி  பங்களிப்பு  செய்தது மிகவும் சிறப்பாக இருந்தது . அல்லாஹ் எல்லோருக்கும் ரஹ்மத் செய்வானாக.

மேலும் இவ்விழாவில் ஏறாவூர் வாழ் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பள்ளிவாயல் தலைவர்கள், அமைப்புக்கள் மற்றும் அனைத்து நல்லுள்ளங்களும் கலந்து சிறப்பித்தார்கள். 

மேலும் இவ்விழாவில் சில மாணவ மாவிகளுக்கு கல்வி ஊக்குவிப்பு பரிசில்களும் கொடுக்கப்ட்டது.





மற்றும் ஏறாவூரில் பல வருடங்களாக அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்துக்காக வாழ்நாளை தியாகம் செய்த உலமாக்களை  பொண்ணாடை போர்த்தி கொளரவிக்கப்பட்டது.












மேலும் இவ்விழாவை சிறப்பிக்க ஏறாவூரின் சிறந்த பாடகர் சங்கைக்குரி மெளலவி அல்ஹாபிழ் பஸால் ஹஸனி BA அவர்களும் , மரியாதைக்குரி ரிஸ்வி அவர்களும் இனிமையான இஸ்லாமியக் கீதங்கள் ,கஸீதாக்களை பாடி மகிழ்வித்தார்கள்.



மேலும் இவ்விழாவில்  கலந்து பல நிகழ்வுகளில் கலந்து கொண்ட உலமாக்களின் புகைப்படங்களை இங்கே பார்களாம்.