السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Wednesday, 13 February 2019

குத்துச்சண்டை வீரர் முஹம்மது அலி

குத்துச்சண்டை வீரர் முஹம்மது அலி
குத்துச்சண்டை வீரர் முஹம்மது அலி தன் மகளுக்கு வழங்கிய இறுதி அறிவுரை என்ன தெரியுமா ??

மறைந்த அமெரிக்க குத்துச் சண்டை வீரர் முஹம்மது அலியின்
மகள் ; தன் தந்தையை பார்ப்பதற்கு வீட்டிற்கு சென்றபோது மகளின் ஆடை சிறிது கவர்ச்சியாக இருந்துள்ளது.

அதற்காக தன் மகளுக்கு எப்படி அறிவுரை கூறியுள்ளார் என்பதை அவரின் மகள் வெளியிட்டுள்ளார்.

நானும், எனது தங்கை லைலாவும் தந்தையின் அறைக்குச் சென்றோம்.
வழக்கம்போல், தந்தை கதவிற்குப் பின்னால் ஒளிந்துகொண்டு எங்களை பயமுறுத்துவது போல் நின்றார்.

நாங்கள் உள்ளே சென்றவுடன், எங்களை ஆரத் தழுவி, முத்தமிட்டப் பின்பு, அவர் எங்களை உற்றுப் பார்த்தார்.

எங்களை அருகில் அமர்த்திக்கொண்டு, என் கண்களை நோக்கி நேராகப் பார்த்து,

" ஹானா, இந்த உலகில் மி்க மதிப்பு மிக்கதாக இறைவன் படைத்த அனைத்தும் மறைக்கப்பட்டவையாகவும், இன்னும் பெறுவதற்கு மிகக் கடினமாகவும் தான் உள்ளது.

வைரங்களை எங்கு எடுப்பாய்?

பூமியின் ஆழமான பகுதியில் மறைக்கப்பட்டதாகவும், பாதுகாக்கப்பட்டதாகவும் தான் வைரங்கள் உள்ளன.

முத்துக்களை எங்கு எடுப்பாய்?

கடலின் ஆழமான பகுதியில் அழகான சிப்பிக்குள் மறைக்கப்பட்டதாகவும், பாதுகாக்கப்பட்டதாகவும் தான் முத்துக்கள் உள்ளன.

தங்கத்தை எங்கு எடுப்பாய்?

சுரங்கத்தினுள்ளே, அடுக்கடுக்கான பாறைகளுக்குள்ளே மறைக்கப்பட்ட நிலையில்,

அதை எடுப்பதர்க்கு நீ மிகக் கடினமாக உழைக்க வேண்டும்."
என்னை உற்று நோக்கியவராக,

"உன்னுடைய உடல் புனிதமானது. வைரங்கள், முத்துக்களை விட நீ புனிதமானவள்.
உன் உடலை முறையாக நீ மறைத்துக்கொள்ள வேண்டும்"..

என கூறினாராம் முஹம்மது அலி...

Saturday, 19 January 2019

சஹாபாப் பெண்களின் சமூகப் பங்களிப்புகள்


சஹாபாப் பெண்களின் சமூகப் பங்களிப்பின் கருத்தாளங்களை கட்டுரைப்படுத்த முன் முதலில் சமூகம் என்றால் என்ன? சமூக கட்டமைப்பில் உள்வாங்கப் படுபவர்கள் யார்? என்ற புரிதலுக்கான கேள்விகளுக்கு விடை தொடுக்க முனைகிறேன். தமிழ் அகராதியின் பிரகாரம் ஒரு குறிப்பிட்ட தொழில், துறை, இனம் முதலியனவற்றைச் சேர்ந்தவர்களின் தொகுதியை சமூகம் என வரையரைப்படுத்தலாம். மேற்குறிப்பிட்டவற்றைச் சார்ந்தவர்கள் அச்சமூக கட்டமைப்பில் உள்ளடங்குபவர்கள். ஏன் இதை தலைப்பிற்கு அப்பால் நின்று மிகவும் அழுத்தி விளங்கப்படுத்துகிறேன்? என்றால், சஹாபாப் பெண்களை பொருத்தமட்டில் எச்சமூகத்தை பிரதிபலித்து தமது பங்களிப்பை மேற்கொண்டார்கள்? என்ற வினாவிற்கு விடை காணல் வேண்டும். அதாவது அவர்களை சார்ந்து இருந்த கொள்கையான இஸ்லாமியச் சமூகம் என்பதை தெளிவுபடுத்திக் கொள்வதற்காக வேண்டிதான். மனித நேயம் கொண்டவர்கள் ஒட்டுமொத்த மனித சமூகத்தை பிரதிபலித்துத்தானே தமது பங்களிப்பை செய்திருக்க வேண்டும்.? ஏன் இஸ்லாமிய சமூகத்தை மட்டும் குறிவைத்து தமது பங்களிப்பை சுருக்கிக் கொண்டார்கள்? போன்ற கேள்விகள் எழுவதிலும் தவிர்க்க முடியாது.

இஸ்லாம் ஒட்டுமொத்த உலக சமூகத்திற்குமான வழிகாட்டி என்பதில் சந்தேகமில்லை. அல்லாஹ் தனது திருமறையில் மனித சமூகத்திற்காகவே இந்த குர்ஆனை அருளியுள்ளதாக சொல்கிறான். எனவே இஸ்லாமிய சமூகத்தினுடனான பங்களிப்பு ஒட்டுமொத்த மனித சமூகத்தையும் உள்ளடக்கிவிடும் என்பதில் சஞ்சலம் இல்லை.

சஹாபாப் பெண்கள் சமூக அஸ்திவாரத்தின், சமூகச் சீர்திருத்தத்தின், சமூக முன்மாதிரிகளின் முன்னோடிகள் என்பதில் எல்லின் முளையளவும் சந்தேகமில்லை. மக்கமா மண்ணில் நடப்பட்ட ஏகத்துவ விதை கட்டிப்பாதுகாத்து, சொல்லனா துயரங்களுக்கு முகம்கொடுத்து, இரத்தத்தை உரமாக இட்டு இன்று உயிர்ப்புடன் செளிப்புடன்  விருட்சமாக வானுயரந்திருக்கின்றது என்றால், சஹாபாப் பெண்களின் வகிபங்கு அளவிடமுடியாது. இஸ்லாமிய வெற்றிக்கொடியின் கம்பம் எத்தனையோ வீர சஹாபாக்களின் இரத்தக்கரைகளின் மீதே எழுப்பப்பட்டிருக்கிறது. உயிரை துச்சமாக மதித்து, உயிருக்கு பகரமாக இஸ்லாத்தின் வெற்றியே தமது உயிர் மூச்சு என்ற வீரமுலக்கத்துடன் வீரமரணம் எய்தினார்கள். ஏன்? சஹாபாப்பெண்களும் தமது வீரத்தில் சளைத்தவர்கள் அல்ல என்பதனை இஸ்லாத்திற்கான முதல் வீரமரணத்தை தன்வசப்படுத்திய சுமையா (றழி) அவர்களின் வரலாறு நமக்கு பறைசாற்றுகின்றது. அந்தச் சஹாபாப் பெண்ணின் துணிச்சலான, மார்க்கப்பற்றான உயிர்தியாகத்தின் திருப்புமுனைதான், இஸ்லாம் இன்று உலகம்பூராகவும் பட்டித்தொட்டியெங்கும் வீரியத்துடனும், உத்வேகத்துடனும் 1/3 பங்கு என்ற விகிதாசாரளவில் பரவிக்காணப்படுவதற்கு உந்து சக்தியாக இருந்திருக்கிறது என்பதை மறுக்கவும் மறைக்கவும் முடியாது. உயிரையே விலைக் கொடுத்து மார்க்கத்திற்காக மண்ணரையை தங்குமிடமாக தன்வசப்படுத்திக்கொண்டார்கள் என்றால் சஹாபாப் பெண்கள் சமூகப்பங்களிப்பில் இணைபிரியாத இமைகள் என்பதில் இம்மியளவும் சந்தேகமில்லை. 

மேலும் இஸ்லாமியச் சமூகத்தை வார்த்தெடுத்ததில் (அநியாயங்களுக்கு எதிரான) யுத்தங்களின் பெறுமானம் அவரிவிதமானது. யுத்த வெற்றிகளின் பிரதிபலிப்பு சமூகத்தை இன்னும் திடமாக உறுதிப்படுத்தியது. அன்றைய உலகத்தை வளைத்திருந்த ரோம, பாரசீக வல்லரசுகள் எல்லாம் சஹாபாக்களின் யுத்தவீர மனபலத்தின் முன்னால் வேரற்ற மரங்களாக மூச்சிரைத்து கிடந்தார்கள்.  அவ்வாறான வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த யுத்தங்களில் பெரும்பாலும் சஹாபாப் பெண்கள் ஆயுதமேந்தி கலந்து கொள்ளவில்லை என்றாயினும் யுத்ததிற்கான அனைத்து உதவி ஒத்தாசைகளையும் தாரளமாகவே செய்திருக்கின்றனர். யுத்த களத்தில் கூடவே காயப்பட்ட வீரர்களுக்கு மருத்துவ சிகிச்சைகளையும் இதர அத்தியவசிய கடமைகளையும் குறைவின்றி செய்திருக்கின்றனர் என்பதை ஆதரபூர்வமான கிரந்தங்கள் ஒப்புவிக்கின்றன.

அன்றைய அறியாமைக் காலத்தில் இரண்டாம்தர பிரவிகளாகவே அடையாளப்படுத்தி சமூகத்திலிருந்து ஓரங்கட்டப்பட்ட பெண்ணினத்தை, இஸ்லாம் சமூக அந்தஸ்தோடு பெரும்பாலான துறைகளில் அவர்களை புடம் போட்ட தங்கங்களாக தடம் பதியச்செய்தது. சமூக அங்கீகாரத்தை பெற்றுக் கொண்ட சஹாபாப் பெண்கள் சமூகத்தின் வளர்ச்சிக்காக தம்மையே அர்பணித்தனர். அவ்வகையில் அறிவியல் துறையில் உலகம் வியக்கும் பெண்ணாக அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் திகழ்ந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் நேசத்துக்குறிய துணைவியாக திகழ்ந்த அவர்கள், அறிவின் உச்சத்தையே தொட்டார்கள். இன்னும் சொல்லப்போனால் அவர்கள் வாழ்ந்த காலத்தில் நடமாடும் ஒரு பழ்கலைகலகமாகவே திகழந்தார்கள். நபி (ஸல்) அவர்களோடு தமது வாழ்நாட்களில் அதிக நேரங்களை செலவிட்ட அன்னையவர்கள், நபிகளாரின் வாழ்க்கை முறையின் அரிதான பல அறிவிப்புக்களை சமூகத்தின் சீர்திருத்தத்திற்காக அறிவிப்பு செய்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான ஹதீத்களை அறிவித்த 7 நபித்தோழர்கள் பட்டியலில் அன்னையவர்கள் மூன்றாம் இடத்தில் திகழ்கிறார்கள். 2210 ஹதீத்களை மானிட சமூகத்திற்கு வாழும் வழிகாட்டியாக அறிவித்திருக்கிறார்கள். நபியவர்களின் மறைவிற்கு பின்னர் தாபிஈன்களுக்கு மிகச்சிறந்த மார்க்க விளக்க ஆசிரியையாக வளம் வந்து, அவர்களின் அறிவுப் பசிக்கு தீணி போட்டு, வளரும் சமூகத்தை செம்மைப்படுத்தக் கூடிய கற்றுத்தேர்ந்த கல்வியலாளர்களை கட்டியமைத்துவிட்டுச் சென்றார்கள்.

அதுமட்டுமல்லாமல் சஹாபாப் பெண்கள், இஸ்லாத்தின் வெற்றித்தீபத்தின் எறிபெருளாக தம்மையும் ஈடுபடுத்தி சமூக வெற்றிக்காக உழைத்திருக்கிறார்கள். இஸ்லாத்தின் முதலாவது ஹிஜ்ரத்தான அபீசீனியா ஹிஜ்ரத்தின் போது 83 ஆண்களுடன் சேர்ந்து 19 பெண்களும் தமது பங்கிற்கு பாதங்களை தடம் பதித்திருந்தனர். மேழும் மக்காவிலிருற்து 300 கி.மீ தொலைவிலான மதீனா ஹிஜ்ரத்தின் போது துணைக்கு சஹாபாப் பெண்களும் உடுத்த உடைகலோடு சொந்த மண்ணைவிட்டு வெளியேரிவர்களாக ”முஹாஜிரா” என்ற அந்தஸ்த்தைப் பெற்றுக் கொண்டமை சமூகப் பங்களிப்பின் மயில்க்கல் என்றாலும் மிகையாகாது.

முதலில் புனித இஸ்லாத்திற்குள் பிரவேசித்த அன்னை கதீஜா (ரழி) அவர்கள் அக்காலத்தில் மிகப்பெரும் செல்வச்சீமாட்டியாக வாழ்ந்தார்கள். புனித இஸ்லாத்தின் வளர்சிக்காக தமது செல்வத்தை வாரி இரைத்தார்கள். நபியவர்களுக்கு பக்கத்திலே இருந்து பக்கபலமாக உதவி ஒத்தாசைகளை நல்கினார்கள். கணவனுக்கு நல்ல மனைவியாக குடும்பத்திற்கு சிறந்த தலைவியாக மிளிர்ந்தார்கள்.

உஹத் போரின் போது முஸ்லிம்களிடம் சண்டையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இப்னு கமிஆவிடம் சஹாபாப் பெண்மணியான உம்மு அமாரா (ரழி) அவர்கள் நேருக்கு நேர் மோதினார்கள். இருவரும் பரஸ்பரம் மோதிக்கொள்ள உம்மு அமாரா (ரழி) அவர்களுக்கு உடலில் 12 பலத்த காயங்கள் ஏற்பட்டன. போர்க்களத்தில் எதிரியோடு நேருக்கு நேர் மோதுகின்ற மன வலிமையை அப்பெண் பெற்றிருந்தார் என்றால் சமூகப்ப பங்களிப்பில் இத்தைகைய சஹாபாப் பெண்களின் பங்களிப்பை ஒரு போதும் குறைத்து மதிப்பிட முடியாது.

இவ்வாறு வீரத்தில், பொருளாதாரத்தில், அறிவியலில், ஒழுக்கவியலில், குடும்பவியலில், ஒட்டுமொத்தமாக சமூகவியலில் என்று அனைத்து துறைகளிலும் சஹாபாப் பெண்களின் வாழ்வில் அடுக்கடுக்கான சான்றுகளை நிறையவே காணலாம்.

பெண்கள் என்றாலே ஒரு வித கவர்சிக் கதாபாத்திரமாகவே அடையாளம் காணப்பட்டிருக்கின்ற இக்கால கட்டத்திலும் சரி அக்கால கட்டத்திலும் சரி இஸ்லாம் பெண்கள் ரீதியில் வியக்கத்தகு அற்புதமான சிந்தனைகளை விதைத்து விட்டுச் சென்றிருக்கிறது. ஹிஜாபுடைய சட்டத்தைக் கொண்டு அவர்களுக்குறிய பாதுகாப்பை முதலில் தயார்செய்து விட்டு, அவர்களின் மார்க்கரீதியான அவர்களுடைய வகிபங்கை எதிர்ப்பார்க்கிறது. இதனை அருள் மறையில் அல்லாஹ் மிகத்தெளிவாக இவ்வாறு அடையாளப்படுத்துகிறான்.

இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது; இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; 24:31.

முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களும் ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாக இருக்கின்றனர்; அவர்கள் நல்லதைச் செய்ய தூண்டுகிறார்கள்; தீயதை விட்டும் விலக்குகிறார்கள்; தொழுகையைக் கடைப்பிடிக்கிறார்கள்; (ஏழை வரியாகிய) ஜகாத்தை (முறையாகக்) கொடுத்துவருகிறார்கள்; அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் வழிப் படுகிறார்கள்; அவர்களுக்கு அல்லாஹ் சீக்கிரத்தில் கருணை புரிவான் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். 9:71.

சமூக மாற்றத்தை நோக்கிய அஸ்திவாரத்தை பலமாக இட்ட சஹபாப் பெண்களின் வாரிசுகளான இன்றைய நமது பெண்களின் மார்க்கரீதியான அரும்பணிகள்தான் என்ன? என்றால் மிகவும் குறைவான சதவீத பெண்களே இதில் தேரியவர்களாக நோக்கப்படுகின்றனர். பெருவாரியானவர்கள் தூண்டிலில் சிக்குண்ட மீனைப்போன்று அன்னிய மதக்கலாச்சார தூண்டிலில் சிக்கி சீரழியக்கூடிய பரிதாபத்தையே காண்கிறோம். தவ்ஹீதை சுமந்த உள்ளம் அதனை சீர்குலையாமல் பாதுக்காக்க கடமைப்பட்டவர்கள் அதற்கு வேட்டுவைக்கும் அனாமோதய நடவடிக்கைகளை எவ்வித உளநெறிடலும் அற்றவர்களாக செயல்படுத்துகின்ற காட்சியையே காண்கிறோம்.

 எனவே சமூகப்பங்களிப்பில் முஸ்லிம் பெண்களும் அதீத அக்கரையை செலுத்துதல் வேண்டும். சமூகத்தில் புறையோடிப் போயிருக்கும் இணைவைப்பு, மாற்றுமதக் கலாச்சாரம், மார்க்கத்தின் பெயரில் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் மூடப் பழக்கவழக்கங்கள், சமூகக் கொடுமைகள் என்பனவற்றிற்கு எதிராக எமது சக்திற்கு ஏற்ப ஆகக்குறைந்தளவிலாவது எமது பங்களிப்புகளை முடுக்கிவிட வேண்டும். குறிப்பாக சமூக மாற்றத்தின் ஆறம்பப் பயிற்சிப் பாசறையான வீட்டுச்சூழலில் தமது பெறுமதிவாய்ந்த பிள்ளைகளை சமூக விடிவின், சீரான சமூகக்கட்டமைப்பின் பங்குதாரர்களாக தயார்ப்படுத்தக் கூடிய பொறிமுறைத்திட்டங்களை கொண்டு வழிகாட்டுதல் வேண்டும். வெறுமனே அவர்களுக்கு தொழிழ் வாய்ப்பிற்கான கல்வியை மட்டும் ஊட்டுவதற்கு அப்பால் முதன்மையும், மூலதனமுமாக சமூக அக்கரை கொண்ட, சமூக சீர்திருத்த்த்திற்கான அறிவு சார்ந்த ஆளுமைகளையும் சிறுவயதிலிருந்தே தயார்ப்படுத்தி ஊக்குவிக்கப்பட வேண்டிய கடமையும் கடப்பாடும் இன்றியமயாததாகும். சஹாபாப் பெண்களின் சீரிய வரலாறு இதற்கு மிகச்சிறந்த முண்ணுதாரணமாக கண்முன்ணே மிளிர்கின்றது என்பதனை மனதில் வைத்து இஸ்லாமியமயப்படுத்தப்பட்ட சமூக மாற்றத்திற்கு பெண்களும் தமது பூரணத்துவமான பங்கை பூர்த்தி செய்ய இன்றே மன உறுதி கொள்வோமாக!

MK YASIR YTV

Saturday, 12 January 2019

ஜாமிஉல் அக்பர் ஜும்ஆ பள்ளிவாயலில் பயான்










இன்று 12/01/2019 சனிக்கிழமை ஏறாவூர் ஜாமிஉல் அக்பர் ஜும்ஆ பள்ளி வாயலில் இஷா தொழுகையினைத் தொடர்ந்து  நடைபெற்ற விஷேட மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜமாஅத்தார்களும் முஹிப்பீன்களும் இந்தியா தமிழ்நாட்டின் உலமா சபையின் தலைவர் சங்கைமிக்க மெளலவி அல்ஹாபிழ் pm காஜா முஈனுத்தீன் பாகவி அவர்களை சந்தித்து முஸாஹபா ,முஆனகா செய்தபோது...

Wednesday, 9 January 2019

நியமனங்கள் வழங்க கிழக்கு ஆளுநர் கட்டளை!

நியமனங்கள் வழங்க கிழக்கு ஆளுநர் கட்டளை!
எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் நியமனங்கள் வழங்க கிழக்கு ஆளுநர் கட்டளை!
இன்று கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும்,கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகளுக்கும் இடையில் விஷேட கூட்டம் ஆளுநர் கலாநிதி M.L.A.M. ஹிஸ்புல்லாஹ் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.
இக் கூட்டத்தில் 45 உள்ளூராட்சி சபைகளுக்கான அனைத்து வெற்றிடங்களையும் இவ் வருடம் மார்ச் மாதத்திற்குள் நிரப்புவதற்கு முடிவெடுக்கப்பட்டது.
அத்தோடு கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக தற்காலிக ஊழியர்களாக 500 க்கு மேற்பட்டவர்கள் கடமை புரிகிறார்கள். இதுவரை அவர்கள் நிரந்தர நியமனத்திற்கு உள்வாங்கப்படவில்லை ஆகவே உடனடியாக சகல உள்ளூராட்சி சபை ஊழியர்கள் அனைவரையும் உள்வாங்கி வெற்றிடங்கள் அனைத்தையும் இவ் வருடம் மார்ச் முதலாம் திகதிக்கு முன் நிரப்புமாறு ஆளுநர் இன்று கட்டளை பிறப்பித்துள்ளார்.
அத்தோடு கல்வி அமைச்சின் அதிகாரிகள்,கல்வி அமைச்சின் செயலாளர், உத்தியோகத்தர்கள் ஆகியோர்களுக்கான கலந்துரையாடலின் போது கிழக்கு மாகாணத்தில் உள்ள சிங்கள மொழி மூலப்பாடசாலைகளுக்கான 1000 வெற்றிடங்களை இவ்வருடம் மார்ச் மாதம் முதலாம் திகதி அவர்களுக்கான நியமனக்கடிதங்களை வழங்கி வைக்குமாறும் ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.

இனவாத அரசியல் கீழ்த்தரமான அரசியல்!

 இனவாத அரசியல் கீழ்த்தரமான அரசியல்!
ஆளுனர் எனும் பெயரில் நடைபெறும் இனவாத அரசியல் கீழ்த்தரமான அரசியல்!
ஒரு தேசம் என்ற வகையில் குடிமக்களாக சகல இனங்களும் பார்க்கப்பட்டு அவர்கள் ஆளப்படும் முறையில் நீதம் இருக்குமானால் அங்கு இனவாதத்திற்கு இடமிருக்காது. "இனவாதம் என்பது கீழ்த்தரமாக ஒரு மிருக உணர்வு". "இன்று அரசியல் வாதிகள் தூக்கும் மிகப்பெரிய ஆயுதம்". இந்த அரசியல் வாதிகள் இவ்வாறு இனவாதத்தை தூண்டுவதனால்தான் மனிதம் செத்துப்போகிறது; சுயநலன் மேலோங்குகிறது. இதற்கு பிரதான காரணம் இன்றுள்ள முதலாளித்து அரசியல் முறையாகும். இந்த அரசியல் முறையில் சுயநலம் எப்போதும் மேலோங்கியிருக்கும். மக்கள் நலம் சந்தர்ப்பவாத நலனாகவே இருக்கும்.
நீண்ட கால யுத்தம் எமக்கு புகட்டிய படிப்பினையை மக்களாகிய நாம் மறக்கமுடியாது. இனவாதத்தீயை மூட்டி மக்களது இரத்தம் ஓட்டப்பட்டது; பெண்கள் விதவையாக்கப்பட்டார்கள்; குழந்தைகளது எதிர்காலம் கேள்விக்குறியாகியது. தற்பொழுது ஓரளவு நிம்மதியாக சுவாசிக்க முற்படும்போது மீண்டும் இந்த இனவாத் தீயை மூட்டி அதில் அரசியல் இலாபமடைய நினைக்கும் காடையர் கூட்டத்தை மக்கள் ஓரம் கட்டவேண்டும்; எமக்குள் உள்ள சந்தேகங்களை இல்லாதொழிக்கும் விதத்தில் கருத்துப்பரிமாற்றங்கள் நடைபெறவேண்டும். நிருவாகிகள் நிருவாகத்தில் மக்கள் நலன் சார்ந்து யோசிக்க வேண்டும். இனவாதத்திற்கு இடமளிக்க கூடாது.
ஆளுனராக யார் வந்தாலும் அவர் இனவாதத்திற்கு அப்பால் மனிதநலன் சார்ந்து சிந்தித்து, மக்கள் நலன் பேணவேண்டும். இலங்கை மக்கள் நாம் எனும் தொனிப்பொருளில் சகல மக்களையும் நீதமாக நடத்தவேண்டும். ஒரு முஸ்லிம் ஆளுனருக்கு இந்த பொறுப்பு நிறையவே உள்ளது. ஏனெனில் அவர் நீதம் தவறமுடியாதவராக எப்போதும் இருக்க கடமைப்பட்டுள்ளார்.
Abu Maryam 

தமிழ், முஸ்லிம் இளைஞர்கள் கவனமாக இருக்க வேண்டிய காலம்..

தமிழ், முஸ்லிம் இளைஞர்கள் கவனமாக இருக்க வேண்டிய காலம்..

(ஊடகவியலாளர் பஹத் ஜுனைட்)
தமிழ் முஸ்லிம் இன மக்கள் ஒற்றுமையாகவும் ,சகோதரத்துடனும் வாழ்ந்து வரும் கிழக்கு மாகாணத்தில் கடந்த சில நாட்களில் இன முறுகல் நிலையை தொற்றுவிக்கும் வகையில் ஒரு சில இன வாதிகளிகளால் குழப்பங்களை ஏற்படுத்தும் முயற்சிகள் இடம்பெற்று வருகிறது..
பல தசாப்த காலத்தில் இருந்து அண்ணன் தம்பிகளாக ,அயல் வீட்டுக்காரர்களாக,உறவுகளை பேணி வரும் தமிழ் முஸ்லிம் உறவுகளை சகித்துஜ்கொள்ள முடியாத தனிப்பட்ட அரசியல் சுய இலாபத்திற்காக தமிழ், முஸ்லிம் இளைஞர்களை தூண்டிவிட்டு இன வாந்தி எடுத்து அதில் இன்பம் அனுபவிக்கும் இனவாத அறிவிலிகளிடம் இருந்து நாம் கவனமாக இருக்க வேண்டியது மிகக் கட்டாயமாகும்.
கிழக்கில் வாழும் தமிழ் முஸ்லிம்களாகிய நாம் உறவில் மட்டுமல்லாது பொருளாதாரத்திலும், தொழில்களிலும் பின்னிப் பிணைந்து வாழ்கிறோம் காலத்திற்கு காலம் முளைத்து வரும் அரசியல் நஞ்சு செடிகளை நாம் கவணத்தில் கொள்ளத் தேவை இல்லை காரணம் அந்த செடிகளில் உறுதி இல்லை சில காலத்தில் அழுகிய நிலையில் செத்துப் போய்விடும்..
அதே போன்று இனவாத அறிவிலிகள் தங்களது காரியங்களை வெற்றிகரமாக நடாத்துவதற்கு அதிகமான இளைஞர்கள் பாவனையில் இருக்கும் சமூக வலைதளங்களை ஆயுதமாக பயண்படுத்துகின்றனர்.
எனவே இது தொடர்பில் தமிழ்,முஸ்லிம் இளைஞர்கள் கவனமாக இருக்க வேண்டும் முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் பதிவுகள் ,பின்னூட்டம் இடும்போதும் அடுத்தவர்களது மனதை புண்படுத்தும் வகையிலோ அடுத்த சமயத்தை அல்லது சகோதர இனத்தை பாதிக்காத வகையில் கவனமாக மேற்கொள்ள வேண்டும்.
இளைஞர்களாகிய எங்களது நல்லிணக்க செயற்பாடுகள் எதிர்கால சந்ததிகளுக்கு முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ளப்படும் என்பதை உணர்ந்து செயற்படுவது காலத்தின் கட்டாயமாகும் ...

தமிழ், முஸ்லிம் இளைஞர்கள் கவனமாக இருக்க வேண்டிய காலம்..