السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Monday, 7 September 2015

அஷ்ஷெய்யிதுஷ் ஷெய்க் ஷிஹாபுத்தீன் வலியுல்லாஹ் ( رحمة الله عليه)

   
அஷ்ஷெய்யிதுஷ் ஷெய்க் ஷிஹாபுத்தீன் வலியுல்லாஹ்

மட்டக்களப்பு கோட்டமுனை அப்பா 
என்று இந்துக்களாலும் அழைக்கப்படும் அஷ்ஷெய்யிதுஷ் ஷெய்க் ஷிஹாபுத்தீன் வலியுல்லாஹ் (கத்தஸல்லாஹு ஸிர்றஹுல் அஸீஸ்) அவர்களின் வரலாரறு
மட்டகளப்பு மாநகரில் கோட்டமுனை ஆண்டாண்டு காலமாக முஸ்லீம்களும் மற்றும் இந்துக்களும் சகோதரர்களாக வாழ்ந்து வரும் பகுதியாகும். இப் பகுதியில் மூர்சாப் பிட்டி என்று தற்போது வழங்கி வரும் “பீர்சாஹிப் பிட்டியில்” மட்டகளப்பு வாவியோரமாக கல்லடிப் பாலத்திலிருந்து மட்டக்களப்பு நகர் நோக்கிச் செல்லும் வீதியில் (தற்பொழுது புனரமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது)
இவர்களின் தர்ஹாவிலிருந்து பார்த்தால் மட்டக்களப்பு கோட்டை (தற்போது மட்டக்களப்பு கச்சேரி அமைந்துள்ள கோட்டை) நேர் எதிரே வாவிக்கு அந்தப்பக்கம் சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் கம்பீரமாகக் காட்சி தருகின்றது.
அஷ்ஷெய்யிதுஷ் ஷெய்க் ஷிஹாபுத்தீன் வலியுல்லாஹ்

இக் கோட்டையானது 1505 ம் ஆண்டு போர்த்துக்கேயர்கள் இலங்கைக்கு வந்தபோது கட்டப்பட்டதாகும். அவர்கள் இலங்கையின் கரையோரங்களை தங்களின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்து ஆட்சி செய்தனர்.
அவர்களைத் தொடர்ந்து 1638 ல் இலங்கையின் கரையோரப் பகுதிகளை டச்சுக் காரர்கள் தங்களின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்திருந்தனர்.
இவர்களிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் இலங்கைக்கு வந்த ஆங்கிலேயர்கள் 1802 ஆண்டு கரையோரங்களிலிருந்த டச்சுக் காரர்களின் கோட்டைகளைப் பிடிப்பதற்காக இலங்கையின் கரையோரங்களிலில் தங்களின் சைனியத்துடன் (இராணுவம்) முகாமிட்டனர்.
அப்பாவின் தர்ஹா எதிரே அமைந்துள்ள டச்சுக் கோட்டை
இவ்வாறு மட்டக்களப்பு கோட்டையைப் பிடிபதற்காக ஆங்கிலேயே சைனியம் வாவியோரத்தில் தற்போது மகான் கோட்டமுனை அப்பா அவர்களின் தர்ஹாவுக்கு பக்கத்தில் வீடுகள் அமைந்துள்ள இடத்தில் முகாமிட்டனர். இவ்வாறு முகாமிட்டிருந்த சைனியத்தில் அதிகமாக ஜாவா இனத்தைச் சேர்ந்த முஸ்லீம் வீரர்களும் இடம் பெற்றிருந்தனர்.
இவர்கள் இவ்வாறு முகாமிட்டிருக்கும் வேலையில் மட்டக்களப்பு வாவியில் ஒரு வெள்ளை பிடவையினால் கபன் செய்யப்பட்ட ஒரு மையித் ஒரு பேளையில் வைக்கப்பட்டவாறு ஆற்றில் மிதப்பதைக் கண்ட அப்பகுதி வாழ் இந்து மீனவர்கள் அதனை எடுப்பதற்காக தோனியில் ஆற்றுக்குள் சென்றனர் ஆனால் அவர்கள் அவ்விடத்துக்கு சென்றடைந்தபோது அது மறைந்து விட்டது. இவ்வாறு பல முறை நடந்தது.
இதனை தொடர்ந்து அப்பகுதியல் முகாமிட்டிருந்த சைனியத்தில் (இராணுவத்தில்) இருந்த சில முஸ்லீம் வீரர்கள் அதனைக் கண்டு எடுப்பதற்காக ஆற்றுக்குள் சென்று அதனை எடுத்தபோது அது ஒர் முஸ்லீமின் மையித் எனக் கண்டு கொண்ட அவர்கள் அதனை கரைக்கு எடுத்து வந்து அதனை இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்துவிட்டு மீசான்களுக்காக இரண்டு கம்புகளைக் நாட்டி வைத்தனர்.
சில நாட்களின் பின் அப்போது அவ்விடத்தில் சைனியத்தில் (இராணுவத்தில்) கடமை புரிந்த ஒருவர் ஓர் கனவு கண்டார் கனவில் தோன்றிய பெரியார் தான் மக்காவில் மரணமடைந்து அல்லாஹ்வின் ஆணைப்படி இவ்விடத்துக்கு வந்துள்ளதாகவும், ஆற்று ஓரத்தில் இரண்டு கட்டைகள் உள்ளதாகவும் அதனை எடுத்து தனது தலை மற்றும் கால் மாட்டில் நட்டுவிடுமாறும் கூறி மறைந்தார்.
காலையில் கண்விழித்துப் பார்த்த அந்த வீரர் ஆற்று ஓரத்துக்குச் சென்று பார்த்தார் அங்கு இரண்டு கற்கள் அரபு எழுத்துக்கள் பொறிக்கப்ட்ட நிலையில் பச்சை வர்ணம் பூசப்பட்டதாகக் காணப்பட்டது.
இதனை ஆச்சரியத்துடன் எடுத்த வீரரும் அவரின் சக தோழர்களும் கனவில் சொல்லப் பட்டவாறே செய்தனர். சில நாட்கள் கழிந்தன. அவ்வழியினால் வந்த ஆங்கில இராணுவத் தளபதி இவ்விடத்தில் ஒரு மையித் புதைக்கப்பட்டிருப்பதைக் கண்டு கோபமுற்றார். உடனே அந்தக் கட்டைகளை முதலில் பிடுங்குமாறு ஆணையிட்டார்.
கட்டளைக்கு அடி பணிந்த வீரர்கள் கற்களை வெளியே எடுக்க அசைத்துப் பார்த்தனர். அது அசையவே இல்லை உடனே மண் வெட்டியால் ஓரத்தில் தோண்டலாகினர் எவ்வளவு தோண்டினாலும் கட்டை அதனை விட ஆழமாகப் பதித்திருந்தது அசைக்க முடியவில்லை.
உடனே தளபதிக்கு விடயத்தை சொன்னார்கள். உடனே தளபதி போருக்காகப் பயன்படுத்தும் யானையினை எடுத்து வந்து அதன் சங்கிலியால் அந்த கட்டைகளில் மகானின் கால் பக்கமுள்ள கட்டையை சங்கிலியால் பிணைத்து இழுத்து பிடுங்குமாறு கட்டளையிட்டார். கட்டளைப்படி கால் மாட்டில் உள்ள மீசான் கட்டையில் சங்கிலி கட்டப்பட்டு யானை அதனை இழுத்துப் பிடுங்க முயற்சித்தது.
மகானின் கால் மாட்டில் இருந்த கல் சற்றே சாய்ந்து செல்ல இழுத்த யானை அவ்விடத்திலேயே படுத்துவிட்டது. யானைக்கு வயிற்றோட்டம் ஏற்பட்டு யானை அடுத்த நாள் இறந்து போனது. (இந்தக் மீசான் கட்டை இப்போதும் சாய்ந்த நிலையில் சங்கிலியால் கட்டப்பட்ட தடத்துடன் உள்ளது.)
சாய்ந்த நிலையில் சங்கிலி கட்டிய தடத்துடன் காணப்படும் கல்
இதனை கண்டு ஆத்திரமடைந்த தளபதி ஆங்கிலத்தில் தூற்றியவராக வந்து தனது சப்பாத்துக் காலினால் கட்டையினை உதைத்தார். உடனே அவரின் கால் செயல் இழந்து விட்டது. அப்போது உண்மையின் புரிந்துகொண்ட தளபதி அந்த இடத்தை அப்படியே விட்டுவிடுமாறு கட்டளையிட்டார்.
அதன் பின்னர் அது முஸ்லீம்களால் பரிபாலிக்கப்பட்டு வந்தது. அன்றிலிருந்து அவ்விடத்துக்கு வரும் எல்லோருக்கும் அவர்களின் குறைகள் நீங்கின. கேட்பதையெல்லாம் கொடுத்து அருள் சொறிந்தார்கள் அப்பா அவர்கள்.
இந்த வரலாற்றுக்குப் பின்னனியில்தான் கோட்டமுனையில் முஸ்லீம்கள் வசிக்கத் தொடங்கியிருக்க வேண்டும். இவர்கள் அன்று சைனியத்தில் கடமைபுரிந்த வீரர்களின் குடும்பங்களாகவே இருக்கின்றனர். அவர்களின் அதிகமானவர்கள் ஜாவா இனத்தை சேர்ந்த முஸ்லீம்களாக காணப்படுவது அதற்கு அத்தாட்ச்சியாக உள்ளது. இதனை தற்போதுள்ள அவர்களின் பிச்சலங்களின் பெயர்களைக் கொண்டு நாம் விளங்கிக் கொள்ளலாம்.
இவ்வாறு பல வருடங்கள் கழிந்த நிலையில் கோட்டமுனைக்கு பள்ளி வாயலுக்கு வருகை தந்த பெரியார் ஒருவர் “இங்கே ஒரு வலீயுல்லாஹ் அடங்கப் பெற்றிருக்கிறார்கள் அவர்களின் அடகஸ்தளம் எங்குள்ளது?” என்று அங்கிருந்தவர்களிடம் கேட்க அவர்கள் அப்பாவின் அடகஸ்தளத்தைக் காட்டினார்கள்.
அவர்களை தரிசித்த பெரியார் இவர்களின் பெயர் அஸ்ஸெய்யிது ஷிஹாபுத்தீன் என்றும் இவர்கள் “அந்தருஸ்” என்ற இடத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்களுக்கு முஹர்ரம் மாதம் மௌலீத் ஓதி அன்னதானம் வழங்குமாறும் கேட்டுக் கொண்டார்கள்.

அஷ்ஷெய்யிதுஷ் ஷெய்க் ஷிஹாபுத்தீன் வலியுல்லாஹ்

இதனைத் தொடர்ந்து பல நூறு ஆண்டுகளாக மகானின் திருத்தளம் விழாக்கோலம் பூண்டு வருகின்றது. மாகான் அவர்கள் அங்கிருந்து கொண்டு பற்பல அற்புதங்களை நிகழ்த்தி வருகின்றார்கள்.
மகானின் அற்புதங்கள்
மகான் தற்போது அடங்கப் பெற்றிருக்கும் இடத்துக்கு பக்கத்தில் பொது சுவருடன் பரிஸ்டர் என்று அழைக்கப்படும் ஒருவரின் வீடு உள்ளது. இவர் மகானைப் பற்றி எதுவும் அறியாதவராகவும் அவ்விடத்தில் முஸ்லீம்களின் தர்ஹா இருப்பதையும் எதிர்த்து வந்தார் . (தற்போது அமரராகிவிட்டார்)
அதே வீதியில் மந்திரங்கள் செய்கின்ற வைத்தியர் இருந்தார். அவருக்கு பரிஸ்டர்மேல் கடும் கோபம். இலங்கையில் வடகிழக்கில் யுத்தம் ஆரம்பமான காலப்பகுதியில் பரிஸ்டரை பழிவாங்க நினைத்தார் வைத்தியர்.
ஒரு நாள் பரிஸ்டர் தூக்கத்தில் ஒரு கனவு கண்டார் அதில் தோன்றிய பச்சை நிற உடையணிந்த ஒரு மகான் “தானே உங்களின் அருகிலிருக்கும் ஷிஹாப்புத்தீன்” என்று தனை அடையாளப் படுத்திக் கொண்டு “நாளை மாலை ஒருவர் உமக்கு தீங்கு செய்ய உள்ளார். அவரை நான் கவனித்துக் கொள்கின்றேன்” என்று கூறி மறைந்தார்.
ஒன்றும் புரியாத பரிஸ்டர் அடுத்தநாள் மாலை தனது வீட்டு முற்றத்தில் மகானின் தர்ஹாவுக்கு எதிர்பக்கமாக வாவியைப் பார்ப்பதுபோல் பார்த்துக் கொண்டு மகானின் தர்ஹாவை அவதானித்தவராக கதிரையில் அமர்ந்திருந்தார்.
தர்ஹாவுடன் சேர்ந்து காணப்படுவது பரிஸ்டர் வாழ்ந்த வீடு
அன்று மாலையானதும் பரிஸ்டரைக் கொள்வதற்காக வைத்தியர் ஒரு கைகுண்டை எடுத்துக் கொண்டு மகானின் தர்ஹாவுடைய வாசலில் நின்று பரிஸ்டரை நோக்கி வீச எத்தனித்தார் என்ன அதிசயம் கைக்குண்டு வைத்தியரின் கையிலேயே வெடித்தது. வைத்தியர் ஒரு கையை இழந்தார். அன்றிலிருந்து அந்த வைத்தியர் சொத்திக்கை வைத்தியர் என்று அப்பகுதி மக்களால் அழைக்கப்பட்டு வந்தார் அவர் இறந்தது ஒரு 10 ஆண்டுகள்தான் இருக்கும்.
இதனை தொடர்ந்து மகான் மீது பாசங்கொண்ட பரிஸ்டர் தான் உயிருடன் உள்ளவரை மகானின் கந்தூரிக்கு போர்வை போர்த்துவது மற்றும் கந்தூரி செலவுகளுக்கு பெரும் அளவு பணம் வழங்குவதுமாக மகானிடம் அன்பு காட்டி வாழ்ந்து வந்தார் இன்றும் மகானின் தர்ஹாவுக்கான மின்சாரக் கட்டணத்தை அவரின் குடும்பத்தினர்தான் செலுத்தி வருகின்றார்கள்.
அதேபோல் யுத்த காலப்பகுதியில் மட்டக்களப்பு கோட்டையில் இராணுவ முகாமும் மாகானின் தர்ஹா அமைந்துள்ள வாவியோர வீதியில் பல இராணுவ தலைமை அதிகாரிகளின் முகாம்களும் அமைந்திருந்தன தற்போதும் உள்ளன.
இதிலிருந்து இராணுவத்தினர் மோதல்கள் இடம்பெறும் போது கோட்டையிலிருந்தும் வாவியோர வீதியிலிருந்து மக்கள் குடியிருக்கும் பகுதிகளுக்குள் புலிகள் ஊடுவுவார்கள் என்று தாக்குதல் நடத்துவது வழக்கம் அவ்வாறு தாக்குதல் நடத்தும் போதெல்லாம் அப்பகுதியில் வாழும் மக்கள் தங்களை பாதுகாக்குமாறி கூறி “அவ்லிய்யா அப்பா” என்றே அழுவார்களாம்.
அவர்கள் எவ்வளவு தாக்குதல் எங்கள் வீடுகள் அமைந்துள்ள பக்கத்துக்கு நடத்தினாலும் எதுவும் அவ்லிய்யஹ் அப்பா அவர்களின் தர்ஹாவை தாண்டி வருவதில்லை என்று கூறி அங்கலாக்கின்றார் சில இந்துப் பெண்மணிகள்.
பாரிய செல் தாக்குதல்கள் மற்றும் கைகுண்டுகள் இப்பகுதியை நோக்கி வீசப் பட்டால் அவை அப்படியே வெடிக்காமல் அப்பாவின் தர்ஹாகுள்ளோ அல்லது ஓரத்திலோ கிடக்கும் அதனை மறுநாள் இராணுவத்தினர் வந்து எடுத்துச் செல்வார்களாம். இவ்வாறு இரண்டு மூன்று தடவைகள் நடந்துள்ளதாம் என்று அப்பாவைப் அதிசயங்கள் கூறிய அவர்கள் நீங்கள் வந்து கந்தூரி நடாத்தாவிட்டால் நாங்கள் எல்லோரும் பணம் போட்டு கந்தூரி நடத்துவோம் காரணம் இவர்கள்தான் எங்களை பாதுகாத்தார்கள் இப்போதும் பாதுகாக்கிறார்கள். என்கிறார்கள் அவர்கள்.
கந்தூரி நிகழ்வுக்காக வருகை தந்தவர்களில் சிலர்
2004ம் ஆண்டு சுனாமி வந்தபோது கூட வாவியில் ஊரை அடித்துச் செல்ல உட்புகுந்த நீர் அப்பாவின் தர்ஹாவை தாண்டி செல்ல உத்தரவின்றி அவ்விடத்திலேயே நின்றுவிட்டதாம் என்று கண்ணீர் மல்க கூறுகிறார்கள் அவர்கள்.
சில மாதங்களுக்கு முன்னர் பாரிய வெள்ளம் கிழக்கு மாகாணத்தை புகுந்து அழித்தபோதுகூட அந்த வெள்ளம் அப்பாவின் தர்ஹாவில் அப்பாவின் அடகஸ்தளம் அமைந்துள்ள சுமார் அரை அடி உயரத்துக்குச் செல்லாமல் அதன் கீழ் நின்றதாம். ஆனால் அதே வீதியில் ஏனைய பகுதிகளில் வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்து பெரும்பாலான மக்கள் இடம் பெயர்ந்திருந்தனர்.
அதே காலத்தில் அப்பாவின் தர்ஹாவுக்கு யாரும் மின்விளக்கை போட வாராதபோது ஒரு சிரிய மண் குப்பியில் திரிவைத்து எரிக்கப்படும் சிறிய குப்பி விளக்கு ஒன்று தொடர்ந்து பல நாட்கள் தானாக தோன்றி எறிந்த்தாகவும் அதை அப்பகுதியில் வா ழும் பலரும் வந்து பார்வையிட்டதாகவும் கூறுகின்றனர் பலர்.
இப்பகுதியில் வாழும் இந்துக்களுக்கு குழந்தை பிறந்தால் முதலில் அதனை அப்பாவின் தலை, கால் மாட்டில் வளர்த்தாமல் தாங்கள் கோவிலுக்குக் கூட எடுத்துச் செல்ல மாட்டார்களாம், தங்களின் வீட்டில் ஏதும் விசேடம் என்றால் முதல் காணிக்கை அப்பாவுக்குத்தான் என்கிறார்கள் அவர்கள்.
அப்பாவின் தர்ஹா அமைந்துள்ள ஒழுங்கைப் பக்கம்
அத்துடன் வஹ்ஹாபிய முகவர்கள் இலங்கையின் கிழக்கு பிராந்தியத்தில் பல இறைநேசர்களின் தர்ஹாகளை உடைக்க வேண்டும் என்று சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முதல் கடும் பிரத்தனம் எடுத்தனர் அந்தக் காலப்பகுதியில் பல ஷியாரங்களை உடைப்பதாகக் கூறி அவைகளுக்கு சேதங்களை ஏற்படுத்தினர். அதில் ஈடுபட்டவர்களில் சிலர் பாரிய நோய்களுக்கு உள்ளாகி மருத்துவம் பலனின்றி இறந்து விட்டனர். சிலர் எங்கு போனார்கள் என்று தெரியாமல் போய்விட்டனர் இன்னும் சிலர் நோயாளிகளாக அத்தாட்சிக்கு படுக்கையில் உள்ளனர்.
இந்த ஷைத்தானின் வாரிசுகள் கோட்டமுனை அப்பா அவர்களின் தர்ஹாவையும் தாங்கள் உடைக்கப் போவதாக வாய் சவால் விட்டனர். உடனே அப்பகுதியில் வசிக்கும் தமிழ் இளைஞர்களும் மக்களும் “அப்பாவின் தர்ஹாவில் கைவைக்க யார் வந்தாலும் உயிருடன் திரும்ப மாட்டார்கள்” என்று செய்தி அனுப்பினார்கள்.
இதனைக் கேட்ட ஈமானிய உள்ளங்கள் என்று சொல்லிக் கொள்ளும் ஷைத்தானின் பிச்சலங்கள் அப்பக்கம் தலைவைத்துப் படுக்கவும் இல்லை.
இவ்வாறு கோட்டமுனை அப்பாவின் பெருமை சொல்ல எழுத நாள் ஒன்று போதாது. அப்பகுதியில் தற்போது வாழும் தமிழர்கள் (இந்துக்கள்) அதற்கு சாட்சியாக உள்ளனர். ஒவ்வொருவரும் தங்களுக்கு நடந்த பல அதிசயங்களை வரிசையாகச் சொல்கின்றனர். எல்லாவற்றையும் எழுத முடியவில்லை அப்படி எழுதுவதாயின் அது ஒரு தொடர் கட்டுரையாகவே எழுத வேண்டும். ஆகவே விரிவை அஞ்சி தவிர்க்கினறேன்.
பரகத்திற்காக அப்பாவின் அதிசங்களில் சிலவற்றை இங்கு எழுதினேன். மட்டக்களப்புக்கு நீங்கள் வந்தால் நிச்சயம் மட்டக்களப்பு வாவியொர அவன்யூவில் கம்பீரமாக்க் காட்சிதரும் கோட்டமுனை அப்பாவை தரிசிக்க மறக்க வேண்டாம்.
கேட்போர்கெல்லாம் பாகுபாடின்றி அள்ளிக் கொடுக்கம் வள்ளல் அவர்கள்.
“எவர் எனக்குரித்தான இறைநேசர்களுடன் போர் தொடுக்கின்றார்களோ! அவர்களுடன் நான் (அல்லாஹ்) போர் தொடுப்பேன்” – ஹதீத் புஹாரீ -

அஷ்ஷெய்யிதுஷ் ஷெய்க் ஷிஹாபுத்தீன் வலியுல்லாஹ்

அஷ்ஷெய்யிதுஷ் ஷெய்க் ஷிஹாபுத்தீன் வலியுல்லாஹ்

அஷ்ஷெய்யிதுஷ் ஷெய்க் ஷிஹாபுத்தீன் வலியுல்லாஹ்

அஷ்ஷெய்யிதுஷ் ஷெய்க் ஷிஹாபுத்தீன் வலியுல்லாஹ்






Tuesday, 1 September 2015

தேவ்பந்தும் பித்அத்தும் !


இன்னல்களின் போது சங்கையான கத்முல் புஹாரி ஷரீப் நடத்துவது !

கேள்வி  :  
           இன்னல்களின் போது கத்முல்( முழுமையாக ஓதுவது )  புஹாரி ஷரீப் ஓதுவது பித் அத்தா ,இல்லையா ?  ஸலபுஸ் ஸாலிஹீன்களின் (முதல் மூன்று நூற்றாண்டுகளில்  வாழ்ந்த ) உலமாக்களின் காலத்தில் இது நிகழ்ந்ததாக ஆதாரம் உள்ளதா ?

பதில் :  ( தேவ்பந்த் மவ்லானா ரஷீத் அஹ்மத் கங்கோஹியின் பதில் )
     
        புஹாரி ஷரீப் முதல் மூன்று நூற்றாண்டுகளில் தொகுக்கப்படவில்லை ,எனினும் அதை இன்னல்களின் பொழுது முழுமையாக ஓதுவது (ஆரம்பம் முதல் இறுதி வரை) ஓர் நல் அமல் ,ஏனெனில் திக்ரின் பின் ஓதும் துஆ அங்கீகரிக்கப்படும் .இந்த செயலின் அடிப்படை ஷரியத்தின் மூலம் ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது ,இது பித் அத் அல்ல .


Fathawa Rasheedhiya,Rashid Ahmad Gangohi


வாழ்த்துக்கள் எனது தேவ்பந்தி தப்லீக் ஜமாஅத்துக்கு வக்காலத்து வாங்கும் எனது நண்பர்களுக்கு !

இதை தான் ' மாமியார் உடைத்தால் மண்குடம் ,மருமகள் உடைத்தால் பொன்குடம் ' என்று சொல்வர் .

இவர்கள் இந்த செயலை நடத்த ஒரே காரணம் பணம் பறிக்கவே அன்றி வேறில்லை . நடைமுறையில் பாமர இஸ்லாமியர் அனைவரும் புஹாரி ஷரீப் முழுமையாக ஓது இயலாதவர்களாக இருக்கின்றனர் . எனவே இதை நடைமுறைப் படுத்த இவர்கள் இதை ஆமோதிக்கும் தேவ்பந்தி உலமாக்களை நாட வேண்டிய சூழ்நிலையே உருவாகும் . நாம் இதுகாறும் தேவ்பந்திய தப்லீக் ஜமாஅத் உலமாக்கள் மவ்லவி ரஷீத் அஹ்மத் கங்கோஹியின் சொற்களை பின்பற்றுகின்றனரா என்று வியப்பில் தான் உள்ளோம் !

இனி நாணயத்தின் மறுபக்கத்தைக் காண்போம் !

கேள்வி :

     சரியான அறிவிப்புகளோடும் ,சம்பவங்களோடும் நடைபெறும் மவ்லித் மஜ்லிஸ்களில் கலந்து கொள்வது அனுமதிக்கப்பட்டதா ?

பதில் : ( தேவ்பந்த் மவ்லானா ரஷீத் அஹ்மத் கங்கோஹியின் பதில் )
  
     அது  வேறு காரணங்களால் அனுமதி மறுக்கப்பட்ட( நா ஜாயிஸ் ) செயல் .

Fathawa Rasheedhiya,Rashid Ahmad Gangohi

தேவ்பந்தி தப்லீக் ஜமாஅத்தினர் செய்யும் செயல் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க இயலாத ஒன்று என்றாலும் அவர்கள் செய்வதால் அது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்று ???

அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தினர் செய்யும் மவ்லித் மஜ்லிஸ் நாம் குரான் ,ஹதீஸ் ,ஸலபுஸ் ஸாலிஹீன்களின் நடைமுறை ,புகஹாக்களின் நூல்கள் , இமாம்களின் நூற்கலின் மூலம் ஆதாரம் காட்டினாலும் தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தினரின் வஹாபிய விசுவாசத்தால் அங்கீகரிக்க மறுப்பர் !

http://tableeghijamaathtamil.blogspot.com/

இஸ்மாயில் திஹ்லவியின் போலி ஜிஹாத்

Hayaathe Tayyibaa
 தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தின் சுயமான கூற்றின்படி இந்திய சுதந்திர போராட்டத்திற்கான பங்களிப்பு அவர்களின் வஹாபிய நிறுவனர் ஷாஹ் இஸ்மாயில் திஹ்லவி மற்றும் அவரது ஆசிரியர் சய்யத் அஹ்மத் பரேலி மூலம் தொடங்குகிறது.ஆகவே தேவ்பந்தி தப்லீக் ஜமாஅத்தினர் தமது முன்னோடிகளின் பாரம்பரியத்தை நிலைநிறுத்த எந்த வரலாற்று நூல்களை சார்ந்து உள்ளனர் என்று அறிவது அவசியம் .

1) சவானாஹ் அஹ்மதி வா தவ்ரீக் அஜீபா -   சய்யத் அஹ்மத் பரேலி மற்றும் ஷாஹ் இஸ்மாயில் திஹ்லவியின் வாழ்க்கை வரலாறு. ஆசிரியர் : முன்ஷி முஹம்மது ஜாபர் தானேஸ்வரி.

2) ஹயாதே தய்யிபா - சய்யத் அஹ்மத் பரேலி மற்றும் ஷாஹ் இஸ்மாயில் திஹ்லவியின் வாழ்க்கை வரலாறு . ஆசிரியர் : மிர்சா ஹைராத் திஹ்லவி .

மௌலானா மன்சூர் நுஃமானி அல்  தேவ்பந்தி எழுதுகிறார் ,

" மிர்சா ஹைராத் திஹ்லவிவின் நூலான  ஹயாதே தய்யிபா ஷாஹ் இஸ்மாயில் திஹ்லவியின் உண்மையான,நம்பகமான சுயசரிதை "     
[ அல் புர்கான் ,பக்கம் 51,ஹிஜ்ரி 1355]

Read More..

தப்லீக் ஜமாத்தின் வஹாபிய கொள்கைகள்

Taqwiyatul  IeemaanMoulavi Ilyas Deoband,Ilyasi Tabligh Jamath
1. அல்லாஹுதஆலா பொய் சொல்லுவது சாத்தியம்.
[ ஃபதாவா ரஷீதியா, வால்யூம் 1,பக்கம் 19 ]

2. அல்லாஹுதஆலா தனது படைப்புகள் செய்யும் செயலை முன்னறே அறிந்திருக்க மாட்டான்.படைப்புகள் ஒரு செயலை செய்த பின்னரே அல்லாஹ் அதை அறிகின்றான்.
[ தஃப்சீர் புல்காதுல் ஹைரான்,பக்கம் 157,158]

3. ஷைத்தானும், மலக்குல் மவ்த்தும் நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்களை விட நிறைய அறிந்துள்ளார்கள்.
[ பராஹீனே காதியா,பக்கம் 51 ,52 ]

4.  நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு தனது இறுதி முடிவு என்னவென்று தெரியாது , மேலும் அவர்களுக்கு சுவற்றுக்கு பின்னால் இருப்பது கூட தெரியாது.
[ பராஹீனே காதியா,பக்கம் 51 ]

5. அல்லாஹுதஆலாவால் அண்ணலம் பெருமான் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வழங்கப்பட்ட அறிவும்,மறைவான ஞானமும் விலங்குகளுக்கும்,மதழைகளுக்கும்,பைத்தியக்காரர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
 [ஹிஃப்ஸுல் ஈமான், பக்கம் 7 ]

6. தொழுகையில் அண்ணலம் பெருமான் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சிந்தனை வருவது எருமை அல்லது கழுதையின் சிந்தனையில் மூழ்குவதி விட மோசமானது.
[ ஸிராத்தே முஸ்தகீம் ,பக்கம் 86 ]

7. ரஹ்மத்துல் ஆலமீன் என்பது நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட தனித்துவமான பண்பு அல்ல,பிற நல்லடியார்களையும் ரஹ்மத்துல் ஆலமீன் என்று அழைக்கலாம்.
[ ஃபதாவா ரஷீதியா,வால்யூம் 2,பக்கம் 12 ]

8. மார்க்கம் அறியாத பாமர மக்களுக்கு “காத்தமுன் நபீயீன்” என்பது இறுதி நபி என்று அர்த்தம் கொள்வர்.எனினும் விஷயம் அறிந்தவர்களுக்கு இது சரியான விளக்கமன்று. அண்ணலம் பெருமான் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பின்னர் ஒரு நபி பிறந்தாலும் அது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் இறுதியானவர்கள் என்பதில் எந்த விளைவையும் உண்டாக்காது .
[ தக்தீருன் நாஸ் ,பக்கம் 3,25 ]

9. அண்ணலம் பெருமான் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உர்து மொழியை தாருல் உலூம் தேவ்பந்தின் உலமாக்களிடம் இருந்து கற்றார்கள் 
 [ பராஹீனே காதியா,பக்கம் 26 ]

10. நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஒரு மூத்த சகோதரரைப் போன்று தான் கண்ணியமளிக்கப்பட வேண்டும் .[ தக்வியத்துல் ஈமான் , பக்கம் 58 ]

11. அல்லாஹ் நாடினால்  நபிகள் நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்களைப் போன்று கோடானு கோடி பேர்களை உருவாக்குவான் . [தக்வியத்துல் ஈமான் ,பக்கம் 16 ]

12.பெருமானார் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மறைந்த பிறகு மண்ணோடு மண்ணாகிவிட்டார்கள். 
 [ தக்வியத்துல் ஈமான் ,பக்கம் 59 ]

13.அனைத்து அன்பியாக்களும்,இறைத்தூதர்களும் பயனற்றவர்கள்.  [தக்வியத்துல் ஈமான் ,பக்கம் 29 ]

14.இறைத்தூதர்கள் பொய்யை விட்டு தூய்மையானவர்களாக 
இருக்க வேண்டிய தேவைஇல்லை .
 [ தஸ் பியதுல் அகாயித்,பக்கம் 25]

15.ஒரு நபியை ஒரு மனிதனைப் போல மட்டும் தான் புகழ வேண்டும் ,இன்னும் அதற்கு குறைவாகவே புகழவேண்டும் .
 [தக்வியத்துல் ஈமான் ,பக்கம் 35 ]

16.படைப்புகளில் மேலானவர்களான நபிமார்களும் ,கீழான பிற படைப்புகளும் ,எல்லாரும் இல்ம் என்னும் அறிவற்றவர்களாகவும் அறியாமையிலும் இருக்கிறார்கள் . 
[தக்வியத்துல் ஈமான் ,பக்கம் 3]

17.படைப்புகளில் மேலானவர்களான நபிமார்களும் ,கீழான பிற படைப்புகளும், அல்லாஹ்வின் திருமுன் ஒரு செருப்பு தைக்கும் செம்மானை விட கீழாகவே உள்ளனர் .
 [ தக்வியத்துல் ஈமான் ,பக்கம் 14]

18.நபிமார்களை தாகூத் (ஷைத்தான்) என்று அழைக்க அனுமதி உள்ளது .[தப்ஸீர் புல்காதுல் ஹைரான் ,பக்கம் 43 ]

19.ஒரு நபிக்கு தனது உம்மதிடம் உள்ள அந்தஸ்து ஒரு கிராம தலைவரைப் போன்று அல்லது நிலக்கிழார் போன்றது. 
 [ தக்வியத்துல் ஈமான் ,பக்கம் 61 ]

20.யாருடைய பெயர் முஹம்மது ,அலி என்று உள்ளதோ அவர்களுக்கு எதன் மீதும் அதிகாரம் இல்லை.ஒரு நபியோ அல்லது வலியோ அவர்களால் ஒன்றும் செய்ய இயலாது. 
[ தக்வியத்துல் ஈமான் ,பக்கம் 41 ]

21.நபிகள் நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தனது நுண்ணறிவை இழந்து விட்டார்கள் .
 [ தக்வியத்துல் ஈமான் ,பக்கம் 55 ]

22.உம்மத்துகள் தங்களது நபியை அமல்களில் முந்திவிடுவர் .[தக்தீருன்னாஸ் ,பக்கம் 5 ]

23.நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
 அவர்களை ஸிராத்துல் முஸ்தகீம் பாலத்தில் இருந்து கீழே விழாமல் ஒரு தேவ்பந்த் உலமா காப்பாற்றினார்.
 [புல்காதுள் ஹைரான் ,பக்கம் 8 ]

24.லா இலாஹா இல்லல்லாஹு அஷ்ரப் அலி ரசூலுல்லாஹ் , அல்லாஹும்ம ஸல்லிஅலா செய்யதினா நபியினா அஷ்ரப் அலி என்று கூறுவது ஆகுமானதே ,அவ்வாறு கூறுவதால் எந்த கேடும் இல்லை .
 [ரிஸாலா அல் இம்தாத்,பக்கம் 35 சபர் மாதம் 1336 ஹிஜ்ரி  ]

25. மீலாதுந்நபி கொண்டாடுவது இந்துக்கள் கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடுவது போன்றது .
 [பதாவா மீலாத் ஷரீப் ,பக்கம் 8 / பராஹீனே காதியா ,பக்கம் 148 ]

26. நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் தஜ்ஜாலும் வாழ்வைக் கொண்டு நன்மாரயம் பெற்றவர்கள்.எந்த பண்புகள் நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குணநலன்களாக உள்ளதோ  அவை தஜ்ஜாலி டமும்   உள்ளன. [ஆபே ஹயாத் ,பக்கம் 69 ]

27.நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விரும்பும் எதுவும் எந்த விளைவையும் ஏற்படுத்தாது .
 [ஆபே ஹயாத் ,பக்கம் 69 ]

28.அல்லாஹ்வின் திருமுன் ,நபிமார்களும் வலிமார்களும் தூசுக்கு சமம் [தக்வீயதுல் ஈமான்,பக்கம் 54 ]

29.நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஒரு சகோதரர் என்று அழைப்பது சரியானதே .
 [பராஹீனே காதியா ,பக்கம் 3 ]

30.எந்த முஸ்லிமும் நபிமார்களையும் ,வலிமார்களையும் அல்லாஹ்வின் படைப்புகளாகவும்,அடியாராகவும் ஏற்று பின்னர் அவர்களை வசீலாவாக்கி (இடைப்பொருள்) உதவி கோரி,நேர்ச்சை,காணிக்கை செலுத்தினால்  குப்ரில் அபுஜஹலுக்கு ஒப்பாவார் .
 [தக்வீயதுல் ஈமான்,பக்கம் 7 மற்றும் 27]

31.தரூத் தாஜ் விரும்பத்தக்கதல்ல,இன்னும் அதை ஓதுவதும் கூடாது .[ பழாயிலே தரூத் ஷரீப் ,பக்கம் 73 மற்றும் தஸ்கிரதுர் ரஷீத் பாகம் 2,பக்கம் 117]

32.தேவ்பந்தைச் சார்ந்த ஒரு வலிக்கு ஹஜ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் 
குளிப்பாட்டி ஹஜ்ரத் பாத்திமா ரலிய்யல்லாஹு அன்ஹு அவர்கள் ஆடை போர்த்திவிட்டார்கள் .
[சிராதே முஸ்தகீம் ,பார்சி பக்கம் 164,உர்து பக்கம் 280 ]

33.மீலாத் ஷரீப்,மிஹ்ராஜ் ஷரீப் ,கியார்வீன் ஷரீப்,உர்ஸ் ஷரீப்,கத்தம் ஷரீப் ,சைலும்,பாதிஹா,ஈசாலே சவாப் இவை ஷரியத்திற்கு மாற்றமாகவும்,கெட்ட பித்அத்களாகும்,மேலும் இவை ஹிந்துக்களின் நடைமுறையாகும்.
[பதாவா அஷ்ராபியா,பாகம் 2,பக்கம் 58.பதாவா ரஷீதியா பாகம் 2 பக்கம் 144 மற்றும் 150,பாகம் 3 பக்கம் 93,941  ]      

34.காகம் உண்பது ஆன்மீகரீதியாக நன்மைபயக்கும் செயலாகும்.
 [பதாவா ரஷீதியா பாகம் 2, பக்கம் 1301 ]

35.வலிமார்களை அல்லாஹ்வின் படைப்புகள் என்று நன்கு உணர்ந்த நிலையிலும் விளிப்பது விலக்கப்பட்டுள்ளது .
 [தக்வியதுல் ஈமான் பக்கம் 7 ]

36.ஜனாஸா தொழுகைக்குப்பின் துஆ ஓதுவது கூடாது .
 [பத்வா ஜமீல் அஹ்மத் தான்வி ,ஜாமிஆ அஷ்ரபியா ,லாகூர் ]

37.ஹிந்துக்களின் திபாவளி ,ஹோலி பண்டிகைகளின் போது வழங்கப்படும் பரிசுகளையும்,உணவையும்   முஸ்லிம்கள் வாங்குவது கூடும்.
 [ பதாவா ரஷீதியா ,பாகம் 2,பக்கம் 130 ]

38.காபிர்கள் வட்டி பணம் மூலம் வைத்திருக்கும் குடிநீர் பந்தல்களில் முஸ்லிம்கள் தண்ணீர் குடிப்பது கூடும்.
 [பதாவா ரஷீதியா ,பாகம் 3,பக்கம் 113,114 ]

மூலநூல் ஆதாரங்களை காண  இங்கே க்ளிக் செய்யவும்

                                      அஸ்தக்பிருல்லாஹ் !!!
                      லா ஹவ்ல வலா ஹுவத்த இல்லா பில்லாஹ் !!!

யா அல்லாஹ் உன் ஹபீபாகிய எம் உயிரினும் மேலான கண்மணி நாயகம்(ஸல்லலாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் பொருட்டால் இந்த தேவ்பந்திய வஹாபிய கொள்கைகளை விட்டும் காப்பாயாக !! ஆமீன் !!

http://tableeghijamaathtamil.blogspot.com/p/blog-page_14.html


யார் பயங்கரவாதி? முஸ்லிமா வஹாபியா? Must Read

Image result for Fatwa Against Terrorism and Suicide Bombing
இஸ்லாம் பயங்கரவாத மார்க்கமா?
இஸ்லாத்தில் தற்கொலைத் தாக்குதல் உண்டா?
இஸ்லாம் அப்பாவி மக்களைக் கொலை செய்யக் கூறுகிறதா?
“இல்லை”, என்றால் வஹாபிகளிடத்தில் இஸ்லாம் இருக்கின்றதா?

வஹாபிகளுக்கும் இஸ்லாத்துக்கும் எவ்வளவு தூரம் என்பதை அறியுங்கள்.
அறிஞர் கலாநிதி தாஹிர் காதிரி அவர்கள் இங்கிலாந்தில் வெளியிட்ட பத்வா மார்க்கத் தீர்ப்பைக் கேளுங்கள்.
முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் எத்திவைத்து, இஸ்லாம் சாந்தி சமாதான மார்க்கம் என்ற பெயரைக் காப்பாற்றுங்கள்.
உலகம் எல்லாம் இஸ்லாம் பரவியது வஹாபியத்து வருவதற்கு முன்னரே என்பது எல்லோருக்கும் தெரியும். ஐரோப்பா, அமெரிக்கா முதலிய நாடுகளிலும்கூட இஸ்லாம் பரவியது மத்ஹபு, தரீக்காவைப் பின்பற்றும் முஸ்லிம்களால் தான் என்பதும் உலகறிந்த விடயம்.
காபிர்களை இஸ்லாத்துக்கு அழைப்பது எவ்வாறு என்பதை அல்லாஹு தஆலாவும் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் திருக்குர்னிலும் ஹதீஸிலும் மிகத் தெளிவாகக் காட்டித் தந்திருக்கிறார்கள். இஸ்லாத்தை எதிர்க்காத அப்பாவிகளைக் கொலை செய்யக் கூடாது, முதியவர்களையும் பெண்களையும் சிறு பிள்ளைகளையும் கொலை செய்யக் கூடாது, விவசாயங்களையும் மரங்களையும் அழிக்கக் கூடாது. அபயம் தேடுபவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இப்படியெல்லாம் குர்ஆனிலும் ஹதீஸிலும் மிகத் தெளிவாகக் கூறப்பட்டிருப்பதை உலமாக்கள் மட்டுமல்ல, உலகக் கல்வி படித்த அறிஞர்கள் மட்டுமல்ல, பாடசாலை மாணவர்களும், ஏன் குத்பாக்களின் மூலம் பொதுமக்களும்கூட அடிக்கடி கேட்டு அறிந்திருக்கிறார்கள்.
அப்படியென்றால், ஏன் நாம் வானொலி, டீவி, பத்திரிகைகளில் தினமும் கேள்விப்படுகிறோம், பாக்கிஸ்தானில் வைத்தியசாலையில் தற்கொலைக் குண்டு தாக்குதலாம். முப்பது நாற்பது அப்பாவி நோயாளிகள் மரணமாம். ஆப்கானிஸ்தானில் மார்க்கட்டில் தற்கொலைக் குண்டு தாக்குதலாம். பெருந்தொகை அப்பாவி பெண்களும் குழந்தைகளும் பொது மக்களும் மரணமாம். இராக்கில் அல்லாஹ்வின் மஸ்ஜிதில் தற்கொலைக் குண்டு வெடிப்பாம். அல்லாஹ்வைத் தொழுதுகொண்டிருந்த ஐம்பது அறுபது வணக்கவாளிகள் மரணமாம். யெமனில் தற்கொலைத் தாக்குதலாம். இருபது முப்பது பொதுமக்கள் மரணமாம். ஏன் இந்த அநியாயமான படுகொலைகள்?
ஆயிரம் வருடங்களாக ஸுன்னத்து வல்ஜமாஅத்து இமாம்களும் அவ்லியாக்களும் இப்படி அப்பாவி பொது மக்களைக் கொலை செய்தார்களா? கொலை செய்யும்டி பத்வாக் கொடுத்தார்களா? இல்லையே? அப்படியென்றால் வஹாபி மார்க்கம் என்பது உலக முடிவின் அடையாளமாக வந்த கடைசிகால வழிகெட்ட பித்அத்து மார்க்கம் என்பதை நீங்கள் எவரும் மிக எளிதில் புரிந்து கொள்ளலாம் அல்லவா?
முஸ்லிம் பொது மக்களையும், அப்பாவிப் பெண்கள், குழந்தைகளையும், நோயாளிகளையும் இவ்வாறு தற்கொலைத் தாக்குதல் மூலம் கொலை செய்ய குர்ஆனிலோ ஹதீஸிலோ கடகளவு கூட இடமில்லை. எனவே கவாரிஜ்கள் “மார்க்கத்தை விட்டும் வெளியேறி விடுவாரக்ள்” என்று ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏராளமான ஹதீஸ்களில் கூறியது போன்று இன்றைய கவாரிஜ்களான வஹாபிகள் இஸ்லாத்தை விட்டும் வெளியேறி விட்டார்கள் என்பதையே அவர்களின் இந்தப் பயங்கரவாதம் எடுத்துக்காட்டுகிறது.
இப்போது அடிக்கடி கேள்விப்படும் இன்னொரு புதிய கடைசிகால பித்அத்தான தாக்குதல் தான், அவ்லியாக்களின் ஸியாரங்களை தகர்ப்பது. ஆபிரிக்காவில், யெமனில், எகிப்தில், லிபியாவில், இன்னும் பல இடங்களில் என்று இது தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஸஹாபாக்களின் ஸியாரங்கள், இமாம்களின் ஸியாரங்கள், அவ்லியாக்களின் ஸியாரங்கள் என்று சகலதையும் இடித்தும் குண்டு வைத்தும் தகர்க்கிறார்கள் கவாரிஜ் வஹாபிகள்.
வஹாபிகள் செய்யும் சகல பித்அத்துகளுக்கும் அநியாயங்களுக்கும் குர்ஆன் ஹதீஸில் இருந்து தான் ஆதாரம் காட்டுகிறார்கள். அப்படியென்றால் 1400 வருடங்களாக இருந்த ஆயிரக் கணக்கான இமாம்களுக்கும், இலட்சக் கணக்கான பெரும் உலமாக்களுக்கும் குர்ஆன் ஹதீஸ் தெரியாதா? புகாரி இமாமின் கப்ரு, குத்பு நாயகத்தின் கப்ரு, நான்கு இமாம்களின் கப்ருகள், இன்னும் ஏராளமான ஸஹாபாக்கள், தாபிஊன்கள், இமாம்களின் கப்ருகள் அவர்களுக்கு தென்பட வில்லையா? ஏன் அவர்கள் உலகம் பூராக உள்ள ஸஹாபாக்களினதும், இமாம்களினதும் அந்தக் கப்ருகளை உடைக்க வில்லை? கப்ருகள் சம்பந்தமாக வந்துள்ள ஹதீஸ்களை ஸஹாபாக்களும் இமாம்களும் விளங்கியது ஒரு விதம். கடைசிகால மடயர்களான வஹாபிகள் விளங்கியது வேறு விதம்.
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புனித கப்ரு ஷரீபு ஹிஜ்ரி 80 இல் மஸ்ஜிதுந் நபவியுடன் இணைக்கப்பட்டு மஸ்ஜிது விசாலமாக்கப்பட்டது. அப்போது அதை தாபிஈன்கள், தபஉத் தாபிஈன்களான இமாம்கள் எதிர்க்காமல் அங்கீகரித்தார்கள். மூன்று நூற்றாண்டுகள் கைரான (நேர்வழி பெற்ற நல்ல) காலங்கள் என்று ரஸூலுல்லாஹ் சொன்னதை நாம் ஏற்பதாயின் முதலாம் நூற்றாண்டில் நடந்த இந்த வேலையை நேர்வழி என்று நாம் ஏற்க வேண்டும்.
பள்ளியினுள் கப்ருகள் இருப்பது சிர்க்கு என்று வஹாபி சொல்வதை யாராவது ஏற்பதாயின் அவர்கள் ரஸூலுல்லாஹ்வின் கைரான மூன்று நூற்றாண்டுகள் பற்றிய அந்த ஹதீஸையும் , சகல தாபிஈன்கள், தபஉத் தாபிஈன்களின் செயலையும் நிராகரிக்க வேண்டும். முஸ்லிம்களே, ரஸூலுல்லாஹ்வும், தாபிஈன்கள், தபஉத் தாபிஈன்கள், 1400 வருடமாக இருக்கின்ற இமாம்கள் நேர்வழியா, அல்லது முஸ்லிம் உலகை யஹூதிகளுக்கு தாரைவார்த்துக் கொடுத்த , உலக முடிவு நெருங்கியுள்ள கடைசி காலத்தில் வந்துள்ள வஹாபிகள் நேர்வழியா என்பதை நீங்களே தீர்மானியுங்கள்.
ஆம், குர்ஆனும் ஹதீஸும் ஸஹாபாக்களுக்கும் இமாம்களுக்கும் விளங்குவது ஒரு விதம். கடைசி காலத்தில் தோன்றும் வஹாபி பித்அத்திகளுக்கு விளங்குவது வேறு விதம். இமாம்களையும் அவ்லியாக்களையும் விட்டு விட்டு, தற்கால மடயர்களான சுயநலவாதிகளான வஹாபித் தலைவர்களிடம் பொது மக்கள் குர்ஆன் ஹதீஸை எடுத்தால் தலைகீழாகத் தானே புரியும் !
“என்னுடைய உம்மத்து வழிகேட்டின் பேரில் ஒன்று சேர மாட்டார்கள்” என்று ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உத்தரவாதம் அளித்துள்ளார்களே ! (அபூ தாவுத், இப்னு மாஜா). இந்தக் கப்ருகளும், அவற்றை முஸ்லிம்கள் தரிசிக்கச் செல்வதும் இஸ்லாத்தில் உள்ளது தான் என்பதால் தானே இமாம்களும் முழு முஸ்லிம் உம்மத்தும் அதைச் செய்வதில் ஒன்றுபட்டிருந்தார்கள். முஸ்லிம் உம்மத்து ஒன்று பட் விடயம் நேர்வழி தான் என்று ரஸூலுல்லாஹ் அவர்களே கூறிய பின், “அப்படியல்ல இஸ்லாம் இப்படித்தான்” என்று புதிய விளக்கம் கொடுப்பதற்கு வஹாபிக்கு என்ன உரிமை இருக்கின்றது ?
“அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும், மனிதர்களையோ பொருட்களையோ அதிகம் கௌரவிப்பது சிர்க்கு. அது அல்லாஹ்வை மட்டும் வணங்குவதற்கு மாற்றமானது” என்பது தான் வஹாபி மார்க்கம் என்பது உங்கள் அனைவருக்கம் தெரியும். ஒரு கேள்வி : இன்றைய வஹாபிகள் ரஸூலுல்லாஹ்வின் காலத்தில் இருந்திருந்தால், கல்லால் ஆன கஃபதுல்லாஹ்வை தவாபு செய்வது, ஹஜருல் அஸ்வதை முத்தமிடுவது, ரஸூலுல்லாஹ்வின் உமிழ் நீரை ஸஹாபாக்கள் மேனியில் பூசிக் கொள்வது போன்ற செயல்களால் தவ்ஹீதுக்கு பாதிப்பு என்று ரஸூலுல்லாஹ்வுக்கே ஆலோசனை கூறியிருப்பார்கள் அல்லவா?
முஸ்லிம்களின் ஏகோபித்த செயலுக்கு மாற்றமாக யாராவது புதிய ஒரு கொள்கையைக் கொண்டுவந்தால் அவன் முஸ்லிம் உம்மத்தை விட்டும் வெளியேறி விட்டான். நரகிலும் அவன் தனியாகப் போடப்படுவான் (திர்மிதி) என்று ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரித்ததற் கிணங்க, வஹாபிகளே பித்அத்து வாதிகள் என்பதும், கப்ருகளை இடிக்கும் வஹாபிகள் நரகத்தில் தள்ளப்படுவார்கள் என்பதும் உறுதியாகின்றன.
குர்ஆன் ஹதீஸ் என்று வஹாபி கூறியவுடன், பாமர மக்கள் கலங்குகிறார்கள். ஏன் கலங்க வேண்டும் ? எமது பெரும் தலைவர், எமக்கு கடைசி காலத்திலும் நேர்வழி காட்ட வந்த நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ஏராளமான ஹதீஸ்கள் மூலம் வஹாபிகளை இனம் காட்டித் தந்திருக்கிறார்கள். அவற்றுள் மிகவும் உறுதியான ஹதீஸ்களில் நின்றும் உள்ளவை தான், கடைசி காலத்தில் தோன்றும் ஒரு வழிகெட்ட கூட்டம் குர்ஆன் ஹதீஸ் பேசி மக்களை வழிகெடுப்பதாக கூறப்பட்டுள்ள ஹதீஸ்கள்.
“கடைசி காலத்தில் ஒரு கூட்டத்தினர் வரவார்கள். அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள், நபியின் சொல்லை சொல்லிக் காட்டுவார்கள். ஆனால் அவர்களின் தொண்டைக்கு கீழ் அவை (குர்ஆனும் ஹதீஸும்) இறங்கமாட்டாது. (அதாவது, குர்ஆனும் ஹதீஸும் என்ன கூறுகின்றன என்பதை அவர்கள் விளங்க மாட்டார்கள் ). வேட்டை மிருகத்தை விட்டும் அம்பு எவ்வாறு வேறு திசையில் வேகமாகச் செல்கின்றதோ அதே விதம் அவர்கள் இஸ்லாத்தை விட்டும் வெளியேறி விடுவார்கள். அவர்கள் அல்லாஹ்வின் படைப்புகளில் எல்லாம் (மனிதர்கள், மிருகங்களை விடவும்) மிகவும் கெட்டவர்கள். என்ற கருத்தில் ஏராளமான நபிமொழிகள் (புகாரி, முஸ்லிம், நஸாஈ, அபூ தாவுத், முவத்தா) மூலம் வஹாபிய பித்அத்தை விட்டும் உண்மை முஸ்லிம்களை ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பாதுகாத்திருக்கிறார்கள்.
சாபிஈ மத்ஹபைச் சேர்ந்தவர்கள் தற்கொலைத் தாக்குதல் நடாத்தினார்களா? ஹனபி, ஹன்பலி, மாலிக்கி மத்ஹபுகளைச் சேர்தவர்கள் தற்கொலை குண்டை வெடிக்க வைத்தார்களா? காதிரியா, சாதுலியா, ரிபாஇய்யா போன்ற தரீக்காக்களைச் சேர்ந்தவர்கள் தற்கொலை தாக்குதல் நடாத்தினார்களா? இல்லவே யில்லை. தவ்ஹீதை பரப்புகிறோம் என்று வந்த வஹாபி இயக்கங்களே இந்த தற்கொலைத் தாக்குதல்களை யெல்லாம் நடாத்தி மனித இனத்தை அநியாயமாக அழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை முஸ்லிம்கள் மட்டுமல்ல. முழு உலக மக்களும் அறிவார்கள்.
வெளியில் இருந்து இஸ்லாத்தை அழிக்க முடியாது என்பதை ஆயிரம் வருட அனுபவத்தில் கண்டறிந்த யூதர்கள், இஸ்லாத்தை அழிக்க இஸ்லாத்துக்குள்ளேயே ஒரு கூட்டத்தை உருவாக்க வேண்டும் என்று பல நூறு வரடங்களாக திட்டமிட்டு அமைத்த அமைப்பு தான் வஹாபி இயக்கம். முஸ்லிம்களை இஸ்லாத்தின் பெயரால் அழைத்தால் தான் புதிய இயக்கத்தில் சேருவார்கள் என்பதால், “தவ்ஹீது” என்ற பெயிரில், (அல்லாஹ்வும் ரஸூலும் சொல்லாத) புதிய ஒரு தவ்ஹீதை அறிமுகம் செய்தார்கள்.
இந்தப் புதிய “தவ்ஹீதின்படி” இது வரை உலகில் இருந்த, தற்போதிருக்கும் சகல முஸ்லிம்களும் காபிர்கள், முஷ்ரிக்குகள் ஆவர். எனவே அவர்களைக் கொலை செய்வது ஜிஹாத் ஆகும். அந்த முஸ்லிம்களின் சொத்துக்களை அபகரிப்பதும், இஸ்லாத்தைப் பாதுகாத்த தலைவர்களின் கப்ருகளை இடித்து, அவ்லியாக்கள் இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் செய்வதும் ஜிஹாத் ஆகும் என்ற விசக் கருத்தை யஹூதிகள் வஹாபி தலைவர்களிடம் விதைத்தார்கள். இஸ்லாத்தை தழுவுவதாக நடித்து அரபு நாட்டு கல்வி, தஃவா, பண விநியோக துறைகளில் ஊடுருவி, உலக முஸ்லிம்களையும், இஸ்லாத்தையும், இஸ்லாத்தை எமக்கு பாதுகாத்து தந்த இமாம்கள், அவ்லியாக்களின் நினைவுச் சின்னங்களான கப்ருகளையும் உலகில் இருந்தே அழித் தொழிக்கும் தமது நீண்ட கால திட்டத்தை வஹாபிகள் மூலம் யஹூதிகள் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், இஸ்லாம் சிறு தொகையினரைக் கொண்டே ஆரம்பமானது. அதே போன்று (கடைசி காலத்தில், அதிகம் பேர் வழிகெட்டு) சிறு தொகையினரே உண்மை முஸ்லிம்களாக இருப்பார்கள், ( முஸ்லிம், திர்மிதி, இப்னு மாஜா, தாரிமி ) என்றும்,
காலையில் முஸ்லிமாக இருந்தவர் மாலையில் காபிராவாரர், மாலையில் முஸ்லிமாக இருந்தவர் அடுத்தநான் காலையில் காபிர் ஆவார் என்ற கருத்தில் ( முஸ்லிம், திர்மிதி, அபு தாவுத், இப்னு மாஜா, அஹ்மத், தாரிமி ) கூறப்பட்டுள்ள ஹதீஸுகளின்படி இப்போது, ஸுன்னத்து வல்ஜமாஅத்திலிருந்து வேகமாக முஸ்லிம்கள் மாறி, வஹாபிகளின் தொகையே நாளுக்கு நாள் கூடுகிறது. காலையில் ஸுன்னத்து வல்ஜமாஅத்து முஸ்லிமாக இருந்த ஒருவன், பகலில் மற்ற முஸ்லிமைக் காபிர், முஷ்ரிக்கு என்று சொல்வதன் மூலமோ, அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு என்று சொல்வதன் மூலமோ , ஹதீஸில் கூறப்பட்ட விதம் மாலையில் காபிராகி விடுகின்றான்.
புனித மதீனா சரீபில் யார் பித்அத்தான காரியத்தைச் செய்கிறாரோ, அல்லது பித்அத்துக் காரனுக்கு உதவுகின்றாரோ அவருடைய பர்ழான ஸுன்னத்தான எந்த அமலையும் கியாமத்து நாளில் அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான் என்ற கருத்தை ஏராளமான நபிமொழிகள் கூறிக் கொண்டிருக்கின்றன. (புகாரி, முஸ்லிம், திர்மிதி).
ஒன்றல்ல இரண்டல்ல, ஸுன்னத்து வல்ஜமாஅத்துக்கு மாற்றமான ஏராளம் பித்அத்துகளைச் செய்து கொண்டிருக்கின்ற வஹாபிகள் தொழுகிறார்கள், நோன்பு பிடிக்கிறார்கள், ஹஜ்ஜு செய்கிறார்கள், தான தர்மங்கள் செய்கிறார்கள். மதீனாவுக்குப் போனால் விசேசமாக தனது புதிய பித்அத்துக் கொள்கையை வெளியாக்குகின்றார்கள். ஆனால் அவர்களை யறியாமலேயே அவர்களை விட்டும் ஈமான் போய் விடுகின்றது. மறுமையில் எந்த அமலையும் அல்லாஹ் ஏற்பதில்லை என்று இந்த ஹதீஸுகள் எச்சரிக்கின்றன.
உண்மை முஸ்லிம்கள் குறைந்து கொண்டே வருகிறார்கள். எனவே கடைசி காலத்தில் குறைந்துகொண்டே வரும் முஸ்லிம்களுக்கே சுவர்க்கம் கிடைக்கும் என்று நபியவர்கள் கூறியிருப்பதால் , தரீக்கா, மத்ஹபைப் பின்பற்றி ஸுன்னத்து வல்ஜமாஅத்தில் உள்ள முஸ்லிம்கள் அல்லாஹ்வின் கிருபையால் திருப்தியோடு வாழலாம்.
வஹாபிகளின் தற்கொலைத் தாக்குதல், சொத்துக்களை அழித்தல், கொடூரமான முறையில் கொலை செய்தல் போன்ற பயங்கரச் செயல்களால், இஸ்லாம் பயங்கர வாதத்தை ஏவும் மார்க்கம், மனித உயிர்களை அநியாயமாக குடிக்கும் மார்க்கம், சொத்துக்களை அநியாயமாக அழிக்கும் மார்க்கம் என்ற மோசமான கருத்துக்கள் இப்போது அந்நிய மதத்தவர்கள் மத்தியில் வேகமாகப் பரவுகின்றன.
இதனால் தான் ஐரோப்பிய நாடுகளில் அடிக்கடி இஸ்லாத்துக்கு எதிரான மோசமான சதிநாச வேலைகள் முன்னெடுக்கப் படுகின்றன. இஸ்லாமிய வேடம் தரித்து தினமும் உலகில் பல நாடுகளிலும் தற்கொலைத் தாக்குதல் நடாத்தி ஏராளம் அப்பாவிப் பொது மக்கள் படுகொலை செய்யப் படுவது போன்று உலகில் வேறு எந்த நாட்டிலாவது, எந்த மதத்தினராவது, எந்த இனத்தவராவது தனது இனத்தையே அழிக்கும் வேலை நடைபெறுகிறதா? இல்லை அல்லவா?
இந்தக் கொடூரக் காட்சிகளைத் தினமும் டீவி யிலும், பத்திரிகைகளிலும் காணும் அந்நிய மதத்தினர்கள் இஸ்லாத்தைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்? இஸ்லாத்தைப் போதித்த நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தப்பாக எடை போடுகிறார்கள். இதனால் தான் அண்மைக் காலங்களில் “இஸ்லாம் பயங்கரவாத மதம்” என்று இஸ்லாத்துக்கு எதிராக உலகின் பல நாடுகளிலும், ஏன் இலங்கையிலும் கூட அந்நியர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டார்கள். நபிகள் நாயகத்தைத் தூற்றிப் பேசினார்கள். எனவே இஸ்லாத்தையும், நபிகள் நாயகத்தின் சாந்தி சமாதான கொள்கைகளையும் நாம் உலக மக்கள் (குறிப்பாக பிற மதத்தவர்கள்) அறியச் செய்ய வேண்டுமென்றால், வஹாபிகளின் இஸ்லாமிய விரோத பயங்கரவாதக் கொள்கையை அவர்களுக்கு எடுத்து விளக்குவது முஸ்லிம்களின் கடமையாகிறது.
தவறினால், வஹாபிகளின் பயங்கரவாத செயல்களை வைத்து முஸ்லிம்களுக்கு எடிதிரான தாக்குதல்களை பிற மதத்தவர்கள் எதிர்காலத்தில் பல நாடுகளிலும் தீவிரப்படுத்தலாம். சிறுபான்மையாக முஸ்லிம்கள் வாழும் நாடுகளில் இஸ்லாமிய விரோத நடவடிக்கைகள் முடுக்கி விடப்படலாம். இதனால் இஸ்லாத்துக்கும் கெட்ட பெயர், பிறர் இஸ்லாத்தை தழுவ விரும் மாட்டார்கள். எங்கள் உயிரிலும் மேலான கண்மணி நாயகம் அவர்களையும் அல்லாஹு தஆலாவையும் பிற மதத்தவர்கள் தூற்றவும் காரணமாக அமையும். எனவே வஹாபியின் பயங்கரவாதத்துக்கும் இஸ்லாத்துக்கும் தொடர்பில்லை என்பதையும், இஸ்லாத்தை அழிக்க யூதர்களால் வடிவமைக்கப்பட்ட இயக்கமே வஹாபியத்து என்பதையும் உலகறியச் செய்வது முஸ்லிம்களின் கடமையாகும்.
எனவே எமது இணையத்தளத்தில் (  ( வஹாபிப் பயங்கரவாதம் )) என்ற தலைப்பில் உள்ள கலாநிதி தாஹிர் காதிரி அவர்கள் இங்கிலாந்தில் 2010 இல் அறிஞர்கள் மத்தியில் ஆங்கிலத்தில் தெளிவு படுத்திய இஸ்லாத்தின் சாத்வீகக் கொள்கையை பிற மதத்தவர்கள் மத்தியில் பரப்புவது எமது கடமையாகும். வஹாபிகள் இன்று பல நாடுகளிலும் மேற்கொள்ளும் தற்கொலைத் தாக்குதல்களை குர்ஆனும் ஹதீஸும் எவ்வாறு வன்மையாகக் கண்டிக்கின்றன என்பதை கலாநிதி தாஹிர் காதிரி அவர்கள் மிக உறுதியான ஆதாரங்களை முன்வைத்து நிரூபிக்கிறார்கள்.
பல துறைகளிலும் படிக்கும் மாணவர்களும் இதனைக் கேட்பதன் மூலம், இஸ்லாத்தின் சாந்தி சமாதான தன்மையை அறிய முடிவதுடன், வஹாபி பித்அத்தில் விழாமல் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும் முடிவதுடன், ஆங்கில மொழியறிவுக்கும் உதவியாக இருக்கலாம் அல்லவா?
உங்களுடன் தொடர்புடையவர்கள், உங்களுக்கு தெரிந்த முகவரிகள், உலகளாவிய இணையத் தளங்களுக்கும் இதை அனுப்பி இஸ்லாம் என்பது பயங்கரவாத மார்க்கம் அல்ல, இஸ்லாம் என்பது சாந்தி சமாதான மார்க்கம் என்பதையும், இஸ்லாத்தை அழிக்க கடைசி காலத்தில் தோன்றி, இஸ்லாத்திலிருந்து வெளியேறுவதாக நபிகள் நயாகம் அவர்கள் கூறிய, வழிகெட்ட ஒரு கூட்டத்தினரே இஸ்லாத்தின் பெயரால் பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள் என்பதையும், முஸ்லிம்களில் தெரியாதவர்களுக்கும், பிற மதத்தவர்களுக்கம் எத்தி வைப்பது கடமையாகும். வஹாபியத்தின் பயங்கரவாத கொள்கையையும், அதற்கும் இஸ்லாத்துக்கும் சம்பந்தமில்லை என்பதையும் பிற மதத்தவர்களுக்கு எத்தி வைப்பதன் மூலம், அவர்கள் இஸ்லாத்தை தவறாக எடை போட்டு, இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் தாக்குவதைம் இன்ஷா அல்லாஹ் ஓரளவு குறைக்கலாம் அல்லவா?