السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Wednesday, 2 December 2015

வெறுப்புக்குரிய த.த.ஜ



உங்கள் தவ்ஹீதுக்கும் எங்கள் தவ்ஹீதுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு 

1. இறைவனுக்கு உருவம் உண்டு என்று சொல்லி உருவத்தை வழிபடுவது உங்கள் தவ்ஹீத்...
★இறைவனுக்கு உருவமும் இல்லை, உருவ வழிபாடும் கூடாது என்பது எங்கள் தவ்ஹீத்..


2. இறை மறையில் பிழை உள்ளது என்பது உங்கள் தவ்ஹீத்
★இறை மறையில் ஒரு பிழை கூட இல்லை என்பது எங்கள் தவ்ஹீத்..


3. இறைவனே கூறினாலும் ஆய்வு செய்து தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது உங்கள் தவ்ஹீத்
★இறைவன் கூறியது எதுவாயினும் கண்ணை மூடிக் கொண்டு தலை சாய்த்து அடிபணிவது எங்கள் தவ்ஹீத்..


4. நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் உலகின் மிகப் பெரிய குழப்பவாதி என்று கூறுவது உங்கள் தவ்ஹீத்..
  ★நபியவர்கள் ஒரு காலத்திலும், ஒரு விஷயத்தில்கூட குழப்பமான செய்தியை சொன்னதே இல்லை என்பது எங்கள் தவ்ஹீத்..


5. நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் 11 ஆண்டுகள் ஷிர்கை ஆதரித்தார்கள் என்பதும், ஷிர்க் செய்ததை கண்டு கொள்ளாமல் இருந்தார்கள் என்பதும் உங்கள் தவ்ஹீத்..
★  ஷிர்கை ஒழிக்க வந்த நபியவர்கள் ஒரு காலத்திலும் ஷிர்கை ஆதரித்ததில்லை என்பது எங்கள் தவ்ஹீத்...


6.  நபியவர்கள் அந்நிய பெண் வீட்டில் போய் படுப்பார்கள் என்பது உங்கள் தவ்ஹீத்..
★அண்ணலார் அந்நிய பெண்ணை கனவிலும்கூட நினைத்தது இல்லை என்பது எங்கள் தவ்ஹீத்...


7.  நபியவர்கள் உலக விஷயத்தில் பொய் சொல்லுவார்கள் என்பது உங்கள் தவ்ஹீத்...
★ நபியவர்கள் மார்கம், மறுமை, ஷரீஅத், சொர்கம், நரகம், கப்ரு, மலக்குகள், மஹ்ஷர், உலகம் என எந்த விஷயத்திலும் நபியவர்கள் பொய் சொல்லவே மாட்டார்கள் என்பது எங்கள் தவ்ஹீத்...


8. நபி தாவூத் ( அலை)  அவர்கள் குடி மக்கள் சொத்தை அபகரித்தவர் என்பது உங்கள் தவ்ஹீத்...
★எந்த நபியும் யாருடைய சொத்தையும் அபகரிக்கவில்லை என்பது எங்கள் தவ்ஹீத்..


9.  நபி யூனுஸ் ( அலை) அவர்கள் இறை ஆற்றலின் மீது நம்பிக்கை இல்லாதவர் என்பது உங்கள் கொள்கை
★ உலகில் தோன்றிய எந்த நபிக்குமே இறைவன் மீது நம்பிக்கை இழந்தவர்களில்லை என்பது எங்கள் தவ்ஹீத்...


10.  நபித்தோழர்களுக்கு காண்டம் பற்றி தெரியுமா என்று கேள்வி கேட்டு நபித்தோழர்களை விட நாங்கள்தான் அறிவாளி என்று சொல்வது உங்கள் தவ்ஹீத்..
★நபித்தோழர்கள் தலை சிறந்த அறிவாளிகள் என்பது எங்கள் தவ்ஹீத்...

11. நபித்தோழர்களை ரவுடிகள் என்பது உங்கள் தவ்ஹீத்..
 ★ நபித்தோழர்கள் தான் உலகிலேயே நல்லவர்கள் என்பது எங்கள் தவ்ஹீத்..


12. நபித் தோழர்களை கிரிமினல்கள் என்று சொல்வது உங்கள் தவ்ஹீத்..
★நபித்தோழர்கள் நீதியின் இருப்பிடம் என்பது எங்கள் தவ்ஹீத்..


13. நபித்தோழர்கள் பித்அத் செய்ததாக கூறுவது உங்கள் தவ்ஹீத்..
★நபித்தோழர்கள் பித்அத்தை அழித்தார்கள் என்பது எங்கள் தவ்ஹீத்..


14. ஃபிக்ஹ் சட்டங்கள் வழிகேடு என்பது உங்கள் தவ்ஹீத்..
★ ஃபிக்ஹ் சட்டங்கள்தான் சமுதாயத்தின் பாதுகாப்பு என்பது எங்கள் தவ்ஹீத்....

இப்படியாக உங்களுக்கும் ( தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்துக்கும்)
எங்களுக்கும் (சுன்னத் ஜமாஅத்தக்கும்) நிறைய வேறுபாடுகள் உள்ளன..*

  www.EravurYoosufblogspot.com *

Tuesday, 1 December 2015

தப்லீக் அமீர்மார்களே! ஆதரவாளர்களே! - 07


அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத்தினர் நாயகம் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களை அளவு கடந்து எல்லை மீறி புகழ்வதாகக் கூறி குற்றம் சுமத்திக்கொண்டு இருக்கும் உங்களுக்கு, உங்கள் தப்லீக் இயக்க முன்னோடிகளின் கொள்கைகள் என்னவென்று தெரியுமா?
(மதீனா முனவ்வராவின் தெருக்களில் மலக்குகள் நடமாடுவார்கள்.அங்கு காலராவும் தஜ்ஜாலும் நுழையமுடியாது என நாயகம் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் நவின்றார்கள். அதாவது நாயகம் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் மகிமைகளை சுமந்துள்ள உள்ளங்களை அல்லாஹ் (பாதுகாக்கின்றான்.)
அஷ்ஷாஹ் வலியுல்லாஹ் அன்னவர்ளின் தந்தை அஷ்ஷாஹ் அப்துர்ரஹீம் வலியுல்லாஹ் ஹிஜ்ரி 1054லில் பிறந்து ஹிஜ்ரி 1131ல் சமாதி கொண்ட மிகப்பெரிய இறை நேசராகும். குத்புல் ஹிந்த் காஜா கரீப் நவாஸ் (கத்தசல்லாஹு சிர்ரஹுல் அஸீஸ்) அவர்கள் நாயகம் அவர்களின் இல்லத்திற்கு வருகை தந்து சிஷ்திய்யா தரீக்கத்திற்கான கலீபாவாக நியமித்து சென்றுள்ளர்கள். அத்துடன் நாயகம் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களை நேருக்குநேர் சந்திக்கும் அதிஉயர் பாக்கியம் பெற்ற பெரும் மகானாகவும் இருந்துள்ளார்கள்.
மௌலவி அஷ்ரப் அலி தானவி (கிஸஸுள் அகாபிர்) எனும் நூலின் 13ம் பக்கத்தில், அஷ்ஷாஹ் அப்துர்ரஹீம் அன்னவர்கள் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாலுள்ள விடயங்களைக் காணும் கராமத் உள்ள ஒருவர் என்று குறிப்பிடுகிறார்.
எனது தந்தை அஷ்ஷாஹ் அப்துர்ரஹீம் நாயகம் அவர்களை நலம் விசாரிக்க வருகை தந்த அருமை நாயகம் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள், தங்களது முபாரக்கான இரு திரு முடிகளையும் வழங்கி சென்றிருந்தார்கள். அது உயிரோட்டமுள்ளதாக இருந்தது. அவசர சந்தர்பங்களில் அதனை வெளியில் எடுத்துச் செல்ல நேரிட்டால் மேகம் அதற்கு நிழல் இட்டுக்கொண்டு இருக்கும். இந்தக் காற்சியினை விமர்சகர்கள் கண்ணுற்றதும் அவர்களும் திருந்திக் கொண்டார்கள். இரு திரு முடிகலும் சேர்ந்து இருக்கும். ஸலவாத் ஓதினால் இரண்ரும் பிரிந்து விடுவது இதன் விசேடத் தன்மையாகும். அவ்விரண்டில் ஒன்றை தந்தை அவர்கள் என்னிடம் ஒப்படைத்தார்கள். இதற்காக அல்லாஹ்வை நான் புகழ்கின்றேன் என அஷ்ஷாஹ் வலியுல்லாஹ் (அன்பாஸுள் ஆரிபீன் பக்கம் 35) என்ற நூலில் பதிவு செய்துள்ளார்கள்.
இந்தியத் துணைக் கண்டத்தில் ஹதீஸ் கலைக்கு புத்துயிர் அளித்து, அத்துறையில் அரும் பெரும் ஆய்வுகளை நிகழ்த்தி, ஆக்கப்பணிபுரிந்த அஷ்ஷாஹ் வலிய்யுலாஹ், ஹதீஸ் கலையின் வளர்ச்சிக்கு ஆற்றிய பணியை இஸ்லாமிய உலகம் இன்றும் நன்றியுணர்வோடு நினைவு கூறுகின்றது.
அவர் எழுதிய நூல்களில் மிக முக்கியமானதும் முஸ்லிம் அறிஞர் பெருமக்களின் பாராட்டைப் பெற்ற, உலக பிரசித்தம் அடைந்ததுமான நூல், “ஹுஜ்ஜதுல்லாஹி அல் பாலிகா” வாகும். எகிப்தின் தலை நகரம் கெய்ரோவிலுள்ள அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் நீண்ட நாட்களாக அது இருந்து வந்தது என்பது குறிப்பித்தக்கது.
1731ல் மக்காவிற்கு புனித யாத்திரை மேற்கொண்டு, ஹிஜாஸில் 14 மாதங்கள் தங்கியிருந்தார். மக்காவில் புகழ்பெற்ற சமய அறிஞர்களிடம் ஹதீஸ் கலையிலும் மார்க்கச் சட்டக் கலையிலும் தேர்ச்சி பெற்றார். மக்காவில் கல்வி கற்றபோது, இப்னு அப்துல் வஹ்ஹாபிடமும் (1703 - 1787) கல்வி கற்றதாக கூறப்படுகிறது. இது புனித காபத்துல்லாஹ்வையும் அருமை நாயகம் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களை தரிசிப்பதற்கென்றும் மேற்கொள்ளப்பட்ட புனித யாத்திரை.
இந்த சிறப்பான யாத்திரை தொடர்பில் அஷ்ஷாஹ் வலியுல்லாஹ் நாயகம் அவர்கள் (புயூளுள் ஹரமைன்) என்ற பெயரில் நூல் ஒன்றைத் தொகுத்து அப்பயணத்தில் அனுபவித்த அற்புதமான நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ளார்கள்.
கண்மணி நாயகம் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களை பல தடவைகள் நேருக்குநேர் தரிசித்து தம்மிடமுள்ள பல சந்தேகங்களுக்கு விடைகளைப் பெற்றிருப்பதுடன் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் திரைகள் அகற்றப்பட்டு யதார்த்தமான ஹகீகத்தான தோற்றத்தில் காணும் பாக்கியமும் பெற்றுக் கொண்டதாக அதில் அஷ்ஷாஹ் வலியுல்லாஹ் குறிப்பிடுகிறார்கள்.
ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் களிக்கும் தண்ணீருக்கும் இடையில் இருந்தபோது நான் நபியாக இருந்தேன் எனும் நபி மொழி தொடர்பில் வினவி அண்ணலாரின் அப்போதைய தோற்றத்தையும் காணும் அரிய பாக்கியம் பெற்றதது மட்டுமல்லாது ஒரு கட்டத்தில் நானும் அண்ணல் நபி நாதரும் இரண்டறக்கலந்து காணப்பட்டோம். என்னில் அண்ணலாரைக் கண்டேன் என்று அதில் பதிவு செய்கிறார்கள். இப்படியான இன்னும் பல ஹகீகத்தான கருத்துக்களை காணும் பாக்கியம் அதைப் பார்பவர்கள் பெற்றுக் கொள்வார்கள். ஆனாலும்கூட இப்பெரியாரின் பேரப்பிள்ளை இஸ்மாயில் திஹ்லவி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் பற்றி பின்வருமாறு எழுதுகிறார்.
“அனைத்து அன்பியாக்களும்,இறைத்தூதர்களும் பயனற்றவர்கள்.” [நூல் – தக்வியத்துல் ஈமான் ,பக்கம்29]
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மறைவான சங்கதிகளை அறிவார்களென்று நம்புவது சுத்தமான ஷிர்க்காகும்
நூல் : ஃபதாவா ரஷீதியா பாகம் =2 ,பக்கம்=10 அசிரியர் : ரஷீது அஹ்மது கொங்கோஹி
ரஸூலுல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் பரிசுத்த ரவுளா ஷரீபை ஜியாரத்துச் செய்வதற்காக மட்டும் போவது ஷிர்க்காகும்
( நூல் : தக்வியத்துல் ஈமான் , பக்கம் = 10,40, அசிரியர் : இஸ்மாயீல் )
நண்பர்களே!
இவ்வாறு een எழுதினார்kal ? இதனூடாக ivarkal நிறுவ வந்த விடயம் என்னவென்பதைப் பார்க்கும் முன்னர் இப்படியானதொரு எண்ணம் ஒரு உண்மை விசுவாசியின் உள்ளத்தில் எவ்வாறு தோற்றம் பெற முடியும் என கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். அவ்வாறானதொரு எண்ணம் கொண்டவரும் அவரை போற்றிப் புகழ்பவர்களும் எவ்வாறு முஸ்லிம்களாக இருக்க முடியும்?
நாயகம் முஸ்தபா ஸல்லல்லஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் சிறப்புக்களை மகிமைகளை யதார்த்தங்களை கூறி அதற்கு விளக்கங்கள் சொல்ல முற்படவேண்டுமே தவிர பெருமானாரை தரக்குறைவாக கருதப்படும் கருத்துக்களை சொல்லவோ அவ்வாறு சொல்லிவிட்டு அதற்காக தவ்பா செய்யாமல் விளக்கம் சொல்ல முற்படக் கூடாது.
"ராயினா" என்ற வார்த்தை நல்லதொரு வார்த்தைதான். ஆனாலும்கூட அந்த வார்த்தையை பெருமானார் முஜ்தபா சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் எதிரிகள் தவறான எண்ணத்தில் பிரயோகம் செய்கிறார்கள் என்ற காரணத்தினால் அந்த வார்த்தையை நீங்களும்தான் உபயோகம் செய்யாதீர்கள் என அருமைத் தோழர்களைப் பார்த்து அல்லாஹ் சொன்னான்.
தொடரும்........

Eravur Yoosuf

Eravur

Eravur

eravur





தப்லீக் இயக்க உலமாக்களே! ஆதரவாளர்களே! 06

 தப்லீக் இயக்க உலமாக்களே! ஆதரவாளர்களே! 06


சத்தியத்தை தேடுபவனுக்கு ஒரு ஆதாரம் போதும், மனோஇச்சையைப் பின்பற்றுபவனுக்கு ஆயிரம் ஆதாரங்கள் இருந்தாலும் போதாது”
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் நவின்றார்கள். பாம்பு தன் புற்றில் (சென்று) அபயம் பெறுவது போல் ஈமான் எனும் இறை நம்பிக்கை மதீனாவில் அபயம் பெறும் என நபித்தோழர் அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள். புகாரி. பெருமானார் முஜ்தபா சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் மீதான அன்பு ஈமான் உள்ளவரைக் கண்டுகொள்வதற்கான அலவு கோளாகும் என்பதற்கு இந்தவொரு ஆதாரம் போதும்.
அஷ்ஷாஹ் வலியுல்லாஹ், (பிறப்பு 02-03- 1703) அமீருல் முஃமினீன் ஹஜ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வழியில் (ஹிஜ்ரி 1114 ஷவ்வால் மாதம் பிறை 4 ல்) தோன்றிய ஷெய்கு அஷ்ஷாஹ் அப்துர் ரஹீம் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு மகனாக பிறந்தார்கள்.
மௌலவி இஸ்மாயில் தெஹ்லவியின் முப்பாட்டனார் அஷ்ஷாஹ் அப்துர்ரஹீம் வலியுல்லாஹ் அவர்கள் பாரூக்கி என அழைக்கப்பட்டார்கள். நக்க்ஷபந்திய்யா தரீகாவில் நாயகம் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் அனுமதியின்படி பைஅத் செய்து கொண்டார்கள். கிலாபத்தும் பெற்றிருந்தார்கள். நபியே நாயகமே! நீங்கள் இல்லையென்றால் நான் ரப்பு என்பதை வெளிப்படுத்தி வைத்திருக்க மாட்டேன் என்ற நபி மொழிகளை பிரச்சாரம் சையும் சூபிகளில் ஒருவராகும். வலிமார்களை அதிகமதிகம் நேசிப்பவராக, அவர்களைத் தேடிச் சென்று நல்லாசி பெறுபவராகவும் இருந்துள்ளார்கள்.
ஷைகுல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அரபி ரஹ்மத்துல்லாஹ் அலைஹி அன்னவர்களின் கருத்துக்களை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிரார்கள். அதிகமதிகம் சலவாத் ஓதுபவர்களாக, அதன் பரக்கத்தினால்தான் தனக்கு சகலதும் கிடைக்கப்பெற்றதாகவும் கூறுவார்கள்.
சங்கையான ரபீஉனில் மாதத்தில் விசேடமாக உணவுகள் தயார் செய்து பங்கீடு செய்துள்ளார்கள்.
ஒரு தடவை உணவு தயார் செய்து கொள்வதற்கான வசதி இல்லாமல் போனதற்காக கவலை அடைகிறார்கள். அன்றிரவு நாயகம் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் தயார் சைய்யப்பட்ட உணவுகளை வழங்கியிருந்தார்கள். அதனை மறு நாள் பங்கீடு செய்ததாகவும் ஷாஹ் வலியுல்லாஹ், அன்பாசுள் ஆரிபீன் எனும் நூலில் குறிப்பிடுகிறார்கள்.
அல்லாஹ்வின் நல்லடியார்களான வலிமார்கள் சமாதி கொண்ட பின்னரும் அவரின் பழைய தோற்றத்தில் இவ்வுலகில் காற்சியளிப்பார்கள். எனது தந்தை அஷ்ஷாஹ் வஜீஹுத்தீன் மரமான பின்னர் பல தடவைகள் காற்சியளித்து நிகழவுள்ள விடயங்களை அறிவித்து தருவார்கள். அவ்வாறு ஒரு நாள் மறுமை நாள் வரை நடக்கவுள்ள சகல விடயங்களையும் காண்பித்து தந்தார்கள் என்று தன்னிடம் கூறியதாக அஷ்ஷாஹ் வலியுல்லாஹ் மேற்க்கூறிய நூலில் பதிவு செய்துள்ளார்கள்.
(இது பரேலவி, தேவபந்த் என்ற பிரச்சினை எழுவதற்கு நூறு வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற நிகழ்வுகள்.)
வலியுல்லாஹ் என்று தன் மகனுக்குப் பெயரிட்டதற்கான காரணத்தினை தந்தை பின்வருமாறு விபரிக்கின்றார்கள்.
ஒரு தடவை குத்புத்தீன் அஹ்மது பக்தியார் காகீ (கி.பி 1173-1235 )ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அடக்கவிடத்தை தரிசிக்க அப்துர் ரஹீம் வலி அவர்கள் சென்று அவ்விடத்தில் நீண்ட நேரம் முராகபாவில் மூழ்கி இருந்தார்கள். அப்பொழுது உங்கள் இல்லத்தரசி கருவுற்றிருப்பதாகவும் அதுவொரு ஆண் மகன் என்றும் அதற்கு குத்புத்தீன் அஹ்மத் என்ற எனது பெயரையே சூட்ட வேண்டும் என்று அந்த வலியுல்லாஹ் வேண்டிக்கொண்டார்கள். இதனை பெரியார் மறந்து போய் விட்டார்.
ஒருநாள் பெரியார் அவர்களின் மனைவி தொழுதுவிட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தருணத்தில் அவரது கரங்களில் சின்னஞ்சிறிய கரங்களைக் காணுகிறார். இதனால் அச்சம் கொண்டு கணவரிடம் கூறியபொழுது பயப்படத்தேவையில்லை. நீங்கள் வலியுல்லாஹ் ஒருவரை சுமந்துள்ளீர்கள் என்று கூறினார்கள். அவ்வாறே குத்புத்தீன் அஹ்மத் எனப் பெயர் அவர்களுக்கு சூட்டப்பட்டது. இதனால் வலியுல்லாஹ் என்றே அழைக்கப்பட்டார். (அர்வாஹ் ஸ லாஸா )
அன்பர்களே! சூபித்துவ குடும்பத்தில் பிறந்த மௌலவி இஸ்மாயில் திஹ்லவி, “பெருமானார் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மறைந்த பிறகு மண்ணோடு மண்ணாகிவிட்டார்கள்.” (அஸ்தக்பிருல்லாஹ் ) [நூல் – தக்வியத்துல் ஈமான் ,பக்கம் 59] என்று நமது நாயகம் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களை அவமதித்து, அசிங்கப்படுத்தி, கேவலப்படுத்தி பேசுகிறார்.
எனவே இவரும் இவரை தலைவராகவும் நம்புகின்றவர்கள் இஸ்லாமியர்களா?
தொடரும்..........
அர்வாஹ் ஸலாஸா நூலின் பிரதியும் அஷ்ஷேக் குத்புத்தீன் பக்தியாரி காக்கி ரஹ்மத்துல்லாஹ் அலைஹி அன்னவர்களின் முபாரக்கான மஸார் ஷரீபும்.

 தப்லீக் இயக்க உலமாக்களே! ஆதரவாளர்களே! 06

தப்லீக் இயக்க உலமாக்களே! - 05

தப்லீக் இயக்க உலமாக்களே! ஆதரவாளர்களே! 05

உங்கள் இயக்கத்தின் முன்னோடிகள் பாரம்பரிய அகீதாவை உங்களுக்கு நினைவூட்டவும் வளர்ந்து வரும் இளம் சமுதாய சந்ததியினர்களுக்கு நீங்கள் யார்? உங்களின் சுய தோற்றம், ரகசியம் என்னவென்பதையும் வெளிப்படுத்தி வைத்து வரலாற்று நிகழ்வுகளை பாதுகாத்து பத்திரப்படுத்தி வைப்பதற்கென்றே இதனை நாம் தொகுத்து வழங்க முன்வந்தோம்.
தப்லீக் ஜமாஅத் இந்தியாவின் தலைநகர் டில்லியில் மேவாத் எனும் கிராமத்தில் 1925ம் ஆண்டளவில் முழப்பர் நகரின் காந்தலவி எனும் ஊரில் பிறந்த மௌலவி இல்யாஸ் (பிறப்பு 1886- இறப்பு 1944) என்பவரால் துவக்கம் பெற்றதாகும். இந்த அமைப்பின் வெளித்தோற்ற நடை முறை அமைப்புக்கள் மௌலவி இல்யாசுடையது. ஆனால் இதன் கொள்கைக் கோட்பாடுகள் தேவபந்த் எனும் ஊரின் அறிஜர்கள் அகீதாவாகும். இதனை மௌலவி இல்யாஸ் தீனி தாவத் எனும் நூலில் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளார். இவ்விரு ஊர்களும் பக்கத்து பக்கத்து ஊர்களாகும்.
தேவபந்த் அறிஜர்களில் மௌலவி காசிம் நாநூதவி ( ஹிஜ்ரி 1248 - 1297 ஆங்கில வருடம் 1880 - 1833) மௌலவி ரஷீத் அஹ்மத் கொங்கோஹி (ஹிஜ்ரி 1244 - 1323 ஆங்கில வருடம் 1829-1905) மௌலவி முஹம்மது யாகூப் நாநூதவி ( ஹிஜ்ரி 1249 - 1302 ஆங்கில வருடம் 1833 – 1884 ) மௌலவி மஹ்மூத் ஹசன் தேவபந்தி (ஹிஜ்ரி 1268 - 1339 ஆங்கில வருடம் 1851- 1920 ) மௌலவி கலீல் அஹ்மத் சஹரன்பூரியின் (ஹிஜ்ரி 1269-1346, ஆங்கில வருடம் 1852-1927) மௌலவி அஷ்ரப் அலி தானவி (ஹிஜ்ரி 1280 - 1362 ஆங்கில வருடம் 1863- 1943) போன்றோர் அதிகம் பேசப்படுபவர்களாகும்.
இவர்களெல்லாம் அஷ்ஷாஹ் இம்தாதுல்லாஹ் முஹாஜிர் மக்கி ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் சீடர்கள் மட்டுமல்லாது சூபித்துவ கலீபாக்கள் ஆகவும் இருந்தார்கள். அத்துடன் மௌலவி இஸ்மாயில் தெஹ்லவின் தந்தை அஷ்ஷாஹ் அப்துல் கனியின் மாணவர்களாகும்.
இதில் மௌலவி கலீல் அஹ்மத் சஹரன்பூரியின் மாணவரும் கலீபாவுமாக மௌலவி சகரிய்யா ஸாஹிப் ( ஹிஜ்ரி 1315- 1402 ஆங்கில வருடம் 1897-1982 ) காணப்படுகிறார். இவ்விருவரும் புண்ணிய நகரம் மதீனா முனவ்வராவின் ஜன்னத்துல் முஆல்லாவில் நல்லடக்கம் சைய்யப்பட்டார்கள். மௌலானா சகரிய்யாவின் சிறிய தந்தைதான் தப்லீக் இயக்க ஸ்தாபகர் மௌலவி இல்யாஸ் என்பவராகும்.
ரஷீத் அஹமத் கங்கோஹியிடம் பத்து ஆண்டுகள் வரை மார்க்க கல்வி பயின்ற மௌலவி இல்யாஸ், மௌலவி கலீல் அஹ்மத் சகாரன்பூரியின் முரீதும் கலீபாவும் ஆகும். எனவே தப்லீக் இயக்க அமைப்பின் தலைவர் மௌலவி இல்யாசுக்கும் மௌலவி இஸ்மாயில் தெஹ்லவிக்கும் நெருங்கிய ஆழமான ஆத்மீக தொடர்புகள் இருந்திருப்பத்தை உத்தியோகபூர்வமாக அறிந்து கொண்டோம். அத்துடன் இவர்கள் யாவரும் சூபித்துவ வழியில் ஆழமாக மூழ்கியவர்கள்.
இப்படிப்பட்டவர்கள் (யாருடைய பெயர் முஹம்மது, அலி என்று உள்ளதோ அவர்களுக்கு எதன் மீதும் அதிகாரம் இல்லை.ஒரு நபியோ அல்லது வலியோ அவர்களால் ஒன்றும் செய்ய இயலாது.
[ தக்வியத்துல் ஈமான் ,பக்கம் 41 ]
என்பனபோன்ற இஸ்லாமிய கருத்துக்கு முரணான இஸ்லாமிய மார்கத்தின் ஆணிவேர் அறுத்தெறியும் நச்சுக் கருத்துக்களை எவ்வாறு கூறியிருக்க முடியும்? என்ற வினாவுக்கான பதிலைப் பார்க்கும் முன்னர் மௌலவி இஸ்மாயில் தெஹ்லவியின் குடும்ப உறவினர்களின் கொள்கைக் கோட்பாடுகள் என்னவாக இருந்ததென்பதை அறியத்தரக் கடமைப்பட்டுள்ளோம்.
13ம் நூற்றாண்டின் முஜத்திதாகவும் மிகப்பெரிய சூபியாகவும் முஹத்தித் திஹ்லவி என்றும் வலியுல்லாஹ் என பிறப்பதற்கு முன்னரே பெயர் சூட்டப்பட்டவருமான அஷ்ஷாஹ் வலிய்யுலாஹ் அன்னவர்களின் இளைய மகனாகிய அஷ்ஷாஹ் அப்துல் கனியின் ஒரே புதல்வர் மௌலவி இஸ்மாயில் ஆகும். (பிறப்பு 26- 04-1779- இறப்பு 06—5-1831)
தொடரும்.............
அஷ்ஷாஹ் வலியுல்லாஹ், பாரியார், புதல்வர் அஷ்ஷாஹ் அப்துல் கனி, மௌலவி இஸ்மாயில் ஆகியோரின் சமாதிகள். கப்ருகள் கட்டப்பட்டிருக்கிறது. பராமரிக்கபடுகிறது. பெயர்கள் பொறிக்கப்பட்திருக்கிறது.

Eravur

Eravur

Eravur

Monday, 30 November 2015

தப்லீக் இயக்க உலமாக்களே! இது உங்களுக்குத் தெரியுமா? 04




தப்லீக் இயக்க உலமாக்களே! இது உங்களுக்குத் தெரியுமா? 

மேற்க்கூறிய நிகழ்வைப் பதிவு செய்த பின்னர் மௌலவி முனாளிர் அஹ்சன் கைலானிக்கு மரணமான ஒருவர் நபியாக இருந்தாலும்கூட அவரால் உயிர் உள்ள ஒருவருக்கு உதவிட முடியும் என நம்பினால் அது ஷிர்க் ஆகும். குப்ர் ஆகும் என்ற தேவபந்துகளின் அகீதா நினைவுக்கு வருகிறது. அதனால் இந்த சம்பவத்தினை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்? என யோசித்து, மேற்க்கூறிய நிகழ்வை அவர் ஏற்க மறுப்பதுடன் மணரமான வலிமார்களினால் உதவ முடியும் எனும் தலைப்பில் அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாத்தினரின் முடிவு எதுவோ அதுவே தேவபந்த் உலமாக்களின் தீர்ப்பாகும் என்றும் அவர் அடிக் குறிப்பில் அவர் கருத்தினைப் பதிவு செய்த பின்னர் பின்வருமாறு அவர் அணியினரிடம் வினாவொன்றையும் அவ்விடத்தில் கேட்கிறார்.

விண்ணுலகப் பயணத்தில் அருமை நாயகம் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களுகளை நபிமார்கள் சந்தித்து உரையாடி இருக்கிறார்கள். நபியுல்லாஹ் ஹழ்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நமக்கு தொழுகைகளை குறைப்பதற்கு உதவி செய்துள்ளார்கள். எனவே நல்லடியார்களின் ஆத்மாக்கள் இவ்வுலகில் அவதிப்படும் ஒரு விசுவாசிக்கு உதவுவது எந்த குரானின் வசனத்திற்கும் எந்த நபி மொழிக்கும் மாற்றமாக இருக்கிறதென்று அக்குறிப்பில் பதிவு செய்துள்ளார். அத்துடன் வலிமார்களின் ஆத்மாக்கள் உதவி சையும் என்பதை நாம் மறுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிடத் தவறவில்லை.
இன்னும் மனிதனுக்கு வந்து சேரும் உதவிகள் யாவும் இன்னுமொரு வஸ்துவினால்தான் அவனை சென்றடைகிறது. பால் பசுவின் உதவியினால்தான் நமக்கு கிடைகிறது என்ற தத்துவமும் அவர் பேசுகிறார்.
சுபானல்லாஹ்! மரணமான நபிமர்கள்கூட இன்னுமொருவருக்கு உதவ முடியாதென்று பல தசாப்தங்களாக கூறிவரும் தேவபந்த் சகோதரர்கள் தங்களுடைய இமாம் மரணமான பின்னர் உதவி செய்துள்ளார் என்றதும் கதையை எவ்வாறு திசை திருப்புகிறார்கள் என்று பார்த்தீர்களா?

மரணித்த நல்லடியார்களின் ஆத்மாக்கள் மூலமாக உதவி பெறுதல் தொடர்பில் தேவபந்த் அணியின் முக்கிய மற்றுமொரு முக்கிய பிரமுகர் மௌலவி மன்லூர் சாஹிப் நுமானி, அல் புர்கான் எனும் மாதாந்த சஞ்சிகையில் பின்வருமாறு எழுதுகிறார்.
அல்லாஹ் அல்லாத இன்னுமொரு பொருளுக்கு சுய ஆற்றல் எதுவும் இல்லை. எல்லா படைப்புக்களும் அல்லாஹ்வின் தேவை உள்ளனவாகும். இருந்தாலும் இந்த உலகத்திற்கு ஆலமுல் அஸ்பாப் என்று பெயர் இருப்பதால் எந்த தேவை நிறைவேற வேண்டுமாக இருந்தாலும் இன்னொமொரு நபரின் அல்லது பொருளின் உதவியை நாட வேண்டி இருக்கிறது.

இவ்வாறான நம்பிக்கையில்  பிறரிடம் உதவி கோருவதில் எவ்வித ஷிர்க்கும் இல்லை. ஆனாலும்கூட இன்னுமொருவருக்கு அல்லது இன்னுமொரு பொருளுக்கு சுய ஆற்றல் இருப்பதாக எண்ணிக்கொண்டிருப்பதும் சுயமாக இயங்கும் ஆற்றல் அப்பொருளுக்கு இருப்பதாகவும் நம்புவது ஷிர்க் ஆகும் என்று குறுப்பிடுகிறார். 

(இதைத்தானே அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத்தினரும் காலமெல்லாம் கூறிக்கொண்டு வருகிறார்கள்.)

பின்னர் மௌலவி நூமான் தொடர்ந்தும் கருத்துக் கூறுகையில் இஸ்லாமியர்கள் என்று கூறிக்கொண்டு கப்ருகளை வணங்கிக்கொண்டு வருபவர்களுக்கு ஷைத்தான் வழிகாட்டியாக இருக்கிறான். ஷைத்தானின் பிடியில் அவர்கள் சிக்கிக்கொண்டு இருப்பதால் அல்குரான் அல்ஹதீதை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயார் இல்லை. இவ்வாறானவர்களைக் கண்டுதான் கடந்த காலத்து மக்களின் ஷிர்கினை புரிந்துகொள்ள என்னால் முடிந்தது. இல்லையென்றால் அதைப்பற்றி அறிந்துகொள்ள சிரமப்பட்டு இருக்க வேண்டி ஏற்பட்டிருக்கும் என்றும் குறிப்பிடுகிறார். ( அல் புர்கான் பக்கம் 30. 1372 ம் ஹிஜ்ரி ஆண்டு. )

மௌலவி மன்லூர் அவர்களுக்கு அவர் உள் வீட்டு நிகழ்வுகளே தெரியாதவராக இருக்கிறார். அவர் வீட்டின் உள்ளேயே ஷிர்க்கான காரியங்கள் இடம்பெற்றுக்கொண்டிருந்ததை அவரால் கண்டுகொள்ளாமல் பிறரில் தேடுகிறார்.
இதே நிலைதான் இன்றுள்ள தேவபந்த் நலன் விரும்பிகளின் அகீதாவுமாக இருக்கிறது. இன்றுள்ள தப்லீக் இயக்க ஆதரவாளர்கள் அவ்வியக்க அதிபர்களின் அகீதாவை அறியாதவர்களாகவே இருக்கிறார்கள். 

(யாருடைய பெயர் முஹம்மது ,அலி என்று உள்ளதோ அவர்களுக்கு எதன் மீதும் அதிகாரம் இல்லை.ஒரு நபியோ அல்லது வலியோ அவர்களால் ஒன்றும் செய்ய இயலாது. 
தக்வியத்துல் ஈமான் ,பக்கம் 41 ]

அருமை நாயகம் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களுக்கு இல்லாத ஆற்றல் தேவபந்த் தேசியத் தலைவர்களுக்கு இருக்குமானால் அவர்கள் எவ்வாறு இஸ்லாமியர்களாக இருப்பார்கள் என்று சிந்தித்துப்பாருங்கள்.
தொடரும்.........

தப்லீக் உலமாக்களே! இது உங்களுக்கு தெரியுமா? 03

 முகல்லித் வஹ்ஹாபிகளான தப்லீக் இயக்க உலமாக்களே! இது உங்களுக்குத் தெரியுமா?


முகல்லித் வஹ்ஹாபிகளான தப்லீக் இயக்க உலமாக்களே! இது உங்களுக்குத் தெரியுமா?

மேற்க்கூறிய நிகழ்வைப் பதிவு செய்த பின்னர் மௌலவி முனாளிர் அஹ்சன் கைலானிக்கு மரணமான ஒருவர் நபியாக இருந்தாலும்கூட அவரால் உயிர் உள்ள ஒருவருக்கு உதவிட முடியும் என நம்பினால் அது ஷிர்க் ஆகும். குப்ர் ஆகும் என்ற தேவபந்துகளின் அகீதா நினைவுக்கு வருகிறது. அதனால் இந்த சம்பவத்தினை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்? என யோசித்து, மேற்க்கூறிய நிகழ்வை அவர் ஏற்க மறுப்பதுடன் மரணமான வலிமார்களினால் உதவ முடியும் எனும் தலைப்பில் அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாத்தினரின் முடிவு எதுவோ அதுவே தேவபந்த் உலமாக்களின் தீர்ப்பாகும் என்றும் அவர் அடிக் குறிப்பில் அவர் கருத்தினைப் பதிவு செய்த பின்னர் பின்வருமாறு அவர் அணியினரிடம் வினாவொன்றையும் அவ்விடத்தில் கேட்கிறார்.

விண்ணுலகப் பயணத்தில் அருமை நாயகம் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களை நபிமார்கள் சந்தித்து உரையாடி இருக்கிறார்கள். நபியுல்லாஹ் ஹழ்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நமக்கு தொழுகைகளை குறைப்பதற்கு உதவி செய்துள்ளார்கள். எனவே நல்லடியார்களின் ஆத்மாக்கள் இவ்வுலகில் அவதிப்படும் ஒரு விசுவாசிக்கு உதவுவது எந்த குரானின் வசனத்திற்கும் எந்த நபி மொழிக்கும் மாற்றமாக இது இருக்கிறதென்று அக்குறிப்பில் பதிவு செய்துள்ளார். அத்துடன் வலிமார்களின் ஆத்மாக்கள் உதவி சையும் என்பதை நாம் மறுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிடத் தவறவில்லை.

இன்னும் மனிதனுக்கு வந்து சேரும் உதவிகள் யாவும் இன்னுமொரு வஸ்துவினால்தான் அவனை சென்றடைகிறது. பால் பசுவின் உதவியினால்தான் நமக்கு கிடைகிறது என்ற தத்துவமும் அவர் பேசுகிறார்.

சுபானல்லாஹ்! மரணமான நபிமர்கள்கூட இன்னுமொருவருக்கு உதவ முடியாதென்று பல தசாப்தங்களாக கூறிவரும் தேவபந்த் சகோதரர்கள் தங்களுடைய இமாம் மரணமான பின்னர் உதவி செய்துள்ளார் என்றதும் கதையை எவ்வாறு திசை திருப்புகிறார்கள் என்று பார்த்தீர்களா?

மரணித்த நல்லடியார்களின் ஆத்மாக்கள் மூலமாக உதவி பெறுதல் தொடர்பில் தேவபந்த் அணியின் முக்கிய மற்றுமொரு பிரமுகர் மௌலவி மன்லூர் சாஹிப் நுமானி, அல் புர்கான் எனும் மாதாந்த சஞ்சிகையில் பின்வருமாறு எழுதுகிறார்.

அல்லாஹ் அல்லாத இன்னுமொரு பொருளுக்கு சுய ஆற்றல் எதுவும் இல்லை. எல்லா படைப்புக்களும் அல்லாஹ்வின் தேவை உள்ளனவாகும். இருந்தாலும் இந்த உலகத்திற்கு ஆலமுல் அஸ்பாப் என்று பெயர் இருப்பதால் எந்த தேவை நிறைவேற வேண்டுமாக இருந்தாலும் இன்னொமொரு நபரின் அல்லது பொருளின் உதவியை நாட வேண்டி இருக்கிறது.

இவ்வாறு பிறரிடம் உதவி கோருவதில் எவ்வித ஷிர்க்கும் இல்லை. ஆனாலும்கூட இன்னுமொருவருக்கு அல்லது இன்னுமொரு பொருளுக்கு சுய ஆற்றல் இருப்பதாக எண்ணிக்கொண்டிருப்பதும் சுயமாக இயங்கும் ஆற்றல் அப்பொருளுக்கு இருப்பதாகவும் நம்புவது ஷிர்க் ஆகும் என்று குறுப்பிடுகிறார்.

(இதைத்தானே அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத்தினரும் காலமெல்லாம் கூறிக்கொண்டு வருகிறார்கள்.)

பின்னர் மௌலவி நூமான் தொடர்ந்தும் கருத்துக் கூறுகையில் இஸ்லாமியர்கள் என்று கூறிக்கொண்டு கப்ருகளை வணங்கிக்கொண்டு வருபவர்களுக்கு ஷைத்தான் வழிகாட்டியாக இருக்கிறான். ஷைத்தானின் பிடியில் அவர்கள் சிக்கிக்கொண்டு இருப்பதால் அல்குரான் அல்ஹதீதை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயார் இல்லை. இவ்வாறானவர்களைக் கண்டுதான் கடந்த காலத்து மக்களின் ஷிர்கினை புரிந்துகொள்ள என்னால் முடிந்தது. இல்லையென்றால் அதைப்பற்றி அறிந்துகொள்ள சிரமப்பட்டு இருக்க வேண்டி ஏற்பட்டிருக்கும் என்றும் குறிப்பிடுகிறார். ( அல் புர்கான் பக்கம் 30. 1372 ம் ஹிஜ்ரி ஆண்டு. )

மௌலவி மன்லூர் அவர்களுக்கு அவர் உள் வீட்டு நிகழ்வுகளே தெரியாதவராக இருக்கிறார். அவர் வீட்டின் உள்ளேயே ஷிர்க்கான காரியங்கள் இடம்பெற்றுக்கொண்டிருந்ததை அவரால் கண்டுகொள்ளாமல் பிறரில் தேடுகிறார்.

இதே நிலைதான் இன்றுள்ள தேவபந்த் நலன் விரும்பிகளின் அகீதாவுமாக இருக்கிறது. இன்றுள்ள தப்லீக் இயக்க ஆதரவாலர்கள் அவ்வியக்க அதிபர்களின் அகீதாவை அறியாதவர்களாகவே இருக்கிறார்கள்.

அருமை நாயகம் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களுக்கு இல்லாத ஆற்றல் தேவபந்த் தேசியத் தலைவர்களுக்கு இருக்குமானால் அவர்கள் எவ்வாறு இஸ்லாமியர்களாக இருப்பார்கள் என்று சிந்தித்துப்பாருங்கள்.

தொடரும்.........