السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Friday, 19 December 2025

படிக்கும் காலத்தில் இருக்க வேண்டிய* *உள்நோக்கம் (நிய்யத்)

படிக்கும் காலத்தில் இருக்க வேண்டிய* *உள்நோக்கம் (நிய்யத்)


 *படிக்கும் காலத்தில் இருக்க வேண்டிய* *உள்நோக்கம் (நிய்யத்) பற்றிய விளக்கம் !* 

•••••••••••••••••••••••••••••

அரபு மூலம்: 

தஃலீமுல் முத அல்லிம்


தமிழில்: 


மௌலவி, பாஸில், *ஏ. எல். பதுறுத்தீன்.* ஷர்க்கி, பரேலவி, ஸூபி, காதிரி, நக்ஷபந்தி.

••••••••••••••••••••••••••••••

          தொடர் : (3)


 படிக்கும் காலத்தில் மாணவனுக்கு கல்வியைப் பற்றிய உள்ளார்ந்த நோக்கம்( நிய்யத்) இருக்க வேண்டும்,ஸஹீஹான ஹதீதில் "செயல்கள் யாவும் உள்ளார்ந்த எண்ணத்தைப் பொறுத்து இருக்கின்றன" என்ற திருநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் கூற்றுக்கு ஒப்ப எண்ணம்தான் அனைத்து செயல்களுக்கும் மூல வேராக இருக்கின்றது, 


றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.


كَمْ مِنْ عَمَلٍ يَتَصَوَّرُ بِصُورَةِ أَعْمَالِ الدُّنْيَا،

وَيَصِيرُ بِحُسْنِ النِّيَّةِ مِنْ أَعْمَالِ الْآخِرَةِ،

وَكَمْ مِنْ عَمَلٍ يَتَصَوَّرُ بِصُورَةِ أَعْمَالِ الْآخِرَةِ،

ثُمَّ يَصِيرُ مِنْ أَعْمَالِ الدُّنْيَا بِسُوءِ النِّيَّة


“எத்தனையோ செயல்கள் உலகச் செயல்களாகத் தோன்றினாலும், நல்ல நிய்யத்தால் அவை மறுமையின் செயல்களாகி விடுகின்றன.

அதேபோல், எத்தனையோ செயல்கள் மறுமையின் செயல்களின் தோற்றத்தில் இருந்தாலும், கெட்ட நிய்யத்தால் அவை வெறும் உலகச் செயல்களாகி விடுகின்றன.”


 அறிவைத் தேடுவதில் மாணவன் 


1- அல்லாஹுத்த ஆலா வின் திருப்பொருத்தம், 


2- மறுமையின் இல்லம்,(சொர்க்கம்) 


 3- தன்னிலிருந்தும் , ஏனைய அறிவிலிகளிலிருந்தும் அறியாமையை அகற்றல், 


 4- சன்மார்க்கத்தை உயிர்ப்பித்தல், 


5- இஸ்லாத்தைப் பாதுகாத்தல் 


 உள்ளிட்ட வையை மனதில் எண்ணிக்கொள்ள வேண்டும், ஏனெனில், இஸ்லாம் அறிவால் தான் நிலைத்திருக்கும், முட்டாள்தனம் இருக்கத்தக்க நிலையில் துறவறமும் தக்வாவும் ஒருபோதும் சீராகுவதில்லை..


"ஹிதாயா" என்ற புகழ்பெற்ற நூலை எழுதிய மேதகு அறிஞர் இமாம் புர்ஹானுத்தீன் றஹ்மத்துள்ளாஹிஅலைஹி அவர்களின் இந்த கவிதைகளைக் கேளுங்கள்.


فَسَادٌ كَبِيرٌ عَالِمٌ مُتَحَنِّكٌ

وَأَكْبَرُ مِنْهُ جَاهِلٌ مُتَسَنِّكُ

هُمَا فِتْنَةٌ فِي الْعَالَمِينَ عَظِيمَةٌ

لِمَنْ بِهِمَا فِي دِينِهِ يَتَمَسَّكُ


பொறுப்பற்ற அறிஞன் மிகப்பெரிய குழப்பக்காறன்,


இதை மிகைத்த குழப்பக்காறன் முட்டாள் வணக்கசாலி,


.தனது மார்க்கத்தில் இவ்விருவரையும் பின்பற்றுபவருக்கு 


 இவ்விருவரும் உலகத்தில் மிகப்பெரிய சோதனையாக இருக்கின்றனர்.


  அறிவைப் பெறுவதன் மூலம் அல்லாஹுத்த ஆலாவின் அருட்கொடை யான புத்தி (عقل) உடல் ஆரோக்கியம் உள்ளிட்ட நிஃமத்துக்களைத்தந்த அல்லாஹ்வுக்கு நன்றி பாராட்டுவதை மாணவன் மனதில் எண்ணிக்கொள்வது அவசியமாகும்.  


அறிவின் மூலம்

 மக்களை தன்பக்கம் கவர்வது,

 உலகத்தின் குப்பை ( செல்வங்)களை திரட்டுவது, அரசரிடமும் ,அவரல்லாதவர்களிடமும் கண்ணியத்தை எதிர்பார்ப்பது உள்ளிட்டவையை நினைக்கக்கூடாது. 


முஹம்மத் இப்னு ஹஸன் றஹ்மத்துள்ளாஹிஅலைஹி கூறுகின்றார்கள்.


لَوْ كانَ النّاسُ كُلُّهُمْ عَبِيدِي لَا اعْتَقَدْتُهُمْ فَتَبَرَّأْتُ مِنْ وَلائِهِمْ، وَمَنْ وَجَدَ لَذَّةَ الْعِلْمِ وَالْعَمَلِ بِهِ قَلَّمَا يَرْغَبُ فِيمَا عِنْدَ النّاسِ.


“மனிதர் எல்லோரும் எனக்கு அடிமைகளாயிருந்தாலும், நான் அவர்களிடம் சார்ந்திருப்பதாக எண்ணாது; அவர்களது ஆதரவைப் பொறுத்திருக்காமல் விடுவிப்பேன்.


ஏனெனில், அறிவின் இனிமையையும் அதன்படி நடப்பதன் ஆனந்தத்தையும் உணர்ந்தவன், மனிதர்களிடமுள்ள பொருட்களிலும் ஆதாயங்களிலும் பெரிதாக விருப்பம் கொள்ளமாட்டான்.”


 மேதகு இமாம் கீர்த்திமிக்க ஆசான் அஷ்ஷைகு கவ்வாமுத்தீன் ஹம்மாத் இப்னு இப்றாஹீமுஸ்ஸிஙார் அன்ஸாரி றஹ்மத்துள்ளாஹிஅலைஹி இமாமுல் அஃழம் அபூ ஹனீபா றஹ்மத்துள்ளாஹிஅலைஹி அவர்களின் "அமாலி" என்ற நூலிலிருந்து ஒரு கவிதையை நமக்கு சொல்லிக் காட்டுகின்றார் கள்.


مَنْ طَلَبَ العِلْمَ لِلمَعَادِ

فَازَ بِفَضْلِ اللهِ مِنَ الرَّشَادِ

فَيَا لِخُسْرَانِ طَالِبِهِ

لِنَيْلِ فَضْلٍ مِنَ العِبَاد


மறுமையின் வாழ்க்கைக்காக—அறிவைத் தேடுகிறவன்,

அல்லாஹ்வின் கருணையும் நல் வழிகாட்டுதலையும் பெற்று வெற்றி பெறுகின்றான்.


ஆனால், மனிதர்களிடமிருந்து புகழையும், உலக நலன்களையும்

பெறுவதற்காக அறிவைத் தேடுகிறவன் உண்மையிலேயே பெரும் இழப்புக்குள்ளாகின்றான்..


 உண்மைதான்! நன்மையை ஏவி, தீமையை விலக்கவும், சத்தியத்தை நிலைநாட்டவும், மார்க்கத்தின் கண்ணியத்தை உயர்த்தவும் பதவியைத் தேடினால், அதில் தனக்கோ , தனது பேராசைக்கான நோக்கம் இல்லாதிருந்தால்,, நன்மையை ஏவி தீமையைத்தடுக்கும் அளவான பதவியைத்தேடுவது ஆகுமானது, 


மாணவன் கல்வியைத் தேடுவது தொடர்பில் அதிகமாக சிந்திக்க வேண்டியது அவசியமாகும், ஏனெனில், கடின முயற்சி செய்து பெற்ற கல்வியை அழியக்கூடிய அற்ப உலகத்திற்காக அதை செலவு செய்யக்கூடாது,  


றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.


اِتَّقُوا الدُّنْيَا، فَوَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ إِنَّهَا لَسِحْرٌ مِنْ هَارُوتَ وَمَارُوتَ


 “இம்மையை எச்சரிக்கையுடன் தவிர்த்து நடந்து கொள்ளுங்கள்.

முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் உயிர் எவனுடைய கையில் உள்ளதோ அவன்மீது சத்தியமாக!

உலகம் ஹாரூத்–மாரூத் ஆகியோர் செய்த மாயையைவிட மோசமான மாயையுடையதாக இருக்கிறது.”


கவிதை: 


هِىَ الدُّنْيا أَقَلُّ مِنَ الْقَلِيلِ

وَعَاشِقُهَا أَذَلُّ مِنَ الذَّلِيلِ

تُصِمُّ بِسِحْرِهَا قَوْمًا وَتُعْمِي

فَهُمْ مُتَحَيِّرُونَ بِلَا دَلِيلِ


“இந்த உலகம் அற்றப்பத்திலும் அற்மானது,

அதை காதலிப்பவன் கடையனிலும் கடையனாவான்,

அவள் (உலகம்) தனது வித்தையால் பலரை செவிடாகவும், குருடாகவும் ஆக்கிவிட்டாள்,

அவர்கள் வழியறியாமல் தடுமாற்றத்தில் இருக்கின்றார்கள்.


وَيَنْبَغِي لِأَهْلِ الْعِلْمِ أَنْ لَا يُذِلَّ نَفْسَهُ بِالطَّمَعِ فِي غَيْرِ الْمَطْمُعِ وَيَتَحَرَّزَ عَمَّا فِيهِ مُذِلَّةُ الْعِلْمِ وَأَهْلِهِ وَيَكُونَ مُتَوَاضِعًا وَالتَّوَاضُعُ بَيْنَ التَّكَبُّرِ وَالْمَذِلَّةِ وَالْعِفَّةُ كَذَلِكَ وَيُعْرَفُ ذَلِكَ فِي كِتَابِ الْأَخْلَاقِ


தங்களுக்குச் சொந்தமில்லாததில் ஆசைப்பட்டு தங்களைத் தாங்களே இழிவுபடுத்திக் கொள்ளாமலிருப்பது அறிஞர்களுக்கு அவசியமாகும், 

அறிவுக்கும் , அறிஞர்களுக்கும் இழிவைத்தரக்கூடியவையிலிருந்து விலகியிருக்க வேண்டும், பணிவுள்ளவராக இருக்க வேண்டும், பணிவு பெருமைக்கும், இழிவுக்கும் மத்தியிலிருப்பதாகும், கற்பும் அவ்வாறுதான் , ஒழுக்க வியல் (اخلاق) நூற்களில் இதை அறிந்து கொள்ள முடியும். 


அல்அதீபுல் முக்தார் என்று அறியப்பட்ட இமாம் அல் உஸ்தாத் றுக்னுத்தீன் றஹ்மத்துள்ளாஹிஅலைஹி இந்த கவிதையை எனக்கு சொன்னார்கள்.


اِنَّ التَّوَاضُعَ مِنْ خِصَالِ الْمُتَّقِي

وَبهُ الْتَّقِي إِلَى الْمَعَالِي يَرْتَقِي

وَمِنَ الْعَجَائِبِ عَجَبٌ مَنْ هُوَ جَاهِلٌ

فِي حَالِهِ أَهُوَ السَّعِيدُ أَمِ الشَّقِي

المُ كَيَّفَ يُخْتَمُ عُمْرُهُ أَوْ رُوحُهُ

يَوْمَ النَّوَى مُتَسَفِّلٌ أَمْ مُرْتَقِي


وَالْكِبْرِيَاءُ لِرَبِّنَا صِفَةٌ بِهِ

مَخْصُوصَةٌ تَجَنَّبْهَا وَالْمُتَّقِي


“பணிவு என்பது தக்வாவுள்ளவரின் சிறப்புக்குணங்களில் ஒன்றாகும்;

தக்வாவுள்ளவர் இதனால் உயர்ந்த நிலைகளுக்கு ஏறுகிறார்.


தான் பாக்கியவானா?இல்லைஅபாக்கியவானா? என்பதை அறியாத மூடன் தற்பெருமை கொள்வது விசித்திரமான தாகும், 


 மரண வேளையில் தனது ஆயுளும், தனது றூஹும் எப்படி முற்றுப்பெறும்,அது நரகம் செல்லுமா? அல்லது உயர்சொர்க்கம் செல்லுமா?  


பெருமை என்பது ,நமது இறைவனைச் சேர்ந்த தனித்துவமான குணமாகும்;

அதை தக்வாவுள்ளவர் தக்க முறையில் தவிர்க்க வேண்டும்.”


 இமாமுல் அஃழம் அபூ ஹனீபா றஹ்மத்துள்ளாஹிஅலைஹி தங்களுடைய சீடர்களுக்கு இவ்வாறு கூறினார்கள்.


உங்களின் தலைப்பாகைகளை பெரிதாக்குங்கள், இன்னும், உங்களின் ஆடையின் கைகளை விசாலமாக்குங்கள், அறிவையும், அறிவுள்ளவர்களையும் ஏளனமாக அடுத்தவர்கள் பார்க்காதிருக்கவே இவ்வாறு கூறினார்கள்.


இமாமுல் அஃழம் அபூ ஹனீபா றஹ்மத்துள்ளாஹிஅலைஹி தங்களுடைய சீடர் யூஸூப் இப்னு காலித் அஸ்ஸம்தி றஹ்மத்துள்ளாஹிஅலைஹி தங்களுடைய குடும்பத்தாரிடம் செல்லும் போது அவருக்கு எழுதிய "அல் வஸிய்யத்" என்ற நூலை மாணவன் பெற்றுக்கொள்வது அவசியமாகும், தேடினால் அதைப் பெற்றுக்கொள்ள முடியும்

 

எமது ஆசான் ஷைகுல் இஸ்லாம் புர்ஹானுத்தீன் அலி இப்னு அபீபக்கர் கத்தஸல்லாஹு றூஹஹுல் அஸீஸ்.அவர்கள் நான் ஊருக்குத் திரும்பும் வேளை அதை எழுதுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள், நான் அதை எழுதினேன், மக்களோடு உறவைப்பேணிக்கொள்ளும் ஆசிரியருக்கும், முப்திக்கும் இந்த நூல் மிக அவசியமான ஒன்றாகும்‌

Wednesday, 17 December 2025

மாணவனின் கற்றல் ஒழுக்கம்*. 02


 *மாணவனின் கற்றல் ஒழுக்கம்*.

••••••••••••••••••••••••••••••••

அரபு மூலம்: 

தஃலீமுல் முத அல்லிம்.


தமிழில்: 


மௌலவி, பாஸில், *ஏ. எல். பதுறுத்தீன்.* ஷர்க்கி, பரேலவி, ஸூபி, காதிரி நக்ஷபந்தி. (2)|••••••••••••••••••••••••••••••••.  


அறிந்து கொள்! ஒவ்வொரு அறிவுத் துறையையும் கற்றுக்கொள்வது ஒவ்வொரு ஆண், பெண் மீதும் கடமையல்ல! தன் வாழ்க்கையில் அன்றாடம் எதிர் நோக்கும் அவசியமான அறிவுகளைக்கற்பது பர்ழு, உ+ மாக, தொழுகை அவர் மீது கடமையானால், தொழுகையின் பர்ழுகளை பூரணமாக நிறைவேற்றுவதில் எதிர்நோக்கும் அத்தனை சட்டங்களையும் அவர். கற்றுக்கொள்வது அவசியமாகும், 


 இவ்வாறு வாஜிபானவையை நிறைவேற்றுவதற்கு அவசியமானவையைக் கற்பதும் வாஜிபாகும், இன்னும், பர்ழானவையை நிறைவேற்ற எதுவெல்லாம் துணையாக இருக்கின்றதோ அவற்றை கற்பதும் பர்ழாகும், வாஜிபானவையை நிறைவேற்றுவதற்குத் துணையாக எதுவெல்லாம் உள்ளதோ அவற்றைக் கற்பதும் வாஜிபாகும்,  

 

நோன்பிலும் இதுதான் சட்டம், அவரிடம் பணம் இருந்தால், ஸக்காத்திலும் இதுதான் சட்டம், ஹஜ்ஜுக்குச்செல்வதற்கான வசதி வாய்ப்புக்கள் இருந்தால், ஹஜ்ஜிலும் இதுதான் சட்டம், வியாபாரியாக இருந்தால், வியாபாரத்திலும் இதுதான் சட்டம்.


 ஹளறத் இமாம் முஹம்மத் இப்னு முஹம்மத் இப்னு ஹஸன் ஷைபானி றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடத்தில், " நீங்கள் ஸூஹ்து (துறவறம்) பற்றி ஏன் ஒரு நூல் எழுதவில்லை என்று ஒருவர் கேட்டதற்கு, "கொடுக்கல், வாங்கல்," பற்றி ஒரு நூல் எழுதியுள்ளேன், என்று விடை பகர்ந்தார்கள், 


வர்த்தகம், கொடுக்கல், வாங்கல், மற்றும் அன்றாட செயல்பாட்டிலும் , பணத்திலும் சந்தேகங்கள் , (ஷுப்ஹாத்) மக்றூஹுகள் உள்ளிட்டவைத்தவிர்ப்பவர்தான் துறவியாகும், 

இவற்றில் ஈடுபடும் ஒவ்வொருவரும் இதில் ஹறாம் நிகழாமல் பேணிக் கொள்ள வேண்டியது அவர் மீது கடமையாகும், 


இவ்வாறு கல்பின் நிலைகளான தவகுல், ஆல்லாஹுத்த ஆலா வில் சரணடைதல்( انابة) இறையச்சம்(خشية) இறை திருப்பொருத்தம்( رضا) உள்ளிட்டவை அனைத்து நிலைகளிலும் எதிர்நோக்கப்படுவதால் அவை தொடர்பான அறிவைப் பெற்றுக் கொள்வதும் அவசியமாகும், .


அறிவின் சிறப்பு எவருக்கும் மறைந்ததல்ல, அறிவு மனிதனின் தனித்துவமிக்க சிறப்பு, அறிவைத் தவிர்த்து ஏனைய பண்புகளான வீரம், துணிவு, வலிமை, ஈகை, இரக்கம் உள்ளிட்டவையில் மனிதனும் விலங்கும் கூட்டாகின்றன,


அல்லாஹுத்த ஆலா ஹளறத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சிறப்பை மலக்குகளுக்கு மத்தியில் அறிவின் மூலமாகவே தான் வெளியாக்கி ஹளறத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு சுஜூது செய்யுமாறு மலக்குகளுக்குக் கட்டளையிட்டான்,


  அல்லாஹுத்த ஆலாவின் திரு சன்னிதானத்தில் கண்ணியத்தையும் , நித்தியமான வெற்றியையும் அடைவதற்குக் காரணமான நன்மையையும், தக்வாவையும் அடைவதற்குரிய கருவியாக அறிவு இருப்பதனால்தான் அறிவின் தகுதி மேம்பட்டிருக்கின்றது.


 ஹளறத் முஹம்மத் இப்னு ஷைபானி றஹ்மத்துள்ளாஹிஅலைஹி கூறுகின்றாரகள்.


تَعَلَّمْ فَإِنَّ الْعِلْمَ زَيْنٌ لِأَهْلِهِ

فَضْلٌ وَعُنْوَانٌ لِكُلِّ الْمَحَامِدِ


وَكُنْ مُسْتَفِيدًا كُلَّ يَوْمٍ زِيَادَةً

مِنَ الْعِلْمِ، وَاسْبَحْ مِنْ بُحُورِ الْفَوَائِدِ


تَفَقَّهْ فَإِنَّ الْفِقْهَ أَفْضَلُ قَائِدٍ

لِلْبِرِّ وَالتَّقْوَى، وَأَعْدَلُ قَاصِدِ


هُوَ الْعِلْمُ الْهَادِي إِلَى سُنَنِ الْهُدَى

هُوَ الْحِصْنُ يُنْجِي مِنْ جَمِيعِ الشَّدَائِدِ


فَإِنَّ فَقِيهًا وَاحِدًا مُتَوَرِّعًا

أَشَدُّ عَلَى الشَّيْطَانِ مِنْ أَلْفِ عَابِدِ


1- கற்று விளங்குக; ஏனெனில் அறிவு அதன் உடையவருக்கு அழகும் மேன்மையும் கொடுக்கும்;

அது அனைத்து நற்குணங்களுக்கும் தலைப்பாகவும், பெருமைகளின் அடையாளமாகவும் விளங்குகிறது.”


2. “நாள்தோறும் அறிவில் ஒரு புதுமை, ஒரு அதிகரிப்பை அடைவதற்கு முயல்க;

நன்மைகளின் பெருங்கடலில் நீந்திக் கொண்டு பலன்களைச் சேர்த்துக் கொள்.”


3. ஃபிக்ஹுக்கலையைக் கற்றுக்கொள்;

ஏனெனில், அது நற்காரியத்திற்கும், தக்வாவிற்கும் சிறந்த வழிகாட்டியாகவும், நேர்மையான வழிகளில் நடத்துபவனாகவும் இருக்கிறது.”


4. ஃபிக்ஹு ஞானம் நேர்வழியைக்காட்டும் கலங்கரை விளக்கு!

எல்லா துன்பங்களிலிருந்தும் காத்து விடுவிக்கும் கோட்டை.”


5. “உண்மையோடும் தக்வாவோடும் இருக்கிற ஒரு ஃபகீஹ் (சட்ட அறிஞர்) 

ஷைத்தானுக்கு ஆயிரம் வணக்க சாலிகளைவிட வலிமையானவர்.


அந்தரங்க அறிவைப்போன்று ஈகை, கஞ்சத்தனம், கோழைத்தனம், துணிவு, செருக்கு, பணிவு, கற்பு , விரயம், சிக்கனம் உள்ளிட்ட ஒழுக்க வியல் சார்ந்த அறிவும் அவசியமாகும், செருக்கு, கஞ்சத்தனம், கோழைத்தனம், விரயம் உள்ளிட்டவை ஹறாமாகும், இந்த பண்புகளை விட்டும் தவிர்ந்து கொள்வதற்கு அதற்கு எதிரான பண்புகளை அறிவதன் மூலமே சாத்தியமாகும், ஆகவே, அவைபற்றிய அறிவு ஒவ்வொரு மனிதன் மீதும் பர்ழாகும்.


அதிமேதகு இமாம் ஷஹீத் நாஸிறுத்தீன் அபுல் காசிம் றஹ்மத்துள்ளாஹிஅலைஹி ஒழுக்க வியல் தொடர்பில் மிகச்சிறந்த ஒரு நூலை எழுதியிருக்கின்றார் கள்,ஒவ்வொரு முஸ்லிமும் அவசியம் அதைப்படிக்க வேண்டும்.


 சில நேரங்களில் சம்பவிக்கும் விடயங்கள் பர்ழு கிபாயாவாகும், ஊரிலுள்ள சிலர் அதை நிறைவேற்றினால் ஏனையவர்களின் கடமை நீங்கிவிடும், ஊரில் எவரும் அதை நிறைவேற்றாவிட்டால் , ஊரிலுள்ள அனைவரும் பாவத்தில் பங்காளியாவார்கள், ஆகவே, ஊருக்கு அப்போது பொறுப்பு தாரியாக இருக்கும் பிரதிநி அந்தக் கடமையை நிறைவேற்றுமாறு மக்களுக்குக் கட்டளையிடுவதும், அதற்காக அவர்களை வற்புறுத்துவதும் வாஜிபாகும்.,  


சகல நிலைகளிலும் தன்மீது நிகழக்கூடியவையை அறிவது ஒவ்வொருவருக்கும் அத்தியாவசியமான ஆகாரத்தைப் போன்று இருப்பதாகவும்,அவ்வப்போது நிகழுபவற்றை அறிவது , நோய் உள்ளபோது மட்டுமே அதன் தேவை இருக்கும்.ஔடதத்தைப் போன்று இருப்பதாகக் கூறப்படுகின்றது, 


 நட்சத்திரக் கலை- சோதிடக்கலை- நோயைப் போன்றது, அதைக் கற்பது ஹறாமாகும், அது தீங்கு செய்யும், இலாபம் தராது , அல்லாஹுத்த ஆலாவின் கழாக் கத்றை விட்டும் விரண்டோடுவது ஒருபோதும் சாத்தியமாகாது.


,அனைத்து வேளைகளிலும் ஆல்லாஹுத்த ஆலாவை திக்ரு செய்வது, மனக்கிளர்ச்சியோடு ,துஆக்கேட்பது, திருக்குர்ஆனை ஓதுவது, பலாய்களைத் தடுக்கக்கூடிய ஸதகாக்களைக்கொடுப்பது, இம்மையிலும், மறுமையிலும் பலாய்கள், ஆபத்துக்களிலிருந்து அவன் பாதுகாக்கப்படுவ தற்காக , மன்னிப்பையும், ஆரோக்கியத்தையும் கேட்பது, ஒவ்வொரு முஸ்லிமுக்கும் அவசியமாகும், ஏனெனில் , ஒருவருக்கு துஆக்கேட்பதற்கான தௌபீக் கிடைத்தால்,அவரின் துஆ அங்கீகரிக்கப்படாமல் விடப்படுவதில்லை, 


   விதியில் தீர்மானிக்கப்பட்ட சோதனை நடந்தே தீரும், அதில் மாற்றுக்கருத்துக் கிடையாது, ஆயினும், அதை அல்லாஹுத்த ஆலா இலகுவாக்கி வைப்பான், அவரின் துஆவின் பறக்கத்தால் அவருக்கு பொறுமையையும், நேரிய வழியில் உறுதியாக இருக்கும் இஸ்திகாமத்தையும் வழங்குவான்.  


கிப்லாவையும், மற்றும் தொழுகையின் நேரங்களையும் அறியக்கூடிய அளவு நட்சத்திரக் கலையைக் கற்பது ஆகுமானது. மருத்துவக்கலையைப் படிப்பது ஆகுமானது, காரணம், அது ஏனைய காரணங்களைப் போன்ற ஒரு காரணமாகும், அதனால் ஏனைய காரணங்களைக் கற்பது போன்று இதைக் கற்பதும் ஆகுமானதுதான், றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் தங்களுக்கு மருத்துவம் செய்திருக்கின்றார்கள், 


ஹளறத் இமாம் ஷாபி ஈ றஹ்மத்துள்ளாஹிஅலைஹி அவர்கள்பின்வருமாறு கூறியதாக நக்லு செய்யப்படுகின்றது, 


  அறிவுத்துறை இரண்டு,  


1- மார்க்கத்தை அறிவதற்கு பிக்ஹுக்கலை.

 

,2- உடலின் நிலைகளை அறியும் மருத்துவ அறிவு


, இவையல்லாத அறிவுத்துறைகள் சபை அலங்காரமாகும்.


, அறிவு என்பது ஒரு பண்பு, அது எவரிடம் இருக்கின்றதோ, அவர் மூலமாக அது வெளிப்படும். இதுதான் அறிவுக்கான விளக்கமாகும்


அறிவின் நுட்பங்களை அறிவது ஃபிக்ஹுக்கலையாகும்,

ஃபிக்ஹு என்பது தனக்கு நன்மை செய்யக்கூடியதையும், தீங்கு செய்யக்கூடியதையும் அறியக்கூடிய துறை என்று இமாமுல் அஃழம் அபூ ஹனீபா றஹ்மத்துள்ளாஹிஅலைஹி கூறுகின்றார்கள்,


  மேலும் , கூறுகின்றார்கள்,


அறிவுசெயல்படுவதற்குத்தான் ,! ( தவிர, வெறுமனே கற்பதற்கல்ல) மறுமைக்காக அதனைச்செய்யும்போது இவ்வுலகம் தவிர்க்கப்படுகின்றது.


ஆகவே, இவ்வுலகிலும், மறுமையிலும் தனக்கு பயனளிக்கக்கூடியதும், தீங்கு செய்யக்கூடியதுமான விடயங்களைப் பற்றி பாராமுகமாக இல்லாதிருப்பது மனிதனுக்கு அவசியமாகும், ஆகவே, தனக்கு நன்மையான தைச் செய்ய வேண்டும், தீமையானதை விட்டும் தூரமாகிவிடவேண்டும், அவனுடைய அறிவும், புத்தியும் அவனுக்கு எதிரான ஆதாரமாகிவிடக்கூடாது ! அவருக்கான தண்டனையும் இரட்டிப்பாகக்கூடாது, அல்லாஹ்வின் கோபம், அவனுடைய தண்டனை ஆகியவற்றை விட்டும் அல்லாஹுத்த ஆலா விடம் பாதுகாப்புத் தேடுகின்றோம்.


அறிவின் மேன்மைகள், சிறப்புக்கள் பற்றிய திருக்குர்ஆன் வசனங்கள், பிரபலமான ஹதீதுகள் ஏராளமாக இருக்கின்றன, நூல் நீண்டுவிடும் என்று அஞ்சி அவற்றைத் தவிர்த்துள்ளோம்.

மாணவனின் கற்றல் ஒழுக்கம்*


 **تعليم المتعلم وطريق التعلم 


 *மாணவனின் கற்றல் ஒழுக்கம்*   

•••••••••••••••••••••••••••••••••.        


நூலின் பெயர்:


தஃலீமுல் முத அல்லிம் வதரீக்குத் தஅல்லும். 


تعليم التعلم وطريقة التعلم


ஆசிரியர்:

புர்ஹானுத்தீன் ஸர்னூஜி 

றஹ்மத்துள்ளாஹிஅலைஹி.


மறைவு : 

ஹிஜ்ரி 593


நாடு : உஸ்பெகிஸ்த்தான்.


மொழி: அரபு: 


 தமிழில் :

மௌலவி பாஸில் *ஏ . எல். பதுறுத்தீன்* ஷர்க்கி, பரேலவி, ஸூபி, காதிரி, நக் ஷபந்தி.


************************

உலகம் முழுவதிலுமுள்ள மார்க்க கலாசாலைகளில் இந்த நூல் போதிக்கப்படுகின்றது, இந்தநூலில்கூறப்படுவதைமுதலில் ஆசிரியர்களும், மாணவர்களும் பேணி நடந்தார்கள், அதனால் அவர்களின் அறிவிலும், நடத்தையிலும் அபிவிருத்தியும், தக்வாவும் மிளிர்ந்தன.


 ஆனால், 


தற்காலத்தில் மார்க்கல்வி போதிக்கப்படும் மத்ரஸாக்களிலுள்ள ஆசிரியர்களும், மாணவர்களும் மார்க்கக் கல்வியின் நோக்கம், ஒழுக்கம் உள்ளிட்டவை யிலிருந்து வெகு தூரம் அன்னியமாகிச் செல்வதற்கானகாரணம், இந்த நூல் போதனையில் மட்டும் இருப்பதும், செயலில் இல்லாதிருப்பதுமாகும்,


ஆசிரியர்கள் ஊதியத்திற்காக கற்பிக்கின்றனர், மாணவர்கள் பெற்றோரின்வற்புறுத்தலுக்காக கற்கின்றனர்.

இருவரின் நோக்கமும் கல்வியின் பயனை அடையத் தவறிவிட்டன , ஆகவேதான், இப்போது மத்ரஸாக்களில்கற்றுவெளியேறுபவர்களின் அறிவில் அபிவிருத்தி இல்லை, நடத்தையில் சீர்மை இல்லை, எண்ணத்தில் பரிசுத்த மில்லை.


 மார்க்க கல்வி தாழ்ந்து தேய்ந்து செல்லும் இக்காலத்தில் இந்நூலின் தேவை அதிகம் உணரப்படுகின்றது, 


தற்காலத்தில் மத்ரஸாக்களின் கல்வி, ஒழுக்கம் தாழ்ந்து செல்வதை அனைவரும் அனுபவ ரீதியாக ஏற்றுக்கொண்டாலும் அதற்கான காரணத்தை அறியத் தவறி விடுகின்றனர். 


இந்த நூல் அந்த காரணத்தை நன்கு படம் பிடித்துக் காட்டுகின்றது, எனவேதான் இதைப் படித்து மாணவர்களும் , ஏனையவர்களும் பயன் பெற வேண்டும் என்பதை நாடி இதனை தமிழாக்க முடிவு செய்தேன். 


கிருபையுள்ள றஹ்மான் எனது முயற்ச்சியை நிறைவேற்றித் தருவானாக! ஆமீன், 


 இந்த நூலில் உள்ளபடி ஒழுகி நடக்க , படிக்கின்றவர்களுக்கு தௌபீக் செய்வானாக ஆமீன்.

•••••••••••••••••••••••••••••••••. (1)


மனிதர்களை அறிவாலும் நற்செயலாலும் அகிலத்தார்கள் அனைவரையும் விட சிறப்பாக்கி வைத்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஸலவாத்தும், சலாமும் அரபிகள், அரபுகளல்லாத அனைவருக்கும் நாயகமான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் மீதும், இன்னும், அறிவு,, ஞானத்தின் ஊற்றுக்களான அன்னாரின் குடும்பத்தினர்கள், இன்னும், அன்னாரின் தோழர்கள் அனைவர்கள் மீதும் உண்டாவதாக! 


ஹம்து, ஸலவாத்திற்குப்பின், 


எனது காலத்தில் அதிகமான மாணவர்களைப் பார்க்கின்றேன், அவர்கள் அறிவைப் பெற்றுக்கொள்வதற்காக கடினமாக முயற்சி செய்கிறார்கள், அறிவையோ, அதன் செயல், அதை ப் போதித்தல் உள்ளிட்ட அதன் பலாபலன்களை அடையாமல் இருக்கின்றனர், இதற்கான அடிப்படைக்காரணம் அறிவைப் பெற்றுக்கொள்ளும் வழிகளில் தவறு செய்கின்றனர், 

இன்னும், அதன் நிபந்தனைகளை ப் பேணாமலிருக்கின்றனர்,


பிழையான வழியை எடுத்துக் கொள்ளும் எவரும் வழிதவறவே செய்வார்கள், சொற்பமான, அல்லது மகத்தான எதையும் அவர்கள் அடைய மாட்டார், ஆகவே, நான் நூற்களில் படித்த, இன்னும், அறிவும், ஞானமுமிக்க எனது ஆசான்களிடமிருந்த நான் செவிமடுத்த கற்றல் வழிகளை அவர்களுக்கு விளக்கவேண்டும் என்று என் மனம் விரும்பியது, இதனால் , எனக்கும், அதில் ஆர்வமுள்ளவர்களுக்கும் மறுமையில் வெற்றியும், விமோசனமும் கிடைக்க வேண்டி பிரார்த்தித்து அல்லாஹுத்த ஆலா விடத்தில் உதவி தே டியவனாக இந்த நூலை ஆரம்பம் செய்கின்றேன். 


இந்த நூலுக்கு تعليم التعلم طريق التعلم 

"மாணவனின் கற்றல், கற்றலின் வழிகள் " என்று பெயர் வைத்தேன். அதனை பல பிரிவுகளாக்கினேன்,


பிரிவு:- 1 


ஃபிக்ஹு ஞானத்தின் வரைவிலக்கணமும், அதன் சிறப்புக்கள் பற்றிய விளக்கமும்.


பிரிவு. : 2- 


கற்கும் காலத்திலுள்ள எண்ணம் பற்றிய விளக்கம்.


பிரிவு : 3- 


 தேர்வு செய்யும் அறிவு, ஆசிரியர், வகுப்பில் தேர்வு செய்யும் நண்பன், நிலையான மனப்பக்குவம் பற்றிய விளக்கம்.


பிரிவு: 4- 


அறிவையும், அறிவாளிகளையும் கண்ணியப் படுத்துவது பற்றிய விளக்கம்.


பிரிவு: 5-  

 

கடின முயற்சி, ஒழுக்கம், உயர்ந்த குறிக்கோள் பற்றிய விளக்கம்.


பிரிவு :6- 


“பாடத்தைத் தொடங்குவது, அதன் அளவு (எவ்வளவு படிக்கவேண்டும்), படிப்பின் நிலைத்தன்மை மற்றும் அதன் ஒழுங்கு பற்றிய விளக்கம்.”


பிரிவு 7-- 


தவக்குல் (அல்லாஹ்வில் பாரம் சாட்டுவது )பற்றிய விளக்கம்


பிரிவு : 8- 


“அறிவைப் பெறுவதற்கு ஏற்ற நேரங்கள் பற்றிய விளக்கம்.”


பிரிவு : - 9- 


“அன்பு, கருணை மற்றும் பிறருக்கான நல விருப்பம் பற்றிய விளக்கம் .


 பிரிவு: - 10-


“அறிவு தொடர்பான கேள்விகளை முன்வைப்பது, மற்றும் சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்வது பற்றிய விளக்கம்.


பிரிவு 11- 


“மாணவர் பருவத்தில் தக்வா (அல்லாஹ்வின் அச்சம் ) தூய்மை மற்றும் பக்தியுடன் இருப்பது பற்றியவிளக்கமம்.


பிரிவு 12 '


“நினைவாற்றலை வலுப்படுத்தும் காரணங்கள் மற்றும் மறதியை ஏற்படுத்தும் காரணங்கள் பற்றியவிளக்ககம்


பிரிவு 13- 


“வாழ்வாதாரத்தை (ரிஸ்க்) பெற உதவும் காரணங்களும், அதைத் தடை செய்யும் (கிடைக்காமல் செய்யும்) காரணங்களும் பற்றிய விளக்கம்.


 இதற்கான நல்லுதவி அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கும், அவனிடமே பாரம்சாட்டுகின்றேன், அவன் பக்கமே மீளுகின்றேன்.


           *பிரிவு :1-* 


 *அறிவு, மற்றும் பிக்ஹின் வரைவிலக்கணமும், அதன் சிறப்புக்களும்.********************** 

றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.


طلب العلم فريضة على كل مسلم ومسلمة 


அறிவைப் பெற்றுக்கொள்வது ஒவ்வொரு முஸ்லிமான ஆண், பெண் இருபாலாருக்கும் பர்ழாகும்


விளக்கம்: 


இந்த ஹதீது சுனன் இப்னு மாஜாவின் முன்னுரையில் பதிவு செய்யப்பட்டுள்ளது, . ஆயினும், அதில் مسلمة "முஸ்ஸிலிமான பெண்" என்ற வார்த்தை இல்லை, 

  மேலதிகமான இந்த சொல் எந்தவொரு ஸஹீஹான ஹதீதிலும் பதிவு செய்யப்படாவிட்டாலும் அதன் பொருள் சரியானதுதான் என்று அல்லாமா ஸகாவி றஹ்மத்துள்ளாஹிஅலைஹி தங்களின்"மகாஸிதுல் ஹஸனா " என்ற நூல் பக்கம் 275ல் குறிப்பிடுகின்றார்கள்.


ஹதீது ஷரீபில் குறிப்பிடப்படும் "அறிவு" மார்க்கம் தொடர்பானது தவிர, உலகியல் கல்வி அல்ல! பர்ழு என்பது, "பர்ழு ஐன்" ஒவ்வொருவர் மீதும் கடமை என்பதைக் குறிக்கும், முஸ்லிம்களில் ஆண், பெண் இருவர் மீதும் ஈமான், மார்க்க கடமைகளில் தன்மீது பர்ழானவையையும், அது தொடர்பானவை யையும் நிறைவேற்றுவதற்குத் தேவையான அளவு அறிவைக் கற்பது பர்ழு ஐன், ஏனையவை பர்ழு கிபாயா, இதை

 சமூகத்தில் ஒருவர் அல்லது சிலர் கற்றிருப்பது போதும்.


இமாம் பஙவி றஹ்மத்துள்ளாஹிஅலைஹி தங்களின் ஷறஹுஸ்ஸுன்னா நூல் பக்கம் 90 ல் பின்வருமாறு எழுதுகின்றார் கள்,.


மார்க்கம் தொடர்பான அறிவுகள் இருவகைப்படும்.


1- இல்முல் உஸூல்: علم الاصول 

    ( அடிப்படைகள் பற்றிய அறிவு)


2- இல்முல் புறூஃ علم الفروع 

    ( கிளைச் சட்டங்கள் பற்றிய அறிவு) 


முதல் வகையில் ,


அல்லாஹுத்த ஆலா வின் தௌஹீத், மற்றும் பண்புகளை அறிவது பற்றிய அறிவு,


 நபிமார்களை அறிதல் மற்றும் றஸூமார்களைஉண்மைப்படுத்தல், உள்ளிட்டவை " அறிவைத் தேடுவது பர்ழு" என்பதற்குள் அடங்கும்,


இரண்டாம் வகை மார்க்கத்தின் சட்டங்களை அறிவது பற்றியதாகும்,  


இதுவும் இருவகைப்படும், 

1- பர்ழு ஐன்.


  2- பர்ழு கிபாயா


சுத்தம், நஜீஸ்கள், தொழுகை, நோன்பு உள்ளிட்டவை யின் சட்டங்கள், அன்றாட மார்க்கம் தொடர்பான அவசியமான சட்டங்களை அறிவது பர்ழு ஐன், (மேலதிகமாக க்கற்று) ஆலிமாகுவது, முப்தியாகுவது பர்ழு கிபாயாவிற்குள் அடங்கும்.  


இலக்கண அறிவு , பிக்ஹு தப்ஸீர், ஹதீது உள்ளிட்டவையின் உஸூல்களை அறிவது இந்த அறிவுத்துறையோடு நேரடியாகத் தொடர்பானவையல்ல, இவை அவற்றை அறிவதற்கான கருவிகளாகும்.

  

          தொடரும்....

Friday, 12 December 2025

வரலாற்றை அறியாத இனம் வாழாது*

 


.*வரலாற்றை அறியாத இனம் வாழாது*


     "உலகம் மூமீனுக்கு சிறைச்சாலை"


ஆற்காடு நவாப் அவர்களுக்கு ஏற்பட்ட சந்தேகம்...!!


ஒரு முறை ஆற்காடு நவாப் அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களின் ஹதீஸை படித்து கொண்டு இருக்கையில் ஒரு வாசகத்தை மட்டும் திரும்ப திரும்ப ஓதினார்கள்,,,

 

இந்த உலகம் காபிர்களின் சொர்க்கம், முஸ்லிம்களின் சிறைச்சாலை....


இப்போது நவாபுக்கு வருத்தம் அதிகமாகி விட்டது. நாமோ பகட்டான அரண்மனை வாழ்க்கை, உயர்ந்த உடை, பலவகை உணவு, செல்வ செழிப்பான வாழ்க்கை என்று வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்...,,,


 ஆனால் அல்லாஹ் முஸ்லிம்களுக்கு இந்த உலகம் சிறைச்சாலை என்று அல்லவா கூறுகிறான் என்று......... 


உடனே ஊரில் உள்ள அத்துனை ஆலிம்கள் மற்றும் உலமாக்களை அழைத்து அவர்களை கண்ணியம் செய்யும் விதமாக விருந்தும் படைத்தார்...!


 அந்த விருந்துக்கு வந்திருந்த அணைத்து ஆலிம்கள், உலமாக்களுக்கு தன் கையாலேயே அவர்கள் கைகளை கழுவ தண்ணீர் ஊற்றினார் நவாப்.!


மன்னர் தண்ணீர் ஊற்றுகிறார் என்று எல்லோரும் பட்டும் படாததுமாக கையை கழுவி விட்டு போய் விட்டார்கள்..!!


 அதில் ஒருவர் பெரியவர் மட்டும் கை, முகம், கால்கள் என்று சாவகசமாக எல்லோரும் வியக்கும் விதமாக நடந்து கொண்டார்கள்... !!


எல்லா ஆலிம்களும், உலமாக்களும் சொன்ன விளக்கங்கள் மன்னருக்கு நிம்மதி தரவில்லை. ..... !!


அந்த ஒரு பெரியவர் மன்னரிடத்தில் உங்கள் கேள்வி என்ன என்று கேட்க அந்த மன்னர் அந்த ஹதீஸின் வசனத்தை கூறினார்...!!


இதை பொறுமையாக கேட்ட அந்த பெரியவர் அந்த மன்னரிடம், ,,,


நீங்கள் தான் மன்னர் ஆச்சே உங்களுக்கு குடிக்கும் பழக்கம் இருக்கா,,, என்று நவாப் அதிர்ந்து போய் உடனே மறுத்தார் மார்க்கத்தில் ஹராம் ஆக்கப்பட்டதை நான் செய்வதில்லை என்று..!!


நீங்கள் பல பெண்களுடன் உறவு வைத்தது உண்டா, நவாப் அதிர்ந்து போய் உடனே மறுத்தார் மார்க்கத்தில் ஹராம் ஆக்கப்பட்டதை நான் செய்வதில்லை என்று..!


நீங்கள் சூது விளையாடியது உண்டா, நவாப் அதிர்ந்து போய் உடனே மறுத்தார் மார்க்கத்தில் ஹராம் ஆக்கப்பட்டதை நான் செய்வதில்லை என்று..!! 


இப்படி ஒவ்வொன்றாக கேட்டு விட்டு பிறகு அந்த பெரியவர் நவாபிடம் கூறினார் ஒரு மன்னர் எதை வேண்டுமானாலும் அனுபவிக்கலாம்,,,


என்று இருந்தும் அல்லாஹ் தடுத்த விஷயத்தை விட்டும் உங்கள் கல்ப்ஹை சிறை வைத்து இருப்பதால் நீங்களும் சிறைவாசிதான்..... கவலை பட தேவை இல்லை என்று சொன்னதும் நவாப் மகிழ்ந்து விட்டார்... !!


அந்த பெரியவருக்கு நவாப் அவர்கள் பொன்னும் பொருளும் கொடுத்தும் அவர்கள் அதை ஏற்க வில்லை, 


அந்த பெரியவரோ எனக்கு எதுவும் வேண்டாம் அப்படி தருவதாக இருந்தால் அல்லாஹ்வின் பாதையில் ஒரு பள்ளிவாசலை மட்டும் கட்டுங்கள் என்று கூறினார்கள்..... 


அது தான் மண்ணடியில் உள்ள "மஸ்ஜிதே மாமூர் பள்ளி வாசல்"


ஸூபுஹானல்லாஹ்..!!


மார்க்க விளக்கம் தந்த அந்த பெரியவர்கள் தான் கீழக்கரையில் மறைந்து வாழும் சதகத்துல்லாஹ் (ரஹ்) அவர்களின் மகனார் வழிவந்த ஹள்ரத்.,சுலைமான் லெப்பை ஆலிம் அவர்கள்.


ஆன்மீகத்தில்...!

                          ✍️ மதுரை.,இஸ்மாயில்.

Monday, 8 December 2025

1806 ல் அடிப்படைவாதிகளால் ஜன்னத்துல் பக்கீயில் சஹாபாக்களின் கப்ருகள் இடிக்கப்பட்ட வரலாறு

 


1744 ஆம் ஆண்டு எமிரேட் ஆப் டிரியா Emirate of Diriyah எனும் அடிப்படை வாத கூட்டணியும்....

1806 ல் அடிப்படைவாதிகளால் ஜன்னத்துல் பக்கீயில் இழைக்கப்பட்ட சஹாபாக்களின் பாரம்பரிய கப்ருகள் இடிப்பும் 

-----------------------------------------------------------------

உலக முஸ்லிம்களின் வரலாற்றிலே பாரிய பாரம்பரிய சேதங்களும் அப்பாவி சூஃபி முஸ்லிம்களின் உயிர் இழப்புகளும் அரங்கேற்றப்பட்டுள்ளன.


உதாரணமாக 2009 ஆம் ஆண்டில் பாக்கிஸ்தானில் தாலிபான் போராளிகள் சூஃபி வழிபாட்டுதலங்கள் மற்றும் கூட்டங்களை குண்டு வீசித்தாக்கி டஜன் கணக்கான அப்பாவி சூஃபி மக்களை கொன்றதையும்,சூபி கவிஞர் ரஹ்மான் பாபாவின் மக்பராவை தாலிபான் போராளிகள் இடித்தனர் என்று UNESCO மற்றும் Thimbuktu செய்திகள் பகிஷ்கரித்த செய்திகளும் மறக்க முடியாத ஒன்று .


ஏன் சிரியா மற்றும் ஈராக்கில் ஆயுதமேந்திய இஸ்லாமிய அடிப்படை வாத குழுகள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் நூற்றுக்கணக்கான சூஃபி மக்பராக்கள் மற்றும் சியாரங்களை அழித்துள்ளனர் என்ற செய்தியை மறக்க முடியுமா 


அல்லது மாலியில் 2012 ஆம் ஆண்டில் "333 புனிதர்களின் நகரம் "என்று அழைக்கப்பட்ட யுனஸ்கோ உலக பாரம்பரிய தளமான டிம்பக்டுவில் உள்ள ஏராளமான சூஃபி மக்பராக்கள் அன்சார் டைன் என்ற அடிப்படை வாத போராளிகளால் தகர்க்கப்பட்ட வரலாற்று செய்திகளை மறக்கமுடியுமா? 


முஸ்லிம்களின் பாரம்பரியங்களை அழிப்பதின் மூலம் மாத்திரமே இஸ்லாத்தை அழிக்கமுடியும் என்ற சதித்திட்டங்கள் ,வெள்ளையர்களின் மனதில் ஆழமாக பதிந்த ஒன்றாகும், ஆனால் சரியான கொள்கை உறுதியின் காரணம் முஸ்லிம்களை அசைத்து பழம் பறிக்க முடியாமல் போனதும் அவர்களின் பலத்த கோரத்தாக்குதல்களுக்கு கனத்த காரணம். 


அதன் விளைவு இப்னு அப்தில் வஹாப் என்பவரது அடிப்படைவாத ஈர்ப்பு மற்றும் இஸ்லாமிய அகீதா சிந்தனையில் ஏற்ப்பட்ட கலப்படம் மற்றும் பேராசை, வெள்ளையர்களின் மாயை துணியில் அவரை மாயச்செய்தது வரலாற்று உண்மை.


இஸ்லாமிய ஆய்வு அறிஞர் ஆதில் முஹம்மதின் கூற்றுப்படி: வஹாபியர்கள் ஜன்னத்துல் பகி ஐ அழித்ததற்கு அரசியல் வேர்கள் காரணம் என்பது போல, இப்னு அப்தில் வஹாபிற்கு அரசியல் பலம் முஹம்மத் பின் சவுத் ஆல் கிடைத்தது.


இன்றைய சவுதி அரேபியாவில் உள்ள மதீனாவில் அமைந்துள்ள மிகப்பழமையான மற்றும் இரண்டு மிக முக்கியமான இஸ்லாமிய மக்பராக்களில் ஒன்றான ஜன்னத்துல் பகி 1806 களில் அங்கே சஹபாக்களின் கப்ருகளுக்கு மேல் அடையாளச்சின்னங்கள் இருப்பது கூடாது ஷிர்க் என்ற புரட்சியை இந்த அடிப்படை வாதிகளின் சீடர்களால் வெள்ளையர்களின் கனவுபோல் இடித்து தகர்க்கப்பட்டன .


19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பாரிய புனரமைப்பிற்கு பிறகு 1925 ல் மீண்டும் அடிப்படைவாதிகளால் நமது நபிகளாரின் இஸ்லாமிய பாரம்பரிய ஆன்மீக குடும்பங்கள் மற்றும் குலபாக்கள் அடங்கப்பெற்றுள்ள ஜன்னத்துல் பகி அழிக்கப்பட்டது, சவுதி வம்சத்தினருக்கும் டிரியா எமிரேட் என்று அழைக்கப்படும் வஹாபி இயக்கத்தை பின்பற்றுபவர்களுக்கும் இடையிலான கூட்டணியே முதல் இடிப்பை மேற்க்கொண்டது என்று 

report of Demolition of al -Baqi கூறுகின்றது.


இதனால் ஹசன் இப்னு அலி,அலி இப்னு ஹுசைன் முஹம்மது அல் பகீர் மற்றும் ஜாஃபர் சாதிக் அலைஹிமுஸ்ஸலாம் போன்றோரின் மக்பராக்கள் இடித்து தகர்க்கப்பட்டதன் பின்னணி பாரிய பிரிட்டிஷ் சிந்தானதிக்கம் உள்ளமை குறிப்பிததக்கது.


அதே போலவே இரண்டாவது தடவையும் ஜன்னத்துல் பகியில் சவுதி வம்சத்தினராலும் வஹாபிசத்தை பின்பற்றுபவர்களாலும் ஆளப்பட்ட நஜ்த் சுல்தானகத்தின் அடிப்படைவாத குழுக்களின் ஆதிக்கம் இரண்டாவது முறையும் பாரம்பரிய சஹபாக்களின் மக்பரா ஆக்கிரமிப்பு இடிப்பை மேற்கொண்டதும் பாரிய வரலாற்று விளையாட்டாகவே பார்க்கப்படுகிறது.


ஆனால் 14 நூற்றாண்டுகளாக நமது இஸ்லாமிய அறிஞர்களினால் அங்கீகரிக்கப்பட்ட இந்த மரபுகளை ஷிர்க் என்றும் பித் அத் என்றும் கூறுவது மிகப்பெரும் வரலாற்று அறியாமையாகும்.


சஹாபி அகீல் இப்னு அபீதாலிபை பற்றி( ரலியல்லாஹு அன்ஹு ) வை வரலாறு படித்தவர்களுக்கு நன்றாக பரிச்சியம் உள்ள மனிதர், அதாவது இஸ்லாமிய வரலாற்று பாரம்பரியங்கள் மற்றும் இஸ்லாமிய தொல்லியல்கள் இவரின் வீட்டில் காணப்பட்டுள்ளது என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளதின் படி, தாரீகுள் மதீனா 1/120 ம் பக்கத்தில் குறிப்பிட்ட வரலாற்று செய்தியை பாரிய ஒரு விடயமாக வரலாற்று ஆய்வாளர்கள் மேற்க்கொள் காட்டியுள்ளனர்.


அதாவது சஹாபி அகீல் ரலி ஒரு நாள் தனது வீட்டில் ஒரு கிணற்றை தோண்டும்போது அங்கே நபிகளாரின் மனைவியரில் ஒருவரான உம்மு ஹபீபா பிந்த் சஹ்ர் இப்னு ஹர்ப் என்பவரின் பெயர் பொறிக்கப்பட்ட கல்லை அக்குழியில் கண்டார்கள், கண்டதும் அப்படியே மண்ணை மூடி அதன் மேல் கட்டடம் ஒன்றை கட்டியதாக வரலாறு காணப்படுகின்றன.


அதே போல இமாம் நவவி تهذيب الأسماء واللغات என்ற கிரந்தத்தில் ஷூஐப் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கப்ரு பாலஸ்தீனில் உள்ளது அதிலே பெரிய கட்டடம் கட்டப்பட்டுள்ளதாகவும் மிக தொலைவில் இருந்து மக்கள் சியாரத்து செய்ய வருகின்றனர் என்றும் குறிப்பிடுகின்றார்கள்.


இவ்வராக சஹபாக்களின் பாரம்பரியங்கள் இருக்கும் போதும், அதே நேரம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தினமும் ஜன்னத்துல் பக்கியிற்கு சென்று அங்குள்ள நபித்தோழர்கள் மற்றும் தனது குடும்பதார்களுக்கும் பிரார்த்தனை செய்யும் போதும் தோன்றாத மார்க்க சுத்திகரிப்பு ஏன் ? இவர்களுக்கு தோன்றியது என்ற கேள்வியே சாலச்சிறந்தது.


20 ஆம் நூற்றண்டுகளின் முன்பு ஜன்னத்துல் பக்கியில் உள்ள சில கப்ருகளில் டோம் போன்ற பெரிய கட்டடங்கள் மற்றும் மக்பராக்கள் இருந்ததாக ஆங்கிலேய வரலாற்று பதிவுகள் காட்டுகின்றன , ஆனால் 1765 ஆம் ஆண்டில் முஹம்மத் பின் சுஊத் இறந்த நேரத்தில் நஜ்தின் பெரும் பகுதி இப்னு சுஊதின் கட்டுப்பாட்டில் இருந்தது என்ற வரலாறும் இப்னு அப்துல் வஹாபின் ஆதிக்கத்தையும் நஜிதின் செல்வாக்கையும் உணர்த்துகின்றது.


இதன் விளைவு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் சொந்த சகோதரன் ஜைத் இப்னுல் கத்தாப் என்ற சஹாபியின் மக்பராவை இப்னு அப்தில் வஹாப் சொந்தக்கரத்தால் இடித்து நொறிக்கினார்.


வட ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு மற்றும் தெற்காசியா முழுவதும் பல்லாயிரக்கணக்கான சூஃபி பாரம்பரிய மக்பராக்கள் இவ்வரான ஆங்கிலேய கட்டுரைகள் கூறுவது போன்று அடிப்படை வாதிகளால் தகர்க்கப்பட்டுள்ளமை மற்றும் சூபி அப்பாவி அறிஞர்கள் நஞ்சு வைத்து கொன்றுள்ளமை குறிப்பிடத்தக்க ஒன்று.


இதனாலேயே "நஜிதிலே குழப்பங்களும் ஷைத்தானின் கொம்பும் வெளிப்படும்" என்ற நபிகளாரின் பொன்மொழியை மறைத்து இன்றைய அடிப்படைவாதிகள் நஜிதை ரியாத் ஆக பெயர்மாற்றம் செய்துள்ளமை மிகப்பெரும் ஊர் பெயர் மாற்று துரோகமாகும்.


நிச்சயம் இவ்வரண இஸ்லாத்தின் பெயரால் அறிமுகப்படுத்தப்படும் குழுக்களிடமிருந்தும் அடிப்படை வாத செயற்பாடுகளில் இருந்தும் நமது வாலிப சமூகம் விழித்தெழ வேண்டும்.


Ash Shaike Nibras Saqafi 

Sri Lanka

Sunday, 7 December 2025

كرامات سيدي جلال الدين السيوطي





《 من كرامات سيدي جلال الدين السيوطي قدس الله سره العزيز 》


قال محمد بن علي الحباك خادم سيدي جلال الدين السيوطي رضي ا

لله عنه أن الشيخ السيوطي قال له يوما وقت القيلولة و هو عند زاوية و مقام الشيخ عبد الله الجيوشي رضي الله عنه بجبل المقطم بمصر المحروسة "بآل البيت المطهرين" :

أتريد أن تصلي العصر بمكة المكرمة بشرط أن تكتم ذلك على الناس حتى أموت ؟

قال فقلت : نعم !!

قال : فأخذ بيدي و قال غمض عينيك فغمضتهما، فرحل بي نحو سبع و عشرين خطوة ثم قال لي إفتح عينيك :

فإذا نحن بباب المعلاة فزرنا مقام السيدة خديجة أم المؤمنين رضي الله عن حضرتها و أرضاها و الفضيل بن عياض و سفيان بن عيينة و غيرهم رضوان الله عليهم و دخلت الحرم فطفنا و شربنا من ماء زمزم و جلسنا خلف المقام حتى صلينا العصر


ثم قال لي سيدي جلال الدين السيوطي رضي الله عنه :

يا فلان!! ليس العجب من طيّ الأرض لنا و إنما العجب من كوْن أحد من أهل مصر المجاورين لم يعرفنا 

ثم قال لي :

إن شئت تمضي معي و إن شئت تقيم حتى يأتي الحج!! 

قال فقلت : اذهب مع سيّدي ، فمشينا إلى باب المعلاة 

و قال لي :

إغمض عينيك !! فغمضتهما فهرول بي سبع خطوات ،

ثم قال لي : إفتح عينيك!! فإذا نحن بالقرب من مقام سيدي الجيوشي رضي الله عنه على قمة جبل المقطم فنزلنا إلى مقام سيدي عمر بن الفارض في وادي جبل المقطم 


المصدر : "شذرات الذهب" لإبن العماد الحنبلي


و الجدير بالذكر أيضاً أن هناك مقامان لسيدي جلال الدين السيوطي رضي الله عنه مقام في مدينة اسيوط بصعيد مصر و مقام آخر بالقرب من ميدان السيدة عائشة رضي الله عنها بمدينة القاهرة 


مدد يا أهل المدد


و صل اللهم و سلم و زد و أنعم و بارك على الحبيب المصطفى و آله 💚

 #إشراقات_صوفية