السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Sunday 28 June 2015

P.J ஒரு முர்தத் என்று தமிழ் நாடு ஜமாஅத்துல் உலமாசபை பத்வா வெளியிட்டுள்ளது

P.J ஒரு முர்தத் என்று தமிழ் நாடு ஜமாஅத்துல் உலமாசபை பத்வா வெளியிட்டுள்ளது


ஒரு முர்தத் என்று தமிழ் நாடு ஜமாஅத்துல் உலமாசபை பத்வா வெளியிட்டள்ளது

இஸ்லாமிய கொள்கைக்கு எதிராக எழுதியும், பேசியும், பிரச்சாரங்கள் செய்தும் முஸ்லிம் சமுதாய மக்களை வழிகெடுத்து வருகிறது TNTJ என்னும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என்னும் ஒரு வஹாபி இயக்கம். அந்த அமைப்பின் ஸ்தாபகர் PJ எனும் பி.ஜெயனுலாப்தீன்.
.
இந்த கூட்டம் கடந்த சில ஆண்டுகளாக இஸ்லாத்துக்கும், அல்குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் மாற்றமாக பேசி வருகின்றனர். 
.
மேலும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம், சஹாபாக்கள், இமாம்கள், இறைநேசர்கள் போன்ற இஸ்லாமிய பெரியார்களை கேவலமாக பேசியும் எழுதியும் வருக
ின்றார்கள்.
.
இவர்களின் பித்னா (குழப்பம்) அதிகரிக்கவே தமிழ்நாட்டு முஸ்லிம்கள் இவர்களுக்கு எதிராக சமீபத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்கள். மேலும் இந்த வழிகேடர்களை தடை செய்யுமாறு கூறி தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபைக்கு அழுத்தம் கொடுத்து வந்தார்கள்.
.
எனவே, முஸ்லிம்களின் கோரிக்கைக்கு இணங்கி, PJ எனும் பி.ஜெய்னுலாப்தீனின் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களை திரட்டி, 16-06-2015 ஆம் திகதி தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் அவசர ஆலோசனை கூட்டத்தில் சமர்பிக்க 8 பேர் கொண்ட உலமாக்கள் குழு நியமிக்கப்பட்டது.
.
இதற்காக 8 பேர் கொண்ட தமிழ்நாட்டின் புகழ்பெற்ற உலமாக்கள் குழு நியமிக்கப்பட்டது. அவர்களின் விபரங்கள்:
.
1. மௌலவி அப்லளுள் உலமா ஷெய்க் அப்துல்லாஹ் (ஜமாலி) M.A சென்னை
.
2. மௌலவி அன்வர் பாதுஷா (உலவி) M.A, M.Phil, Phd.
.
3. மௌலவி சைபுதீன் (ரஷாதி) பெங்களூர்
.
4. மௌலவி காஜா மொஹினுத்தீன் (பாகவி) மேலப்பாலயம்
.
5. மௌலவி சதீதுத்தீன் (பாகவி) M.A Phil. சென்னை
.
6. மௌலவி அப்துல் அஸீஸ் (பாகவி) கோவை.
.
7. மௌலவி நீடூர் இஸ்மாயில் (பாகவி)
.
8. மௌலவி ஹமித் பக்ரி (மன்பஈ) காயல்பட்டிணம்
.
இந்த 8 பேர் கொண்ட உலமாக்கள் குழு சமர்ப்பித்த அறிக்கையை ஆய்வு செய்த தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை கீழ்காணும் தீர்மானத்தை நிறைவேற்றியது:
.
"(TNTJ) தமிழ்நாடு தௌஹீத் ஜமாத் அமைப்பின் அமைப்பாளர் P.J என்பவர் இஸ்லாமிய கொள்கைக்கு விரோதமான பிரச்சாரங்களில் ஈடுபட்டு இஸ்லாமிய சமுதாய மக்களை வழிகெடுத்து வரும் காரணத்தால் இவர் இஸ்லாத்தை விட்டும் நீங்கி விட்டார்" என்று இச்சபை அறிவித்து "இவரை பின்பற்றியோர் தவ்பா செய்து (பாவமன்னிப்பு) தேடி மீள வேண்டும்" என இச்சபை பத்வா (மார்க்க தீர்ப்பு) வெளியிட்டுள்ளது.
.
குறிப்பு: இச்செய்தியை உலகிலுள்ள அனைத்து தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கு அறிவிக்கும்படியும், இந்த வழிகெட்ட கூட்டத்தாரையும் அதன் ஸ்தாபகர் PJ என்பவரை பற்றியும் முஸ்லிம்களுக்கு தெரிவித்து, முஸ்லிம்களின் ஈமானை பாதுக்காக்க உதவுமாறும் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை கேட்டுள்ளது.

SEE MORE FULL


P.J ஒரு முர்தத் என்று தமிழ் நாடு ஜமாஅத்துல் உலமாசபை பத்வா வெளியிட்டுள்ளது