Friday, 10 November 2023
500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மணியில் தமிழ் எழுத்துகள்!!!
Thursday, 9 November 2023
Pension-ஓய்வூதியத்தை முதல் முதலில் ஏற்படுத்தியது
Pension-ஓய்வூதியத்தை முதல் முதலில் ஏற்படுத்தியது ஜெர்மானியர்கள் அல்ல. மாறாக அமீருல் முஃமினீன் உமர் இப்னு கத்தாப் (ரழி) அவர்கள் தாம்.
ஒரு நாள் உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் மதீனாவிலுள்ள சந்தையைக் கடந்து சென்றார்கள். அப்போது வயதான தோல்சுருங்கிய ஒருவர் மக்களிடம் யாசகம் கேட்பதைப் பார்த்தார்கள்.
உமர்(ரழி) அவர்கள் அவரிடம் சென்று நீங்கள் யார் என்று கேட்டார்கள்?
அதற்கு அந்த வயதான மனிதர் சொன்னார், நான் வயதான ஒரு யூதகுடும்பத்தை சேர்ந்தவன். உங்களுக்கு வரி கட்டவும், மீதமுள்ளதை எனது குடும்பத்திற்குக் கொடுக்கவும் மக்களிடம் யாசகம் கேட்கிறேன் என்றார்.
உமர் (ரழி) அவர்கள் இரக்கப்பட்டு மனமுருகிச்
சொன்னார்கள், என்ன நீதி செலுத்துகிறோம் வயதானவர்களான உங்கள்மீது....?
நீங்கள் இளைஞராக இருந்தபோது உங்களிடம் வரியை வாங்கிக்கொள்கிறோம். வயதானபோது அப்படியே விட்டுவிடுகிறோமே...!? என்று சொல்லிவிட்டு
பின்னர் அந்த வயதான யூதரின் கையைப் பிடித்துக் கொண்டு தமது வீட்டிற்கு அழைத்துச் சென்று வேண்டுமளவு உணவளித்தார்கள்.
மேலும் அரசுக் கருவூலப் (பைத்துல் மால்) பொறுப்பாளரிடம் இவருக்கும், இவரைப் போன்ற வயோதிகர்களுக்கும் வரி வாங்கக் கூடாது என்றும் , மேலும் மாதம்தோறும் அவர்களுக்கும், அவர்கள் குடும்பத்தார்களுக்கும் குறிப்பிட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்றும் சட்டமியற்றி கட்டளை பிறப்பித்தார்கள் ...
அல்லாஹ் உமர் ரழி அவர்களை பொருந்திக்கொள்வானாக!
📚 கிதாப் அஹ்லு திம்மதில் இப்னு கய்யிம் ஜவ்ஸிய்யா
📚 கிதாபுல் அம்வால்- லிஅபீ அபீத் அல் காஸிம் இப்னு ஸலாம்..
Tuesday, 7 November 2023
மஸ்ஜிதில் நபவி பள்ளிவாசலுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது எப்படி?
மஸ்ஜிதில் நபவி பள்ளிவாசலுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது எப்படி?
இஸ்லாமிய நாடுகளில் முதல் முதலில் மின்சாரம் வழங்கப்பட்ட இடம் நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்களை அடக்கம் செய்யப்பட்ட மஸ்ஜிதுல் நபவி பள்ளி வாசலாகும். இதற்கும் ஒரு வரலாறு உண்டு.
அதாவது, துருக்கியில் அமைந்துள்ள உஸ்மானியா அரச மாளிகைக்கு மின்சாரம் வழங்க ஜெர்மன் நாட்டை சேர்ந்த மின் பொறியாளர்கள் வருகை தந்தார்கள். அப்போது ஆட்சியில் இருந்த இரண்டாம் சுல்தான் அப்துல் ஹமீது அவர்கள் சொன்னார்கள் எனது மாளிகைக்கு மின்சாரம் வழங்குவதற்கு முன்னர் மஸ்ஜிதுல் நபவி பள்ளி வாசலுக்கு வழங்குங்கள் என்றார் சுல்தான் அப்துல் ஹமீது அவர்கள்.
இதன் பிரகாரம் கி, பி 1908 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி சுல்தான் அவர்களின் உத்தரவின் பேரில் மஸ்ஜிதில் நபவி பள்ளி வாசலுக்கு மின் குமிழிகள் பொருத்தப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டது. அதேநேரம், இந்த பள்ளிவாசலுக்கு முதல் முதலில் ஜெனரேட்டர்களை தனது சொந்த செலவில் வழங்கினார்கள் இந்தியா ஹைதராபாத்தை சேர்ந்த நிஜாம்கள்.
Monday, 6 November 2023
முற்றாக அழித்த பலஸ்தீன போராளிகள்
98 கோடி ரூபா பெறுமதி வாய்ந்த படைகாவி கவசவாகனத்தை ஒன்றரை இலட்சம் பெறுமதி கொண்ட ரொக்கட்டைப் பயன்படுத்தி முற்றாக அழித்த பலஸ்தீனப் போராளிகள்
காலாற்படை வீரர்களை யுத்த களத்துக்கு நகர்த்தும் முழுமையாக மூடப்பட்ட 'PANTHER' கவசவாகனமொன்றின் விலை மூன்று மில்லியன் டொலர்களாகும் (இலங்கை விலை 98 கோடி ரூபா).
உலகத்தில் காணப்படும் மிகப் பாதுகாப்பான படைகாவி கவசவாகனங்களில் ஒன்றாக PANTHER படைகாவி கருதப்படுகிறது.
அமெரிக்கத் தயாரிப்பான இந்த கவசவாகனத்தை 2019 இல் இஸ்ரேல் மேம்படுத்த ஆரம்பித்தது. 2021 ஆம் ஆண்டு முதல் இஸ்ரேல் தனது இராணுவ சேவையில் அதனை ஈடுபடுத்தி வருகிறது.
2023 ஒக்டோபர் கடைசியில் PANTHER படைகாவி கவச வாகனம் காஸாவினுள் தரைவழியாக நுழைய முற்பட்ட வேளை போராளிகளின் தாக்குதலுக்கு உள்ளாகியது. கொர்னெட் வகை ரொக்கட்டைப் பயன்படுத்தி அந்த கவசவாகனத்தை போராளிகள் சுக்கு நூறாக்கினர். இதனால் அதனுள்ளிருந்த 11 இஸ்ரேலிய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
ஆயுத சந்தையில் இஸ்ரேலுக்கு நற்பெயரைத் தேடித் தந்த பல்வேறு ஆயுத தளபாடங்கள் பலஸ்தீனப் போராளிகளினால் அழிக்கப்பட்டுள்ளதால் பொருளாதார ரீதியாக இஸ்ரேல் மேலும் பின்னடையும் என கருதப்படுகிறது.
சுற்றி வர அதி நவீன கமராக்கள் பொருத்தப்பட்ட இந்த கவசவாகனத்தின் மேலும் சில சிறப்பம்சங்கள்.
- தேவையான நேரத்தில் எதிரிகளை குறிபார்த்து சுடுவதற்கு வசதியாக பல துளைகளைக் கொண்டிருக்கிறது.
- 20 படைவீரர்களை காவிச் செல்லக்கூடியது.
- 900 குதிரைவலு சக்தி கொண்டது
- மணித்தியாலத்திற்கு 70 வேகத்தில் பயணிக்கக்கூடியது
- ஒரு படைகாவியின் நிறை பத்தாயிரம் கிலோவாகும் (பத்து டொன்)
- 60 மில்லிமீற்றர் அளவு கொண்ட பீரங்கி தளத்தை கொண்டுள்ளது.
- குண்டுகள் மற்றும் துப்பாக்கிகளை போதுமானளவு வைத்திருப்பதற்கான சேமிப்பகத்தையும் கொண்டுள்ளது
Monday, 19 December 2022
வருடாந்த கந்தூரிவிழா
மஃஆனிமுல்_முஸ்தபா_அறபுக்_கல்லூரியின்_வருடாந்த_கந்தூரி_விழா
ஏறாவூர் மஃஆனிமுல் முஸ்தபா அறபுக் கல்லூரியில் அஸ்ஸெய்யிது குத்புத்தீன் முத்து கோயா தங்கள் (அந்தரிய்யி), அஸ்ஸெய்யித் முஹம்மது ஜலாலுத்தீன் (பூங்கோயாத் தங்கள்), மௌலானா மௌலவி அல்ஹாஜ் முஹம்மது அலி சைபுத்தீன் ஆலிம், ஆகியோரின் ஞாபகார்த்த கந்தூரி விழா 2022-12-18ஆம் திகதி நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை மஃஆனிமுல் முஸ்தபா அறபுக் கலாசாலையில் (ஸூபி மன்ஸில்) மௌலானா மௌலவி அல்ஹாஜ் அஸ்ஸெய்யித் பீ.ஏ முஹம்மது ஸைபுத்தீன் ஆலிம், மௌலானா மௌலவி அல்ஹாபிழ் ஏ.நாகூர் மீரான், மௌலானா மௌலவி அல்ஹாஜ் எம்.ஏ.எஸ் அபூபக்கர் ஹம்மாது ஆலிம் ஆகியோரின் தலைமையில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் ஏறாவூர் நகரசபையின் கௌரவ தவிசாளர் #MS_நழிம், முன்னாள் இராஜாங்க அமைச்சர் அல்ஹாஜ் செய்யத் அலிஸாஹிர் மௌலானா, மஃஆனிமுல் முஸ்தபா அறபுக் கலாசாலையின் ஆசிரியர்கள், மௌலவிமார்கள், மாணவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.
இக்கந்தூரி வைபவத்தில் கத்தமுல் குர்ஆன் தமாம் வைபவம், மௌலிது வைபவம், பேருரை, துஆப் பிரார்த்தனையும் இடம்பெற்றதோடு, புதிய கட்டடத்திற்கான அடிக்கல்லும் நட்டு வைக்கப்பட்டது.
Wednesday, 2 November 2022
மூலிகை பொடி எதற்கு பயன்படும்..?
*நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் எந்த மூலிகை பொடி எதற்கு பயன்படும்..?
*பாதுகாக்க பட வேண்டிய பயனுள்ள குறிப்புகள்..!*
*அருகம்புல் பொடி*
அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி
*நெல்லிக்காய் பொடி*
பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது
*கடுக்காய் பொடி*
குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.
*வில்வம் பொடி*
அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது
*அமுக்கரா பொடி*
தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.
*சிறுகுறிஞான் பொடி*
சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.
*நவால் பொடி*
சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.
*வல்லாரை பொடி*
நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.
*தூதுவளை பொடி*
நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.
*துளசி பொடி*
மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.
*ஆவரம்பூ பொடி*
இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.
*கண்டங்கத்திரி பொடி*
மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.
*ரோஜாபூ பொடி*
இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.
*ஓரிதழ் தாமரை பொடி*
ஆண்மை குறைபாடு,
மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளை படுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா.
*ஜாதிக்காய் பொடி*
நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.
*திப்பிலி பொடி*
உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.
*வெந்தய பொடி*
வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.
*நிலவாகை பொடி*
மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.
*நாயுருவி பொடி*
உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.
*கறிவேப்பிலை பொடி*
கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.ரத்தம் முழுவதும் சுத்தமாகும்.இரிம்புச் சத்து உண்டு.
*வேப்பிலை பொடி*
குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.
*திரிபலா பொடி*
வயிற்று புண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.
*அதிமதுரம் பொடி*
தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.
*துத்தி இலை பொடி*
உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.
*செம்பருத்திபூ பொடி*
அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.
*கரிசலாங்கண்ணி பொடி*
காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.
*சிறியா நங்கை பொடி*
அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.
*கீழாநெல்லி பொடி,*
மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.
*முடக்கத்தான் பொடி*
மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது
*கோரைகிழங்கு பொடி*
தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.
*குப்பைமேனி பொடி*
சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.
*பொன்னாங்கண்ணி பொடி*
உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.
*முருஙகைவிதை பொடி*
ஆண்மை சக்தி கூடும்.
*லவங்கபட்டை பொடி*
கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.
*வாதநாராயணன் பொடி*
பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.
*பாகற்காய் பவுட்ர்*
குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.
*வாழைத்தண்டு பொடி*
சிறுநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.
*மணத்தக்காளி பொடி*
குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.
*சித்தரத்தை பொடி*
சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.
*பொடுதலை பொடி*
பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.
*சுக்கு பொடி*
ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.
*ஆடாதொடை பொடி*
சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.
*கருஞ்சீரகப்பொடி*
சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.
*வெட்டி வேர் பொடி*
நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.
*வெள்ளருக்கு பொடி*
இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.
*நன்னாரி பொடி*
உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.
*நெருஞ்சில் பொடி*
சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.
*பிரசவ சாமான் பொடி*
பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.
*கஸ்தூரி மஞ்சள் பொடி*
தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.
*பூலாங்கிழங்கு பொடி*
குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.
*வசம்பு பொடி*
பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.
*சோற்று கற்றாழை பொடி*
உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.
*மருதாணி பொடி*
கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.
*கருவேலம்பட்டை பொடி*
பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்.
ஒரு ஸ்பூன் போட்டு தண்ணீரில் கலக்கி காலை,இரவு சாப்பாட்டுக்கு பின் சாப்பிடவும்.
இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..?
1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.
2. இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.
3. இஞ்சியை சுட்டு உடம்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.
4. இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.
5. இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.
6. இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.
7. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.
நன்றி














