Friday, 17 October 2014
Wednesday, 15 October 2014
தயம்மும் செய்வது எப்படி?
தயம்மும்
இச்சொல் “சுத்தம் செய்வதற்கு மண்ணை நாடுதல்”என்ற பொருளைத் தரும்.தண்ணீரை உபயோகிக்க இயலாத பொழுது மண்ணைக் கொண்டு முகம் மற்றும் கைகளை மஸ்ஹூ செய்வதற்கு இச்சொல் வழங்கப்படுகிறது. அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பனூ முஸ்தலிக் போரிலிருந்து திரும்பி வந்த பொழுது ”தாதுல் ஜைஷ்”என்ற இடத்தில் தங்கினார்கள்.
அருமை நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கனுடன் ஆயிஷா றழியல்லாஹூ அன்ஹா அவர்களும் சென்றிருந்தார்கள்.அவர்களின் கழுத்தணி அவ்விடத்தில் காணாமால் போனாதால் அங்கு இரவு முழுவதும் தங்க நேரந்தது.அப்பொழுது படை வீர்ர்களிடமிருந்த தண்ணீர் ழுழுவதும் தீர்ந்துவிட்டது.அதன் சுற்றுப் பகுதிகளிலும் நீர் கிடைக்க வில்லை.இதனைக்கண்ட படை வீரர்கள் அபுபக்ர் றழியல்லாஹூ அன்ஹூ அவர்களிடம் சென்று தங்களின் மகளால் இத்துயரம் ஏற்பட்டுள்ளது.என்று கூறினார்கள்.இதைக் கேட்டு கோபமுற்ற அபுபக்ர் றழியல்லாஹூ அன்ஹூ அவர்கள் தமது மகளாரிடம் சென்றனர்.அங்கு அண்ணலார் ஆயிஷா றழியல்லாஹூ அன்ஹா அவர்களின் மடியில் தலை வைத்த தூங்கிக் கொண்டிருந்ததை கண்டு தமது மகளை சைகயினால் ஏசினார்கள்.அருமை நாயகத்தின் தூக்கம் கலைந்து விடக்கூடாதென அஞ்சி ஆயிஷா நாயகி அவர்கள் அசையாது வீற்றிருந்தார்கள்.
அண்ணலார் விழித்தெழுந்த பொழுது தயம்மமுடைய திருவசனம் இறங்கியது
(நூல் புகாரி 334: ஆயிஷா (ரலி),முத்தா)
வேறு சில நிகழ்ச்சிகளின் போது இது இறங்கிதாக வேறு சில கருத்துக்களும் காணப்படுகின்றன.நீங்கள் நோயாளியாக அல்லது பயணத்தில் இருந்து உங்களில் எவரும் மலம்,ஜலம் கழித்தால் அல்லது பெண்களைத் தீண்டியிருந்தால்(தொழுகை நேரத்தில் சுத்தம் செய்வதற்கு)தண்ணீர நீங்கள் பெறாவிட்டால் தூய்மையான மண்ணைக்(உங்களின் கைகளினால் தொட்டு அதனைக்)கொண்டு உங்களின் முகங்களையும்,கைகளையும் மஸ்ஹூ செய்து கொள்ளுங்கள்.என்று தயம்ம்முமின் செயல் முறைகளை அல்லாஹூத்தாஆலா தெளிவாக்கியுள்ளான்.(5.6)
புமி முழுவதும் வணங்கும் இடமாகவும் அதணுடைய மண் தூய்மைப்படுத்தக் கூடிய பொருளாகவும் ஆக்கப்பட்டுள்ளது..என திரு நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்(நூல் புகாரி,முஸ்லிம்)
தண்ணீர் இல்லாவிடில் அல்லது நீர் இருந்தும் அது குடிப்பதற்கு தேவைப்பட்டால்,அல்லது வியாதியினால் நீரை உபயோகிக்க முடியாவிட்டால் தயம்மம் செய்து கொள்ளலாம்.
தொடரும்.....01
Tuesday, 14 October 2014
அண்ணல் நபி(ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்)அவர்களின் அழகிய உவமைகள் 02
நல்ல நண்பன்
கஸ்துரி வியாபாரியை போன்றவன்...
நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்: நல்ல நண்பன் நறுமண பொருட்களை விற்கும் ஒரு வியாபாரியை போன்றவன். அவன் நமக்கு எதையும் தரவில்லையென்றாலும், குறைந்தபட்சம் அவன் கடையில் உள்ள சிறந்த வாசனையாவது நம்மை வந்தடையும். தீய நண்பன், கொல்லனின் (இரும்பு வியாபாரியின்) சூளையை போன்றவன். நாம் அதன் நெருப்பிலிருந்து தப்பித்து கொண்டாலும், குறைந்தபட்சம் அதன் புகை நம் உடலையும், உடமையையும் அலங்கோலப்படுத்தி விடும். - (அபு மூசா (ரலி), புஹாரி, முஸ்லிம்.
நபி தோழர்: நல்ல நண்பனையும் - தீய நண்பனையும் நாங்கள் எவ்வாறு அறிந்து கொள்வது?
நபி(ஸல்): நீங்கள் இறைவனை மறந்திருக்கும் போது உங்களுக்கு இறை நினைவூட்டுபவன் நல்ல நண்பன். அவ்வாறு உங்களுக்கு நினைவூட்டாதவன் தீய நண்பன். மேலும் யாரை கண்டவுடன் உங்களுக்கு இறைநினைவு வருகிறதோ அவர் மனிதர்களில் சிறந்தவர்.
மனிதன் தன் வாழ்வுக்கான முன்னேற்ற பாதையில் புதிய நட்புறவுகளை உருவாக்கி கொள்வதை இஸ்லாம் தடை ஏதும் செய்யவில்லை. அவ்வாறு உருவாக்கி கொள்ளும் மனோபாவம் இல்லாத தனிமை விரும்பியை உலகம் தனிமைபடுத்திவிடும் என்பதை இஸ்லாம் நன்றாகவே புரிந்து வைத்துள்ளது.
பறவைக்கு ஒரு கூடு, சிலந்திக்கு ஒரு வலை என்பது போல, மனிதனுக்கு நட்பு மிக அவசியமானது. அந்த நட்புக்கு இஸ்லாம் சில வரை முறைகளை வலியுறுத்துகிறது.
மனிதன் தன் வாழ்வுக்கான முன்னேற்ற பாதையில் புதிய நட்புறவுகளை உருவாக்கி கொள்வதை இஸ்லாம் தடை ஏதும் செய்யவில்லை. அவ்வாறு உருவாக்கி கொள்ளும் மனோபாவம் இல்லாத தனிமை விரும்பியை உலகம் தனிமைபடுத்திவிடும் என்பதை இஸ்லாம் நன்றாகவே புரிந்து வைத்துள்ளது.
பறவைக்கு ஒரு கூடு, சிலந்திக்கு ஒரு வலை என்பது போல, மனிதனுக்கு நட்பு மிக அவசியமானது. அந்த நட்புக்கு இஸ்லாம் சில வரை முறைகளை வலியுறுத்துகிறது.
உறவுகளை இறைவன் நமக்கு நேரடியாக வழங்குகிறான். ஆனால் நண்பர்களை தேர்வு செய்யும் உரிமையை நம்மிடம் தான் வழங்கியுள்ளான் என்பது சிந்திக்கத்தக்கது.
நட்புக்கள் ஒரு மனிதனின் தனிப்பட்ட வாழ்விலும் கூட்டு வாழ்விலும் மிகபெரிய தாக்கங்களை உண்டு பண்ணக்கூடியது. "மனிதன் தன்னுடைய நண்பனின் மார்க்கத்தில் இருக்கிறான்" என்பது நபிமொழி (-அபு தாவூத்).
ஒன்றுபட்ட நற்பண்புகளை போலவே, பல வேளைகளில் ஒன்றுபட்ட தீய பண்புகளும் நட்புக்கு தூண்டுகோலாய் அமைகின்றன. நல்ல பழக்கவழக்கங்களை விட தீய பழக்கவழக்கங்களே விரைவில் ஒருவனிடமிருந்து இன்னொருவனிடம் தொற்றிக்கொள்ளும். இதை நாம் நடைமுறையில் காணமுடிகிறது.
இது போன்ற கொடிய பாதிப்புக்களை மனதில் கொண்டே உம்மி நபி(ஸல்) அவர்கள் மேற்கண்ட உவமானத்தை நமக்கு கூறியுள்ளார்கள்.
(ABu Izza Eravur)
Monday, 13 October 2014
மனம் வீசும் புனித மவ்லீத் கிதாபுகளை உங்கள் கையடக்க தொலைபேசியில் பெற்றுக் கொள்ளலாம்
Play Store இல் Mowlid&dhikr என search செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
Description
This is our small effort for to give a best islamic mowlid and rathib to our islamic brother's and sister's
download it. may allah bless you all.
download it. may allah bless you all.
This app contains mowlid and ratheeb.They are,
subahana mowlid,
mohaideen mowlid,
kwaja mowlid,
hussainar mowlid,
baker alim mowlid, & dikir ,
burdha shariff,
magoos mowlid,
barjani mowlid,
jalaliya dhikr,
hammediya dhikr,
rasithiya dhikr,
tally counter with save & retrive option .
subahana mowlid,
mohaideen mowlid,
kwaja mowlid,
hussainar mowlid,
baker alim mowlid, & dikir ,
burdha shariff,
magoos mowlid,
barjani mowlid,
hammediya dhikr,
rasithiya dhikr,
tally counter with save & retrive option .
Feature's
best UI
page flip effect
title based
zooming faciity
best UI
page flip effect
title based
zooming faciity
Sunday, 12 October 2014
தமிழ் மொழியில் இஸ்லாம் Internet Radio 24 மணி நேர ஒலிபரப்புச் சேவை
மௌலவி M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி M.A
அவர்களின் சொற்பொழிவுகளை கொண்ட
தமிழ் மொழியில் இஸ்லாம் Internet Radio
Android apps வெளியிடப்பட்டுள்ளது. Play Store இல் tmislam என search செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். அல்ஹம்துலில்லாஹ்.
https://play.google.com/store/apps/details?id=com.yesstreaming.tmislam
அவர்களின் சொற்பொழிவுகளை கொண்ட
தமிழ் மொழியில் இஸ்லாம் Internet Radio
Android apps வெளியிடப்பட்டுள்ளது. Play Store இல் tmislam என search செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். அல்ஹம்துலில்லாஹ்.
https://play.google.com/store/apps/details?id=com.yesstreaming.tmislam
அண்ணல் நபி(ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்)அவர்களின் அழகிய உவமைகள்
இறை நம்பிக்கையாளர் கண்ணாடியை போல...
"ஓர் நம்பிக்கையாளர் இன்றொரு இறைநம்பிக்கையாளருக்கு சகோதரர் ஆவார். அவர் தன் சகோதரரை அழிவிலிருந்து காப்பாற்றுகிறார் அவருக்குப் பக்கபலமாக இருந்து பாதுகாக்கின்றார்”
(அபூஹூரைரா(ரளி)முஸ்லிம்).
ஓர்இநம்பிக்கையாளர் இன்னொரு இறைநம்பிக்கையாளருக்கு கண்ணாடியைப் போன்றவர். கண்ணாடி குறைகளை சுட்டிக் காட்டுவது போல அவரிடம் ஏதேனும் குற்றங்குறைகளைக் கண்டால் அதனை அவரிடம் சுட்டிக்காட்டி அவரிடமிருந்து அதை அகற்ற உதவிடும்.
கறைபடிந்த முகத்தோடு கண்ணாடி முன்னால் போய் நாம் நின்றால் கூட்டாமல்- குறைக்காமல் உள்ளதை உள்ளபடி அது நமக்குச் சுட்டிக்காட்டும். அதுபோல பிற சகோதரரிடம் உள்ள குறைகளை பெரிதுபடுத்தாமல் உள்ளதை உள்ளவாறு சுட்டிக்காட்ட வேண்டும்.
கண்ணாடியைப் பொறுத்தவரை அந்த நிமிடத்தின் காட்சியை மட்டுமே எடுத்துக்காட்டும். அதற்கு முந்தியகாட்சி அதில் தெரியாது. அதை போல பிறமனிதனின் கடந்த காலத் தவறுகளை நினைவு கூர்ந்து கிளறக்கூடாது. இறந்த காலத்திற்குச் செல்வது ஆறிப்போன புண்னை மீண்டும் குத்திக் கிளறுவதற்கொப்பாகும்.
கண்ணாடி முன்னால் நாம் நிற்கும் போது மட்டுமே அது நம்குறையைச் சுட்டிக்காட்டும். அதைவிட்டு நாம் அகன்றுவிட்டால அமைதியாகி விடும். அதுபோல பிறர் குறைகளை அவருக்கு முன்னால் நேரடியாகச் சுட்டி காட்ட வேண்டுமே தவிர அவர் இல்லாத சமயங்களில் முதுகுக்குப் பின்னால் விமர்சித்துக் கொண்டிருகக் க் கூடாது.
நம்முடைய குறையை சுட்டிக்காட்டிவிட்டதே என்று கண்ணாடி மீது கோபப்பட்டு அதைநாம் உடைத்து விடுவதில்லை. நம் குறையை கண்டு நான்கு பேர் சிரித்துவிடாத அளவுக்கு முன்கூட்டியே அது தெரியப்படுத்தியதற்காக அதை எப்போதும் பத்திரமாக வீட்டின் முக்கிய பகுதியில் மாட்டி வைத்து அழகு பார்க்கிறோம். அதுபோல நம்முடைய குறைகள் பிறரால் சுட்டிக்காட்டப்படும் போது சுட்டிக்காட்டியவர் மீது எரிச்சல்படாமல் தவறு உண்மை என்றிருக்கும்பட்சத்தில் அதை நாம் திருத்திக் கொளவ் தே சாலச்சிறந்தது.
நம்முடைய தவறு சுட்டிக்காட்டப்படக் காரணமாக இருந்த பார்வையற்ற நபித்தோழர் அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம்(ரளி) தம்முடைய சபைக்கு வரும்போதெல்லாம் அவருக்காக எழுந்து தம் விரிப்பில் இடம் தந்து அமரச்செய்த அண்ணல் நபியின்(ஸல்) அந்த அழகிய நடைமுறைப் பண்பாடு இங்கு நாம் நிணைவு கூறத்தக்கது.
முகக்கறையைச் சரிசெய்யாது நாம் எத்தனை முறை கண்ணாடியைப் பார்த்தாலும் சலிக்காமல் கண்ணாடி அதை மீண்டும் மீண்டும் எடுத்துக்காட்டிக் கொண்டே இருக்கும். அதுபோல பிறர் செய்யும் தவறுகளை 'அதுதான் ஒருதடவை சுட்டிக்காட்டிவிட்டோமே' என்று சும்மா உட்கார்ந்து விடாமல அதை அவர் சரிசெய்து கொள்கின்ற வரை அது குறித்து எச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும். (அதற்காக அவர் நம்மீது கோபப்பட்டாலும் சரியே.)
கண்ணாடியில் இன்னொரு புதிய செய்தியும் உண்டு. பொதுவாக மனிதனுககு; இன்பம்- துன்பம் மாறிமாறிவரும் இவ்விரண்டு அல்லாமல் வேறு எதுவும் நேர்ந்து விடப் போவதில்லை. அவ்வாறு நேரப் போகும் இன்ப-துன்பத்தை முன்கூட்டியே நாம் அறிய முற்பட்டு அதற்காக சந்தோசப்படுவதும்-கவலைப்படுவதும் நல்லதல்ல. இந்த வகையில் கண்ணாடி அடுத்து யார் வருவார் என்று வருங்காலத்தை அறிய சோதிடம் பார்ப்பதில்லை. வருவதை வரும்போது பார்த்து கொள்வது என சும்மா இருந்துவிடும்.
இவ்வளவுஅரியபலகருத்துகளை உள்ளடக்கிய கண்ணாடியை இறைநம்பிக்கையாளருக்கு ஒரேவரியில் உவமை நயத்தோடு கூறியுளள்து நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.












