السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Wednesday 1 October 2014

குர்பானி

துல் ஹஜ் மாதம் பத்தாம் நாளாகிய பெருநாள் அன்று காலை சூரியன் ஈட்டியின் அளவு வானத்தில் உயர்ந்த்திலிருந்து துல் ஹஜ் 13ஆம் நாள் சூரியன் மறைவதற்குள் அல்லாஹூக்காக ஆடு,மாடு,ஒட்டகங்களை அறுத்துப் பலியிடுவதற்கு குர்பானி என்று பெயர் .

இதே பொருளில்தான் உள்ஹிய்யஹ் என்ற வார்த்தை வழக்கில் உள்ளது. குர்பானி கொடுப்பதை ஒவ்வொரு வகுப்பினருக்கும் கடமையாக்கி . இருக்கின்றோம். (2234) என்று அல்லாஹூத்தாஆலா குறிப்பிடுகின்றான் .

ஆகவே தொன்று தொட்டு குர்பானி கொடுக்கும் வழக்கம் மக்களிடையே நிலவி வந்துள்ளது. என்பது உறுதியாகின்றது.

(நபியே!)உம் இறைவனை நீங்கள் தொழுது குர்பானியும் கொடுப்பீராக. (108-3) என்று அல்லாஹூத்தாஆலா கூறுகின்றான்.

ஹஜ்ஜூப் பெருநாள் அன்று குர்பானி கொடுப்பதை விட அல்லாஹூக்கு பிரியமான வேறு எந்தச் செயலும் இல்லை.

(குர்பானி கொடுக்கப்பட்ட)  பிராணிகள் மறுமை நாளில் அவைகள் கொம்புகளுடன் கால் குளம்புகளுடன் அவைகள் வந்தடையும். அறுக்கப்படும் பிராணிகளின் இரத்தம் புமியில் விழும் முன்பாகவே அல்லாஹ்விடம் அவை சென்றடைகின்றன.என நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.(திர்மிதி)

உள்ஹிய்யாஹ் கொடுப்பதால் எவ்வளவு நன்மைகளை நாங்கள் பெறுவோம்.என்று ஸஹாபாக்கள் வினவிய போது அதன்ஒவ்வோர் உரோமத்திற்கும்ஒருநன்மையுண்டு”
என்றுபெருமானார்ஸல்லல்லாஹூஅலைஹிவஸல்லம் அவர்கள்பதிலுரைத்தார்கள். (இப்னுமாஜஹ்)

ஆகவே ஹஜ்ஜூப் பெருநாள் மற்றும் துல் ஹஜ் 11,12,13, ஆகிய நாள்களில் தனக்கும்,தன்னிடமிருந்து ஜீவனாம்சம் பெறுபவர்களுக்கும் தேவையான செலவு போக,பணம் மீதியிருந்தால் மட்டும் குரபானி கொடுப்பது சுன்னத் முஅக்கதாவாகும்.

இவர்கள் அனைவருக்காகவும் ஒரேயொரு குர்பானி போதுமானதாகும். ஹஜ்ஜூப் பெருநாளன்று செய்யப்படும் தர்மங்களிலேயே குர்பானி கொடுப்பதுதான் சிறந்ததாகும்.வசதி வாய்ப்பு இருந்தும் குர்பானி கொடுக்காமலிருப்பது மக்ரூஹ் ஆகம்.  

குர்பானி கொடுப்பதன் சிறப்புக்கள்

வசதி இருந்தும் குர்பானி கொடுக்காதவருக்கு நபியவர்களின் எச்சரிக்கை:

யாருக்கு வசதி இருந்தும் குர்பானி கொடுக்கவில்லையோ அவர் நம்முடைய (ஈதுல் அழ்ஹா) தொழும் இடத்திற்கு வரவே வேண்டாம் என்று நமது நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.அறிவிப்பவர் ஹஸரத் அபூஹுரைரா (ரலி) நூல்: இப்னுமாஜா 323


குர்பானி கொடுப்பது இப்றாஹீம் (அலை) அவர்களின் வழிமுறை
யாரஸூலல்லாஹ் ‘உழ்கிய்யா’ என்றால் என்ன? என்று நபியவர் களிடம் சஹாபாக்கள் கேட்டார் கள். இது உங்களுடைய தந்தை இப்றாஹீம் (அலை) அவர்களின் வழிமுறை என்று சொன்னார்கள். மீண்டும் ஸஹாபாக்கள் யாரஸூலல்லாஹ் இதில் எங்களுக்கு என்ன (நன்மை) இருக்கிறது? என்று கேட்டார்கள்.

குர்பானி கொடுக்கப் படும் பிராணியின் ஒவ்வொரு முடிக்கும் நன்மை கிடைக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் பதில் சொன்னார்கள்.அறிவிப்பவர்: ஹஸ்ரத் ஜைதுப்னு அர்க்கம் (ரலி) நூல்:- இப்னு மாஜா 3127

              குர்பானி கொடுப்பது முஸ்லிம்களின் வழிமுறை

எவர் தொழுகைக்கு முன்பு (பிராணியை) அறுத்து விட்டாரோ அவர் தனக்காக வேண்டியே அறுத்துக் கொண்டார் எவர் தொழுக்கைக் குப் பின்பு அறுத்து விட்டாரோ அவருடைய குர்பானி பரிபூரணம் அடைந்துவிட்டது. மேலும் அவர் முஸ்லிம்களின் வழிமுறையைப் பெற்றுக்கொண்டு விட்டார் என நமது நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

அறிவிப்பவர்:- அஸ்ரத் அனஸ் (ரலி) நூல்:- புகாரி 5546, முஸ்லிம் 5069.

குர்பானியின் இரத்தத்திற்கு அல்லாஹ் இடத்தில் மதிப்பு உண்டு 
                   மற்றும் ஹஜ்ஜூப் பெருநாளில் சிறந்த அமல்

குர்பானி கொடுக்கும் நாளில் (ஈதுல் அழ்ஹா பெருநாளில்) மனிதர்கள் செய்யக் கூடிய அமல்களில் குர்பானி கொடுப்பதை விட அல்லாஹ்வுக்கு பிரியமான அமல் வேறு எதுவுமில்லை. பலியிடப்பட்ட அந்தப் பிராணி மறுமையில் அதனுடைய கொம்புகளோடும், முடிகளோடும், குளம்புகளோடும் வரும்.

மேலும் பலியிடப்பட்ட அந்தப் பிராணியின் இரத்தம் பூமியில் விடுவதற்கு முன்பே அல்லாஹ்வுடைய திருப்தியைப் பெற்று விடுகின்றது. எனவே சந்தோஷமாகக் கொடுங்கள்  என்று நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

அறிவிப்பவர்:- ஹஸ்ரத் அன்னை ஆயிஷா (ரலி) நூல்: இப்னுமாஜா 3126 திர்மிதி- 1493)

 குர்பான் கொடுக்கும் பிராணியில் கவணிக்கப்பட வேண்டியது
பல் முளைத்த ஆட்டை குர்பானி கொடுப்பது.குர்பானிக்காக பல் முளைத்த பிராணியையே அறுங்கள். அது உங்களுக்குக் கிடைக்காவிட்டால் 2 வயதுடைய செம்மறி ஆட்டை அறுங்கள் என்று எமது நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

அறிவிப்பவர்:- ஹஸரத் ஜாபிர் (ரலி) நூல்:- நஸாயீ 4383, முஸ்லிம் 5082, இப்னு மாஜா 3141

    கண்காது சரியாக உள்ள பிராணியை குர்பானி கொடுப்பது 

                                                       அவசியம்.
கண்ணிலும், காதிலும் (எதுவித மான குறையும் இல்லாத) பிராணியை குர்பானி கொடுக்க தேர்ந்து எடுக்க வேண்டும் என்றும் காதின் முன்பக்கம் கிழிக்கப்பட்டது. காதின் பின் பக்கம் கிழிக்கப்பட்டது. காது பிளக்கப்பட்டது. காதில் துவாரம் இடப்பட்டது ஆகிய பிராணிகளை குர்பானி கொடுக்கக் கூடாது என்றும் எங்களுக்கு நபிகள் பெருமானார் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் சொன்னார்கள்.


அறிவிப்பவர்:- ஹஸ்ரத் அலி (ரலியல்லாஹூ அன்ஹூ)             நூல்:- நஸயீ 4378   

   பிராணிகளை சித்திரவதை செய்யாத அளவுக்கு அறுப்பது

அல்லாஹ் ஒவ்வொரு காரியத்திலும் நல்ல வழிமுறையை ஏற்படுத்தி இருக்கிறான். எனவே (சட்ட திட்டத்திற்கு உட்பட்டு) நல்ல முறையில் கொல்லுங்கள். நீங்கள் அறுப்பதாக இருந்தால் நல்ல முறையில் அறுங்கள். (அறுப்பவர்) தன்னுடைய கத்தியை கூர்மையாக ஆக்கிக் கொள்ளட்டும். அறுபட இருக்கும் அந்த பிராணிக்கு நிம்மதி அளிக்கட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

அறிவிப்பவர்:- ஹஸ்ரத் ஷத்தாதுப்னு அவ்ஸ் (ரலி) நூல் நஸயீ 4417, மிஷ்காத் 357, 
முஸ்லிம் 5055

பிராணியை அறுக்கும் போது பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர்                        என்று சொல்வதும்  தம் கையால் அறுப்பதும்

பெருமானார் (ஸல்) அவர்கள் இரண்டு கறுப்பு, வெள்ளை செம்மறியாட்டு கடாக்களை குர்பானி கொடுத்தார்கள். அவர்கள் தமது பாதத்தை அவற்றின் பக்கவாட்டின் மீது வைத்துக் கொண்டு அல்லாஹ்வின் பெயர் கூறி தக்பீர் சொல்லி தன்னுடைய கையால் அறுத்தார்கள்.

அறிவிப்பவர்:- ஹஸ்ரத் அனஸ் (ரலி) நூல்:- திர்மிதி 1494

             கொம்பு உடைந்து போன பிராணியை குர்பானி 

                                             கொடுக்கக் கூடாது

கொம்பு உடைந்து போன பிராணியையும், காது அறுந்து போன பிராணியையும் குர்பானி கொடுக்கக் கூடாது என்று நமது நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

அறிவிப்பவர்:- ஹஸ்ரத் அலி (ரலி) நூல்:- இப்னு மாஜா 3545குல்பானி கொடுக்கக் கூடாத பிராணிகள்

                  குர்பான் கொடுப்பதற்கு தகுதி இல்லாத பிராணிகள்
நான்கு பிராணிகளை குர்பானி கொடுக்கக் கூடாது என்று சமது நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

1. குருட்டுத் தன்மை தெளிவாகத் தெரியும் குருட்டு பிராணி

2. தெளிவாகத் தெரியும் வியாதியுள்ள பிராணி

3. ஊனம் வெளிப்படையாகத் தெரியும் நொண்டி பிராணி

4. வயது முதிர்ந்த எழும்பு மச்சை பலவீனம் அடைந்த பிராணி.

அறிவிப்பவர்:- ஹஸ்ரத் பர்ரா இப்னு ஆஜிப் (ரலி) நூல்:- இப்னு மாஜா 3144ஒரு குடும்பத்திற்கு ஒரு ஆடு கொடுப்பது

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் குர்பானி கொடுப்பது எப்படி இருந்தது, என்று அபூ ஐயூப் (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு அவர்கள் ஒருவர் தமக்காகவும் தன் குடும்பத்துக்காகவும் ஓர் ,குர்பானி கொடுப்பார். அவர்களும் உண்பார்கள். பிறருக்கும் உண்ணக் கொடுப்பார்கள்.

அறிவிப்பவர்:- ஹஸ்ரத் அதா உப்னு யஷார் (ரலி) நூல்: திர்மிதி 1505 

   பெருமானாரின் வழிமுறையைப் பின்பற்றி இரண்டு ஆடு                                                    கொடுத்த ஸஹாபியர்கள்

நபி (ஸல்) அவர்கள் இரண்டு ஆடு கொடுத்தார்கள். நானும் இரண்டு ஆடு கொடுத்து வருகிறேன்.

அறிலிப்பவர்:- ஹஸ்ரத் அனஸ் (ரலி) நூல்:- 5553கூட்டுக் குர்பானி

நாங்கள் ஹுதைபியா ஆண்டில் ஏழு பேருக்காக ஒரு ஒட்டகத்தையும் ஏழு பேருக்காக ஒரு மாட்டையும் றஸூலுல்லாஹி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்களோடு குர்பானி கொடுத்தோம்.

அறிவிப்பவர்:- ஹஸ்ரத் ஜாபிர் (ரலியல்லாஹூ அன்ஹூ)    நூல்:- திர்மிதி 1502, அபூதாவுது 2809


குர்பானி பிராணியின் உறுப்புக்களை கூலியாகக் கொடுக்கக்                                                                     கூடாது

(குர்பானி பிராணியின்) ஒட்டகத்தைச் சரியாக பராமரிக்க வேண்டும் என்றும் அதை அறுத்ததற்கு கூலியாக அதிலிருந்து எதையும் கூலியாகக் கொடுக்கக் கூடாது என்றும் நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் எனக்கு கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர்:- ஹஸ்ரத் அலி (ரலியல்லாஹூ அன்ஹூ) நூல்:- புகாரி 1716குர்பானியில் விசேடமானது

குர்பானி கொடுப்பதில் செம்மறியாட்டில் 2 வருடம் பூர்தியான (கொழுப்புள்ள) குட்டி மிகவும் (விசேசமானது) நல்லது என்று நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் சொன்னார்கள்.

   அறிவிப்பவர்:- ஹஸ்ரத் அபூஹுரைரா (ரலியல்லாஹூ      அன்ஹூ) நூல்:- மிஷ்காத்.


                           குர்பானி இறைச்சியை சேமிக்கலாம்

உங்களில் குர்பானி கொடுப்பவர் 3 நாளைக்குப் பிறகு குர்பானி இறைச்சி வீட்டில் இருக்கும் நிலையில் காலை பொழுதை அடைய வேண்டாம் என்று நபியவர்கள் சொன்னார்கள். அடுத்தாண்டு வந்த பொழுது ஸஹாப்பாக்கள் யாரசூலுல்லாஹ் சென்ற ஆண்டு செய்வதைப் போல இந்த ஆண்டும் செய்யட்டுமா? என்று கேட்டார்கள்.கும் அதற்கு நபி (ஸல்) நீங்கள் குர்பானி இறைச்சியை சாப்பிடுங்கள் மற்றவர்களுக் உண்ணக் கொடுங்கள்.

சேமித்தும் வைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால், கடந்த ஆண்டு மக்களுக்கு சிரமம் ஏற்பட்டு இருந்தது. அந்த சிரமத்தைப் போக்க நீங்கள் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நான் விரும்பினேன் என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்:- ஹஸரத் சல்மா இப்னு அக்வாஉ (ரலி) நூல்:- புகாரி 5569

குர்பானி கொடுப்பவர் 10 நாளைக்கு கடைப்பிடிக்க 

வேண்டிய காரியம்

குர்பானி கொடுப்பவர்கள் துல்ஹஜ்ஜி உடைய 10 நாளைக்கு தன்னுடைய நகங்களை வெட்ட வேண்டாம் என்றும் தன்னுடைய (உடம்பிலுள்ள) முடிகள் எதையும் சிதைக்க வேண்டாம் என்றும் நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் சொன்னார்கள்.


அறிவிப்பவர் ஹஸ்ரத் அன்னை உம்மு சல்மா (ரலியல்லாஹூ அன்ஹா) நூல்:- நஸயீ 4367


உள்ஹிய்யா(குர்பான்)கொடுக்கப்பட்ட பிராணிகளை பயன் படுத்தும் முறை

உள்ஹிய்யா கொடுக்கப்பட்ட பிரணிகளின் முடிகளையோ தோல்களையோ மாமிசங்களையோ அறுத்தவருக்கு கூலியாக கொடுக்கக்கூடாது.குர்பானி கொடுப்பதற்கான ஒட்டகங்ளை மேற்பார்வை செய்வதற்கு என்னை நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் நியமித்தார்கள்.அவைகளின் மாமிசம் தோள் ஆகியவற்றை தர்ம்மாக கொடுக்க வேண்டும் என்றும் அவற்றில் எதையும் அறுப்பவருக்கு கூலியாக கொடுக்கக் கூடாது என்று கூறினார்கள்.அறுப்பவருக்கு கூலியை நாங்கள் தனியாகவே கொடுப்போம் என அலி றலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் கூறினார்கள்.

(புஹாரி-முஸ்லிம்)

                              பிராணிகளை நன்கு பராமரித்தல்
குர்பானுக்காகதயார்படுத்தும்பிராணியைநன்குபராமரித்துஉணவளித்துமாமிசமுள்ளபிராணியாகவளர்க்கவேண்டும்.

நாங்களும்ஏனையமுஸ்லிம்களும்மதீனாவில்குர்பானிப்பிராணியைகொழுக்கச்செய்வோம்”எனஅபூஉமாமா (ரலி) அறிவிக்கிறார்கள். (நூல் : புகாரி)

                                 தாமே அறுப்பது சுன்னத்தாகும்

உழ்ஹிய்யாக் கொடுப்பவர் அறுக்கத் தெரிந்தவராய் இருந்தால் – தனது பிராணியைத் தானே அறுத்தல் சுன்னத்தாகும். நபியவர்கள் – அல்லாஹ்விற்காக அல்லாஹ்வின் பெயர் கூறித் தக்பீர் மொழிந்து “இறைவா! எனக்காகவும், உழ்ஹிய்யாக் கொடுக்காத என் உம்மத்தினர்களுக்காகவும்” என்று கூறி ஓர் ஆட்டை அறுத்தார்கள். (அபூதாவூத், திர்மிதீ)

 
                              குர்பான் கொடுக்கும் போது ஓதும் துஆ

இன்னி வஜ்ஜஹ்து வஜ்ஹிய லில்லதி பதரஸ்ஸமாவாதி

வல் அர்ல ஹனீபவ் வமா அன மினல் முஷ்ரிக்கீன்

லாஷரீக்க லஹூ வபிதாலிக உமிர்த்து வஅன மினல்

முஸ்லிமீன்.அல்லாஹூம்ம ஹாதிஹி மின்க வலக பிஸ்மில்லாஹி அல்லாஹூ அக்பர்

                                குர்பான் கொடுத்த பின் ஓதும் துஆ           

அல்லாஹூம்ம தகப்பலஹா மின்னி கமா தகப்பல்த்த மின் கலீலிக இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் வமின் ஹபீபிக முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்

குர்பான்,உழ்கிய்யா,ஹஜ்ஜூப் பெருநாள்
குர்பான்,உழ்கிய்யா,ஹஜ்ஜூப் பெருநாள்




01-10-2014
ABU IZZA