98 கோடி ரூபா பெறுமதி வாய்ந்த படைகாவி கவசவாகனத்தை ஒன்றரை இலட்சம் பெறுமதி கொண்ட ரொக்கட்டைப் பயன்படுத்தி முற்றாக அழித்த பலஸ்தீனப் போராளிகள்
காலாற்படை வீரர்களை யுத்த களத்துக்கு நகர்த்தும் முழுமையாக மூடப்பட்ட 'PANTHER' கவசவாகனமொன்றின் விலை மூன்று மில்லியன் டொலர்களாகும் (இலங்கை விலை 98 கோடி ரூபா).
உலகத்தில் காணப்படும் மிகப் பாதுகாப்பான படைகாவி கவசவாகனங்களில் ஒன்றாக PANTHER படைகாவி கருதப்படுகிறது.
அமெரிக்கத் தயாரிப்பான இந்த கவசவாகனத்தை 2019 இல் இஸ்ரேல் மேம்படுத்த ஆரம்பித்தது. 2021 ஆம் ஆண்டு முதல் இஸ்ரேல் தனது இராணுவ சேவையில் அதனை ஈடுபடுத்தி வருகிறது.
2023 ஒக்டோபர் கடைசியில் PANTHER படைகாவி கவச வாகனம் காஸாவினுள் தரைவழியாக நுழைய முற்பட்ட வேளை போராளிகளின் தாக்குதலுக்கு உள்ளாகியது. கொர்னெட் வகை ரொக்கட்டைப் பயன்படுத்தி அந்த கவசவாகனத்தை போராளிகள் சுக்கு நூறாக்கினர். இதனால் அதனுள்ளிருந்த 11 இஸ்ரேலிய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
ஆயுத சந்தையில் இஸ்ரேலுக்கு நற்பெயரைத் தேடித் தந்த பல்வேறு ஆயுத தளபாடங்கள் பலஸ்தீனப் போராளிகளினால் அழிக்கப்பட்டுள்ளதால் பொருளாதார ரீதியாக இஸ்ரேல் மேலும் பின்னடையும் என கருதப்படுகிறது.
சுற்றி வர அதி நவீன கமராக்கள் பொருத்தப்பட்ட இந்த கவசவாகனத்தின் மேலும் சில சிறப்பம்சங்கள்.
- தேவையான நேரத்தில் எதிரிகளை குறிபார்த்து சுடுவதற்கு வசதியாக பல துளைகளைக் கொண்டிருக்கிறது.
- 20 படைவீரர்களை காவிச் செல்லக்கூடியது.
- 900 குதிரைவலு சக்தி கொண்டது
- மணித்தியாலத்திற்கு 70 வேகத்தில் பயணிக்கக்கூடியது
- ஒரு படைகாவியின் நிறை பத்தாயிரம் கிலோவாகும் (பத்து டொன்)
- 60 மில்லிமீற்றர் அளவு கொண்ட பீரங்கி தளத்தை கொண்டுள்ளது.
- குண்டுகள் மற்றும் துப்பாக்கிகளை போதுமானளவு வைத்திருப்பதற்கான சேமிப்பகத்தையும் கொண்டுள்ளது