السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Wednesday 1 October 2014

ஜாமிஆ மன்பியல் ஹிதாயா அரபிக்கல்லூரி ஒரு கண்ணோட்டம்


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
கல்முனைநகர்
ஆசியாக்கண்டத்தின் இந்தியடலின் இடையே தொங்கி நிற்பதுதான் இலங்கைத் திருநாடு.இந்நாட்டில் சுமார் 80 வீதம் பௌத்தர்களும் 12வீதம் ஹின்ந்துக்களும் 8 வீதம் முஸ்லிம்களும் வாழ்கின்றனர். சிறுபான்மையிலும் சிறுபான்மையுள்ள முஸ்லிம்களில் மூன்றில் ஒரு பங்கினர் இக்கல்முனை நகர் அமைந்துள்ள கிழக்கு மாகாணத்தில்  வாழ்கின்றனர். அதிலும் விசேடமாக கிழக்கு மாகாணத்திலே இக்கல்முனை நகரம் அமைந்துள்ள அம்பாரை மாவட்டத்தில்தான் கூடுதலான மக்கள் வாழ்கின்றனர்.இம்மாவட்டத்தின் தென்கிழக்கின் தலைநகர் கல்முனை மாநகர். புனிதங்கள் புத்துக் குழுங்கும் இந்நகரின் கிழக்கே கடலும் மேற்கே பசுமை தரும் வயல் வெளியும் வடக்கே இஸ்லலாமாபாத் குடியேற்ற கிரமாமும் தேற்கே மகிமை தரும் மருதமுனையம் அமைந்திருப்பது சிறப்பம்சமாகும். 12 சதுர  கிலோமீட்டர் சுற்றளவைக் கொண்ட இந்நகரில்  சுமார் 60.000 மக்கள் வாழ்வதும் அவர்கள் அனைவரும் முஸ்லிம்கள் என்பதும் விசேட கொடையாகும்.
ஜாமிஆ மன்பயில் ஹிதாயா
ஏறக்குறைய 60000 முஸ்லிம்களைக் உள்ளடக்கிய கல்முனை மாநகரின் மார்க்க கல்வியின் தேவையையும் கடமைப்பாடுகளையும் உணர்ந்த எலமாக்களும்,கல்விமான்களும்,சமூக நலன் விரும்பிகளும்,பேருபகாரிகளும் ஒன்றினைந்து இவ் ஜாமிஆவை 16-09-1992 இல் ஆரம்பித்து ஏறக்குறைய 23 வருடங்களைக் கடந்து கால் நூற்றாண்டை எட்ட முயல்கின்றது.அன்று முதல் இன்று வரை பல சரமங்களுக்கு மத்தியில் மதிப்புக்குரிய அல் ஹாஜ் மீரசாஹிப் அவர்கள் தலைவராக செயல்படுவது இவ்ஜாமிஆவுக்கு கிடைத்த வரப்பிரசாதமாகும்.

இங்கு சரிஆப் பிரிவு , அரபு மொழி,படசாலைக்கல்வி,ஆங்கிலம்,கணனிப் பிரிவு போன்ற பாடநெரிகள்
போதிக்கப்படுகின்றன.விஷேடமாக திருகுர்ஆன் மனனப்பிரிவும் பிரத்தியோக ஒழுங்குடன் இயங்கி வருவதும் விஷேட அம்சமாகும். மூன்று மாடிகளைக் கொண்டு அமையப் பெற்ற இவ் ஜாமிஆவில் அனைத்து மாணவர்களுக்குமான தங்குமிட வசதி,உணவு,தொழுகைக்கான பள்ளிவாயல்,வகுப்புக்கள்,ஆசிரியர்கள் அறைகள் போன்றன அமையப் பெற்றுள்ளன.
காலை 8மணி முதல் 1.30 மணிவரை ஷரிஆ பாடநெறிகளும் பி. 3.30 தொடக்கம்6.30 மணிவரை  பாடசாலைக் கல்வியும் போதிக்கப்படுகின்றது.
அல்லாஹ்வின் உதவியுடன்  இவ்வாறான வசதிகளுடன் அமையப்பெற்றிருந்த ஜாமிஆ 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலையின் தாக்கத்திற்கு உள்ளாக்கபட்டு சிதைவடைந்த்து துரதிஸ்டவசமான நிகழ்வாகும்.
இந்நிகழ்வால் ஜாமிஆவின் சமையலறை,சாப்பாட்றை,குளியலறை,வாசிகசாலை போன்றன முற்றாக சேதமாக்கப்பட்டு விட்டன.மாரக்கத்தை போதிக்கின்ற ஒரு தனிப்பட்ட நிறுவனம் என்ற காரணத்தினால் அரசாங்கத்தின் ஊடாகவோ ,அன்றி வேறு பொது நிறுவனங்களின் ஊடாகவோ எவ்வித உதவிகளும் கிடைக்காமல் போனது ஜாமிஆவின் பௌதீக வளத்தை மேலும் சீர் குலைத்து விட்டது.
எனவே பேருபகாரிகளான உங்களிடமிருந்து உங்களால் முடியுமான உதவியை இந்த ஜாமிஆவின்
மாணவ சமூகத்திற்காகச் செய்து குறைகளை நிறைவு செய்ய முன் வருமாறு அல்லாஹ்வின்  பெயரால் கேட்கின்றோம்.மார்க்க கல்வியை கற்கின்ற இவ்ஏழை மாணவர்களுக்கு நீங்கள் செலவு செய்கின்ற ஒவ்வொரு ரூபாவும் ஸதகதுல் ஜாரிய்யாவாக பலமடங்கு கூலியை ஈருலகிலும் பெற்றுத் தரும் என்பது வாக்குறுதியாகும்.
இந்த மார்க்க்க் கல்வியை கற்றுக் கொள்ள தியாக உணர்வுடன் வரும் மாணவர்கள் சமூகத்தில் ஏழ்மையுடைய மாணவர்கள்தான் என்பது யாவரும் அறிந்த உண்மையே!
ஜாமிஆவின் நிழலில் ….
 01.மார்க்கக்கலவையை முஸ்லிம் மாணவர்களுக்குக் கற்று கொடுத்தல்.
02.அறபு மொழியைக் கற்பித்தல்
03.குர்ஆனை முழுமையாக மன்னம் செய்யும் ஹாபிழ்களை உருவாக்குதல்.
04.இஸ்லாமிய அழைப்பாளர்களை உருவாக்குதல்
05.முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமான ஷரிஆ விடயங்களையும்,கலை,கலாச்சார,பொருளாதாரம் போன்ற அனைத்து  விடயங்களையும்  இஸ்லாத்தின் பார்வையில் அறிந்து கொள்ள உதவக்கூடிய தளவாசிகசாலை ஒன்றை உருவாக்குதல்

ஜாமிஆவின் தற்போதைய அவசியத் தேவைகள்
01.சமையலறை,மாணவர்,ஆசியர்களுக்கான சாப்பாட்டறை
02.வாசிகசாலையும் அதற்குரிய கிதாபுகளும்
03.பிரத்தியோகமான கணனி வகுப்பறை
04.நிர்வாக அறை
05.மாணவர்களுக்கு உணவு வழங்குவதற்கும்,ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கும் போதிய நிதி
 வசதி இல்லாமையினால் இதனை நிவர்த்தி செய்வது அவசியமான அவசரமான தேவையாக உள்ளது.
நல்லுள்ளம் படைத்த உங்களிடம் ஜாமிஆவின் நிர்வாகம் எதிர்பார்ப்பதெல்லாம் இவ் ஏழை மாணவர்களின் நலனுக்காகவும் ஜாமிஆவின் வளர்ச்சிக்காகவும்,நீங்கள் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்பதாகும்.இவ்வாறு நீங்கள் செய்யும் உதவிகள் மறுமையில் மிஸான் தராசில் நன்மைகள் நிறுக்கப்படும் போது உங்கள் நன்மைகளை இரட்டிப்பாக்கித் தரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
எவர்கள் தங்களின் பொருட்களை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்கிறார்களோ அவர்களுக்கு உதாரணமாகிறது.ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்களைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கின்ற ஒரு வித்த்தைப் போன்றதாகும்.அல்லாஹ் தான் நாடியவர்களுக்க (இதனை இன்னும்) இரட்டிப்பாக்கின்றான்.அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்.முற்றும் அறிந்தவன்.(2-261)
ஜாமிஆவின் நிழலில் ….
ஷரிஆப்பிரிவு மாணவர்கள் -80
ஹிப்ழுப்பிரிவு மாண்ணவர்கள் -25
ஆசிரியர்களும் ஏனைய உதவியாளர்களும் -15

ஜாமிஆவின் பெறுபேறுகள்
v  G.C.E O/L
v  G.C.E A/L
அல்ஆலிம் சாதாரண,உயர்தரப் பரீட்சை போன்ற பரீட்சைகளுக்காக மாணவர்களைத் தயார் செய்தல்.