السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Sunday 12 October 2014

அண்ணல் நபி(ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்)அவர்களின் அழகிய உவமைகள்

இறை நம்பிக்கையாளர் கண்ணாடியை போல...

JMH kalmunai
"ஓர் நம்பிக்கையாளர் இன்றொரு இறைநம்பிக்கையாளருக்கு சகோதரர் ஆவார். அவர் தன் சகோதரரை அழிவிலிருந்து காப்பாற்றுகிறார் அவருக்குப் பக்கபலமாக இருந்து பாதுகாக்கின்றார்” 
(அபூஹூரைரா(ரளி)முஸ்லிம்).

ஓர்இநம்பிக்கையாளர் இன்னொரு இறைநம்பிக்கையாளருக்கு கண்ணாடியைப் போன்றவர். கண்ணாடி குறைகளை சுட்டிக் காட்டுவது போல அவரிடம் ஏதேனும் குற்றங்குறைகளைக் கண்டால் அதனை அவரிடம் சுட்டிக்காட்டி அவரிடமிருந்து அதை அகற்ற உதவிடும். 
கறைபடிந்த முகத்தோடு கண்ணாடி முன்னால் போய் நாம் நின்றால் கூட்டாமல்- குறைக்காமல் உள்ளதை உள்ளபடி அது நமக்குச் சுட்டிக்காட்டும். அதுபோல பிற சகோதரரிடம் உள்ள குறைகளை பெரிதுபடுத்தாமல் உள்ளதை உள்ளவாறு சுட்டிக்காட்ட வேண்டும்.
கண்ணாடியைப் பொறுத்தவரை அந்த நிமிடத்தின் காட்சியை மட்டுமே எடுத்துக்காட்டும். அதற்கு முந்தியகாட்சி அதில் தெரியாது. அதை போல  பிறமனிதனின் கடந்த காலத் தவறுகளை நினைவு கூர்ந்து கிளறக்கூடாது. இறந்த காலத்திற்குச் செல்வது ஆறிப்போன புண்னை மீண்டும் குத்திக் கிளறுவதற்கொப்பாகும்.
கண்ணாடி முன்னால் நாம் நிற்கும் போது மட்டுமே அது நம்குறையைச் சுட்டிக்காட்டும். அதைவிட்டு நாம் அகன்றுவிட்டால அமைதியாகி விடும். அதுபோல பிறர் குறைகளை அவருக்கு முன்னால் நேரடியாகச் சுட்டி காட்ட வேண்டுமே தவிர அவர் இல்லாத சமயங்களில் முதுகுக்குப் பின்னால் விமர்சித்துக் கொண்டிருகக் க் கூடாது.
நம்முடைய குறையை சுட்டிக்காட்டிவிட்டதே என்று கண்ணாடி மீது கோபப்பட்டு அதைநாம் உடைத்து விடுவதில்லை. நம் குறையை கண்டு நான்கு பேர் சிரித்துவிடாத அளவுக்கு முன்கூட்டியே அது தெரியப்படுத்தியதற்காக அதை எப்போதும் பத்திரமாக வீட்டின் முக்கிய பகுதியில் மாட்டி வைத்து அழகு பார்க்கிறோம். அதுபோல நம்முடைய குறைகள் பிறரால் சுட்டிக்காட்டப்படும் போது சுட்டிக்காட்டியவர் மீது எரிச்சல்படாமல் தவறு உண்மை என்றிருக்கும்பட்சத்தில் அதை நாம் திருத்திக் கொளவ் தே சாலச்சிறந்தது.
நம்முடைய தவறு சுட்டிக்காட்டப்படக் காரணமாக இருந்த பார்வையற்ற நபித்தோழர் அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம்(ரளி) தம்முடைய சபைக்கு வரும்போதெல்லாம் அவருக்காக எழுந்து தம் விரிப்பில் இடம் தந்து அமரச்செய்த அண்ணல் நபியின்(ஸல்) அந்த அழகிய நடைமுறைப் பண்பாடு இங்கு நாம் நிணைவு கூறத்தக்கது.
முகக்கறையைச் சரிசெய்யாது நாம் எத்தனை முறை கண்ணாடியைப் பார்த்தாலும் சலிக்காமல் கண்ணாடி அதை மீண்டும் மீண்டும் எடுத்துக்காட்டிக் கொண்டே இருக்கும். அதுபோல பிறர் செய்யும் தவறுகளை 'அதுதான் ஒருதடவை சுட்டிக்காட்டிவிட்டோமே' என்று சும்மா உட்கார்ந்து விடாமல அதை அவர் சரிசெய்து கொள்கின்ற வரை அது குறித்து எச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும். (அதற்காக அவர் நம்மீது கோபப்பட்டாலும் சரியே.)
கண்ணாடியில் இன்னொரு புதிய செய்தியும் உண்டு. பொதுவாக மனிதனுககு; இன்பம்- துன்பம் மாறிமாறிவரும் இவ்விரண்டு அல்லாமல் வேறு எதுவும் நேர்ந்து விடப் போவதில்லை. அவ்வாறு நேரப் போகும் இன்ப-துன்பத்தை முன்கூட்டியே நாம் அறிய முற்பட்டு அதற்காக சந்தோசப்படுவதும்-கவலைப்படுவதும் நல்லதல்ல. இந்த வகையில் கண்ணாடி அடுத்து யார் வருவார் என்று வருங்காலத்தை அறிய சோதிடம் பார்ப்பதில்லை. வருவதை வரும்போது பார்த்து கொள்வது என சும்மா இருந்துவிடும்.
இவ்வளவுஅரியபலகருத்துகளை உள்ளடக்கிய கண்ணாடியை இறைநம்பிக்கையாளருக்கு ஒரேவரியில் உவமை நயத்தோடு கூறியுளள்து நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.