السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Tuesday, 1 December 2015

தப்லீக் அமீர்மார்களே! ஆதரவாளர்களே! - 07


அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத்தினர் நாயகம் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களை அளவு கடந்து எல்லை மீறி புகழ்வதாகக் கூறி குற்றம் சுமத்திக்கொண்டு இருக்கும் உங்களுக்கு, உங்கள் தப்லீக் இயக்க முன்னோடிகளின் கொள்கைகள் என்னவென்று தெரியுமா?
(மதீனா முனவ்வராவின் தெருக்களில் மலக்குகள் நடமாடுவார்கள்.அங்கு காலராவும் தஜ்ஜாலும் நுழையமுடியாது என நாயகம் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் நவின்றார்கள். அதாவது நாயகம் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் மகிமைகளை சுமந்துள்ள உள்ளங்களை அல்லாஹ் (பாதுகாக்கின்றான்.)
அஷ்ஷாஹ் வலியுல்லாஹ் அன்னவர்ளின் தந்தை அஷ்ஷாஹ் அப்துர்ரஹீம் வலியுல்லாஹ் ஹிஜ்ரி 1054லில் பிறந்து ஹிஜ்ரி 1131ல் சமாதி கொண்ட மிகப்பெரிய இறை நேசராகும். குத்புல் ஹிந்த் காஜா கரீப் நவாஸ் (கத்தசல்லாஹு சிர்ரஹுல் அஸீஸ்) அவர்கள் நாயகம் அவர்களின் இல்லத்திற்கு வருகை தந்து சிஷ்திய்யா தரீக்கத்திற்கான கலீபாவாக நியமித்து சென்றுள்ளர்கள். அத்துடன் நாயகம் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களை நேருக்குநேர் சந்திக்கும் அதிஉயர் பாக்கியம் பெற்ற பெரும் மகானாகவும் இருந்துள்ளார்கள்.
மௌலவி அஷ்ரப் அலி தானவி (கிஸஸுள் அகாபிர்) எனும் நூலின் 13ம் பக்கத்தில், அஷ்ஷாஹ் அப்துர்ரஹீம் அன்னவர்கள் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாலுள்ள விடயங்களைக் காணும் கராமத் உள்ள ஒருவர் என்று குறிப்பிடுகிறார்.
எனது தந்தை அஷ்ஷாஹ் அப்துர்ரஹீம் நாயகம் அவர்களை நலம் விசாரிக்க வருகை தந்த அருமை நாயகம் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள், தங்களது முபாரக்கான இரு திரு முடிகளையும் வழங்கி சென்றிருந்தார்கள். அது உயிரோட்டமுள்ளதாக இருந்தது. அவசர சந்தர்பங்களில் அதனை வெளியில் எடுத்துச் செல்ல நேரிட்டால் மேகம் அதற்கு நிழல் இட்டுக்கொண்டு இருக்கும். இந்தக் காற்சியினை விமர்சகர்கள் கண்ணுற்றதும் அவர்களும் திருந்திக் கொண்டார்கள். இரு திரு முடிகலும் சேர்ந்து இருக்கும். ஸலவாத் ஓதினால் இரண்ரும் பிரிந்து விடுவது இதன் விசேடத் தன்மையாகும். அவ்விரண்டில் ஒன்றை தந்தை அவர்கள் என்னிடம் ஒப்படைத்தார்கள். இதற்காக அல்லாஹ்வை நான் புகழ்கின்றேன் என அஷ்ஷாஹ் வலியுல்லாஹ் (அன்பாஸுள் ஆரிபீன் பக்கம் 35) என்ற நூலில் பதிவு செய்துள்ளார்கள்.
இந்தியத் துணைக் கண்டத்தில் ஹதீஸ் கலைக்கு புத்துயிர் அளித்து, அத்துறையில் அரும் பெரும் ஆய்வுகளை நிகழ்த்தி, ஆக்கப்பணிபுரிந்த அஷ்ஷாஹ் வலிய்யுலாஹ், ஹதீஸ் கலையின் வளர்ச்சிக்கு ஆற்றிய பணியை இஸ்லாமிய உலகம் இன்றும் நன்றியுணர்வோடு நினைவு கூறுகின்றது.
அவர் எழுதிய நூல்களில் மிக முக்கியமானதும் முஸ்லிம் அறிஞர் பெருமக்களின் பாராட்டைப் பெற்ற, உலக பிரசித்தம் அடைந்ததுமான நூல், “ஹுஜ்ஜதுல்லாஹி அல் பாலிகா” வாகும். எகிப்தின் தலை நகரம் கெய்ரோவிலுள்ள அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் நீண்ட நாட்களாக அது இருந்து வந்தது என்பது குறிப்பித்தக்கது.
1731ல் மக்காவிற்கு புனித யாத்திரை மேற்கொண்டு, ஹிஜாஸில் 14 மாதங்கள் தங்கியிருந்தார். மக்காவில் புகழ்பெற்ற சமய அறிஞர்களிடம் ஹதீஸ் கலையிலும் மார்க்கச் சட்டக் கலையிலும் தேர்ச்சி பெற்றார். மக்காவில் கல்வி கற்றபோது, இப்னு அப்துல் வஹ்ஹாபிடமும் (1703 - 1787) கல்வி கற்றதாக கூறப்படுகிறது. இது புனித காபத்துல்லாஹ்வையும் அருமை நாயகம் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களை தரிசிப்பதற்கென்றும் மேற்கொள்ளப்பட்ட புனித யாத்திரை.
இந்த சிறப்பான யாத்திரை தொடர்பில் அஷ்ஷாஹ் வலியுல்லாஹ் நாயகம் அவர்கள் (புயூளுள் ஹரமைன்) என்ற பெயரில் நூல் ஒன்றைத் தொகுத்து அப்பயணத்தில் அனுபவித்த அற்புதமான நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ளார்கள்.
கண்மணி நாயகம் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களை பல தடவைகள் நேருக்குநேர் தரிசித்து தம்மிடமுள்ள பல சந்தேகங்களுக்கு விடைகளைப் பெற்றிருப்பதுடன் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் திரைகள் அகற்றப்பட்டு யதார்த்தமான ஹகீகத்தான தோற்றத்தில் காணும் பாக்கியமும் பெற்றுக் கொண்டதாக அதில் அஷ்ஷாஹ் வலியுல்லாஹ் குறிப்பிடுகிறார்கள்.
ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் களிக்கும் தண்ணீருக்கும் இடையில் இருந்தபோது நான் நபியாக இருந்தேன் எனும் நபி மொழி தொடர்பில் வினவி அண்ணலாரின் அப்போதைய தோற்றத்தையும் காணும் அரிய பாக்கியம் பெற்றதது மட்டுமல்லாது ஒரு கட்டத்தில் நானும் அண்ணல் நபி நாதரும் இரண்டறக்கலந்து காணப்பட்டோம். என்னில் அண்ணலாரைக் கண்டேன் என்று அதில் பதிவு செய்கிறார்கள். இப்படியான இன்னும் பல ஹகீகத்தான கருத்துக்களை காணும் பாக்கியம் அதைப் பார்பவர்கள் பெற்றுக் கொள்வார்கள். ஆனாலும்கூட இப்பெரியாரின் பேரப்பிள்ளை இஸ்மாயில் திஹ்லவி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் பற்றி பின்வருமாறு எழுதுகிறார்.
“அனைத்து அன்பியாக்களும்,இறைத்தூதர்களும் பயனற்றவர்கள்.” [நூல் – தக்வியத்துல் ஈமான் ,பக்கம்29]
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மறைவான சங்கதிகளை அறிவார்களென்று நம்புவது சுத்தமான ஷிர்க்காகும்
நூல் : ஃபதாவா ரஷீதியா பாகம் =2 ,பக்கம்=10 அசிரியர் : ரஷீது அஹ்மது கொங்கோஹி
ரஸூலுல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் பரிசுத்த ரவுளா ஷரீபை ஜியாரத்துச் செய்வதற்காக மட்டும் போவது ஷிர்க்காகும்
( நூல் : தக்வியத்துல் ஈமான் , பக்கம் = 10,40, அசிரியர் : இஸ்மாயீல் )
நண்பர்களே!
இவ்வாறு een எழுதினார்kal ? இதனூடாக ivarkal நிறுவ வந்த விடயம் என்னவென்பதைப் பார்க்கும் முன்னர் இப்படியானதொரு எண்ணம் ஒரு உண்மை விசுவாசியின் உள்ளத்தில் எவ்வாறு தோற்றம் பெற முடியும் என கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். அவ்வாறானதொரு எண்ணம் கொண்டவரும் அவரை போற்றிப் புகழ்பவர்களும் எவ்வாறு முஸ்லிம்களாக இருக்க முடியும்?
நாயகம் முஸ்தபா ஸல்லல்லஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் சிறப்புக்களை மகிமைகளை யதார்த்தங்களை கூறி அதற்கு விளக்கங்கள் சொல்ல முற்படவேண்டுமே தவிர பெருமானாரை தரக்குறைவாக கருதப்படும் கருத்துக்களை சொல்லவோ அவ்வாறு சொல்லிவிட்டு அதற்காக தவ்பா செய்யாமல் விளக்கம் சொல்ல முற்படக் கூடாது.
"ராயினா" என்ற வார்த்தை நல்லதொரு வார்த்தைதான். ஆனாலும்கூட அந்த வார்த்தையை பெருமானார் முஜ்தபா சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் எதிரிகள் தவறான எண்ணத்தில் பிரயோகம் செய்கிறார்கள் என்ற காரணத்தினால் அந்த வார்த்தையை நீங்களும்தான் உபயோகம் செய்யாதீர்கள் என அருமைத் தோழர்களைப் பார்த்து அல்லாஹ் சொன்னான்.
தொடரும்........

Eravur Yoosuf

Eravur

Eravur

eravur