மஸ்ஜிதில் நபவி பள்ளிவாசலுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது எப்படி?
இஸ்லாமிய நாடுகளில் முதல் முதலில் மின்சாரம் வழங்கப்பட்ட இடம் நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்களை அடக்கம் செய்யப்பட்ட மஸ்ஜிதுல் நபவி பள்ளி வாசலாகும். இதற்கும் ஒரு வரலாறு உண்டு.
அதாவது, துருக்கியில் அமைந்துள்ள உஸ்மானியா அரச மாளிகைக்கு மின்சாரம் வழங்க ஜெர்மன் நாட்டை சேர்ந்த மின் பொறியாளர்கள் வருகை தந்தார்கள். அப்போது ஆட்சியில் இருந்த இரண்டாம் சுல்தான் அப்துல் ஹமீது அவர்கள் சொன்னார்கள் எனது மாளிகைக்கு மின்சாரம் வழங்குவதற்கு முன்னர் மஸ்ஜிதுல் நபவி பள்ளி வாசலுக்கு வழங்குங்கள் என்றார் சுல்தான் அப்துல் ஹமீது அவர்கள்.
இதன் பிரகாரம் கி, பி 1908 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி சுல்தான் அவர்களின் உத்தரவின் பேரில் மஸ்ஜிதில் நபவி பள்ளி வாசலுக்கு மின் குமிழிகள் பொருத்தப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டது. அதேநேரம், இந்த பள்ளிவாசலுக்கு முதல் முதலில் ஜெனரேட்டர்களை தனது சொந்த செலவில் வழங்கினார்கள் இந்தியா ஹைதராபாத்தை சேர்ந்த நிஜாம்கள்.