السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Saturday, 11 October 2014

வெற்றி பெறுவதற்கு...

kalmunai jnh

1. மாதம் ஒரு புத்தகமாவது படியுங்கள்.

2.
ஆரோக்கியம் தராத உணவு வகைகள் எவ்வளவு சுவையாக இருந்தாலும் உண்ணாதீர்கள்.

3.
உங்களுக்கு என்ன வயதானாலும் பரவாயில்லை. விருப்பமான துறை களில் நடக்கும் பயிற்சி வகுப்புகளில் பங்கெடுங்கள்.

4.
வருமானத்திற்கான வழி மிகவும் முக்கியம். அதில் எந்த சமரசமும் செய்து கொள்ளாதீர்கள்.

5.
முடிந்தவரை கடன்களைக் கட்டி விடுங்கள். வேண்டாத செலவுகளை நிறுத்தி விடுங்கள்.


6.
அதிகாலையில் எழுந்து விடுங்கள். ஒரு நாளின் அலுவல்களை முன் கூட்டியே திட்டமிடுங்கள்.

7.
முப்பதுகளைக் கடக்கும் முன், மற்றவர்கள் சொல்லாமலே சர்க்கரை, உப்பு ஆகியவற்றை கணிசமாகக் குறைத்து விடுங்கள். முடிந்தால் தவிர்த்து விடுங் கள்.

8.
எக்காரணம் கொண்டும் காலை உணவைத் தவிர்க்காதீர்கள்.

9.
நிற்கையில் நேராக நில்லுங்கள். பேசுகையில் கண்களைப் பார்த்துப் பேசுங் கள்.

10.
புன்னகை முகமும் இதமான பேச்சும் உங்கள் இயல்புகளாகவே இருக்கட் டும்.

11.
வாரம் மூன்று முறையாவது உடற்பயிற்சி செய்யுங்கள். முடிந்த வரை நடந்து செல்லுங்கள்.

12.
சிறு குறிப்போ, கடிதமோ, கட்டுரையோ, பிழையில்லாமல் எழுதுவதில் கவனம் செலுத்துங்கள்.

14.
அரட்டைப் பேச்சுக்களை தவிர்த்து விடுங்கள்.

15.
மற்றவர்களின் தவறுகளை மன்னியுங்கள்.

16.
உங்கள் வாழ்வின் ரகசிய அம்சங்கள் முடிந்த வரை குறைவாகவே இருக் கட்டும்.

17.
குடும்பம் என்கிற எல்லையைக் கடந்து, பொது அமைப்பு எதிலாவது ஈடுபடுங்கள்.

18.
மாதம் ஒரு முறையாவது உங்கள் தகுதிகளை யும் தவறுகளையும் பட்டியல் இடுங்கள்.

19.
மற்றவர்களைப் பேச விடுங்கள். அவர்கள் மேல் உங்களுக்கு இருக்கும் அக்கறையை உணர்த்துங்கள்.

20.
உங்கள் நேரத்திற்கும், மற்றவர்களின் நேரத்திற்கும் உரிய மரியாதை கொடுங்கள்.

21.
உங்களிடம் இல்லாத தகுதிகள் இருப்பதாக நம்பவோ, நம்ப வைக்கவோ முயலாதீர்கள்.

22.
உங்கள் திறமைகளை நீங்களே விவரித்துக் கொண்டிராதீர்கள். உரிய நேரத்தில் நிரூபியுங்கள்.

23.
மேடைக் கூச்சம், கேமரா கூச்சம் இல்லாமல் இருங்கள்.

25.
உங்கள் தனிப்பட்ட நம்பிக்கைகளையும் பழக்கங்களையும் மற்றவர்கள் மேல் திணிக்காதீர்கள்...



வெளி உலகம் தெரியாமல் கணினி மட்டுமே உலகம் என்று எண்ணும் நமக்கு வெளி உலக தகவல்களை அள்ளி கொடுப்பதற்காக பல தளங்கள் உள்ளது அந்த வகையில் இன்று கூகிள் உதவியுடன் ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு எத்தனை கி.மீ தூரம் என்று எளிதாக கண்டுபிடிக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
வெளி ஊருக்கு செல்ல வேண்டி இருந்தால் கூகிள் மேப் உதவியுடன் இடம் மற்றும் செல்ல வேண்டிய இடங்களை எளிதாக கண்டுபிடிபோம் அதே வகையில் செல்லும் இடத்தின் தூரத்தை கி.மீ மற்றும் மைல் அளவில் கொடுக்க ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.distancefromto.net
இத்தளத்திற்கு சென்று From மற்றும் To என்பதில் நாம் எந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்பதை கொடுத்து Measure Distance என்ற பொத்தானை சொடுக்கினால் போதும் உடனடியாக வரும் திரையில் நமக்கு இரண்டு ஊருக்கும் எத்தனை கி.மீ என்பதை துல்லியமாகவும் எப்படி செல்ல வேண்டும் என்பதற்கான மேப்-ஐயும் காட்டுகிறது. கூகிள் மேப்-ல் இதைவிட சிறப்பான வசதிகள் இருக்கும் போது நாம் ஏன் இந்தத் தளத்தை பயன்படுத்த வேண்டும் என்றால் கூகிள் மேப் பக்கம் திறக்க எடுத்துக்கொள்ளும் கால நேரத்தை விட இது வேகமாக இருக்கும்.ஓட்டுனர்கள் எந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்றாலும் எத்தனை கி.மீ தூரம் என்பதை கூகிள் உதவியுடன் கண்டுபிடிக்க உதவும் இத்தளம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.


Description: http://winmani.files.wordpress.com/2011/08/distance.jpg?w=450&h=435www.EravurYoosuf.blogspot.com 

Friday, 10 October 2014

காங்கிரஸ் நூல் நிலையத்தில் தோமஸ் ஜெபர்சனின் குர்ஆன்


Kalmunai Muharram

ஜக்கியஅமேரிக்காவின் ஸ்தாபகத் தந்தையருள் ஒருவரும் 1776 சுதந்திர பிரகடனத்தின் பிரதம ஆசிரியருமான தோமஸ் ஜெபர்சன் 1801 இலிருந்து 1809 வரை இளம் அமேரிக்காவின் மூன்றாவது ஜனாதிபதியாக பதவி வகித்தார்.ஜெபர்சன் குர்ஆன்வாங்கிய கதையானது இவ்விடயத்தை விளங்கப்படுத்துகின்றது.

வேர்ஜீனியாவின்அறிக்கையைப் புரட்டிப்பார்க்கும் போது பிராங்டிவே என்ற அறிஞர் ஜெபர்சன் 1765களில் வேர்ஜீனியாவின் வில்லியம் அன்ட்மேரி சட்டக்கல்லூரியில் மாணவனாக இருக்கும்போது குர்ஆனின் பிரதியை வாங்கினார். எனக் கண்டுபிடித்தார்.

பார்பரியின் பயமுறுத்தல் காரணமாகத்தான் ஜபர்சன் இஸ்லாத்தின் மீது பற்றுக் கொண்டார்.எனத்தவறாக நிரூபிக்கப்பட்டது.மாறாக அவரது சட்டக்கல்வியின் அமைப்பு முறையே அவரை குர்ஆனின் பால் நேசம் கொள்ளச் செய்தது.

குர்ஆனிலுள்ளசட்டவியங்கள் சம்பந்தமாக ஜெபர்சனின் ஆர்வத்திற்குக் காரணமில்லாமலில்லை.சமயச்சட்ட ஷரீஆவின் முழு இஸ்லாமிய நீதித்துறை முறைகளும் குர்ஆனை அடிப்படையாகக் கொண்டவை.

அவரின் காலத்தில்இருந்த ஒப்பிட்டு சட்டவியலின் காத்திரமான நூலானது.ஜெர்மன் அறிஞர்சாமுவேல் வொன்பவன்டோப் என்பவர் எழுதிய “Law of Nature and Nations” என்ற நூலாகும்.அது முதன் முதலில் 1672இல் பிரசுரிக்கப்பட்டது.

ஜெபர்சன் பவன்டோப் எழுதிய நூலை ஆழமாக வாசித்தார்.ஏனைய நூல்களை விட இந்நூலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த அவர் சட்டங்களை எழுதினார்.பவன்டோப் என்பவரின் நூலில் இஸ்லாம்,குர்ஆன் சம்பந்தமாக ஏராளமான விக்கங்கள் உள்ளன.
நல்லொழுக்க முறைகளை மேம்படுத்துதல்,போரில் ஈடுபடும் நாடுகளுக்கிடையே சமாதானத்தை ஏட்படுத்துதல் போன்றவைகளில் குர்ஆனிலுள்ள உதாரணங்களை மேற்கோள்காட்டி எடுத்து கூறினார்.

கேவின் வெய்ஸ் என்ற இன்னுமொரு அறிஞர் பின்வருமாறு எழுதுகின்றார் அவர் தனது சட்டக்கல்வியை இயன்ற அளவு விருத்தியாக்குவதற்குக் குர்ஆன் ஒரு சிறந்த பொக்கிஷம் எனக் கண்ட கொண்டார்.

குர்ஆனைச் சட்ட நூலாக அவர்படிப்பதற்கு ஒர் ஆங்கில மொழிபெயர்ப்பு அவருக்கு மிகவும் உதவியது.இது முன்னர் காணப்பட்ட மொழிபெயர்ப்புக்களை விடவும் சிறப்பானது மட்டுமல்ல உணர்ச்சி புர்வமானதாக காணப்பட்டது.
அது ஜொர்ஜ் சாலே என்ற ஆங்கில அறிஞர் ஒருவரால் தயாரிக்ப்பட்டு 1734இல் லண்டனில் பிரசுரிக்கப்பட்டது.

Description: http://winmani.files.wordpress.com/2011/08/distance.jpg?w=450&h=435
The kuran என்ற தலைப்பானது   “Al Coran of muhammed”எனப் பொதுவாக அழைக்கப்பட்டது.அதன் 2வது பதிப்பு 1764 பதிக்கப்பட்டது. இந்தப்பதிப்பையே ஜெபர்சன் வாங்கினார். ஜொர்ஜ் சாலே ஒரு வழக்கறிஞராக திகழ்ந்தார்.அவர் பின்வருமாறு கூறிப்பிடுகின்றார் அந்நிய தேசங்களில் சமய,சமூக ஸ்தானங்கள் பெறுமதிமிக்கதாக ஆக வேண்டுமானால் அரேபியர்களுக்கு சட்டத்தை கற்றுக் கொடுத்தவரும் ஒரு நூற்றாண்டுக்குள்ளே இஸ்லாம் உலகின் பெறும் பகுதிகளுக்கு பரவுவதற்கு காரணமாக இருந்தவருமான முஹம்மத் என்பவரின் அறிவுகளை பயன்படுத்திக் கொள்ளவேண்டும். பவன்டொப் என்பாரைப் போலே ஜொர்ச் சாலே என்பவரும் பின்வருமாறு கூறுகிக்றார் முஹம்மத் என்பவர் சட்டத்தை வழங்குபவராக காணப்படுகின்றார். குர்ஆன் சிறந்த சட்ட வழிமுறைகளைக் காட்டுவதற்கும் உள்ளது.


ஜொரச் சாலேயின் மொழிபெயர்ப்பைக் கொண்ட குர்ஆனில் இன்னும் 150 வருடங்களுக்கு மேலாகவும் நிலைத்திருக்கக்கூடிய அதிசிறந்த ஆங்கில வாக்கியங்கள் காணப்படுகின்றன.இன்று காங்கிரஸ் நூல் நிலையத்தில் ஜெபர்சானின் குர்ஆனின் மூலப்பிரதியுடன் ஏறத்தாள ஒரு மில்லியன் இஸ்லாம் சம்பந்தமான பிரசுரங்கள் காணப்படுகின்றன.புதிய சட்ட வல்லுனர்கள்,மக்கள் போன்றோரின் தலைமறையினருக்கு அறிவை வழங்கும் பொக்கிஷங்களே இவைகள்.

YM
(Muslim Family Magazine)

Thursday, 2 October 2014

படிக்க வேண்டிய புத்தகம்

இமாம் கஸ்ஸாலியில் குறை காண்பவனுக்கு கசையடி கொடுக்க வேண்டும்.pdf


mg+ `hkpj; K`k;kj; gpd; K`k;kj; gpd; jhT]; m`;kj; mj;J}]p vd;gNj ,khk; f];]hypapd; KOg; ngau; MFk;.  vdpDk; mtu; f];]hyp vd;Nw miof;fg;gl;lhu;. jw;fhyj;jpy; Fuhrhd; gFjpapYs;s k\;`j; vd;W miof;fg;gLtJk; md;W J}]; vd;W miof;fg;gl;lJkhd gpuNjrj;Jf;F mUNfAs;s jg;uhdpy; cs;s f];]hy; vDk; fpuhkj;jpy; `p[;up 450/fp.gp.1059 ,y; gpwe;jhu;. mtuJ je;ij Mo;e;j ,iw gf;jpAilatu;. jdJ ifahy; cioj;Jg; ngw;w czit kl;LNk cl;nfhz;lhu;. ,iw Neru;fSld; jdJ Nehf;fj;ijf; fopj;jhu;. vdpDk; f];]hypapd; ,sikg; gUtj;jpy; ,iwab va;jpdhu;. mtu; ,wf;f Kd; f];]hypiaAk; mtuJ rNfhjuiuAk; tsu;f;Fk; nghWg;ig mtuJ ez;gu;fspy; xUtuhd ,iwNeru; (#gp) xUtuplk; xg;gilj;jpUe;jhu;. mtupd; Nkw;ghu;itapNyNa f];]hyp tsu;e;jhu;.

Wednesday, 1 October 2014

குர்பானி

துல் ஹஜ் மாதம் பத்தாம் நாளாகிய பெருநாள் அன்று காலை சூரியன் ஈட்டியின் அளவு வானத்தில் உயர்ந்த்திலிருந்து துல் ஹஜ் 13ஆம் நாள் சூரியன் மறைவதற்குள் அல்லாஹூக்காக ஆடு,மாடு,ஒட்டகங்களை அறுத்துப் பலியிடுவதற்கு குர்பானி என்று பெயர் .

இதே பொருளில்தான் உள்ஹிய்யஹ் என்ற வார்த்தை வழக்கில் உள்ளது. குர்பானி கொடுப்பதை ஒவ்வொரு வகுப்பினருக்கும் கடமையாக்கி . இருக்கின்றோம். (2234) என்று அல்லாஹூத்தாஆலா குறிப்பிடுகின்றான் .

ஆகவே தொன்று தொட்டு குர்பானி கொடுக்கும் வழக்கம் மக்களிடையே நிலவி வந்துள்ளது. என்பது உறுதியாகின்றது.

(நபியே!)உம் இறைவனை நீங்கள் தொழுது குர்பானியும் கொடுப்பீராக. (108-3) என்று அல்லாஹூத்தாஆலா கூறுகின்றான்.

ஹஜ்ஜூப் பெருநாள் அன்று குர்பானி கொடுப்பதை விட அல்லாஹூக்கு பிரியமான வேறு எந்தச் செயலும் இல்லை.

(குர்பானி கொடுக்கப்பட்ட)  பிராணிகள் மறுமை நாளில் அவைகள் கொம்புகளுடன் கால் குளம்புகளுடன் அவைகள் வந்தடையும். அறுக்கப்படும் பிராணிகளின் இரத்தம் புமியில் விழும் முன்பாகவே அல்லாஹ்விடம் அவை சென்றடைகின்றன.என நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.(திர்மிதி)

உள்ஹிய்யாஹ் கொடுப்பதால் எவ்வளவு நன்மைகளை நாங்கள் பெறுவோம்.என்று ஸஹாபாக்கள் வினவிய போது அதன்ஒவ்வோர் உரோமத்திற்கும்ஒருநன்மையுண்டு”
என்றுபெருமானார்ஸல்லல்லாஹூஅலைஹிவஸல்லம் அவர்கள்பதிலுரைத்தார்கள். (இப்னுமாஜஹ்)

ஆகவே ஹஜ்ஜூப் பெருநாள் மற்றும் துல் ஹஜ் 11,12,13, ஆகிய நாள்களில் தனக்கும்,தன்னிடமிருந்து ஜீவனாம்சம் பெறுபவர்களுக்கும் தேவையான செலவு போக,பணம் மீதியிருந்தால் மட்டும் குரபானி கொடுப்பது சுன்னத் முஅக்கதாவாகும்.

இவர்கள் அனைவருக்காகவும் ஒரேயொரு குர்பானி போதுமானதாகும். ஹஜ்ஜூப் பெருநாளன்று செய்யப்படும் தர்மங்களிலேயே குர்பானி கொடுப்பதுதான் சிறந்ததாகும்.வசதி வாய்ப்பு இருந்தும் குர்பானி கொடுக்காமலிருப்பது மக்ரூஹ் ஆகம்.  

குர்பானி கொடுப்பதன் சிறப்புக்கள்

வசதி இருந்தும் குர்பானி கொடுக்காதவருக்கு நபியவர்களின் எச்சரிக்கை:

யாருக்கு வசதி இருந்தும் குர்பானி கொடுக்கவில்லையோ அவர் நம்முடைய (ஈதுல் அழ்ஹா) தொழும் இடத்திற்கு வரவே வேண்டாம் என்று நமது நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.அறிவிப்பவர் ஹஸரத் அபூஹுரைரா (ரலி) நூல்: இப்னுமாஜா 323


குர்பானி கொடுப்பது இப்றாஹீம் (அலை) அவர்களின் வழிமுறை
யாரஸூலல்லாஹ் ‘உழ்கிய்யா’ என்றால் என்ன? என்று நபியவர் களிடம் சஹாபாக்கள் கேட்டார் கள். இது உங்களுடைய தந்தை இப்றாஹீம் (அலை) அவர்களின் வழிமுறை என்று சொன்னார்கள். மீண்டும் ஸஹாபாக்கள் யாரஸூலல்லாஹ் இதில் எங்களுக்கு என்ன (நன்மை) இருக்கிறது? என்று கேட்டார்கள்.

குர்பானி கொடுக்கப் படும் பிராணியின் ஒவ்வொரு முடிக்கும் நன்மை கிடைக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் பதில் சொன்னார்கள்.அறிவிப்பவர்: ஹஸ்ரத் ஜைதுப்னு அர்க்கம் (ரலி) நூல்:- இப்னு மாஜா 3127

              குர்பானி கொடுப்பது முஸ்லிம்களின் வழிமுறை

எவர் தொழுகைக்கு முன்பு (பிராணியை) அறுத்து விட்டாரோ அவர் தனக்காக வேண்டியே அறுத்துக் கொண்டார் எவர் தொழுக்கைக் குப் பின்பு அறுத்து விட்டாரோ அவருடைய குர்பானி பரிபூரணம் அடைந்துவிட்டது. மேலும் அவர் முஸ்லிம்களின் வழிமுறையைப் பெற்றுக்கொண்டு விட்டார் என நமது நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

அறிவிப்பவர்:- அஸ்ரத் அனஸ் (ரலி) நூல்:- புகாரி 5546, முஸ்லிம் 5069.

குர்பானியின் இரத்தத்திற்கு அல்லாஹ் இடத்தில் மதிப்பு உண்டு 
                   மற்றும் ஹஜ்ஜூப் பெருநாளில் சிறந்த அமல்

குர்பானி கொடுக்கும் நாளில் (ஈதுல் அழ்ஹா பெருநாளில்) மனிதர்கள் செய்யக் கூடிய அமல்களில் குர்பானி கொடுப்பதை விட அல்லாஹ்வுக்கு பிரியமான அமல் வேறு எதுவுமில்லை. பலியிடப்பட்ட அந்தப் பிராணி மறுமையில் அதனுடைய கொம்புகளோடும், முடிகளோடும், குளம்புகளோடும் வரும்.

மேலும் பலியிடப்பட்ட அந்தப் பிராணியின் இரத்தம் பூமியில் விடுவதற்கு முன்பே அல்லாஹ்வுடைய திருப்தியைப் பெற்று விடுகின்றது. எனவே சந்தோஷமாகக் கொடுங்கள்  என்று நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

அறிவிப்பவர்:- ஹஸ்ரத் அன்னை ஆயிஷா (ரலி) நூல்: இப்னுமாஜா 3126 திர்மிதி- 1493)

 குர்பான் கொடுக்கும் பிராணியில் கவணிக்கப்பட வேண்டியது
பல் முளைத்த ஆட்டை குர்பானி கொடுப்பது.குர்பானிக்காக பல் முளைத்த பிராணியையே அறுங்கள். அது உங்களுக்குக் கிடைக்காவிட்டால் 2 வயதுடைய செம்மறி ஆட்டை அறுங்கள் என்று எமது நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

அறிவிப்பவர்:- ஹஸரத் ஜாபிர் (ரலி) நூல்:- நஸாயீ 4383, முஸ்லிம் 5082, இப்னு மாஜா 3141

    கண்காது சரியாக உள்ள பிராணியை குர்பானி கொடுப்பது 

                                                       அவசியம்.
கண்ணிலும், காதிலும் (எதுவித மான குறையும் இல்லாத) பிராணியை குர்பானி கொடுக்க தேர்ந்து எடுக்க வேண்டும் என்றும் காதின் முன்பக்கம் கிழிக்கப்பட்டது. காதின் பின் பக்கம் கிழிக்கப்பட்டது. காது பிளக்கப்பட்டது. காதில் துவாரம் இடப்பட்டது ஆகிய பிராணிகளை குர்பானி கொடுக்கக் கூடாது என்றும் எங்களுக்கு நபிகள் பெருமானார் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் சொன்னார்கள்.


அறிவிப்பவர்:- ஹஸ்ரத் அலி (ரலியல்லாஹூ அன்ஹூ)             நூல்:- நஸயீ 4378   

   பிராணிகளை சித்திரவதை செய்யாத அளவுக்கு அறுப்பது

அல்லாஹ் ஒவ்வொரு காரியத்திலும் நல்ல வழிமுறையை ஏற்படுத்தி இருக்கிறான். எனவே (சட்ட திட்டத்திற்கு உட்பட்டு) நல்ல முறையில் கொல்லுங்கள். நீங்கள் அறுப்பதாக இருந்தால் நல்ல முறையில் அறுங்கள். (அறுப்பவர்) தன்னுடைய கத்தியை கூர்மையாக ஆக்கிக் கொள்ளட்டும். அறுபட இருக்கும் அந்த பிராணிக்கு நிம்மதி அளிக்கட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

அறிவிப்பவர்:- ஹஸ்ரத் ஷத்தாதுப்னு அவ்ஸ் (ரலி) நூல் நஸயீ 4417, மிஷ்காத் 357, 
முஸ்லிம் 5055

பிராணியை அறுக்கும் போது பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர்                        என்று சொல்வதும்  தம் கையால் அறுப்பதும்

பெருமானார் (ஸல்) அவர்கள் இரண்டு கறுப்பு, வெள்ளை செம்மறியாட்டு கடாக்களை குர்பானி கொடுத்தார்கள். அவர்கள் தமது பாதத்தை அவற்றின் பக்கவாட்டின் மீது வைத்துக் கொண்டு அல்லாஹ்வின் பெயர் கூறி தக்பீர் சொல்லி தன்னுடைய கையால் அறுத்தார்கள்.

அறிவிப்பவர்:- ஹஸ்ரத் அனஸ் (ரலி) நூல்:- திர்மிதி 1494

             கொம்பு உடைந்து போன பிராணியை குர்பானி 

                                             கொடுக்கக் கூடாது

கொம்பு உடைந்து போன பிராணியையும், காது அறுந்து போன பிராணியையும் குர்பானி கொடுக்கக் கூடாது என்று நமது நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

அறிவிப்பவர்:- ஹஸ்ரத் அலி (ரலி) நூல்:- இப்னு மாஜா 3545குல்பானி கொடுக்கக் கூடாத பிராணிகள்

                  குர்பான் கொடுப்பதற்கு தகுதி இல்லாத பிராணிகள்
நான்கு பிராணிகளை குர்பானி கொடுக்கக் கூடாது என்று சமது நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

1. குருட்டுத் தன்மை தெளிவாகத் தெரியும் குருட்டு பிராணி

2. தெளிவாகத் தெரியும் வியாதியுள்ள பிராணி

3. ஊனம் வெளிப்படையாகத் தெரியும் நொண்டி பிராணி

4. வயது முதிர்ந்த எழும்பு மச்சை பலவீனம் அடைந்த பிராணி.

அறிவிப்பவர்:- ஹஸ்ரத் பர்ரா இப்னு ஆஜிப் (ரலி) நூல்:- இப்னு மாஜா 3144ஒரு குடும்பத்திற்கு ஒரு ஆடு கொடுப்பது

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் குர்பானி கொடுப்பது எப்படி இருந்தது, என்று அபூ ஐயூப் (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு அவர்கள் ஒருவர் தமக்காகவும் தன் குடும்பத்துக்காகவும் ஓர் ,குர்பானி கொடுப்பார். அவர்களும் உண்பார்கள். பிறருக்கும் உண்ணக் கொடுப்பார்கள்.

அறிவிப்பவர்:- ஹஸ்ரத் அதா உப்னு யஷார் (ரலி) நூல்: திர்மிதி 1505 

   பெருமானாரின் வழிமுறையைப் பின்பற்றி இரண்டு ஆடு                                                    கொடுத்த ஸஹாபியர்கள்

நபி (ஸல்) அவர்கள் இரண்டு ஆடு கொடுத்தார்கள். நானும் இரண்டு ஆடு கொடுத்து வருகிறேன்.

அறிலிப்பவர்:- ஹஸ்ரத் அனஸ் (ரலி) நூல்:- 5553கூட்டுக் குர்பானி

நாங்கள் ஹுதைபியா ஆண்டில் ஏழு பேருக்காக ஒரு ஒட்டகத்தையும் ஏழு பேருக்காக ஒரு மாட்டையும் றஸூலுல்லாஹி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்களோடு குர்பானி கொடுத்தோம்.

அறிவிப்பவர்:- ஹஸ்ரத் ஜாபிர் (ரலியல்லாஹூ அன்ஹூ)    நூல்:- திர்மிதி 1502, அபூதாவுது 2809


குர்பானி பிராணியின் உறுப்புக்களை கூலியாகக் கொடுக்கக்                                                                     கூடாது

(குர்பானி பிராணியின்) ஒட்டகத்தைச் சரியாக பராமரிக்க வேண்டும் என்றும் அதை அறுத்ததற்கு கூலியாக அதிலிருந்து எதையும் கூலியாகக் கொடுக்கக் கூடாது என்றும் நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் எனக்கு கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர்:- ஹஸ்ரத் அலி (ரலியல்லாஹூ அன்ஹூ) நூல்:- புகாரி 1716குர்பானியில் விசேடமானது

குர்பானி கொடுப்பதில் செம்மறியாட்டில் 2 வருடம் பூர்தியான (கொழுப்புள்ள) குட்டி மிகவும் (விசேசமானது) நல்லது என்று நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் சொன்னார்கள்.

   அறிவிப்பவர்:- ஹஸ்ரத் அபூஹுரைரா (ரலியல்லாஹூ      அன்ஹூ) நூல்:- மிஷ்காத்.


                           குர்பானி இறைச்சியை சேமிக்கலாம்

உங்களில் குர்பானி கொடுப்பவர் 3 நாளைக்குப் பிறகு குர்பானி இறைச்சி வீட்டில் இருக்கும் நிலையில் காலை பொழுதை அடைய வேண்டாம் என்று நபியவர்கள் சொன்னார்கள். அடுத்தாண்டு வந்த பொழுது ஸஹாப்பாக்கள் யாரசூலுல்லாஹ் சென்ற ஆண்டு செய்வதைப் போல இந்த ஆண்டும் செய்யட்டுமா? என்று கேட்டார்கள்.கும் அதற்கு நபி (ஸல்) நீங்கள் குர்பானி இறைச்சியை சாப்பிடுங்கள் மற்றவர்களுக் உண்ணக் கொடுங்கள்.

சேமித்தும் வைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால், கடந்த ஆண்டு மக்களுக்கு சிரமம் ஏற்பட்டு இருந்தது. அந்த சிரமத்தைப் போக்க நீங்கள் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நான் விரும்பினேன் என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்:- ஹஸரத் சல்மா இப்னு அக்வாஉ (ரலி) நூல்:- புகாரி 5569

குர்பானி கொடுப்பவர் 10 நாளைக்கு கடைப்பிடிக்க 

வேண்டிய காரியம்

குர்பானி கொடுப்பவர்கள் துல்ஹஜ்ஜி உடைய 10 நாளைக்கு தன்னுடைய நகங்களை வெட்ட வேண்டாம் என்றும் தன்னுடைய (உடம்பிலுள்ள) முடிகள் எதையும் சிதைக்க வேண்டாம் என்றும் நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் சொன்னார்கள்.


அறிவிப்பவர் ஹஸ்ரத் அன்னை உம்மு சல்மா (ரலியல்லாஹூ அன்ஹா) நூல்:- நஸயீ 4367


உள்ஹிய்யா(குர்பான்)கொடுக்கப்பட்ட பிராணிகளை பயன் படுத்தும் முறை

உள்ஹிய்யா கொடுக்கப்பட்ட பிரணிகளின் முடிகளையோ தோல்களையோ மாமிசங்களையோ அறுத்தவருக்கு கூலியாக கொடுக்கக்கூடாது.குர்பானி கொடுப்பதற்கான ஒட்டகங்ளை மேற்பார்வை செய்வதற்கு என்னை நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் நியமித்தார்கள்.அவைகளின் மாமிசம் தோள் ஆகியவற்றை தர்ம்மாக கொடுக்க வேண்டும் என்றும் அவற்றில் எதையும் அறுப்பவருக்கு கூலியாக கொடுக்கக் கூடாது என்று கூறினார்கள்.அறுப்பவருக்கு கூலியை நாங்கள் தனியாகவே கொடுப்போம் என அலி றலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் கூறினார்கள்.

(புஹாரி-முஸ்லிம்)

                              பிராணிகளை நன்கு பராமரித்தல்
குர்பானுக்காகதயார்படுத்தும்பிராணியைநன்குபராமரித்துஉணவளித்துமாமிசமுள்ளபிராணியாகவளர்க்கவேண்டும்.

நாங்களும்ஏனையமுஸ்லிம்களும்மதீனாவில்குர்பானிப்பிராணியைகொழுக்கச்செய்வோம்”எனஅபூஉமாமா (ரலி) அறிவிக்கிறார்கள். (நூல் : புகாரி)

                                 தாமே அறுப்பது சுன்னத்தாகும்

உழ்ஹிய்யாக் கொடுப்பவர் அறுக்கத் தெரிந்தவராய் இருந்தால் – தனது பிராணியைத் தானே அறுத்தல் சுன்னத்தாகும். நபியவர்கள் – அல்லாஹ்விற்காக அல்லாஹ்வின் பெயர் கூறித் தக்பீர் மொழிந்து “இறைவா! எனக்காகவும், உழ்ஹிய்யாக் கொடுக்காத என் உம்மத்தினர்களுக்காகவும்” என்று கூறி ஓர் ஆட்டை அறுத்தார்கள். (அபூதாவூத், திர்மிதீ)

 
                              குர்பான் கொடுக்கும் போது ஓதும் துஆ

இன்னி வஜ்ஜஹ்து வஜ்ஹிய லில்லதி பதரஸ்ஸமாவாதி

வல் அர்ல ஹனீபவ் வமா அன மினல் முஷ்ரிக்கீன்

லாஷரீக்க லஹூ வபிதாலிக உமிர்த்து வஅன மினல்

முஸ்லிமீன்.அல்லாஹூம்ம ஹாதிஹி மின்க வலக பிஸ்மில்லாஹி அல்லாஹூ அக்பர்

                                குர்பான் கொடுத்த பின் ஓதும் துஆ           

அல்லாஹூம்ம தகப்பலஹா மின்னி கமா தகப்பல்த்த மின் கலீலிக இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் வமின் ஹபீபிக முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்

குர்பான்,உழ்கிய்யா,ஹஜ்ஜூப் பெருநாள்
குர்பான்,உழ்கிய்யா,ஹஜ்ஜூப் பெருநாள்




01-10-2014
ABU IZZA

ஜாமிஆ மன்பியல் ஹிதாயா அரபிக்கல்லூரி ஒரு கண்ணோட்டம்


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
கல்முனைநகர்
ஆசியாக்கண்டத்தின் இந்தியடலின் இடையே தொங்கி நிற்பதுதான் இலங்கைத் திருநாடு.இந்நாட்டில் சுமார் 80 வீதம் பௌத்தர்களும் 12வீதம் ஹின்ந்துக்களும் 8 வீதம் முஸ்லிம்களும் வாழ்கின்றனர். சிறுபான்மையிலும் சிறுபான்மையுள்ள முஸ்லிம்களில் மூன்றில் ஒரு பங்கினர் இக்கல்முனை நகர் அமைந்துள்ள கிழக்கு மாகாணத்தில்  வாழ்கின்றனர். அதிலும் விசேடமாக கிழக்கு மாகாணத்திலே இக்கல்முனை நகரம் அமைந்துள்ள அம்பாரை மாவட்டத்தில்தான் கூடுதலான மக்கள் வாழ்கின்றனர்.இம்மாவட்டத்தின் தென்கிழக்கின் தலைநகர் கல்முனை மாநகர். புனிதங்கள் புத்துக் குழுங்கும் இந்நகரின் கிழக்கே கடலும் மேற்கே பசுமை தரும் வயல் வெளியும் வடக்கே இஸ்லலாமாபாத் குடியேற்ற கிரமாமும் தேற்கே மகிமை தரும் மருதமுனையம் அமைந்திருப்பது சிறப்பம்சமாகும். 12 சதுர  கிலோமீட்டர் சுற்றளவைக் கொண்ட இந்நகரில்  சுமார் 60.000 மக்கள் வாழ்வதும் அவர்கள் அனைவரும் முஸ்லிம்கள் என்பதும் விசேட கொடையாகும்.
ஜாமிஆ மன்பயில் ஹிதாயா
ஏறக்குறைய 60000 முஸ்லிம்களைக் உள்ளடக்கிய கல்முனை மாநகரின் மார்க்க கல்வியின் தேவையையும் கடமைப்பாடுகளையும் உணர்ந்த எலமாக்களும்,கல்விமான்களும்,சமூக நலன் விரும்பிகளும்,பேருபகாரிகளும் ஒன்றினைந்து இவ் ஜாமிஆவை 16-09-1992 இல் ஆரம்பித்து ஏறக்குறைய 23 வருடங்களைக் கடந்து கால் நூற்றாண்டை எட்ட முயல்கின்றது.அன்று முதல் இன்று வரை பல சரமங்களுக்கு மத்தியில் மதிப்புக்குரிய அல் ஹாஜ் மீரசாஹிப் அவர்கள் தலைவராக செயல்படுவது இவ்ஜாமிஆவுக்கு கிடைத்த வரப்பிரசாதமாகும்.

இங்கு சரிஆப் பிரிவு , அரபு மொழி,படசாலைக்கல்வி,ஆங்கிலம்,கணனிப் பிரிவு போன்ற பாடநெரிகள்
போதிக்கப்படுகின்றன.விஷேடமாக திருகுர்ஆன் மனனப்பிரிவும் பிரத்தியோக ஒழுங்குடன் இயங்கி வருவதும் விஷேட அம்சமாகும். மூன்று மாடிகளைக் கொண்டு அமையப் பெற்ற இவ் ஜாமிஆவில் அனைத்து மாணவர்களுக்குமான தங்குமிட வசதி,உணவு,தொழுகைக்கான பள்ளிவாயல்,வகுப்புக்கள்,ஆசிரியர்கள் அறைகள் போன்றன அமையப் பெற்றுள்ளன.
காலை 8மணி முதல் 1.30 மணிவரை ஷரிஆ பாடநெறிகளும் பி. 3.30 தொடக்கம்6.30 மணிவரை  பாடசாலைக் கல்வியும் போதிக்கப்படுகின்றது.
அல்லாஹ்வின் உதவியுடன்  இவ்வாறான வசதிகளுடன் அமையப்பெற்றிருந்த ஜாமிஆ 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலையின் தாக்கத்திற்கு உள்ளாக்கபட்டு சிதைவடைந்த்து துரதிஸ்டவசமான நிகழ்வாகும்.
இந்நிகழ்வால் ஜாமிஆவின் சமையலறை,சாப்பாட்றை,குளியலறை,வாசிகசாலை போன்றன முற்றாக சேதமாக்கப்பட்டு விட்டன.மாரக்கத்தை போதிக்கின்ற ஒரு தனிப்பட்ட நிறுவனம் என்ற காரணத்தினால் அரசாங்கத்தின் ஊடாகவோ ,அன்றி வேறு பொது நிறுவனங்களின் ஊடாகவோ எவ்வித உதவிகளும் கிடைக்காமல் போனது ஜாமிஆவின் பௌதீக வளத்தை மேலும் சீர் குலைத்து விட்டது.
எனவே பேருபகாரிகளான உங்களிடமிருந்து உங்களால் முடியுமான உதவியை இந்த ஜாமிஆவின்
மாணவ சமூகத்திற்காகச் செய்து குறைகளை நிறைவு செய்ய முன் வருமாறு அல்லாஹ்வின்  பெயரால் கேட்கின்றோம்.மார்க்க கல்வியை கற்கின்ற இவ்ஏழை மாணவர்களுக்கு நீங்கள் செலவு செய்கின்ற ஒவ்வொரு ரூபாவும் ஸதகதுல் ஜாரிய்யாவாக பலமடங்கு கூலியை ஈருலகிலும் பெற்றுத் தரும் என்பது வாக்குறுதியாகும்.
இந்த மார்க்க்க் கல்வியை கற்றுக் கொள்ள தியாக உணர்வுடன் வரும் மாணவர்கள் சமூகத்தில் ஏழ்மையுடைய மாணவர்கள்தான் என்பது யாவரும் அறிந்த உண்மையே!
ஜாமிஆவின் நிழலில் ….
 01.மார்க்கக்கலவையை முஸ்லிம் மாணவர்களுக்குக் கற்று கொடுத்தல்.
02.அறபு மொழியைக் கற்பித்தல்
03.குர்ஆனை முழுமையாக மன்னம் செய்யும் ஹாபிழ்களை உருவாக்குதல்.
04.இஸ்லாமிய அழைப்பாளர்களை உருவாக்குதல்
05.முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமான ஷரிஆ விடயங்களையும்,கலை,கலாச்சார,பொருளாதாரம் போன்ற அனைத்து  விடயங்களையும்  இஸ்லாத்தின் பார்வையில் அறிந்து கொள்ள உதவக்கூடிய தளவாசிகசாலை ஒன்றை உருவாக்குதல்

ஜாமிஆவின் தற்போதைய அவசியத் தேவைகள்
01.சமையலறை,மாணவர்,ஆசியர்களுக்கான சாப்பாட்டறை
02.வாசிகசாலையும் அதற்குரிய கிதாபுகளும்
03.பிரத்தியோகமான கணனி வகுப்பறை
04.நிர்வாக அறை
05.மாணவர்களுக்கு உணவு வழங்குவதற்கும்,ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கும் போதிய நிதி
 வசதி இல்லாமையினால் இதனை நிவர்த்தி செய்வது அவசியமான அவசரமான தேவையாக உள்ளது.
நல்லுள்ளம் படைத்த உங்களிடம் ஜாமிஆவின் நிர்வாகம் எதிர்பார்ப்பதெல்லாம் இவ் ஏழை மாணவர்களின் நலனுக்காகவும் ஜாமிஆவின் வளர்ச்சிக்காகவும்,நீங்கள் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்பதாகும்.இவ்வாறு நீங்கள் செய்யும் உதவிகள் மறுமையில் மிஸான் தராசில் நன்மைகள் நிறுக்கப்படும் போது உங்கள் நன்மைகளை இரட்டிப்பாக்கித் தரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
எவர்கள் தங்களின் பொருட்களை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்கிறார்களோ அவர்களுக்கு உதாரணமாகிறது.ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்களைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கின்ற ஒரு வித்த்தைப் போன்றதாகும்.அல்லாஹ் தான் நாடியவர்களுக்க (இதனை இன்னும்) இரட்டிப்பாக்கின்றான்.அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்.முற்றும் அறிந்தவன்.(2-261)
ஜாமிஆவின் நிழலில் ….
ஷரிஆப்பிரிவு மாணவர்கள் -80
ஹிப்ழுப்பிரிவு மாண்ணவர்கள் -25
ஆசிரியர்களும் ஏனைய உதவியாளர்களும் -15

ஜாமிஆவின் பெறுபேறுகள்
v  G.C.E O/L
v  G.C.E A/L
அல்ஆலிம் சாதாரண,உயர்தரப் பரீட்சை போன்ற பரீட்சைகளுக்காக மாணவர்களைத் தயார் செய்தல்.




Tuesday, 16 September 2014

வினா விடை

  1. கருவிலிருந்து வெளிவராத (பிறக்காத ) உயிரினங்கள்:
  • ஆதம் (அலை)
  • ஹவ்வா (அலை)
  • மூஸா (அலை) அவர்களின் பாம்பு.
  • சாலிஹ் (அலை) அவர்களின் ஒட்டகம் 
  • இஸ்மாயீல் அலை அவர்களுக்காக அறுக்கப்பட்ட ஆடு.  
2. சொர்க்கத்தில் முதன்முதலாக வழங்கப்படும் உணவு : 
  • மீனுடைய ஈரல் 
3. அழிவு நாளின் பெரிய அடையாளங்களில் முதலாவது நிகழும் அடையாளம் :
  • பிரமாண்டமான நெருப்பு. அது பரவி மனிதர்களை கிழக்கிலிருந்து மேற்கு வரை விரட்டிச் செல்லும் 
4. சில குழந்தைகள் தந்தையின்  சாயலிலும் சில குழந்தைகள் தாயின்  சாயலிலும் பிறப்பதற்கு காரணம் :
கணவன் மனைவி இவருடைய இந்திரியத்தில் யாருடையது முந்திச் சென்று கர்ப்பப்பையில் விழுகிறதோ அவரது முகச் சாயலில் குழந்தை பிறக்கும் 
பதில் எழுதிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நாயன் நற்கூலி வழங்குவானாக!
Description: http://winmani.files.wordpress.com/2011/08/distance.jpg?w=450&h=435Eravur waleed