Pension-ஓய்வூதியத்தை முதல் முதலில் ஏற்படுத்தியது ஜெர்மானியர்கள் அல்ல. மாறாக அமீருல் முஃமினீன் உமர் இப்னு கத்தாப் (ரழி) அவர்கள் தாம்.
ஒரு நாள் உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் மதீனாவிலுள்ள சந்தையைக் கடந்து சென்றார்கள். அப்போது வயதான தோல்சுருங்கிய ஒருவர் மக்களிடம் யாசகம் கேட்பதைப் பார்த்தார்கள்.
உமர்(ரழி) அவர்கள் அவரிடம் சென்று நீங்கள் யார் என்று கேட்டார்கள்?
அதற்கு அந்த வயதான மனிதர் சொன்னார், நான் வயதான ஒரு யூதகுடும்பத்தை சேர்ந்தவன். உங்களுக்கு வரி கட்டவும், மீதமுள்ளதை எனது குடும்பத்திற்குக் கொடுக்கவும் மக்களிடம் யாசகம் கேட்கிறேன் என்றார்.
உமர் (ரழி) அவர்கள் இரக்கப்பட்டு மனமுருகிச்
சொன்னார்கள், என்ன நீதி செலுத்துகிறோம் வயதானவர்களான உங்கள்மீது....?
நீங்கள் இளைஞராக இருந்தபோது உங்களிடம் வரியை வாங்கிக்கொள்கிறோம். வயதானபோது அப்படியே விட்டுவிடுகிறோமே...!? என்று சொல்லிவிட்டு
பின்னர் அந்த வயதான யூதரின் கையைப் பிடித்துக் கொண்டு தமது வீட்டிற்கு அழைத்துச் சென்று வேண்டுமளவு உணவளித்தார்கள்.
மேலும் அரசுக் கருவூலப் (பைத்துல் மால்) பொறுப்பாளரிடம் இவருக்கும், இவரைப் போன்ற வயோதிகர்களுக்கும் வரி வாங்கக் கூடாது என்றும் , மேலும் மாதம்தோறும் அவர்களுக்கும், அவர்கள் குடும்பத்தார்களுக்கும் குறிப்பிட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்றும் சட்டமியற்றி கட்டளை பிறப்பித்தார்கள் ...
அல்லாஹ் உமர் ரழி அவர்களை பொருந்திக்கொள்வானாக!
📚 கிதாப் அஹ்லு திம்மதில் இப்னு கய்யிம் ஜவ்ஸிய்யா
📚 கிதாபுல் அம்வால்- லிஅபீ அபீத் அல் காஸிம் இப்னு ஸலாம்..