السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Tuesday, 1 December 2015

தப்லீக் இயக்க உலமாக்களே! - 05

தப்லீக் இயக்க உலமாக்களே! ஆதரவாளர்களே! 05

உங்கள் இயக்கத்தின் முன்னோடிகள் பாரம்பரிய அகீதாவை உங்களுக்கு நினைவூட்டவும் வளர்ந்து வரும் இளம் சமுதாய சந்ததியினர்களுக்கு நீங்கள் யார்? உங்களின் சுய தோற்றம், ரகசியம் என்னவென்பதையும் வெளிப்படுத்தி வைத்து வரலாற்று நிகழ்வுகளை பாதுகாத்து பத்திரப்படுத்தி வைப்பதற்கென்றே இதனை நாம் தொகுத்து வழங்க முன்வந்தோம்.
தப்லீக் ஜமாஅத் இந்தியாவின் தலைநகர் டில்லியில் மேவாத் எனும் கிராமத்தில் 1925ம் ஆண்டளவில் முழப்பர் நகரின் காந்தலவி எனும் ஊரில் பிறந்த மௌலவி இல்யாஸ் (பிறப்பு 1886- இறப்பு 1944) என்பவரால் துவக்கம் பெற்றதாகும். இந்த அமைப்பின் வெளித்தோற்ற நடை முறை அமைப்புக்கள் மௌலவி இல்யாசுடையது. ஆனால் இதன் கொள்கைக் கோட்பாடுகள் தேவபந்த் எனும் ஊரின் அறிஜர்கள் அகீதாவாகும். இதனை மௌலவி இல்யாஸ் தீனி தாவத் எனும் நூலில் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளார். இவ்விரு ஊர்களும் பக்கத்து பக்கத்து ஊர்களாகும்.
தேவபந்த் அறிஜர்களில் மௌலவி காசிம் நாநூதவி ( ஹிஜ்ரி 1248 - 1297 ஆங்கில வருடம் 1880 - 1833) மௌலவி ரஷீத் அஹ்மத் கொங்கோஹி (ஹிஜ்ரி 1244 - 1323 ஆங்கில வருடம் 1829-1905) மௌலவி முஹம்மது யாகூப் நாநூதவி ( ஹிஜ்ரி 1249 - 1302 ஆங்கில வருடம் 1833 – 1884 ) மௌலவி மஹ்மூத் ஹசன் தேவபந்தி (ஹிஜ்ரி 1268 - 1339 ஆங்கில வருடம் 1851- 1920 ) மௌலவி கலீல் அஹ்மத் சஹரன்பூரியின் (ஹிஜ்ரி 1269-1346, ஆங்கில வருடம் 1852-1927) மௌலவி அஷ்ரப் அலி தானவி (ஹிஜ்ரி 1280 - 1362 ஆங்கில வருடம் 1863- 1943) போன்றோர் அதிகம் பேசப்படுபவர்களாகும்.
இவர்களெல்லாம் அஷ்ஷாஹ் இம்தாதுல்லாஹ் முஹாஜிர் மக்கி ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் சீடர்கள் மட்டுமல்லாது சூபித்துவ கலீபாக்கள் ஆகவும் இருந்தார்கள். அத்துடன் மௌலவி இஸ்மாயில் தெஹ்லவின் தந்தை அஷ்ஷாஹ் அப்துல் கனியின் மாணவர்களாகும்.
இதில் மௌலவி கலீல் அஹ்மத் சஹரன்பூரியின் மாணவரும் கலீபாவுமாக மௌலவி சகரிய்யா ஸாஹிப் ( ஹிஜ்ரி 1315- 1402 ஆங்கில வருடம் 1897-1982 ) காணப்படுகிறார். இவ்விருவரும் புண்ணிய நகரம் மதீனா முனவ்வராவின் ஜன்னத்துல் முஆல்லாவில் நல்லடக்கம் சைய்யப்பட்டார்கள். மௌலானா சகரிய்யாவின் சிறிய தந்தைதான் தப்லீக் இயக்க ஸ்தாபகர் மௌலவி இல்யாஸ் என்பவராகும்.
ரஷீத் அஹமத் கங்கோஹியிடம் பத்து ஆண்டுகள் வரை மார்க்க கல்வி பயின்ற மௌலவி இல்யாஸ், மௌலவி கலீல் அஹ்மத் சகாரன்பூரியின் முரீதும் கலீபாவும் ஆகும். எனவே தப்லீக் இயக்க அமைப்பின் தலைவர் மௌலவி இல்யாசுக்கும் மௌலவி இஸ்மாயில் தெஹ்லவிக்கும் நெருங்கிய ஆழமான ஆத்மீக தொடர்புகள் இருந்திருப்பத்தை உத்தியோகபூர்வமாக அறிந்து கொண்டோம். அத்துடன் இவர்கள் யாவரும் சூபித்துவ வழியில் ஆழமாக மூழ்கியவர்கள்.
இப்படிப்பட்டவர்கள் (யாருடைய பெயர் முஹம்மது, அலி என்று உள்ளதோ அவர்களுக்கு எதன் மீதும் அதிகாரம் இல்லை.ஒரு நபியோ அல்லது வலியோ அவர்களால் ஒன்றும் செய்ய இயலாது.
[ தக்வியத்துல் ஈமான் ,பக்கம் 41 ]
என்பனபோன்ற இஸ்லாமிய கருத்துக்கு முரணான இஸ்லாமிய மார்கத்தின் ஆணிவேர் அறுத்தெறியும் நச்சுக் கருத்துக்களை எவ்வாறு கூறியிருக்க முடியும்? என்ற வினாவுக்கான பதிலைப் பார்க்கும் முன்னர் மௌலவி இஸ்மாயில் தெஹ்லவியின் குடும்ப உறவினர்களின் கொள்கைக் கோட்பாடுகள் என்னவாக இருந்ததென்பதை அறியத்தரக் கடமைப்பட்டுள்ளோம்.
13ம் நூற்றாண்டின் முஜத்திதாகவும் மிகப்பெரிய சூபியாகவும் முஹத்தித் திஹ்லவி என்றும் வலியுல்லாஹ் என பிறப்பதற்கு முன்னரே பெயர் சூட்டப்பட்டவருமான அஷ்ஷாஹ் வலிய்யுலாஹ் அன்னவர்களின் இளைய மகனாகிய அஷ்ஷாஹ் அப்துல் கனியின் ஒரே புதல்வர் மௌலவி இஸ்மாயில் ஆகும். (பிறப்பு 26- 04-1779- இறப்பு 06—5-1831)
தொடரும்.............
அஷ்ஷாஹ் வலியுல்லாஹ், பாரியார், புதல்வர் அஷ்ஷாஹ் அப்துல் கனி, மௌலவி இஸ்மாயில் ஆகியோரின் சமாதிகள். கப்ருகள் கட்டப்பட்டிருக்கிறது. பராமரிக்கபடுகிறது. பெயர்கள் பொறிக்கப்பட்திருக்கிறது.

Eravur

Eravur

Eravur

Monday, 30 November 2015

தப்லீக் இயக்க உலமாக்களே! இது உங்களுக்குத் தெரியுமா? 04




தப்லீக் இயக்க உலமாக்களே! இது உங்களுக்குத் தெரியுமா? 

மேற்க்கூறிய நிகழ்வைப் பதிவு செய்த பின்னர் மௌலவி முனாளிர் அஹ்சன் கைலானிக்கு மரணமான ஒருவர் நபியாக இருந்தாலும்கூட அவரால் உயிர் உள்ள ஒருவருக்கு உதவிட முடியும் என நம்பினால் அது ஷிர்க் ஆகும். குப்ர் ஆகும் என்ற தேவபந்துகளின் அகீதா நினைவுக்கு வருகிறது. அதனால் இந்த சம்பவத்தினை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்? என யோசித்து, மேற்க்கூறிய நிகழ்வை அவர் ஏற்க மறுப்பதுடன் மணரமான வலிமார்களினால் உதவ முடியும் எனும் தலைப்பில் அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாத்தினரின் முடிவு எதுவோ அதுவே தேவபந்த் உலமாக்களின் தீர்ப்பாகும் என்றும் அவர் அடிக் குறிப்பில் அவர் கருத்தினைப் பதிவு செய்த பின்னர் பின்வருமாறு அவர் அணியினரிடம் வினாவொன்றையும் அவ்விடத்தில் கேட்கிறார்.

விண்ணுலகப் பயணத்தில் அருமை நாயகம் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களுகளை நபிமார்கள் சந்தித்து உரையாடி இருக்கிறார்கள். நபியுல்லாஹ் ஹழ்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நமக்கு தொழுகைகளை குறைப்பதற்கு உதவி செய்துள்ளார்கள். எனவே நல்லடியார்களின் ஆத்மாக்கள் இவ்வுலகில் அவதிப்படும் ஒரு விசுவாசிக்கு உதவுவது எந்த குரானின் வசனத்திற்கும் எந்த நபி மொழிக்கும் மாற்றமாக இருக்கிறதென்று அக்குறிப்பில் பதிவு செய்துள்ளார். அத்துடன் வலிமார்களின் ஆத்மாக்கள் உதவி சையும் என்பதை நாம் மறுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிடத் தவறவில்லை.
இன்னும் மனிதனுக்கு வந்து சேரும் உதவிகள் யாவும் இன்னுமொரு வஸ்துவினால்தான் அவனை சென்றடைகிறது. பால் பசுவின் உதவியினால்தான் நமக்கு கிடைகிறது என்ற தத்துவமும் அவர் பேசுகிறார்.
சுபானல்லாஹ்! மரணமான நபிமர்கள்கூட இன்னுமொருவருக்கு உதவ முடியாதென்று பல தசாப்தங்களாக கூறிவரும் தேவபந்த் சகோதரர்கள் தங்களுடைய இமாம் மரணமான பின்னர் உதவி செய்துள்ளார் என்றதும் கதையை எவ்வாறு திசை திருப்புகிறார்கள் என்று பார்த்தீர்களா?

மரணித்த நல்லடியார்களின் ஆத்மாக்கள் மூலமாக உதவி பெறுதல் தொடர்பில் தேவபந்த் அணியின் முக்கிய மற்றுமொரு முக்கிய பிரமுகர் மௌலவி மன்லூர் சாஹிப் நுமானி, அல் புர்கான் எனும் மாதாந்த சஞ்சிகையில் பின்வருமாறு எழுதுகிறார்.
அல்லாஹ் அல்லாத இன்னுமொரு பொருளுக்கு சுய ஆற்றல் எதுவும் இல்லை. எல்லா படைப்புக்களும் அல்லாஹ்வின் தேவை உள்ளனவாகும். இருந்தாலும் இந்த உலகத்திற்கு ஆலமுல் அஸ்பாப் என்று பெயர் இருப்பதால் எந்த தேவை நிறைவேற வேண்டுமாக இருந்தாலும் இன்னொமொரு நபரின் அல்லது பொருளின் உதவியை நாட வேண்டி இருக்கிறது.

இவ்வாறான நம்பிக்கையில்  பிறரிடம் உதவி கோருவதில் எவ்வித ஷிர்க்கும் இல்லை. ஆனாலும்கூட இன்னுமொருவருக்கு அல்லது இன்னுமொரு பொருளுக்கு சுய ஆற்றல் இருப்பதாக எண்ணிக்கொண்டிருப்பதும் சுயமாக இயங்கும் ஆற்றல் அப்பொருளுக்கு இருப்பதாகவும் நம்புவது ஷிர்க் ஆகும் என்று குறுப்பிடுகிறார். 

(இதைத்தானே அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத்தினரும் காலமெல்லாம் கூறிக்கொண்டு வருகிறார்கள்.)

பின்னர் மௌலவி நூமான் தொடர்ந்தும் கருத்துக் கூறுகையில் இஸ்லாமியர்கள் என்று கூறிக்கொண்டு கப்ருகளை வணங்கிக்கொண்டு வருபவர்களுக்கு ஷைத்தான் வழிகாட்டியாக இருக்கிறான். ஷைத்தானின் பிடியில் அவர்கள் சிக்கிக்கொண்டு இருப்பதால் அல்குரான் அல்ஹதீதை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயார் இல்லை. இவ்வாறானவர்களைக் கண்டுதான் கடந்த காலத்து மக்களின் ஷிர்கினை புரிந்துகொள்ள என்னால் முடிந்தது. இல்லையென்றால் அதைப்பற்றி அறிந்துகொள்ள சிரமப்பட்டு இருக்க வேண்டி ஏற்பட்டிருக்கும் என்றும் குறிப்பிடுகிறார். ( அல் புர்கான் பக்கம் 30. 1372 ம் ஹிஜ்ரி ஆண்டு. )

மௌலவி மன்லூர் அவர்களுக்கு அவர் உள் வீட்டு நிகழ்வுகளே தெரியாதவராக இருக்கிறார். அவர் வீட்டின் உள்ளேயே ஷிர்க்கான காரியங்கள் இடம்பெற்றுக்கொண்டிருந்ததை அவரால் கண்டுகொள்ளாமல் பிறரில் தேடுகிறார்.
இதே நிலைதான் இன்றுள்ள தேவபந்த் நலன் விரும்பிகளின் அகீதாவுமாக இருக்கிறது. இன்றுள்ள தப்லீக் இயக்க ஆதரவாளர்கள் அவ்வியக்க அதிபர்களின் அகீதாவை அறியாதவர்களாகவே இருக்கிறார்கள். 

(யாருடைய பெயர் முஹம்மது ,அலி என்று உள்ளதோ அவர்களுக்கு எதன் மீதும் அதிகாரம் இல்லை.ஒரு நபியோ அல்லது வலியோ அவர்களால் ஒன்றும் செய்ய இயலாது. 
தக்வியத்துல் ஈமான் ,பக்கம் 41 ]

அருமை நாயகம் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களுக்கு இல்லாத ஆற்றல் தேவபந்த் தேசியத் தலைவர்களுக்கு இருக்குமானால் அவர்கள் எவ்வாறு இஸ்லாமியர்களாக இருப்பார்கள் என்று சிந்தித்துப்பாருங்கள்.
தொடரும்.........

தப்லீக் உலமாக்களே! இது உங்களுக்கு தெரியுமா? 03

 முகல்லித் வஹ்ஹாபிகளான தப்லீக் இயக்க உலமாக்களே! இது உங்களுக்குத் தெரியுமா?


முகல்லித் வஹ்ஹாபிகளான தப்லீக் இயக்க உலமாக்களே! இது உங்களுக்குத் தெரியுமா?

மேற்க்கூறிய நிகழ்வைப் பதிவு செய்த பின்னர் மௌலவி முனாளிர் அஹ்சன் கைலானிக்கு மரணமான ஒருவர் நபியாக இருந்தாலும்கூட அவரால் உயிர் உள்ள ஒருவருக்கு உதவிட முடியும் என நம்பினால் அது ஷிர்க் ஆகும். குப்ர் ஆகும் என்ற தேவபந்துகளின் அகீதா நினைவுக்கு வருகிறது. அதனால் இந்த சம்பவத்தினை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்? என யோசித்து, மேற்க்கூறிய நிகழ்வை அவர் ஏற்க மறுப்பதுடன் மரணமான வலிமார்களினால் உதவ முடியும் எனும் தலைப்பில் அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாத்தினரின் முடிவு எதுவோ அதுவே தேவபந்த் உலமாக்களின் தீர்ப்பாகும் என்றும் அவர் அடிக் குறிப்பில் அவர் கருத்தினைப் பதிவு செய்த பின்னர் பின்வருமாறு அவர் அணியினரிடம் வினாவொன்றையும் அவ்விடத்தில் கேட்கிறார்.

விண்ணுலகப் பயணத்தில் அருமை நாயகம் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களை நபிமார்கள் சந்தித்து உரையாடி இருக்கிறார்கள். நபியுல்லாஹ் ஹழ்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நமக்கு தொழுகைகளை குறைப்பதற்கு உதவி செய்துள்ளார்கள். எனவே நல்லடியார்களின் ஆத்மாக்கள் இவ்வுலகில் அவதிப்படும் ஒரு விசுவாசிக்கு உதவுவது எந்த குரானின் வசனத்திற்கும் எந்த நபி மொழிக்கும் மாற்றமாக இது இருக்கிறதென்று அக்குறிப்பில் பதிவு செய்துள்ளார். அத்துடன் வலிமார்களின் ஆத்மாக்கள் உதவி சையும் என்பதை நாம் மறுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிடத் தவறவில்லை.

இன்னும் மனிதனுக்கு வந்து சேரும் உதவிகள் யாவும் இன்னுமொரு வஸ்துவினால்தான் அவனை சென்றடைகிறது. பால் பசுவின் உதவியினால்தான் நமக்கு கிடைகிறது என்ற தத்துவமும் அவர் பேசுகிறார்.

சுபானல்லாஹ்! மரணமான நபிமர்கள்கூட இன்னுமொருவருக்கு உதவ முடியாதென்று பல தசாப்தங்களாக கூறிவரும் தேவபந்த் சகோதரர்கள் தங்களுடைய இமாம் மரணமான பின்னர் உதவி செய்துள்ளார் என்றதும் கதையை எவ்வாறு திசை திருப்புகிறார்கள் என்று பார்த்தீர்களா?

மரணித்த நல்லடியார்களின் ஆத்மாக்கள் மூலமாக உதவி பெறுதல் தொடர்பில் தேவபந்த் அணியின் முக்கிய மற்றுமொரு பிரமுகர் மௌலவி மன்லூர் சாஹிப் நுமானி, அல் புர்கான் எனும் மாதாந்த சஞ்சிகையில் பின்வருமாறு எழுதுகிறார்.

அல்லாஹ் அல்லாத இன்னுமொரு பொருளுக்கு சுய ஆற்றல் எதுவும் இல்லை. எல்லா படைப்புக்களும் அல்லாஹ்வின் தேவை உள்ளனவாகும். இருந்தாலும் இந்த உலகத்திற்கு ஆலமுல் அஸ்பாப் என்று பெயர் இருப்பதால் எந்த தேவை நிறைவேற வேண்டுமாக இருந்தாலும் இன்னொமொரு நபரின் அல்லது பொருளின் உதவியை நாட வேண்டி இருக்கிறது.

இவ்வாறு பிறரிடம் உதவி கோருவதில் எவ்வித ஷிர்க்கும் இல்லை. ஆனாலும்கூட இன்னுமொருவருக்கு அல்லது இன்னுமொரு பொருளுக்கு சுய ஆற்றல் இருப்பதாக எண்ணிக்கொண்டிருப்பதும் சுயமாக இயங்கும் ஆற்றல் அப்பொருளுக்கு இருப்பதாகவும் நம்புவது ஷிர்க் ஆகும் என்று குறுப்பிடுகிறார்.

(இதைத்தானே அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத்தினரும் காலமெல்லாம் கூறிக்கொண்டு வருகிறார்கள்.)

பின்னர் மௌலவி நூமான் தொடர்ந்தும் கருத்துக் கூறுகையில் இஸ்லாமியர்கள் என்று கூறிக்கொண்டு கப்ருகளை வணங்கிக்கொண்டு வருபவர்களுக்கு ஷைத்தான் வழிகாட்டியாக இருக்கிறான். ஷைத்தானின் பிடியில் அவர்கள் சிக்கிக்கொண்டு இருப்பதால் அல்குரான் அல்ஹதீதை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயார் இல்லை. இவ்வாறானவர்களைக் கண்டுதான் கடந்த காலத்து மக்களின் ஷிர்கினை புரிந்துகொள்ள என்னால் முடிந்தது. இல்லையென்றால் அதைப்பற்றி அறிந்துகொள்ள சிரமப்பட்டு இருக்க வேண்டி ஏற்பட்டிருக்கும் என்றும் குறிப்பிடுகிறார். ( அல் புர்கான் பக்கம் 30. 1372 ம் ஹிஜ்ரி ஆண்டு. )

மௌலவி மன்லூர் அவர்களுக்கு அவர் உள் வீட்டு நிகழ்வுகளே தெரியாதவராக இருக்கிறார். அவர் வீட்டின் உள்ளேயே ஷிர்க்கான காரியங்கள் இடம்பெற்றுக்கொண்டிருந்ததை அவரால் கண்டுகொள்ளாமல் பிறரில் தேடுகிறார்.

இதே நிலைதான் இன்றுள்ள தேவபந்த் நலன் விரும்பிகளின் அகீதாவுமாக இருக்கிறது. இன்றுள்ள தப்லீக் இயக்க ஆதரவாலர்கள் அவ்வியக்க அதிபர்களின் அகீதாவை அறியாதவர்களாகவே இருக்கிறார்கள்.

அருமை நாயகம் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களுக்கு இல்லாத ஆற்றல் தேவபந்த் தேசியத் தலைவர்களுக்கு இருக்குமானால் அவர்கள் எவ்வாறு இஸ்லாமியர்களாக இருப்பார்கள் என்று சிந்தித்துப்பாருங்கள்.

தொடரும்.........

Tuesday, 24 November 2015

தப்லீக் உலமாக்களே! இது உங்களுக்கு தெரியுமா? 02

தப்லீக் உலமாக்களே! இது உங்களுக்கு தெரியுமா? 02
தேவபந்த் ஜமாஅத்தின் பிரபலமான அறிஜர்களில் ஒருவரான மௌலவி முனாளிர் அஹ்சன் கைலாணி, சவாநிஹ் காசிமி என்ற பெயரில் மௌலானா காசிம் நாநூதவியின் வாழ்க்கை சரிதையை எழுதினார். அதனை தாருல் உலூம் தேவபந்த் அச்சிட்டு பிரசுரம் செய்தது. அதில் மௌலவி மஹ்மூத் ஹசன் அவர்களை அடிப்படையாகக்கொண்டு பின்வரும் தகவல் அதில் பதிவு சைய்யப்பட்டுள்ளது.
ஒரு தடவை பஞ்சாப் மாநிலத்தில் உள்ளதொரு பகுதிக்கு தேவபந்த் ஆலிம் ஒருவர் சென்றிருந்தார். அவ்வூர் மக்கள் அவரை பள்ளியில் இமாமாக நியமித்தனர். இவ்வாறு சிறப்பாக வாழ்ந்துவரும் சந்தர்பத்தில் அப்பகுதிக்கு மௌலவி ஒருவர் வந்து மார்க்கப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மக்களும் அவர் பேச்சில் கவரப்பட்டு அவரின் விசுவாசிகளாகவே மாறிவிட்டனர். இப்படியானதொரு கட்டத்தில் இவ்வூரின் பள்ளி இமாமாக யார் இருக்கிறார்? என மக்களிடம் அவர் வினவியதற்கு தேவபந்தில் கல்வி கற்றதொரு மௌலவி என மக்கள் கூறினார்கள்.

தேவபந்த் என்ற பெயரைக் கேட்டதும் கடுமையாக ஆத்திரப்பட்டு விமர்சிக்கத் துவங்கிவிட்டார். அவர் பின்னால் தொழ முடியாது. அவர் கொள்கை பிழையானது. அவர் பின்னால் தொழுத தொழுகைகளை மீட்டித் தொழ வேண்டும். இஸ்லாத்தின் விரோதிகள். அருமை நாயகம் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் விரோதிகள் என்றெல்லாம்கூட சப்தமிடத் தொடங்கிவிட்டார்.
ஊர் மக்கள் பெரிதும் கவலையும் மன உளைச்சலும் அடைந்தனர். வீணாக இந்த இமாமுக்குப் பின்னால் தொழுது விட்டோமே! பணம் காசுகளை செலவு செய்துவிட்டோமே என்றெல்லாம்கூட பேசிக்கொண்டனர். இதனால்  சொல்லப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு இமாம் பதில் கூறவேண்டும் என நிர்பந்திக்கப்பட்டார். பெரும் கவலையும் அச்சமும் நிறைந்த நிலையில் அவரோடு விவாதிப்பதாக முடிவு செய்து காலம் இடமும் நேரம் என்பன அறிவிக்கப்பட்டது.

இருவரில் ஒருவர் கம்பீரமாகவும் நிறைய நூல்களுடனும் மேடையில் வந்தமர, மற்றவர் தனிமையில் அச்சம் பீதி நிறைந்தவராக வந்தமர்ந்தார். (அவதானிக்க வேண்டிய விடயமாகிறது,)

உரையாடல்கள் இன்னும் ஆரம்பிக்கப்படாத சூழலில் திடீரென அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தேவபந்த் ஆலிம் அருகில் வந்தமர்கிறார். பயப்படாதே! தைரியமாக இரு என்றார். எனக்கும் மனதில் என்னை அறியாது தைரியம் ஏற்பட்டது.
நான் பேசத் துவங்கினேன். நான் என்ன பேசுகின்றேன் என்று தெரியாமல் பேசிக்கொண்டே சென்றேன். பின்னர் கேள்வி பதிலுக்குரிய நேரம் வந்ததும் நான் ஆரம்பத்தில் கேட்ட கேள்விகளுக்கு பிரபல பேச்சாளர் பதில் கூறினாலும் தொடர்ந்து அவரால் பதில் கூற முடியாது தடுமாறினார். திக்குமுக்காடினார். அதிர்சியில் சபையில் இருந்து எழுந்து என்னருகில் வந்து என பாதங்களில் அவர் தலையை வைத்து அழத் துவங்கி விட்டார். ஆழம் அறியாது வாய் போட்டுவிட்டேன். என்னை மன்னித்து விடுங்கள். நான் சொல்வது பிழையானது. நீங்கள் சொல்வதுதான் உண்மையானது என்றார். சபையோர் திகைத்து நிற்கும் அதிர்சியான அந்நேரத்தில் என்னருகில் வந்தமர்ந்த அடையாளம் தெரியாத அந்நபரும் காணமல் போய்விட்டார்.

மௌலானா மஹ்மூத் ஹசன், வந்தவரின் அடையாளங்களை சொல்ல முடியுமாவென்று அவ் ஆலிமிடம் கேட்டபோது அவர் கூறிய அடையாளங்களை அவதானித்துவிட்டு, வந்தவர் வேறு யாரும் இல்லை. மௌலானா காசிம் நாநூதவி அவர்கள்தான் என்றார். அல்லாஹ்தான் அவர்களை உம்மிடம் உமக்கு உதவிட அனுப்பி வைத்துள்ளான் என்றார் மஹ்மூத் ஹசன் அவர்கள். (சவானிஹ் காசிமி பாகம் ஒன்று பக்கம் 330)

சகோதரர்களே சிந்தியுங்கள்!

மௌலவி காசிம் நாநூதவிக்கு கப்ரில் இருக்கும்போது பூமியில் நடைபெறும் நிகழ்வு தெரிந்துள்ளது. இன்ன இடத்தில் இன்ன நபர் அவதிப்படும் நிலையையும் உணர்துள்ளார். கப்ரில் இருந்து வெளியேறி மனித தோற்றத்தில் அவர் விரும்பும் இடம்சென்று பிறரின் கஷ்டங்களுக்கு உதவி செய்துள்ளாரே! இது ஷிர்க் இல்லையா? இது குப்ர் இல்லையா?

அருமை நாயகம் முஜ்தபா சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களுக்கு மறைவானவற்றை அறியும் ஆற்றல் இருக்கிறது. கப்ரில் இருந்துகொண்டு வெளிவரும் சக்தி இருக்கிறது. பிறர்களுக்கு உதவிடும் வல்லமையை அல்லாஹ் வழங்கியுள்ளான் என்று நம்புவது ஷிர்க்கான குப்ரான விடயங்கள் என்றால், ஒரு நபிக்கு இல்லாத ஆற்றல் தேவபந்த் அறிஜர்களுக்கு இருப்பதாக நம்புவதற்குப் பெயர் என்ன?

தொடரும்.....

Monday, 23 November 2015

எதிரியின் எதிரி கூட்டாளி

எதிரியின் எதிரி கூட்டாளி கொள்கையில்

 முஸ்லிம் நாடுகள் 


01- ஈஸா நபியை முஸ்லிம்கள் மதிக்கிறார்கள்.
ஈஸா நபியை யூதர்கள் வெறுக்கிறார்கள்.
ஈஸா நபியை மதிக்கும் முஸ்லிம்களை அழிப்பதற்கு, ஈஸா நபியை வெறுக்கும் இஸ்ரேலுக்கு உதவுகின்றன, ஈஸா நபியை பின்பற்றும் (?) அமெரிக்காவும் பிரிட்டனும். எப்படி இருக்கிறது இந்த அரசியல் ?

இதே தத்துவம் தான் மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளிலும்.

இதே தத்துவம் தான் ஈரான் ஹமாஸ் கூட்டும்

2- ஈரான் சீஆ நாடு. வஹாபியத்தை ஈரான் கடுமையாக எதிர்க்கிறது.

எகிப்து ஸுன்னி நாடு.

மத்திய கிழக்கில் ஸுன்னத்து வல்ஜமாஅத்தை அழிப்பது ஈரானின் திட்டம்.

இதற்காக, தனது பகைமை இயக்கமான இக்வான், ஹமாஸ் ஆகியவற்றுக்கு ஈரான் பூரண ஆதரவளிக்கிறது எப்படியாவது ஸுன்னி எகிப்தை அழிப்பதற்கு.

3- ஈரான் சீஆ நாடு.

ஸிரியா (இப்போது) சீஆ ஆதிக்க நாடு. இரு நாடுகளும் நட்பு நாடுகள்.

ஆனால், ஸிரியாவில் சீஆ ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடும் ஹமாஸுடன் (ஸிரியாவுக்கு வெளியில்) ஈரான் நட்பு கொண்டாடுகின்றது.

4- துருக்கி வஹாபி இக்வான் சார்பு நாடு.

யெமன் ஸுன்னி நாடு.

ஆனால் யெமனை அழிக்கும் இக்வானுடன் துருக்கி (வெளியில்) நட்பு. (இது யெமன் யத்தத்துக்கு முந்தைய நிலை)

5- சீஆ சார்பு ஸிரியாவை அழிக்க ISISக்கு (தாஇஷுக்கு) ஸவூதி உதவி செய்கிறது.

எகிப்தை அழிக்கும் அதே தாஇஷை அழிக்க, ஸிஸிக்கு (எகிப்துக்கு) ஸவூதி உதவி செய்கிறது. காரணம் தாஇஷின் ஆபத்து ஸவூதிக்கு வரும் போது, எகிப்தின் உதவியைக் கோரி, தமது மன்னராட்சியைத் தக்கவைத்துக்கொள்வது நோக்கம்.

"அல்லாஹ்வுக்காக" என்ற இக்லாஸ் இப்போது மருந்துக்கும் இல்லை !

தப்லீக் உலமாக்களே! இது உங்களுக்கு தெரியுமா? 01

தப்லீக் உலமாக்களே! இது உங்களுக்கு தெரியுமா?

தேவபந்த் ஜமாஅத்தின் இமாமுல் அவ்வல் மௌலவி இஸ்மாயில் சாஹிப், தக்வியதுல் ஈமான் எனும் நூலின் 8,10,21,26,27,25,24,58ம் பக்கங்களிலும் மௌலவி ரஷீத் அஹ்மத் கொங்கோஹி பதாவா ரஷீதியாவின் 1:20, 2:141, 3:17,42, '"125,ம் பக்கங்களிலும் மௌலவி அஷ்ரப் அலி தானவி பெஹ்ஷ்தி சயூர் பாகம் ஒன்று பக்கம் முப்பத்திஏழு, பதாவா இம்தாதிய்யா 4:56லும் அவ்வாறே மௌலவி அப்துச்சகூர், காரி தய்யிப், மௌலவி மன்லூர் நுமானி, மௌலவி கலீல் அஹ்மத் ஆகியோரும் பிவருமாறு கூறியுள்ளார்கள்.
‘எவர் அல்லாஹ் அல்லாத இன்னுமொருவர் மறைவானவற்றை அறிவார் எனவும் நபிமார் வலிமார்கள் வருகை இடம்பெறுகிறது. அவர்களை அழைத்து உதவி தேடலாம் என்றும் கூறுவாரோ அவர் சந்தேகம் இல்லாமல் காபிராகும். அவ்வாறானதொரு நபர் இமாமத் செய்யக்கூடாது. அவருடன் நெருக்கம், அன்புடன் நடந்து கொள்வது ஹராம் ஆகும்’. (பதாவா ரஷீதிய்யா.)
இதனைப் படிக்கின்ற எந்தப் பாமரனும் நமது அருமை நாயகம் முஸ்தபா சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் உட்பட எந்தவொரு நபிக்கும் மறைவான அறிவு அறவேயில்லை. அவர்களுக்கு எவ்விதமான ஆற்றலும் கிடையாதுன்னு நம்பிக்கை கொள்வதுடன் மேற்க்கூறிய நம்பிக்கையில் உள்ள ஒருவர் பிழையான நம்பிக்கையில் இருக்கிறார் எனவும் நம்புவார்.
இதுவே அல்லாஹ்வுக்கு உருவமும் இடமும் இருக்கின்றதென்று பிரச்சாரம் செய்யும் வஹ்ஹாபிகளின் அகீதாவுமாக இருக்கிறது. இதனால்தான் தப்லீக் இயக்கத்தினர்களான நீங்களெல்லாம் வஹ்ஹாபிகளுக்கு மறுப்புத் தெரிவிக்காமல் இருக்கின்றீர்கள் என்பது நமக்குத் தெரியும்..
அருமை நாயகம் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களுக்கு மறைவானவற்றை அறியும் ஆற்றல் இருப்பதாக நம்பும் ஒருவரைக் காபிர் என்று தீர்ப்பளித்துள்ள மேற்க்கூறிய உலமாக்களுக்கு மறைவானவற்றை அறியும் ஆற்றல் அவர்கள் மரணமான பின்னர் இருப்பதாக யாராவது சொன்னால்? அவரும் காபிர் என்றுதானே அர்த்தம்.
தேவபந்த் தாருல் உலூம் மதரசாவின் தலைவராக மௌலவி ரபீஉத்தீன் அவர்கள் பணியாற்றிக்கொண்டிருந்த காலப்பகுதியில் கல்லூரியின் ஆசிரியர்கள் மத்தியில் சிறு தகறாரு உருவானது. கல்லூரியின் அதிபர் மௌலவி மஹ்மூத் ஹசனும் இதில் இணைந்து கொண்டதால் தகறாரு நீளத் தொடங்கியது.
இப்படியானதொரு இக்கட்டான சூழ்நிலையில் ஒருநாள் ஸுபுஹ் தொழுகையின் பின்னர் மௌலவி ரபீஉத்தீன் அவர்கள் கல்லூரியில் இருக்கையில் மௌலவி மஹ்மூத் ஹசன் அவர்களை அவரது அறைக்குள் வருமாறு அழைத்தார். அதுவொரு குளிர் காலமாகவேறு இருந்தது.
மௌலவி மஹ்மூத் அவர்கள் உள்ளே வந்ததும், எனது போர்வையைப் பாருங்கள் என்றார் அதிபர். அது முழுமையாக நனைந்து இருந்தது. அதிபர் அவர்களும்கூட வியர்வையால் நனைந்து இருப்பதைக்கண்டு அதிசயப்பட்டார். இது பற்றி அதிபர் பின்வருமாறு கூறினார்.
இப்பொழுதுதான் மௌலானா நாநூதவி ரஹ்மாதுல்லாஹி அலைஹி அன்னவர்கள் வந்து இங்கு வந்து சென்றார்கள். அவர்களைக் கண்டதும் வியர்த்துக் கொட்டிவிட்டது. தர்கத்தில் செல்லாது இருக்குமாறு உங்களுக்கு கூறுமாறு சொல்லிவிட்டுச் சென்றார்கள். அதை சொல்லவே உங்களை நான் அழைத்தேன் என்றார். உடனே அதிபரின் கரம் பற்றி தௌபா சொல்லி இதன் பிறகு நான் தகராரில் இறங்கமாட்டேன் என்றும் கூறி சென்றார். நூல்: அர்வாஹே தலாசா பக்கம் 242.
தப்லீக் பிரியர்களே!
மரணமான பின்னரும் மௌலானா நாநூதவி அவர்களுக்கு கல்லூரி பற்றிய கவலை இருக்கிறது. கல்லூரியில் இடம் பெரும் நிகழ்வுகளை அவதானித்துக் கொண்டிருக்கிறார். யார்யார் என்னென்ன செய்கிறார்கள் என்பதையும் அறிந்து கொண்டிருப்பதற்கும் அப்பால் கப்ரில் இருந்து புறப்பட்டு வெளியேறி அவரின் சொந்த தோற்றத்தில் சமூகம் தந்ததை தப்லீக் முன்னோர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்களே இதற்கு உங்கள் பதில் என்ன?
தொடரும்.