உங்கள் தவ்ஹீதுக்கும் எங்கள் தவ்ஹீதுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு
1. இறைவனுக்கு உருவம் உண்டு என்று சொல்லி உருவத்தை வழிபடுவது உங்கள் தவ்ஹீத்...
★இறைவனுக்கு உருவமும் இல்லை, உருவ வழிபாடும் கூடாது என்பது எங்கள் தவ்ஹீத்..
2. இறை மறையில் பிழை உள்ளது என்பது உங்கள் தவ்ஹீத்
★இறை மறையில் ஒரு பிழை கூட இல்லை என்பது எங்கள் தவ்ஹீத்..
3. இறைவனே கூறினாலும் ஆய்வு செய்து தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது உங்கள் தவ்ஹீத்
★இறைவன் கூறியது எதுவாயினும் கண்ணை மூடிக் கொண்டு தலை சாய்த்து அடிபணிவது எங்கள் தவ்ஹீத்..
4. நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் உலகின் மிகப் பெரிய குழப்பவாதி என்று கூறுவது உங்கள் தவ்ஹீத்..
★நபியவர்கள் ஒரு காலத்திலும், ஒரு விஷயத்தில்கூட குழப்பமான செய்தியை சொன்னதே இல்லை என்பது எங்கள் தவ்ஹீத்..
5. நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் 11 ஆண்டுகள் ஷிர்கை ஆதரித்தார்கள் என்பதும், ஷிர்க் செய்ததை கண்டு கொள்ளாமல் இருந்தார்கள் என்பதும் உங்கள் தவ்ஹீத்..
★ ஷிர்கை ஒழிக்க வந்த நபியவர்கள் ஒரு காலத்திலும் ஷிர்கை ஆதரித்ததில்லை என்பது எங்கள் தவ்ஹீத்...
6. நபியவர்கள் அந்நிய பெண் வீட்டில் போய் படுப்பார்கள் என்பது உங்கள் தவ்ஹீத்..
★அண்ணலார் அந்நிய பெண்ணை கனவிலும்கூட நினைத்தது இல்லை என்பது எங்கள் தவ்ஹீத்...
7. நபியவர்கள் உலக விஷயத்தில் பொய் சொல்லுவார்கள் என்பது உங்கள் தவ்ஹீத்...
★ நபியவர்கள் மார்கம், மறுமை, ஷரீஅத், சொர்கம், நரகம், கப்ரு, மலக்குகள், மஹ்ஷர், உலகம் என எந்த விஷயத்திலும் நபியவர்கள் பொய் சொல்லவே மாட்டார்கள் என்பது எங்கள் தவ்ஹீத்...
8. நபி தாவூத் ( அலை) அவர்கள் குடி மக்கள் சொத்தை அபகரித்தவர் என்பது உங்கள் தவ்ஹீத்...
★எந்த நபியும் யாருடைய சொத்தையும் அபகரிக்கவில்லை என்பது எங்கள் தவ்ஹீத்..
9. நபி யூனுஸ் ( அலை) அவர்கள் இறை ஆற்றலின் மீது நம்பிக்கை இல்லாதவர் என்பது உங்கள் கொள்கை
★ உலகில் தோன்றிய எந்த நபிக்குமே இறைவன் மீது நம்பிக்கை இழந்தவர்களில்லை என்பது எங்கள் தவ்ஹீத்...
10. நபித்தோழர்களுக்கு காண்டம் பற்றி தெரியுமா என்று கேள்வி கேட்டு நபித்தோழர்களை விட நாங்கள்தான் அறிவாளி என்று சொல்வது உங்கள் தவ்ஹீத்..
★நபித்தோழர்கள் தலை சிறந்த அறிவாளிகள் என்பது எங்கள் தவ்ஹீத்...
11. நபித்தோழர்களை ரவுடிகள் என்பது உங்கள் தவ்ஹீத்..
★ நபித்தோழர்கள் தான் உலகிலேயே நல்லவர்கள் என்பது எங்கள் தவ்ஹீத்..
12. நபித் தோழர்களை கிரிமினல்கள் என்று சொல்வது உங்கள் தவ்ஹீத்..
★நபித்தோழர்கள் நீதியின் இருப்பிடம் என்பது எங்கள் தவ்ஹீத்..
13. நபித்தோழர்கள் பித்அத் செய்ததாக கூறுவது உங்கள் தவ்ஹீத்..
★நபித்தோழர்கள் பித்அத்தை அழித்தார்கள் என்பது எங்கள் தவ்ஹீத்..
14. ஃபிக்ஹ் சட்டங்கள் வழிகேடு என்பது உங்கள் தவ்ஹீத்..
★ ஃபிக்ஹ் சட்டங்கள்தான் சமுதாயத்தின் பாதுகாப்பு என்பது எங்கள் தவ்ஹீத்....
இப்படியாக உங்களுக்கும் ( தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்துக்கும்)
எங்களுக்கும் (சுன்னத் ஜமாஅத்தக்கும்) நிறைய வேறுபாடுகள் உள்ளன..*
www.EravurYoosufblogspot.com *