எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் நியமனங்கள் வழங்க கிழக்கு ஆளுநர் கட்டளை!
இன்று கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும்,கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகளுக்கும் இடையில் விஷேட கூட்டம் ஆளுநர் கலாநிதி M.L.A.M. ஹிஸ்புல்லாஹ் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.
இக் கூட்டத்தில் 45 உள்ளூராட்சி சபைகளுக்கான அனைத்து வெற்றிடங்களையும் இவ் வருடம் மார்ச் மாதத்திற்குள் நிரப்புவதற்கு முடிவெடுக்கப்பட்டது.
அத்தோடு கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக தற்காலிக ஊழியர்களாக 500 க்கு மேற்பட்டவர்கள் கடமை புரிகிறார்கள். இதுவரை அவர்கள் நிரந்தர நியமனத்திற்கு உள்வாங்கப்படவில்லை ஆகவே உடனடியாக சகல உள்ளூராட்சி சபை ஊழியர்கள் அனைவரையும் உள்வாங்கி வெற்றிடங்கள் அனைத்தையும் இவ் வருடம் மார்ச் முதலாம் திகதிக்கு முன் நிரப்புமாறு ஆளுநர் இன்று கட்டளை பிறப்பித்துள்ளார்.
அத்தோடு கல்வி அமைச்சின் அதிகாரிகள்,கல்வி அமைச்சின் செயலாளர், உத்தியோகத்தர்கள் ஆகியோர்களுக்கான கலந்துரையாடலின் போது கிழக்கு மாகாணத்தில் உள்ள சிங்கள மொழி மூலப்பாடசாலைகளுக்கான 1000 வெற்றிடங்களை இவ்வருடம் மார்ச் மாதம் முதலாம் திகதி அவர்களுக்கான நியமனக்கடிதங்களை வழங்கி வைக்குமாறும் ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.