السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Monday, 6 November 2023

முற்றாக அழித்த பலஸ்தீன போராளிகள்

 


98 கோடி ரூபா பெறுமதி வாய்ந்த படைகாவி கவசவாகனத்தை ஒன்றரை இலட்சம் பெறுமதி கொண்ட ரொக்கட்டைப் பயன்படுத்தி முற்றாக அழித்த பலஸ்தீனப் போராளிகள்


காலாற்படை வீரர்களை யுத்த களத்துக்கு நகர்த்தும் முழுமையாக மூடப்பட்ட 'PANTHER' கவசவாகனமொன்றின் விலை மூன்று மில்லியன் டொலர்களாகும் (இலங்கை விலை 98 கோடி ரூபா). 


உலகத்தில் காணப்படும் மிகப் பாதுகாப்பான படைகாவி கவசவாகனங்களில் ஒன்றாக PANTHER படைகாவி கருதப்படுகிறது. 


அமெரிக்கத் தயாரிப்பான இந்த கவசவாகனத்தை 2019 இல் இஸ்ரேல் மேம்படுத்த ஆரம்பித்தது.  2021 ஆம் ஆண்டு முதல் இஸ்ரேல் தனது இராணுவ சேவையில் அதனை ஈடுபடுத்தி வருகிறது. 


2023 ஒக்டோபர் கடைசியில் PANTHER படைகாவி கவச வாகனம் காஸாவினுள் தரைவழியாக நுழைய முற்பட்ட வேளை போராளிகளின் தாக்குதலுக்கு உள்ளாகியது. கொர்னெட் வகை ரொக்கட்டைப் பயன்படுத்தி அந்த கவசவாகனத்தை போராளிகள் சுக்கு நூறாக்கினர். இதனால் அதனுள்ளிருந்த 11 இஸ்ரேலிய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். 


ஆயுத சந்தையில் இஸ்ரேலுக்கு நற்பெயரைத் தேடித் தந்த பல்வேறு ஆயுத தளபாடங்கள் பலஸ்தீனப் போராளிகளினால் அழிக்கப்பட்டுள்ளதால் பொருளாதார ரீதியாக இஸ்ரேல் மேலும் பின்னடையும் என கருதப்படுகிறது.


சுற்றி வர அதி நவீன கமராக்கள் பொருத்தப்பட்ட இந்த கவசவாகனத்தின் மேலும் சில சிறப்பம்சங்கள். 


- தேவையான நேரத்தில் எதிரிகளை குறிபார்த்து சுடுவதற்கு வசதியாக பல துளைகளைக் கொண்டிருக்கிறது. 


- 20 படைவீரர்களை காவிச் செல்லக்கூடியது.


- 900 குதிரைவலு சக்தி கொண்டது


- மணித்தியாலத்திற்கு 70 வேகத்தில் பயணிக்கக்கூடியது


- ஒரு படைகாவியின் நிறை பத்தாயிரம் கிலோவாகும் (பத்து டொன்)


- 60 மில்லிமீற்றர் அளவு கொண்ட பீரங்கி தளத்தை கொண்டுள்ளது.


- குண்டுகள் மற்றும் துப்பாக்கிகளை போதுமானளவு வைத்திருப்பதற்கான சேமிப்பகத்தையும் கொண்டுள்ளது

Monday, 19 December 2022

வருடாந்த கந்தூரிவிழா

 

மஃஆனிமுல்_முஸ்தபா_அறபுக்_கல்லூரியின்_வருடாந்த_கந்தூரி_விழா


ஏறாவூர் மஃஆனிமுல் முஸ்தபா அறபுக் கல்லூரியில்  அஸ்ஸெய்யிது குத்புத்தீன் முத்து கோயா தங்கள் (அந்தரிய்யி), அஸ்ஸெய்யித் முஹம்மது ஜலாலுத்தீன் (பூங்கோயாத் தங்கள்), மௌலானா மௌலவி அல்ஹாஜ் முஹம்மது அலி சைபுத்தீன் ஆலிம், ஆகியோரின் ஞாபகார்த்த கந்தூரி விழா 2022-12-18ஆம் திகதி நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை மஃஆனிமுல் முஸ்தபா அறபுக் கலாசாலையில் (ஸூபி மன்ஸில்) மௌலானா மௌலவி அல்ஹாஜ் அஸ்ஸெய்யித் பீ.ஏ முஹம்மது ஸைபுத்தீன் ஆலிம், மௌலானா மௌலவி அல்ஹாபிழ் ஏ.நாகூர் மீரான், மௌலானா மௌலவி அல்ஹாஜ் எம்.ஏ.எஸ் அபூபக்கர் ஹம்மாது ஆலிம் ஆகியோரின் தலைமையில் இடம் பெற்றது.


இந்நிகழ்வில் ஏறாவூர் நகரசபையின் கௌரவ தவிசாளர் #MS_நழிம், முன்னாள் இராஜாங்க அமைச்சர் அல்ஹாஜ் செய்யத் அலிஸாஹிர் மௌலானா,   மஃஆனிமுல் முஸ்தபா அறபுக் கலாசாலையின் ஆசிரியர்கள், மௌலவிமார்கள், மாணவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.


இக்கந்தூரி வைபவத்தில்  கத்தமுல் குர்ஆன் தமாம் வைபவம், மௌலிது வைபவம், பேருரை, துஆப் பிரார்த்தனையும் இடம்பெற்றதோடு, புதிய கட்டடத்திற்கான அடிக்கல்லும் நட்டு வைக்கப்பட்டது.

Wednesday, 2 November 2022

மூலிகை பொடி எதற்கு பயன்படும்..?


*நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் எந்த மூலிகை பொடி எதற்கு பயன்படும்..?


*பாதுகாக்க பட வேண்டிய பயனுள்ள குறிப்புகள்..!*


*அருகம்புல் பொடி*

அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி

*நெல்லிக்காய் பொடி*

பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது

*கடுக்காய் பொடி*

குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.

*வில்வம் பொடி*

அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது

*அமுக்கரா பொடி*

தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.

*சிறுகுறிஞான் பொடி*

சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.

*நவால் பொடி*

சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.

*வல்லாரை பொடி*

நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.

*தூதுவளை பொடி*

நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.

*துளசி பொடி*

மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.

*ஆவரம்பூ பொடி*

இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.

*கண்டங்கத்திரி பொடி*

மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.

*ரோஜாபூ பொடி*

இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.

*ஓரிதழ் தாமரை பொடி*

ஆண்மை குறைபாடு,

மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளை படுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா.

*ஜாதிக்காய் பொடி*

நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.

*திப்பிலி பொடி*

உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.

*வெந்தய பொடி*

வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*நிலவாகை பொடி*

மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.

*நாயுருவி பொடி*

உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.

*கறிவேப்பிலை பொடி*

கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.ரத்தம் முழுவதும் சுத்தமாகும்.இரிம்புச் சத்து உண்டு.

*வேப்பிலை பொடி*

குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*திரிபலா பொடி*

வயிற்று புண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.

*அதிமதுரம் பொடி*

தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.

*துத்தி இலை பொடி*

உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.

*செம்பருத்திபூ பொடி*

அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.

*கரிசலாங்கண்ணி பொடி*

காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.

*சிறியா நங்கை பொடி*

அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.

*கீழாநெல்லி பொடி,*

மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.

*முடக்கத்தான் பொடி*

மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது

*கோரைகிழங்கு பொடி*

தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.

*குப்பைமேனி பொடி*

சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.

*பொன்னாங்கண்ணி பொடி*

உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.

*முருஙகைவிதை பொடி*

ஆண்மை சக்தி கூடும்.

*லவங்கபட்டை பொடி*

கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.

*வாதநாராயணன் பொடி*

பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.

*பாகற்காய் பவுட்ர்*

குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

*வாழைத்தண்டு பொடி*

சிறுநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.

*மணத்தக்காளி பொடி*

குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.

*சித்தரத்தை பொடி*

சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.

*பொடுதலை பொடி*

பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.

*சுக்கு பொடி*

ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.

*ஆடாதொடை பொடி*

சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.

*கருஞ்சீரகப்பொடி*

சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.

*வெட்டி வேர் பொடி*

நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.

*வெள்ளருக்கு பொடி*

இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.

*நன்னாரி பொடி*

உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.

*நெருஞ்சில் பொடி*

சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.

*பிரசவ சாமான் பொடி*

பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.

*கஸ்தூரி மஞ்சள் பொடி*

தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.

*பூலாங்கிழங்கு பொடி*

குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.

*வசம்பு பொடி*

பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.

*சோற்று கற்றாழை பொடி*

உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.

*மருதாணி பொடி*

கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.

*கருவேலம்பட்டை பொடி*

பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்.

ஒரு ஸ்பூன் போட்டு தண்ணீரில் கலக்கி காலை,இரவு சாப்பாட்டுக்கு பின் சாப்பிடவும்.

இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..?

1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.

2. இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.

3. இஞ்சியை சுட்டு உடம்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.

4. இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.

5. இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.

6. இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.

7. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.

நன்றி 

Friday, 11 February 2022

கட்டார் QVC

 #அஸ்ஸாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் வளர்த்து.     #புதிதாக கட்டார் சொல்லக்கூடியவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான செய்தி.                        #QVC கட்டார் மெடிக்கலை கிலியர் பன்னித்தாராம்.உங்களுக்கு என்ன நோய் இருந்தாலும் நாங்கள் பாஸ் பன்னித் தருவோம் என்று சொல்லி உங்களிடமிருந்து   30000 or 40000 பணத்தை பிடுங்கி அவர்கள் உங்களை கொழும்புக்கு வரவலைத்து 3நாட்கள் அலைய வைத்து மூன்றாவது நாள் முடித்து கொடுப்பார்கள். அங்கே மீண்டும் நீங்கள்  5500/= கட்டி அதை முடிக்க வேண்டும்.  ,  இதனை அவர்கள் வட்சப்பில் ஒரு message மூலம் உங்களுக்கான medical appointment டை  அங்கே எடுக்கின்றார்கள். இதனை நீங்களே அங்கே சென்று செய்யலாம். உங்கள் பணத்தை யாரிடமும்  பணம் கொடுத்து ஏமறாதீர்கள். இன்று நம்மதூரில்  பல சகோதரர்கள் ஏமாற்றப்பட்டு பணத்தை பறி கொடுத்து வேதனையை அனுபவிப்பதை பார்க்கின்றோம். அதனால்தான் இந்த தகவலை இந்த இடத்தில் பதிவு செய்கின்றேன். உங்கள் நண்பர்கள், சகோதரர்களுக்கு இதனை  share செய்து உதவலாம்.



Saturday, 22 January 2022

மஷாயிஹ் மார்களின் கந்தூரி

 ஏறாவூரில் மனாழீருல் அன்வார் மகளிர் அரபுக் கல்லூரியின் வலாகத்தில் அடங்கப்பட்டுள்ள அல் ஆரிப் பில்லாஹ் அல் ஆலிமுல் பாழில் அஸ்செய்குல் காமில் மெளலவி SlM இப்றாகிம் கனீபா ஆலிம் காசிமி , காதிரி

, ஸூபி அவர்களின் ஊரூஸ் கந்தூரி தினம் 23/01/2022 அஸர் தொழுகையினைத் தொடர்ந்து அவர்களின் மகன் மரியாதைக்குறிய மெளலவி I'm நஜிமுதீன் நுழாரி, காதிரிய் அவர்களின் தலமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு தங்களால் முடியுமான உதவிகளை செய்த முரீதின்கள் முஹிப்பீன்கள் ,ஜமாஅத்தார்கள் அனைவருக்கும் ஜஸகல்லாஹு கைரா மேலதிக தகவலுக்கு       

 


Monday, 2 December 2019

எனதன்பு மகனே

அருமையான ஆராய்ச்சி கட்டுரை எனதன்பு மகனே

உங்களை போல அல்லது உங்களை விட

அதிகமான அளவு இப்படி பட்ட இல்மு கள் என் சந்ததி களுக்கும் கிடைக்க வேண்டும்
என்ற நிய்யத் தோடு
இதை பகிர்கிறேன்

நம் சந்ததி கள் இதை எல்லாம் விளங்காமல் போய் விடுவார்களோ
என்ற தவிப்பு மனதை கசக்கி பிழிகிறது மகனே ..

துஆ செய்யுங்கள்

இஸ்லாமிய சிந்தனையின் புனர்நிர்மாணமும், இமாம் அப்துல் காதிர் ஜீலானி அவர்களின் பங்களிப்புக்களும்.

 The Reconstruction of Religious Thought in Islam & Contributions of Imam Abdul Qadir Jilani

ஒரு சமூகத்தில் ஆன்மீகம் விலகிச் சொல்லும் போது அங்கு அறியாமையும், சடவாதமும் தலைதூக்கும். ஹிஜ்ரி 5ம் நூற்றாண்டு காலப்பகுதியில் அப்பாஸிய கிலாபத்தின் ஆட்சி நடந்துகொண்டிருந்தது. இஸ்லாமிய வரலாற்றில் மாபெரும் சமூக ஆன்மீகப் புரட்சியை ஏற்படுத்திய குதுபுல் அக்தாப், கௌதுல் அஃலம் முஹியத்தீன் அப்துல் காதிர் ஜிலானி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள். ரபீஉனில் ஆகிர் மாதம் வந்தால் முஸ்லிம் உலகம் அவர்களை நன்றியுடன் நினைவுபடுத்துகிறது. இதனால் தான் இமாம் தஹபி அவர்கள் கூட அப்துல் காதிர் ஜிலானி ரலியல்லாஹு அன்ஹு வை 'பூரணத்துவம் வாய்ந்த முன் உதாரணம்" என்று கூறுகிறார்.

அவர்கள் இளைஞராக இருந்த போது அப்பாஸியரின் ஒடுக்குமுறை தலைவிரித்தாடியது. சமூகத்தில் ஊழல் நிறைந்து இருந்தது, அரசியல் ஸ்திரத்தன்மை நிலவவில்லை. 21ம் நூற்றாண்டில் வாழும் இன்றைய முஸ்லிம் உம்மா முகங்கொடுக்கும் சமூக, பொருளாதார ரீதியிலான நெருக்கடிகளால் அவர்கள் பாதிக்கப்பட்டார்கள். 19ம் வயதில் கல்வி தேடி பக்தாத் சென்ற போது சிரியா, ஜெரூஸலம் போன்ற இடங்களில் நாளாந்தம் மக்கள் கொலைசெய்யப்பட்டுக் கொண்டிருந்தார்கள். பக்தாத் நகர அப்பாஸி கலீபா பலமிழந்து காணப்பட்டார். சிற்றரசுகளை நிர்மாணிப்பதற்காக போட்டி போட்டுக்கொண்டிருந்தார்கள் . நயவஞ்சகத்தன்மை ஆட்சியில் இருந்து.

 உலமாக்கள் தமது செல்வங்களில் கூடுதல் ஆர்வம் காட்டிக்கொண்டிருந்தார்கள். இந்தக் காலபகுதிக்கு உதாரணமாக '2009ம் ஆண்டின் பின்னர் ஏற்பட்ட அரேபிய வசந்தத்தின் பெறுபேறுகளோடு ஒப்பிட முடியும்". இந்த நிலைகளால் மனந்தளர்ந்து போன இமாம் அப்துல் காதிர் ஜிலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் 32 வருடங்களாக ஆன்மீக மற்றும் கல்வித்துறையில் தன்னை தயார்படுத்திக் கொள்கிறார்கள். 50 வயதில் தனது பிசரப்பணிகளை ஆரம்பிக்கிறார்கள். இதனைத் தான் அவர்கள் ' அப்துல் காதிர் ஜிலானி ரலியல்லாஹு அன்ஹு மக்களின் முழுமையான அங்கீகாரத்தை வென்றெடுத்தார்கள்.

மன்னர்களை விட அந்த ஆத்மீக ஆசானுக்கு அதிகாரம் இருந்தது என இப்னு ரஜப் அவர்கள் எழுதுகிறார்கள்.

அப்துல் காதிர் ஜிலானி ரலியல்லாஹு அன்ஹு வின் செல்வாக்கு அதிகரித்த காலப்பகுதியில் தான் பக்தாத் நகரின் மேயராக அபூஅல் முழப்பர் அல் முஸ்தன்ஜித் பில்லலாஹ் பதிவியேற்கிறார். மேயராக இருந்த கலீபாவிற்கு செல்வாக்கோ, வெளிநாட்டு உதவிகளோ இருக்கவில்லை. இதனால் அப்துல் காதிர் ஜிலானி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் மீது பக்தாத் நகர மேயருக்கு பொறாமை ஏற்படுகிறது. தனது புகழை அதிகரித்துக் கொள்வதற்காக அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு வை சந்திப்பதற்காக செல்கிறார். கலீபாவோடு பத்து ஊழியர்களும் செல்கிறார்கள். ஒவ்வொருவரும் தங்க மூட்டைகளை சுமந்திருந்தார்கள். அப்துல் காதிர் ஜீலானி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அவர்கள் தங்கமூட்டைகளை பரிசாக ஏற்க மறுக்கிறார். கலீபாவின் வற்புறுத்தலால் அவர்கள் தங்கத்தை கைகளால் அள்ளிஎடுத்து பிழிகிறார்கள். தங்கத்தில் இருந்து இரத்தம் வடிந்துடிகொண்டிருந்தது. அப்பாவி மக்களின் இரத்தத்தை எனக்கு பரிசாக தருகிறீர்? உமக்கு வெட்கமாக இல்லை? எனக்கேட்கிறார்கள். இதனால் ஆச்சரியத்தில் ஆழ்ந்துபோகிறார் பக்தாத் நகர மேயர். இந்த சம்பவத்தை இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி ரலியல்லாஹு அன்ஹு பதிவு செய்துள்ளார்கள்.

போலி நயகவஞ்சகத்தனமான அறிஞர்கள் மீதும் அப்துல் காதிர் ஜீலானி (ரலியல்லாஹு அன்ஹு) எதிர்ப்பு வெளியிட்டார்கள். கி.பி 1151-1155 காலப்பகுதியில் பெரும்பாலான அறிஞர்களும், மக்களும் அவர்களின் தலைமைத்துவத்தின் கிழ் ஒன்றுபடுகிறார்கள். உலகின் பல இடங்களில் இருந்தும் ஈராக் தலைநகர் பக்தாதில் அமைந்திருந்த அப்துல் காதிர் ஜீலானி (ரலியல்லாஹு அன்ஹு) கல்லூரியில் சேர்ந்துகொண்டார்கள். ஆன்மீக பயிற்சிகளை வழங்கும் மத்திய தளமாக விளங்கியது. ஜிஹாத், தஃவா போன்ற பணிகளுக்காகவும் அவர்கள் ஆட்களை பயிற்றுவித்தார்கள். சிரியா, பலஸ்தீன் போன்ற இடங்களில் அவர்களின் மாணவர்கள் ஊக்கத்தோடு செயற்பட்டார்கள்.

இமாம் அப்துல் காதிர் ஜிலானி ரலியல்லாஹு அன்ஹு வினால் கவரப்பட்டவர்கள் அவருடைய மாணவர்களாகவும் இருந்தார்கள். சிலுவை விரர்களிடம் இருந்தது பலஸ்தீனை பாதுகாத்த நூhத்தீன் ஸங்கி, சுல்தான் ஸலாஹ்தீன் அய்யூபி போன்றவர்கள் முக்கியத்துவம் பெறுகிறார்கள். அப்தல் காதிர் ஜீலானி (ரலியல்லாஹு அன்ஹு) முரீதான ஸலாஹ்தின் அய்யூபி அவர்கள் அல்- அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் அஸ்அரி அகீதாவை முதலில் அறிமுகப்படுத்துகிறார். சிலுவைப் போராட்டத்தின் ஒவ்வொரு தளபதியும் காதிரியா தரீக்காவை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

பலஸ்தீன விடுதலைப் போராட்டத்தின் முக்கிய புள்ளியாக கருதப்படும் இஸ்ஸதீன் கஸ்ஸாம் கூட காதிரியாவார்கள். பாகிஸ்தான் என்ற நாடு உருவாகும் என்று கனவு கண்ட பாகிஸ்தானின் முன்னோடியும், நவீன சிந்தனையாளருமான அல்லாமா இக்பால் அவர்களும் காதிரிய்யா தரீக்காவை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இந்திய துணைக்கண்டம், இலங்கை, தூர கிழக்காசிய நாடுகளிலும் காதிரிய்யா தரீக்கா செல்வாக்குடன் உள்ளது.

சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி இன்றும் இளைஞர்களுக்கு மத்தியில்  Heroவாக வலம்வருகிறார். கி.பி 1187ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ம் திகதி 88வருடங்களின் பின்னர் குத்ஸ் (பைதுல்மக்திஸ் விடுவிக்கப்படுகிறது) திறமையான தலைமைத்துவம்,பண்பட்ட ஆன்மீக பயிற்சி. மேற்குலகின் 3வது சிலுவை யுத்தம் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டு மஸ்ஜிதுல் அக்ஸாவை மீட்மைக்காக அவர் கதாநாயகனாக அடையாளம் காணப்படுகிறார். சிலுவை வீரர்களை ஆதரிப்போரும் சலடீனின் (ஸலாஹுத்தீன)மனிதாபிமானத்தையும், யுத்ததர்மங்களையும் பாராடட்டத்தவறுவதில்லை.

சுல்தான் நூர்தீன் ஸங்கியின் படைத் தளபதியாக இருந்து காலத்தில் எகிப்து கைப்பற்றப்படுகிறது. எகிப்தில் கி.பி 1171ல் பாதிமியர்களின் ஆட்சி மறைகிறது. எகிப்தின் அல்அஸ்ஹர் பல்கலைக்கழகம் மூடப்படுகிறது. பாடத்திட்டம் குறிப்பாக அகீதா அஹ்ல் சுன்னா அடிப்படையில் போதிக்கப்பட வேண்டும் என்பதற்காக சுல்தான் ஸலாஹுத்தீன் அஷ்அரி அகீதாiவை அறிமுகம் செய்கிறார்கள். அல் அஸ்ஹரின் வரலாற்றில்  முதல்தடவையாக. சுல்தான் ஸலாஹத்தீனின்  வரலாற்றை இத்துடன் நிறுத்திவிட்டார்கள்.

 ஸலாஹுத்தீன் வாழ்வு மற்றும் பணியை வரலாற்று ரீதியாக அனுகும் போது பல்வேறு அம்சங்கள் இன்று திட்டமிட்டு மறைக்கப்படுகின்றன. அல் அக்ஸாவை மீட்மைக்கான காரணங்கள் எவை? அன்றைய மத்திய கிழக்கு முகங்கொடுத்த வரலாற்று ரீதியான சவால்கள்? சமூக கலாசாரத்துறையின் பின்னடைவு, அப்பாஸிய ஆட்சியின் பலயீனம் போன்ற பல வினாக்களுக்குப் பதில் அளிப்பது  தேடுவது அவசியமாகும். சுல்தான் ஸலாஹுதீனை சிறந்த ஆட்சியாளராக மாற்ற உதவியவர்கள் இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய மாபெரும் சிந்தனையாளர்களில் இருவர் முதலாமவர் இமாம் அல்கஸ்ஸாலி, அடுத்தவர் இமாம் அப்துல் காதிர் ஜீலானி (றழியல்லாஹுஅன்ஹுமா)

இந்த விடயத்தை  புகழ்பெற்ற சமகால இஸ்லாமிய அறிஞர்
கலாநிதி மாஜித் இர்ஸான் கைலானி அவர்கள் எழுதிய ''ஹகதா ழஹர ஜீலு ஸலஹுத்தீன் வஹாகதா அததல் குத்ஸ்" (சலாஹுத்தீனின் பரம்பரை இவ்வாறு தான் உருவானது இவ்வாறு தான் குத்ஸ் மீட்கப்பட்டது)

ஸலாஹுத்தீனோ, நூர்தீனே திடீரென அவதரித்தவர்கள் அல்லர் மாறாக அவர்கள் சமூக – சமய பொறிமுறையை   அமைப்பதற்கான 50 வருடங்களுக்கு மேலதிகமாக , இமாம் அப்துல் காதிர் ஜீலானி போன்ற அறிஞர்களிடம் தலைமைத்துவப் பயிற்சியைப் பெற்றார்கள். இந்த குழு அல் இன்ஷிஹாப் அல் அவ்தாஹ் என்று அழைக்கப்பட்டது. ஆன்மீக ரீதியில் தனி மனிதனை பயிற்றுவித்தன் மூலம் இஸ்லாமி உம்மாவின் மீது பார்வையை செலுத்துதல் என்பதாகும்.

ஆன்மீகப் பயிற்சி மற்றும் கல்வி மூலம் சமூகமாற்றம் மேற்கொள்ளப்பட்டதே  அன்றி அரசியல் மூலமாக இஸ்லாமிய சமூகக் கட்டமைப்பில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்பது சமகால இஸ்லாமிய அமைப்புகளும், அரசியல் கட்சிகள் எதிர்நோக்கும் சவால்களுக்கான பதிலாகும்.

எதிரிகளை குற்றம் சுமத்திக் கொண்டிருக்கும்  சமூகத்திற்குப் பதிலாக தமது தோல்விகளை ஏற்று  தமது திருத்திக்கொள்ளும் சமூகமொன்றை உருவாக்குவது பற்றி இமாம் அல் கஸ்ஸாலி அவதானம் செலுத்தியிருந்தார்கள். அரசியல் இராணுமாற்றங்களைவ விட தனிமனித சிந்தனை, நடத்தை போன்றவற்றில் மாற்றங்களை மேற்கொள்வது பற்றி இமாம் அவர்கள் அதிகம் கவனம்செலுத்தினார்கள். இமாம் அப்துல் காதர் ஜீலானி அவர்கள் தஸவ்வுப் சிந்தனையாளராக இருந்த அதேவேளை ஹம்பலி சட்டவாக்கத்துறைக்கும் மகத்தான பங்களிப்புக்களை  வழங்கினார்.

கல்வியின் நோக்கம் ஒரு morale based
சமூகமொன்றை உருவாக்குவதாகும் என்ற நிலைப்பாட்டில் இமாம் அவர்கள் தொடர்ந்தும் இருந்து வந்துள்ளார்கள் இதனால் தான் அவர்கள் " இயந்திரங்களை உருவாக்குவது கல்வியின் நோக்கம் அல்ல, சிறந்த சமூகத்தை உருவாக்குவதே அதன் இலக்கு என்று வாதிடுகிறார்கள்.

மத்திய கிழக்கில் வாழ்ந்த கிறிஸ்வர்களுடன், யூதர்களுடனும் அவர்களுக்கு ஆரோக்கியமான உறவுநிலவியது. சிலுவை வீரர்களின் ஆக்கிரமிப்பிலிருந்து அரபுலகை மீட்பதற்கான யோசனையின் போது சலாஹூதீனுக்கு பல்வேறு சலால்கள் காத்திருந்தன. முஸ்லிம் என்ற அடையாளத்திற்கு புறம்பாக கோத்திர, சமூக, மொழிவேறுபர்டுகள மக்களை உள்ளார்ந்த ரீதியில் கூறுபோட்டிருந்தன. இதற்கு இமாம் அப்துல் காதிர் ஜீலானியிடம் பயிற்சிபெற்றவர்களை அனுகினார். சுல்தான் சலாஹூத்தீனின் படையில் இருந்த 50சதவீதமான கட்டளைத்தளபதிகளும் படைவீரர்களும் இமாம் அப்துல் காதர் ஜீலானி அவர்களின் மாணவர்கள். ஏனைய வீரர்கள் இமாம் கஸ்ஸாலியின் பயிற்சிபெற்றவர்கள்.

ஹம்பலி சட்டவாக்கத்தின் முன்னோடியமான இமாம் இப்னு ஹுதாமா சுல்தான் ஸலாஹுத்தீனின் சிரேஷ்ட ஆலோசகராக இருந்தார்கள். இமாம் இப்னு ஹுதாமா அவர்கள் இமாம் அப்துல்காதிர் ஜீலானியின் மாணவராகவும், கலீபாகவாகும் இருந்தார்கள். கற்றுக்கொண்ட பாடங்களில் இருந்து சமூகப் புணர்நிர்மாணத்திற்கான அடித்தளங்களை ஏற்படுத்துவதே காலத்தின் தேவையாகும்

இன்றைய போராட்டங்களின் பின்னடைவுகளுக்கும் இவ்வாறான அம்சங்கள் தாக்கம் செலுத்துகின்றன.

அல்கபீலிய்யா லில் ஹஸீமா (தம்மை தாமே தோல்வியுச் செய்யும மக்களின் நிலை மனோநிலை சமூகத்தின் பாரிய பிரச்சினையாகும்) 21ம் நூற்றாண்டின் முஸ்லிம் சமூகம் கொடுத்திருக்கும் கல்வி, சிந்தனை. கலாசார விழுமியங்கள் ஆகிய துறைகளில் பின்னடைவுகளே முஸ்லிம் சமூகத்தின் வீழ்ச்சிக்கான காரணங்களாகும். ஒரு சமூகம் சமூக ரீதியில் தற்கொலைசெய்து கொள்வதற்கு இது சமமாகும்.

இமாம் அல் கஸ்ஸாலி, இமாம் அப்துல் காதிர் ஜீலானி ஆகியோரிடம் பெற்ற பயிற்சி சலாஹுத்தீனின் ஒவ்வொரு செயற்பாட்டிலும் பிரதிபலித்தது. தஸவப் வழங்கிய வழிகாட்டல்  வத்திகானையும் ஆச்சிரியத்துக்குள்ளாக்கியது. ஸலாஹூத்தீன் ஆன்மீகத்துறையில் தன்னை தகுதிவாய்ந்தவராக மாற்றிக்கொண்டார். இமாம் அல் கஸ்ஸாலி, இமாம் அப்துல் காதிர் ஆகியோரை சிறந்த பயிற்றுவிப்பாளர்களாக தெரிவுசெய்துகொண்டார்.

88 வருடங்கள் தாம் வாழந்த காலத்தில் 1 இலட்சம் பேரை இஸ்லாத்திற்குள் எடுத்தபெருமை அவர்களை சாரும். ஆத்மீகத்துறையில் ஏற்படுத்திய மாபெரும் சீர்த்திருத்தம் 'முஹியத்தீன்" என்று அழைக்கப்பட காரணமாக அமைந்தது. இவர்களை போன்ற மாபெரும் சீhத்திருத்தவாதியை காண்பது அரிது. நேர்மையும்,உன்மையும் நிறைந்த தலைவரின் வழிகாட்டல் 21ம் நூற்றாண்டின் சமூக சீர்த்திருத்தில் மகத்தான பங்களிப்பை செய்யும் என்பதல் ஐயம் இல்லை.

"இஸ்லாத்தின் பரவலிலும் எழுச்சியிலும் காதிரிய்யா தரீக்காவின் பங்களிப்புக்கள்" என்ற தலைப்பில் சர்வதேச மாநாடொன்றுக்காக எழுதப்பட் எனது ஆய்வுக்கட்டுரையின் சுருக்கம்.
https://www.facebook.com/100000466168835/posts/3892171867474980/
பஸ்ஹான் நவாஸ்
By
Fazhan Nawas