தேவபந்த் ஜமாஅத்தின் பிரபலமான அறிஜர்களில் ஒருவரான மௌலவி முனாளிர் அஹ்சன் கைலாணி, சவாநிஹ் காசிமி என்ற பெயரில் மௌலானா காசிம் நாநூதவியின் வாழ்க்கை சரிதையை எழுதினார். அதனை தாருல் உலூம் தேவபந்த் அச்சிட்டு பிரசுரம் செய்தது. அதில் மௌலவி மஹ்மூத் ஹசன் அவர்களை அடிப்படையாகக்கொண்டு பின்வரும் தகவல் அதில் பதிவு சைய்யப்பட்டுள்ளது.
ஒரு தடவை பஞ்சாப் மாநிலத்தில் உள்ளதொரு பகுதிக்கு தேவபந்த் ஆலிம் ஒருவர் சென்றிருந்தார். அவ்வூர் மக்கள் அவரை பள்ளியில் இமாமாக நியமித்தனர். இவ்வாறு சிறப்பாக வாழ்ந்துவரும் சந்தர்பத்தில் அப்பகுதிக்கு மௌலவி ஒருவர் வந்து மார்க்கப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மக்களும் அவர் பேச்சில் கவரப்பட்டு அவரின் விசுவாசிகளாகவே மாறிவிட்டனர். இப்படியானதொரு கட்டத்தில் இவ்வூரின் பள்ளி இமாமாக யார் இருக்கிறார்? என மக்களிடம் அவர் வினவியதற்கு தேவபந்தில் கல்வி கற்றதொரு மௌலவி என மக்கள் கூறினார்கள்.
தேவபந்த் என்ற பெயரைக் கேட்டதும் கடுமையாக ஆத்திரப்பட்டு விமர்சிக்கத் துவங்கிவிட்டார். அவர் பின்னால் தொழ முடியாது. அவர் கொள்கை பிழையானது. அவர் பின்னால் தொழுத தொழுகைகளை மீட்டித் தொழ வேண்டும். இஸ்லாத்தின் விரோதிகள். அருமை நாயகம் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் விரோதிகள் என்றெல்லாம்கூட சப்தமிடத் தொடங்கிவிட்டார்.
ஊர் மக்கள் பெரிதும் கவலையும் மன உளைச்சலும் அடைந்தனர். வீணாக இந்த இமாமுக்குப் பின்னால் தொழுது விட்டோமே! பணம் காசுகளை செலவு செய்துவிட்டோமே என்றெல்லாம்கூட பேசிக்கொண்டனர். இதனால் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு இமாம் பதில் கூறவேண்டும் என நிர்பந்திக்கப்பட்டார். பெரும் கவலையும் அச்சமும் நிறைந்த நிலையில் அவரோடு விவாதிப்பதாக முடிவு செய்து காலம் இடமும் நேரம் என்பன அறிவிக்கப்பட்டது.
இருவரில் ஒருவர் கம்பீரமாகவும் நிறைய நூல்களுடனும் மேடையில் வந்தமர, மற்றவர் தனிமையில் அச்சம் பீதி நிறைந்தவராக வந்தமர்ந்தார். (அவதானிக்க வேண்டிய விடயமாகிறது,)
உரையாடல்கள் இன்னும் ஆரம்பிக்கப்படாத சூழலில் திடீரென அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தேவபந்த் ஆலிம் அருகில் வந்தமர்கிறார். பயப்படாதே! தைரியமாக இரு என்றார். எனக்கும் மனதில் என்னை அறியாது தைரியம் ஏற்பட்டது.
நான் பேசத் துவங்கினேன். நான் என்ன பேசுகின்றேன் என்று தெரியாமல் பேசிக்கொண்டே சென்றேன். பின்னர் கேள்வி பதிலுக்குரிய நேரம் வந்ததும் நான் ஆரம்பத்தில் கேட்ட கேள்விகளுக்கு பிரபல பேச்சாளர் பதில் கூறினாலும் தொடர்ந்து அவரால் பதில் கூற முடியாது தடுமாறினார். திக்குமுக்காடினார். அதிர்சியில் சபையில் இருந்து எழுந்து என்னருகில் வந்து என பாதங்களில் அவர் தலையை வைத்து அழத் துவங்கி விட்டார். ஆழம் அறியாது வாய் போட்டுவிட்டேன். என்னை மன்னித்து விடுங்கள். நான் சொல்வது பிழையானது. நீங்கள் சொல்வதுதான் உண்மையானது என்றார். சபையோர் திகைத்து நிற்கும் அதிர்சியான அந்நேரத்தில் என்னருகில் வந்தமர்ந்த அடையாளம் தெரியாத அந்நபரும் காணமல் போய்விட்டார்.
மௌலானா மஹ்மூத் ஹசன், வந்தவரின் அடையாளங்களை சொல்ல முடியுமாவென்று அவ் ஆலிமிடம் கேட்டபோது அவர் கூறிய அடையாளங்களை அவதானித்துவிட்டு, வந்தவர் வேறு யாரும் இல்லை. மௌலானா காசிம் நாநூதவி அவர்கள்தான் என்றார். அல்லாஹ்தான் அவர்களை உம்மிடம் உமக்கு உதவிட அனுப்பி வைத்துள்ளான் என்றார் மஹ்மூத் ஹசன் அவர்கள். (சவானிஹ் காசிமி பாகம் ஒன்று பக்கம் 330)
சகோதரர்களே சிந்தியுங்கள்!
மௌலவி காசிம் நாநூதவிக்கு கப்ரில் இருக்கும்போது பூமியில் நடைபெறும் நிகழ்வு தெரிந்துள்ளது. இன்ன இடத்தில் இன்ன நபர் அவதிப்படும் நிலையையும் உணர்துள்ளார். கப்ரில் இருந்து வெளியேறி மனித தோற்றத்தில் அவர் விரும்பும் இடம்சென்று பிறரின் கஷ்டங்களுக்கு உதவி செய்துள்ளாரே! இது ஷிர்க் இல்லையா? இது குப்ர் இல்லையா?
அருமை நாயகம் முஜ்தபா சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களுக்கு மறைவானவற்றை அறியும் ஆற்றல் இருக்கிறது. கப்ரில் இருந்துகொண்டு வெளிவரும் சக்தி இருக்கிறது. பிறர்களுக்கு உதவிடும் வல்லமையை அல்லாஹ் வழங்கியுள்ளான் என்று நம்புவது ஷிர்க்கான குப்ரான விடயங்கள் என்றால், ஒரு நபிக்கு இல்லாத ஆற்றல் தேவபந்த் அறிஜர்களுக்கு இருப்பதாக நம்புவதற்குப் பெயர் என்ன?
தொடரும்.....