السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Tuesday 1 May 2018

அமல்கள் உயர்த்தப்படும் மாதம்

eravur

“இவ்விரவில் தீர்க்கமான காரியங்கள் அனைத்தும் பிரிக்கப்படுகின்றன.” அல்குர்ஆன் அத்தியாயம் 44 வசனம் 04

அல்லாஹ்வின் மாபெரும் அருட்கொடையின் பொருட்டினால் நமது வாழ்நாளில் மற்றுமொரு சங்கைமிகுந்த புனித ரமழான் மாதம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ். அதனை வரவேற்கும் விதத்தில் அதற்கு முந்திய மாதமான ஷஃபான் மாதத்தினை நாம் சங்கைப்படுத்த வேண்டியுள்ளது. இது நபி வழியாகும். 

ரமழான் மாதத்திற்கு முந்திய மாதமான ஷஃபான் மாதத்தில் நோன்பு நோற்பது நபிகள் நாயகம் ஸல்லல்லதஹ{ அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களால் வலியுறுத்திக் கடைப்பிடிக்கப்பட்ட ஓர் அமலாகும். ரமழான் மாதம் அல்லாததொரு மாதத்தில் ஸல்லல்லாஹ{ அலைஹி வஆஹி வசல்லம் அவர்கள் அதிகம் நோன்பு நோற்ற மாதம் என்றால் அது ஷஃபான் மாதம் அன்றி வேறில்லை.

அருமை நாயகம் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹ{ அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் ஷஃபான் மாதத்தில் கூடுதலாக நோன்பு நோற்றிருக்கின்றார்கள் என்பதற்குரிய பல சான்றுகள் புகாரி முஸ்லிம் போன்ற நபி மொழிக் கிரந்தங்களில் பதிவாகியிருந்தபோதிலும் அவ்வாறு நோன்பிருந்ததற்கான காரணத்தை பின்வரும் நபி மொழிகளினூடாக அறிய முடிகிறது.

ரமழானை வரவேற்றல்.

“ரமழானுக்குப் பின்னர் நோற்கப்படும் நோன்புகளில் எது சிறந்த நோன்பாகும் என்று ஸல்லல்லாஹ{ அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களிடம் வினவப்பட்டபோதுää ரமழானை கண்ணியப்படுத்தி ஷஃபானில் நோற்கப்படும் நோன்பாகும்” என்று ஸல்லல்லாஹ{ அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் நவின்றார்கள். (திர்மிதி)

அமல்கள் உயர்த்தப்படும் மாதம்

ஹழ்ரத் உஸாமா ரழியல்லாஹ{ அன்ஹ{ அவர்கள் அறிவிப்பதாவதுää அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் ஷஃபான் மாதத்தில் நோற்கின்றபடி ஏனைய மாதங்களில் நோன்பு இருப்பதை நான் கண்டதில்லை. என்று கூறினேன். அதற்கு நாயகம் ஸல்லல்லாஹ{ அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் ரஜபுக்கும் ரமழானுக்கும் மத்தியில் இருக்கும் அந்த மாதத்தினை மக்கள் மறந்து விடுகின்றனர். மேலும் இந்த மாதத்தில் மக்களின் செயல்கள் சர்வலோக இரட்சகனிடம் உயர்த்தப்படுகின்றன. நான் நோன்பு நோற்றிருக்கும்போது என்னுடைய செயல்கள் உயர்த்தப்படுவதை நான் வெகுவாக விரும்புகின்றேன் என்று ஸல்லல்லாஹ{ அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் நவின்றார்கள். (அபூதாவூத்ää நசாயீ)

ஷஃபானுடைய மாதத்தில் மட்டும்தான் ந மது அமல்கள் அல்லாஹ்வின் சன்னிதானத்திறகு உயர்த்தப்படுவதாக நாம் எண்ணிவிடக்கூடாது. ரமழான் மாதத்தில் உயர்த்தப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. ஓவ்வொரு இரவும் பகலும் உயர்த்தப்படுவதாகவும் ஸஹீஹ் முஸ்லிமில் பதிவாகியுள்ளது. அவ்வாறே கிழமையில் ஒவ்வொரு திங்கள் மற்றும் வியாழன் ஆகிய இரு தினங்களில் உயர்த்தப்படுவதாகும் மற்றுமொரு நபிமொழி ஸஹீஹ் முஸ்லிமில் பதவிவாகியுள்ளது.

கிப்லா மாற்றப்பட்ட மாதம்

இந்த மாதத்தின் நடுப் பகுதியில்தான் கஃபாவை முன்னோக்கித் தொழுவதற்கான அனுமதி ஸல்லல்லாஹ{ அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களுக்கு வழங்கப்பட்டதாக இமாம் குர்துபி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் தமது தப்சீருல் குர்ஆனில் குறிப்பிடுகிறார்கள்.

ஸலவாத்தின் மாதம்

“நிச்சயமாக அல்லாஹ்வும் அவனது அமரர்களும் நபி நாயகம் (ஸல்லல்லாஹ{ அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள்) மீது ஸலவாத்துச் சொல்கின்றார்கள். ஈமான் கொண்ட விசுவாசிகளே! நீங்களும் அவர் மீது ஸலவாத்ää சலாம் சொல்லுங்கள் என்ற திருமறை வசனம் ஷஃபான் மாதத்தில் இறங்கியதாக இமாம் ஷிஹாபுத்தீன் அல் கஸ்தலானீ (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் அல் மவாஹிப் என்ற நூலில் பதிவு செய்கின்றார்கள்.

இதுபோன்ற காரணங்களுக்காக ஷஃபான் மாதத்தில் அதிகமான நோன்புகளை ஸல்லல்லாஹ{ அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் நோற்றிருக்கும்போது நம்மில் எத்தனை பேர் நபி வழியைப் பின்பற்றி இந்த மாதத்தில் நோன்பாளிகளாக இருக்கின்றோம் என்று சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். நாயகம் ஸல்லல்லாஹ{ அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் சொன்னதுபோன்று இந்த மாதத்தினை மக்கள் மறந்து விடுவதையே அதிகம் காண முடிகிறது.

ஸல்லல்லாஹ{ அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் வாழ்க்கையில் விசேட கவணம் செலுத்தப்பட்ட நிலையில் நோற்கப்பட்ட ஷஃபான் மாத நோன்பினை நாம் மறந்துபோயுள்ள இச்சநத்தர்ப்பத்தில் மீண்டும் அந்த ஸ{ன்னத்தினை பேணிப் பாதுகாத்து நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பு இஸ்லாமியர்களான நமக்கிருப்பதை நாம் மறந்து விடக்கூடாது.

“எனக்குப் பின் மறக்கடிக்கப்பட்ட எனது ஸ{ன்னதினை யாராவது மீள கட்டியெழுப்பி அதனை பிறர்கள் செயல்படுத்துவார்களானால் அவர்களுக்கு வழங்கப்படும் அதே கூலி மீளக் கட்டியெழுப்பியவருக்கும் வழங்கப்படும் என்று ஸல்லல்லாஹ{ அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் நவின்றுள்ளார்கள். (திர்மிதி)

நபி வழியைப் பின்பற்றி இம்மாதத்தில் அதிகம் நோன்பு நோற்ப்பதற்கான வசதி வாய்ப்புக்கள் இல்லையென்றாலும் குறைந்த பட்சம் ஒரு நோன்பாவது நாம் இம்மாதத்தில் நோற்க வேண்டாமா? இதனடிப்படையில் ஷஃபான் மாதத்தில் ஒரு நோன்பாவது நோற்று ஸல்லல்லாஹ{ அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் அந்த ஸ{ன்னத்தினை ஹயாத்தாக்க விரும்புகின்றவர்கள் இம்மாதத்தின் நடுப் பகுதியில் நோன்பிருப்பது சிறந்ததாகும். ஷஃபான் மாதம் பிறை 16 ஆம் தினத்திலிருந்து வழமைக்கு மாற்றமான எந்தவொரு நோன்பினையும் நோற்கலாகாது. காரணம்ää

ரமழான் மாதத்திற்கு ஓரிரு நாட்கள் மீதி இருக்கும்போது (ஷஃபானின் இறுதியில்) நீங்கள் நோன்பு நோற்க வேண்டாம். (திங்கள்ää வியாழன்) வழமையாக நோன்பு நோற்பவர் தவிரää அவர் அந்நாளில் நோன்பு நோற்கலாம் என்று நாயகம் ஸல்லல்லாஹ{ அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் நவின்றுள்ளார்கள்.  (புகாரி)

ஷஃபான் மாதத்தின் நடுப்பகுதிக்குப் பின் நீங்கள் நோன்பு நோற்க வேண்டாம் என்றும் ஸல்லல்லாஹ{ அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (திர்மிதி) எனவே ஆகக் குறைந்தது இம்மாதத்தின் நடுப் பகுதியில் நோன்பிருக்க முயற்சிப்பதுடன் நமக்காகவும் பிறர்களுக்காகவும் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கவும் வேண்டும்.

இதுபோன்றதொரு இரவில் நாயகம் ஸல்லல்லஹ{ அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் ஜன்னதுல் பகீஃ எனப்படும் அடக்கஸ்தளம் சென்று பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளார்கள். (திர்மிதிää இப்னு மாஜா)

முஷ்ரிக் மற்றும் சமூகத்தில் குழப்பங்களையும் பிரிவிணைகளையும் உருவாக்குகின்றவர்ää குடும்ப உறவுகளைத் துண்டித்து வாழ்பவர்ää பெற்றோர்களுக்கு அநீதிழைப்பவர்கள்ää மதுவுக்கு அடிமையானவர் போன்றவர்களை தவிரவுள்ள ஏனைய சகலரின் பாவங்களையும் அல்லாஹ் இவ்வாறான இரவில் மன்னிக்கின்றான் என்றும் ஸல்லல்லாஹ{ அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் நவின்றுள்ளார்கள். (அஹ்மத்ää பைஹகீ)

ஷஃபான் மாதத்தின் நடுப் பகுதியில் விசேட அமல்கள் புரிவது தொடர்பான பல தகவல்கள் தபரானி, திர்மிதி, பைஹகீ, முஸ்னத் பஸ்ஸார், முஸ்னத் அஹமத் ஆகிய நபி மொழிக் கிரந்தங்களில் பதிவாகியுள்ளதைக் காண முடிகிறது. இதுபோன்ற இரவின் சிறப்புக்கள் அடங்கிய பல நபிமொழிகள் பதிவாகியுள்ளதாகவும் இவ்வாறனதொரு இரவில் முன்னோர்கள் தனித்தனியாக விசேட தொழுகையில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் அஷ்ஷெய்கு இப்னு தைமிய்யா குறிப்பிடுகிறார்.

ஷஃபான் மாதத்தின் நடுப் பகுதியில் நோன்பு நோற்று விசேட வணக்கம் புரிவது தொடர்பாகப் பதிவான தகவல்கள் பொய்யானது என்றும் அவை இட்டுக்கப்பட்ட தகவல்கள் என்றும் கூறி அவையாவும் அணாச்சாரம் என்று சொல்வோமாக இருந்தால் மேற்சொன்ன அறிஞர்களெல்லாம் நரகவாதிகளாகவும் நரகம் செல்வதற்கான வழிகளை அவர்கள் காட்டிச் சென்றதாகவும் சொல்ல நேரிடும்.

எனவே எதிர் வரும் புதன் கிழமை 02-05-2018 ஆம் நாள் நோன்பு நோற்பதோடு இயலுமான வணக்கங்களிலும் ஈடுபடுவதுடன் குடும்ப உறவுகளைப் பேணுவதற்குரிய வழிகளையும் கையாழ்வதற்கு வல்லவன் அல்லாஹ் நம்மனைவருக்கும் தௌபீக் செய்வானாக! ஆமீன்

அபூ தூபா
அந்நிழாமிய்யா மக்ஃபிய்யா அரபிக் கல்லூரி
ஏறாவூர்