السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Tuesday 8 May 2018

மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்

Image may contain: 1 personமெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்

எமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது.
அவர் ஒரு பெளத்த மதகுரு மட்டுமல்லாது, ஒரு அரச பாடசாலையில் அதிபராகவும் கடமையாற்றுகின்றார்.
அவரது உரையின் இடையில் இப்படி ஒரு கதை சொன்னார்...
"நான் அதிபராக கடமையாற்றும் பாடசாலையில், கடந்த வருடம் இரண்டாம் தவனைப்பரீட்சை நடைபெற்றுக் கொண்டு இருந்தது. அந்தப் பரீட்சை நேர சூசியில் வெள்ளிக்கிழமை 12 மணி முதல் 1.30 மணிவரை ஒரு பாடம் போடப்பட்டிருந்தது.
வெள்ளிக்கிழமை காலையிலேயே என்னை சந்திக்க, எனது பாடசாலையில் கற்கும் முஸ்லிம் மாணவர்கள் சிலர் வந்தார்கள்".
"அபே ஹாம்துருவனே...
இன்று 12 மணிக்கு எமக்கு ஒரு பாடத்தில் பரீட்சை இருக்கிறது....
அதே நேரத்தில்தான் எமக்கு ஜும்மா தொழுகையும் இருக்கிறது....
எமக்கு பரீட்சை எழுதாமல் வேண்டுமென்றாலும் இருக்கலாம். ஆனால் பள்ளிக்குப் போகமல் இருக்க முடியாது என்றார்கள்.
அந்த மாணவர்களின் மத நம்பிக்கை என்னை மெய்சிலிர்க்க வைத்தது.
வெறும் 14,15 வயதில் தனது கடவுள் கொள்கை மீதும், அவறுக்கு செலுத்தவேண்டிய கடமை மீதும், எவ்வளவு உறுதியாக இறுக்கிறார்கள் அந்த மாணவர்கள்.
பின்னர் நான் பரீட்சை நேரத்தை மாற்றிக் கொடுத்தேன் என்று, முஸ்லிம்களின் மத நம்பிக்கை குறித்து மிகவும் சிலாகித்துப் பேசினார் அந்த தேரர்.
இஸ்லாத்தின் கோட்பாட்டை தொழுகையின் முக்கியத்துவத்தை ஒரு பெளத்த தேரருக்கு அழகாக சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள், அந்த பாடசாலை மாணவர்கள்.
அவர்களது அந்த செயற்பாட்டினால், ஒரு பெளத்த தேரரே இஸ்லாத்தின் கடவுள் கொள்கை குறித்தும், முஸ்லிம்களின் மத நம்பிக்கை குறித்தும் சிலாகித்துப் பேசும் ஒரு நிலமை உறுவாகி இருக்கின்றது.
இந்த மாணவர்கள் செய்ததுதான் தஃவா.
நாம் எங்கிருந்தாலும் எந்த சூழலில் இருந்தாலும், எமது செயற்பாடுகள்தான் அன்னிய மக்களிடம் இஸ்லாத்தின் தூதை கொண்டு செல்லும் என்பதற்கு இந்த சம்பவம் நல்லதொரு உதாரணம்.
நன்றி
Safwan Basheer