السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Wednesday, 24 June 2015

நோன்பு தரும் ஆரோக்கியம்

معجزات شهر رمضان على جسم الانسان
ஆரோக்கியம் என்பதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் (WHOˆ) வழங்கியுள்ள வரைவிலக்கணத்தின்படி ஒருவன் தனது உடல், உள, சமூக மற்றும் ஆன்மீக ரீதியாக அவனது அன்றாட வாழ்வின் நாளாந்த செயற்பாடுகளுக்கு இடையூறற்றவனாக அமையும்போது மாத்திரமே சுகதேகியாகிறான்.
நோன்பானது சமிபாடடைவதற்கு செலவழிக்கின்ற சக்தியை சேமித்து, உடலின் ஏனைய அனு சேபச் செயற்பாடுகளுக்கு அதனை வழங்கி, உடலின் மற்றைய அனைத்து உறுப்புக்களினதும் நஞ்சகற்றல் செயற்பாட்டை தூண்டி, உடலை சுத்தப்படுத்தி திசுக்கள் மற்றும் அங்கங்களை மறுசீரமைக்கின்றது.
லீன் ஞதேவ் எனும் அறிஞர் தனது இயற்கை மாற்றீடுகள்எனும் புத்தகத்தில் ‘நோன்பானது உடலின் இயற்கை நோயெதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தும் உடற்பாகங்களை தூண்டி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது. மேலும், பக்டீரிய எதிர்ப்பு இரத்தக் கலங்களை அவற்றினது திறனில் பல மடையச் செய்கிறது’ எனக் குறிப்பிடுகிறார்.
மேலும், சமிபாட்டுத் தொகுதி ஓய்வெடுக்கும்பொழுது- அதன் உள்வெளி உறையான சீதப்பகுதி- நமது பிழையான உணவுப் பழக்க வழக்கங்களால் பாதிப்புற்றிருந்தால், அதனை மீள ஒழுங்கமைத்துக் கொள்ள ஒரு அவகாசமாய் பயன்படுத்தும்.
அவற்றுடன் உடலின் நஞ்சகற்றும் பிரதான அங்கமாகிய ஈரற் கலங்களும் ஊக்கப்படுத்தப்படும். மேலும் சிறுநீரகம், பெருங் குடல் என்பன இரத்தத்தை சுத்தப்படுத்தும் வேலையை வழமையை விட திறனுடனும் உத்வேகத்துடனும் நோன்பின்போது செய்யும்.. இச் செயற்பாடுகள் உடலில் மேலதிகமாக தேங்கி இருக்கின்ற நீரை அகற்றுவதற்கும், உடலில் படிந்திருக்கின்ற கொழுப்பை கரைப்பதற்கும், குருதிக் கலன்களில் படிந்திருக்கின்ற மேலதிக கொலஸ்ட்ரோல் போன்ற உடலுக்கு பாதிப்பான நஞ்சுகள் அனைத்தும் உடலில் இருந்து வெளியேற்றப்படவும் ஏதுவா அமையும்.
இன்று எம்மை ஆட்டிப் படைக்கும், நீரிழிவு, கொலஸ்ட்ரோல், உயர் குருதி அழுத்தம்போன்றமோசமான நோய்களுக்கு நோன்பு வருமுன் காக்கும் கேடயமாகவே அமைகிறது.
நோன்பை சரியான முறையில் நோற்கும்போது உடல் சம்பந்தமாகவும், உணவுப் பழக்கங்கள் பற்றியும் கவனிக்கத்தக்க விடயங்கள் சிலவற்றைப் பார்ப்போம்.
நோன்பு காலங்களில் பிரதான உணவு வேளைகள் இரண்டோடு மட்டும் போதுமாக்கிக் கொள்வதே நோன்பின் அடிப்படை நோக்கத்தை அடைவதற்கு ஏற்றதாகும். ஸஹர், இப்தார் என்பனவே அவை. ஸஹரை நாம் கட்டாயம் உட்கொண்டே ஆக வேண்டும். ஸஹர் நேரத்தில் குறிப்பாக எமது நாட்டைப் பொறுத்தவரை வழமையான உணவை (சோற்றை) உன்பதில் தவறில்லை.
ஆனாலும் பாரமற்ற உணவுகளை தெரிவு செய்வதே உகந்ததாகும். சலாது வகைகள், மரக்கறிகள்,பழங்கள் மற்றும் பால் சார்ந்த பொருட்களை உட்கொள்ளலாம். எமது அடிப்படை “எதுவும் அளவுக்கு அதிகமாகக் கூடாது” என்பதே. அளவுக்கு அதிகமாக உண்பவர்களுக்கு நோன்பு பகல் நேரம் கடினமானதாகவும் அசதி நிறைந்ததாகவுமே காணப்படும்.
இப்தார் நேரத்தில் பேரீத்தம் பழமும் பாலும் பாவிப்பதே சிறந்ததாகும். பேரீத்தம் பழம் உடனடி சக்தியை வழங்குவதோடுவிட்டமின் A, B, மக்னீசியம், பொட்டாசியம், பொஸ்பரஸ் போன்றவற்றைக் கொண்டுள்ளது. மேலும் நார்ச் சத்தும் காணப்படுவதால் மலச்சிக்கலை நீக்குவதோடு, கொலஸ்ட்ரோலையும் குறைக்கவல்லது.
பாலில் பல உயிர்ச்சத்துக்கள் அடங்கியுள்ளதோடு, கொழுப்பையும் கொண்டிருப்பதால் பேரீத்தம் பழத்தின் சீனி உறிஞ்சப்படுவதை தாமதப்படுத்தி, இரத்த குருதி குளுக்கோஸின் அளவை சமநிலையில் வைத்திருக்கும்.
ரஸூல் (ஸல்) அவர்களின் இப்தார் பாலும், பேரீத்தம் பழமாகவுமே அமைந்திருந்தது என்பது வியக்கத்தக்கது..அத்தோடு மரக்கறி சூப்புகளையும் சலாதுகளையும் இப்தாரில் சேர்த்துக் கொள்வது சிறப்பானது. எமது நாட்டில் வழக்கத்தில் காணப்படும் ‘கஞ்சி’ சிறப்பான, இலகுவில் சமிபாடடையக் கூடிய பாரமற்ற உணவாகும்.ஆனால், இன்று கஞ்சி உடலுக்கு தீங்கு பயக்கும் அளவை அடைந்து விட்டது கவலைக்குரியது. மிகக் குறைந்த தேங்காய்ப் பாலுடன் மேலும் எண்ணெய், கொழுப்பு குறைத்து அதிக திரவத் தன்மையுடைய கஞ்சியை வரவேற்கலாம்.
மேலும், மேற்குறிப்பிட்ட பலன்களை ரமழானில் அடைய வேண்டுமாயின், அதிக எண்ணெய்யில் பொரித்த மற்றும் ஃபாஸ்ட் ஃபூட் எனப்படும் கடைகளில் விற்கப்படும் தின் பண்டங்களை இயன்றளவு தவிர்ப்பதே சிறந்தது. இரவு நேரம் முழுவதிலும் குறைந்தது 1.5 லீற்றர் நீரையாவது அருந்துவது நல்லது.
இப்தாருக்குப் பின் உடனடியாகத் தூங்க வேண்டாம். முடியுமாயின் சிறிது தூரம் காலாற நடப்பது மிகச் சிறந்ததாகும். உண்மையான முறையில் அதிகம் உண்ணாமல் நீங்கள் நோன்பு நோற்பீர்களாயின், உங்களது உடலில் நஞ்சகற்றப்படுவதற்கான இயல்பான சில அறிகுறிகளை நோன்பின் ஆரம்ப நாட்களில் உணர்வீர்கள்.
குறிப்பாக தலைவலி, அசதி மற்றும் வாய் நாற்றம் என்பன ஏற்படுவதானது, உங்களது உடலில் நஞ்சகற்றல் இடம்பெறுகிறது என்பதற்கான இயல்பான அடையாளங்களாகும். அதிக நீர் மற்றும் பாணங்களை அருந்துவதன் மூலம் இவற்றிலிருந்து மீளலாம்.
அடுத்து மனிதனது உள, சமூக மற்றும் ஆன்மீக ஆரோக்கியத்தில் நோன்பு மிக வெளிப்படையாக பாரிய பங்காற்றுகிறது. மனிதன் தான் விரும்பும் அனைத்தையும் விட்டு விடுவதும், தனிமையிலும் அவற்றை அனுபவிக்காது விடுவதும், அவனது உள்ளத்தில் நாட்ட சக்தி அதிகரிப்பையே காட்டி நிற்கிறது.
மேலும், நோன்பின் ஒழுக்கங்களைப் பேணி நோன்பை நோற்கும்போது, மற்ற மனிதர்களது சமூக உறவைப் பாதிக்கின்ற பொய், புறம், கோள் சொல்லல், வசைபாடல் போன்ற சகல துர்ச் செயல்களிலிருந்தும் விடுபடுகிறான். அத்துடன் அடுத்த மனிதனால் விரும்பப்படுகின்ற, சமூக ஒழுங்கைப் பாதிக்காத ஒருவனாக மாறுகிறான். இவற்றின் மூலம் உள, சமூக நோய்களிலிருந்து அவன் பாதுகாக்கப்படுகின்றான்.
ரமழானைத் தொடர்ந்து வரும் காலங்களிலும், சமூகத்திற்கு ஏற்ற பிரஜையாக வாழ பயிற்றுவிக்கப்படுகிறான். மேலும், ஏழைகளின் பசியை உணர்தல், இல்லாதவர்களுக்கு தனது செல்வத்திலிருந்து வாரி வழங்குதல் போன்ற சமூக பொருளாதார சமநிலையை நோக்கிய சமூக மாற்றத்திற்கும் வழிகாட்டப்படுகிறான்.இவற்றோடு இரவு முழுவதும் நின்று வணங்குதல், பகல் முழுவதும் திலாவத் போன்ற அளப்பரிய நண்மைக்குரிய காரியங்களை அதிகமதிகம் செய்வதன் ஊடாக, ஆன்மீக ரீதியான ஆரோக்கியத்தின் உச்சத்திற்கே சென்று விடுகிறான்.

Sunday, 21 June 2015

இது எதன் அடையாளம்?

eravurஇது எதன் அடையாளம்?

இது எதன் அடையாளம்?
குஜராத் உமர்காம் பகுதியை
அடுத்துள்ள தாஹ்னு ரோட் எனும்
ஊரில் இக்குழந்தை பிறந்துள்ளது.
இப்போது கீழுள்ள வசனங்களை
முழுமையாக வாசித்து விட்டு
ஏனையோர்க்கும் பகிரவும்..
ﻓَﻜَﻴْﻒَ ﺗَﺘَّﻘُﻮﻥَ ﺇِﻥ ﻛَﻔَﺮْﺗُﻢْ ﻳَﻮْﻣًﺎ ﻳَﺠْﻌَﻞُ ﺍﻟْﻮِﻟْﺪَﺍﻥَ ﺷِﻴﺒًﺎ
நீங்கள் (இதனை) நிராகரித்துவிட்
டால், எவ்வாறு நீங்கள் (நம்முடைய
பிடியிலிருந்து) தப்பித்துக்
கொள்வீர்கள்? (நாம் பிடிக்கும்)
அந்நாளில் (திடுக்கம்) சிறு
குழந்தைகளையும் நரைத்தவர்களாக
ஆக்கிவிடும்.
(அல்குர்ஆன்: 73:17)
முழு விபரம்>>
(ஸஹீஹுல் புகாரி: 6530. Book: 7)

Brothers&Sisters இதை முழுமையாக படியுங்கள்

Eravur

மகள் தான் புதிதாக வாங்கிய I Phoneயை தனது தந்தையிடம் காட்டுவதற்காக வருகிறார்.
அவள் அந்த Phone-ற்கு வெளியுறையும் (cover) , Screen card-ம் கூட வாங்கி போட்டுள்ளார்
தந்தை : இந்த போன் எவ்ளோமா??
மகள் : Rs 40,000 அப்பா
தந்தை : இந்த கவர் மற்றும் ஸ்கிரீன் கார்டுக்கு என்ன விலை??
மகள் : Rs 4000 தான் அப்பா
தந்தை : என்னது நாலாயிரமா??
மகள் : ஆமாம் அப்பா. 40,000-க்கு phone வாங்கி இருக்கோம் அது பத்திரமா இருக்க 4000 செலவு பன்றதுல என்ன இருக்கு??
இதெல்லாம் ஒரு பிரச்சனையா??
தந்தை :ஏமா 40,000-க்கு போன் வாங்கிருக்க அது பத்திரமா இருக்க அதை தயாரித்தவர்கள் எந்த பாதுகாப்பும் செய்யாமலேயேவா வித்தாங்க??
நாம அதுக்கு வேற தனியா செய்து கொள்ள வேண்டுமா?
?மகள் : என்னப்பா?? அவங்க போன் தயாரித்து தான் குடுப்பாங்க அதை நாமதான் பத்திரமா வைத்துக் கொள்ளணும். அது மட்டும் இல்லப்பா பாருங்க இந்த கவர் போட்டதும் போன் இன்னும் எவ்ளோ அழகா இருக்கு??
இந்த ஸ்கிரீன் கார்டு போன்-ல கீறல் விழாம பாத்துக்கும் அப்பா

தந்தை : அப்படியா??
ஏம்மா நீ இந்த phone-யை விட எவ்வளவு அழகா இருக்க??
இந்த போன்-ஐ பாதுகாக்கிறியே
ஏன் மா உன்னை பாதுகாக்க மாட்டேங்கிற??
நான் உன்னை உன் உடலை மறைக்குமாறு உடை போடச் சொல்லிக் கொண்டே இருக்கேன். நீ போடவே மாட்டேங்கிற??
இந்த போன விட நீ விலைமதிப்பு இல்லாதவளா நூ இது உனக்கு தெரியவில்லையா??
இந்த கவர் போட்டதும் போன் எவ்வளவு அழகா இருக்கு ஆனா நீ முழுமையான உடை அணிந்தால் இன்னும் எவ்வளவு அழகா இருக்கும்??
அது தீய பார்வைகள் உன்னை தீண்டாமல் பார்த்துக் கொள்ளும் அல்லவா??
யாரோ ஒருவர் தயாரித்த இந்த தயாரிப்பிற்கே நீ இவ்வளவு பாதுகாப்பு தர நினைக்கும் போது
எல்லாம் வல்ல இறைவன் படைத்த என் மகளான உன்னை நான் பாதுகாக்க வேண்டாமா??
இந்த phone-ஐ விட நீதான் பொக்கிஷமானவள் முதலில் முழுமையான உடை போட்டு உன்னை பாதுகாத்து கொள் என்று கூறினார்.
இந்த தந்தையின் அறிவுரை அவரது மகள் போன்ற உங்கள் அனைவருக்கும் தேவை. எனவே தான் இதை இங்கே பதிவு செய்கிறேன்.
"நிலவின் அழகானது மேகங்கள் அதை மூடி மறைத்து வைத்திருப்பதால்தன் அழகு அதிகரிக்குமே தவிர சிறிதும் குறையாது , அதுபோல ஒரு பெண்ணின் அழகு என்பது போன்றவற்றால் அதிகரிக்குமே தவிர குறையாது. இதைபுரிந்து நடந்து கொள்ளுங்கள் சகோதரிகளே. சகோதரர்களும் உங்கள் வீட்டு பெண்களிடம் கூறி புரிய வையுங்கள்.

முஸ்லிம் வீரரின் வரலாற்றையும் தேச பக்தியையும் தாங்கி நிற்கும் 1000 ரூபா தாள்

Eravur panikkar

எங்களில் எத்தனை பேருக்கு தெரியும் ஆயிரம் (இலங்கை) ரூபாய் நாணயத்தாளில் பிரசுரிக்கப்பட்டுள்ள யானையுடன் பக்கத்தில் தொப்பி அணிந்து காணப்படுபவருக்கு பின்னால் ஒரு ஆச்சரியமான கதை உண்டென்று யாருக்காவது கற்பனை பண்ணமுடியுமா அந்த யானையும் அதனருகே தொப்பி அணிந்து நிற்கும் மனிதனும் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்கள் என்றும் அந்த மனிதன் ஒரு முஸ்லிம் என்றும் ஆம் அந்த கொம்பன் யானையும் மனிதனும் கிழக்குமாகாணத்தை சேர்ந்தவர்களே.
அந்த மனிதர் மாட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஏறாவூர் என்ற இடத்தை சேர்ந்த உமறு லெப்பை பணிக்கர்; அந்த நாணயத்தாளிலுள்ள கொம்பன் யானை 1925ம் ஆண்டு ஏறாவூர் காட்டுபகுதியில் பிடிக்கப்பட்டு வளர்க்கப்பட்டதாகும்.
உமர் லெப்பை பணிக்கர் இந்த கொம்பன் யானையை தலதா மாளிகாவுக்கு அன்பளிப்பாக கொடுத்தார். சிறிது காலத்திற்குள் அந்த யானை அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாகவும் அது அங்கிருந்து ஏறாவூருக்கு அவரை (உமர் லெப்பை பனிக்கரை) தேடிச் சென்றதாக சொல்லப்படுகிறது. அந்த யானையை மீண்டும் அங்கிருந்து அவர் மீண்டும் தலதா மாளிகாவுக்கு கொண்டு வந்து கொடுத்தார்.
ஜனாதிபதி ஜே .ஆர். ஜெயவர்த்தனா அந்த கொம்பன் யானையின் நீண்ட கால சேவைக்காக அதனை கவுரவிக்கும் முகமாக யானையை தேசிய சொத்தாக பிரகடணப்படுத்தினார்.ராஜா என்று பெயரிடப்பட்ட இந்த கொம்பன் யானை கண்டியில் எசல பெரஹர பவனிகளின் போது அலங்கரித்தமைக்காக தேசிய பிரபலம் பெற்றதுடன் தேசிய ரீதியிலும் கவுரவிக்கப்பட்டது.
தலதா மாளிகாவையில் சேவையாற்றிய கொம்பன் யானை ராஜா தனக்கு மட்டுமல்ல தன்னை அன்பளிப்பு செய்த நபருக்கும் அவரது கிராமாமான ஏறாவூருக்கும் பிரபலத்தையும் கவுரவத்தையும் கொண்டு வந்து ஐம்பது வருடங்களுக்கு மாளிகாவையில் சேவையாற்றி 15 ஜூலை 1988ல் இறந்துபோனது.
அதன்பிறகு ஆட்சியிலுள்ள அரசு தலதா மாளிகாவுக்கு அந்த கொம்பன் யானையை தலதா மாளிகை பெற்றுக்கொள்ள காரன‌மான நபரை கவுரவிக்கவேண்டும் என்று தீர்மானித்தார்கள் , அதற்காக அந்த கொம்பன் யானையையும் அதற்கருகில் உமர் லெப்பை பணிக்கரையும் ஆயிரம் ரூபாய் தாளில் அச்சிட்டு வெளியிடப்பட்டது. இதன் மூலம் ஏறாவூர் கிராமமும் கவுரமும் பெற்றது. இப்போதும் இவ்வாயிரம் ரூபாய் புழக்கத்தில் இருந்து வருகிற‌து.
காடுகளில் யானையை பிடித்து வளர்த்து பாரமான பொருட்கள் மூலப்பொருட்கள் என்பவற்றை எடுத்துச்செல்லும் அல்லது இடம் பெயரச் செய்யும் தொழிலில் ஈடுபட்டிருக்கும் மக்களுக்கு விற்கின்றவர்களே பணிக்கர் எனப்படுகின்றனர் என்று சொல்லப்படுகிறது.
அவர்களின் சந்ததியினர் இன்றும் “பணிக்கர் தத்தி” அல்லது “பணிக்கர் கத்தற” (பணிக்கர் குடும்பத்தினர் அல்லது பரம்பரை) என்று ஏறாவூரில் அடையாளப்படுத்தப்படுகின்றனர்.
ஏறாவூரில் அவர்களின் பெயரால் பணிக்கர் வீதி என்று ஒரு வீதி ஏறாவூரில் உள்ளது
எழுச்சியும், வீழ்ச்சியும்ஆரம்பம்

கடல் பிளந்த உண்மை சம்பவத்தின் அதிர்ச்சி தரும் தடயங்கள் கண்டுபிடிப்பு - (முழுவதையும் படித்து பாருங்கள் )




கடல் பிளந்த உண்மை சம்பவத்தின் அதிர்ச்சி தரும் தடயங்கள் கண்டுபிடிப்பு - (முழுவதையும் படித்து பாருங்கள் )

மூஸா (அலை) அவர்களும் அவரின் கூட்டத்தினரும் பிரவ்னின் கொடுமைகளில் இருந்து தப்பிப்பதற்கு செங்கடல் வழியாக வெளியேறியதும், மூஸா (அலை) அவர்களின் கூட்டத்திற்கு மாத்திரம் இரண்டாக பிளந்து வழிவிட்ட கடல் பிரவ்னின் கூட்டத்தை முழ்கடித்ததும் நாம் அறிந்ததே!! இது குரானின் அத்தாட்சியாகும்.

செங்கடல் என்பது பல நூறு மைல்கள் நீளமானதும் எண்ணைதாங்கி கப்பல்கள் பயணம் செய்யும் அளவு ஆழமான கடல். எகிப்து முதல் எதியோப்பியா வரையான நாடுகளின் கிழக்கு எல்லையாகயும், சவூதி அரேபியா, ஏமன் போன்றவற்றின் மேற்கு எல்லையாகவும் செங்கடல் இருக்கிறது. இதில் மூன்று குடாக்கள் காணப்படுகின்றன. சுயஸ் குடா (Gulf of Sues) ,அகபா குடா (Gulf of Aqaba) மற்றும் ஏடன் குடா (Gulf of Adan).

இவ்வளவு நீளமான செங்கடலின் எந்த இடத்தில் கடல் பிளவுபட்டு மூஸா(அலை) அவர்களின் கூட்டத்திற்கு வழிவிடப்பட்டது என்ற கேள்வி பலஆண்டுகளாக அகல்வாராய்ச்சியாலர்கள் மத்தியில் இருந்ததுவந்தது. ஒவ்வொரு பகுதியையும் ஆராய்ச்சி செய்து வந்தபோது, அகபா குடாவின் ஒரு இடத்தில் இருகரைகளும் தொடர்ச்சியான கற்குன்றுகளாக இருந்தபோதும் ஒரேயொரு இடத்தில் மாத்திரம் இருகரைகளிலும் அசாதாரணமான மண்மேடுகள் காணப்படுவதை ரான் வையாத் என்ற ஆய்வாளர் அவதானித்தார். ஒரு கரை சவுதியின் பக்கமும் மற்றைய கரை எகிப்தின் பக்கமும் இருந்தது. இதில் எகிப்தின் பக்கம் இருக்கும் கடற்கரை நுவைபா (Nuweiba Beach) என்று அழைக்கபட்டது. இந்த இரண்டு இடங்களையும் மையமாக வைத்து அதை சுற்றியுள்ள கடலிலும் கரையிலும் ஆராய்ச்சி செய்தபோது அதிசயிக்கத்தக்க பல தடயங்களை கண்டுபிடிக்கப்பட்டது.

கடலின் அடியில் மூழ்கடிக்கப்பட்ட பிரவ்னின் கூட்டத்தின் வண்டிகளின் சக்கரங்கள், ஆயுத தளபாடங்கள் மற்றும் எலும்பு கூடுகள் இருந்த அதேவேளை அந்த குறிப்பிட்ட இடம் மட்டும் ஆழம் குறைந்த நிலையில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இங்கு இணைக்கப்பட்டிருக்கும் படங்களில் அவற்றை காணலாம். இவற்றில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கத்திலான சில சக்கரங்கள் சவூதி நூதனசாலையில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

அதேநேரம் கடலில் ஆராய்ச்சியை முடித்து விட்டு பார்த்தால், எகிப்தின் நுவைபா கடற்கரையிலும், அதற்கு நேரான சவுதியின் கரையிலும் கிரனைடிலான உயர்ந்த இரு தூண்கள் காணப்பட்டன.பல வருட தேடலின் பின்னர் தற்போதுதான் கடல் பிளந்த இடத்தை நாம் கண்டுபிடித்து இருக்கும் போது, இந்த இடத்தில் இதற்கு முன்னர் இந்த தூண்களை உருவாக்கியது யார், எதற்கு என்ற ஆச்சரியமான கேள்விகள் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் மூளையை குடைந்ததது . பின்னர் அந்த அதிசய தூணை ஆராய்ச்சிக்கு உட்படுத்தி, அதில் இருந்த பழைய அரமைக் மற்றும் ஹிப்ரு எழுத்துக்களை கொண்டு அது பெரும்பாலும் சுலைமான் (அலை) அவர்களால் கடல் பிளந்த அதிசய இடத்தை அடையாளம் காணும் வகையில் உருவாக்கியிருக்கலாம் என்று அறியப்பட்டது. சில வருடங்களுக்கு முன்னர் சவூதி அரேபியா தனது பக்கம் இருந்த தூணை அகற்றிவிட்டு அந்த இடத்தில் கொடிகம்பம் ஒன்றை நாட்டி இருக்கிறது. எனினும் எகிப்தின் நுவைபா கடற்கரையில் இருக்கும் தூண் தற்போதும் கம்பீரமாக நிற்கின்றது .

ஸியாரத்தின் போது அண்ணலாரின் சிறப்புக் கபுறை முன்னோக்கலாமா?

ஸியாரத்தின் போது அண்ணலாரின் சிறப்புக் கபுறை முன்னோக்கலாமா?

ஸியாரத்தின் போது அண்ணலாரின்
சிறப்புக் கபுறை முன்னோக்கலாமா?
சவூதி அரேபியா ஏடு தீர்ப்பு.
இன்றைய வஹ்ஹாபி இயக்கத்தின்
நம்மூர் தொண்டர்கள் ஸியாரத்தும்,
துஆவும் கூடாது என்று கூறி
ஆதாரத்திற்கு மேல் ஆதாரங்களை
அள்ளி வீசுங்கின்றனர்.
ஆனால், வஹ்ஹாபிசம் தோன்றிய
சவுதி மண்ணின் மைந்தர்கள்
அதற்கு மாறான தீர்ப்பினை
வழங்குகின்றனர்.
“அக்பாருல் ஆலமில் இஸ்லாமி“
என்பது சவூதியிலிருந்து வெளிவரும்
ஒரு வாரப் பத்திரிகை!
சவுதி அரசின் அங்கீகாரம் பெற்ற
ராபிதத்துல் ஆலமில் இஸ்லாமி
என்ற அமைப்பின் அதிகாரப்
பூர்வமான வார இதழ் அது!
அந்த அக்பாருல் ஆலமில் இஸ்லாமி
இதழின் மண்ணறையை
முன்னோக்குதல் என்ற தீர்ப்பு
ஒன்று வெளியாகியுள்ளது.
அதனை அப்படியே மொழி
பெயர்த்து கீழே தந்துள்ளோம்.
அண்ணலார் ஸல்லல்லாஹு
அலைஹிவஸல்லம் அவர்களின்
கப்ரை ஸியாரத் செய்கிறபோது
கிப்லாவை முன்னோக்கி நின்றுதான்
நாடியவற்றை இறைவனிடம்
கேட்பது சுன்னத்தா? அல்லது
முதுகை கிப்லாவின் பக்கம் திருப்பி
கப்ரை முன்னோக்கி நின்று
துஆ செய்வது சுன்னத்தா?
இந்தக் கேள்விக்கு ராபிதத்துல்
ஆலமில் இஸ்லாமி என்ற அமைப்பின்
அடிப்படை உறுப்பினரும்,
முன்னாள் எகிப்து முப்தியுமான
பெரியார் ஹுஸைன் முஹம்மது
மக்லூப் சொல்கிறார்.
மாலிக் ரழியல்லாஹு அன்ஹு
அவர்களின் றாவிகளில் ஒருவரான
இப்னு ஹமீது என்பவர் மூலமாக
கிதாபுஷ் ஷிபா என்ற நூலில்
காழி இயாழ் அறிவிக்கின்றார்கள்.
அபூஜஃபர் மன்ஸுர் நாழிர் என்பவர்
பெருமானாருடைய பள்ளிவாசலை
பரிபாலனம் செய்து வந்தார்.
அவருக்கு மாலிக் ரஹ்மத்துல்லாஹி
அலைஹி அவர்கள் சொன்னார்கள்.
“அமீறுல் முஃமினீன்!
இந்தப் பள்ளிவாசலில் உமது
சப்தத்தை உயர்த்த வேண்டாம்.
ஏனெனில், அல்லாஹ் ஒர்
கூட்டத்திற்கு ஒழுக்கத்தைக்
கற்றுக்கொடுக்கும் முகமாக
இவ்வாறு கூறுகிறான்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அவர்களுடைய
சப்தத்தைவிட உங்களுடைய
சப்தத்தை உயர்த்த வேண்டாம்.
உங்களில் சிலர், சிலரிடம்
சப்தமிட்டுப் பேசுவதைப் போன்று
அண்ணலாரிடம் சப்தமுயர்த்திப்
பேச வேண்டாம். அப்படிச் செய்தால்
உங்கள் அமல்கள் அழிந்துவிடும்.
அதனை நீங்கள் அறிந்து
கொள்ளமாட்டீர்கள். என்றும்,
(அல்குர்ஆன்-49 : 02)
ஒரு கூட்டத்தாரை புகழுமுகமாக
இறைவன், “நிச்சயமாக எவர்
அல்லாஹ்வுடைய தூதரின் முன்
மரியாதையாக தங்களது குரலைத்
தாழ்த்திக் கொள்கின்றாரோ
அத்தகையோருடைய இதயத்தைப்
பரிசுத்தப்படுத்துவதற்காக
இறைவன் சோதனை செய்தான்.
அவர்களுக்கு மன்னிப்பும்,
மகத்தான கூலியும் உண்டு“
(அல்குர்ஆன்-49 : 03)
ஒரு கூட்டத்தினரை
இகழ்வதற்காக இறைவன்,
“எவர்கள் உம்மை தங்களது
அறைகளுக்கு பின் நின்று உரக்கக்
கூவி அழைக்கின்றாரோ அவர்களில்
பெரும்பான்மையானோர்
அறிவில்லாதவர்களே!
என்றும் கூறுகின்றான்.
(அல்குர்ஆன் -49:04)
நிச்சயமாக அவர்கள் மறைந்த
பின்னர் கொடுக்கப்படக்கூடிய
மரியாதை, கண்ணியம் அன்னார்
உயிரோடிருக்கும்போது
அவர்களுக்கு கொடுக்கக்கூடிய
கண்ணியத்தையும், மரியாதையையும்
போன்றதே! என மாலிக்
ரஹ்மத்துல்லாஹி அலைஹி
அவர்கள் கூறினார்கள்.
அதற்கு அபூஜஃபர்,
அபூ அப்துல்லாஹ்!
நான் ஸியாரத்து செய்த பின்
கிப்லாவை முன்னோக்கி
நின்று துஆச் செய்யட்டுமா?
அல்லது ரஸூல் ஸல்லல்லாஹு
அலைஹிவஸல்லம் அவர்களை
முன்னோக்கி நிற்கட்டுமா?எனக்
கேட்க, இமாம் மாலிக் சொன்னார்கள்
உனது முகத்தை அண்ணலார்
ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்
அவர்களை விட்டுத் திருப்பாதே!
அன்னார் உனக்கு இறைவனிடத்து
வஸீலாவாக இருக்கிறார்கள்.
உனது தந்தை ஆதமுக்கும்
வஸீலாவாக இருக்கிறார்கள்
அவர்களையே நீ முன்னோக்கு!
அவர்களைக் கொண்டே ஷபாஅத்
தேடு! அல்லாஹ் உமது விஷயத்தில்
அண்ணலாரைக் கொண்டே
ஷபாஅத் அருள்வான்
இறைவன் சொல்கின்றான்.
“அவர்கள் தமக்குத்தாமே
தீங்கிழைத்துக் கொண்ட நேரத்தில்
உம்மிடம் வந்து அல்லாஹ்விடம்
பாவமன்னிப்புத் தேடினால்
அல்லாஹ்வை பிழைபொறுப்
போனாகவும், அருள் புரிபவனாவும்
பெற்றுக் கொள்வார்கள்”
(அல்குர்ஆன் -04 : 64)
ஷிஹாபுல் கிபாஜி தமது நூலில்
கூறுகிறார், ஸலாம் சொல்வதற்காகவும்
அண்ணலாரின் புனிதக் கப்ரை
முன்னோக்குதலே விரும்பத்தக்கது
என்பது இமாம் மாலிக், அஹ்மது,
ஷாபிஈ ரழியல்லாஹு அன்ஹும்
ஆகியோரது மத்ஹபாகும்.
அவர்களுடைய நூற்களில்
இது குறித்துத் தெளிவாகக்
கூறப்பட்டுள்ளது.
இமாம் நவவி ரஹ்மத்துல்லாஹி
அலைஹி அவர்கள் தமது அத்கார்,
ஈளாஹ் எனும் நூற்களில் இது
குறித்து தெளிவுபடுத்தி உள்ளார்கள்.
ஷாபிஈ ரழியல்லாஹு அன்ஹு
அவர்களிடமிருந்து இமாம் சுப்கீ
ரஹ்மத்துல்லாஹி அலைஹி
சொல்கிறார்கள்.
“ஸியாரத் செய்கிறபோது கப்று
சரீபை பின்னோக்கி கப்றின்
தலைப் பகுதிக்கு 4அடித்
தூரத்தில் நின்று நபி ஸல்லல்லாஹு
அலைஹிவஸல்லம் அவர்களுக்கும்
சற்று அகன்று அபூபக்கர் ரழியல்லாஹு
அன்ஹு பின்னர் உமர் ரழியல்லாஹு
அன்ஹு அவர்களுக்கும் ஸலாமுரைத்து
விட்டு முதலில் நின்ற இடத்திற்கு
வந்து கப்றை முன்னோக்கிதான்
நாடியவைகளை துஆச் செய்வான்!“.
இவ்வாறே இமாம் அபூ ஹனீபா
ரழியல்லாஹு அன்ஹு அவர்களின்
மத்ஹபிலும் காணப்படுகின்றது.
பத்ஹுல் கதீர் என்ற நூலிலிருந்தும்
கமால் அவர்களும் இவ்வாறே
எடுத்துரைக்கிறார்கள்.
பதாவா ஹிந்திய்யா
(பதாவா ஆலம் கீரி)விலும்
இப்படித்தான் பதிவு செய்யப்
பட்டுள்ளது.
லைஸ் ரஹ்மத்துல்லாஹ் அவர்களும்
இப்னு தைமிய்யாவும் துஆ
ஓதும்போது கிப்லாவை முன்னோக்க
வேண்டுமென்கின்றனர்.
காழி இயாழ் ரஹ்மத்துல்லாஹி
அலைஹி போன்ற மார்க்க மேதைகள்
இதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
அல்லாஹ் மிக அறிந்தவன்.
(பதாவா ஷர்இய்யா வ
புஹுஸ்னைன் மக்லூப்)
வஹ்ஹாபியக் கொள்கையில்
ஊறித் திளைத்த ராபிதாவின்
அடிப்படை உறுப்பினர் ஒருவர்
அண்ணல் நபி ஸல்லல்லாஹு
அலைஹிவஸல்லம் அவர்கள்
நமக்கும் நமது ஆதி தந்தை
ஆதம் அலைஹிஸ்ஸலாம்
அவர்களுக்கும் வஸீலாவாக
அமைந்துள்ளனர் என்பதை
ஏற்பதோடு, தமது பத்வாவிற்கு
ஆதாரமாக இமாம்களுடையதும்,
அவர்களது மத்ஹபுகளை பின்பற்றிய
அறிஞர் பெருமக்களதும் கருத்துக்களை
எடுத்து வைக்கின்றார்.
இந்தியப் பெரு நாட்டின்
அறபியரல்லாதவர்களால்
தொகுக்கப்பட்ட பதாவா ஆலம்
கீரியை ஆயிரக் கணக்கான
மைல்களுக்கு அப்பாலும் அறபி
மேற்கோளுக்காக எடுத்துரைக்கிறார்.
ஆனால் அதே பதாவா ஆலம்
கீரியை மொஙலாய மன்னர்களைத்
திருப்திப்படுத்துவதற்காக எழுதப்பட்டது
என்றும் கரங்கூசாது எழுதுகின்றனர்
நம்மூர் பேதையர்கள்.
வழி தவறிய வஹாபிகள் இடத்திற்கும்
நேரத்திற்கும் தகுந்தாற்போல்
பேசுவதில் வல்லவர்கள்.
அதனால் நம் பகுதியில் உள்ள
அரைகுறை அரைவேக்காட்டு
வேதாந்திகளை தூராக்கிவிட்டு
தூய இஸ்லாத்தில் நடந்திட
அல்லாஹ் அருள் புரிவானாக