السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Wednesday 9 January 2019

இனவாத அரசியல் கீழ்த்தரமான அரசியல்!

 இனவாத அரசியல் கீழ்த்தரமான அரசியல்!
ஆளுனர் எனும் பெயரில் நடைபெறும் இனவாத அரசியல் கீழ்த்தரமான அரசியல்!
ஒரு தேசம் என்ற வகையில் குடிமக்களாக சகல இனங்களும் பார்க்கப்பட்டு அவர்கள் ஆளப்படும் முறையில் நீதம் இருக்குமானால் அங்கு இனவாதத்திற்கு இடமிருக்காது. "இனவாதம் என்பது கீழ்த்தரமாக ஒரு மிருக உணர்வு". "இன்று அரசியல் வாதிகள் தூக்கும் மிகப்பெரிய ஆயுதம்". இந்த அரசியல் வாதிகள் இவ்வாறு இனவாதத்தை தூண்டுவதனால்தான் மனிதம் செத்துப்போகிறது; சுயநலன் மேலோங்குகிறது. இதற்கு பிரதான காரணம் இன்றுள்ள முதலாளித்து அரசியல் முறையாகும். இந்த அரசியல் முறையில் சுயநலம் எப்போதும் மேலோங்கியிருக்கும். மக்கள் நலம் சந்தர்ப்பவாத நலனாகவே இருக்கும்.
நீண்ட கால யுத்தம் எமக்கு புகட்டிய படிப்பினையை மக்களாகிய நாம் மறக்கமுடியாது. இனவாதத்தீயை மூட்டி மக்களது இரத்தம் ஓட்டப்பட்டது; பெண்கள் விதவையாக்கப்பட்டார்கள்; குழந்தைகளது எதிர்காலம் கேள்விக்குறியாகியது. தற்பொழுது ஓரளவு நிம்மதியாக சுவாசிக்க முற்படும்போது மீண்டும் இந்த இனவாத் தீயை மூட்டி அதில் அரசியல் இலாபமடைய நினைக்கும் காடையர் கூட்டத்தை மக்கள் ஓரம் கட்டவேண்டும்; எமக்குள் உள்ள சந்தேகங்களை இல்லாதொழிக்கும் விதத்தில் கருத்துப்பரிமாற்றங்கள் நடைபெறவேண்டும். நிருவாகிகள் நிருவாகத்தில் மக்கள் நலன் சார்ந்து யோசிக்க வேண்டும். இனவாதத்திற்கு இடமளிக்க கூடாது.
ஆளுனராக யார் வந்தாலும் அவர் இனவாதத்திற்கு அப்பால் மனிதநலன் சார்ந்து சிந்தித்து, மக்கள் நலன் பேணவேண்டும். இலங்கை மக்கள் நாம் எனும் தொனிப்பொருளில் சகல மக்களையும் நீதமாக நடத்தவேண்டும். ஒரு முஸ்லிம் ஆளுனருக்கு இந்த பொறுப்பு நிறையவே உள்ளது. ஏனெனில் அவர் நீதம் தவறமுடியாதவராக எப்போதும் இருக்க கடமைப்பட்டுள்ளார்.
Abu Maryam